Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்மணமாய் நிற்பவர்களே!

Featured Replies

தமிழுக்காய், தமிழ்மண்ணுக்காய் தற்கொடை தந்த தமிழ் சகோதரியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திய குட்டிரேவதியின் கவிதைக்கான பதில்

அம்மணமாய் நிற்பவர்களே!

சினிமாக் குப்பைகளிலும் சின்னத்திரை குழறல்களிலும்

சிந்தனையைத் தொலைத்துவிட்டு குழாயடிகளிலேயே வீரங்காட்டும்

விவஸ்தையில்லா வீணர்களுக்கு தாய்மண் காத்தலையே

விரதமாக்கி வித்தைகள் புரிவது வீணானதாய்ப் படலாம்

கட்டிளம் காளைகளின் கடைக்கண் பார்வைக்காய்

காலமெல்லாம் காத்திருப்பதும் களியாட்டங்களில் கரைவதுமே

கன்னியர்க்கு விமோசனம் என்றெண்ணும் சிங்காரிகளுக்கு

களத்துத் தியாகங்களும் தீரங்களும் ஏளனங்களாகலாம்.

அந்நிய மொழியும் அடுத்தவன் கலாச்சாரமுமே கண்ணில் தெரிய

அடுத்தவனின் அழுக்குகளையே அரவணைத்து ஆராதித்து

அடுக்களையும் அரட்டையுமே அகிலமான ஆரணங்குகளுக்கு

அடுத்தவனுக்காய வாழ்வதென்பதும் அர்த்தமற்றதாய் படலாம்

பெண்களின் அந்தரங்கங்களையும் ஆபாசங்களையும் பேசுபொருளாக்க

பேனாவைப் பிடித்துள்ள எழுத்துலக விபச்சாரிகளுக்கு

மண்ணையும் மக்களையுமே மனத்தில் வைத்துள்ள

மகளிரின் மகத்துவம் மலினமாய்த் தெரியலாம்

பெண்ணடிமை எதிர்ப்பினை பேச்சுக்கு மட்டுப்படுத்திப்

போதனைகள் செய்கின்ற பேதைகளுக்கும் பெருச்சாளிகளுக்கும்

சமர்க்களத்தில் சமமாய் சரித்திரம் சமைக்கும்

சாதனை நாயகிகளும் சாதாரணமாய்த் தெரியலாம்

தண்ணீருக்குக்கூட அடுத்தவனை இரந்து நின்றாலும்

தமிழன் பொங்கக்கூடாது என்றெண்ணும் தந்திரக் காரருக்குத்

தலையாட்டிக் கொண்டு சங்கப் பெண்ணின் வீரத்தை

தாலாட்டுக்கே மட்டுப்படுத்தியவருக்கும் தற்கொடை பரிகாசமாயிருக்கலாம்

அம்மணமாய் நிற்பதே அழகென்று அடம்பிடிப்பவர்களுக்கு

ஆடையின் அவசியத்தை உரைப்பதிலே என்ன பயன்?

அவர்கள் அம்மணமாகவே நிற்கட்டும் - ஆனால்

அடுத்தவன் இகழாமல் வாழநினைப்பவர்கள் ஆடைகளை நெய்வோம்.

Edited by Manivasahan

யார் மணி குட்டிரேவதி? அவ என்ன கவிதை எழுதினா?

  • தொடங்கியவர்

குட்டிரேவதி (இந்தியா)

தற்கொலை வீராங்கணை

அங்கையற்செல்வி

உன் அந்தரங்க உடையைக் களைந்து

பூட்டிவைக்கப் போகிறாய் உடலாய்

நிர்வாணம் உடையாகி இருந்ததை

சரி செய்துகொண்டது கண்ணாடி

சீருடை அணியும் வேடம் தொடங்கியது

ஆயுதங்களும் தற்கொலை அங்கியும்

அங்கங்களாகி இயங்கின

இன்னும் பதினைந்து நிமிடங்களே

ஊரும் வாழ்க்கையின் பல்லக்கு

தலைவனின் ஆணை

அவனிரு கரங்களுக்கிடையே வலையிழையாகி

உன்னிதயத்தை ஊசல் குண்டாக்கியது

திருமண அரங்கம் பிரவேசித்தாய்

தரிக்காது இடம் மாறிக்கொண்டேயிருந்தனர்

எல்லோரும்

அவரவர் வாழ்வின் வரைபடத்துக்குள்

கடைசிக் கால்நிமிடத்தின் மீதேறி நின்றாய்

மூச்சடக்கி அலறினாய் நீயே உணரும்முன்

அதிர்ச்சியின் வெடி எல்லோர் கண்களிலும்

உன் நீலமுகம் புகைப்படமான நொடி

உடல் முழங்கி வெடித்தாய் செல்வி...

