Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தர்மஅடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தர்மஅடி

இந்த வார ஒரு பேப்பரிற்காக

தர்மஅடி என்பது அனேகமாக ஊர்விட்டு வேறை ஊருக்குபோய் ஏதாவது பிரச்னை வந்தால் தான் அனேகமாக இந்த தர்மஅடி கிடைக்கசந்தர்ப்பம் உண்டு. உங்களிலும் சிலபேர் இந்த தர்ம அடி எங்கையாவது வாங்கியிருக்கலாம் அல்லது தர்ம அடிகிடைக்க இருந்த நேரத்தில் தப்பியிருக்கலாம்.அதையெல்லாம

  • கருத்துக்கள உறவுகள்

எனவே அதற்குள் அவனது ஆளை தேடிப் பிடிப்பதென்பது சிரமமாய் இருந்தது .உடனே போனடிச்சு " கலோ நீ எந்த வீதியிலை நிக்கிறாய்" எண்டு கேப்பதற்கு அந்தக்காலத்தில் என்ன கைதொலைபேசியா இருந்தது. இப்ப நானும் மனிசியும் இஞ்சை சுப்பர்மாக்கற்றுக்கை போனாலே மனிசியை காணாமல் நான் சில நேரம் போனடிச்சு எங்கையப்பா நிக்கிறாய் எண்ட மனிசி பின்னாலை நிண்டு நுள்ளிப்போட்டு ஏனப்பா கத்துறாய் பின்னாலைதான் நிக்கிறன் எண்டும்.சரி திரும்ப அளவெட்டிக்கே போவம்.சன நெருக்கம் கூட இருந்ததாலை நாங்கள் இரண்டு பிரிவா பிரிஞ்சு அந்த பெண்ணை தேடுறதெண்டு முடிவெடுத்தம். எனக்கு அந்த பெண்ணை தெரியும் எண்டதாலை என்னோடை ஒரு குறூபும் நண்பனோடை மற்ற ஒரு குறூப் எண்டு தேடுறது கடைசியாய் தேரடியிலை சந்திக்கிறது எண்டு முடிவெடுத்து தேடதொடங்கினம். எனது நண்பனும் ஒரு பக்கற் சோழப்பொரியை வாங்கிக்கொண்டு தனது காதலியை தேடபோய் விட்டான்.உள்வீதி வெளிவீதி எண்டு மாறி மாறி சுத்தியும் அவளை கண்டு பிடிக்கமுடியவில்லை. :lol::D:(:wub:

இப்படி நகைசுவைகளை சாத்திரி ஒருவரால் தான் தரமுடியும் என மீண்டும் நிருபித்துள்ளீர்கள்.பந்தி பந்தியாக சிரித்தேன் கடைசி பந்தியை தவிர.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நுணாவிலான் இந்தவாரம் ஒரு பேப்பரிற்கு என்ன எழுதலாம் என்று யோசித்த பொழுது இந்தக்கதைதான் ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பேப்பர் காரர்களும் வழைமைபோல நகைச்சுவையான கதையையே எதிர்பாத்தனர்.ஆனாலும் நண்பனின் கதையை எழுதிவிட்டு அவனின் மரணத்தை பற்றி எழுதலாமா விடலாமா என்று யோசித்தேன்.ஆனாலும் சேரனின் ஓட்டோகிராப் படத்தில் வரும் ஞாபகம் வருதே பாடலில் முதல் முதல் அழுத சினேகிதன் மரணம் என்றொரு வரி வருமே அது போலத்தான் எனக்கும் முதல் அழுத சினேகிதன் மரணம் அது எனவே அதையும் எழுதிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க நண்பனின் சோக முடிவு கவலைப்படவைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நுணாவிலான் இந்தவாரம் ஒரு பேப்பரிற்கு என்ன எழுதலாம் என்று யோசித்த பொழுது இந்தக்கதைதான் ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பேப்பர் காரர்களும் வழைமைபோல நகைச்சுவையான கதையையே எதிர்பாத்தனர்.ஆனாலும் நண்பனின் கதையை எழுதிவிட்டு அவனின் மரணத்தை பற்றி எழுதலாமா விடலாமா என்று யோசித்தேன்.ஆனாலும் சேரனின் ஓட்டோகிராப் படத்தில் வரும் ஞாபகம் வருதே பாடலில் முதல் முதல் அழுத சினேகிதன் மரணம் என்றொரு வரி வருமே அது போலத்தான் எனக்கும் முதல் அழுத சினேகிதன் மரணம் அது எனவே அதையும் எழுதிவிட்டேன்.

