Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே!

இந்த யாழ்க்களத்தில் பொதுவாக பெண்களைப்பற்றியே கவிதைகள் எல்லாம் வர்ணிக்கின்றனவே எப்போதாவது பெண்கள் மனந்திறந்து ஆண்களை நோக்கி தங்கள் கவிதையை வரைவதில்லை என்ற குறைபாடுகள் நிறையவே இருக்கின்றன. இது யாழுக்குள் மட்டுமல்ல எல்லாவிடத்திலும் உண்டு. இந்தக்களத்திற்குள்ளேயே, ஆண்களை வைத்துக் கவிதை எழுதுங்கள் என்று யாரோ கேட்டதாக ஞாபகம். வாசித்துவிட்டு உங்களுடைய உண்மையான விமர்சனத்தை தாருங்கள் நண்பர்களே!

rain-1.jpg

பூக்களுக்கு வாசம் உண்டு கண்ணா உன்னைப்போல் - என்

பாக்களுக்குள் வாசம் செய்யும் உயிரே நீதானே!

கூகிலுக்குள் தேடிப் பார்த்தேன் அன்பே உன்முகத்தை - வந்த

கோபத்தாலே சினந்தது உள்ளம் அதுவே உன் இல்லம்.

கண்ணில் வந்து மின்னல் வெட்டிக் கவனப்படுத்துகிறாய் - என்

காதல் நெஞ்சின் அருகே வந்து அனலை மூட்டுகிறாய்.

சின்னச் சின்ன நினைவிலும் கூட நீயே வாட்டுகிறாய். - என்

சிந்தை அழுகிற வேளையில்க்கூட நீயே ஆற்றுகிறாய்.

வானை, மண்ணைப் பார்த்தேன் அங்கே வண்ணம் தெரியவில்லை.

தேனை நாவில் தொட்டுப்பார்த்தேன் சுவையும் அறியவில்லை.

ஏனோ எந்தன் அசைவுங்கூட எனக்குப் புரியவில்லை.

எந்தன் விழிக்கு உன்னைத் தவிர எதுவும் தெரியவில்லை.

ஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய் - மோதிச்

சிதறும் குண்டில்க்கூட முகத்தைக் காட்டுகிறாய்.

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

வேனில் வீசும் நாளில் எனக்கு வேர்த்துக் கொட்டுதடா - என்

மேனிக்குள்ளே உருகும் இதயம் மூர்ச்சையாகுதடா

கானல் கண்ட மானா என்நிலை கண்ணா சொல்லிவிடு! - என்

காயத்தோடு ஆவி கிடக்க கட்டளை இட்டுவிடு!

Edited by valvaizagara

ஆருமை வல்லை. . .

ஆண்களைப்பற்றி கவிதை வடிப்பதில் கடினம் இல்லை என்பதை உங்கள் கவிதைவாயிலாக உணர முடிந்தது. . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

அற்புதமான வரிகள்,

வல்வை சகாரா உங்கள் கவிக்கு நானும் ஓர் இரசிகன் என்ற உரிமையில் கேட்கிறேன், சமுதாய பிரச்சனைகளை உங்களது படைப்பாக்கலாமே,உங்களைப் போன்ற சிறந்த கவிகளின் வரிகள் ஏதாவது ஓர் பிரச்சனையை தீர்பதில் சிறு தாக்கத்தையேனும் உருவாக்கும்.வெறும் கவியாக அல்லாமல்,ஓர் பேனா போராளியானால் உங்கள் கவியாழுமை மேலும் சிறக்கும்.

வாழ்த்துக்கள். தொடருங்கள்.

அது ஒன்றுமில்லை...

பெண்கள் கவிதையை எழுதி வெளியிடுவது குறைவு....

ஆண்கள் வெளியிடுவது அதிகம்...

ஆண்களை ஆண்கள் வர்ணிப்பது..உணர்வுரீதியில் சிறிது சிரமம்...

நல்ல நடை...பாட்டாக்கலாம்...

வாழ்த்துகள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய் - மோதிச்

சிதறும் குண்டில் கூட முகத்தைக் காட்டுகிறாய்.