செய்தியானது முப்பது பலி என்று

வணக்கம் முரளி

இதுதான் குட்டிரேவதியின் கவிதை

(முரளி உங்களுடன் தனிமடலில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அஞ்சல் பெட்டி நிரம்பியிருப்பதாய் செய்தி வருகிறது.)

மணி உங்கள் கவிதை மிக அருமையாக உள்ளது. சூப்பரோ சூப்பர்...

-----------------

நான் மின்னஞ்சலில் உங்களை தொடர்புகொள்கின்றேன். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் அந்தக் குட்டி..ரேவதியின்ரை கவிதை நானும் படிச்சனான்.அடுத்த பெண்கள் சந்திப்பிலை ஏதாவது எடுத்துவிட வேணும்தானே அதுதான் ஒத்திகை பாக்கிறார் போலை . அனாலும் அவருக்கு பதில் கவிதையில் ஆடையைப்பற்றி நினைவு படுத்திய உங்களை வன்மையாகக் கண்ணடிக்கிறேன். ^_^ சே கண்டிக்கிறேன். :D

  • தொடங்கியவர்

மணிவாசகன் அந்தக் குட்டி..ரேவதியின்ரை கவிதை நானும் படிச்சனான்.அடுத்த பெண்கள் சந்திப்பிலை ஏதாவது எடுத்துவிட வேணும்தானே அதுதான் ஒத்திகை பாக்கிறார் போலை . அனாலும் அவருக்கு பதில் கவிதையில் ஆடையைப்பற்றி நினைவு படுத்திய உங்களை வன்மையாகக் கண்ணடிக்கிறேன். ^_^ சே கண்டிக்கிறேன். :D

ம்ம்ம் என்ன செய்யிறது சாத்திரி

தாங்கள் அம்மணமாய் நிண்டாலும் பறவாயில்லை. மற்றாக்களும் அம்மணமாய் நிக்க வேணும் எண்டு அடம் பிடிக்கிற கூட்டத்தைப் பற்றி என்னத்தைச் சொல்லுறது :)

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிரேவதி (இந்தியா)

தற்கொலை வீராங்கணை

அங்கையற்செல்வி

உன் அந்தரங்க உடையைக் களைந்து

பூட்டிவைக்கப் போகிறாய் உடலாய்

நிர்வாணம் உடையாகி இருந்ததை

சரி செய்துகொண்டது கண்ணாடி

சீருடை அணியும் வேடம் தொடங்கியது

ஆயுதங்களும் தற்கொலை அங்கியும்

அங்கங்களாகி இயங்கின

இன்னும் பதினைந்து நிமிடங்களே

ஊரும் வாழ்க்கையின் பல்லக்கு

தலைவனின் ஆணை

அவனிரு கரங்களுக்கிடையே வலையிழையாகி

உன்னிதயத்தை ஊசல் குண்டாக்கியது

திருமண அரங்கம் பிரவேசித்தாய்

தரிக்காது இடம் மாறிக்கொண்டேயிருந்தனர்

எல்லோரும்

அவரவர் வாழ்வின் வரைபடத்துக்குள்

கடைசிக் கால்நிமிடத்தின் மீதேறி நின்றாய்

மூச்சடக்கி அலறினாய் நீயே உணரும்முன்

அதிர்ச்சியின் வெடி எல்லோர் கண்களிலும்

உன் நீலமுகம் புகைப்படமான நொடி

உடல் முழங்கி வெடித்தாய் செல்வி...

செய்தியானது முப்பது பலி என்று

வணக்கம் முரளி

இதுதான் குட்டிரேவதியின் கவிதை

(முரளி உங்களுடன் தனிமடலில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அஞ்சல் பெட்டி நிரம்பியிருப்பதாய் செய்தி வருகிறது.)