நிச்சயாமாக ஒரு பேப்பரில் பிரசுரியுங்கள்.மனித வாழ்வில் ஒவ்வொருவரின் வாழ்வை நிர்ணயிப்பது அவனே ஒழிய மற்றவர்கள் அல்ல.

மீண்டும் உங்கள் கதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையும் அங்கதத்தமும் கலந்த எழுத்து தமிழில் அதிகம் இல்லை. சாஸ்திரியின் எழுத்தாற்றலின் தனித்தன்மையே அதுதான். மேலுள்ள பதிவுக்கு என்னுடைய நன்றிகள். இளமையை மீண்டும் வாழ உதவுகிற எழுத்துக்கள் புலப் பெயற்ச்சியால் கிழிந்துபோயிருக்கிற தமிழருக்கு நிறைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல வாய்விட்டு சிரிக்கக்கூடியமாதிரி எழுதிவிட்டு இப்படி சோகமாக முடித்துவிட்டீர்கள்.சரி கதை நியமானது என்றால் என்ன செய்யலாம்.அடுத்தமுறையாவது மங்களகரமான முடிவைத்தரப்பாருங்கோ.

சாத்திரி அங்கிள் "தர்ம அடி" கதை அந்த மாதிரி இருக்கு ஆனாலும் சாத்திரி அங்கிளிற்கு நிசமா ஒரு அடி தான் விழுந்ததோ அது தான் நேக்கு சரியான கவலை :( ஆனாலும் அன்னதானத்தில சாப்பிட்டுவிட்டு கையை கூட கழுவாம வந்து அடித்திருகிறான் என்றா ஒரு அடியும் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையே பண்ணி பார்க்கமுடியவில்லை :unsure: ......ம்ம்ம் கதை நகைசுவையா போய் இறுதியில சோகமான முடிவு அதுவும் காதலிற்காக என்றவுடன் என்னால் தாங்கவே ஏலாம போயிட்டு!!

