Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

Published By: Digital Desk 3

17 Nov, 2025 | 04:55 PM

image

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை  (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் #ஆனந்த_விஜயபால அவர்கள் புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இதன்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு பொதுமக்கள் மற்றும் பௌத்தபிக்குகள் கலந்து கொண்டு இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/230599

  • Replies 62
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂. ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முட

  • இனவாதம், மதவாதத்தை கடந்து இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாது என்பதையே இந்தச்செயல் காட்டி நிற்கின்றது. தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்தால்; இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. இருபத்தோராந்திகதி பேரணிக்

  • நிழலி
    நிழலி

    முதல் வேலையாக இவரது Facebook profile இனை ரிப்போர்ட் பண்ணியுள்ளேன். இதனை ஒரு 100 பேர் செய்தால், முகனூல் நிர்வாகம் இவரது கணக்கை முடக்கும் ( IP ban செய்யும் சில வேளை)

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-111.jpg?resize=750%2C375&ssl

புத்தர் சிலையால் வந்த வில்லங்கம்!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது.

நேற்று  (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றைய தினம் மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த_விஜயபால, புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார்.

இன்று காலை நிலவரம் 

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் அனுமதி பெறாது, சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் 

அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளுக்கும் பௌத்த துறவிகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்துள்ள நிலையில் இன்று காலையும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. 

இதேவேளை இன்றையதினம் பிற்பகல் 12 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசாண் அக்மீமனவிற்கு எதிரான பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.  

நேற்று மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் அமைச்சரின் உத்தரவிற்கு அமைய நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது. 

முன்னதாக கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதும் நேற்று இரவு 8 மணி வரை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

பொலிசார் சிலையை அகற்றமுற்பட்டபோது பௌத்த பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் பொலிசாரையும் தாக்கியிருந்தனர்.

குறிப்பாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். 

இதன் பிரகாரமே பொலிஸாரினால் தற்காலிகமாக கட்டுமான பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. 

எனினும் கட்டுமான பணிகளை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளைத் பொலிஸார் இன்று நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை குறித்த பகுதியில் சட்ட அனுமதியற்ற சிற்றுண்டிச்சாலை தமது திணைக்களத்தால் உடைத்து அகற்றப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வளங்கள் திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார். 

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால

இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கு அமைய கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் ஆனந்த விஜேயபால கீழ் கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். 

அத்தோடு அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால், அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

நீதிமன்ற தீர்ப்பின்படியே செயற்பட வேண்டியுள்ளது. 

இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் 

நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம். 

இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை 

தடுத்து நிறுத்தியதாக நேற்றிரவு தெரிவித்த அமைச்சர் இன்று சபையில் முரணாக கருத்து வெளியிட்டார்.

 

சபையில் சஜித் கேள்வி

புனித பூமிவளாகத்திற்குள் புத்தர்சிலை வைப்பதை பொலிஸார் இன்று தீர்மானிக்கின்றனர். 

இவ்வாறான செயற்பாடுகளினால் இந்த சமூகத்தில் இனவாதம் தலைதூக்கும் நிலை ஏற்படும்.

நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் செயற்படும் குழுவினர் இந்த சம்பவத்தை ஒருகருவியாக பயன்படுத்த நேரிடும்  

இதனால் நாட்டினுள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும்.

ஏதேனும் பிரச்சினை இருந்தால். விடயத்துக்கு பொறுப்பாக மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் 

அதனை விடுத்து இரவோடு இரவாக பொலிஸார் அங்கு அனுப்பி  ஒரு புனித பூமிக்குள் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பொலிஸார் எவ்வாறு தலையீடு செய்ய முடியும்.  

யாருடை ஆணையின் பேரில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன? 

அரசாங்கத்திடம் நாம் ஒரு விடயத்தை தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். 

நாட்டில் சட்டங்கள் தொடர்பாக புரிதல் இல்லாவிடின் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். 