மணிவாசகன், குட்டிரேவதியிடம் இக்கவிதையைப்பற்றி விளக்கம் கேட்க வேண்டும்.

எங்கள் தாயகத்தின் தற்கொடைப்போராளிகள் எவரும் திருமண அரங்கத்தில் நுழைந்து வெடித்ததாக நான் அறியவில்லை. தமிழ் மக்களுக்கு மிகத் துயர்களைத் தரக்கூடிய அரசபடை யந்திரங்கள் மீது மாத்திரமே தாயகத்தை மீட்கும் தற்கொடைப் போராளிகள் தம்மை வெடியாக்கி அவ்வியந்திரங்களை அழிக்கிறார்கள். பெண்களுக்காக துணிவாகக் குரல் கொடுக்கும் குட்டிரேவதிக்கு ஈழத்தில் தமிழ் பெண்கள் படும் துயர் தெரியாது போகுமென்று நான் நினைக்கவில்லை. அப்பட்டமாக ஆண்களினால் பெண்கள் படும் அவஸ்தையை எழுதுகோலுக்குள் புகுத்தும் குட்டிரேவதி தமிழீழப்பகுதியில் இராணுவ வல்லுறவுகளால் பாதிக்கபட்ட பெண்களை, அவர்களின் வேதனையை தன் எழுதுகோலுக்குள் புகுத்தத் தெரியாதவரா? ஒரு தற்கொடைப் பெண் போராளியைப்பற்றி எழுதமுன் அப்பெண் போராளி எப்படி உருவாகிறாள் என்பதை குட்டிரேவதி மட்டுமல்ல யாராக இருந்தாலும் அவசியம் அறிந்து எழுதுங்கள்.

குட்டிரேவதியின் துணிவு எனக்குப் பிடிக்கும். "முலைகள்" என்ற நூலை வெளியீடு செய்ததன் மூலம் குட்டிரேவதி சமூகத்தீயில் எரிந்ததையும் அறிவேன். குட்டிரேவதி போன்றோர் எங்களின் தாயகப் போராட்டத்தை கட்டாயம் நன்கு அறிந்து வைத்திருக்கவேண்டும் என்பது என் அவா. ஒரு வேளை குட்டிரேவதி இக்களத்தில் நாங்கள் எழுதுவதை வாசிக்கக்கூடும். அப்படி குட்டிரேவதி வாசிப்பாரானால் அவருக்கு சொல்ல என்னிடம் இருப்பது தயவு செய்து எங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் பெண்ணியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் வர்க்கத்தின் பொய்மைகளுக்குக் காது கொடுக்காதீர்கள் என்பதே. இது ஒரு தமிழ்ப்பெண்ணாக குட்டிரேவதியின் துணிவை ரசிக்கும் இரசிகையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

Edited by valvaizagara

  • தொடங்கியவர்

மணிவாசகன், குட்டிரேவதியிடம் இக்கவிதையைப்பற்றி விளக்கம் கேட்க வேண்டும்.

எங்கள் தாயகத்தின் தற்கொடைப்போராளிகள் எவரும் திருமண அரங்கத்தில் நுழைந்து வெடித்ததாக நான் அறியவில்லை. தமிழ் மக்களுக்கு மிகத் துயர்களைத் தரக்கூடிய அரசபடை யந்திரங்கள் மீது மாத்திரமே தாயகத்தை மீட்கும் தற்கொடைப் போராளிகள் தம்மை வெடியாக்கி அவ்வியந்திரங்களை அழிக்கிறார்கள். பெண்களுக்காக துணிவாகக் குரல் கொடுக்கும் குட்டிரேவதிக்கு ஈழத்தில் தமிழ் பெண்கள் படும் துயர் தெரியாது போகுமென்று நான் நினைக்கவில்லை. அப்பட்டமாக ஆண்களினால் பெண்கள் படும் அவஸ்தையை எழுதுகோலுக்குள் புகுத்தும் குட்டிரேவதி தமிழீழப்பகுதியில் இராணுவ வல்லுறவுகளால் பாதிக்கபட்ட பெண்களை, அவர்களின் வேதனையை தன் எழுதுகோலுக்குள் புகுத்தத் தெரியாதவரா? ஒரு தற்கொடைப் பெண் போராளியைப்பற்றி எழுதமுன் அப்பெண் போராளி எப்படி உருவாகிறாள் என்பதை குட்டிரேவதி மட்டுமல்ல யாராக இருந்தாலும் அவசியம் அறிந்து எழுதுங்கள்.

