Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியம் என் தாத்தா வீட்டுச்சொத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியம் என் தாத்தா வீட்டுச்சொத்து

என்னது சாத்திரி புதுசா ஒரு புலுடா விடுகிறார் என்று யோசிக்க வேண்டாம். இது நான் விடுகின்ற புலுடா அல்ல புலம்பெயர் தேசத்தில் தங்களை தமிழ்த்தேசியவாதிகளாக காட்டிக்கொள்கின்ற சிலர் விடுகின்ற புலுடா.அதுமட்டுமல்ல இவர்கள் சில எழுதப்படாத சட்டங்களையும் வைத்திருக்கின்றார்கள் அதாவது தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான எந்தவொரு செயற்பாடுகளோ அல்லது ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான அல்லது ஈழப்போராட்டத்தின் ஆதரவை புலம்பெயர் தேசத்தில் விரிவுபடுத்தும் வேலையை இவர்கள் மட்டும்தான் செய்யவேண்டும் அல்லது இவர்களிடம் விசேட அனுமதிபெற்றுத்தான் செய்ய வேண்டும். தமிழ்த்தேசியத்தின் மீது உள்ள பற்றால் உண்மையான தமிழுணர்வால் யாராவது ஏதாவது செயற்பாட்டை செய்துவிட்டால் உடனேயே இந்த தமிழ்த்தேசியவாதிகளிற்கு இரத்தக்கொதிப்பு வந்துவிடும். முதல்வேலையாக அந்த இதமிழுணர்வாளர்களை ஓரம்கட்டமுயற்சிப்பது முடியபமல் போனால் அவர்களிற்கு தமிழினதுரோகி என்று சுலபமாக ஒரு முத்திரையை குத்திவிடுவது இதுவே இவர்கள் தமிழ்த்தேசியத்திற்கு செய்கின்ற பெரும் பங்களிப்பாகும்.

இது ஒருசில மனிதர்களிற்கு மட்டுமல்ல தமிழ்த்தேசிய ஊடகம் என்று செர்லிக்கொள்கின்ற ஒரு சில ஊடகங்களிற்கும் பொருந்தும்.ஆனால் தமிழ்த்தேசியத்தலைமையின் அதிகாரபூர்வமான ஊடகங்கள் தற்சமயம் தமிழீழத்தில் மட்டுமே இயங்குகின்றது. அவை தவிர்ந்து தமிழீழத்திற்கு வெளியே இயங்குகின்ற பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் இணையத்தள ஊடகங்கள் எல்லாமே (ஒரு பேப்பர் உட்பட)தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களே தவிர தமிழ்த்தேசியஊடகங்கள் அல்ல. ஆனல் தமி்ழ்த்தேசிய ஊடகங்கள் என்றும் தங்களை தமிழ்த்தேசியவாதிகளாகவும் காட்டிக்கொள்பவர்கள் புலத்தில் தமிழ்த்தேசியத்திற்காக பாடுபடுகின்றனரோ இல்லையோ. தமிழ்த்தேசிய தலைமைக்கு பந்தம்பிடிக்கும் வேலையை மட்டும் ஒழுங்காக விழுந்து விழுந்து செய்கின்றர்.

தமிழ்த்தேசியத்லைமை என்பது சூரியன் அதற்கு இவர்கள் பந்தம் பிடித்துதான் வெளிச்சம் காட்டவேண்டும் என்கிற அவசியம் இல்லை இவர்கள் தங்கள் கடைமைகளை ஒழுங்காக செய்தாலே போதும்.அண்மையில் மறைந்த பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஒவ்வொரு தடைவையும் பேச்சுவார்த்தைகளிற்காக வெளிநாடுகளிற்கு வரும் போதும் மற்றும் தமிழீழ தமிழ்த்தேசிய தலைமையும் தொடர்ச்சியாகவே சொல்கின்ற ஒரு விடயம் தமிழ்த்தேசியத்தின் பலம் புலம்பெயர்தேசத்து தமிழர்களிடமே உள்ளது எனவே அவர்களே தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்த பாடுபடவேண்டும் என்பதே. ஆனால் புலம்பெயர் தேசத்தில் சில இடங்களில் வீரமரணம் அடைந்த ஒரு போராளிக்கு ஒரு அஞ்சலிசெலுத்தினாலோ அல்லது ஒரு அஞ்சலி பிரசுரம் வெளியிட்டாலோ தங்களை கேட்காமல் இதையெல்லாம் செய்ய நீயார்?? என்று ஏதோ தமிழ்த்தேசியத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவர்கள் போலவே இந்த தமிழ்தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடமிரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைச் சொல்லுறியள் சாத்திரி. எங்கடையாக்கள் பலர் இங்க நிண்டுகொண்டு, மற்ற ஆட்களைத் துரோகிப் பட்டம் கட்டி தாங்கள் என்னவோ நல்லவர் பெயர் வாங்கிறதற்கு அலைகினம்.

மற்றவனைப் பிடிக்காட்டில் முதலில் ஏதோ ஒண்டைச் சொல்லி துரோகிப் பட்டம் கட்டினால் நீங்கள் தான் அந்த ஏரியாக் கிங் கண்டியளோ!

நான் ஏற்கனவே சொன்னது தான், வெளிநாட்டில் பலருக்கு தேசியமென்பது பலவேளைகளில் தம்மை பாதுகாக்கவும், வளர்த்துக் கொள்ளவும் அணிந்து கொள்ளும் ஒரு முகமூடி தான்.

புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன

ஒன்று ஒட்டுக் குழுக்களும் அதனுடைய ஆதரவாளர்களும்

மற்றது சாத்திரி குறிப்பிட்ட தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள்

இந்த இரண்டு தரப்பும்தான் இங்கே தேசியத்திற்கான செயற்பாடுகளுக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள்.

முதலாவது தரப்பை சமாளித்து விடலாம்.

ஆனால் இந்த தேசியக்காரர்களை சமாளிக்க முடியாது.

அதே வேளை தேசியத்திற்கு ஆதரவான, தெளிவுள்ள பலர் ஒதுங்கியிருப்பதும் இப்படியானவர்கள் உள்நுளைவதற்கு காரணமாகி விடுகிறது.

இதில் யாரைக் குற்றம் சொல்வது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்டகாலமாக என் அடிமனதை வருடிக்கொண்டிருந்ததை சாத்திரி அப்படியே படம்பிடித்துக்காட்டியிருக் கின்றார் ஒரு சிலரின் அகங்காரப்போக்குக்கு அளவேயில்லை இவர்களையெல்லாம் யார் களையெடுப்பார்கள்? :unsure:

Edited by குமாரசாமி

நீண்டகாலமாக என் அடிமனதை வருடிக்கொண்டிருந்ததை சாத்திரி அப்படியே படம்பிடித்துக்காட்டியிருக் கின்றார் ஒரு சிலரின் அகங்காரப்போக்குக்கு அளவேயில்லை இவர்களையெல்லாம் யார் களையெடுப்பார்கள்? :unsure:

இவர்களை களையெடுப்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. ஆனால் வெளிநாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒருமித்து மனம் வைத்தால் களையெடுத்துச் சாதிக்கலாம. இதில் முதலக்கட்டமாக குறிப்பிட்ட பிரைச்சனைக்குரியவர்களை ஒதுக்க முனைய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகாலமாக என் அடிமனதை வருடிக்கொண்டிருந்ததை சாத்திரி அப்படியே படம்பிடித்துக்காட்டியிருக் கின்றார் ஒரு சிலரின் அகங்காரப்போக்குக்கு அளவேயில்லை இவர்களையெல்லாம் யார் களையெடுப்பார்கள்?