எனவே தற்போது சூடு பிடித்துள்ள இனவாத மதவாத தீப்பிழம்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நீதியை நிலைநாட்டுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். 

புனித பூமிக்குள் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பொலிஸார் எவ்வாறு தலையீடு செய்ய முடியும் – என்று சஜித் கேள்வி எழுப்பினார். 

 

சாணக்கியன் கடும் கண்டனம் 

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட அவர்கள் பௌத்த இனத்தின் எந்தவொரு பௌத்த சின்னங்களும் அவர்களால் அழிக்கப்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

இன்றைய சபை அமர்வின்போது அவர் இது குறித்து கடும் தொனியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் – சுமந்திரன் 

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. 

எனவே, அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிசாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. 

இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1453006

  • கருத்துக்கள உறவுகள்

585382136_26216098824657074_426447080745

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சட்டம் - ஒழுங்கு காக்க நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால

17 Nov, 2025 | 02:07 PM

image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

திருகோணமலை  பகுதியில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை தொடர்பாக இரவு பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து புத்தர் சிலை பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் துரதிஸ்டவசமான சம்பவங்கள் திருகோணமலை நகரில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்  ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வில் போது திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்தமையால் ஏற்பட்ட அமைதியின்மை  குறித்து சபைக்கு அறிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

திருகோணமலை கோட்டை சம்போதிதாகம் பாடசாலையின் சம்புத ஜயந்தி விகாரையுடன் தொடர்புடைய சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை தொடர்பாக இரவு பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தக்கூடிய நாசகார செயற்பாடு தொடர்பாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொலிஸார் குறித்த புத்தர் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவசரமாக புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அங்கே பிரச்சினை எழுந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அந்த புத்தர்சிலையை அந்த விகாரையில் பிரதிஷ்டை செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து இது தொடர்பில் முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றிருந்தது. அங்கே சிற்றுண்டிச்சாலையொன்று நடத்திச் செல்லப்படுவதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதனால் நீதிமன்ற தீர்ப்புக்கு அமையவே செயற்பட வேண்டும்.

இவ்வாறான நிலைமையில் அங்கே புத்தர் சிலை தொடர்பில் எழுந்த பிரச்சினைகளால் அதன் பாதுகாப்பு கருதி அந்த புத்தர்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அது இன்று (நேற்று) காலையில் விகாரையில் தாகம் பாடசாலை பகுதியில் பிரதிஸ்டை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காணி தொடர்பான பிரச்சினையை நீதிமன்றம் ஊடாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்து நீதிமன்ற தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் விடயங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும்.

எவ்வாறாயினும் புத்தர்சிலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் துரதிஸ்டவசமான சம்பவங்கள் திருகோணமலை நகரில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சட்டம் - ஒழுங்கு காக்க நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால | Virakesari.lk

அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் - சுமந்திரன் சீற்றம்!

அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் - சுமந்திரன் சீற்றம்!

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.

தே. ம. சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் - சுமந்திரன் சீற்றம்!

  • கருத்துக்கள உறவுகள்

583802913_2885080531701058_4147748446615

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂.

ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது 😂

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சிங்களவன்தான். சிங்கள கட்சிகளுக்கு, வாக்களித்த, வாக்களிக்க சொன்ன தமிழர்களுக்கு சமர்ப்பணம்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சபையின் அடுத்த தேர்தலில் என்பிபி இன் தோல்வியை உறுதி செய்த நாளாக பதினேழு நவம்பர் இரண்டாயிரத்து இருபத்தைந்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

சுத்து மாத்தார் புது உத்வேகத்துடன் சுத்தி சுத்தி சுழற்ற புது களமுனை திறந்ததே பாரீர் ...