குட்டிரேவதியின் துணிவு எனக்குப் பிடிக்கும். "முலைகள்" என்ற நூலை வெளியீடு செய்ததன் மூலம் குட்டிரேவதி சமூகத்தீயில் எரிந்ததையும் அறிவேன். குட்டிரேவதி போன்றோர் எங்களின் தாயகப் போராட்டத்தை கட்டாயம் நன்கு அறிந்து வைத்திருக்கவேண்டும் என்பது என் அவா. ஒரு வேளை குட்டிரேவதி இக்களத்தில் நாங்கள் எழுதுவதை வாசிக்கக்கூடும். அப்படி குட்டிரேவதி வாசிப்பாரானால் அவருக்கு சொல்ல என்னிடம் இருப்பது தயவு செய்து எங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் பெண்ணியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் வர்க்கத்தின் பொய்மைகளுக்குக் காது கொடுக்காதீர்கள் என்பதே. இது ஒரு தமிழ்ப்பெண்ணாக குட்டிரேவதியின் துணிவை ரசிக்கும் இரசிகையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

வணக்கம் சஹாறா அக்கா,

உண்மையில் இவர்கள் விடயங்களை அறியாமல் இருந்தால் அவர்களுக்கு நிலமையை எடுத்துரைத்து அவர்களிடம் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் இவர்கள் வேண்டுமென்றே ஒரு திட்டத்தோடு செயற்படுபவர்கள். அதனால் தமதிஸ்டப்படி கற்பனைக் கதைகளைச் சோடித்து விடுபவர்கள்.

இவர்கள் தூங்குபவர்கள் அல்ல எழுப்பி விடுவதற்கு. தூங்குவது போல நடிப்பவர்கள்.

அம்மணமாய் நிற்பதே அழகென்று அடம்பிடிப்பவர்களுக்கு

ஆடையின் அவசியத்தை உரைப்பதிலே என்ன பயன்?

அவர்கள் அம்மணமாகவே நிற்கட்டும் - ஆனால்

அடுத்தவன் இகழாமல் வாழநினைப்பவர்கள் ஆடைகளை நெய்வோம்.

அம்மணமாய் நிற்பவர்கள் என்டு தொடங்கி நன்னா அம்பணபடுத்து போட்டியள் மணி அத்தான் :) ..பதில் கவிதையில் பல பதில்கள்..அதிலும் கடசி இந்த வரிகள் அருமை.. ^_^

அது சரி நம்ம குரு கேட்ட மாதிரியே யாரந்த குட்டிரேவதி?? :D ...நான் உந்த பெயரை ஒரு நாளும் கேள்விபடவே இல்ல படத்தில நடிக்கிற ரேவதி தான் நேக்கு தெரியும்... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

வணக்கம் ஜமுனா,

எனக்கும் இது யாரெண்டு தெரியாது. இந்தக் கவிதையைக் கண்ட பிறகு சில பேரிட்டை விசாரித்ததில் பல தகவல்கள் கிடைத்தன.

ஆனால் அவை ஊர்ஜிதப்படுத்தப்படாதவை என்பதால் இங்கே எழுதுவது அழகல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி ரேவதியுடன் தொடர்புகளுக்கு:

kuttirevathi@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின்; ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

“உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான்”

தமிழ்நதி: இப்போதிருக்கும் இதே வீச்சுடன் பெண்கள் எழுதிக்கொண்டிருந்தால் அடுத்தடுத்த தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

குட்டி ரேவதி:கண்டிப்பாக நம்புகிறேன். இப்போது நாம் எழுதிக்கொண்டிருக்கும் இந்த உடல் அரசியல் என்பதனோடு மட்டும் இந்த வீச்சு தேங்கிப்போய் நின்றுவிடாது. அதற்கான மாற்றத்தை இப்போது உணரமுடிகிறது. முன்னரே நான் குறிப்பிட்டதுபோல முன்பு சிவசங்கரி,வாஸந்தி போன்ற மேட்டிமைசாதியினர்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் விளிம்புநிலையில் இருக்கிறவர்களும் அதிகமாக எழுதுகிறார்கள். வேறு வேறு பின்னணிகளில் இருந்து எழுத வருகிறவர்கள் தாம் சார்ந்த பின்னணி சார்ந்த அரசியல் விடயங்களையும் எழுதக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இது இப்போதிருப்பதிலிருந்து வேறொரு கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

