Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் பிரபாகரன் என் தலைவன் என்று வீர முழக்கமிடும் அர்ச்சனா பிரான்ஸ் வந்த போது தான் நடத்திய கூட்டதிற்கு தயவு செய்து தலைவர் படங்களையோ புலிக் கொடிகளையோ கொண்டு வரவேண்டாம் என்று கெஞ்சி கெஞ்சி மக்களிடன் வேண்டு கோள் விடுத்தது ஏன்? யாருகாவது தெரியுமா?

  • Replies 62
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂. ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முட

  • இனவாதம், மதவாதத்தை கடந்து இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாது என்பதையே இந்தச்செயல் காட்டி நிற்கின்றது. தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்தால்; இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. இருபத்தோராந்திகதி பேரணிக்

  • நிழலி
    நிழலி

    முதல் வேலையாக இவரது Facebook profile இனை ரிப்போர்ட் பண்ணியுள்ளேன். இதனை ஒரு 100 பேர் செய்தால், முகனூல் நிர்வாகம் இவரது கணக்கை முடக்கும் ( IP ban செய்யும் சில வேளை)

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றீர்கள்?

அல்லது எப்படியான அரசியல் கொள்கைகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றீர்கள்?

அல்லது எப்படியான அரசியல் கொள்கைகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

  1. சிங்களர் தீர்வு மட்டும் அல்ல, சக வாழ்வை கூட தரப்போவதில்லை.

  2. இப்போ உள்ள அத்தனை தமிழ் அரசியல்வாதியும் - ஒரு சதம் தேறாத கேசுகள்.

  3. வெளியக சுயநிர்ணயம் ஒருபோதும் சரிவராது.

  4. உள்ளக சுயநிர்ணயம், சமஸ்டி என்பன நீண்ட கால இலக்காக இருத்தல் அவசியம் ஆனால் இதற்கும் குறைவான ஒரு காணி உரிமையாவது பாதுகாக்கபடும் தீர்வை நோக்கி நகர்வதே இப்போ செய்ய கூடியதும், வேண்டியதும்.

  5. இந்த 4 பிரபஞ்ச உண்மைகளி கீழ் புலம், புலம்பெயர் தமிழர் ஒன்றுபட்டு, ஒரு புதிய அரசியலை, தலைமையை உருவாக்க வேண்டும்.

சொல்வது மிக இலகு…

செய்வது….

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் பிரபாகரன் என் தலைவன் என்று வீர முழக்கமிடும் அர்ச்சனா பிரான்ஸ் வந்த போது தான் நடத்திய கூட்டதிற்கு தயவு செய்து தலைவர் படங்களையோ புலிக் கொடிகளையோ கொண்டு வரவேண்டாம் என்று கெஞ்சி கெஞ்சி மக்களிடன் வேண்டு கோள் விடுத்தது ஏன்? யாருகாவது தெரியுமா?

பிரான்சில். தடை உண்டு. ஆகவே கூட்டத்தில். குழப்பம். ஏற்படமால். இருக்கவும். கூட்டம். தொடர்ந்து. நடக்கவும். ஆனால். இலங்கையிலும். தடை உண்டு. தான். அது. எங்கள். நாட்டை. அடக்கி ஆளும். நாடு. அங்கே. தான். நாங்கள். போராடுகிறோம். போராட வேண்டும். மாறாக. பிரான்சில் இல்லை. அதன். சட்டத்தை. மதிக்க. வேண்டும் அல்லவா ? சரியா. ஔ.?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அப்படியா! அப்ப இலங்கையில் பாராளுமன்றத்திற்கு வெளியே கூட்டம் போட்டு புலிக்கொடியேற்றி தலைவர் பிரபாகரனுன் கொள்கைகளை நான் பொறுப்பேற்று நடத்தப் போகிறேன் என்று கூறலாமே! அடக்கி ஆளும் நாட்டில் தானே போராடவேண்டும் உஙலகள் கூற்றுப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இலங்கையிலும் பாராளுமன்றத்திற்கு வெளியே இதைச் செய்ய முடியாது. அர்ச்சுனா மட்டுமல்ல, கஜேந்திரகுமார் போன்றோர் கூட பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி உள்ளே பேசலாம். அதற்கும் கட்டுப் பாடுகள் உண்டு - பேசி ஒலி/ஒளி போடலாம். ஆனால், கட்டுப் பாடுகளை மீறினால் அப்படியொரு உரை நிகழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஹன்சாட்டிலிருந்து உரையை அகற்றி விட முடியும்.

இதை விட நுணுக்கமான வேறு விடயங்களும் உண்டு. இலங்கை அரசியலைமைப்பின், "பிரிவினை கோருதல் குற்றம்" என்று சொல்லும் "6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சத்தியப் பிரமாணம் எடுத்துத் தான் பா.உ க்கள் எல்லோரும் பதவியேற்றிருக்கிறார்கள். ஆனால், அனல் பறக்கும் பேச்சுக்களை மட்டும் கவனமாகப் பேசுவர்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அப்படியா! அப்ப இலங்கையில் பாராளுமன்றத்திற்கு வெளியே கூட்டம் போட்டு புலிக்கொடியேற்றி தலைவர் பிரபாகரனுன் கொள்கைகளை நான் பொறுப்பேற்று நடத்தப் போகிறேன் என்று கூறலாமே! அடக்கி ஆளும் நாட்டில் தானே போராடவேண்டும் உஙலகள் கூற்றுப்படி.