குமாரசாமி உங்களிறற்கு மட்டுமல்ல இன்று பலரிற்குஅடிமனதை வருடும் விடயம்இதுதான்.இன்று சர்வதேசநாடுகள் எங்கும் ஈழ விடுதலைபோராட்டத்திற்கு பலஇடைஞ்சலல்களும்.மற்றும் ஈழத்தமிழர் உதவி நிறுவனமான தமிழர்புனர்வாழ்வு கழகத்தின் மீததான நெருக்குதல்கள் கைதுகள் ஏன்பனவற்றிற்கு இலங்கையரசின் பரப்புரை மற்றும் இலங்கையரசின் கூலிகள் மட்டும்காரணமல்ல அவர்களிற்கு உள்ள அதே அளவு சமபங்கு இந்த போலித் தமிழ்த்தேசிய வாாதிகளின் ஏதேச்சாதிகார போக்கும் ஓரு காரணமே.இவர்களால் உண்மையாய்சுயநலமின்றி தமிழ்த்தேசியத்திறற்்கு உழைத்தபலர் ஊமைகளாய் ஒடுக்கப்பட்டுஒதுங்கி வாழ்கிறார்கள் என்பது உண்மை.அல்லதுயாராவது அவர்களது தனிப்பட்டதவறுகளை சுட்டிக்காட்டினால் உடனேயே அவர்கள் தமிழ்தேசியத்தின் துரோகிகள். இந்த நிலைலமைககள் மாறவேண்டும்.ஆரம்்பத்தில்பல குளறுபடிகளுடன் இருந்த சர்வதேச கட்டமைப்பு 90களில் கிட்டுவின் ஜரோப்பியவருகையுடன் ஒரு சீராகி புது வேகம் பெற்றது.ஆனால் இந்த சமாதான ஒப்பந்தம் எப்பொழுதுதொடங்கியயதோ அதிலிருந்து மீண்டும் பழைய குருடியின்வீட்டு கதவுதான்.எனவே தான் புலம்பெயர் தேசத்து கட்டமைப்பிற்கு அனைவரையும் அரவணைத்து செல்லும் பக்குவமும் ஆளுமையும் ஒதங்கிப் போயிருக்கும் உண்மையான உழைப்பாளிகளை இனம்காணக்கூடியய ஒரு நிருவாகம் கட்டாயம்தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் இந்த வருத்தம் புலம் பெயர் நாடுகளிலெல்லாம் இருக்கு போல. எனக்கு தெரிந்தவர் ஒருவரின் நண்பர்கள் வருடா வருடம் கூட்டாக நாடகங்களை மேடையேற்றி அதில் வரும் முழு இலாபத்தையும் நவம் அறிவுக்கூடத்திற்கு வழங்கி வந்தனர். அதையறிந்த நபர் தன்நண்பர்களிடம் கதைக்கும் போது, அவர்கள் ஏற்கனவே பழகி பயிற்சி பெற்ற நாடகங்கள் என்பதால் நான் வசிக்கும் நகரத்திலும் ஒரு மாலை நிகழ்வாக நடாத்தினால் கொஞ்சம் கூடுதலாக பணம் சேர்த்து அனுப்பலாம் என யோசனை கூறினார். அவர்களுக்கும் அந்த யோசனை பிடிக்க அவர்களும் சந்தோசமாக தாங்கள் வாற போற செலவுகளையும் தாங்களே பொறுப்பேற்பதாக கூறி அவரை அந்த நகரில் நிகழ்ச்சியை நடாத்த ஒழுங்குகளை செய்ய சொன்னார்கள். அவரும் தனக்கு தெரிந்தவர்களிடம் கதைத்து மண்டபம் எல்லாம் ஒழுங்கு செய்து விளம்பரபடுத்தினார். இதையறிந்த தேசிய ஆதரவாளர்கள் சிலர் "தங்களினூடாக செய்யாததையிட்டு" குறை கூறினார்கள். இதை அவர் தன்நண்பர்களுக்கு கூறி அவர்களினூடாக செய்ய ஆலோசனை கேட்க , அவர்கள் தங்கள் நகரில் தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை கூறி அதனால் அவர்கள் அப்படி செய்வதை விரும்பவில்லை. முன்னரே ஒழுங்கு செய்ததற்கமைய வேலைகளை முன்னெடுத்தனர். அதை விரும்மாத தேசிய ஆதரவாளர்கள் (?) தங்களிற்கு தெரிந்தவர்களிடம் விசனம் சொல்லி போவதை தடுத்ததுமல்லாமல் அந்த நாளே ஒரு தியேட்டரில் தமிழ் திரைபடம் ஒன்றை காண்பித்தனர். அதனால் அதிக மக்கள் திரைப்டத்திற்கு போக இவ்விழாவிற்கு 25க்கும் குறைவானவர்களே சென்றனர். அதன் பின்னர் அந்த நபர் இவ் ஆதராவாளர்கள் எனக்கூறுவோரினூடு பங்களிப்பு செய்வதையே நிறுத்தி விட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனோடேயே கூடிப்பிறந்த விடயம். தமிழ்த்தேசியம் என்ற ஒன்றினால் தான் சற்று மந்தமாக இருக்கிறது. முற்றாக ஒழிக்கவேண்டும் என்றால் சிறந்த தலமைத்துவம் வேண்டும்.

தமிழ்தேசியத்தை புலம்பெயர் நாடுகளில் நெறிப்படுத்த தாயகத்தலமையினால் தான் முடியும். ஆனால், தாயகத்தலமையினை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்துபவர

சாத்து!, சும்மா சொல்லக் கூடாது.

புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் போக்கை நாடிபிடிச்சு எழுதியிருக்கீங்க. தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்த ஜாம்பவான்களாலேயே பல கோணங்களிலும் தேசியத்திற்குப் பாதகம் ஏற்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இங்கு தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி எழுதா விட்டாலும் தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ளவும்.

தேசியத்தை தத்தம் காலடியில் வைத்திருக்கக் கூடியவர்கள்(யாருப்பா அப்படிக் காலடியில் வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் ஆதியின் பக்கம் நோண்டக் கூடாது. கண்டு பிடியுங்க) கொஞ்சம் (இத்தூண்டுதான்) ஆணவத்தைத் தலையில ஏத்தி இருத்தியிருக்காங்க.( சொன்னா நம்புங்க) அந்த ஆணவம் கிடந்து பாடாப்படுத்துது. பரந்து விரிய வேண்டிய தேசியத்தை குறுகின வட்டத்திற்குள் தங்கவீட்டு கொல்லைக்குள் மட்டுப்படுத்தி, அதை எப்பவும் தங்களுக்குச் சாதகமாகவே பயன்படுத்திறாங்க. எப்பவுமே தாங்க மட்டுமே விலாசம் காட்ட(அதாம்பா பீலாக்காட்டுறது....பிலீம் காட்டுறது) நினைக்கிறதாலா நிரந்தரமாவே சிலபேரைக் கைவசம் வளைச்சு வைச்சிருக்காங்க. இந்த வியூகத்தை யாராலயும் உடைக்க முடியாது. இந்நிலையை பார்த்து யார்தான் குமுறினாலும் அது அம்பலம் ஏறாது. ஏனென்டா குத்தகைக்கு எடுத்தவை குமுறுகிறவனைக் கோமாளிப்பட்டம் கட்டிவிடுவினம் கண்டியளோ.

தமிழ்த் தேசியம் எண்டா என்ன விலை என்று கேட்கக் கூடியவர்கள் எல்லாம் தேசியவாதி என்று பெரிய முத்திரை குத்திக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறதைப் பார்த்து ஆதி நிறையக் குமுறி, வெடிச்சுப், புகைஞ்சு, சாம்பலாகி தண்ணீல கரைஞ்சு காணாமப் போய் கொண்டிருந்தன். சாத்து ஆதியை மறுபடியும் உயிர்க்க வச்சிட்டார். நன்றி சாத்து.

நம்மாள என்ன செய்ய முடியும்? முட்டி, மோதி, வலிப்பட்டு, முடங்கி கிடக்கிற நிலைதான் கைவசம் நம்மகிட்ட இருக்கு. எந்தத் திக்கில இருந்து எதைத் திருத்துவது என்று புரியாமல் நிற்கிறதே நம்ம புழைப்பா போச்சு.

நெற்பயிர் எது?

நாணல் எது?

என்று பிரித்தறிய முடியாத பருவத்தில் விளைச்சல் பாத்திக்குள் பயிர்களின் வளர்ச்சி. காலநீட்சியில் நாணலின் வளர்ச்சி நெற்பயிர்களை குன்றவைக்கும் என்று தெரிகிறது. நெல்லையும் புல்லையும் இனங்காண தேசியக் கைகளுக்கு நாம் எவ்விதம் உதவலாம் என்று சொல்லுங்கள்.

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சாத்திரியாரும் விதிவிலக்கில்லையே. அவரும் தன்னை ஒரு தமிழ் தேசிய ஆதரவாளன் என்ற வகையில் வைச்சுக் கொண்டுதானே இப்படி அடுத்தவர்களை நோக்கிப் பாயுறார்.. சா தவறுகளைச் சுட்டிக்காட்டிறார்.

தமிழ் தேசிய ஆதரவு என்பதற்கு நாம் எல்லையிட முடியாது. அது எத்தளத்தில் என்றாலும் தமிழ் தேசியத்தின் உறுதியான எழுச்சி நிலை நோக்கி வளர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.

சிலர் தமிழ் தேசிய வளர்ப்பை சுய ஆர்வத்தோட செய்யினம், சிலர் விளம்பரத்துக்காகச் செய்யினம், சிலர் தங்களை போலி அடையாளமிடச் செய்யினம், சிலர் சுயநலத்துக்காக செய்யினம், சிலர் வருவாய் தேடச் செய்யினம், சிலர் பொழுதுபோக்கச் செய்யினம், சிலர் தாங்கள் செய்த அல்லது செய்யும் தவறுகளை மறைக்கச் செய்யினம், சிலர் இந்தப் போர்வைக்குள் இருந்தபடி அடுத்தவையை திட்ட... முன் விரோதங்களைத் தீர்க்க என்றும் செய்யினம். வெகு சிலரே அதன் தேவை அதன் உலக இருப்பு எழுச்சி என்பதன் யதார்த்தம் அறிந்து செயற்படுகின்றனர்.

