Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: “எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக் குழு கூட்டத்தில் உரையாற்றிய சீமான், “நாம் தமிழர் கட்சியின் வெற்றிதான் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும். மக்களாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிற மண்ணில் ஆட்சி அதிகாரம்தான் எல்லா மாற்றத்துக்கும் அடிப்படையாக இருக்கும்.

இங்கே நம்முடைய மொழியை பேசி, நம் வாழ்க்கையை வாழ்ந்து, நம்மால் ஆட்சிக்கு வந்து, நம் மொழியை, வரலாற்றை, இனத்தை அழிக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். தமிழினத்தில் அவ்வப்போது எழும் எழுச்சியை திராவிடர்கள் தன் ஆட்சி அதிகாரத்தால் அடக்கிவிட்டார்கள்.

மக்களிடம் உள்ள வறுமையின் காரணமாக ஏற்பட்ட அறியாமை, மறதியை பயன்படுத்தி அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். தேர்தலில் இந்தக் கட்சிகள் பெறுவது எல்லாம் வெற்றியா? நான் இந்த மக்களை முழுமையாக நம்பி களத்தில் நிற்கிறேன். எனவே வெற்றியோ, தோல்வியோ அது அவர்கள் தரும் பரிசு. எங்களைப்போல தனித்து நின்று, தத்துவம் பேசி வெற்றி பெற்று காட்டுங்கள் பார்ப்போம். பெரிய கட்சி என்கிறார்கள்... ஆனால், மாநாட்டுக்கு, கூட்டத்துக்கு சாப்பாடு, சாராயம், காசு கொடுத்துதான் ஆள் சேர்க்கிறார்கள்.

நாங்கள் வெற்றிபெற்று விடுவோம் என எதிரிகள் பயப்படுகிறார்கள். இங்கே இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே. எல்லாமே பெரியார்தான் காரணம் என்கிறது ஒரு கூட்டம். உண்மையில்தான் இந்த நாட்டை திருடர்கள் நாடாக மாற்றியதற்கும், எங்கள் மொழி, கலை, இலக்கிய, பண்பாடு, வழிபாடு, நிலம், வளம், ஆட்சி, அதிகாரம் எல்லாம் சிதைந்து அழிந்து போனதற்கு காரணம் பெரியார்தான். அந்த திராவிட திருட்டு சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையேதான் இங்கே போட்டியே. இங்கே இந்திய திராவிடர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேதான் போட்டி.

தனித்து நின்று, தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு சின்னம் பெற்று, எளிய பிள்ளைகளை வேட்பாளர்களாக நிறுத்தி அங்கீகாரம் பெற்ற கட்சி, நாட்டில் எங்களைத் தவிர வேறேதும் உண்டா?

வாக்குக்கு காசு கொடுப்போம் என்ற கூட்டத்தை ஆதரிப்பீர்களா அல்லது மக்களுக்கு வாழ்க்கையை கொடுப்போம் என்பவர்களை ஆதரிப்பீர்களா?

இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல... அது வீழ்ச்சித் திட்டம். இலவசம் பெறும் ஏழ்மை நிலை இல்லாது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். நல்ல கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கினால் மக்களே தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள்.

நிலமும் வளமும் சார்ந்த தற்சார்பு தாய்மை பொருளாதாரத்தை உருவாக்குவோம். சாராயப் பொருளாதாரம் மூலம் வருவாய் ரூ.50 ஆயிரம் கோடி, கால்நடை வளர்ப்பு மூலம் பொருளாதாரம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி. எது வேண்டும் மக்களே?

பின்லாந்தை விஞ்சிய கல்வியை தமிழகத்து பிள்ளைகளுக்கு கொடுப்போம். இதனை நிச்சயம் சாத்தியப்படுத்திக் காட்டுவேன்.

நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் ஒருபக்கம், நாங்கள் தமிழர்கள் என்பவர்கள் ஒருபக்கம். எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். எங்கள் இனத்தில் எண்ணற்ற பெரியார்கள் உள்ளனர். திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும். சாதி, மதத்தை பார்ப்பவர்கள் ஒருபக்கம் நிற்கட்டும். மனிதமே புனிதம் என்பவர்கள் என்பக்கம் நிற்கட்டும்.