என்னை. பொறுத்த மட்டில். சாவகச்சேரி. எனது. தொகுதி. அந்த மக்கள. என்னுடைய. சிறு வயதிலிருந்து. இங்கே வரும்வரை. கிட்டத்தட்ட. 27. ஆண்டுகளாக. பெரும்பான்மையாக. தமிழரசுக் கட்சியை. ஆதரித்து வந்துள்ளார்கள். ஏன். நான். கூட. எங்கள். இரத்தினம். நவரத்தினம். தேர்தல். காலங்களில் இப்படி பல. கோஷங்களை. எழுப்பி. உள்ளோம். என்ன. பலன ? அந்த. மக்கள். வேறு. வழியின்றித். தான். அர்ச்சுனாவை. தெரிவு. செய்தார்கள். இங்கே. தமிழரசு. கட்சிக்கு. ஒரு. செய்தி சொல்லப்பட்டுள்ளது. நீங்கள். ஒழுங்ககா. இல்லாவிடில். எந்த. விடுகாலிக்கும். நாங்கள். எங்களது. வாக்கைப். போடுவோம். இந்த. துணிவு. மற்றைய. தொகுதி. மக்களுக்கு. இல்லை என்பது. கவலையான. விடயம் அர்ச்சுனாவை. தெரிவு. செய்ததால். எந்த. நட்டமும் இல்லை. அவரது. இடத்துக்கு வேறு நபர். தெரிவு. செய்யப்பட்டாலும் அந்த. நபரும் எதுவுமே. செய்திருக்க. மாட்டார். பதவியைப் பற்றிக் கவலைப்படமால். பாரளுமன்றத்தில். கதைக்கிறார் இல்லையா. ? அது. பிழையாகவுமிருக்கலாம். சரியாகவுமிருக்கலாம். அவர். பயப்படமால். மூன்று மொழிகளிளும். கதைக்கிறார். மற்றைய. தமிழ். பாரளுமன்ற. உறுப்பினர்கள். அனைவரும். பயத்தவர்கள். பதவி. பறிக்கப்படும். ்்்சட்டம். பாயும். என்று. பயத்தவர்கள். எந்த ஒரு விடயத்திலும். சாதிக்க. முடியாது. அவரால்

அடக்கி ஒடுங்கி. இருக்கவும்

நீங்கள் விரும்புவது போல். நடக்கும். முடியும்

தமிழரசு கட்சியல் அல்லது. தமிழ். காங்கிரஸ்.

இல்லை ஜே வி பி. உடன்

மகிந்தவின். கட்சியில். இணைய. முடியும். செய்யவில்லை. ஏன். அவன். ஒரு பைத்தியம். எங்கள். இலங்கை. பாரளுமன்றத்தில். இருப்பவர்கள். பைத்தியமாகத். தான் இருப்பார்கள் எதுவும் செய்யமால் தொடர்ந்தும் பல. தமிழர்கள். பாரளுமன்றம். போகிறார்கள். ஏன் எதுவும். செய்ய. முடியாது. என்று தெரிந்தும். போக. வேண்டும். இவர்களுக்கு ஏன்வாக்கு. போட. வேண்டும் ? அர்ச்சுனாவை. ஏன். பேசுகிறீர்கள். ? அவர். ஒரு வருடத்தில். பேசிய. பேச்சுக்களை. 30. ஆண்டுகளுக்கு. மேல். பாரளுமன்றம். போனவார்கள். பேசியதில்லை.

குறிப்பு. ்்்்குழந்தைகள் உடன். நடக்க. மாட்டார்கள் விழுந்து. விழுந்து. தான். சரியாகநடக்கப். பழக முடியும்

கார். ஒடப் பழகுவது கூட. பிழை விட்டுதான். பழகிறோம். ்்்இப்படியாக. ஒவ்வொரு. விடயமும். செயல்களும் பிழை விட்டு. பிழை விட்டு தான். சரியாக. செய்யமுடியும். இலங்கைபாரளுமன்றத்தில். இயற்றப்பட்ட ஒரு. நல்ல. சட்டத்தை. சொல்லுங்கள். பார்ப்போம் சிங்களவருக்கு. அல்லது தமிழருக்கு இல்லை. முஸ்லிகளுக்கு. ஒரு. நல்ல. சட்டம்் இயற்றப்பட்டுள்ளதா. ? இல்லை. எனவே. இந்த. மன்றத்தில்் எப்படியும். கதைக்கலாம். அர்ச்சுனா. கதைப்பதைப் பார்த்து மற்றவர்களில் பயம். களையப்பட. வேண்டும். இல்லாமால். போகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:
  1. சிங்களர் தீர்வு மட்டும் அல்ல, சக வாழ்வை கூட தரப்போவதில்லை.