இவை எவ்வகையில் இருப்பினும் தமிழ் தேசிய உணர்வு எழுச்சிக்கு அவை ஏதோ ஒரு வகையில் பங்களிப்புச் செய்யும் என்பதை மறுக்க முடியாது.

தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டிட்டு இருக்காமல் அத் தவறுகளுக்கான சாத்தியமான தீர்வுகள் என்ன என்பதையும் முன்மொழிய முனையுங்கள்.

தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் ஒவ்வொருவரினதும் உணர்வுரீதியானது என்பதை மறுக்க முடியாது என்பதால் அது தாத்தா வீட்டுச் சொத்தாவதில் என்ன தவறுகளோ தெரியவில்லை.

எமது விடுதலைப் போராட்டத்தை நாலு பிறருக்கு என்று அர்ப்பணிச்சிட்டு நாங்கள் ஓடிவந்து புகலிடத்தில பதுங்கி இருந்து கொண்டு பத்திரிகைகளுக்கு இணையத்துக்கு ஆக்கமெழுதுவது போன்றதல்ல.. ஒரு மக்கள் குழுமத்தின் உணர்வதில் ஒரு தேசிய இன உணர்வையும் அதன் தேவைப்பாட்டையும் உணர்த்தி அவர்களை எழுச்சி கொள்ள வைப்பதென்பது.

தமிழ் தேசியம் தொடர்பில் மக்களின் செயற்பாடுகள்.. விளக்கங்கள் ஒரே மட்டமானவையும் அல்ல. அவை வேறுபட்டே இருக்கும். எனவே மக்களின் செயற்பாடுகளில குறை பிடிக்கிறதை முன்னிலைப்படுத்தாமல்.. குறைகளை மட்டும் சுட்டிக்காட்டிக் கொண்டிராமல்.. குறைகள் கண்டால் அவற்றை நிவர்த்திக்க சாத்தியப்படக் கூடிய வழிகளைச் சொல்லிக் கொண்டு.. மக்களின் தமிழ் தேசிய எழுச்சியை மேலும் மேலும் பலப்படுத்த வகை செய்ய வேண்டுமே தவிர மக்களைத் திட்டித் திட்டி தமிழ் தேசியத்தை விட்டு விரட்டி அடிக்கிறது கூட ஒரு வகையில் தமிழ் தேசியத் துரோகமே. இதுவே இப்ப சிலரின் பசனாவும் போச்சுது. பத்திரிகைகளுக்கும் இணையத்தளங்களுக்கும் இது இப்ப ஒரு மொடேர்ன் செய்தியாத் தெரியுது..!

தமிழ் தேசிய உணர்வை மக்கள் மத்தியில் விதைக்க செய்யப்பட்ட அர்ப்பணிப்புக்களையும் இவ்வாறான விமர்சனங்களை முன் வைப்போர் கவனிக்க வேண்டும். அதேபோல் கண் மூடித்தனமான தமிழ் தேசிய ஆதரவுச் செயற்பாட்டின் கீழ் அமையும் தவறுகள் தமிழ் தேசிய இருப்புக்கு ஆபத்தானதாக அமையும் என்பதையும் அவ்வாறு செயற்படுவோர் உணர்ந்து செயற்பட வேண்டும். தமிழ் தேசியம் என்பது எங்கள் உணர்வுரிமை. அது தாத்தா வீட்டு உரிமையே என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதிலேயே அதன் எதிர்காலம், எழுச்சி, உலக மதிப்பு என்பன தங்கியுள்ளன..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் சாத்திரியாரும் விதிவிலக்கில்லையே. அவரும் தன்னை ஒரு தமிழ் தேசிய ஆதரவாளன் என்ற வகையில் வைச்சுக் கொண்டுதானே இப்படி அடுத்தவர்களை நோக்கிப் பாயுறார்.. சா தவறுகளைச் சுட்டிக்காட்டிறார்.

தமிழ்த்தேசிய ஆதரவாளன் என்பதில் நானும் விதிவிலக்கல்ல ஆனால் தமிழ்த்தேசசயம் என்னுடைய தனீப்படடட சொத்து ஏன்று அதை நான் மட்டும் தான் வளக்க முடியும் என்று எங்கும் சொல்லவில்லை அப்படி சொல்பவர்கள் மீதுதான் தவறுகளை சுட்டி காட்டினேன் உங்கள் மொழியில் பாய்ந்தேன்

தமிழ் தேசிய ஆதரவு என்பதற்கு நாம் எல்லையிட முடியாது. அது எத்தளத்தில் என்றாலும் தமிழ் தேசியத்தின் உறுதியான எழுச்சி நிலை நோக்கி வளர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.

அதை சிலபேர் ஊர் பழக்க தோசத்தில் கதியால் போட்டு எல்லையிட்டு கள்ள உறுதி செய்ய நினைக்கினம்

சிலர் தமிழ் தேசிய வளர்ப்பை சுய ஆர்வத்தோட செய்யினம், சிலர் விளம்பரத்துக்காகச் செய்யினம், சிலர் தங்களை போலி அடையாளமிடச் செய்யினம், சிலர் சுயநலத்துக்காக செய்யினம், சிலர் வருவாய் தேடச் செய்யினம், சிலர் பொழுதுபோக்கச் செய்யினம், சிலர் தாங்கள் செய்த அல்லது செய்யும் தவறுகளை மறைக்கச் செய்யினம், சிலர் இந்தப் போர்வைக்குள் இருந்தபடி அடுத்தவையை திட்ட... முன் விரோதங்களைத் தீர்க்க என்றும் செய்யினம். வெகு சிலரே அதன் தேவை அதன் உலக இருப்பு எழுச்சி என்பதன் யதார்த்தம் அறிந்து செயற்படுகின்றனர்.

இதில் நான் சிவப்பு குறியிட்டவர்களை இனம்கண்டு வெளளீயேற்றற வேண்டும் என்பதே என் விருப்பம்

தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டிட்டு இருக்காமல் அத் தவறுகளுக்கான சாத்தியமான தீர்வுகள் என்ன என்பதையும் முன்மொழிய முனையுங்கள்.

தீர்வு எனது கட்டுரையின் இறுதியில் எழுதியிருக்கிறேன் புலம்பெயர் தேசத்தில் தமிழ்த்தேசியத்திற்கான மற்றும் ஈழவிடுதலைப்போரிற்கு ஆதரவான செயற்பாடுகளையும் பரப்புரைகளையும் மேற்பார்வை செய்வது அல்லது ஒழுங்கு படுத்துவது என்பனவற்றை தமிழர் அனைத்துலக செயலகம் என்கின்ற ஒரு அமைப்புத்தான் செய்து வருகின்றது இந்த அமைப்பினர் புலம்பெயர் தேசத்தில் பல மாற்றங்களை உடனடியாகவே மேற்கொண்டு போலித்தேசியவாதிகளான பந்தம்பிடிப்பவர்களையும் தகடுவைப்பவர்களையும் இனம்கண்டு அகற்றி தமிழ்த்தேசியத்திற்கு உண்மையாக உணர்வுடன் உழைப்பவர்கள் கைகளில் புலம்பொயர் தேசத்து செயற்பாடுகளை ஒப்படைக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிலைமை இருக்கினறது ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பதும் சந்தேகமே ஏனெனில் அந்த அனைத்துலக செயலகத்தின் உள்ளே சிறீலங்கா அரசின் புலனாய்வுபிரிவிதும் மற்றும் தமிழ்ஒட்டுக்குழு உறுப்பினர்களும் ஊடுருவி அவர்களே இன்று புலம்பெயர் தேசத்தின் தமிழர்தேசியத்தை சிதைத்து வருகின்றனர். எனவே முதலில் இந்த களைகள் களையப்படவேண்டும். அது தேசியத்தலைமையினால் மட்டுமே முடியும் ஏனெனில் இங்கு நிலைமைகள் எல்லை மீறி போயிருக்கின்றது அதை கட்டப்பாட்டில் கொண்டுவர பல முயற்சிகள் நடக்கின்றது ஆனாலும் அதனை பகிரங்கமாக சுட்டிக்காட்ட வேண்டிய நிலையும் எற்பட்டுள்ளது

தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் ஒவ்வொருவரினதும் உணர்வுரீதியானது என்பதை மறுக்க முடியாது என்பதால் அது தாத்தா வீட்டுச் சொத்தாவதில் என்ன தவறுகளோ தெரியவில்லை.