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதம், மதவாதத்தை கடந்து இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாது என்பதையே இந்தச்செயல் காட்டி நிற்கின்றது. தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்தால்; இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. இருபத்தோராந்திகதி பேரணிக்கு அச்சாணி பூட்டியாயிற்று. இதை பிடுங்கினால்; இவர்களது எதிர்ப்பு பூதாகரமாக மாறும். இதற்கு அடிபணிந்தால் எல்லா அடாவடியும் இந்த முறையிலேயே அரங்கேறும். இதற்கு செய்ய வேண்டியது; மக்களுக்கு விழிப்புணர்வு, விசேடமாக புத்தரை வைத்து அரசியல் நடத்தும், வயிறு விளக்கும் பிக்குகளுக்கு மத அறிவை போதிப்பது. அன்பை போதிக்கும் பௌத்தம் அடாவடியை வளர்க்கிறது.

12 hours ago, தமிழ் சிறி said:

நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் செயற்படும் குழுவினர் இந்த சம்பவத்தை ஒருகருவியாக பயன்படுத்த நேரிடும்  

அதை எதிர்பார்த்து தூபமிட்டது யார்? அடுத்தவன் காணியில், தேவையற்ற இடத்தில், காரணமில்லாமல் சிலை வைப்பது, விகாரை எழுப்புவதுதான் சஜித்தின் நல்லிணக்கமா? அதை கேட்டால் நல்லிணக்கம் கெடுகிறது கேட்காவிட்டால் நாடுமுழுவதும் விகாரை எழுப்புவது, பின் இது சிங்கள பௌத்தநாடு என வரலாறு திரிப்பது. அது சரி சாணக்கியன் அண்மையில் ஒரு கதை எழுதினாரே, அதற்கு என்ன நடந்தது? இதே சஜித்துக்கு செம்பு தூக்கிய சுமந்திரன் இப்போ அருண் ஹேமச்சந்திரா பதவி விலகவேண்டுமென கூவி தன்னை மறைக்க பாக்கிறாரா? அல்லது சஜித் சொன்னவை சரியென்கிறாரா? இவர் ஒரு சட்ட மேதை என்று சிலர் கூவுகின்றனரே, எங்கே தன் சட்டத்திறமையை நிரூபித்து அந்த புத்தரை வெளியேற்றட்டும் பாப்போம்!

12 hours ago, தமிழ் சிறி said:

இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை

ம், இன்று பதினெட்டாந்திக்காதி, இன்னும் மூன்று நாள் இருக்கிறது, தமக்கு சார்பாக மக்களை திரட்டி பேரணியை நடத்துவதற்கு. அதற்கு, கேவலம் மதத்தை பயன்படுத்துவதும், பிக்குகள் அடாவடி செய்வதும் உண்மையான மதமா? எனக்கென்னவோ இதற்குப்பின்னால் சஜித் இருப்பதுபோல் தோன்றுகிறது. நீதிமன்ற உத்தரவு வரும்வரை புத்தர் சிலை நிறுவுவதை நிறுத்தியிருக்கலாம், அதற்காக அடாவடிக்கு அடிபணிந்து எல்லாவற்றுக்கும் அடிபணியும் தோத்துப்போன அரசியலே நடைபெற வாய்ப்புள்ளது. அடாவடிகள் இதே அடாவடியை, தந்திரத்தை பாவித்து தமது காரியத்தை நிறைவேற்றுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

582434241_854525327123493_80136700184934

584390344_855121707063855_72091139359632

584561537_870748988637358_56936324577405

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும்: இராதாகிருஸ்ணன் வலியுறுத்தல்

November 18, 2025

திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்பு இலங்கையில் இனவாதம் மதவாதம் என்பன இல்லாமல் அனைவரையும் சமனாக மதிக்கின்ற அதே நேரம் அனைவருக்கும் சட்டமும் நீதியும் பொதுவானது என்ற வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தது.

ஆனால் திடீரென திருகோணமலையில் ஒரு இரவில் புத்தர் சிலைவைப்பு, அதற்கு பொலிசாரின் எதிர்ப்பு, தடியடி, சிலை அகற்றல், மீண்டும் அதே பொலிசாரின் பாதுகாப்புடன் சிலையை பிரதிஸ்டை செய்தமை என்பன ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த விடயத்தில் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இன்று பலரும் முன்வைக்கின்றார்கள். இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது.

