Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மௌனங்கள் கலைகின்றன.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மௌனங்கள் கலைகின்றன.

கடந்துவந்த வாழ்வியலை மீட்டிப் பார்க்கும் ஒரு தொடர்பதிவு இந்த மௌனங்கள் கலைகின்றன. எனக்குள் புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் வரிகளாக்கி இந்த பதிவை படைக்க உள்ளேன்.

முகட்டு ஓடு

பத்து வயது தாண்டினாலே பெண்பிள்ளைகளை வீடுகளில் அடக்க ஒடுக்கமாக இரு என்று பெரியவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது தாயகத்தில் வளர்ந்த அனைவருக்கும் விளங்கும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் ஆண்சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்ததாலோ... அல்லது ஆண்பிள்ளைகள் போன்றே அரைக்காற்சட்டை சேர்ட்டையே அதிகம் அணிவித்து வளக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பெண்பிள்ளையின் அடக்க ஒடுக்கம் என்பது எனக்கு என் சுதந்திரத்தை முடக்குவதாக இருந்தது. இருந்தாலும் வீட்டில் நான் கடைக்குட்டியானதாலும், ஒரே பெண்பிள்ளையானதாலும் நான் செல்லப் பிள்ளையாகியிருந்தேன். அதுவே பெண் என்ற விம்பத்திற்கு திணிக்கப்படும் ஒடுக்கங்களை எனக்கு இல்லாமல் ஆக்கியது. சமூகம் எதிர்பார்க்கும் அடக்க ஒடுக்கங்கள் என்னிடம் இல்லாததால் அயலவர்கள் ஆண்சிங்கி என்ற பட்டத்தையும் எனக்கு வழங்கியிருந்தார்கள். இதை ஏன் எழுதுகிறேன் என்றால் என் 'முகட்டு ஓடு" நினைவுகளை உங்களுடன் பகிரும் போது சில யதார்த்தங்கள் அதனை வாசிக்கும் உங்களைத் துணுக்குறச் செய்யும்.

வாடைக்காற்று வீசும் காலம், நானும் என் இளைய அண்ணனும் நாளில் முக்காலவாசி நேரம் குடியிருப்பது வீட்டின் முகட்டு ஓட்டில்தான். பன்னிரண்டு பதிமூன்று வயதில் நான் மட்டுந்தான் என்வீட்டு முகட்டு ஓட்டின் அரசி. அண்ணன்மார் வெளியே உலாவப் போய்விடுவார்கள். எனக்கு விளையாட வழியில்லை அதனால் முகட்டு ஓடு எனக்கு பிரியமான தோழியாக மாறியது.

கிணற்றடி மூலை மதிலில் பாய்ந்து ஏறி கப்பித்தூணில் காலூன்றி தண்ணீர் தாங்கியில் ஏறி மினசார வயர்களின் கீழாக புகுந்து பிளாட்டிற்குத் தாவினால் வீட்டு ஓட்டிற்கு ஏறிவிடலாம்.

முகட்டு ஓட்டில் நின்று சூழ உள்ளவற்றை பார்த்து ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்.

வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்களும் அதன் ஓலைகளில் நர்த்தனமிடும் காற்றும், மாமரத்தில் இருந்து துணைகளைத் தேடிக் கூவும் குயில்களும், பட்டதென்னம் பொந்தில் குடியிருக்கும் கிள்ளைக் குடும்பங்களும், ஒரு திசையில் நிறைந்த வாழைகளும், பிரிதொரு பக்கம் கண்சிமிட்டும் மலர்ச்சோலையும் அதில் தேனெடுக்கும் சிட்டுக்களும், பிளாட்டில் படந்த மல்லிகைகொடியின் மலர்களில் மயங்கிய வண்டுகளும், இன்னொரு திசையில் வான் முட்டும் கடலும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத காட்சிகள். கோயிற்கோபுரம், வாசிகசாலை, வீதிவெளி என்று ஓரிடத்தில் நின்றே ரசிக்க வரந்தந்ததுதான் இந்த முகட்டு ஓடு, அதிலும் வாடைக்காற்றுக் காலமென்றால் வெளவால் ஏற்றுவது எனக்குப் பிரியமானது. அம்மாவின் தையல் இயந்திரத்தில் கொழுவியிருக்கும் இருக்கும் நூல் காற்றில் பறக்கும் வெளவாலுக்கும் எனக்குமான உறவுக் கொடியாக மாறியிருக்கும். வாடைக்காற்று அற்ற காலத்தில் முகட்டு ஓடு கடலையும், வானையும், முகிலின் ஓவியங்களையும் நான் இருந்து ரசிக்கும் சிம்மாசனமாக இருந்தது.