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

நல்ல வரிகள். சகாரா பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய் - மோதிச்

சிதறும் குண்டில்க்கூட முகத்தைக் காட்டுகிறாய்.

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

அதுஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய்

கடலுக்குள்ளை தள்ளிறதா??

சிதறும் குண்டில்க்கூட முகத்தைக் காட்டுகிறாய்.

சுட்டுக் கொல்லுறதா??

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய்

கொழுத்துறதா??

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்

வெட்டிக் குத்தறதா??

எண்டு உங்களை முடிக்கிறதுக்கான திட்டமிட்ட சதி நடக்குது எண்டு நினைக்கிறன் கவனமாயிருங்கோ ..

:wub::wub:

அதில்லை ஆண்களைப் பற்றி கவிதை எழுதினவுடனை எனக்கு ஒரு சந்தேகம் அதுதான் <_<:huh:

அட..ஆண்களை கவிதையில வர்ணிக்கிறதோ..(நிசமா முடியல்ல) :wub: ..ஆனா சகாரா அக்கா இலகுவாக வர்ணித்து விட்டா வாழ்த்துக்கள் சகாரா அக்கா :huh: ..நானும் இந்த கவிதயை வாசித்தா பிறகு ஆண்களை வர்ணிக்க முயற்சி செய்து பார்த்தன் அச்சோ ஒன்னுமே வரல்ல.. <_<

அப்ப தான் விளங்கிச்சு..ஆண்களை கவிதைகுள்ள அடக்க ஏலாது எண்டு.சரி அதை விடுவோம்..ஆனாலும் நீங்க அடக்கி போட்டியள் பாருங்கோ.. :wub:

கூகிலுக்குள் தேடிப் பார்த்தேன் அன்பே உன்முகத்தை - வந்த

கோபத்தாலே சினந்தது உள்ளம் அதுவே உன் இல்லம்.

வித்தியாசமான சிந்தனை இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்..வாழ்த்துக்கள்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வேனில் வீசும் நாளில் எனக்கு வேர்த்துக் கொட்டுதடா யாழ்களத்தில்

இக் கோடை வசந்தம் ஆண்கள் நெஞ்சில் பனியைக் கொட்டுதடா

ஏன் சகாரா ஏதோ ஒரு முடிவோடதான் வெளிக்கிட்டிருக்கிறியள் போலத் தெரியுது

ஆண்களே ஜாக்கிரதை அக்கா பப்பாவில ஏத்தேக்க எச்சரிக்கையா இருங்க

கவிதையில மயங்கி கைய விட்டிங்க அப்புறம் கவித்துப் போடுவாங்க

இந்த கவிதையில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு அம்சம். அந்த படம். வித்தியாசமாக இருக்கின்றுது. மீண்டும் மீண்டும் பார்க்கவும் தூண்டுகின்றுது. ஓவியனின் கற்பனைக்கு வாழ்த்துக்கள். ..

கண்ணில் வந்து மின்னல் வெட்டிக் கவனப்படுத்துகிறாய் - என்

காதல் நெஞ்சின் அருகே வந்து அனலை மூட்டுகிறாய்.

சின்னச் சின்ன நினைவிலும் கூட நீயே வாட்டுகிறாய். - என்

சிந்தை அழுகிற வேளையில்க்கூட நீயே ஆற்றுகிறாய்.

வரிகள் அருமையிலும் அருமை சகாரா...! ஆண்கள் எப்படி ஆண்களைப்பற்றி கவி பாட முடியம் அவர்கள் பெண்களைப் பற்றி பாடுகிறார்கள் பெண்கள் தான் ஆண்களைப் பற்றி கவி பாட முன்வர வேண்டும்.... இதயத்தைத் தொடும் அளவிற்கு கவியின் ஆழங்கள் அமைந்திருந்தது... பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள்....!

Edited by ithayanila

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சஹாரா .........

கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்,

படத்தில் உள்ள பூவில் ,சமாதான புற எழுகிறது . வழமையாக ..பூவில் வண்டு தான் மொய்க்கும் .