தற்போது இது சர்வதேச விடயமாக மாறியுள்ளது. எனவே அரசாங்கம் இதற்கான முறையான தீர்வை வழங்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதனை விடுத்து இனவாதிகளுக்கு செவி சாய்த்து நீங்களும் கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தைப் போல ஒரு இனவாத அரசாங்கமாக மாறிவிட வேண்டாம்.

தவறு எங்கு நடந்தாலும் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனவே, இந்த விடயத்தை அரசாங்கம் சரியாக கையாளாவிட்டால் சர்வதேச ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படலாம். இதன் மூலம் தற்பொழுது மிகவும் வேகமாக வளர்ந்த வருகின்ற உல்லாசத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார். https://www.ilakku.org/the-government-should-properly-handle-the-trincomalee-incident/

  • கருத்துக்கள உறவுகள்

583324041_25297629236543813_861997448695

இது பங்களாதேஷில் இல்லை...!

நேற்று இரவு ஜனாதிபதி அனுர திசாநாயக்கவால் ஆனந்த விஜேபால மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கையின் ஆரிய பௌத்த மகன்கள்..

சீக்கிரம் குணமடையுங்கள் முதலாளி!

Dulara Gunathilake

திருகோணமலையில்... முதல் நாள், பொலிஸாரால் புத்தர் சிலை அகற்றப் பட்ட போது... ஏற்பட்ட தள்ளுமுள்ளில், தமக்கு பொலிஸார் அடித்து விட்டதாக கூறி... இரண்டு புத்த பிக்குகள் வைத்தியசாலையில் தாமாகவே போய் படுத்துக் கொண்டார்கள்.

அதற்கு, மேலுள்ள சிங்களவரும் வேறு சிங்களவர்களும் இனவாதத்தை தூண்டும் விதமாக கருத்துக்களை பகிர்ந்து வருவதில் ஒன்று உதாரணத்துக்கு மேலே உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

583802913_2885080531701058_4147748446615

இந்தச் சஜித்துக்கு வாக்குப் போடச் சொன்ன சுமத்திரனு; இப்ப ஏன்குத்தி முறிகிறார். அவரால் நல்லாட்சி என்று அன்பாக அழைக்கப்பட்டு நியமிக்கப்படாத அமைச்சராக ரணிலோடு மதன்நிலவு அனபவித்த போது வடக்கு கிழக்கு எங்கும் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என்ற ரணிலின் திட்டமே இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த புத்தவிகாரைகள் அமைக்கும் திட்டத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவாக இருந்துள்ளார். இப்போது பதவி இல்லாத காரணத்தால் நானும் அரசியலில் ஆக்டிவ் ஆக இருக்கிறேன் என்பதற்கான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்.

5 hours ago, தமிழ் சிறி said:

583324041_25297629236543813_861997448695

இது பங்களாதேஷில் இல்லை...!

நேற்று இரவு ஜனாதிபதி அனுர திசாநாயக்கவால் ஆனந்த விஜேபால மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கையின் ஆரிய பௌத்த மகன்கள்..

சீக்கிரம் குணமடையுங்கள் முதலாளி!

Dulara Gunathilake

திருகோணமலையில்... முதல் நாள், பொலிஸாரால் புத்தர் சிலை அகற்றப் பட்ட போது... ஏற்பட்ட தள்ளுமுள்ளில், தமக்கு பொலிஸார் அடித்து விட்டதாக கூறி... இரண்டு புத்த பிக்குகள் வைத்தியசாலையில் தாமாகவே போய் படுத்துக் கொண்டார்கள்.

அதற்கு, மேலுள்ள சிங்களவரும் வேறு சிங்களவர்களும் இனவாதத்தை தூண்டும் விதமாக கருத்துக்களை பகிர்ந்து வருவதில் ஒன்று உதாரணத்துக்கு மேலே உள்ளது.