இவையெல்லாம் என் பதின்ம வயதின் ஆரம்ப நாட்கள். ஒரு நாள் அதிர்ந்த பெருவெடியின் ஓசை கேட்டு அகதிகளாக ஓடிவிட்டோம். இருவாரங்களாக எங்கள் வீட்டை வந்து பார்க்கமுடியா நிலை.... எங்கள் அயலில் உள்ள வீடுகளை இராணுவம் எரித்துவிட்டதாகத் தகவல்கள் காதிற்கு எட்ட எட்ட அம்மா அரற்றத் தொடங்கி விட்டார். அம்மாவை ஆசுவாசப்படுத்த எங்களுடைய வீட்டுக்கு ஒன்றும் நடக்கவில்லையாம் என்று அப்பாவும் , அண்ணன்மாரும் பொய் புனைந்தார்கள் தற்காலிகப் பொய் எத்தனை நாளைக்கு?

வீட்டிற்கு வந்தோம்....

வீட்டைப்பார்த்ததும் அம்மா கதறி அழுதார்.

அப்பாவும் , அண்ணன்மாரும் கண்கள் கலங்கக் கலங்கத் துடைத்தபடி நிற்க, நான் மட்டும் உறைத்துப் போனேன். பிளாட்டில் படர்ந்த மல்லிகைக் கொடி கருகிக் கிடந்தது. என் வீட்டின் மலர்சோலையும் கரிய புகைபடிந்து பச்சையத்தைத் தொலைத்திருந்தது. தென்னோலைகள் தீயால் எழுந்த வெம்மையில் பொசுங்கி இருந்தன.

என்னுடைய சிம்மாசனம்.....

எரிந்த வீட்டின் சாம்பலுக்குள் தன் செம்மையை இழந்து கரிக்கட்டிகளாகச் நொறுங்கிக் கிடந்தது...

எரிந்த வீட்டில் மெல்லக் கால் வைத்து நடந்தபோது காற்பதிவுகளில் வெம்மை தன்னை உணர்த்தியது. நொறுங்கிய என் சிம்மாசனத்தைத் தொட்டுத் தடவி கைகளில் தூக்கிய போது அதன் அடியில் எனது பாடசாலைப் புத்தகங்களும், வெள்ளைச் சீருடையும் பாதி எரிந்தும், கருகியும் தீக்காயங்களுடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன. உறைத்துப் போன எனக்கு அவற்றின் பரிதாபப்பார்வை புரியவில்லை.

என் முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் தகர்ந்ததோடே என் பள்ளிவாழ்வும் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுப் போனது. அன்று இராணுவத்தால் எரியூட்டித் தகர்க்கப்பட்டது என்முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் மட்டுமல்ல, என் கல்விக் கண்ணின் கனவுகளுந்தான்.

Edited by valvaizagara

ஈழத்தமிழர்கள் அனைவர் மனதிலும் மாறா ரணங்களாய் யுத்தத்தின் வடுக்கள்...

முற்றமெல்லாம் சுற்றித் திரிந்து புழுதி அழைந்து கூடித் திரிந்த இளமைக் காலத்தின் வசந்தம் எங்கள் குழந்தைகளுக்கும் இல்லாமல் போய்விட்டது.

காலாற நடந்து கோயில் கும்பிட்டு கதை பேசும் பாக்கியம் எங்களைப் பெற்றவர்களுக்கும் இல்லாமல் போய் விட்டது.

அளவான உழைப்பு. அமைதியான வாழ்க்கை என்பதும் எங்களுக்கு இல்லாமல் போய் விட்டது.

இவை எல்லாம் மாறும் நாள் எப்போது?????

நல்லதொரு அனுபவப்பகிர்வு சகீரா. நானும் அங்க இருந்தகாலத்தில பொழுதுபோகாட்டிக்கு வீட்டுக்குமேலதான் வாசம் செய்யுறது. மேல இருந்து பார்த்தால் உலகமே வித்தியாசமா அழகா இருக்கும். நான் இரவில மேல ஏறி வானத்தை பார்த்துக்கொண்டு இருப்பன். அழகிய காட்சிகள்... ஆனால் எங்க போனாலும் நுளம்புத்தொல்லை. இஞ்ச அது இல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் எமக்கென ஒரு நாடு அங்கீகரிக்கப்படும் வரைக்கும் துன்பங்கள் தொடர்கதைதான்.