ஏற்காட்டில் சாலைக்கு தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற தமிழின வள்ளல் பெயரை அழித்து பெரியார் பெயரை வைத்தது ஏன்?

தமிழுக்காக, தமிழருக்காக பாடியதால்தான் திராவிடர்கள் பாரதியையும், பாரதிதாசனையும் போற்ற மறுக்கிறார்கள்.

மக்கள் சரியில்லை என நாம் சொல்லக் கூடாது. சரியில்லை என்பதை சரி செய்ய வேண்டியதே நம் வேலை. பிழை யாருடையதாக இருந்தாலும் நாம் திருத்துபவனாக இருக்க வேண்டும்.

நாட்டில் எல்லோருக்கும் சமமான தரமான கல்வி, தரமான மருத்துவம். அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்தவர்களுக்கே அரசு வேலை என சட்டம் போடுவோம்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். அவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என சட்டம் போடுவோம்.

திருப்பரங்குன்றம் பிரச்சினையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். வாக்குக்காக அந்த பிரச்சினையை மாற்றுகிறார்கள். சாதி, மதம் முக்கியம் என்பார்கள் அவர்கள். நாங்கள் மனிதம் பெரிது என்கிறோம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பதாக சொல்கிறார்கள். உடைத்து சூறையாடப்படும் குன்றுகளுக்காக அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்” என்று சீமான் பேசினார்.

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பன் குசும்பன்.

இப்பவே டெபாசிட் இழப்புக்கு காரணம் செட்டப் பண்ணுகிறார்😂

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கூட்டணிக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கையில் சீமான்தனித்து நிற்கிறார் . தேர்தல்செலவுவும் கொடுத்து கணிசமான தொகுதிகளையும் கொடுக்க சித்தப்பு தயராகவே இருக்கிறார்.முதல்த்தேர்தலில் முதல்வராகும் ஆசையில் ஈருக்கும் காரணத்தால் வியை யாருடனும் கூட்டணி அமைக்க முடியாமல் ஈரக்கிறார்.ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் கூட்ணிக்கு வருவதாக சமிக்ஞை கூட காட்டவில்லை.விஜை தேர்தலில் தனித்து நின்றால் தேர்தல் முடிந்த கையோடு படம் நடிக்க கிளம்பி விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புலவர் said:

செய்தி சீமானை பற்றி - ஏன் விஜை பற்றி எழுதுகிறீர்கள்😂.

பட படப்பாக உள்ளதா?😂

42 minutes ago, புலவர் said:

விஜை தேர்தலில் தனித்து நின்றால் தேர்தல் முடிந்த கையோடு படம் நடிக்க கிளம்பி விடுவார்.

சொந்த உழைப்பில் சோறு சாப்பிட்டால் - இதுதான் பிரச்சனை.

திரள்நிதியில், தரகு காசில் தானும் உண்டு, மனைவி, மகன், மனைவியின் அக்காள் மகன் வரை கொழுத்து பிழைக்கும் ஊழல்-குடும்ப அரசியல்வாதி எண்டால், உழைக்காமல் வாழலாம்.

3 hours ago, பிழம்பு said:

சென்னை: “எல்லாமே பெரிய. திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும்.

தமிழர்களின், முஸ்லிம்களின் வாக்குகள் எனக்குத் தேவையில்லை, சிங்களவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்ற கடும் இனவாதியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாவின் குரலுக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

இரண்டு பேருமே அரசியலில் விதைக்கப்பட்ட நச்சு விதைகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

திரள்நிதியில், தரகு காசில் தானும் உண்டு, மனைவி, மகன், மனைவியின் அக்காள் மகன் வரை கொழுத்து பிழைக்கும் ஊழல்-குடும்ப அரசியல்வாதி எண்டால், உழைக்காமல் வாழலாம்.

இங்கிலாந்தில் வசிக்கும் உங்களுக்கு!

இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது என்பதை விளக்கமாக எழுத முடியுமா?

