Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

03 Feb, 2026 | 03:41 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்துக்கான கடிதத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இதுவரை காலமும் பதவி வகித்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக பதவி வகிக்கும் எஸ். சிறீதரன் கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதியினால் பெயரிடப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தால் அது தமிழரசுக்கட்சியினதும் தமிழ் மக்களினதும் நிலைபாடுகளுக்கு முரண்பாடானதெனத் தெரிவித்து அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு தமிழரசுக் கட்சியின் தலைமை அறிவுறுத்தியது

இவ்வாறான பின்னணில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இனி பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவராக பதவி வகிக்க கூடாது என அவருக்கு கட்சியால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து எஸ். சிறிதரன் அண்மையில் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சித்தலைமையினால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/237716

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

தமிழ் மக்களினதும் நிலைபாடுகளுக்கு முரண்பாடானதெனத் தெரிவித்து அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு தமிழரசுக் கட்சியின் தலைமை அறிவுறுத்தியது

ஆமா ..... சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள், எடுக்கும் முடிவுகள், கொடுக்கும் முண்டுகள், சந்திப்புகள் எல்லாம் தமிழ் மக்களின் நிலைப்பாடா? அல்லது தமிழ் மக்களுக்கு சாதகமானதா? எதற்கு உங்கள் சுயநல பதவியாசைக்கு மக்களை இழுக்கிறீர்கள்? ஜனாதிபதி தேர்தலின்போது மற்றைய கட்சிகளை கொலைகாரர், கொள்ளைக்காரர் என்று விமர்ச்சித்தவர், இன்று பதவிக்காக வேறொரு கருத்தை சொல்லி கைகோர்க்கிறார். அன்று சங்குச்சின்னத்திற்கு வாக்குப்போடும்படி மக்களை கேட்க மாட்டோம் என்றவர், இப்போ அவர்களோடு பேசுகிறார் எதற்காக? தனக்கொரு நிஞாயம், அடுத்தவருக்கு வேறொரு நிஞாயமா? இதுதான் சட்டப்புலமையா?

11 hours ago, ஏராளன் said:

அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக பதவி வகிக்கும் எஸ். சிறீதரன் கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதியினால் பெயரிடப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தால்

அப்போ, சரத் பொன்சேகாவுக்கு வாக்கு போடும்படி மக்களை கேட்டுக்கொண்டது எப்படி நிஞாயமாகும்? தமிழரசுக்கட்சியையே மக்கள் மத்தியிலிருந்து அகற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அப்போ, சரத் பொன்சேகாவுக்கு வாக்கு போடும்படி மக்களை கேட்டுக்கொண்டது எப்படி நிஞாயமாகும்? தமிழரசுக்கட்சியையே மக்கள் மத்தியிலிருந்து அகற்ற வேண்டும்

சரத் பொன் சேகாவுக்கு வாக்கு போடுமாறு கேட்ட போது சுமந்திரன் அரசியலுக்கு வரவில்லை. கஜேந்திரகுமார் , கஜேந்திரன் ஆகியோரும் இணைந்தே அந்த முடிவை எடுத்தனர். இருவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தனர். பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே எம்பி சீட் பிரச்சனையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறினர்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

அப்போ, சரத் பொன்சேகாவுக்கு வாக்கு போடும்படி மக்களை கேட்டுக்கொண்டது எப்படி நிஞாயமாகும்? தமிழரசுக்கட்சியையே மக்கள் மத்தியிலிருந்து அகற்ற வேண்டும்.

2005 இல் "சிங்களத் தேர்தல் எமக்கு வேண்டாம்" என்று புறக்கணித்து, மறைமுகமாக மகிந்தவை வெல்ல வைத்தவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்! வென்ற பிறகு "கொள்கையில் நாம் வேறு, ஆனால் யதார்த்த வாதியாகத் தெரிகிறார்" என்று மாவீரர் தின உரையில் குறிப்பிட்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்😂!