  2. இப்போ உள்ள அத்தனை தமிழ் அரசியல்வாதியும் - ஒரு சதம் தேறாத கேசுகள்.

  3. வெளியக சுயநிர்ணயம் ஒருபோதும் சரிவராது.

  4. உள்ளக சுயநிர்ணயம், சமஸ்டி என்பன நீண்ட கால இலக்காக இருத்தல் அவசியம் ஆனால் இதற்கும் குறைவான ஒரு காணி உரிமையாவது பாதுகாக்கபடும் தீர்வை நோக்கி நகர்வதே இப்போ செய்ய கூடியதும், வேண்டியதும்.

  5. இந்த 4 பிரபஞ்ச உண்மைகளி கீழ் புலம், புலம்பெயர் தமிழர் ஒன்றுபட்டு, ஒரு புதிய அரசியலை, தலைமையை உருவாக்க வேண்டும்.

சொல்வது மிக இலகு…

செய்வது….

யாழ்கள அனுர காவடிகளுக்கான பதிலா அது?👆

அரைச்ச மாவை திருப்பியும் அரைக்காமல்..... வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.

ஈழத்தமிழர்கள் அன்று தொடக்கம் தம் நலனுக்காக காவடி எடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள். தமது நேர்த்தி நிறைவேறும் வரை....

நான் கருத்து வெற்றிக்காக கருத்து எழுதுபவனல்ல. இன்றைய யதார்த்தம் எதுவோ அதுவே தகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Kandiah57 said:

என்னை. பொறுத்த மட்டில். சாவகச்சேரி. எனது. தொகுதி. அந்த மக்கள. என்னுடைய. சிறு வயதிலிருந்து. இங்கே வரும்வரை. கிட்டத்தட்ட. 27. ஆண்டுகளாக. பெரும்பான்மையாக. தமிழரசுக் கட்சியை. ஆதரித்து வந்துள்ளார்கள். ஏன். நான். கூட. எங்கள். இரத்தினம். நவரத்தினம். தேர்தல். காலங்களில் இப்படி பல. கோஷங்களை. எழுப்பி. உள்ளோம். என்ன. பலன ? அந்த. மக்கள். வேறு. வழியின்றித். தான். அர்ச்சுனாவை. தெரிவு. செய்தார்கள். இங்கே. தமிழரசு. கட்சிக்கு. ஒரு. செய்தி சொல்லப்பட்டுள்ளது. நீங்கள். ஒழுங்ககா. இல்லாவிடில். எந்த. விடுகாலிக்கும். நாங்கள். எங்களது. வாக்கைப். போடுவோம். இந்த. துணிவு. மற்றைய. தொகுதி. மக்களுக்கு. இல்லை என்பது. கவலையான. விடயம் அர்ச்சுனாவை. தெரிவு. செய்ததால். எந்த. நட்டமும் இல்லை. அவரது. இடத்துக்கு வேறு நபர். தெரிவு. செய்யப்பட்டாலும் அந்த. நபரும் எதுவுமே. செய்திருக்க. மாட்டார். பதவியைப் பற்றிக் கவலைப்படமால். பாரளுமன்றத்தில். கதைக்கிறார் இல்லையா. ? அது. பிழையாகவுமிருக்கலாம். சரியாகவுமிருக்கலாம். அவர். பயப்படமால். மூன்று மொழிகளிளும். கதைக்கிறார். மற்றைய. தமிழ். பாரளுமன்ற. உறுப்பினர்கள். அனைவரும். பயத்தவர்கள். பதவி. பறிக்கப்படும். ்்்சட்டம். பாயும். என்று. பயத்தவர்கள். எந்த ஒரு விடயத்திலும். சாதிக்க. முடியாது. அவரால்

அடக்கி ஒடுங்கி. இருக்கவும்

நீங்கள் விரும்புவது போல். நடக்கும். முடியும்

தமிழரசு கட்சியல் அல்லது. தமிழ். காங்கிரஸ்.

இல்லை ஜே வி பி. உடன்

மகிந்தவின். கட்சியில். இணைய. முடியும். செய்யவில்லை. ஏன். அவன். ஒரு பைத்தியம். எங்கள். இலங்கை. பாரளுமன்றத்தில். இருப்பவர்கள். பைத்தியமாகத். தான் இருப்பார்கள் எதுவும் செய்யமால் தொடர்ந்தும் பல. தமிழர்கள். பாரளுமன்றம். போகிறார்கள். ஏன் எதுவும். செய்ய. முடியாது. என்று தெரிந்தும். போக. வேண்டும். இவர்களுக்கு ஏன்வாக்கு. போட. வேண்டும் ? அர்ச்சுனாவை. ஏன். பேசுகிறீர்கள். ? அவர். ஒரு வருடத்தில். பேசிய. பேச்சுக்களை. 30. ஆண்டுகளுக்கு. மேல். பாரளுமன்றம். போனவார்கள். பேசியதில்லை.