இன்னுமொரு விடயம் என்னை மிகவும் பாதித்தது. அதாவது, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. எப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் நான் இந்தப் பிரச்சனையை முன்வைத்துப் பேசப் பின்னின்றதில்லை. அதைப் பற்றி நான் பேச நினைக்கிறபோதெல்லாம் அப்படியொரு விஷயம் இருக்கிறதா என்ன என்று கேட்பார்கள். உதாரணமாக இப்போது நொய்டாவில் நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். நான் இதைக் குறித்து சில களஆய்வுகள் செய்திருக்கிறேன். ஐந்து ஆறு வயதுடைய பெண்குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியபின் கொலை செய்வதென்பது சாதாரணமாக நடந்திருக்கிறது. கருப்பை சீரழிந்த நிலையிலெல்லாம் நான் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய பாலியல் அடையாளத்தைக் கூடப் புரிந்துகொள்ளவியலாத குழந்தையை உபயோகித்துக்கொள்வது பல வீடுகளில் நடந்துகொண்டுதானிருக்கிறது. குழந்தையானது அதை உடல்ரீதியாக அசௌகரியமாக உணருமேயன்றி என்ன நடந்ததென்று சொல்லக்கூடத் தெரியாமலிருக்கும். தவிர, தந்தை போன்ற தமது நெருக்கமானவர்கள் இவ்விதம் நடந்துகொள்ளும்போது அதை மறுத்து ஒன்றும் சொல்ல முடிவதுமில்லை. இதுகூட ஆணாதிக்கத்தினுடைய ஒரு வடிவம்தான். பெண்ணியத்தினுடைய நீட்சி எவ்விதம் அமையவேண்டுமெனில், குழந்தைகள் மீதான இந்தப் பாலியல் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய அளவிற்கு வளரவேண்டும். ஆண் தனது பாலியல் ரீதியான அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய ஒரு உயிராகப் பெண் எப்போதும் இருப்பது என்பது விசனத்திற்குரியது.

என்னை ஒரு கூட்டத்திலே ஒரு ஆண் கேட்கிறார்: “இந்தியாவில் எத்தனையோ வகையான பிரச்சனைகள் இருக்கின்றன. அணுவாயுதப் பிரச்சனை இருக்கிறது. பயங்கரவாதம்,முதலாளித்துவம்,ஏ

காதிபத்தியம் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விடவா பெண்ணியம் உங்களுக்குப் பெரிதாகப் போய்விட்டது…?”என்று. அதற்கு நான் சொன்னேன் “நீங்கள் சொன்னவையெல்லாம் பிரச்சனைகள்தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், பெண்ணியம் என்பது பிரச்சனை கிடையாது. அதுவொரு கோட்பாடு,பயிற்சி முறை. ஆணும் பெண்ணும் இணக்கமாக வாழ்வதற்கான ஒரு பாதையை உருவாக்குவது. அது எப்படிப் பிரச்சனையாகும்…?”என்று கேட்டேன். முதலாளித்துவத்தைச் செயற்படுத்துவதில் பெண் எங்கு வருகிறாள் என்பது எனக்குப் புரியவேயில்லை. அதற்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம்…? எங்கோ ஓரிடத்தில் ஒரு மேசையைச் சுற்றியமர்ந்து நான்கு ஆண்கள் திட்டமிடுவதில் நமக்கென்ன பங்கு..?

இன்னொரு விடயம், நான் இந்தியாவிற்கான பெண்ணியம் என்று சொல்வது வந்து தலித் பெண்ணியம். தலித் பெண்ணியம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான பெண்ணியம் என்று பொருளல்ல. ‘சாதீயமற்ற பெண்ணியம்’என்பதைத்தான் சொல்ல வருகிறேன். எல்லா மட்டங்களிலும் சாதியினால் அறையப்பட்டிருக்கும் பெண்களை விடுதலை செய்வதுதான் ‘தலித் பெண்ணியம்’என்பதன் பொருள். இந்தியாவில் பெண்ணியம் என்று உருவானால் அது எல்லா அடுக்குகளிலும் இருக்கும் பெண்களை விடுவிப்பதாக அமையவேண்டும். ஒரு பெண் விடுதலை அடையும்போது பிரமையிலே கட்டுண்டிருக்கும் ஒரு ஆணும் விடுதலை அடைவதாகவே நான் கருதுகிறேன்.

