Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18.jpg

பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரா??

இந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி

தலைப்பைப் பார்த்ததும் சாத்திரிக்கு என்ன நடந்தது மாற்றுக்கருத்தாளர் என்கிற பெயரிலை கொஞ்சம் வாங்கிக் கொண்டு மற்றப்பக்கம்: தாவிவிட்டாரா?? அல்லது ஏதோ பரபரப்பிற்காக இப்பிடியொரு தலைப்பை வைச்சாரா எண்டு தலையைப் பிய்க்க வேண்டாம். நடந்தது இதுதான்.கடந்த 30.03.08 அன்று ஜெர்மனியில் உள்ள சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் ஜெர்மனியில் கற்றிங்கன்( HATTINGEN )நகரில் ஒரு புத்தக அறிமுக விழா ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர்.அந்தப் புத்தகத்தின் பெயர் நெருப்புப்பூக்கள் .புத்தகத்தினை எழுதியிருந்தவர் மட்டு மாவட்டத்தின் கல்லடி றொபேட் என்பவர்.

இவர் சுமார் எட்டு ஆண்டுகளிற்கு மேலாக சிறீலங்காவின் பூசா சிறையில் வாடுகின்ற ஈழத்தமிழர்களின் விடுதலையை நேசிக்கின்ற ஒரு போராளிக்கலைஞன்.இவரது கவிதைத் தொகுப்பே இந்த புத்தகமாகும்.ஆயுள்தண்டனை பெற்று தனது காலத்தினை சிறையிலேயே கழித்தபடி வாழ் நாளில் விடுதலையாவேனா அல்லது தன்வாழ்வு சிறையிலேயே முடிந்து போகுமா என்கிற கேள்விகளிற்கு விடை தெரியாத பொழுதுகளிலும் தன் உணர்வுகளை கவிதையாய் வடித்து அதனை ஒரு புத்தகமாக்கி அந்தப் புத்தகத்தினை உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் கொண்டு போய் சேர்த்து அதில் வருகின்ற பணத்தினை ஈழத்தில் உள்ள செஞ்சோலை சிறுவர்களின் எதிர் காலத்திற்கு உதவியாக்குவதே அவரது நோக்கமாகும். இதனைப் படிப்பவர்கள் அனைவரிற்கும் அந்தக் கல்லடி றொபேட் என்பரை பற்றியும் அவரது உயரிய நோக்கமும் புரிந்திருக்கும்.இந்தப் புத்தகத்தினை வெளியீடு செய்வதற்கு புலம் பெயர் தேசத்தில் முயற்சிகளை சிலர் எடுத்திருந்த போதும் இதே சர்வதேச புலம் பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பினைச் சேர்ந்த சிலர் முட்டுக் கட்டைகளைப் போட்டு தடுத்துக்கொண்டிருந்தனால் இந்தப் புத்தகம் கால தாமதமாகி கடைசியாய் சுவிஸ் நாட்டில் வேறொரு அமைப்பினரால் வெளியீடு செய்யப்பட்டது.