குறிப்பு. ்்்்குழந்தைகள் உடன். நடக்க. மாட்டார்கள் விழுந்து. விழுந்து. தான். சரியாகநடக்கப். பழக முடியும்

கார். ஒடப் பழகுவது கூட. பிழை விட்டுதான். பழகிறோம். ்்்இப்படியாக. ஒவ்வொரு. விடயமும். செயல்களும் பிழை விட்டு. பிழை விட்டு தான். சரியாக. செய்யமுடியும். இலங்கைபாரளுமன்றத்தில். இயற்றப்பட்ட ஒரு. நல்ல. சட்டத்தை. சொல்லுங்கள். பார்ப்போம் சிங்களவருக்கு. அல்லது தமிழருக்கு இல்லை. முஸ்லிகளுக்கு. ஒரு. நல்ல. சட்டம்் இயற்றப்பட்டுள்ளதா. ? இல்லை. எனவே. இந்த. மன்றத்தில்் எப்படியும். கதைக்கலாம். அர்ச்சுனா. கதைப்பதைப் பார்த்து மற்றவர்களில் பயம். களையப்பட. வேண்டும். இல்லாமால். போகும்

கந்தையர்! ஐ போனில் கலக்கிறார்🤣. ஆனால் அடிக்கடி முற்றுப்புள்ளி போடாமல் விட்டால் அழகு.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

கந்தையர்! ஐ போனில் கலக்கிறார்🤣. ஆனால் அடிக்கடி முற்றுப்புள்ளி போடாமல் விட்டால் அழகு.

உண்மை. தான். இப்போ. பாவிப்பது. வேறு. எழுத்து முத்தி. பாவித்தது. நல்லது. அது. இந்ந. நான் ஏதோ. எனக்கு. தெரியாத. பிழையை. விட்டு. விட்டேன். அழிந்து. விட்டது. மகன் தான். எங்களுடன். இருக்கிறான். அவனை. பல. தடவை. கும்பிட்டு. மன்றாடித். தான். இப்ப. பாவிப்பது. கிடைத்தது. அது. தன்பட்டில். முற்றுப்புள்ளி. வைக்குது. பார்ப்போம். திருத்த. முயற்ச்க்கிறேன். நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அரைச்ச மாவை திருப்பியும் அரைக்காமல்..... வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.

சரி, நீங்கள் கூறும் யதார்த்த அரசியல்தான் என்ன என ஒரு விளக்க்கம் கொடுக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி பேசி கொண்டிருந்த போது ஒரு நண்பர் சொன்னார் புத்தர் எங்கள் கடவுள் தான் என்று இனி தமிழர்கள் கும்பிட தொடங்க வேண்டும். அவர்களும் புதிதாக புத்தர் சிலை வைப்பதை கைவிட்டுவிடுவார்கள். இந்தியாவில் இருந்து வந்த அனுமானையும் ஐயப்பனையும் கும்பிடுகிறவர்கள் இதை செய்து பார்க்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

Story of 2005/06..!!!

2005/06இல் இதே போல் திருகோணமலை பிரதான பேருந்து நிலையத்தில் ஒரு பெரிய புத்தர் சிலை இரவோடு இரவாக வந்தது.

நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்டது ஆனால் எதுவும் நடக்கவில்லை.

அன்று பல விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

விக்னேஸ்வரன் அவர்கள் தொடர் கடையடைப்பு போராட்டதுக்கு அழைப்பு விடுத்தார்.

எத்தனையோ போராட்டங்கள் நிகழ்த்தியும் எந்தப் பயனும் இல்லை.

இந்த தொடர்போராட்ட எதிர்ப்பு நிகழ்வுகளால் பேரினவாதம் ஆத்திரமடைந்தது.

ஒரு நாள் முன்னாள் ஜேவீபியின் mp ஒருவரின் அனுசரணையில் திருகோணமலை நகரம் காடையர்களால் கொழுத்தப்பட்டது.

பலர் வீதிகளில் வெட்டப்பட்டு வீசப்பட்டனர்.

உயர்தரம் முடிந்து மக்கள் வங்கியில் சிறிதுகாலம் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்கு வந்து வங்கியை உடைக்க முனைந்தார்கள். அதில் சிக்குண்டு மீண்டு வந்தது எனக்கு நினைவிருக்கின்றது.

பெளத்த ஆதிக்கத்துக்கான எதிர்பைக் காட்டி உயிர்களை விட்ட பூமி திருகோணமலை.

எந்த நாய்கள் வந்தாலும் எந்தக் காட்சியும் இங்கு மாறுவதாக இல்லை.