அக்சுவலா நேக்கு கூட அடி விழுந்திருக்கு பேபி என்று கூடபார்க்காம அந்த பிளாஸ்பக்கை சொல்லுறேன் கேளுங்கோ :D .........அப்ப பேபி வந்து கொழும்பில இருந்தது எங்களோட ஒருவா டீயூசன் கிளாசிற்கு வாறவா சாத்திரி அங்கிள் அவாவை என்ட பிரண்ட் டாவடித்து போட்டான்.....அவாவும் ஒகே சொல்லி கொஞ்ச நாள் இரண்டு பேரும் நல்லா இருந்து போட்டு கொஞ்ச நாள் செல்ல அவா வந்து வேற ஒருத்தனை பிடித்துவிட்டா இவன் வந்து அவாவை நினைத்து புலம்பி கொண்டு ஒழுங்கா படிக்காம இருந்து கொண்டிருந்தான் நேக்கு அவனை பார்க்க சரியான கவலை அப்ப கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடபிறப்பு வாற நேரம் பட்டாசு எல்லாம் கொழுத்துறது அல்லோ அவா வந்து எங்களின்ட ஒழுங்கையில இருந்து 2 ஒழுங்கை தள்ளி தான் இருக்கா :D ........அப்ப பேபி ஒரு பிளான் போட்டது சாத்திரி அங்கிள் அவாவின்ட வீட்டிற்கு ஈர்கில்வானம் விட வேண்டும் என்று....சோ அந்த நன் நாளும் வந்தது நாங்க ஒரு 8 பேர் போனனாங்க அந்த வீடு இரண்டு மாடி வீடு மதிலில ஏறு ஜன்னல் திறந்து இருக்குது அதால போட்டுவிட்டு வாறது தான் நம்ம சீக்கிரட் பிளான் (என்ன ஒவரா இருக்கோ)........அப்ப இப்படியான மதில் ஏறுற வேலை எல்லாம் பேபி தான் செய்யும் சோ மதிலும் ஏறிட்டேன் பிரண்ட் ஈர்கில் வானத்தை தர நான் அதை கொழுத்தி விட்டனான் அது ஜன்னலிற்குள்ள போகாம கொஞ்சம் அங்கால போயிட்டு நம்மன்ட முதலாவது ஒப்ரேசன் சரியான வெயில் ஆகிட்டு :D ஆனாலும் நான் சற்றும் கலங்காம இன்னொரு ஈர்கில் வானத்தை எடுத்து விட்டனான் அதுவும் வீணாபோயிட்டு வீட்டிற்குள்ள வெடிக்குது ஆனா ஜன்னலிற்குள்ள போகவில்லை........அந்த நேரம் பார்த்து அந்த கேளின்ட அண்ணா போல வந்திருகிறார் வெளியால போயிட்டு ஆனா நான் கவனிக்கவில்லை :D நான் ஜன்னலிற்குள்ளாலா ஈர்கில் வானம் விடுறதிலயே குறியா இருந்திட்டேன் ஒரு மாதிரி நான் விட்ட ஈர்கில் வானம் ஜன்னலிற்குள்ள போய் வெடிக்க நேக்கு சரியான சந்தோசம் அட சக்சஸ் என்று சொல்லி கொண்டு பாய்ந்து போவோம் என்று மதிலால ஓடி வந்து முன்னுக்கு பாய்வோம் என்று பார்த்தா வந்த பெடியளை ஒன்றையும் காணவில்லை 4 பேர் எல்லாடு நல்ல சைஸ்.........இப்ப என்ன செய்றது என்றே தெரியவில்லை எங்களோட வந்த பாவிகள் எங்களுக்கே சொல்லாம ஓடி போயிட்டாங்க அவங்களை நினைக்க கோபம் தான் வந்தது ஆனா என்ன செய்ய......

கீழே இருந்தவையில ஒருத்தர் உரத்த குரலில கிழே இறங்குங்கடா என்று சொல்ல என்ன செய்யிறது (அப்ப என் கண்ணிற்கு முன்னால இருகிற எல்லா கடவுளும் வந்து வந்து போச்சீனம் கந்தசஷ்டி கவசம் கூடம் வாயிற்குள்ளாள வரதொடங்கிட்டு என்றா பாருங்கோ)....அப்படியே கீழே இறங்க வீட்டிற்குள்ள இருந்த ஆட்களும் வந்துவிட்டார்கள் நான் சொன்ன அந்த பெட்டை அவாவும் வந்து வேடிக்கை பார்த்தா நேக்கு அடி வாங்கிறது கூட பிரச்சினை இல்லை ஆனா அந்த பெட்டைக்கு முன்னால அடி வாங்கிறது தான் நேக்கு சரியான கவலையா இருந்தது சாத்திரி அங்கிள் :( ...... இறங்க சொன்னவங்க பாவம் பேபி என்று விட்டிடுவாங்க என்று நினைத்தா ஒருத்தன் அடித்தாலும் பரவாயில்லை நாலும்பேரும் சேர்ந்து அடித்தாங்க நானும் எவ்வளவு நேரம் தான் நோகாத மாதிரி அந்த பெட்டைக்கு பிலிம் காட்டுறது அப்படி ஒரு அடி வீட்டை இருக்கிற ஒரு பெரிசு தான் வந்து விடுங்கடா அவங்களை என்று சொல்லி எங்களை காப்பாற்றினது அப்ப கூட சாத்திரி அங்கிள் என்ட கண்கள் வந்து அந்த பெட்டை இருக்காவோ இல்லை போயிட்டாளோ முழு அடியை பார்த்து இருப்பாவோ என்று தான் அவாவை பார்த்தா அந்த பெட்டை அப்படியே சிரித்து கொண்டு நிற்குது நேக்கு எப்படி இருந்திருக்கு ஒரு பக்கம் அடிவாங்கின நோ.......பிறகு நம்மளை காப்பாற்றின பெர்சி இருக்குது அல்லோ எனி உங்களை இந்த பக்கம் காண கூடாது என்று சொல்லி போக சொல்ல அந்த இடத்தை விட்டு காற்றா மறைந்தோம்........பார்த்தா வீதி முடக்கில மிச்ச பிரண்ட்ஸ் நிற்கீனம் என்னடா நடந்து என்று கேட்க நேக்கு இருந்த கோபத்தில ரொம்ப முக்கியம் என்று நானும் அடிவாங்கின மற்ற பிரண்டும் கல்லை எடுத்து எரிய ஓடிட்டாங்க........ஆனாலும் இந்த அடியை வாழ்கையில மறக்கமுடியாது யாரோ காதலித்து சக்சஸ் இல்லாம போக நாம் போய் கடைசியா அடி வாங்கினது நாம இதை எப்படி வாழ்கையில மறக்கமுடியும்.......அப்படியே வீட்டை போய் நல்ல பிள்ளையா கட்டிலில ஏறி படுதிட்டேன் ஏனெற்றா அவ்வளவு "நோ".......... :(