அதே புத்தகத்திற்குத்தான் புத்தகத்தினை வெளியிட முட்டுக்கட்டை போட்ட அமைப்பினரே ஜெர்மனியில் அறிமுக நிகழ்வினை செய்திருந்திருந்தனர்.அந்த அமைப்பின் தலைவர் ஏலையா முருகதாசன் அவர்கள் விடுமுறையில் வேறு நாட்டிற்கு போகவேண்டி இருந்ததால் உபதலைவரான திருமதி விக்னா பாக்கியநாதன். இவரது பட்டங்கள் (பி.ஏ. மற்றும் கவிதாயினி ). இவர் கலைவிளக்கு என்கிற பத்திரிகையின் ஆசிரியர் மட்டுமல்ல ஜெர்மனியில் தமிழாலயம் பாடசாலையின் ஆசிரியராகவும் இருக்கிறார். பாடசாலைப் பிள்ளைகளிற்காக இலக்கணப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது தலைமையிலேயே அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. புத்தக வெளியீட்டு நாளன்று வேறு இரண்டு புத்தகங்களின்செருகல்களுடன் மூன்று புத்தகங்களின் அறிமுக விழாவாக நடந்தது.சரி இனித்தான் இந்தக் கட்டுரையின் தலைப்பு சம்பந்தமான விடயம்.இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் உரைக்களம் அதாவது பட்டிமன்றம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்தப் பட்டி மன்றத்தின் தலைப்பு பெண்களின் சாதனைகள் மதிக்கப்படுகின்றதா அல்லது மழுங்கடிக்கப்படகின்றதா என்பதே.இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கியும் அதனை ஒழுங்கு படுத்தியும் இருந்தவர் அந்த அமைப்பின் உறுப்பினரும் அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளருமான திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் என்பவர்.

இவரது பட்டங்கள்( ஊடகவியலாளர் மற்றும் கவிதாஞானவரிதிஎன்பன.) ஊடகவியலாளர் என்பதெல்லாம் பட்டமா?? இவர்களின் பட்டங்கள் பற்றிய விபரங்கள் இந்தக் கட்டுரைக்கு எதற்காக என்று நீங்கள் யோசிக்கலாம் கட்டுரையின் இறுதியில் அது உங்களிற்கு புரியும்.இந்தப்பட்டிமன்றத்த

Edited by sathiri

நன்றி சாத்திரி அவர்களே...

இப்படி ஒரு கூட்டம் எல்ல இடமும் இருக்கு... முக்கியமாக தங்களின் 'அறிவை' எல்லாரிற்கும் காட்டிக் கொள்வதற்காகவே எந்த ஒரு அடிப்படை ஆராய்தலும் இன்றி விமர்சிக்க முயல்வார்கள்.

எனக்கு ராதிகா குமாரசமி, பெண் போராளிகள் பற்றியும் அவர்களை புலிகளின் தலைமை பயன்படுத்தும் விதம் பற்றியும் எழுந்தமானமாக தன் போக்கில் கூறியதும், அதற்கு பெண் போராளிகளே அழகாக; அழுத்தமாக பதில் கொடுத்ததும் நினைவிற்கு வருகின்றது

இப்படிப்பட்ட கூட்டத்தை வைத்து நூல் வெளியீடு செய்ய வேண்டிய தலைவிதியா நமக்கு..?

இதைக் கூட்டம் எனறு சொல்லக் கூடாது. நான்கு பேர் சேர்ந்து கொண்டால் எல்லாம் தாமே என நினைப்பவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான். உயர்ந்த ஒரு நோக்கத்திற்காக மனிதாபிமானத்துடன் தனது உழைப்பினை வழங்கிய கல்லடி றொபேர்ட் போற்றுதலுக்குரியவர். இந்தப் புல்லுருவிகளினால் அவரது படைப்பு வெளியிட்டு வைக்கப்பட்ட விடயம் யாவராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமது தேவைக்காக இந்த வெளியீட்டு வைபவத்தினை அவர்கள் உபயோகித்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கூட்டம் எனறு சொல்லக் கூடாது. நான்கு பேர் சேர்ந்து கொண்டால் எல்லாம் தாமே என நினைப்பவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான். உயர்ந்த ஒரு நோக்கத்திற்காக மனிதாபிமானத்துடன் தனது உழைப்பினை வழங்கிய கல்லடி றொபேர்ட் போற்றுதலுக்குரியவர். இந்தப் புல்லுருவிகளினால் அவரது படைப்பு வெளியிட்டு வைக்கப்பட்ட விடயம் யாவராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமது தேவைக்காக இந்த வெளியீட்டு வைபவத்தினை அவர்கள் உபயோகித்திருக்கலாம்.