2005/06 இல் திருகோணமலையில் இடம்பெற்ற கலவரம்

இன்றும் நாம் ஓர் எல்லையை மீறி எதுவும் செய்தால் இப்படித் தான் வெட்டி வீசப்படுவோம். அன்றாவது பிடித்துக்கொள்ள ஒரு கை இருந்தது. இன்று?

https://www.facebook.com/share/p/1AN23V5Soi/

பலராலும் அறியப்பட்ட ராஜ்குமார் ரஜீவ்காந் என்பவரின் முகநுhலில் இருந்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

உண்மை. தான். இப்போ. பாவிப்பது. வேறு. எழுத்து முத்தி. பாவித்தது. நல்லது. அது. இந்ந. நான் ஏதோ. எனக்கு. தெரியாத. பிழையை. விட்டு. விட்டேன். அழிந்து. விட்டது. மகன் தான். எங்களுடன். இருக்கிறான். அவனை. பல. தடவை. கும்பிட்டு. மன்றாடித். தான். இப்ப. பாவிப்பது. கிடைத்தது. அது. தன்பட்டில். முற்றுப்புள்ளி. வைக்குது. பார்ப்போம். திருத்த. முயற்ச்க்கிறேன். நன்றி வணக்கம்.

நான் ஐ போண் வழியாக வந்து எழுதி பார்த்து விட்டு தான் இதனை எழுதுகிறேன்.நீங்களும் உங்கள் போண் ஊடாகவே யாழில் உள் வந்து எழுத வேண்டிய பகுதிக்கு கீளே உள்ள பெட்டியில் எழுதி விட்டு, மேலே உள்ள பெட்டியில் கொப்பி பேஸ்ட் செய்யுங்கள்.உங்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக இதை எழுதுகிறேன்.மற்றப்படி ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் பிரபாகரன் என் தலைவன் என்று வீர முழக்கமிடும் அர்ச்சனா பிரான்ஸ் வந்த போது தான் நடத்திய கூட்டதிற்கு தயவு செய்து தலைவர் படங்களையோ புலிக் கொடிகளையோ கொண்டு வரவேண்டாம் என்று கெஞ்சி கெஞ்சி மக்களிடன் வேண்டு கோள் விடுத்தது ஏன்? யாருகாவது தெரியுமா?

ஒரு நாட்டுக்கு முதல் தடவையாக வரும் ஒருவர் அதுவும் எங்கள் நாட்டிலிருந்து வருபவர்கள் எதிர் நோக்கும் சட்ட சிக்கல் பற்றி உண்மையாகவே உங்களுக்கு தெரியாது தானா.?.வைத்தியர் அர்ச்சனா ஊர் பாரளமன்றில் எப்படி பேசினாலும் அவர்களுக்கும் பழகி விட்ட போலும், ஆனால் ஒரு புதிய நாட்டுக்கு வரும் போது அனைத்து நடை முறைகளை கடைப்பிடிக்க வேணும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும், அவருக்கும் தெரிந்திருக்கும்.வேணாம்..சில இடங்களில் எழுதுவது சுத்த வேஸ்ட்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

Story of 2005/06..!!!

2005/06இல் இதே போல் திருகோணமலை பிரதான பேருந்து நிலையத்தில் ஒரு பெரிய புத்தர் சிலை இரவோடு இரவாக வந்தது.

நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்டது ஆனால் எதுவும் நடக்கவில்லை.

அன்று பல விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

விக்னேஸ்வரன் அவர்கள் தொடர் கடையடைப்பு போராட்டதுக்கு அழைப்பு விடுத்தார்.

எத்தனையோ போராட்டங்கள் நிகழ்த்தியும் எந்தப் பயனும் இல்லை.

இந்த தொடர்போராட்ட எதிர்ப்பு நிகழ்வுகளால் பேரினவாதம் ஆத்திரமடைந்தது.

ஒரு நாள் முன்னாள் ஜேவீபியின் mp ஒருவரின் அனுசரணையில் திருகோணமலை நகரம் காடையர்களால் கொழுத்தப்பட்டது.

பலர் வீதிகளில் வெட்டப்பட்டு வீசப்பட்டனர்.

உயர்தரம் முடிந்து மக்கள் வங்கியில் சிறிதுகாலம் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்கு வந்து வங்கியை உடைக்க முனைந்தார்கள். அதில் சிக்குண்டு மீண்டு வந்தது எனக்கு நினைவிருக்கின்றது.

பெளத்த ஆதிக்கத்துக்கான எதிர்பைக் காட்டி உயிர்களை விட்ட பூமி திருகோணமலை.

எந்த நாய்கள் வந்தாலும் எந்தக் காட்சியும் இங்கு மாறுவதாக இல்லை.

2005/06 இல் திருகோணமலையில் இடம்பெற்ற கலவரம்

இன்றும் நாம் ஓர் எல்லையை மீறி எதுவும் செய்தால் இப்படித் தான் வெட்டி வீசப்படுவோம். அன்றாவது பிடித்துக்கொள்ள ஒரு கை இருந்தது. இன்று?

https://www.facebook.com/share/p/1AN23V5Soi/

பலராலும் அறியப்பட்ட ராஜ்குமார் ரஜீவ்காந் என்பவரின் முகநுhலில் இருந்து.

என்ன. பிரியன். சும்மா. இருக்க. ரம்பட். நம்மிடம். எல்லாம்பறித்து உங்களின். வங்கி. கணக்கில். போட்டு. உள்ளார். எனவே. மட்டற்ற மகிழ்ச்சியில். இருப்பதால் நீர்வேலியன். யாசோ. ஒருவரையும். காணவில்லை. வாழ்க. முஸலிம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

சொல்வது மிக இலகு…

செய்வது….