பிறகு என்ன சாத்திரி அங்கிள் அந்த பெட்டை வாற டீயுசன் பக்கம் கூட கொஞ்ச நாள் போகவில்லை எப்படி போறது அந்த பக்கம்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

மறுநாள் எனக்கு காதில் இரைச்சல் குறைந்திருந்தாலும் ஒரு பக்கத்துகாது சரியாய் கேட்காத மாதிரி ஒரு உணர்வு தலையை சரித்து காதுக்குள் விரலை விட்டு குடைந்தபொழுது காய்ந்துபேன இரண்டு சோத்து பருக்கை வெளியில் வந்தது.அப்பதான் விழங்கியது பாவிப்பயல் யாரோ அன்னதானத்திலை சாப்பிட்டிட்டு கையை கழுவாமலேயே சோத்துக்கையாலை அடிச்சிருக்கிறான்.

:unsure::unsure::(:D:D

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் அனுபவமும் ஜம்முவின் அனுபவமும் எழுதிய விதம் நல்ல சவாரசியமாக இருக்கிறது (மற்றவன் அடி வாங்கினால் சுவாரசியம் தானே). சாத்திரியின் நண்பன்தான் பாவம் ஆனாலும் தற்கொலை செய்பவர்களை ஏனோ எனக்கு பிடிப்பதில்லை. செத்தவீட்டுக்கு கூட போக மனம் வராது.

ஜம்மு பேபி இப்படி அடிவாங்கியும் திருந்தவிலிலை போல. லக்சிகாக்கு எத்தனை அண்ணனோ... :unsure::unsure:

எனக்கு இந்த மாதிரியான அனுபவம் எதுவும் இல்லை. இப்படியான அனுபவங்களை உருவாக்கிற வயதுக்கு முன்னரே நாட்டை விட்டு வெளிக்கிட்டது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் "நாமள் ஒண்டும் அறியாத அப்பாவி, நல்ல பிள்ளையா இருந்தோம்" எண்டு சொல்லதான் விருப்பம்.

ஜம்மு பேபி இப்படி அடிவாங்கியும் திருந்தவிலிலை போல. லக்சிகாக்கு எத்தனை அண்ணனோ... :lol::lol:

எனக்கு இந்த மாதிரியான அனுபவம் எதுவும் இல்லை. இப்படியான அனுபவங்களை உருவாக்கிற வயதுக்கு முன்னரே நாட்டை விட்டு வெளிக்கிட்டது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் "நாமள் ஒண்டும் அறியாத அப்பாவி, நல்ல பிள்ளையா இருந்தோம்" எண்டு சொல்லதான் விருப்பம்.