“நீங்கள் தலித் பெண்களுக்காகப் பரிந்து பேசுகிறீர்கள். மேல்சாதிப் பெண்களுக்கு ஒடுக்குமுறை கிடையாதா….?” என்று மேல்சாதியைச் சார்ந்த பெண் படைப்பாளிகள் ஒருதடவை பாமா என்ற எழுத்தாளரைக் கேட்டபோது அவர் சொல்லுகிறார்: “மேல்சாதிப் பெண்களுக்கு ஒரு பக்கத்திலிருந்து அதாவது மேல்சாதி ஆண்களிடமிருந்து மட்டும்தான் ஒடுக்குமுறை வருகிறது. ஆனால், தலித் பெண்கள் மீது மூன்று விதமான ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. ஒன்று, மேல்சாதி ஆண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. இரண்டாவது,மேல்சாதி பெண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. மூன்றாவது, கீழ்ச்சாதி ஆண்கள் தங்களது பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை.”இந்த அடிநிலை ஒடுக்குமுறையிலிருந்து முதலில் விடுபட்டால்தான் எல்லா அடுக்குகளிலிருக்கும் பெண்களுக்கும் விடுதலை என்பது சாத்தியமாகும் என்பது எனது கருத்தாகும். அதற்கு சாதியம் என்ற தளையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையைப் பார்க்கும்போது, முதலில் சாதிய ரீதியான பிரச்சனையாகவும் அதற்குப் பிறகு பாலியல் ரீதியான பிரச்சனையாகவும் அதனையடுத்து வர்க்கரீதியான பிரச்சனையாகவும் அதை அணுகுவதே சிறப்பு. ஆனால், எல்லாம் தலைகீழாகப் பார்க்கப்படுவதனால்தான் இங்கே தமிழ்நாட்டிலே எந்தவொரு முழுமையான மாற்றமும் நடக்கமாட்டேனென்கிறது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் அதற்கெல்லாம் தாங்கள்தான் காரணமென திராவிட இயக்கங்கள் பேசிக்கொள்கின்றன. பெரியார் கூட கடவுள் வழிபாட்டை மறுப்பதனூடாகத்தான் பகுத்தறிவைப் பார்த்திருக்கிறார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடயங்களை முன்வைக்கவில்லை என்று இன்று தலித் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்.

தமிழ்நதி:பெண்கள் குறித்த விழிப்புணர்வை அவர் பரப்பவில்லையா…?

குட்டி ரேவதி:ஆமாம் சொன்னார்… ‘பெண்கள் தங்களுடைய கருப்பையை அறுத்தெறிந்து விட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்’என்று சொன்னார். ஆனால், என்ன மாற்றம் வந்தது…? குஷ்புவை விளக்குமாற்றைக் காட்டி விரட்டினார்கள். திராவிட இயக்கங்கள் மேடையில் பேசும்போதெல்லாம் நன்றாகத்தான் பேசுவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் - ஒரு தனிப்பட்ட பெண்ணின் மனத்தில் மாறுதல் வந்துவிடக்கூடாதென்பதில் அவர்களும் கவனமாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், தாங்களெல்லாம் நல்லதொரு வாழ்க்கை வாழ்வதாகத்தான் அவர்களுடைய மனைவிமாரெல்லாம் நம்பிக்கொண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையைத் தளர்த்தும் எந்தவொரு விடயத்தையும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

தமிழ்நதி:உங்களுடைய ஒரு கவிதைத் தொகுப்பிற்கு ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’எனத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’தொகுப்பிலும் நான் வாசித்தவரையில் ‘தனிமை’, ‘உள் தனிமை’ என்ற இரண்டு கவிதைகள் இருக்கக் கண்டேன். பெண்களின் தனிமை என்பது உங்களை மிகவும் உறுத்துவதாக அமைந்திருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