சிங்கையில் இருந்து நானும், யு கேயில் இருந்து நீங்களும் தான்

ரெண்டு பேரும் இறக்கிறோம், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் உள்ள போய் நீங்கள் பிச்சுமணி பைத்தியனை லேப்ட்டில் டீல் பண்ணுறீங்க நான் மிகுதி கூட்டத்தை ரயிட்டில் டீல் பண்ணுறேன் (வாழாந்தவக்கை சாணக்ஸ் உட்பட) . அரசியல் என்றால் என்ன என்று முழு வேர்ல்டுக்கும் காட்டுறோம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

சிங்கையில் இருந்து நானும், யு கேயில் இருந்து நீங்களும் தான்

புலம்பெயர் தமிழர்கள் என்றால் அர்ச்சுனாவின் பாராளுமன்ற பேச்சை இரசித்து சந்தோசபடுபவர்களாக இருக்கின்றனர்.

இறங்குங்கோ நீங்கள் தான் சரி 😂

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புலம்பெயர் தமிழர்கள் என்றால் அர்ச்சுனாவின் பாராளுமன்ற பேச்சை இரசித்து சந்தோசபடுபவர்களாக இருக்கின்றனர்.

அப்படியா சந்தோஷப்படுகினம் ....புதுசா அல்லோ இருக்கு

பக்கத்துவீட்டுக்காரனுக்கு புள்ளைபெத்தவைகள் எண்டு பைத்தியன் செருப்பை P யில் தோச்சுஅடிச்சதில் காசனுப்புற ஆண்டிகளும் பேய்க்கடுப்பில் இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, goshan_che said:

சரி, நீங்கள் கூறும் யதார்த்த அரசியல்தான் என்ன என ஒரு விளக்க்கம் கொடுக்கிறது?

இனவாத சிங்களம் தமிழர்களுக்கு எதுவுமே தராது என்பது 70வருட வரலாறு சொல்லி நிற்கும் பாடம்.

இருந்தாலும் சிங்களத்திற்கு தமிழர்களுக்கு வேண்டியதை கொடுக்குமாறு சர்வதேசம் பரிந்துரை செய்யுமே தவிர வற்புறுத்தாது. இது 2009க்கு பின்னர் கண்டு களித்த அனுபவங்கள்.

எனவே....

இன்றைய ஆட்சியாளர்களுடன் சமரச பேச்சுக்கள் பேசி ஏதாவது பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர சண்டித்தனங்கள் எக்காலத்திலும் எடுபடாது.

****

Edited by மோகன்
**** நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

ஒரு நாட்டுக்கு முதல் தடவையாக வரும் ஒருவர் அதுவும் எங்கள் நாட்டிலிருந்து வருபவர்கள் எதிர் நோக்கும் சட்ட சிக்கல் பற்றி உண்மையாகவே உங்களுக்கு தெரியாது தானா.?.வைத்தியர் அர்ச்சனா ஊர் பாரளமன்றில் எப்படி பேசினாலும் அவர்களுக்கும் பழகி விட்ட போலும், ஆனால் ஒரு புதிய நாட்டுக்கு வரும் போது அனைத்து நடை முறைகளை கடைப்பிடிக்க வேணும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும், அவருக்கும் தெரிந்திருக்கும்.வேணாம்..சில இடங்களில் எழுதுவது சுத்த வேஸ்ட்.

யாயினி, பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை மக்கள் அனுப்புவது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கே. ஆனால், அரச்சனா உட்பட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து செய்வது, அடுத்த தேர்தலுக்கான தமது சொந்த தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே. தான் இப்படிக் குரைப்பதால் இந்த பிரச்சனை மேலும் பற்றியெரிந்து, தமிழ்மக்களுக்கே அது பாதிப்பை உண்டாக்குமே தவிர பிரச்சனை தீரப்போவதில்லை என்பது, அர்சசனாவுக்கு நன்கு தெரியும். அப்படி பிரச்சனை மேலும் பற்றி எரிந்தால், அதை இன்னும் தனது அரசியல் நலன்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பதும் அரச்சனாவுக்கு தெரியும்.

அதனால் மற்றய தமிழ் பாராளுமன்ற உறுபினர்களை போல் பண்பாக உரையாற்றாமல் தான் இப்படி நாய் போல் குரைப்பது பிரச்சனையை மேலும் அதிகரித்தாலும், தனக்கு மற்றயவர்களை விட வாக்குகளை அதிகரிக்க வைக்கும், என்று அவர் நம்புகிறார். பண்பற்று பேசுபவர்களை ரசிக்கும் கூட்டம் சமூகவலைத்தளங்களில் இருப்பதை துல்லியமாக அறிந்து அரசியலுக்கு வந்தவர் அவர். வைத்தியத்துறையில் தன்னால் மிளிர முடியாது அந்தளவுக்கு அந்த துறையில் தனக்கு அறிவில்லை என்பதை உணர்ந்து அடுத்தவனை வித்தியாசமாக பேக்காட்டி வாழலாம் என்பதை துல்லியமாக கணிப்பிட்ட திறமை உடைய அர்சசனா உண்மையில் பாராட்டுக்குரியவர்தான்.