வித்தியாசமாக இருக்கு .எம் இதய மலரில் எழும் சமாதானம் எனும் விடுதலை புறாவோ ?

நிலாமதி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

அற்புதமான வரிகள்,

வல்வை சகாரா உங்கள் கவிக்கு நானும் ஓர் இரசிகன் என்ற உரிமையில் கேட்கிறேன், சமுதாய பிரச்சனைகளை உங்களது படைப்பாக்கலாமே,உங்களைப் போன்ற சிறந்த கவிகளின் வரிகள் ஏதாவது ஓர் பிரச்சனையை தீர்பதில் சிறு தாக்கத்தையேனும் உருவாக்கும்.வெறும் கவியாக அல்லாமல்,ஓர் பேனா போராளியானால் உங்கள் கவியாழுமை மேலும் சிறக்கும்.

வாழ்த்துக்கள். தொடருங்கள்.

சங்கிலியன் ஒரு பேனா முனைப்போராளியாவது என் இலக்குகளில் ஒன்று. என்னுடைய அநேக படைப்புகள் விடுதலைசார்ந்தவையாகவே முக்கியமாக தேச விடுதலை சார்ந்தவையாகவே உருவம் கொண்டுள்ளன. சமீப காலமாகத்தான் எங்கள் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சில அசட்டுத்தனங்களைப்பற்றி எழுத முனைகிறேன். தேசவிடுதலை மட்டுமே எங்களுக்கு வேண்டியது என்று நீண்ட நாட்களாக நான் நினைத்திருந்தேன் ஆனால் என் நண்பன் எனக்குள் ஒரு சிறு பொறியைத்தூண்டியதில் எங்கள் தேசவிடுதலையின் பரிபூரணத்தை நாம் அனுபவிக்கவேண்டுமென்றால் எங்களுக்குள் சமூகவிழிப்புணர்வு மிக அவசியம் பழமைகளுக்குள்ளும் பக்குவப்படாத புதுமைக்குள்ளும் சரியான வழிகாட்டல்களையும், அதேநேரம் புரையோடிக்கிடக்கும், எதிர்கால சமுதாயத்திற்கு வேண்டாதவையையும் அடையாளங்காட்டவேண்டிய சந்தியில் நாங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறோம். இங்கு இணைக்கப்பட்ட இப்படைப்பு உண்மையிலேயே மெட்டுக்குப்பாட்டெழுத வெளிக்கிட்டதன் விளைவு.

நன்றி சங்கிலியன் உங்கள் கருத்திற்கு.

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய்

கடலுக்குள்ளை தள்ளிறதா??

சிதறும் குண்டில்க்கூட முகத்தைக் காட்டுகிறாய்.

சுட்டுக் கொல்லுறதா??

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய்

கொழுத்துறதா??

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்

வெட்டிக் குத்தறதா??

எண்டு உங்களை முடிக்கிறதுக்கான திட்டமிட்ட சதி நடக்குது எண்டு நினைக்கிறன் கவனமாயிருங்கோ ..

:lol::)

அதில்லை ஆண்களைப் பற்றி கவிதை எழுதினவுடனை எனக்கு ஒரு சந்தேகம் அதுதான் :D:unsure:

சாத்திரி உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம்? :wub:

காதல் என்பது கடலில் மூழ்கிச் சாவதைக்காட்டிலும், தீயில் தீய்வதைக்காட்டிலும், வெடித்துத் உடலில் புகுந்து வலிப்படுத்தும் சன்னங்களைக்காட்டிலும், வேட்டையில் மிருகங்களை வதைப்படுத்தும் அம்பு, கத்தி, கோடாரி போன்றனவற்றால் ஏற்படுத்தப்படும் வேதனையைக்காட்டிலும் பொல்லாததுதானே.

ஒன்று மட்டும் விளங்கிறது வழமைக்கு மாறாக எழுதினாலே யாழ்க்களத்தில் எல்லோரும் அதிகம் யோசிப்பார்கள் போல்...