இறைவன் இந்தபுத்தக வெளியீட்டினை அவர்கள் தங்கள் தேவைகளிற்காக பயன் படுத்தியிருக்கலாம் அல்ல பயன் படுத்தியுள்ளனர் அதுதான் அவர்களது நோக்கம்.

தேசியத் தலைவர் அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்றவாறு எந்தப் பெண்ணும் (பெண் போராளிகளைத் தவிர) எதனையும் இதுவரை செய்யவில்லை என்பது மட்டும் விளங்குது. இப்படியானவர்களால்தான், உண்மையாக உழைக்கிற பெண்களையும் அவர்கள் நம்புவது இல்லை. புலம்பெயர் நாடுகளில் பெண்களின் பங்களிப்பு ஐந்து வீதம்கூட இல்லை. அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால், சமத்துவம் என்று மட்டும் வாதாடுவார்கள். முதலில் நீங்கள் ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கள். பின்னர் மற்றவர்களைப் பற்றிக் குறை கூறலாம்.

ஒரு சந்தேகம் சாத்திரி: நீங்கள் மேற்கூறிய நபர் தாயகத்திற்குச் சென்று ஏதாவது பணியாற்றியிருக்கிறாரா?

இறுதியில் கருத்துக்கூறிய பட்டிமன்றத்தின் நடுவரான திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் எங்கள் தேசியத் தலைவர் அவர்களே மாமனிதர் என்கிற கெளரவத்தினை வழங்கும் பொழுது மனிதர் என்று ஆண்களை கெளரவிக்குமுகமாகவே வழங்குகிறாராரே தவிர மாமனிசி என்று பெண்கள்சார்பாக கெளரவிக்கப்படவிலை என்று கருத்தினைக்கூறினார் அப்படியானால் பெண்கள் சாதனைகளை எமது தேசியத் தலைவர் மழுங்கடிக்கின்றார் என்று கோசல்யா சொர்ணலிங்கம் சொல்கின்றாரா??என்று பார்வையாளர் வரிசையிலிருந்த பலர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள சிலர் தலையிலடித்துக் கொண்டனர்.

ஏய் அறிவிலிகளே! உங்களையெல்லாம் புத்தக வெளியீட்டு மேடையில் யார் ஏற்றியது!!!

மனிதகுலம் என்பதற்கு ஆங்கிலத்தில் MANKIND என்கிறோம் இது ஆண், பெண் இருபாலாரையும் குறிப்பதாகும்.

WOMANKIND என்று தனியாக சொல்வதில்லை.

அதுபோல் தமிழிலும் "அற்புதமான மனிதர்கள்", "விசித்திரமான மனிதர்கள்" என்றெல்லாம் சொல்கிறோம். இவையும் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது.

அது போல் மாமனிதர் என்ற சொல்லையும் இருபாலாருக்கும் பொதுவானதாகவே எடுக்க வேண்டும்.

போகின்ற போக்கை பார்த்தால் Bachelor of Science, Bachelor of Arts என்பதில் Bachelor என்பதற்கு ஆண்பால் சார்ந்த Unmarried Man என்று அர்த்தம் வருவதால் பெண்களுக்கு தனியாக Maiden of Science, Maiden of Arts என்று பட்டங்களின் பெயர்களை மாற்றி கேட்பார்கள் போலிருக்கிறது

:lol::):)

இந்த முட்டையில் மயிர் பிடுங்கும் வேலையை எல்லாம் விட்டு விட்டு, உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் வேலையையாவது குறைந்தபட்சம் செய்யுங்கள். ஐரோப்பாவில் சில புலம்பெயர் மூளைசாலிகளும் தேவிகளும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதையே பெருமையாக நினைக்கிறது!