@Justin கூறியது போல் பாராளுமன்றத்துக்கு வெளியே பம்மிக்கொண்டு அடக்கி வாசித்து தனது பதவியை காப்பாற்றிகொள்ளவும் அர்சசனாவுக்கு நன்கு தெரியும். தனது அப்பா தமிழீழ காவற்துறையில் உயர் அதிகாரி என்றும், ஜேர்மனியில் இருந்து தேசியத்தலைவரின் கொள்கைகளின் பார் ஈர்ககப்பட்டு இங்கு தாயக பணி புரிய வந்ததாகவும் தமிழ் சனலில் கூறிவிட்டு, அதே மாதமே( அது போன மாசம் என்று சொல்லவேண்டிய தேவையே இருக்கவில்லை) சிங்கள சனலில் பல்டியடித்து அப்பா வேலையில்லாமல் கஷரப்பட்டதால் புலிகளின் பொலிசில் கடமையாற்ற வேண்டிய தேவை வந்ததே தவிர அவர்களது கொள்கைகளில் அப்பாவுக்கு எந்த ஈடுபாடும் இல்லை என பேட்டியளித்த பின்பும் தனக்கு வாக்களிக்கும் மென்டல்கள் கணிசமான அளவில் இருப்பதை அனுபவத்தில் உணர்ந்தவர் அவர்.

இருப்பினும், 1970/80 களின் இருந்த இளம் சமுதாயம் போல் இப்படியான அரசியல் சுயநலமிகளின் பேச்சில் மயங்கி தமது வாழ்வைத் தொலைக்காமல், இவர்களின் அயோக்கியத்தனமான அரசியலை திரும்பி கூட பார்ககாமல் தாமுண்டு தமது கல்வி, தமது உழைப்பு , தமது career என்று தமது வாழ்வை அமைக்க விரும்பும் அதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணிசமான இளம் சந்ததி தாயகத்தில் தற்போது இருப்பது ஆறுதலான, தமிழர் வாழ்வில் நம்பிக்கையளிக்க கூடிய விடயம்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவோ தானே பயங்கரவாதிகளை அழித்தவர் என சிங்களமக்களிடம் பாராட்டு வாங்குகிறார், அர்ச்சுனாவோ நாமலுக்காக வக்காலத்து வாங்குகிறார், தேசியத்தலைவர் தனது கடவுள் என்கிறார், இதை மஹிந்தவின் அரசாங்கத்தில் இவரால் சொல்ல முடிந்திருக்குமா? முடிந்திருந்தால் பயங்கரவாத சட்டத்திலோ, வெள்ளை வானிலோ காணாமல் ஆக்கப்பட்டிருப்பார். தனது நலனிற்காக எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் யாரோடும் பேசுபவர்தான் அர்ச்சுனா. மக்களுக்காக இவர் செய்ததை விட, தனது அடாவடியினால் காவற்துறை சென்றதே அதிகம். இவரை நம்பி வாக்களித்த மக்கள்தான் பாவம். இந்த லட்ஷணத்தில ஜனாதிபதி கனவோடு இவர் பின்னால் சுற்றுகிறார் நாமல். இவரோ தமிழ் மக்களின் ஒரேயொரு பிரதிநிதி தானென்கிறார். நாமலும் நம்பி விட்டார் போலும்.

தங்களின் அரசியற் செல்வாக்கு சரியும்போதெல்லாம் கையிலெடுக்கும் ஆயுதம் பௌத்தம், இனம். இதனாலேயே இவர்கள் அழியப்போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

581951302_933897943129925_76486077184576

586398688_1513138940210328_6095390544223

585328176_1451079333054306_6857371521358

585368960_1451779972984242_5445588733435

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcR02zkorIud635qMhWnp6J

தமிழ் கடவுள்/காவலாளிகள் இல்லாமல் போனபிறகு, திருகோணமலையில்..

2009ஆம் ஆண்டுக்கு பின்னர்,

கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் திணைக்கள கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது

சிறீமலை நீலியம்மன் சைவ கோயில் முழுமையாக சிதைக்கப்பட்டு அங்கு 'பாசன பப்பாத ராஜமஹா' என்கின்ற விகாரையை உருவாக்கி இருக்கின்றார்கள்

குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு அதே இடத்தில "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை நிர்மாணித்து இருக்கின்றார்கள்

அரிசிமலையில் தமிழ் நிலங்களில் 'ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரை' (Asiri Kanda Purana Rajamaha Viharaya) கட்டப்பட்டு இருக்கின்றது.

தென்னமரவடி கந்தசாமி மலை வழிபாடு தடைசெய்யப்பட்டு அங்கு பௌத்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

64ஆம் கட்டை (பச்சனூர் மலை) விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டுப்பட்டு வருகின்றது.

பெரியகுளம் பகுதி தமிழர் நிலங்களில் பொரலுகந்த ராஜமகா விகாரை கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.