குட்டி ரேவதி:நீங்கள் ஒருவர்தான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். எனக்கு என்றில்லை, நீங்களே கூட கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னீர்கள்… ‘நான் மிகவும் தனிமையில இருந்தேன்’ என்று. பொதுவாக ஆண்களால் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரே வெளி தனிமைதான். வீட்டின் ஏதாவது அறைகளிலொன்றில் குறிப்பாக சமையலறையில் பெண்களாகிய நாம் இருப்போம். அதுதான் வழமை. எல்லாப் பெண்களும் அளவில்லாத ஒரு தனிமையில் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. இது என்னுடைய ஒரு கண்டுபிடிப்பு என்றுகூடச் சொல்லலாம். ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’என்பது என்னுடைய ஒற்றைக்குரல் அல்ல. நான் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்கும் பெண்களுடைய வெளி தனிமையால் மூழ்கடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கடந்து போய்விடக்கூடாதென்பதற்காக ஆண்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சமையலறை என்ற வெளி. ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’என்று அம்பைகூட ஒரு தொகுப்பு வெளியிட்டிருந்தார்கள். ஆணாதிக்கக் கட்டமைப்பின் இறுக்கத்தினால் உங்களுக்குக் கிடைக்கிற ஒரு தனிமை. ‘உடலே இல்லாத வெளியில் நாங்கள் மிதந்துகொண்டிருந்தோம்’என்ற

Edited by nunavilan

சுய விளம்பரத்துக்காக ஈழப்போராட்டத்தையும் அதன் தியாகங்களையும் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்பவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவே செய்கின்றது.

கண்டனம் செய்ய விரும்புபவர்கள் தனிமடலூடாக தொடர்புகளை செய்து அவருக்கு பதிலை எழுதுவதே நல்லது. இவர்களை கவனத்தில் எடுக்காது விடுவது அதை விட நல்லது. அல்லது அதற்கொரு எல்லையை வகுத்து கருத்தை பரிமாறலாம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் அல்லவா நடக்கின்றது. அவர்களின் செவ்விகள் இணைப்புகளை இங்கு கொடுப்பதை தவிருங்கள் ஏனெனில் அவர்கள் இவ்வாறான செய்காரியங்கள் மூலம் அதைதான் எதிர்பார்க்கின்றார்கள். மற்றபடி அவர்களுக்கு ஈழத்தில் நடக்கும் இன அழிப்பு தெரியாத ஒன்று அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன், நீங்கள் கூறுவதில் ரொம்பவும் நியாமிருக்கிறது. அதனால்தான் நான் குட்டி ரேவதியைப்பற்றி ஒன்றுமே குறிப்படாமல் அவரின் மின்னஞ்சல் விலாசத்தைமட்டும் இணைத்தேன். மனிதர்கள் ஒரேவிடயத்தை வேறு வேறு கண்ணோட்டங்களில் பார்ப்பது இயல்பே ஆயினும் நாம் அவர்களுக்கு இங்கு இலவச விளம்பரங்களை உருவாக்கும் ஆக்கங்களை வெட்டி ஒட்டி நேரத்தை வீணடிப்பது நிச்சயம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

  • தொடங்கியவர்

பணத்திற்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் தமிழரின் தேசியப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்களைப் பிரச்சாரப்படுத்தும் விதமான விடயங்களையோ பேட்டிகளையோ இந்தப் பகுதிக்குள் தயவு செய்து இணைக்காதீர்கள்

  • 2 years later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தற்செயலான பதிவு என்று நான் நினைக்கவில்லை, மணிவாசகன்!

எங்கள் துயர் துடைக்கத் தங்கள் உடல்களையே ஆயுதங்களாக்கிய அந்த புனித ஆத்மாக்களின் மீது கரி பூசும் வேலை அண்மையில் கனடாவின் அரசியல்வாதி ஒருவராலும் செய்யப் பட்டது!

உணர்வுகளுக்கு அப்பால் பட்ட அந்தத் தியாகிகளின் செயல்களைக் கொச்சைப் படுத்த, இவர்களுக்கு எந்த வித அருகதையும் கிடையாது!!!

இது ஏதோ ஒரு திட்டமிட்ட வகையில் நடை பெறுகின்றது போல உள்ளது!

தங்கள் பதில் கவிதை அழகு!!! அது அவர்களுக்குச் சாட்டையடியாக வலிக்கட்டும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.