ஜம்மு பேபி எந்த காலத்தில திருந்தி இருக்கு :D ..........மாமாவிற்கும் லக்சிகா மாட்டார் தெரிந்து போயிட்டோ அது கதையாக்கும் சீரியசா எடுத்துபோடாதையுங்கோ :lol: ...யாரோக்கா அடிவாங்கி இருகிறேன் எனக்காக அடி வாங்க மாட்டேனா சபேஷ் மாமா :D !!ஓ மாமா நாட்டை விட்டு வெளிகிட்டுவிட்டீங்களோ வந்த நாட்டிலையும் நல்ல பிள்ளையா மாமா சுத்த வேஸ்ட் வாழ்கையில அரைவாசியை இழந்துவிட்டீங்க இப்ப கூட ஒன்றும் கெட்டுபோகவில்லை பேசாம சிட்னிக்கு வாங்கோ ஜம்முபேபி கூட சேருங்கோ எல்லாத்தையும் டீச் பண்ணிவிடுறேன் :lol: !!மாமா வந்து நல்ல பிள்ளையோ இந்த நல்லபிள்ளைகளை தான் நம்மகூடாது என்று மம்மி அடிகடி சொல்லுறவா நான் உங்களை சொல்லவில்லை மாமோய்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்பரே! தங்களின் கதையில் இல்லை சம்பவத்தில் கடைசியில் இழையோடும் சோகம்தான் அதைக் கனதியாக்குகிறது. மிகவும் யதார்த்தமான நடையழகு. தொடருங்கள். வாழ்த்துக்கள். :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்பரே! தங்களின் கதையில் இல்லை சம்பவத்தில் கடைசியில் இழையோடும் சோகம்தான் அதைக் கனதியாக்குகிறது. மிகவும் யதார்த்தமான நடையழகு. தொடருங்கள். வாழ்த்துக்கள். :lol::lol:

சுவியண்ணா நன்றிகள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்தாலே இனிக்கும் நினைவுகளை எழுத்திலே வடித்த சாத்திரி இறுதியில் நண்பனின் சோக முடிவைச் சொல்லி எம் அனைவரது நெஞ்சையும் நெகிழ்த்தி விட்டீர்கள் உங்கள் நகைச்சுவை கலந்த எழுத்தோட்டம் பாராட்டிற்குரியது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடி என்று கேட்காதீர்கள்... தர்ம அடி என்று கேட்டு வாங்குங்கள் என்று, முந்தி ஊஜாலா விளம்பரத்தை உல்டா பண்ணிச் சொல்லுகின்ற மாதிரி வாங்கியிருக்கின்றீர்கள் போல. ஆனால் எனிமேல் சோகமாக முடிக்கின்ற மாதிரிக் கதை எழுதாதீர்கள் சாத்திரி.

ஏய்யா ..சாத்திரி ..நல்லாயிருக்கு ..கதை

எப்ப பார்த்தாலும் சோகத்தில் முடிக்கிறியள்

என்ன மலையாளியள் மாதிரி கதையை சோகத்தில் முடிக்கோணும் என்று வேண்டுதலோ <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஏய்யா ..சாத்திரி ..நல்லாயிருக்கு ..கதை

எப்ப பார்த்தாலும் சோகத்தில் முடிக்கிறியள்

என்ன மலையாளியள் மாதிரி கதையை சோகத்தில் முடிக்கோணும் என்று வேண்டுதலோ <_<

இந்த மாதம் சாத்திரி க்கு சனி பார்வை அதுதான்.

இந்த மாதம் சாத்திரி க்கு சனி பார்வை அதுதான்.