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு தமிழரசுக்கட்சியே மக்களிடம் இருந்து அகற்றப்படவேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். யாரையும் பெயர் சொல்லி குறிப்பிடவில்லை. தமிழரசுக்கட்சி என்றால் சுமந்திரன் மட்டுந்தான் என நினைக்கும் சுமந்திரனின் அபிமானிகள், அனுதாபிகள் அதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

2005ல் தேர்தல் புறக்கணிப்பே நடந்தது. எந்த சிங்கள கட்சிக்கும் வாக்களிக்கவில்லை. யாருக்கும் வாக்களிக்கச்சொல்லி மக்களுக்கு வேண்டுகோள் வைக்கப்படவுமில்லை, பிரச்சாரம் செய்யவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை தமிழரல்லாதோர் ஆழுவது போல

தமிழரசுக் கட்சியையும் இடையில் வந்தோர் ஆழப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழ்நாட்டை தமிழரல்லாதோர் ஆழுவது போல

தமிழரசுக் கட்சியையும் இடையில் வந்தோர் ஆழப் போகிறார்கள்.

தமிழ் நாட்டை தமிழரல்லாதவர்கள் ஆழவில்லை . என்றுமே தமிழர்கள் தான் என்றுமே ஆழுகின்றனர். உங்கள் தியறிப்படி பிரபாகரனும் மலையாள பூர்வீகம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

2005ல் தேர்தல் புறக்கணிப்பே நடந்தது. எந்த சிங்கள கட்சிக்கும் வாக்களிக்கவில்லை. யாருக்கும் வாக்களிக்கச்சொல்லி மக்களுக்கு வேண்டுகோள் வைக்கப்படவுமில்லை, பிரச்சாரம் செய்யவுமில்லை

அந்த தேர்தலில் கடும் போட்டி இருந்தது. தமிழர்கள் தன்னிசையாவே மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பர்கள் என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்த விடயம். அந்நிலையில் தேர்தல் தமிழர்களை வாக்களிக்க விடாது தடுக்கும் போது இயல்பாகவே மகிந்த வெல்வார் என்ற மிக சாதாரணமான விடயத்தைக் கூட தெரியத மடையர்களா அந்த தேர்தலை புறக்கணிக்க கூறியவர்கள். அல்லது ஊடகங்களில் கசிந்த தகவல்படி மகிந்தவுடன் உள்ளக டீலா?

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன சுமந்திரனை பற்றி கதைச்சால் மட்டும் நானாவுக்கும் அவரின் அனுதாபிக்கும் பின்பக்கம் வேர்க்குது? உடனேயே புலிவாந்தியோட வருகினம்!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் மக்கள் மத்தியில் உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரணில் என்கிற நரி புலிகளோடு ஓரளவு நட்பு பாராட்டிக்கொண்டு புலிகளுக்கெதிராக ஒரு சர்வதேச வலைப்பின்னலையே ஏற்படுத்தியிருந்தார். தேர்தல் பிரச்சார மேடையில் மிலிந்த மொரகொடவும், நவீன் திஸாநாயக்காவும் தங்கள்கட்சி தேர்தலில் வெல்லும் அதன்பின் இலங்கை இராணுவம் புலிகளுடன் போரிடாது, அமெரிக்க இந்திய இராணுவமே நேரடியாக போரிடும் என்கிற ரகசியத்தை போட்டுடைத்தனர். அதனாலேயே மக்கள் ரணிலுக்கு வாக்குபோடுவதில் இருந்து பின்வாங்க வைக்கப்பட்டனர். அது மஹிந்தவுக்கு சாதகமானது. ரணில், புலிகள் மீது வன்மம் கொண்டார். அந்த தேர்தலில் ரணில் வென்றிருந்தாலும் தமிழ் மக்கள் அழிவு என்பது தடுக்க முடியாது. மஹிந்தரும் அதையே செய்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு அவர்மேல் உள்ளது. ரணில் வந்திருந்தால் அந்த குற்றச்சாட்டு இலங்கை அரசு மீது வந்திருக்காது தந்திரமாக தவிர்க்கப்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

தமிழ் நாட்டை தமிழரல்லாதவர்கள் ஆழவில்லை .

எப்படிவது தமிழ்நாட்டில் பாஜாகவை ஆட்சிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக மலையாள செபஸ்டியான் கொண்டுவந்த தந்திரம் அது தோல்வி அடைந்த மும்பை சிவசேனாவின் கொப்பி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

தமிழ் நாட்டை தமிழரல்லாதவர்கள் ஆழவில்லை . என்றுமே தமிழர்கள் தான் என்றுமே ஆழுகின்றனர்.