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட..ஆண்களை கவிதையில வர்ணிக்கிறதோ..(நிசமா முடியல்ல) :unsure: ..ஆனா சகாரா அக்கா இலகுவாக வர்ணித்து விட்டா வாழ்த்துக்கள் சகாரா அக்கா :D ..நானும் இந்த கவிதயை வாசித்தா பிறகு ஆண்களை வர்ணிக்க முயற்சி செய்து பார்த்தன் அச்சோ ஒன்னுமே வரல்ல.. :wub:

அப்ப தான் விளங்கிச்சு..ஆண்களை கவிதைகுள்ள அடக்க ஏலாது எண்டு.சரி அதை விடுவோம்..ஆனாலும் நீங்க அடக்கி போட்டியள் பாருங்கோ.. :lol:

யமுனா உங்கள் கற்பனை மிகவும் அதிகம்.

நீஙக சின்னப்பிள்ளை என்பதால் அதகம் சொல்ல முடியாது.

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவிதையில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு அம்சம். அந்த படம். வித்தியாசமாக இருக்கின்றுது. மீண்டும் மீண்டும் பார்க்கவும் தூண்டுகின்றுது. ஓவியனின் கற்பனைக்கு வாழ்த்துக்கள். ..

பரணீ உங்கள் பாராட்டுக்கு நன்றி, இந்த ஓவியத்தை உருவாக்கி அந்த முகம்தெரியாத நண்பருக்கும் நன்றி சொல்லவேண்டும். எவ்வளவு அற்புதமான ஓவியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேனில் வீசும் நாளில் எனக்கு வேர்த்துக் கொட்டுதடா யாழ்களத்தில்

இக் கோடை வசந்தம் ஆண்கள் நெஞ்சில் பனியைக் கொட்டுதடா

ஏன் சகாரா ஏதோ ஒரு முடிவோடதான் வெளிக்கிட்டிருக்கிறியள் போலத் தெரியுது

ஆண்களே ஜாக்கிரதை அக்கா பப்பாவில ஏத்தேக்க எச்சரிக்கையா இருங்க

கவிதையில மயங்கி கைய விட்டிங்க அப்புறம் கவித்துப் போடுவாங்க

முடிவோடு அல்ல கண்மணி தொடக்கத்தோடு ஆரம்பித்துள்ளேன்.

நீங்களே எனக்கு எதிராக ஆண்கள் அணியைத் திரட்டிவிடுவீர்கள் போல் உள்ளது.

உங்கள் கலகலப்பான பாராட்டுக்கு நன்றி கண்மணி.

மற்றும் விகடகவி, நுணாவிலான், இதயநிலா, நிலாமதி, ஆகியோருக்கும் மனந்திறந்து நன்றி உரைக்கிறேன்.

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சஹாரா .........

கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்,

படத்தில் உள்ள பூவில் ,சமாதான புற எழுகிறது . வழமையாக ..பூவில் வண்டு தான் மொய்க்கும் .

வித்தியாசமாக இருக்கு .எம் இதய மலரில் எழும் சமாதானம் எனும் விடுதலை புறாவோ ?

நிலாமதி

மனதிற்குப் பிடித்தவருடன் சண்டைகள் பிடிக்கத்தான் ஆசை இருப்பினும் சமாதானப்புறா ஏற்றத்தாழ்வற்ற நிர்மலமான அழகைப் பிரசவிக்கிறதே.....

ஆகா சாகாறா அற்புதமான படத்துக்கு அருமையான கற்பனை வரிகள்.

உண்மையிலேயே நன்றாக இருக்கிறது.

உங்கட கவிதையை பார்த்த உடனை முந்திய எனது கவி ஒன்டும் ஞாபகம்

வந்திச்சு யாழை ஒருக்கா தூசுதட்டி இப்ப வாசிச்சு பார்த்தன் :wub:

Edited by Rasikai

கவிதை பக்கம் வரவே வெறுப்பா இருக்குங்க. 98% காதல் கவிதைகளாய் அழுகிறீங்கப்பா. சோகம் பின்னுது.

மயிர் துணுக்கு எல்லாம் எழும்பி நிக்கிறது போல உணர்ச்சி கவிகளையும், நகைச்சுவையோ எழுத மாட்டியளோ.?