தமிழ்த்தேசியம் தாத்தா வீட்டுசொத்துதான் ஆனால் அது எங்கள் தாத்தா வீட்டு சொத்து அதாவது ஒட்டு மொத்த தமிழினத்தின் தாத்தாவின் வீட்டு சொத்து அதை சிலர் தன் தாத்தா வீட்டு சொத்து மட்டுமே என்றுதான் உரிமை கொண்டாடினம்.என் கட்டுரையின் தலைப்பை போலவே

எமது விடுதலைப் போராட்டத்தை நாலு பிறருக்கு என்று அர்ப்பணிச்சிட்டு நாங்கள் ஓடிவந்து புகலிடத்தில பதுங்கி இருந்து கொண்டு பத்திரிகைகளுக்கு இணையத்துக்கு ஆக்கமெழுதுவது போன்றதல்ல.. ஒரு மக்கள் குழுமத்தின் உணர்வதில் ஒரு தேசிய இன உணர்வையும் அதன் தேவைப்பாட்டையும் உணர்த்தி அவர்களை எழுச்சி கொள்ள வைப்பதென்பது.

இதே விடயத்தை அதாவது புகலிடத்தில் பதுங்கி என்கிற சொற் பதத்தை நீங்களும் வேறு பலரும் என்னை நோக்கி முன்னரும் பாவித்திருந்த படியால் சில விடயங்களை எழுத விரும்புகிறேன. ஏனெனில் எனக்கு பதில் எழுதுபவர்கள் தான் புகலிடத்தில் பதுங்கியிருந்து எழுதுகின்றனர் நான் எப்போதுமே பதுங்கவில்லை நான் பகிரங்கமாகவே எனது அடையாளத்துடன் எழுதுகிறேன் எனது செயற்பாடுகளும் பகிரங்கமாகவே இருக்கிறது சாத்திரி என்கிறது புனைபெயர் என்றாலும் சிறி என்பவர்தான் சாத்திரி என்று எல்லோருக்குமே தெரியும் ஆனால் எதிர் கருத்து எழுதுபவர்கள் ஒழித்திருந்து எழுதுகின்றனர் அவர்களிற்கெல்லாம் நான் பதில் எழுதுவதில்லை ஆனால் நெடுக்கு யார் என்று தெரிந்ததால் தான் பதில் எழுதுகிறேன். அடுத்ததாக போராட்டத்தை நாலு பிறருக்கு அர்ப்பணிச்சிட்டு என்றுநீங்கள் சொல்வதை ஒத்து கொள்கிறேன் ஆனால் போராட்டமே என்னவென்று தெரியாமல் அதன் வலி என்னவென்று தெரியாமல் ஓடிவரவில்லை ஆரம்பத்தில் தமிழ் மக்களிடம்அரசியல் ரீதியான வேலை பின்னர் பல வருடங்கள் ஆயுதபோராட்டத்தில் உள்ளேயும் பின்னர் ஓடிவந்த இடத்திலும் ஒழித்திருக்காமல் முடிந்தளவு பகிரங்கமாகவே வேலைகள் செய்த செய்து கொண்டிருக்கும் அனுபவத்தில் தான் எழுதுகிறேன். இதற்காக நான் கொடுத்த விலைகளை வலிகளை கொல்லி விளம்பரம் தேடுவது என் நோக்கமல்ல ஏனெனில் நான் இது எவ்வொரு தமிழரின் கடைமையாகவே நினைக்கிறேன்.

மக்களைத் திட்டித் திட்டி தமிழ் தேசியத்தை விட்டு விரட்டி அடிக்கிறது கூட ஒரு வகையில் தமிழ் தேசியத் துரோகமே. இதுவே இப்ப சிலரின் பசனாவும் போச்சுது. பத்திரிகைகளுக்கும் இணையத்தளங்களுக்கும் இது இப்ப ஒரு மொடேர்ன் செய்தியாத் தெரியுது..!

மக்களை எந்த இடத்தில் திட்டியிருக்கிறென் என்று கோடிட்டு காட்டவும்

மக்களைத் திட்டித் திட்டி தமிழ் தேசியத்தை விட்டு விரட்டி அடிக்கிறது கூட ஒரு வகையில் தமிழ் தேசியத் துரோகமே. இதுவே இப்ப சிலரின் பசனாவும் போச்சுது. பத்திரிகைகளுக்கும் இணையத்தளங்களுக்கும் இது இப்ப ஒரு மொடேர்ன் செய்தியாத் தெரியுது..!

இந்த வசனம் எனக்காகவோ அல்லது என்னுடைய கட்டுரைக்காகவோ எழுதப்பட்ட பதிலாக தெரியவில்லை எனவே அப்படி எழுதுகின்ற பத்திரிகைகளிற்கோ இணையத்தளங்களிற்கோ இந்த பந்தியை மின்னஞ்சல் செய்து விடுவது நல்லது நன்றி.

இது எல்லா இடமும் உண்டு அதை பற்றி கதைகபோனால் கருணா குழு துரோகி என பட்டம் மட்டுமே கிடைக்கும்

நான் அறிந்து மெல்பேனில் பலர் தமிழீழ விடுதலை போராட்டத்தை தமது விளம்பரத்துகாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.அதற்கு அவர்கள் சொல்லும் பொய்கள் கொஞ்சம் அல்ல,மறைந்த மாமனிதர் ஜெயக்குமார் அண்ணா போன்ற சில உண்மையான மனிதர்கள் மிகச்சிலரே மிகுதி பேர் தமது விளம்பரம் மட்டுமே நோக்காக கொண்டவர்கள்.நாட்டில் இருந்து உரையாற்றுபவர்களின் உரைகளை அப்படியே கொப்பி அடித்து தன் கருத்தாக உரை நிகழ்துபவர்களும் உண்டு.இதனை பற்றி கதைத்து கருணா குழு என்ற பட்டத்தை சுமக்க நான் விரும்பவில்லை அதனால் பல விடயங்களில் ஒதுங்கி நிற்கவே விரும்புகின்றேன்.

எல்லாம் தாயகத்தலைமையினால் மட்டும்தான் முடியும் என்றால், அவர் தனது நேரத்திற்கு எங்கு போவது? இப்படிச் சொல்லி, நாங்கள் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறோம் என்பதே உண்மை. அது எங்கள் சுயநலமே. இங்கு, நீங்கள் எல்லோரும் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை. அதேநேரம், இங்கு கருத்துக்கள் எழுதியிருப்பவர்களையும் தேசியவாதிகள் அல்ல எனக் கூறலாம். (முழுக்கருத்தையும் ஆழமாகப் படித்துவிட்டுக் கோபப்படவும்).

எல்லோரும் குறிப்பிட்டதுபோல, செயற்பாட்டாளர்கள் அனைவரும் தேசியவாதிகள் அல்ல என்பது உண்மை. அதேநேரம், அவர்கள் தங்கள் நேரங்களையாவது தேசியத்திற்காகச் செலவிடுகிறார்கள். அதற்காக நாம் அவர்களைப் பாராட்டவேண்டும். அடுத்ததாக, அவர்கள் எல்லோரும் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது போராட்டத்தைப் பற்றிய போதிய அறிவு கொண்டவர்களோ அல்ல. நண்பர்களின் உந்துதலிலோ, அல்லது சுயவிளம்பரம் தேடியோ, அல்லது போராட்டத்திற்கு உதவி செய்ய வாருங்கள் எனக்கேட்டதால் மறுக்க முடியாமலோ எம் அமைப்புகளில் சேர்ந்து வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு போராட்டத்தைப் பற்றிய விளக்கங்கள் தெரிந்திருப்பதில்லை. அவர்கள் மும்முரமாகச் செயற்பட்டாலோ அல்லது அவர்களால் கூடிய பங்களிப்பை வழங்கக்கூடிய தன்மை இருப்பதை அறிந்ததும் அவர்களுக்குச் செயற்பாட்டாளர்களாகிறார்கள். அதோடு, இச்செயற்பாட்டாளர்களில் பலர் கல்வியறிவு குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களால் பல பிரச்சனைகளைச் சிந்தித்துச் செயற்படுத்த முடியாததோடு, கீழிருப்பவர்களையும் நிர்வகிக்க முடியாது. அது மட்டுமின்றி, மற்றவர்களின் திறமைகளைக் கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிக்கவும் முடியாது. அப்படியே எப்பவாவது கண்டுபிடித்தாலும், செயற்பாட்டாளர்களின் அறிவின்மை அத்திறமையானவரை மழுங்கடிக்கவே முனைகிறது. அப்படியே கொஞ்சம் படித்திருந்தாலும், அதில் எத்தனை பேர், வீடு வீடாகச் சென்று பங்களிப்பு வாங்க விரும்புகிறார்கள்? படித்தவர்களில் பலர், இப்படியான வேலைகளைச் செய்வதில்லை. அதனால்தான், அவர்களால் தொடர்ந்து அமைப்பில் இருக்க முடிவதில்லை. செயற்பாட்டாளர்கள்தான், வீடு வீடாகச் சென்று, மக்களின் விசனங்களை வாங்கிக் கொள்கிறார்கள். அதற்காகவேனும் நாம் அவர்களை மதிக்கத்தான் வேண்டும். பத்துக் கதவுகளைத் தட்டினால், அதில் இரண்டு வீடுகள்தான் தானாகத் திறந்து கொள்ளும். மற்றவற்றைத் திறக்க வைப்பதற்கு எவ்வளவு பாடுபடவேண்டுமென அதனைச் செய்தவர்களுக்குத் தான் விளங்கும். அதுமட்டுமின்றி, நிகழ்வுகள் நடத்தும்போது, வெயிலிலும், மழையிலும், பனியிலும் நின்று முறிபவர்களும் இந்தச் செயற்பாட்டாளர்களே. எல்லோரும், வந்து பார்த்துவிட்டுக் கைதட்டி, விமர்சனங்களை வைத்து விட்டுப் போக, நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்துவிட்டு, அது முடிந்த பின்னும் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு கடைசி ஆட்களாகச் செல்பவர்களும் இவர்கள்தான். அதனால்தான் அமைப்பில் இவர்களால் ஒரு இடத்தைப் பிடிக்க முடிகிறது. இவர்களுக்குள் பல கறுப்பு ஆடுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எம்மில் எத்தனை பேர், அமைப்பில் சேர்ந்து, இவ்வாறான வேலைகளைச் செய்திருக்கிறோம்? எத்தனை பேர் முன்வருவோம்? சரி, எத்தனை பேர் இவர்களைத் திருத்துவதற்கு முயற்சிகள் எடுத்திருக்கிறோம்? எல்லோரும், இப்பிரச்னைகளுக்கு அப்பாற்பட்டவர்களோடுதான், இவைகளைப் பற்றிக் கதைக்கிறோமே தவிர, உரிய முறையில் இதைப் பற்றி ஏதாவது செய்திருக்கிறோமா? எனக்குத் தோன்றிய சில வழிகளைக் கூறுகிறேன். முயற்சித்துப் பாருங்கள்.