<_<:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏய்யா ..சாத்திரி ..நல்லாயிருக்கு ..கதை

எப்ப பார்த்தாலும் சோகத்தில் முடிக்கிறியள்

என்ன மலையாளியள் மாதிரி கதையை சோகத்தில் முடிக்கோணும் என்று வேண்டுதலோ :)

நன்றி சி.கு மலையாளப்படங்கள் பாத்திருக்கிறன் <_<:unsure: ஆனால்மலையளகதைகள் படித்ததில்லை :huh::huh:

இந்தக்கதையில வந்த மாதிரிக் காலம்பூராவும் யாருக்காகவாவது அடி வாங்கிறதுக்கு என்றால் அந்தப் பிறவி சாத்துதான். ஆதலால் காதல்செய்யும் கனவான்களே!, கனவாணிகளே! உங்கள் காதல் வெற்றிக்கு இடிதாங்கவும் அடிவாங்கவும் வஞ்சகம் இல்லாமல் ஒருவர் உதவ இருக்கிறார். அவர்தான் சன்சைன் சாத்து. எதற்கும் காதலில் கால் வைக்க எண்ணும் இளைஞ, இளைஞிகளே இப்போதே உங்கள் உதவி கோரலுக்கான விண்ணப்பத்தை சாத்துக்கு அனுப்பிவையுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவான்களிற்கு பெண்பால் எது எண்டு தெரியாமல் கனகாலம் யோசிச்சனான் கனவாணிகள் என்று எடுத்து தந்ததிற்கு நன்றி ஆதி.வாசிக்கிறவை களவாணிகள் எண்டு மாறி வாசிக்காவிட்டால் சரி.காதலுக்கு கால் எல்லாம் வைக்க முடியாது ஆதி .முதல்லை காதலுக்கு அன்புவைக்கவேணும்.பிறகு அவங்கடை அம்மா அப்பா மனசுவைக்கவேணுமகலியாணத்துக்

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் தர்ம அடி அனுபவமும், யம்முவின் அனுபவமும் சிரிப்பை வரவளைக்கின்றன. உப்பிடித்தான் எனக்கு தெரிந்த ஒருவர் தான் மனதார விரும்பிய காதலியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கருகில் இருக்கும் ஒழுங்கையில் காத்திருந்தார். காதலி தனியார் கல்வி நிலையத்தில் பெளதீகவியல் பாடம் படித்து முடிந்ததும் அவ்வொழுங்கையினூடாக அவரது வீட்டுக்கு செல்வார். காதலன் மறைந்திருந்து தூரத்தில் காதலி வருவதைப் பார்த்தபின்பு துவிச்சக்கர வண்டியில் காதலி வரும் திசையினை நோக்கிச் செல்லவே அங்கு மறைவில் காத்திருந்தார். அடிக்கடி மறைவில் இருந்து காதலி வருகிறிராரா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படிப் பார்த்துக் கொண்டிருப்பதினை அவ்வொழுங்கையில் இன்னொரு மறைவில் இருந்த இந்தியா இராணுவத்தினரில் சிலர் அவதானித்தார்கள். பிறகென்ன இந்திய இராணுவத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தர்ம அடி வாங்கி காதலன் அனுபவித்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு இவ்வளவு காலமும் எங்கை கோமாவிலையோ கிடந்தனீர் இப்பதான் வந்து ஓடியோடி கதைகள் படிக்கிற மாதிரி இருக்கு :):):D

  • கருத்துக்கள உறவுகள்

மனிசியிட்ட தர்ம அடி வாங்கிக் கொண்டிருப்பதினால் உங்கட கதையினை வாசிக்க நேரம் கிடைப்பதில்லை. இப்ப அடிவாங்காமல் தப்புவது எப்படி என்பதை அறிந்து வைத்திருப்பதினால் உங்கட கதையினை வாசிக்க நேரம் கிடைக்கிறது.

மனிசியிட்ட தர்ம அடி வாங்கிக் கொண்டிருப்பதினால் உங்கட கதையினை வாசிக்க நேரம் கிடைப்பதில்லை. இப்ப அடிவாங்காமல் தப்புவது எப்படி என்பதை அறிந்து வைத்திருப்பதினால் உங்கட கதையினை வாசிக்க நேரம் கிடைக்கிறது.

கண் கெட்ட பின்னே சூரிய உதயம் எந்த பக்கம் ஆனால் எனக்கு என்ன போடி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.