  • 1 year later...

பூக்களுக்கு வாசம் உண்டு கண்ணா உன்னைப்போல் - என்

பாக்களுக்குள் வாசம் செய்யும் உயிரே நீதானே!

கூகிலுக்குள் தேடிப் பார்த்தேன் அன்பே உன்முகத்தை - வந்த

கோபத்தாலே சினந்தது உள்ளம் அதுவே உன் இல்லம்.

கண்ணில் வந்து மின்னல் வெட்டிக் கவனப்படுத்துகிறாய் - என்

காதல் நெஞ்சின் அருகே வந்து அனலை மூட்டுகிறாய்.

சின்னச் சின்ன நினைவிலும் கூட நீயே வாட்டுகிறாய். - என்

சிந்தை அழுகிற வேளையில்க்கூட நீயே ஆற்றுகிறாய்.

வானை, மண்ணைப் பார்த்தேன் அங்கே வண்ணம் தெரியவில்லை.

தேனை நாவில் தொட்டுப்பார்த்தேன் சுவையும் அறியவில்லை.

ஏனோ எந்தன் அசைவுங்கூட எனக்குப் புரியவில்லை.

எந்தன் விழிக்கு உன்னைத் தவிர எதுவும் தெரியவில்லை.

ஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய் - மோதிச்

சிதறும் குண்டில்க்கூட முகத்தைக் காட்டுகிறாய்.

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

வேனில் வீசும் நாளில் எனக்கு வேர்த்துக் கொட்டுதடா - என்

மேனிக்குள்ளே உருகும் இதயம் மூர்ச்சையாகுதடா

கானல் கண்ட மானா என்நிலை கண்ணா சொல்லிவிடு! - என்

காயத்தோடு ஆவி கிடக்க கட்டளை இட்டுவிடு!

சகாறா அக்கா, கவிதை அற்புதம். முன்பும் இதை வாசித்து இருந்தேன் என்று நினைக்கிறன். கருத்து ஏன் இடவில்லை என்று தெரியவில்லை. இன்று யாழ் முகநூல் தொடுப்பில இந்ததிரியை கண்டன். கவிதை மிக நன்றாய் இருக்கிது, பாராட்டுக்கள்.

Edited by கலைஞன்

இரவு 11:45 இற்கு இந்த கவிதையை வாசிச்சன் இப்ப...இந்த இலேசான குளிர் இருக்கும் இரவில் வாசிக்க வேண்டிய கவிதை, இனியும் கணணி முன் இருக்க முடியாதவாறு கவிதை என்னை உசுப்பிட்டு.... மிச்சம் பிறகு எழுதுறன்

Edited by நிழலி

இதைத்தான்

இதைத்தான் அன்று திண்ணையில் எழுதினேன்

விரல்பட்டால் துள்ளி எழும்பும் நாங்கள்

விசுவாமித்திரர் பற்றி விமர்சிக்கக்கூடாது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இது வேற நடந்திருக்கோ.கவிதை பாடாட்டாலும் பறவாய் இல்லை.புறனி பாடாமல் விட்டால் அதுவே பெரிய விசயம் :lol:

வானை, மண்ணைப் பார்த்தேன் அங்கே வண்ணம் தெரியவில்லை.

தேனை நாவில் தொட்டுப்பார்த்தேன் சுவையும் அறியவில்லை.

ஏனோ எந்தன் அசைவுங்கூட எனக்குப் புரியவில்லை.

எந்தன் விழிக்கு உன்னைத் தவிர எதுவும் தெரியவில்லை.

நாளை இந்த நேரம் பார்த்து

ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை

சென்று வா நிலா

தென்றலே என் தனிமை கண்டு

........ ....... கவியரசரின் காதலியின் தனிமையை ..... வரிகள் ஞாபத்துக்கு வருகின்றன!!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இது வேற நடந்திருக்கோ.கவிதை பாடாட்டாலும் பறவாய் இல்லை.புறனி பாடாமல் விட்டால் அதுவே பெரிய விசயம் :)

:lol: :lol: :) நானும் அதைத்தான் யோசிச்சன்..! :) :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.