உண்மையாவா? உங்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை ஏன் உலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

2005ல் தேர்தல் புறக்கணிப்பே நடந்தது. எந்த சிங்கள கட்சிக்கும் வாக்களிக்கவில்லை. யாருக்கும் வாக்களிக்கச்சொல்லி மக்களுக்கு வேண்டுகோள் வைக்கப்படவுமில்லை, பிரச்சாரம் செய்யவுமில்லை.

"தேர்தலைப் பெருமளவு தமிழ் மக்கள் புறக்கணித்தால், யாருக்கு வாக்கு ரீதியில் அனுகூலம்?" என்று உய்த்துணர இயலாத, சாதாரண எண் கணிதக் கணக்குப் பார்க்க இயலாத தலைமை தான் அந்த நேரம் தேர்தல் புறக்கணிப்பை ஊக்குவித்தது என்கிறீர்கள்? "சரி தான்" என நானும் ஏற்றுக் கொள்கிறேன்.😇

4 hours ago, satan said:

அந்த தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் மக்கள் மத்தியில் உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரணில் என்கிற நரி புலிகளோடு ஓரளவு நட்பு பாராட்டிக்கொண்டு புலிகளுக்கெதிராக ஒரு சர்வதேச வலைப்பின்னலையே ஏற்படுத்தியிருந்தார். தேர்தல் பிரச்சார மேடையில் மிலிந்த மொரகொடவும், நவீன் திஸாநாயக்காவும் தங்கள்கட்சி தேர்தலில் வெல்லும் அதன்பின் இலங்கை இராணுவம் புலிகளுடன் போரிடாது, அமெரிக்க இந்திய இராணுவமே நேரடியாக போரிடும் என்கிற ரகசியத்தை போட்டுடைத்தனர். அதனாலேயே மக்கள் ரணிலுக்கு வாக்குபோடுவதில் இருந்து பின்வாங்க வைக்கப்பட்டனர். அது மஹிந்தவுக்கு சாதகமானது. ரணில், புலிகள் மீது வன்மம் கொண்டார். அந்த தேர்தலில் ரணில் வென்றிருந்தாலும் தமிழ் மக்கள் அழிவு என்பது தடுக்க முடியாது. மஹிந்தரும் அதையே செய்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு அவர்மேல் உள்ளது. ரணில் வந்திருந்தால் அந்த குற்றச்சாட்டு இலங்கை அரசு மீது வந்திருக்காது தந்திரமாக தவிர்க்கப்பட்டிருக்கும்.

ரணிலும் புலிகளை அழித்திருப்பார், ஆனால் கருணா பிரிப்புப் போல மேலும் செய்து அழித்திருப்பார். ஆனால், மகிந்தவைத் தேர்வு செய்து புலிகள் எதிர்பார்த்தது, பெரும் போர் நிகழ்ந்து "உலக நாடுகள் தட்டிக் கேட்டு, ஈழம் பெற்றுத் தரும்" என்ற எதிர்பார்ப்பில். இந்த எதிர்ப் பார்ப்பிற்கு எதிராகத் தான் மேற்கு நாடுகளின் எச்சரிக்கை இருந்திருக்கிறது. பாலசிங்கத்தாரை ஓரங்கட்டாமல் இருந்திருந்தால் இது விளங்கியிருக்கும்.