முரளி நீங்களும் வீட்டுக்கு மேல் ஏறியிருந்தபேர்வழியா? என்ன ஒற்றுமை..... மன்னிக்கவும் நீங்கள் இரவில் ஏறியிருந்து விண்மீன்களையும் வெண்ணிலாவையும் ரசித்திருக்கிறீர்கள். நான் பகலில் கடலையும் , நீலவானையும், மேகச்சுருள்களையும் ரசித்திருக்கிறேன்.

மணிவாசகன் முரளி இருவருக்கும் எனது நட்புக்கலந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் கலைத்த என் அன்புத்தோழியே உன் எரிந்த வீட்டின் சாம்பலுக்குள் தம் செம்மையை இழந்து நொறுங்கிக் கிடந்தது உன் வீட்டு முகட்டு ஓடு மட்டுமல்ல உன் இனமைக் கோலங்களும் என்பது இறுதிவரிகளில் ஏக்கமுடன் வெளிப்படுகிறது. தொடர்ந்தும் கலையட்டும் உன் மௌனங்கள் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அந்த அனுபவத்தில் சிட்னியில் கூரையில் ஏறினா ,பக்கத்துவீட்டுக்காரன் பொலிஸுக்கு சொல்லிபொட்டான். காரணம் அவனின்" பிரைவசி"(privacy)இல்லையாம்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தான் பாக்கிறன்.. கதைகளுக்கு தலைப்பு வைக்கிறது என்றால்.. மெளனம் பேசியது.. மெளனம் கலைகிறது.. ஒரு மெளன கீதம்.. இப்படி.. அடுக்கிட்டே போறேளே.. எப்பதான் முடிக்கப் போறேள்...! :wub::wub:

Edited by nedukkalapoovan

:wub: மனசு பாரமாகிவிட்டது..
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி என்னைப்பற்றி அதிகம் அறிந்தவரான உங்கள் அங்கீகரிப்புக்கு நன்றி உரைத்தேன்.

புத்தன் நீங்களுமா? பார்க்கப்போனால் எங்களில் அதிகமானவர்கள் முகட்டு ஓட்டில் ராச்சியம் நடாத்தியவர்கள் போல் உள்ளது. நன்றி புத்தன்.

தூயா நிகழ்வு பாரமானதுதான் ஆனால் நினைவுச்சுழியில் இந்த முகட்டு ஓடு இன்னும் முறுவலிக்கிறது.

நெடுக்காலபோவான் மௌனம் கலைக்கிறபோது அதற்கு மௌனங்கள் கலைகின்றன என்று பெயரிடாமல் சத்தங்கள் வளர்கின்றன என்றா பெயர் வைக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரவில மேல ஏறி வானத்தை பார்த்துக்கொண்டு இருப்பன்.

முரளி.. :unsure:

அப்பவே இப்பிடியா..? :unsure:

எந்த ஊரு என்றாலும் நம்ம ஊருபோலாகுமா? எங்கு புலம்பெயர்ந்து எவ்வளவூ வசதியா வாழ்ந்தாலும் தாயகவாழ்வின் சுகம்.......... அது ஒரு கனாக்காலம்தான்............ ஒவ்வொரு நினைவலையில் நனையூம்போதும் துவண்டுபோகாமல் மீண்டும் எழுவோம்............ எம் வாழ்வை நாமே தீர்மானிப்போம் என்ற புத்துணர்வூ பெறுவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அம்பலத்தார்.

  • 3 weeks later...

வாழ்ககையில் வற்றாத நினைவுகள் என்றும் எம் மனக்கண்களில் சித்திரங்களாக மலரும்....! எந்தத் தோல்வியும் நெஞ்சு பொறுக்காத வேதனையும் தம்மோடு அதற்குச் சமமான அல்லது அதைவிடப் பெரிய வெற்றியை சுமந்தே வருகின்றன...! கதையடல் பிரமிக்க வைக்கிறது....!

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின், எழுத்தில்... ஒரு வீச்சு இருக்கும்.