முதல் வேலையாக இவரது Facebook profile இனை ரிப்போர்ட் பண்ணியுள்ளேன். இதனை ஒரு 100 பேர் செய்தால், முகனூல் நிர்வாகம் இவரது கணக்கை முடக்கும் ( IP ban செய்யும் சில வேளை)

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

முதல் வேலையாக இவரது Facebook profile இனை ரிப்போர்ட் பண்ணியுள்ளேன். இதனை ஒரு 100 பேர் செய்தால், முகனூல் நிர்வாகம் இவரது கணக்கை முடக்கும் ( IP ban செய்யும் சில வேளை)

பிரயோசனமான நல்ல ஒரு வேலை ஒன்றை செய்துள்ளீர்கள், நிழலி. 🙂 👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

இந்தச் சஜித்துக்கு வாக்குப் போடச் சொன்ன சுமத்திரனு; இப்ப ஏன்குத்தி முறிகிறார். அவரால் நல்லாட்சி என்று அன்பாக அழைக்கப்பட்டு நியமிக்கப்படாத அமைச்சராக ரணிலோடு மதன்நிலவு அனபவித்த போது வடக்கு கிழக்கு எங்கும் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என்ற ரணிலின் திட்டமே இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த புத்தவிகாரைகள் அமைக்கும் திட்டத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவாக இருந்துள்ளார். இப்போது பதவி இல்லாத காரணத்தால் நானும் அரசியலில் ஆக்டிவ் ஆக இருக்கிறேன் என்பதற்கான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்.

583796077_2003559293741821_6644364473778

thumb_large_85.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

585363106_1452516946879248_3053621976152

583697648_1452517013545908_8765932470318

திருமலையில் அடாத்தாக சிலை வைத்த பிக்குகளுடன் முன்னணியில் நின்ற இனவாதிக்கும், நாமலுக்கும்... 21 ஆம் திகதி நடக்கவுள்ள எதிர்க்கட்சி பேரணிக்கும் உள்ள தொடர்பு இல்லை என்று கூறிவிட முடியாது என்பதற்கான ஆதாரம்.

மட்டக்களப்பு மண்வாசம் 

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளுக்கும், சிங்களவனுக்கும்.... காணித் தகராறு. 😂 🤣

காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1161288572801711 👈

வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தபடும் இடம், கிங்கினி ராஜ விகரைக்கு சொந்தமானது... அதை தாருங்கள் என உரிமை கோரி அங்கு வருகை தந்த பிக்குகள்!!

இடத்தை தரமுடியாது என விவாதித்த பாலர் பாடசாலை உள்ள பிரதேசத்தை சேர்ந்த கிராமவாசிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பிக்குகளுக்கும், சிங்களவனுக்கும்.... காணித் தகராறு. 😂 🤣

காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1161288572801711 👈

வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தபடும் இடம், கிங்கினி ராஜ விகரைக்கு சொந்தமானது... அதை தாருங்கள் என உரிமை கோரி அங்கு வருகை தந்த பிக்குகள்!!

இடத்தை தரமுடியாது என விவாதித்த பாலர் பாடசாலை உள்ள பிரதேசத்தை சேர்ந்த கிராமவாசிகள்!!

அது. சிங்களவர்கள். அவர்களால். அடித்து. கலைக்க முடியும். தமிழர்கள். அப்படி. செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அனுரா அரசு முட்டாள்களாக்கி விட்டது ஒரேநாளில் தெரிந்து விட்டது . .கம்மினியூசம் பேசிய ஜேவிபி பிக்குகளுக்கு முன்னால் கம்முன்னு அடக்கி வாசிப்பதுதான் கம்னியூசம் என்று புது விளக்கம் கொடுக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/11/2025 at 23:25, goshan_che said:

யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂.