1. இப்பிரச்சனையில் சம்பந்தப்படாதவர்களோடு இதனைப் பற்றி விவாதிப்பதை நிறுத்த வேண்டும். இவர்களைப் பற்றி இவ்வாறு நாம் குறை கூறும்போது, அது எமது அமைப்பைத்தான் அதிக அளவில் பாதிக்கிறது. எங்கே குறை பிடிக்கலாம் என்று அலைபவர்களுக்கு இது மிகவும் வசதியாகப் போய்விடும். அதுமட்டுமின்றி, இப்படியான செய்திகளால், பங்களிப்பு செய்யும் மக்களும் குழப்பமடைந்து, பங்களிப்புகளை நிறுத்துவதற்கு, குறைப்பதற்கு வழி வகுத்துவிடுகிறது. (சில நாடுகளில் இது பலமுறை நடந்திருக்கிறது).

2. முடிந்தால், அவர்களுக்கு இதனை உணரவைக்க முயற்சியுங்கள். இது மிகவும் கடினமான விடயம் என்பதால் முடிந்தால் மட்டுமே முயற்சிக்கலாம்.

3. அந்தப் செயற்பாட்டாளருக்கு மேலுள்ள பொறுப்பாளருக்கும், அந்த நாட்டின் பொறுப்பாளருக்கும் தெரிவியுங்கள். தெளிவாகவும், விளக்கமாகவும் கடிதம் மூலம் அனுப்புவது மிகுந்த பலனைத் தரும்.

4. தாயகத்திற்குத் தெரியப்படுத்துங்கள். தாயகத்திலிருந்துதான் அனைத்து நாடுகளும் கண்காணிக்கப்படுகிறது. அங்குதான் அனைத்துலகத் தொடர்பகமும் உள்ளது. சமாதான காலத்திற்குப் பின்னர், அங்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனை நீங்கள் கடிதங்கள் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அனைத்துலகத் தொடர்பகத்திற்கு அனுப்ப முடியும். கடிதங்கள் போய்ச் சேருமா என நம்பிக்கையில்லாதவர்கள், உங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாராவது வன்னியிலிருந்தால், அவர்கள் மூலம் அனுப்ப முடியும்.

அமைப்பில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள்தான் கண்காணிக்க வேண்டுமென நினைப்பது மிகவும் தவறு. அவற்றைக் கண்காணிப்பதற்கான நேரமோ, ஆட்களோ அவர்களிடம் இல்லை. எங்களுக்குப் பெரிய விடயமாகத் தெரியும் விடயங்கள் அவர்களைப் பொறுத்தவரை சிறிய விடயங்களாக இருக்கலாம். அமைப்பைப் பொறுத்தவரை, செயற்பாட்டளர்களும், அவர்களுடைய பிரதேசங்களும் சிறிய புள்ளிகளே. இப்பிரச்னை அவர்களின் கவனத்திற்குச் செல்லும் வேளை, அவர்களுக்கு வேறொரு நாட்டுப் பிரச்சனையோ அல்லது அரசியல் பிரச்சனையோ இருக்கும்போது, அவர்கள் இதனை ஒத்தி வைத்துவிட்டுப் அந்தப் பெரிய பிரச்சனையைத் தான் பார்ப்பார்கள். அதோடு, அவர்கள் எதிர்பார்க்கும் இன்னொரு விடயம், இச்செயற்பாட்டாளரின் வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்? இவரை விட நம்பிக்கையான, செயற்பாடுகளுடைய வேறொருவர் இருக்கும் பட்சத்திலேயே இவரை நீக்க முடியும். அதற்காக அவர்கள் இதனைக் கிடப்பில் போடப்போவதில்லை. அதற்கான முயற்சிகளை எடுப்பார்கள்தான். ஆனால் நாம் எதிர்பார்க்கின்றபடி உடனே நடக்கப்போவதில்லை.

பல நாடுகளில், சமாதான காலத்திற்கு முன்னர் இருந்ததைவிடப் பலமடங்கு முன்னேறியிருக்கிறார்கள். இன்று, ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் நிகழ்வுகள் தாயகத்திற்குத் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது. பெரிய பிரச்னைகளையே அவர்கள் கவனத்தில் எடுக்கிறார்கள். இப்படியான சிறிய பிரச்சனைகளை அந்தந்த நாட்டுப் பொறுப்பாளர்கள்தான் தீர்க்கவேண்டுமே தவிர, தாயகம் அல்ல.

அடுத்தது, எமது அமைப்புகளின் செயற்பாடுகளை முழுமையாகச் செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லாமையும் இவர்களைத் தொடர்ந்து செயற்படுவதற்கு வழிவகுத்து விடுகிறது. உண்மையான, உணர்வுள்ள பலர் இங்கு ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் முன்வந்தால் இவர்களை எல்லாம் ஓரங்கட்டமுடியும்.

இதில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். வெளிநாடுகளில் செயற்படுவோருக்கு, அந்தந்த நாடுகளில், போராட்ட, அரசியல், மற்றும் மக்கள் தொடர்பு சம்பந்தப்பட்ட சிறு வகுப்புகளை நடத்தலாம். இதன்மூலம், அவர்களுக்கு இவற்றைப் பற்றித் தெரிவிப்பதோடு, அவர்களின் கேள்விகள், பதில்கள் மூலமும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு இதனைக் கூறுவதோடு நின்று விடாமல், நாமும் பங்காளிகளாக இருக்க வேண்டும்.

இப்போது யோசித்துப் பாருங்கள்! இவற்றையெல்லாம் நாம் முயற்சி செய்தோமா? ஒரு சிலவற்றைச் செய்திருப்போம். அவற்றிக்குப் பலன் கிடைத்திருக்காது. உடனே நாம் போர்க்கொடி தூக்கி விட்டோம். யோசித்துப் பாருங்கள், ஒவ்வொரு நாட்டிலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் செயற்படுகிறார்கள். ஓவ்வொருவரின் நடவடிக்கையையும் பொறுப்பாளர்கள் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. மக்கள்தான் அவர்களை அடையாளம் கண்டு உரிய முறையில் தெரிவிக்க வேண்டும். குறைகளை சொல்லிக் காட்டிக் கொண்டிருக்காமல், அதனை எப்படி மாற்றியமைக்கலாம் என நாம் சிந்தித்துச் செயற்படவேண்டும். இங்கு அவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதாலோ அல்லது எமக்குத் தெரிந்தவர்களுக்குச் சொல்வதாலோ அவர்கள் திருந்தி விடப் போவதில்லை. அமைப்பிற்கு உரிய முறையில் தெரியப்படுத்துவதன் மூலம், அவர்களைத் திருத்துவதா அல்லது வெளியேற்றுவதா என அமைப்பே முடிவு செய்ய வழிவகுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியம் என்பது எல்லாத் தமிழர்களின் சொத்தாக இருக்கவேண்டும். அப்படி இல்லாததனால்தான் தமிழன் இன்றுவரை அடிமையாக அவல வாழ்வினுள் அல்லல்படுகின்றான்.. உயிர்பயம் அற்ற புலம்பெயர் நாடுகளில் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படுவர்கள் எல்லோரும் 100% சிறந்தவர்கள் அல்லர். எனினும் தமிழ்த் தேசியத்தை வளர்க்க 1% பிரயோசனமான விடயங்கள் செய்தாலும் அவை வரவேற்கப்படவேண்டியதே. சிலர் முன்னர் வேறு அரசியல் கருத்துக்களுடன் இருந்தாலும், காலத்தின் தேவை கருதி, தமிழ்த் தேசியத்தின் நன்மை கருதி தம்மால் இயன்ற பணிகளை சுயமாகச் செய்ய வெளிக்கிட்டாலும், அவர்களுடைய பழைய நிலைப்பாடுகள் காரணமாக அவர்களது செயற்பாடுகள் "துரோகிகள்", "அந்நிய சக்திகளின் அடிவருடிகள்" என்ற வெற்றுச் சொற்பதங்களூடாக அமுக்கப்படுகின்றன. இவையெல்லாம் நல்லதற்கல்ல.. நமது நோக்கம் தமிழ்த் தேசியத்தை வலுவாக்கித் தனிநாட்டை அடைவதே என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு சிறு உதவிகள் கூட பேருபகாரமாகத் தெரியவேண்டும்..