உங்கள் மௌனங்களை தொடருங்கள்.

உண்மை தான், தொடங்கள் சகாரா!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை! நாங்கள் செய்த புண்ணியம் போலும்! நீங்கள் தப்பிப் பிழைத்தது!

நாங்களும் முகடு ஏறின காலம் பார்த்து, மூத்திரக் குழவியளுக்கும் அந்த ஆசை வந்திருக்க வேண்டும்!

பிறகென்ன, முகட்டுக்குப் போன எங்களை அவை கலைக்க, ஓடு பார்த்து இறங்க வேண்டிய தேவையே எங்களுக்கு இருக்கவில்லை!

மிகுதி, உங்கள் கற்பனைக்கு!!!

நீதியில்லாதது என்று நீங்கள் நம்புவதை, எதிர்க்கும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் வாழ்கின்றீர்கள், சகோதரி!

இது எங்கள் மாவீரர்களுக்கும் பொருந்தும்!!!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின், எழுத்தில்... ஒரு வீச்சு இருக்கும்.

உங்கள் மௌனங்களை தொடருங்கள்.

நன்றி தமிழ்சிறீ....எழுத்தில் வீச்சு என்று நீங்கள் குறிப்பிடுவது எந்தவகைக்குள் அடக்கக்கூடியதாக அடையாளம் காணுகிறீர்கள் தமிழ்சிறீ... ஏன் கேட்கின்றேன் என்றால் எழுதுபவரைக்காட்டிலும் வாசிக்கும் வாசிப்பாளனே எழுத்தின் வகையை சரியாக இனங்காணமுடியும்..

உண்மை தான், தொடங்கள் சகாரா!

நன்றி அலைமகள்..திண்ணையில் உங்களிடம் இன்று மனந்திறந்து பேசினேன்.ஆறுதலாக இருந்தது அதற்காகவும் நன்றி உரைக்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை! நாங்கள் செய்த புண்ணியம் போலும்! நீங்கள் தப்பிப் பிழைத்தது!

நாங்களும் முகடு ஏறின காலம் பார்த்து, மூத்திரக் குழவியளுக்கும் அந்த ஆசை வந்திருக்க வேண்டும்!

பிறகென்ன, முகட்டுக்குப் போன எங்களை அவை கலைக்க, ஓடு பார்த்து இறங்க வேண்டிய தேவையே எங்களுக்கு இருக்கவில்லை!

மிகுதி, உங்கள் கற்பனைக்கு!!!

நீதியில்லாதது என்று நீங்கள் நம்புவதை, எதிர்க்கும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் வாழ்கின்றீர்கள், சகோதரி!

இது எங்கள் மாவீரர்களுக்கும் பொருந்தும்!!!

நன்றி புங்கையூரான்.

இப்படியா யாழில் நீங்களாகவே வாக்குமூலம் கொடுப்பது?....... இனி இந்த யாழ்க்களக்கண்மணிகளுக்கு அல்வா கிடைத்தமாதிரித்தான் உங்கள் நிலையை கற்பனையில் எண்ணிப்பார்த்து நான் சிரிக்க வீட்டில் என்னை விசித்திரமாகப்பார்க்கிறார்கள்.... பார்த்துக்கொண்டே இருங்கள் இனி நீங்கள் படப்போகும் பாட்டை...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறீ....எழுத்தில் வீச்சு என்று நீங்கள் குறிப்பிடுவது எந்தவகைக்குள் அடக்கக்கூடியதாக அடையாளம் காணுகிறீர்கள் தமிழ்சிறீ... ஏன் கேட்கின்றேன் என்றால் எழுதுபவரைக்காட்டிலும் வாசிக்கும் வாசிப்பாளனே எழுத்தின் வகையை சரியாக இனங்காணமுடியும்..

ஒரு வரியில் சொன்னால்....

உங்களது, மனம் திறந்த.. வஞ்சகம் இல்லாத ஆவேச(கோப) எழுத்துக்கள் பிடிக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அக்கா தொடரை எழுதாமல் விட்டு,விட்டீர்கள் ?தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க ஆவலாக உள்ளது

தங்களின் முகட்டோடு பதிவினை வாசிக்கும் போது.... எனக்கு ஞாபகத்துக்கு வந்தது எங்கள் ஊரின் "பட்ட சீசன்" தான். வீட்டு ஓட்டில் ஏறி நின்று பட்டம் விட..... அம்மா கீழிருந்து புறுபுறுக்க... :D அப்பா தூரத்தில் வருவது கண்ணில் பட ... :o அப்படியே பட்டத்தைப் போட்டுவிட்டு சட்டென்று குதித்து நல்ல பிள்ளை மாதிரி ............ :lol::rolleyes::lol:

அக்கா....... தொடர்ந்து பதியுங்கள்! எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றோம்!