23 hours ago, கந்தப்பு said:

சிங்களவன் சிங்களவன்தான். சிங்கள கட்சிகளுக்கு, வாக்களித்த, வாக்களிக்க சொன்ன தமிழர்களுக்கு சமர்ப்பணம்.

இலங்கை தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றீர்கள்?

அல்லது எப்படியான அரசியல் கொள்கைகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

பிக்குகளுக்கும், சிங்களவனுக்கும்.... காணித் தகராறு. 😂 🤣

காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1161288572801711 👈

வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தபடும் இடம், கிங்கினி ராஜ விகரைக்கு சொந்தமானது... அதை தாருங்கள் என உரிமை கோரி அங்கு வருகை தந்த பிக்குகள்!!

இடத்தை தரமுடியாது என விவாதித்த பாலர் பாடசாலை உள்ள பிரதேசத்தை சேர்ந்த கிராமவாசிகள்!!

பத்தரை மாத்துத் தங்கம் புத்தர்

புத்தரை வணங்கும் பிக்குகள் ஒன்னரைமாத்து கில்லிட்டு

எத்தரை போனாலும் பேசாமல் இரு தமிழா..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றீர்கள்?

அல்லது எப்படியான அரசியல் கொள்கைகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

அர்ச்சுனாக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அவசர அவசரமாக பிக்குகளை சந்திக்கிறார் நாமல். எங்கே, வைத்த நெருப்பு புகையோடு அணைந்து விடப்போகிறதோ, அதை முளாசி எரியப்பண்ண எதை ஊற்றவேண்டுமென ஆலோசிக்கிறார். சஜித் புத்தரை வெளியேற்றியது தவறென்றார், இப்போ அவரை அரியணையில் ஏற்றி வைத்தாயிற்று, அப்பவும் குற்றம் சுமத்துகிறார். தூஷண பிக்கர் சொல்லுறார், தாங்கள் மகிந்தாவுக்காக காவி தரித்தவர்களாம். பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. மக்கள் போய் அவரின் காலைத்தொட்டு வணங்குகிறார்கள். எவ்வளவு அபத்தம்? அடாத்தாக புத்தரை நிறுவிப்போட்டு, பிரித் ஓது துகள். பற்றி எரிய வேண்டும் என்று ஓதுதுகளா? அனுரா, இதில் விட்டுக்கொடுத்தால் அவர்கள் பிக்குகளை வைத்து கலவரம் செய்வார்கள், அனுரா எல்லாவற்றிலும் அடிபணிந்து போயே தீரவேண்டும். முதலிலேயே சரியான நடவடிக்கை எடுத்தால், பின் இப்படியான சொறிச் சேட்டை செய்யத்தயங்குவார்கள். இவர் செய்திருக்க வேண்டியது; புத்தரை வைத்து, நெருப்பு வைத்தவர்களை கைது செய்து, பின்னணியை மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இவர்களை விகாரைக்குள் அடங்கியிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வீட்டுக்கனுப்ப வேண்டும். இவர்களுக்கு ஒரு கொள்கையில்லை, கட்டுப்பாடு இல்லை, ஒழுக்கமில்லை, தலைமை இல்லை, கேள்வியில்லை, பொறுப்பு இல்லை, அன்பு கருணையில்லை. துறவிகள் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றி, நாட்டை எரித்து, வயிறு வளக்குதுகள்.வெட்கமில்லாமல், மஹிந்தவுக்காக காவி உடுத்தினோம் என்று பகிரங்கமாக ஒரு பிக்கு சொல்லுது, இதுகளை பின்பற்ற ஒரு கூட்டம். அனுரா பிக்குகளின் காலில் விழுந்து அவர்களுக்குப் பின்னாலுள்ள தோத்துப்போன அரசியல் வாதிகளிடம் சரணடைந்து விட்டார். இனிமேல் இவர் சாதிப்பது கஸ்ரம். உடனேயே பிக்குகளை கைது செய்திருந்தால் மற்றவர்கள் பின்வாங்கியிருப்பர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.