பதவி, புகழ், பொறாமை பிடித்தவர்கள் எந்த அமைப்பிலும் இருப்பர். உதாரணமாக கருணா கூட தாயகத்தில் பலவருடங்கள் தேசியத்திற்குப் பாடுபட்டுவிட்டு இறுதியில் பாரிய துரோகம் இழைத்தார்.. தாயகத்தில் உள்ள தலைமைகளால் எல்லாவற்றையும் தீர்த்துவிடமுடியாது என்பதற்கு கருணாவின் துரோகம் ஒரு உதாரணம். எனவே தாயகத் தலைமை நடவடிக்கை எடுக்காமல் ஒன்றும் செய்ய இயலாது என்பதை விட்டுவிட்டு இயலுமான்ன உதவிகளைச் செய்வதே மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நெடுக்கு யார் என்று தெரிந்ததால் தான் பதில் எழுதுகிறேன்.

ஆனால் எனக்கு நீங்கள் யாருன்னு தெரியவே தெரியாது. உங்களின் எழுத்துக்களின் வெளிப்படும் கருத்தை விட எனக்கு உங்களின் தனிப்பட்ட செயற்பாடுகள் பற்றி 0.000000 % கூடத் தெரியாது.

எனக்குள் உள்ள தமிழ் தேசிய உணர்வை நம்புற நான் வேறு எவரினதையும் நம்பத் தயார் இல்லை..! மோசடிகள் எப்பவும் எவ்வடிவிலும் வெளிப்படலாம்..! நாம் தாம் எம்மையே இவை தொடர்பில் எச்சரிக்கை செய்து கொள்ள வேணும்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் கருத்தில் உண்மையில்லாமலுமில்லை....... ஆனால் அதுதான் உண்மையமில்லை!

நண்பர்களே நாம் என்ன செய்கிறோம்.... எதற்காக செதும்ய்கிறொமம் என்பதில் தெளிவு வேண்டும்.

அது இல்லாதவிடத்து பிரச்சனைகள் மட்டுமெ வரும் தீர்வுகள் ஒரு போதம் தீர்க்கப்படா.

நாம் என்ன செய்ய முயற்சித்தோம் ..... அதில் எதை தடுக்க அவர்கள் முயற்சித்தார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். உதாரணத்திற்கு (இது உண்மையில்லை) ஜேர்மன் விடயத்தைப் பார்ப்போமெனில் முதலில் செய்தவர்களிடம் உண்மையான நேர்மையான உழைப்பு மட்டுமே இருந்திருந்தால்....? இரண்டமாவதாக செய்தவர்களுடன் முன்கூட்டியே கலந்ததாலோசித்திருக்கலாம்தா

யோகரட்ணம் யோகி அவர்கள் அண்மையில் பரப்புரை பற்றி பேட்டி கொடுத்த போது, "தனி மனிதச் செயற்பாடுகளின் அவசியம்" குறித்து கூறியுள்ளார்.

அவர் வெளிநாட்டில் உள்ள அமைப்புக்களின் செயற்பாடுகளால் அதிருப்தியுற்று ஒதுங்கியிருப்பவர்களை மனதில் வைத்துத்தான் அதைச் சொன்னார் என்று நினைக்கின்றேன்.

யோகியின் கருத்தை பின்வருமாறு பார்க்கலாம்.

-அமைப்பின் செயற்பாட்டில் அதிருப்தி என்பதற்காக ஒதுங்கியிருக்காதீர்கள்

-உங்களுடைய தனிமனிதச் செயற்பாடுகளை தாயகம் அங்கீகரிக்கின்றது

ஆகவே இங்கே உள்ளவர்களோடு பிரச்சனை என்று பேசாது இருக்காது, ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தாயகத்திற்காக பணியாற்ற வேண்டும்.

அதே வேளை அமைப்பினரும் தனிமனிதச் செயற்பாடுகளை குழப்பாது, தமது வேலைத்திட்டங்களில் கவனம் எடுக்க வேண்டும்.

ஜேர்மனியில் தனித்து செயற்படுபவர்களை முன்பு போன்று இப்பொழுது அதிகம் குழப்புவதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள உரையாடல் சாத்திரி,

பி.கே.கே போன்ற அமைப்புகளின் வெளிநாட்டுக் கிழைகள்போலவும் குர்திஸ்தான் போராளிகளளின் ஆதரவாளர்கள் போலவுமே பெரும்பாலும் எல்லாம் நடைபெறுகிறது. அர்பாணிப்பு மதிக்கப் பட வேண்டியது. பிழைகள் தாமதிக்காமல் உணர்த்தப் படவும் களையப் படவும் வேண்டியது. நிறைய சர்வதேச சமூகத்தோடு தொடர்புள்ள பலர் துரத்தப் பட்டு விட்டனர். ஒரு சிலர் எதிரிகளாக்காப் பட்டுவிட்டனர். 1996ன் பின்னார் ஏற்பட்ட நம்பிக்கை தரும் மாற்றங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பித்தபின்னர் மேலும் செளித்திருக்கவேண்டும். ஏனோ அது நடை பெறவில்லை. கோட்பாட்டு ரீதியாக போராட்டக்க் காலத்தில்க்குமுன்னர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் எரிதிரிய விடுதலை இயக்கம் என்பவை வெளிநாடுகளில் இயங்கிய வடிவங்களில் இருந்து நிறையா கற்றுக்கொள்ள இருக்கிறது. மேற்கு நாடுகாளின் ராஜதந்திரீகள் மட்டதிலேய்யெ இது அவதானிக்க்கப் பட்டுள்ளது. சில சமயம் வன்னியின் கருத்துக்கள்கூட அம்பலம் ஏறுவதில்லை. வன்னியில் பால் சேகரிப்பு போன்ற அபிவிருத்தி நாடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இலகுப்பிள்ளை புலம் பெயர் நாடொன்றில் தேர்தலில் நம்மவர் சிலரால் தோற்க்கடிக்கப் பட்டது ஒரு உதாரணம். வன்னியில் பயனுள்ள்ள பணிகளில் ஈடுபடுகிற வேறு சிலருக்கும் இத்தகைய அனுபவங்கள் உண்டு. ஆயிரம் மலார்கள் மலரட்டும் எல்லா மலர்களும் ஈழ அன்னையை அலங்கரிக்கட்டும் என்கிற அணுகுமுறை மேம்படவேண்டும். மிகவும் பயனுள்ள உரையாடல் இது

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழிச்சி எழுதியது

அதோடு, இச்செயற்பாட்டாளர்களில் பலர் கல்வியறிவு குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களால் பல பிரச்சனைகளைச் சிந்தித்துச் செயற்படுத்த முடியாததோடு, கீழிருப்பவர்களையும் நிர்வகிக்க முடியாது. அது மட்டுமின்றி, மற்றவர்களின் திறமைகளைக் கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிக்கவும் முடியாது. அப்படியே எப்பவாவது கண்டுபிடித்தாலும், செயற்பாட்டாளர்களின் அறிவின்மை அத்திறமையானவரை மழுங்கடிக்கவே முனைகிறது. அப்படியே கொஞ்சம் படித்திருந்தாலும், அதில் எத்தனை பேர், வீடு வீடாகச் சென்று பங்களிப்பு வாங்க விரும்புகிறார்கள்? படித்தவர்களில் பலர், இப்படியான வேலைகளைச் செய்வதில்லை