  • கருத்துக்கள உறவுகள்

மௌனங்கள் கலைகின்றன.

கடந்துவந்த வாழ்வியலை மீட்டிப் பார்க்கும் ஒரு தொடர்பதிவு இந்த மௌனங்கள் கலைகின்றன. எனக்குள் புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் வரிகளாக்கி இந்த பதிவை படைக்க உள்ளேன்.

முகட்டு ஓடு

பத்து வயது தாண்டினாலே பெண்பிள்ளைகளை வீடுகளில் அடக்க ஒடுக்கமாக இரு என்று பெரியவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது தாயகத்தில் வளர்ந்த அனைவருக்கும் விளங்கும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் ஆண்சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்ததாலோ... அல்லது ஆண்பிள்ளைகள் போன்றே அரைக்காற்சட்டை சேர்ட்டையே அதிகம் அணிவித்து வளக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பெண்பிள்ளையின் அடக்க ஒடுக்கம் என்பது எனக்கு என் சுதந்திரத்தை முடக்குவதாக இருந்தது. இருந்தாலும் வீட்டில் நான் கடைக்குட்டியானதாலும், ஒரே பெண்பிள்ளையானதாலும் நான் செல்லப் பிள்ளையாகியிருந்தேன். அதுவே பெண் என்ற விம்பத்திற்கு திணிக்கப்படும் ஒடுக்கங்களை எனக்கு இல்லாமல் ஆக்கியது. சமூகம் எதிர்பார்க்கும் அடக்க ஒடுக்கங்கள் என்னிடம் இல்லாததால் அயலவர்கள் ஆண்சிங்கி என்ற பட்டத்தையும் எனக்கு வழங்கியிருந்தார்கள். இதை ஏன் எழுதுகிறேன் என்றால் என் 'முகட்டு ஓடு" நினைவுகளை உங்களுடன் பகிரும் போது சில யதார்த்தங்கள் அதனை வாசிக்கும் உங்களைத் துணுக்குறச் செய்யும்.

வாடைக்காற்று வீசும் காலம், நானும் என் இளைய அண்ணனும் நாளில் முக்காலவாசி நேரம் குடியிருப்பது வீட்டின் முகட்டு ஓட்டில்தான். பன்னிரண்டு பதிமூன்று வயதில் நான் மட்டுந்தான் என்வீட்டு முகட்டு ஓட்டின் அரசி. அண்ணன்மார் வெளியே உலாவப் போய்விடுவார்கள். எனக்கு விளையாட வழியில்லை அதனால் முகட்டு ஓடு எனக்கு பிரியமான தோழியாக மாறியது.

கிணற்றடி மூலை மதிலில் பாய்ந்து ஏறி கப்பித்தூணில் காலூன்றி தண்ணீர் தாங்கியில் ஏறி மினசார வயர்களின் கீழாக புகுந்து பிளாட்டிற்குத் தாவினால் வீட்டு ஓட்டிற்கு ஏறிவிடலாம்.

முகட்டு ஓட்டில் நின்று சூழ உள்ளவற்றை பார்த்து ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்.

வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்களும் அதன் ஓலைகளில் நர்த்தனமிடும் காற்றும், மாமரத்தில் இருந்து துணைகளைத் தேடிக் கூவும் குயில்களும், பட்டதென்னம் பொந்தில் குடியிருக்கும் கிள்ளைக் குடும்பங்களும், ஒரு திசையில் நிறைந்த வாழைகளும், பிரிதொரு பக்கம் கண்சிமிட்டும் மலர்ச்சோலையும் அதில் தேனெடுக்கும் சிட்டுக்களும், பிளாட்டில் படந்த மல்லிகைகொடியின் மலர்களில் மயங்கிய வண்டுகளும், இன்னொரு திசையில் வான் முட்டும் கடலும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத காட்சிகள். கோயிற்கோபுரம், வாசிகசாலை, வீதிவெளி என்று ஓரிடத்தில் நின்றே ரசிக்க வரந்தந்ததுதான் இந்த முகட்டு ஓடு, அதிலும் வாடைக்காற்றுக் காலமென்றால் வெளவால் ஏற்றுவது எனக்குப் பிரியமானது. அம்மாவின் தையல் இயந்திரத்தில் கொழுவியிருக்கும் இருக்கும் நூல் காற்றில் பறக்கும் வெளவாலுக்கும் எனக்குமான உறவுக் கொடியாக மாறியிருக்கும். வாடைக்காற்று அற்ற காலத்தில் முகட்டு ஓடு கடலையும், வானையும், முகிலின் ஓவியங்களையும் நான் இருந்து ரசிக்கும் சிம்மாசனமாக இருந்தது.