***** குறிப்பிட்ட சொல் ஒன்று நீக்கப்பட்டுள்ளது - யாழ்பாடி

நீக்கப்பட்ட சொல் திருத்தப்பட்டுள்ளது! புலத்தில் தாய்மொழியை மறந்து ஆட்டம் போடும் பேய்களை மூதேவிகள் என்றால் தப்பே கிடையாது

- நன்றி **வெற்றிவேல்**

Edited by vettri-vel

ஓம் வெற்றிவேல்... இப்ப கியூமன்ஸ்ரைட்ஸ், கியூமானிசம் எண்டு எல்லாம் இருக்கிது. இதுகளையும் கியூவுமன்ரைட்ஸ், கியூவுமனிசம் எண்டு எல்லாம் மாத்த வேண்டி இருக்கும். மனிதன் எண்டுறது ஆம்பளைகள மட்டுமா குறிக்கிது? அப்பிடி எண்டால் இனி தலைவர் பெண்களுக்கு மாமனிதை எண்டு பட்டம் குடுக்கலாம்.

இப்ப எனக்கு சந்தேகம் என்ன எண்டால் வெற்றிவேல் எண்டுறது ஆண்பெயரா? பெண்பெயரா? முரளி எண்டுறது ஆண் பெயரா? பெண்பெயரா?

பொண்ணுங்கள் எல்லாத்திலையும் சம உரிமை கேட்கிறீனம். அதுக்கு இப்பிடி பெரிய பெரிய லெவலில கதைச்சால் தானே விளம்பரம் வரும். விசயத்த சாதிக்கலாம்.

அறிவிலி எண்டு ஒரு சொல் எழுதி இருக்கிறீங்கள். இது லி எண்டு முடியுறபடியால் பெண்களை மட்டும்தான் குறிக்கிதுபோல?

இதமாதிரி..

அறிவாளி எண்டுற சொல் வாளி எண்டு முடியுறபடியால் ஆண்களைமட்டும் தான் குறிக்கிது போல?

என்ன இருந்தாலும் பழங்காலத்தில திட்டமிட்டு பெண்களை அடக்கி வைக்கிறதுக்காக உருவாக்கப்பட்ட சொற்கள், இலக்கணங்கள் பற்றி சிம்பிளா எடுக்க ஏலாது.

இதுவும் ஒருவகை ஸ்டீரியோடைப்..

அதுபோல் தமிழிலும் "அற்புதமான மனிதர்கள்", "விசித்திரமான மனிதர்கள்" என்றெல்லாம் சொல்கிறோம். இவையும் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது.

அது போல் மாமனிதர் என்ற சொல்லையும் இருபாலாருக்கும் பொதுவானதாகவே எடுக்க வேண்டும்.

எடுக்கவேண்டுமல்ல.. அது இருபாலானருக்கம் பொதுவான சொல். எடுக்கவேண்டும் என்று கூறுவது அது ஒரு பாலைமட்டும் குறிக்கிறது ஆயினும் இவ்விடயத்தில் மட்டும் விதிவிலக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பது போன்று உள்ளது. இருபாலானருக்கும் பொதுவான ஓர் சொல்லை எவ்வாறு எடுக்கவேண்டும் என்று கூறுவது.

மனிதன் - பலர்பால் ஒருமை

மனிதர் - பலர்பால் பன்மை..

'கள்' விகுதி சேர்த்து மனிதர்கள் என்று பன்மையைக் குறிப்பதும் உண்டு!

மற்றும்

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பட்டங்கள் (பி.ஏ. மற்றும் கவிதாயினி )

இம்பூட்டு.. கதைக்கினமே.. உந்தக் கவிதாயினி பட்டம் எப்படி.. எவரால்.. எந்தப் பல்கலைக்கழகம் அல்லது கல்விசார்துறையில் இருந்து பெற்றவை.. என்பதை மீட்டிப் பார்த்து மக்களுக்கு விளக்கலாமே.

மாமனிதர் என்பது.. ஒரு பொதுப்பால் சொல். ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.