எப்படியானாலும், கர்மா போல வந்து புலிகளின் வினோதமான "மகிந்த ஆதரவு" நிலையே அவர்களை அழித்து விட்டது. அநியாயமாக புலிகள் தங்களுடன் தடுத்து வைத்திருந்த வன்னி மக்களும் அழிந்தார்கள். உங்களைப் போன்ற புலத் தமிழர்களோ "மோட்டுச் சிங்களவனுக்கு புலிகள் டிமிக்கி கொடுத்தார்கள்" என்ற கஞ்சா மயக்கத்தில் இருந்து இன்னும் எழவில்லை😂.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று எந்த சிங்கள கட்சி ஆட்சிக்கு வந்திருந்தாலும் தமிழ் மக்களை அழித்தே தான் முடித்திருப்பார்கள், அதுதான் நிர்சனம். சர்வதேசமும் நம்மை கைவிட்டிருந்தது. அதிகாரம் படைத்தோருக்கு எதிராக யாரும் எழுந்துவிடக்கூடாது என்பது எழுதாத விதி. ஏன், மஹிந்தா அப்போது பதவிக்கு வருவதற்கு முன், நான் காட்டுக்குச்சென்று பிரபாகரனுடன் பேச்சு நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்றார். ஆட்சியேறிய பின் ஊடகவியலாளர் ஒருவர் அதை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டபோது, காட்டுக்குப்போய் என்னை புலிகள் கொல்லவேண்டுமென எதிர்பார்கிறீர்களா என்று அவர்களையே திருப்பி கேட்டார் மஹிந்த. உண்மைக்கும் சிங்களத்திற்கும் வெகு தூரம், அதனாலேயே புலிகள் ஆயுதம் ஏந்தினர். எவரையும் ஆதரித்து அவர்கையால் அழிவதை விட, நாம் யாரையும் ஆதரித்து பதவியில் வைத்து அழியவில்லை. எம்மை அழிக்காமல் சிங்களம் உறங்காது. புலிகள் உருவாக முதலும் அதுதான் நடந்தது, புலிகளை அழித்த பின்னும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. புலிகளின் காலத்திலேயே அது தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. பெட்டிக்கடை அத்தியாயம் முடிந்து இப்போ கஞ்சாக்கடை. இப்படி ஒவ்வொன்றாக தங்கள் இஷ்டத்திற்கு உருவாக்கவேண்டியது. உள்ளத்தில் இருப்பது எதுவோ அதுவே வார்த்தையாக வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

"தேர்தலைப் பெருமளவு தமிழ் மக்கள் புறக்கணித்தால், யாருக்கு வாக்கு ரீதியில் அனுகூலம்?" என்று உய்த்துணர இயலாத, சாதாரண எண் கணிதக் கணக்குப் பார்க்க இயலாத தலைமை தான் அந்த நேரம் தேர்தல் புறக்கணிப்பை ஊக்குவித்தது என்கிறீர்கள்? "சரி தான்" என நானும் ஏற்றுக் கொள்கிறேன்.😇

ரணிலும் புலிகளை அழித்திருப்பார், ஆனால் கருணா பிரிப்புப் போல மேலும் செய்து அழித்திருப்பார். ஆனால், மகிந்தவைத் தேர்வு செய்து புலிகள் எதிர்பார்த்தது, பெரும் போர் நிகழ்ந்து "உலக நாடுகள் தட்டிக் கேட்டு, ஈழம் பெற்றுத் தரும்" என்ற எதிர்பார்ப்பில். இந்த எதிர்ப் பார்ப்பிற்கு எதிராகத் தான் மேற்கு நாடுகளின் எச்சரிக்கை இருந்திருக்கிறது. பாலசிங்கத்தாரை ஓரங்கட்டாமல் இருந்திருந்தால் இது விளங்கியிருக்கும்.

எப்படியானாலும், கர்மா போல வந்து புலிகளின் வினோதமான "மகிந்த ஆதரவு" நிலையே அவர்களை அழித்து விட்டது. அநியாயமாக புலிகள் தங்களுடன் தடுத்து வைத்திருந்த வன்னி மக்களும் அழிந்தார்கள். உங்களைப் போன்ற புலத் தமிழர்களோ "மோட்டுச் சிங்களவனுக்கு புலிகள் டிமிக்கி கொடுத்தார்கள்" என்ற கஞ்சா மயக்கத்தில் இருந்து இன்னும் எழவில்லை😂.

கப்புக்குள்ளால ஒரு டெலிவரி ..

கணக்குத் தெரியாத முட்டாப் புளிப்பு பயலுவ நரிக்கு வாலாட்டியிருக்க வேணும் என்கிற உங்கட பி எச் டி தீசிஸிற்கு சாமானியப்பயல் அடியேனும் எண்டோர்சு பண்ணிக்கிறேனுங்க ..

நமக்கும் ஆனா ஆவண்ண்ணா வருமுங்க :) 🫠

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சாமானியன் said:

நமக்கும் ஆனா ஆவண்ண்ணா வருமுங்க :) 🫠

கெட்டிக் காரன்! அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சியுங்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

அன்று எந்த சிங்கள கட்சி ஆட்சிக்கு வந்திருந்தாலும் தமிழ் மக்களை அழித்தே தான் முடித்திருப்பார்கள், அதுதான் நிர்சனம்.

இதனை நிராகரிக்கிறேன்.