ஜேர்மனியில் உள்ள கட்சிகளுக்கு கட்சி நிதி திரட்டல் எனும் அமைப்பு உள்ளது. அதைவிட மக்களது வரிப்பணமும் கட்சிகளுக்காக ஒதுக்கப்படுகின்றது. அதை விட கட்சி அங்கத்துவ கட்டணம் என்பது வேறு.

மற்றும் படி தமிழ்நாட்டின் எனையை கட்சிகள் எப்படி வாழ்கின்றன என்பதையும் தாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஒண்டும் பெரிசா விளக்கமா எழுத தேவையில்லை.

அமைப்புகள் அல்லது தனிநபர் டொனேசன், உறுப்புரிமை சந்தா, சிறியளவு அரச மானியம் என்பனதான் பிரிதானிய அரசியல் கட்சிகள் பணம் ஈட்டும் முறை.

கவனிக்க : கட்சிகள். கட்சி தலைவர் அல்ல.

கட்சி ஆரம்பிக்க முன் சிங்கிள் டீக்கு சிங்கி அடித்த கட்சி தலைவர் எவரும், கட்சியின் திரள்நிதியில் மலைநாட்டில் பாரிய காணி, 6 கோடி நீலங்கரை பங்களா, பஜேரோ, ஆயுதம் ஏந்திய தனியார் (இந்திய புலனாய்வு) பாதுகாப்பு என பிரித்தானியாவில் வாழ்வதில்லை.

2 hours ago, குமாரசாமி said:

மற்றும் படி தமிழ்நாட்டின் எனையை கட்சிகள் எப்படி வாழ்கின்றன என்பதையும் தாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

எடுத்தபடியால்தான் பல வருடமாக சொல்லி வருகிறேன் அவர்களை போல ஒரு திருட்டு கட்சிதான் நாதக என.

சீமா மட்டும் அல்ல, தூசண துரை, இடும்பா கார்த்தி என எந்த தொழிலும் எப்போதும் செய்யாமல், குடும்ப செல்வம் எனவும் பெரிதாக இல்லாமல், பலர் கட்சி நிதியில்தான் குடும்பமே நடத்துகிறார்கள்.

நாளைக்கே ஆட்சிக்கு வந்தால் - மக்கள் பணத்தில் நடத்துவார்கள்.

#சின்ன கருணாநிதி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்ச்யை பிடிப்பதை விடுத்து த வெ க மற்றும் நா த க இதில் யார் அதிக தொகுதிகளை வெல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஆட்ச்யை பிடிப்பதை விடுத்து த வெ க

தேர்தலில் வெற்றி பெறுவது ஆட்சியை பிடிப்பது சீமான் நோக்கம் இல்லை என்பது இப்போது விளங்கிவிட்டது.. பிஜேபி நிகழ்ச்சி நிரல் படி தமிழ்நாட்டு மக்களை குழப்பி அடித்தல் அந்த கடமையை மிகவும் மோசமாக சீமான் செய்து கொண்டு போகின்றர். சமீபத்தில் பிஜேபி ஆதரவு மேடை ஒன்றில் புர்க்காவால் மூடிய ஒரு பெண்ணை இவர் தான் வீர புலி தமிழிச்சி என்று பேசவைத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

தமிழர்களின், முஸ்லிம்களின் வாக்குகள் எனக்குத் தேவையில்லை, சிங்களவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்ற கடும் இனவாதியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாவின் குரலுக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

இரண்டு பேருமே அரசியலில் விதைக்கப்பட்ட நச்சு விதைகள்.

இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

திராவிட நாடு ஒன்றை வலாற்காரமாக பிடித்து வைத்துக் கொண்டு சீமான் இவ்வாறு சொன்னால் இரண்டும் ஒரே தன்மையை உடையன. சீமானின் தமிழ் தேசியக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தாலும் அதன் மூலம் திராவிட நாடு ஒன்றை ஏற்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

ஆட்ச்யை பிடிப்பதை விடுத்து த வெ க மற்றும் நா த க இதில் யார் அதிக தொகுதிகளை வெல்வார்கள்.

தொகுதியா…..