ராஜவந்தான் மலை கோயில் விக்கிரகங்கள் தோண்டியெறிப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது.

மூதூர் சூடைக்­குடா மத்­த­ளம்­மலை சூழலில் பௌத்த தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக கூறுகின்றார்கள்.

இந்தவகையில் திருகோணமலையில் 74ற்கு மேற்பட்ட பிரதேசங்களை பௌத்த மதத்திற்குரிய தொல்லியல் இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள்.

இதுபோதாதென்று திருக்கோணேஸ்வரம் கோயில் சூழல் முழுமையாக சிங்கள மயப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக, இந்த கோயில் கோகண்ண விகாரை மீதே கட்டப்பட்டுள்ளது என உரிமை கோருகின்றார்கள். இங்கு வியாபாரம் செய்வதற்காக இரத்தினபுரியிலிருந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள்.

திரியாய், மற்றும் தென்னமரவடியில் பல ஆயிரக்கணக்கான வயல் காணிகளில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக விவசாயம் தடைசெய்யப்பட்டு இருக்கின்றது.

திரியாய் கிராமத்தில் மட்டும் 1,000 ஏக்கர் வயலில் விவசாயம்செய்ய விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் 2,712 ஏக்கர் காணியை அரச திணைக்களங்கள் உரிமை கோரி இருக்கின்றது.

இதில் மூன்று புதிய பௌத்த விகாரைகளும் ஒரு பழைய பௌத்த விகாரையும் அமைக்கப்பட்டு அவற்றுக்கு 809 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல கங்குவேலி கிராமத்தில் 500ஏக்கர் வயல் நிலங்கள் சிங்களவரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு கங்குவேலி குளத்தை சூழ சிங்களவர்கள் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் 2,500 ஏக்கர் நிலப்பகுதி பானமுர திலகவன்ச என்கிற பிக்குவிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

அதேபோல குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் 11 இடங்களில் 340.33 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் 7 பௌத்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இங்கு 30க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும் வணக்கஸ்தலங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.ஏற்கனவே இந்த பகுதியில் 23இடங்களில் பௌத்த கட்டுமானங்கள் முழுமை பெற்று இருக்கின்றன.

மேற்படி பானமுர திலகவன்ச என்கிற பிக்கு அரிசிமலை என்கிற பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கின்றார்.

இங்கு 500 ஏக்கர் காணி அரசாங்கத்தால் பௌத்த பிக்குகளுக்கு இங்கு வழங்கப்பட்டு இருந்தது. அதேபோன்று அரிசிமலையுள்ள 500 ஏக்கர் காட்டு பகுதியும் பௌத்த தொல்லியலுக்குரிய இடமாக பிரகடனம் செய்யப்பட்டு இருக்கின்றது.

தென்னைமரவாடி திரியாய் ,குரும்பைசிட்டு, புல்மோட்டை போன்ற இடங்களில் உள்ள 11இடங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான நிலங்கள் அரச நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

தென்னைமரவாடி தமிழ் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை ) மற்றும் ஏறமாடு (10 ஆம் கட்டை ) இரண்டு சிங்கள குடியேற்ற திட்டங்கள் உருவாக்கபபட்டு இருக்கின்றன

இவ்வாறு கன்னியா, குச்சவெளி , கும்புறுப்பிட்டி, சாம்பல்தீவு, சம்பூர், மத்தளமலை, கல்லடி மலைநீலியம்மன், இலங்கைத்துறை முகத்துவாரம் என பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை மாவட்டம் சீரழிந்து வருகின்றது.

மேற்படி அவலங்களை அரசியல்ரீதியாக வலுமையாக எதிர்க்கொள்ள கூடிய தமிழ் ஆளுமைகளை அரசியல் மற்றும் சிவில் பொதுவெளியில் அடையாளம் காணாமல் திருகோணமலையை யாராலும் காப்பாற்ற முடியாது.

Tharmalingam Kamaraj ·

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

சிங்கையில் இருந்து நானும், யு கேயில் இருந்து நீங்களும் தான்

ரெண்டு பேரும் இறக்கிறோம், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் உள்ள போய் நீங்கள் பிச்சுமணி பைத்தியனை லேப்ட்டில் டீல் பண்ணுறீங்க நான் மிகுதி கூட்டத்தை ரயிட்டில் டீல் பண்ணுறேன் (வாழாந்தவக்கை சாணக்ஸ் உட்பட) . அரசியல் என்றால் என்ன என்று முழு வேர்ல்டுக்கும் காட்டுறோம்

ஸ்டார்ட் மீசிக்😂

6 hours ago, குமாரசாமி said:

இன்றைய ஆட்சியாளர்களுடன் சமரச பேச்சுக்கள் பேசி

7 hours ago, குமாரசாமி said:

இனவாத சிங்களம் தமிழர்களுக்கு எதுவுமே தராது என்பது 70வருட வரலாறு சொல்லி நிற்கும் பாடம்.

70 வருடம் ஏதுவும் தராதோரிடம் என்னத்தை பேசி…என்னத்த …?

இந்த பம்மாத்தை தானே சுமனும் செய்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.