புகைச்சல் என்னவென்றால்.. இதுவரைக்கும் தமிழீழ தேசிய விடுதலைக்கு தமிழ் தேசியத்துக்கு நேரடியாக விடுதலைப்புலிகள் அமைப்பு சாராது செயலாற்றினர் என்பதற்காக மாமனிதர் விருதை பெண்களில் எவரும் பெறவில்லை என்பதுதானே தவிர.. வேறல்ல.

( இதுவரை மாமனிதர் விருதுபெற்றோர்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%...%AE%A4%E0%AF%81 )

போராளிகளாக உள்ள பிள்ளைகளை விட்டால்.. அதற்கு வெளியே பெண்களின் தமிழ் தேச விடுதலை சார்ந்த உணர்வு என்பது.. புலம்பெயர்ந்து தான் வசதியாக வாழ்வதும் பிள்ளைக்குட்டி போடுறதும் என்று தான் முதன்மை பெற்றிருக்கிறது.

நான் கண்கூடாகப் பார்கிறேன்.. பொதுவாக தமிழர் வீடுகளில்... ஆண்கள் தான் அதிகம் தாயக நிகழ்வுகளை அறிவதிலும்.. தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். பெண்களில் பலர்.. தாயக நினைவையே இழந்து.. நடக்கும் சம்பவங்கள்.. அரசியல் மாற்றங்கள்.. நிகழ்வுகளைக் கூட அறிய விருப்பப்படாதவர்களாக இருப்பதை கண்டிருக்கிறேன்..!

அண்மையில் முகமாலைச் சமர் தொடர்பாக ஒரு செய்தியைச் சொன்னபோது 75 வயதுப் பாட்டி அதை கரிசணையோடு கேட்டு.. பொடியளுக்கு இழப்பில்லாமல் வெற்றி வராதோ மோன.. என்று ஆதங்கப்படுறார். ஆனால் அதே இடத்தில் இருந்த ஒரு இளம் பெண்.. சன் ரீவி சீரியலில் மூழ்கிக் கிடக்கிறார். இத்தனைக்கும் அவர் தன்னை ஒரு மருத்துவப்பட்டதாரி என்று பீற்றிக் கொள்பவர்..!

இப்படி இருக்குது நிலை..! இந்த நிலை மாறனும்.. மாமனிதர் விருதுகளைப் பெறக் கூடிய அளவுக்கு பெண்களும் (போராளிகளை குறிப்பிடவில்லை. பல பெண் போராளிகள் மிக அர்ப்பணிப்புள்ள மனித குலமே வியத்தகு சாதனைகளை செய்துள்ளனர்.. செய்யவும் தயாராக உள்ளனர்.) குறிப்பாக புலம்பெயர்ந்த பெண்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும். தமிழ் தேசியம்.. தேச விடுதலை என்பது அவர்களின் உயிர் மூச்சாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு துறையில் பெற்ற பட்டங்களை சனத்துக்கு பட்டியல் இட்டுக் காட்டவும் புகழ்தேடவும் உடுபுடவைகளை மேடையேற்றவும் என்ற நிலைக்கு அப்பால்.. சுயநலம் சுயலாபம் கருதாது உழைக்க இவர்கள் தயாரா ..???! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பணம்,புகழ், பதவி என்று வரும்போது கூட்டாகச் சேர்ந்து அனுபவிக்கும் அஙகத்தவர்கள் எல்லாம் பிரச்சனையென்று வரும்போது அடுத்தவரைக் கை காட்டிவிட்டு நழுவி விடுகின்றனர். அதுதான் இங்கே புலம்பெயர் தேசங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றது.