"நரி" ரணிலால் தங்கள் இருப்பிற்கே ஆபத்து என்று கண்டு கொண்ட பின்னர் புலிகள் எடுத்த முடிவு மகிந்தவைக் கொண்டு வருவது என்பது. அப்படிக் கொண்டு வந்த பின்னர் 2005 இல் "அவர் யதார்த்தமாக நடப்பவர் என்கிறார்கள்" என்று அது வரை எந்த சிங்களத் தலைவர் பற்றியும் சொல்லாத கருத்தை மாவீரர் தின உரையிலேயே பிரபாகரன் சொன்னார்.

இந்தப் பின்னணியில், "எவர் வந்தால் அதிக தீமை மக்களுக்கு?" என்று புலிகள் சீர்தூக்கிப் பார்த்ததாக எங்கேயும் பதிவுகள் இல்லை. அப்படி ஏதும் இருந்தால் இங்கே பகிருங்கள், பேசலாம்.

புலிகளின் இலக்கு, 2004/05 இல் தங்கள் அமைப்பிற்கு இருந்த existential threat இனை நீக்குவது மட்டும் தான். யுத்தம் ஆரம்பித்த பின்னர், வன்னியில் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்த போது, மக்கள் இழப்பைப் பற்றி புலிகள் பெரிதாகக் கரிசனை கொள்ளவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தனர்.

இதையெல்லாம் நான் உங்களுக்குப் பதிலாக எழுதுவது நீங்கள் வாசித்து, யோசிப்பீர்கள் என்பதால் அல்ல! உங்கள் போன்றவர்களுடைய பக்தியும், மயக்கங்களும் எதிர்கால சந்ததிக்கு வரலாறாக காவப் படும் ஆபத்து இருக்கிறது

(ஏற்கனவே AI நாங்கள் செவி மடுக்க விரும்பும் வரலாற்றை எழுதும் படி கேள்வி கேட்கும் பணியை ரஞ்சித் ஆரம்பித்து விட்டார்!). இதைத் தடுப்பது மட்டுமே என் நோக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ..... புலிகள் தடுத்து வைத்திருந்தபடியினாற்தான் சிங்கள இராணுவம் மக்களை அழித்தது. அதுவரை இராணுவம் சிங்கள அரசு தமிழ் மக்களை பாதுகாத்தே வைத்திருந்தனர். அவர்கள் அதிகாரத்தில் கட்டுபாட்டிலிருந்த சிறைச்சாலையில் தமிழ்க்கைதிகளுக்கு என்ன நடந்தது? புலிகளை வெற்றி கொண்ட பின் இராணுவத்தையும் அரசையும் நம்பி கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்கு என்ன நடந்தது? இனக்கலவரங்கள் யாரால் அவ்வப்போது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது, ஏன் அவ்வாறு நடந்தது? ஆலயங்கள், வைத்தியசாலைகள்மேல் ஏன் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது? யாழ் நூலகம் ஏன் எரிக்கப்பட்டது? கொழும்பு சென்ற தமிழர்கள் இடையில் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள், ரயர் போட்டு எரிக்கப்பட்டனர். அதற்கும் புலிகள்தான் காரணம் என்று சொல்லவேண்டியது. தன் தாய் இனம் செய்த குற்றங்களை மறைக்க புலிகளை இழுத்து மூட வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2026 at 07:09, Eppothum Thamizhan said:

அதென்ன சுமந்திரனை பற்றி கதைச்சால் மட்டும் நானாவுக்கும் அவரின் அனுதாபிக்கும் பின்பக்கம் வேர்க்குது? உடனேயே புலிவாந்தியோட வருகினம்!

ஜாலியன் வாலா பக் படுகொலையில் ஜெனரல் டயர் தான் உத்தரவிட்டவன் மிகுதி எல்லாம் படுகொலையை அரங்கேற்றியவர்கள் இந்திய பிரிட்டிஷ் கை கூலிகளே சொந்த மக்களை கொன்றாலும் அடிமையாக இருப்பதே சுகம் என்று வாழ்பவர்கள் . அதே பிரிட்டிஷ் இராணுவம் கிழக்கு ஆசியா பக்கமும் ஆட்சி பரம்பலை செய்தது அங்கு எல்லாம் இந்தியா போலவோ ஸ்ரீ லங்கா போலவோ அடிமை படைகள் அவர்கள் நாட்டுக்கு எதிராக பெரிதாக சேரவில்லை .இது வரலாறு .

