Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த பயணம் செய்த உலங்குவானூர்தி மீது தாக்குதல்

Featured Replies

அம்பாறை மாவட்டம் அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக சென்றுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயணம் செய்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி சேதமடைந்துள்ள போதும் மகிந்த ராஜபக்ச நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் அம்பாறையிலிருந்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

அம்பாறை அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் இன்று முற்பகல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார். அவரது பயணத்தினை ஒட்டி சுமார் 8,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாலத்தினை திறந்து வைத்து மகிந்த ராஜபக்ச மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1:00 மணியளவில் பொத்துவில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகளால் அகோர எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலினைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கு விரைந்த உலங்குவானூர்தி மகிந்த ராஜபக்சவினை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி விரைந்தது.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதிக்கு மேலாக உலங்குவானூர்தி பறந்து கொண்டிருந்தபோது பிற்பகல் 1.20 மணியளவில் அதனை நோக்கி விடுதலைப் புலிகளால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்கான உலங்குவானூர்தி சிவப்பு விளக்கை எரிய விட்டவாறே பாதுகாப்பான பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உலங்குவானூர்தி சேதத்துக்குள்ளான போதும் மகிந்த ராஜபக்சவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொத்துவில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது சுமார் 30 நிமிட நேரமாக நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத்தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பாறை மாவட்டம் அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக சென்றுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயணம் செய்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி சேதமடைந்துள்ள போதும் மகிந்த ராஜபக்ச நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

நீங்க காமடி கீமடி பண்ணேல்ல தானே?

அறுகம்பே யா.? நல்ல பேய்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பிவிட்டானா ? காயம் ஏதாவது ? ஆனால் நல்லா பயந்துபோயிருப்பான்.

ராசபக்ஸ்வின்ர வெள்ளைச்சாரம் நனைஞ்சிருந்திருக்கும்.

அட அந்த நேரத்தில அவரை ஆரும் ஒரு போட்டோ எடுத்திருந்தா அதை பாத்து பாத்து நான் ஒரு கொஞ்சக்காலம் எண்டாலும் சந்தோசமா இருந்திருப்பன்.

  • தொடங்கியவர்

அம்பாறை மாவட்டம் அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக சென்றுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயணம் செய்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி சேதமடைந்துள்ள போதும் மகிந்த ராஜபக்ச நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் அம்பாறையிலிருந்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

எங்கட அண்ணாமார் அங்க இண்ணும் இருக்கிறாங்க........ மகிந்த மகே அம்மே எண்டு கத்தி இருப்பானா???????????????????????

அம்பாறை மாவட்டம் அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக சென்றுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயணம் செய்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி சேதமடைந்துள்ள போதும் மகிந்த ராஜபக்ச நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

என்ன கொடுமை சரவணன் இதுக்குத்தான் சொல்லுகிறது சும்மா அறிக்கை விடப்படாது என்று கிழக்கின் உதயம் இப்ப தெரியும் ஆனால் தெரியாது கொஞ்ச நாளில சுத்தமா தெரியாமப் போகப்போகுது- இதிலென்ன சுவாரசியம் என்றால் உலக நாடுகளிடம் அழமுடியாது புலிகள் என்னை போட்டுத்தள்ள பார்க்கினம் என்று ஏனென்றால் கிழக்கை 100% மாக மீட்டாச்செல்லோ? மொத்தத்தில் திருடனுக்கு தேள் கொட்டின மாதிரித்தான் இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலம் திறக்கபோனவருக்கு , கபாலம் திறந்திருக்கும் அடச்சீ ................

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச பயணித்த உலங்கு வானூர்தி விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. எனினும் இவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இன்று அறுகம்பைப் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக மகிந்த ராஜபக்ச உலங்கு வானூர்தி மூலம் பயணித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் வருகையை அடுத்து, பாதுகாப்புக்காக 8 ஆயிரம் துருப்புக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அறுகம்பைப் பாலத்தைத் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்த போது பொத்துவில் சிறப்பு அதிரடிப் படை முகாம் மீது விடுதலைப் புலிகளால் அகோர எறிகணைத் தாக்குதல்கள் 30 நிமிடங்கள் வரை நடத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து மகிந்த ராஜபக்ச அங்கிருந்து உடனடியாக உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு நோக்கிப் பறப்பினை மேற்கொண்ட சமயம் உலங்கு வானூர்தி அம்பாறை கஞ்சிகுடிச்சாறுப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்காகி சேதடைந்துள்ளது.