சாத்திரியார் கூறிய இந் நிகழ்ச்சியில்கூட யாராவது ஒருத்தர் பொறுப்பாகப் பதிலலித்திருந்தால் இக் கட்டுரைகூடத் தவிர்க்கப் பட்டிருக்கலாம். :lol::)

உலகின் பெரும்பாலான மொழிகள் ஆணாதிக்கம் கொண்டதாக இருக்கின்றன என்பது உண்மை. ஆணைக் குறிக்கும் பதத்திற்குள் பெண்களை அடக்கி விடுகின்ற தன்மை பல மொழிகளில் இருக்கின்றது. வெற்றிவேலும் சில உதாரணங்களை சொல்லியிருக்கிறார்.

ஆனால் இது மொழியின் குற்றம். இதைப் பற்றி சம்பந்தப்பட்டவர் கேள்வி எழுப்பியிருந்தால் அது நியாயமாக இருந்திருக்கும். தேசியத் தலைவரை குற்றம் சொல்லப் போய் தன்னுடைய அறியாமையை அவரே காட்டிக் கொடுத்து விட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்றவாறு எந்தப் பெண்ணும் (பெண் போராளிகளைத் தவிர) எதனையும் இதுவரை செய்யவில்லை என்பது மட்டும் விளங்குது. இப்படியானவர்களால்தான், உண்மையாக உழைக்கிற பெண்களையும் அவர்கள் நம்புவது இல்லை. புலம்பெயர் நாடுகளில் பெண்களின் பங்களிப்பு ஐந்து வீதம்கூட இல்லை. அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால், சமத்துவம் என்று மட்டும் வாதாடுவார்கள். முதலில் நீங்கள் ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கள். பின்னர் மற்றவர்களைப் பற்றிக் குறை கூறலாம்.

ஒரு சந்தேகம் சாத்திரி: நீங்கள் மேற்கூறிய நபர் தாயகத்திற்குச் சென்று ஏதாவது பணியாற்றியிருக்கிறாரா?

தமிழிச்சி அந்த நிகழ்வில் நடுவராக கலந்துகொண்ட கோசல்யா சொர்ணலிங்கம் தாயகத்தில் போய ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தார். பிறகு அதை வைச்தே ஜேர்மனியில் உள்ளவர்களிடம் தனக்கு வன்னியோடை நல்ல தொடர்பு எண்டு கதை விட்டுக் கொண்டு திரிஞ்சவர். ( இவர் எழுதின கவிதைப் புத்தகத்தை படிச்ச பல சிங்கள இராணுவத்தினர் இராணுவத்தை விட்டு தப்பியோடியதாக கனவிலை கண்டனான்.) :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழிச்சி அந்த நிகழ்வில் நடுவராக கலந்துகொண்ட கோசல்யா சொர்ணலிங்கம் தாயகத்தில் போய ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தார். பிறகு அதை வைச்தே ஜேர்மனியில் உள்ளவர்களிடம் தனக்கு வன்னியோடை நல்ல தொடர்பு எண்டு கதை விட்டுக் கொண்டு திரிஞ்சவர். ( இவர் எழுதின கவிதைப் புத்தகத்தை படிச்ச பல சிங்கள இராணுவத்தினர் இராணுவத்தை விட்டு தப்பியோடியதாக கனவிலை கண்டனான்.) :lol::lol::lol:

என்னத்த சொல்லுறது? மனிதர் என்பது இருபாற் பொதுச்சொல் என்ற அடிப்படை தமிழ் இலக்கண அறிவே இல்லாத ஒரு பெண்ணின் அறியாமைதான் இது.

ஆனா இது அந்த பெண்ணின் தனிப்பட்ட கருத்துதானே?

அதுக்காக அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லா பெண்களையும் வாருவது எனக்கு என்னமோ உங்கட ஆண்மேலாதிக்க மனோநிலைதானோ என்று யோசிக்க வைக்குது.

புலத்தில தாயகத்துக்கு ஆதரவா எவ்வளவோ பெண்கள் வேலை செய்யினம்.

அந்த பெண்மணியாவது கவிதை தொகுப்பு வெளியிட்டா.....ஆண் சிங்கங்கள் நாம் அதுகூட செய்யவில்லையே?