தமிழிச்சி நீங்கள் சொல்வதைப்போலவே இச்செயற்பாட்டாளர்களில் பலர் கல்வியறிவு குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களால் பல பிரச்சனைகளைச் சிந்தித்துச் செயற்படுத்த முடியாததோடு, கீழிருப்பவர்களையும் நிர்வகிக்க முடியாது. அது மட்டுமின்றி, மற்றவர்களின் திறமைகளைக் கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிக்கவும் முடியாது. அப்படியே எப்பவாவது கண்டுபிடித்தாலும், செயற்பாட்டாளர்களின் அறிவின்மை அத்திறமையானவரை மழுங்கடிக்கவே முனைகிறது. என்பது பெரியளவில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் ஏனெனில் தமிழ் மக்கள் தவிர்ந்து நாங்கள் வாழும் நாட்டு அதாவது வெளிநாட்டு மக்களிடம் வேலை அல்லது பரப்புரை செய்வதென்றால் நீங்கள் சொன்ன அந்த கல்வியறிவு கட்டாயம் தேவை ஆனால் எங்கள் மக்களிடம் வேலை செய்ய ஒன்றும் மெத்தப்படித்தோ அல்லது அரசியல் விஞ்ஞானம் படித்த பட்டதாரியோ தோவை என்றில்லை எங்கள் மக்களிற்கு நாங்கள் போய்த்தான் போராட்டத்தைப்பற்றி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை எமது மக்களிடம் பழகத்தேவையான அணுகு முறை தெரிந்திருந்தாலே போதுமானது

அடுத்ததாக அப்படியே கொஞ்சம் படித்திருந்தாலும், அதில் எத்தனை பேர், வீடு வீடாகச் சென்று பங்களிப்பு வாங்க விரும்புகிறார்கள்? படித்தவர்களில் பலர், இப்படியான வேலைகளைச் செய்வதில்லை என்கிறஎன்கிற கருத்தும் ஏற்க முடியாதது காரணம் படித்த நல்ல மொழியறிவுள்ள பலர் தமிழ்த்தேசியத்திற்காக வேலை செய்து கொண்டும் செய்யத் தயாராகவும் உள்ளனர் ஆனால் அதற்கும் ஒரு உதாரணத்தைத்தர உங்களிற்கு ஏன் பொதுவாகவே எழுத விரும்புகிறேன். அதற்கு முதல் கல்விமான்கள் தான் தமிழர்: வீட்டுகதவுகளை கட்டாயம் தட்டவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை அவர்களிற்கென்று வேறுபணிகள் உள்ளது அதே நேரம் கல்விமான்கள் கதவை தட்ட போய்விட்டால் கதவு தட்டுபவர்கள் போய் கல்விமான்களின் வேலையை பார்க்கமுடியாது.

சரி நான் சொல்ல வந்ததை சொல்ல வருகிறேன். அண்மையில் யெர்மனியில் யெர்மன் 3 .sat என்கிற ஒரு தொலைக்காட்சியில் ஈழத்தமிழர்பற்றியதொரு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஏதுவானதீர்வாக எது அமையும் என்று பல யோசனைகள் விவாதிக்கப்பட்டது.அதில் தனித்தன்னாட்சிமுறை அதாவது தமிழீழம் என்பதும் சாத்தியமாகுமா என்பது ஒரு யோசனையாக விவாதிக்கப்பட்டது.ஆனால் தேசியத்திற்கு ஆதரவான தளம் என்:று இயங்குகிற ஒரு இணையத்தளம்அரைகுறை மொழிபெயர்ப்பு அறிவுடன் சரியான புரிதல் இல்லாமல் யெர்மன் 3.sat என்கிற தொலைக்காட்சியில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்கிற செய்யதி வெளியாகியது உலகத்தமிழர் அனைவரும் அறிந்ததே. அது மட்டுமல்ல அந்த செய்தியைதமிழீழ தேசியத்தொலைக்காட்சியில் ஈழக்கிழவன் சொல்கிற அளவிற்கு போயிருந்தது.

ஆனால் யெர்மனியில் யெர்மன் மொழியறிவுள்ள அதே நேரம் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாக பல வேலைகளை முன்னெடுப்பவரும் மொழிபெயர்ப்பாளரும் மொழிமாற்றீட்டாளருமான ஒருவர் இந்த செய்தி தவறானது 3 .sat தொலைக்காட்சியில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டது என்கிற பதமே உச்சரிக்கபடவில்லை அதுவும் ஒரு தீர்வாகுமா என்கிற கோணத்திலான ஒரு கலந்தரையாடல்தான் நடந்தது. அதை சில தமிழ் ஊடகங்கள் பொறுப்பற்ற விதத்தில் அவசரப்பட்டு தமிழீழத்திற்கான அங்கீகாரம் என்று செய்தி வெளியிட்டு விட்டன என்கிற செய்தியை ஒரு இணையத்தளத்திற்கு கொடுத்திருந்தார். ஆனால் தவறான செய்தியை பிரசுரித்திருந்த அந்த இணையத்தளத்தில் அந்த செய்தியை எழுதியதற்கு பொறுப்பானவர் பின்னர் அந்த செய்தியை நீக்கவும் இல்லை அதே நேரம் அதே நேரம் தங்கள் செய்தி பிழை என்று எப்படி இன்னொருவர் சொல்லலாம் என்கிற இன்னொரு குற்றச்சாட்டினை செய்தியை தெளிவுபடுத்தியவர் மீது வைத்துமட்டுமல்லாமல் தமிழ் ஊடகங்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து விட்டது என்கிற சொல்லையும் நீக்க வேண்டும் என்று அழுத்தமும் கொடுத்தார். இது ஒரு உதாரணம் தான் எனவே இப்படியான சம்பவங்கள் நிகழும்போது கல்வியாளர்கள் எப்படி உதவி செய்யப்போய் உபத்திரவத்தை வாங்க தயாராய் இருப்பார்கள். இன்னும் தொடரும்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி,

சரியாச் சொல்லியிருக்கிறியள்.

ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி உந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தபிறகுதான் உந்தக் களியாட்டங்கள் அதிகமாகத் தொடங்கியிருக்கு.

வன்னிக்குப் போய் நாலைஞ்சு பேரோட எடுத்துவந்த புகைப்படங்களை வைச்சு நல்ல யாவாரம் நடந்தது. (இப்ப எங்க கொண்டுபோய் அந்தப்படங்களைப் பதுக்கியிருக்கினமெண்டு தெரியேல)

எல்லாரையும் அரவணைச்சுப் போகவேணுமெண்டு வன்னியில இருக்கிறவை நினைச்சிருக்கலாம். ஆனா தாங்கள் சும்மா கூப்பிட்டு ஒரு மத்தியானச் சாப்பாட்டை ஒண்டாச் சாப்பிட்டதை வைச்சே தில்லுமுல்லுகள் நடக்குமெண்டதை அவையள் அறியாமலிருந்தது சிக்கல்தான்.

சாத்திரி,

சரியாச் சொல்லியிருக்கிறியள்.

ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி உந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தபிறகுதான் உந்தக் களியாட்டங்கள் அதிகமாகத் தொடங்கியிருக்கு.

வன்னிக்குப் போய் நாலைஞ்சு பேரோட எடுத்துவந்த புகைப்படங்களை வைச்சு நல்ல யாவாரம் நடந்தது. (இப்ப எங்க கொண்டுபோய் அந்தப்படங்களைப் பதுக்கியிருக்கினமெண்டு தெரியேல)

எல்லாரையும் அரவணைச்சுப் போகவேணுமெண்டு வன்னியில இருக்கிறவை நினைச்சிருக்கலாம். ஆனா தாங்கள் சும்மா கூப்பிட்டு ஒரு மத்தியானச் சாப்பாட்டை ஒண்டாச் சாப்பிட்டதை வைச்சே தில்லுமுல்லுகள் நடக்குமெண்டதை அவையள் அறியாமலிருந்தது சிக்கல்தான்.

நான் சொல்ல நினைத்ததை சொல்லிப் போட்டியள். இருந்தாலும் உந்த சேர்ட் கை மணிக்கூடு வேண்டிக் குடுக்கிற கதையை விட்டுட்டியள் :wub:

சாத்திரி, நீங்கள் சொல்வது போல, எல்லா மக்களும் எமது போராட்டத்திற்கு ஆதரவில்லை. ஏற்கனவே ஆதரவு அளிப்பவர்கள்தான் தொடர்ந்தும் ஆதரவளிக்கிறார்களே தவிர, அனைத்து மக்களும் ஆதரவளிப்பதில்லை. இன்றும்கூட பங்களிப்பு செய்யாத மக்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அதோடு, பங்களிப்பைச் செய்ததோடு தங்கள் கடமை முடிந்தது என்று நினைப்பவர்கள்தான் அதிகமே தவிர, தாங்களும் சேர்ந்து பணியாற்றவேண்டும் என நினைப்பவர்கள் மிகவும் குறைவு. எமது அமைப்பைப் பொறுத்தவரை, அவர்களுடைய செயற்பாடுகளுக்கேற்ப செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படியிருக்கையில், ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்களையும் விலத்தினால் எமது செயற்பாடுகள் முடங்கிப் போகும்.