உலங்கு வானூர்தி சிவப்பு விளக்கை போட்டவாறு அவசர அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. எனினும் மகிந்த ராஜபக்சவுக்கு உயிராபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என படைத்தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்

http://www.pathivu.com/?p=1557

காலமும் அவன் பக்கம் தான் வேலை செய்யுது.......

  • தொடங்கியவர்

(2ம் இணைப்பு)மகிந்தவை ஏற்றச்சென்ற உலங்குவானூர்தி மீது கனரகத் தாக்குதல்: உலங்குவானூர்தி கடும் சேதம்

அம்பாறை மாவட்டம் அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஏற்றி வருவதற்காகச் சென்று கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கனரகத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடைந்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் அம்பாறையிலிருந்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

அம்பாறை அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் இன்று முற்பகல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார். அவரது பயணத்தினை ஒட்டி சுமார் 8,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாலத்தினை திறந்து வைத்து மகிந்த ராஜபக்ச மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1:00 மணியளவில் பொத்துவில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகளால் அகோர எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலினைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து மகிந்த ராஜபக்சவினை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி விரைவதற்காக உடனடியாக அங்கு விரைந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி மீதும் விடுதலைப் புலிகள் கனரகத் தாக்குதலை நடத்தினர்.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதிக்கு மேலாக உலங்குவானூர்தி பறந்து கொண்டிருந்தபோது பிற்பகல் 1.20 மணியளவில் விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்கான உலங்குவானூர்தி சிவப்பு விளக்கை எரிய விட்டவாறே தாழ்வாகப் பறந்து உல்லைப் பாலத்திற்கு அருகில் உள்ள பாடசாலை மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியை மக்கள் தற்போது பார்வையிட்டு வருகின்றனர். அது மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடைந்திருக்கின்றது.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதனை சிறிலங்கா வான்படையும் ஒத்துக்கொண்டிருக்கின்றது.

இது குறித்து சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த மூன்று உலங்குவானூர்திகளில் ஒன்று அறுகம்குடா உல்லைப் பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

மேற்படி உலங்குவானூர்தி இயந்திரக் கோளாறு காரணமாகவே தரையிறக்கப்பட்டதாக முதல்கட்டமாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை உகண இராணுவ முகாமில் எரிபொருளை நிரப்பிவிட்டு அறுகம்குடா நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த உலங்குவானூர்தி தரையிறக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உலங்குவானூர்தியில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டு வருகின்றது.

தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இருக்கவில்லை. அவர் அறுகம்குடா பால திறப்பு விழாவில் அச்சயம் இருந்தார் என்றார்.

இதேவேளை பொத்துவில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது சுமார் 30 நிமிட நேரமாக நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத்தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பாறையில் எறிகணை

திருகோணமலையில் இராணுவத்தின் மீது சூடு

மட்டக்களப்பில் பொலிசார் மீது தாக்குதல்

பத்திரிகைகளில் கிழக்கு விடுவிப்பு.

விழுந்தாலும் மீசையில் மண்படாது பாருங்கோ

என்ன ? வத்தளை பாலம் திறந்த Nஐயராசிற்கு போனாப்பிறகு nஐயராயின்ர பெயர் வச்ச மாதிரி

நைனா மகிந்த போயிருந்தா மகிந்தவின்ர அபயரை வைச்சிருக்கலாம் .

மொத்தத்தில் அறுகம்பையில நைனாவுக்கு என்னர அம்பே தான்.

  • கருத்துக்கள உறவுகள்

VVIP helicopter of Rajapaksa's fleet comes under attack in Ampaa'rai

[TamilNet, Tuesday, 01 July 2008, 10:11 GMT]

A VVIP helicopter of the fleet of Sri Lankan President Mahinda Rajapaksa came under fire, presumably a rocket attack, in the airspace over Ullai in Ampaa'rai district around 2:00 p.m. Tuesday. The helicopter had an emergency landing. Nobody was hurt, but the chopper was damaged, according to available information.

The helicopter was part of Rajapaksa's fleet during his visit to A'rukam Kudaa (Arugambay) earlier in the day, where he ceremoniously opened the bridge connecting Poththuvil, A'rukam Kudaa and Paa'nama in the Eastern province.