சும்மா முகமாலை அது இது என்று பேசிவிட்டு குவாட்டர் அடித்து குப்புற கவிழ்வதுதானே நமது வழக்கம்?

  • கருத்துக்கள உறவுகள்

மூடத்தனமும், ஊமைத்தனமும், இயலாமையும் நிறைந்த ஒரு பெண்கள் சமுதாயத்தை விவேகமானவர்களாகவும், பேச்சு வல்லாண்மை மிக்கவர்களாகவும், இயலும் என்ற ஒற்றைச் சொல்லுக்கு உரித்துடையவர்களாகவும் ஆக்கிய பெருமை எங்கள் மேதகு தலைவர் அவர்களேயே சாரும்.

பெண் போராளிகளை உதாரணம் காட்டவேண்டிய அவசியம் இங்கு இல்லை. போராட்டத்திற்கு அப்பால் நின்று எத்தனை பெண்கள் நாட்டிற்காக, எங்கள் மக்களுக்காக, தங்களை வருத்தி சேவையாற்றுகிறார்கள்? ஏன் இந்தப் பட்டிமன்றத்தில் குற்றச் சாட்டை வைத்தவர் தன்னும் தாயகத்திற்காக எந்தளவு தூரம் தன்னை ஒருத்து தன் பணியாற்றி இருக்கிறார்? ஆண்களுக்குச் சமமாக இவ்விடயங்களில் பெண்களின் பங்கு பாதியளவுகூட இல்லாமல் இருக்கும்போது எதன் அடிப்படையில் மாமனிதர் கௌரவத்தைப் பெண்கள் எதிர்பார்க்கலாம்? முதலில் உங்கள் உங்கள் சுயதேவைகளில் இருந்து வெளியே வாருங்கள் தாயகம் நோக்கிய உங்கள் பங்களிப்புகள், பயணங்களை விரிவுபடுத்துங்கள். எத்தனை காலத்திற்குத்தான் ஆண்கள் எம்மை முன்வரவிடுகிறார்கள் இல்லை என்று குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு, ஆடத் தெரியாதவர்கள் அரங்கம் பிழையென்று கதைப்பதைப் போன்று நொண்டிச் சாக்குச் சொல்வீர்கள்? முதலில் உங்களைச் சுற்றி நீங்களே போட்டிருக்கும் விலங்குகளைக் கழற்றி வெளியே வாருங்கள். அழகைக் காட்டிலும் அறிவைக் காட்டுங்கள். சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட தங்களுக்கு என்று ஒரு வட்டத்தைப் போட்டு குண்டுச்சட்டி குதிரையோட்டலிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கும்போது, தாயகம் நோக்கிய பொதுநலவாழ்வில் பெண்கள் பங்கு கேள்விக்குறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாமனிதர் மதிப்பளிப்பு என்பது அளப்பெரிய சேவைகளால் கட்டப்பட்டிருக்கும் உத்தமச்சொல். சுயத்தை வருத்தி இனத்தை மேன்மை செய்யும் மனிதர்களுக்காக தேசியத்தால் வழங்கப்படும் மதிப்பு. அச்சொல்லை எவரும் இலகுவாக அடையமுடியாது.

எதற்கும் சமூகத்தின் மீது சாட்டுகளைச் சொல்லி பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் பலபெண்களை அறிந்தவள் என்ற வகையில் முற்போக்குச் சிந்தனை என்று பீற்றிக் கொள்ளும் பெண்களையும் தெரிந்தவள் என்ற வகையிலும் என்னுடைய கருத்துக்களை இங்கே வைத்துள்ளேன். என்னுடைய குற்றச்சாட்டை பிழையென்று வாதாடுவபர்கள் இங்கு வந்து விவாதிப்பார்களானால் தொடர்ந்தும் என்னுடைய வாதத்தை முன்வைக்க ஆர்வமாக உள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.