நாதக நிச்சயம் வெல்லும் தொகுதிகளாவன:

இலண்டன் கிழக்கு, டொரெண்டோ மேற்கு, மந்துவில், சங்கரத்தை, உடையார்கட்டு, முள்ளியவளை, செட்டிகுளம், நிலாவெளி, வெருகல், வாகரை, பாண்டிருப்பு, மாந்தை மேற்கு, திருக்கோவில்.

தவெக

கணிசமான வாக்குகளை அள்ளும். ஆனால் விஜையின் தொகுதியில் மட்டும் வெல்லலாம்.

பிகு

நீங்கள் கேட்டிருக்க வேண்டிய கேள்வி, நாதக ஏதாவது ஒரு தொகுதியில்லாவது டெபாசிட்டை காப்பாத்துமா? என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

இலண்டன் கிழக்கு, டொரெண்டோ மேற்கு, மந்துவில், சங்கரத்தை, உடையார்கட்டு, முள்ளியவளை, செட்டிகுளம், நிலாவெளி, வெருகல், வாகரை, பாண்டிருப்பு, மாந்தை மேற்கு, திருக்கோவில்.

துல்லியமான கணிப்பு கோசான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தொகுதியா…..

நாதக நிச்சயம் வெல்லும் தொகுதிகளாவன:

இலண்டன் கிழக்கு, டொரெண்டோ மேற்கு, மந்துவில், சங்கரத்தை, உடையார்கட்டு, முள்ளியவளை, செட்டிகுளம், நிலாவெளி, வெருகல், வாகரை, பாண்டிருப்பு, மாந்தை மேற்கு, திருக்கோவில்.

தவெக

கணிசமான வாக்குகளை அள்ளும். ஆனால் விஜையின் தொகுதியில் மட்டும் வெல்லலாம்.

பிகு

நீங்கள் கேட்டிருக்க வேண்டிய கேள்வி, நாதக ஏதாவது ஒரு தொகுதியில்லாவது டெபாசிட்டை காப்பாத்துமா? என்பதே.

நீங்கள் குறிப்பிட்ட ஊர்களில் எனது ஊரும் அடங்கியுள்ளது.சத்தியமாக நான் அவரின் அம்பி இல்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_9367.jpeg.712c7647bf422de55fda

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_9367.jpeg.712c7647bf422de55fda

வோட்டை மக்கள் தராது விடினும் …

ஆமை ஓட்டை வைத்தே ஆட்சியை பிடிப்பேன்….

புஹா…ஹ.ஹா😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் குறிப்பிட்ட ஊர்களில் எனது ஊரும் அடங்கியுள்ளது.சத்தியமாக நான் அவரின் அம்பி இல்லை.😂

கூட்டிக்கழித்து கல்கியூலேட்பண்றபோது உங்க ஊர் சங்கரத்தை எண்டு வருது!

10 minutes ago, goshan_che said:

வோட்டை மக்கள் தராது விடினும் …

ஆமை ஓட்டை வைத்தே ஆட்சியை பிடிப்பேன்….

புஹா…ஹ.ஹா😂

புஹா…ஹ.ஹா😂

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2025 at 23:25, புலவர் said:

எல்லோரும் கூட்டணிக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கையில் சீமான்தனித்து நிற்கிறார் . தேர்தல்செலவுவும் கொடுத்து கணிசமான தொகுதிகளையும் கொடுக்க சித்தப்பு தயராகவே இருக்கிறார்.முதல்த்தேர்தலில் முதல்வராகும் ஆசையில் ஈருக்கும் காரணத்தால் வியை யாருடனும் கூட்டணி அமைக்க முடியாமல் ஈரக்கிறார்.ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் கூட்ணிக்கு வருவதாக சமிக்ஞை கூட காட்டவில்லை.விஜை தேர்தலில் தனித்து நின்றால் தேர்தல் முடிந்த கையோடு படம் நடிக்க கிளம்பி விடுவார்.

விஜயினை பற்றி எனக்கு தெரிந்த சில தமிழகத்தினை சேர்ந்தவர்களுடன் உரையாடினேன். பல இளைஞர்கள், பெண்கள் அவருக்கு வாக்களிக்க விரும்புவதாக சொல்லுகிறார்கள். திமுகவுக்கு மாற்று விஜய் என்று சொல்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.