இவையெல்லாம் என் பதின்ம வயதின் ஆரம்ப நாட்கள். ஒரு நாள் அதிர்ந்த பெருவெடியின் ஓசை கேட்டு அகதிகளாக ஓடிவிட்டோம். இருவாரங்களாக எங்கள் வீட்டை வந்து பார்க்கமுடியா நிலை.... எங்கள் அயலில் உள்ள வீடுகளை இராணுவம் எரித்துவிட்டதாகத் தகவல்கள் காதிற்கு எட்ட எட்ட அம்மா அரற்றத் தொடங்கி விட்டார். அம்மாவை ஆசுவாசப்படுத்த எங்களுடைய வீட்டுக்கு ஒன்றும் நடக்கவில்லையாம் என்று அப்பாவும் , அண்ணன்மாரும் பொய் புனைந்தார்கள் தற்காலிகப் பொய் எத்தனை நாளைக்கு?

வீட்டிற்கு வந்தோம்....

வீட்டைப்பார்த்ததும் அம்மா கதறி அழுதார்.

அப்பாவும் , அண்ணன்மாரும் கண்கள் கலங்கக் கலங்கத் துடைத்தபடி நிற்க, நான் மட்டும் உறைத்துப் போனேன். பிளாட்டில் படர்ந்த மல்லிகைக் கொடி கருகிக் கிடந்தது. என் வீட்டின் மலர்சோலையும் கரிய புகைபடிந்து பச்சையத்தைத் தொலைத்திருந்தது. தென்னோலைகள் தீயால் எழுந்த வெம்மையில் பொசுங்கி இருந்தன.

என்னுடைய சிம்மாசனம்.....

எரிந்த வீட்டின் சாம்பலுக்குள் தன் செம்மையை இழந்து கரிக்கட்டிகளாகச் நொறுங்கிக் கிடந்தது...

எரிந்த வீட்டில் மெல்லக் கால் வைத்து நடந்தபோது காற்பதிவுகளில் வெம்மை தன்னை உணர்த்தியது. நொறுங்கிய என் சிம்மாசனத்தைத் தொட்டுத் தடவி கைகளில் தூக்கிய போது அதன் அடியில் எனது பாடசாலைப் புத்தகங்களும், வெள்ளைச் சீருடையும் பாதி எரிந்தும், கருகியும் தீக்காயங்களுடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன. உறைத்துப் போன எனக்கு அவற்றின் பரிதாபப்பார்வை புரியவில்லை.

என் முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் தகர்ந்ததோடே என் பள்ளிவாழ்வும் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுப் போனது. அன்று இராணுவத்தால் எரியூட்டித் தகர்க்கப்பட்டது என்முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் மட்டுமல்ல, என் கல்விக் கண்ணின் கனவுகளுந்தான்.

இங்கே எல்லாம் குறைந்த பட்ச வீடு கட்டவே .. 2 1/2 லட்ச ரூபாய் கொட்டவேண்டியுள்ளது.. ரொம்ப கொடுமை சகோதரி :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாரா அக்கா உங்கள் எழுத்தால் அழ வைத்துவிட்டீங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடி இப்பாவாது மௌனம் கலைந்ததே....................................

  • 6 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/22/2011 at 3:06 PM, aswini2005 said:

சகாரா அக்கா உங்கள் எழுத்தால் அழ வைத்துவிட்டீங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி அஸ்வினி2005

On 11/25/2011 at 8:40 AM, புலிக்குரல் said:

அப்பாடி இப்பாவாது மௌனம் கலைந்ததே....................................

நன்றி புலிக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.