இங்கு என்னவென்றால் எப்போதோ மவுனித்த அமைப்பு மேல் சிங்களவனை விட கேவலமாய் காறி உமிழும் தொடற்சியான வண்மம் என்ன ?

புலிகள் இல்லையென்றால் பாலும் தேனும் ஓட வைப்பம் என்று சொன்னவர்களிடம் கேள்வி கேட்க வக்கற்று குறுகிய மனப்பான்மையில் புலிகளை வசைபாடுவது ஒன்றே முழு நேர தொழில் போல் யாழை உபயோகிப்பது சரியா என்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/2/2026 at 05:04, island said:

தமிழ் நாட்டை தமிழரல்லாதவர்கள் ஆழவில்லை . என்றுமே தமிழர்கள் தான் என்றுமே ஆழுகின்றனர். உங்கள் தியறிப்படி பிரபாகரனும் மலையாள பூர்வீகம் தான்.

இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

கெட்டிக் காரன்! அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சியுங்கள்😎!

ஆவண்ண்ணா உடனும் நாம ஸ்டாப்பு ..

அப்பால அறிஞ்ஞது உங்கலைப் போல மேதாவி தானுங்க ...😆

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

ஆவண்ண்ணா உடனும் நாம ஸ்டாப்பு ..

அப்பால அறிஞ்ஞது உங்கலைப் போல மேதாவி தானுங்க ...😆

இன்றைய உலகில் மக்களை வழிநடத்துவது செய்திகள்தான் அனுபவங்கள் அல்ல! “அ”

பின் “ஆ” அறிஞ்சதுதான் அனுபவம் அல்ல.🤔

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

கெட்டிக் காரன்! அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சியுங்கள்😎!

இல்லை , அடுத்த கட்டத்துக்கு நகரக் கூடாது. அப்படியே அ கூட தெரியாத கட்டதுக்கு பின் நோக்கி நகர்ந்தல் தான் எல்லா தப்புமே சரி போல் தெரியுமாம். பெரியவங்க கூறியிருகிறாங்க. 😂

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Paanch said:

இன்றைய உலகில் மக்களை வழிநடத்துவது செய்திகள்தான் அனுபவங்கள் அல்ல! “அ”

பின் “ஆ” அறிஞ்சதுதான் அனுபவம் அல்ல.🤔

அ என்ற அறிவு, சம்பந்தப்பட்டவர்களை வழி நடத்தி இருந்தால் மக்களை கிளி நொச்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு பலவந்தமாக சாய்த்துக் கொண்டு போய்ப் பலி கொடுத்திருக்க மாட்டார்களே! செய்த தப்புகளை எல்லாம் கேள்வி கேட்காது ஆமாம் சாமி போட தெரிந்தவுடன் நிறுத்திய, அதாவது ஆவன்னாவுடன் நிறுத்திய சாமான்யனும், அதாவது நாங்களும் இதற்கு பொறுப்பு தான்

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

இங்கு என்னவென்றால் எப்போதோ மவுனித்த அமைப்பு மேல் சிங்களவனை விட கேவலமாய் காறி உமிழும் தொடற்சியான வண்மம் என்ன ?

எவரும் இங்கு காறி உமிழவில்லை. வேறு வழியின்றி முட்டுச்சந்தியில் மௌனித்தாக நீங்கள் கூறிய அந்த அரசியலை முன்மாதிரியாக கொள்ள நினைப்பவர்களிடம் கேள்விகள் தான் கேட்கிறோம். உரிய நேரத்தில் மௌனித்து மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை கண்டிருந்தால் யாரும் இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். மக்களை எதிரிக்கு பலி கொடுத்து தமிழர் அரசியலை ஒரு வக்கற்ற நிலைக்கு, முட்டுச்சந்திக்கு கொண்டுவந்த பின்னர் இனி வேறு வழியுன்றி மௌனித்ததாக கூறியதால் தான் இத்தனை கேள்விகள். அத்தோது அந்த தவறான அரசியலை நியாயப்படுத்தி அதே பாதையில் தானே தொடர்ந்து அடுத்த தலைமுறையையும் பயணிக்க வைக்க முயன்று அவர்களையும் நாசமாக்க ஆசைப்படுபவர்களிடம் மட்டும் தான் இந்த கேள்விகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.