கல்விமான்களுக்குரிய செயற்பாடுகள் எத்தனையோ உள்ளன. ஆனால் அவற்றைச் செய்வதற்குக் கூட அவர்கள் முன்வருவதில்லை. சமாதான காலத்தில் செய்வதற்குக்கூட முன்வராதவர்கள் போராட்டகாலத்தில் முன்வரவா போகிறார்கள்? பாலசிங்கம் அண்ணாகூட மாவீரர் நாளில் உரையாற்றும்போது, கல்விமான்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தாயகத்தில் படித்து முடித்துவிட்டு வெளிநாடு வந்தவர்கள்கூட, தாயகத்திற்காக பணியாற்ற விரும்புவதில்லை.

இன்னுமொன்றைப் புரிந்து கொள்ளுங்கள். செயற்பாட்டாளர்களைப் பற்றி நீங்கள் குறை கூறுவதாக இருந்தால், முதலில் நீங்கள் எவ்வாறான செயற்பாட்டைச் செய்திருக்கிறீர்கள் என்பதைத் தான் முதலில் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் பணப்பங்களிப்பு மட்டும் செய்துவிட்டு, முழுமையாகச் செயற்படுபவரைப் பற்றிக் குறைகூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் உங்கள் பணத்தைக் கையாடினால் அதைப் பற்றிக் குறை கூறலாம். ஆனால் நீங்கள் செயற்பாட்டாளராகச் செயற்படாமல் மற்றவரைப் பற்றி எப்படிக் குறை கூறலாம்?

நீங்கள் கூறுவது போல, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்பின் இது அதிகமாகித்தான் உள்ளது. அதற்குக் காரணம், சமாதானத்திற்குமுன், எமக்கும் தாயகத்திற்குமான தொடர்புகள் அவ்வளவாக இருக்கவில்லை. ஆனால், சமாதானகாலத்தின் போது, அவர்களோடு ஒன்றாக இருந்து பழகிவிட்டு வந்த பிறகு அவர்களின் புரிந்துணர்வும் அதிகமாகிவிட்டது. அதனால்தான், அவர்களால் துணிந்து செயற்பட முடிகிறது. இதற்குக் காரணம், இவர்களில் தாயக அமைப்பினர் வைத்திருக்கும் நம்பிக்கையே. அன்பினால் கொடுக்கும் பரிசுகளைக்கூட இப்படி விமர்சிக்கிறீர்களே?

நல்லவன், நீங்கள் நினைப்பதுபோல, தாயகத்திலுள்ளவர்கள் ஏமாளிகள் அல்ல. யாரை எங்கே வைப்பது என்று அவர்களுக்குத் தெரியும். சமாதானத்திற்கு முன்னர், வெளிநாடுகளில் தங்கள் இராச்சியத்தை நடத்தியவர்களில் பலர் இப்போது இல்லை. எல்லோரும் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போயிருக்கிறார்கள். தாயகத்தில் உள்ளவர்கள் சேர்ட்டுக்கும் மணிக்கூட்டிற்கும் மயங்கிப் போகிறவர்களா? நீங்கள் இப்படிக் கூறுவதன் மூலம், தாயகத்திலுள்ளவர்களை அவமதிப்பது போலவே உள்ளது.

மருதங்கேணி குறிப்பிட்டது போல, பிழைகள் விடுவது மிகவும் சகஜம். ஆனால், அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். உங்கள் இடத்தை நீங்கள்தான் நிர்ணயிக்கவேண்டுமே தவிர, மற்றவர்கள் அல்ல.

சாத்திரி, நீங்கள் சொல்வது போல, எல்லா மக்களும் எமது போராட்டத்திற்கு ஆதரவில்லை. ஏற்கனவே ஆதரவு அளிப்பவர்கள்தான் தொடர்ந்தும் ஆதரவளிக்கிறார்களே தவிர, அனைத்து மக்களும் ஆதரவளிப்பதில்லை. இன்றும்கூட பங்களிப்பு செய்யாத மக்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அதோடு, பங்களிப்பைச் செய்ததோடு தங்கள் கடமை முடிந்தது என்று நினைப்பவர்கள்தான் அதிகமே தவிர, தாங்களும் சேர்ந்து பணியாற்றவேண்டும் என நினைப்பவர்கள் மிகவும் குறைவு. எமது அமைப்பைப் பொறுத்தவரை, அவர்களுடைய செயற்பாடுகளுக்கேற்ப செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படியிருக்கையில், ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்களையும் விலத்தினால் எமது செயற்பாடுகள் முடங்கிப் போகும்.

வணக்கம் தமிழச்சி. எல்லா மக்களும் தாயகப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது ஒரு வெளித் தோற்றமே. இவ்விடயத்தில் உங்கள் கணிப்புத் தவறுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பங்களிப்புச் செய்யாமல் மக்கள் பெருமளவில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. தேசியத்திற்கு மாறான ஒரு சிறு பகுதியினரே அதாவது சிங்கள அரசின் அடிவருடிகளே பங்களிப்பு நிலையிலிருந்து விலகி இருப்போர். நிறையப்பேர் செயற்பாட்டாளர்களாக இயங்க விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுடைய வாழ்வியல், செயற்பாட்டில் ஈடுபட முடியாதவர்களாக மாற்றியிருக்கிறது. இங்கு செயற்பாட்டாளர்களை விலத்துவதற்காக சாத்திரி இக்கருத்தை முன் வைக்கவில்லை என்றே நினைக்கிறேன். முடிந்தவரை செயற்பாட்டாளர்களின் அணுகு முறைகள் பண்பாகவும., விசாலமாகவும் விரிவடைய வேண்டும் என்ற எண்ணப்பாங்கே அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

கல்விமான்களுக்குரிய செயற்பாடுகள் எத்தனையோ உள்ளன. ஆனால் அவற்றைச் செய்வதற்குக் கூட அவர்கள் முன்வருவதில்லை. சமாதான காலத்தில் செய்வதற்குக்கூட முன்வராதவர்கள் போராட்டகாலத்தில் முன்வரவா போகிறார்கள்? பாலசிங்கம் அண்ணாகூட மாவீரர் நாளில் உரையாற்றும்போது, கல்விமான்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தாயகத்தில் படித்து முடித்துவிட்டு வெளிநாடு வந்தவர்கள்கூட, தாயகத்திற்காக பணியாற்ற விரும்புவதில்லை.

இன்று தாயகம் இருக்கும் நிலையில் பாரபட்சம் இன்றி புலம்பெயர் தமிழ்மக்கள் கலங்கி நிற்பது கண்கூடு. இந்தக் காலகட்டத்தில கல்விச் சமூகம் முன்வருவதில்லை என்று நீங்கள் கூறுவது; பொருந்தாமல் இருக்கிறது. கல்விச்சமூகமும் முன்வருகிறார்கள் அவர்களை உரிய முறையில் தேசியம் உள்வாங்க முடியாமல் இடையில் சில செயற்பாட்டாளர்களின் அசமந்தப்போக்கு கல்விச் சமூகத்தை தள்ளி நிற்கும் நிலைக்கு மாற்றுகிறது இதனைக் கட்டாயம் தேசியம் கவனத்தில் எடுக்கவேண்டும்.

இன்னுமொன்றைப் புரிந்து கொள்ளுங்கள். செயற்பாட்டாளர்களைப் பற்றி நீங்கள் குறை கூறுவதாக இருந்தால், முதலில் நீங்கள் எவ்வாறான செயற்பாட்டைச் செய்திருக்கிறீர்கள் என்பதைத் தான் முதலில் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் பணப்பங்களிப்பு மட்டும் செய்துவிட்டு, முழுமையாகச் செயற்படுபவரைப் பற்றிக் குறைகூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் உங்கள் பணத்தைக் கையாடினால் அதைப் பற்றிக் குறை கூறலாம். ஆனால் நீங்கள் செயற்பாட்டாளராகச் செயற்படாமல் மற்றவரைப் பற்றி எப்படிக் குறை கூறலாம்?

அடுத்து தமிழச்சி, ஒரு இடத்தில் பிழை இருக்கிறது என்று சுட்டிக் காட்டுவது என்பது அவ்விடத்தில் உள்ள அக்கறையினால்த்தான். ஆக பொருள் வளத்தை கொடுப்பவர்கள் கேள்விகளைக் கேட்பார்கள். அவர்களுடன் இன்முகத்துடன் உரையாடிப் புரியவைக்க வேண்டியது செயற்பாட்டாளனின் பணி. செயற்பாட்டாளர்களைத் தேசியம் தொண்டனாகக் கருதவில்லை. புலம் பெயர் போராளியாகவே கருதுகிறது. தாயகத்தில் உள்ள போராளிகளைவிட இந்த புலம் பெயர் போராளிகளுக்கே கவனம் அதிகம் வேண்டும். இவர்கள் பாவிப்பது ஆயதமுனைகளை அல்ல அறிவையும், நாவையும் அகஞ்சுருங்கா முறுவலையுமே... இப்பண்பே ஒரு செயற்பாட்டாளனின் பாரிய பலம். தம்பணியின் மேன்மையை முதலில் செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.