Sri Lanka Air Force (SLAF) sources in Colombo only confirmed that there was a technical failure in one of the SLAF helicopters which was returning after refilling to the ceremonial site of A'rukam Kudaa.

The bridge was constructed with U.S. aid donation of USD 10 million.

www.tamilnet.com

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் தொடரணியை சேர்ந்த வாகனத்தின் மீது தாக்குதல்?

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயணித்த ஹெலிக்கொப்டர் தொடரணியைச் சேர்ந்த ஒரு ஹெலிக்கொப்டர் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேன சுரவீர அவர்கள் பாதுகாப்புக்கான ஹெலிக்கொப்டர் ஒன்றே மோட்டார் தாக்குதலில் சேதமடைந்ததாகவும், அதற்கு சிறிய சேதம் மாத்திரமே ஏற்பட்டதாகவும் கூறினார்.

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அறுகம்பை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பாலம் ஒன்று மீளமைக்கப்பட்டதை அடுத்து அதனைத் திறப்பதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி அங்கிருந்து திரும்பிய வேளையில், அவர் சென்ற ஹெலிக்கொப்டருடன் கூடச் சென்ற ஹெலிக்கொப்டர் ஒன்றே இவ்வாறு விடுதலைப்புலிகளின் ராக்கட் தாக்குதலுக்கு உள்ளானதாக தாம் கேள்விப்பட்டதாக பொத்துவில் பகுதிக்கான சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்து, தரையிறக்கப்பட்ட ஹெலிக்கொப்டர் சேதமடைந்திருந்ததை தான் நேரில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

bbc/tamil

  • கருத்துக்கள உறவுகள்
<_< கிழக்கிலைதான் புலிகளே இல்லையே அனேகமாய் இது பிள்ளையான் குழுவின்ரை வேலையாத்தான் இருக்கும். :huh:

:huh: கிழக்கிலைதான் புலிகளே இல்லையே அனேகமாய் இது பிள்ளையான் குழுவின்ரை வேலையாத்தான் இருக்கும். :wub:

அத எப்படி இவ்வளவு சரியா சொல்லுறியள் சாத்(திரி) அங்கிள் எனக்கு உதில பலத்த சந்தேகமா இருக்கு... <_<

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய கல் எடுத்து இலக்கு பாத்து எறிந்திருந்தால் மகிந்துவை கெலியோடை விழுத்தியிருக்கலாமில்லையா.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில் முக்கியமான மாற்றுக்கருத்து உண்டு

அதாவது எனது அறிவுக்கெட்டியவரை புலிகளால் ராயபக்ச குடும்பத்தில் எவருக்கும்

மற்றும் தற்போது உள்ள சரத் பொன்சேகா போன்ற எவருக்குமே ஆபத்தில்லை

ஏனெனில் இவர்கள் அத்தனைபேரையும் பதவியில் ஏற்றிவிட்டவர் தலைவர்

என்பதுதான் என்வாதத்திற்கான ஆதாரம்

எனவே தலைவருடைய குறிக்கோளை; நிறைவேற்றவே இவர்கள் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே என் வாதம்.......

ஆமா தமிழ்சிறி ஒங்க வாய்க்கு சர்கரைதான் போடனும்....

Edited by thanga

உண்மைதான் குகதாசன். தலைவர் அவர்கள் எது செய்தாலும் அதில் ஓர் அர்த்தம் உண்டு. அது இங்குள்ள நிறையப் பேருக்கு விளங்குவதில்லை. உலங்குவானூர்தியையும் முகாமையும் தாக்கத் தெரிந்தவர்களுக்கு இவர்களைத் தாக்குவது பெரிய விடயமில்லை. எல்லாம் காரணத்தோடுதான் நடக்கிறது. விளங்கிக் கொண்டால் சரி.

எனக்கொரு ஆசை. இன்னும் ஓரிரண்டு நாட்களுக்காவது மகிந்தவை அந்த முகாமிலேயே நிற்க வைக்கவேண்டும். அங்கு எந்த வானூர்திகளும் செல்லமுடியாமல் செய்யவேண்டும். அப்போதுதான் போரின் முகத்தை மகிந்த சரியாக அறிந்து கொள்வார்.

Edited by Thamilachchi

எனக்கொரு ஆசை. இன்னும் ஓரிரண்டு நாட்களுக்காவது மகிந்தவை அந்த முகாமிலேயே நிற்க வைக்கவேண்டும். அங்கு எந்த வானூர்திகளும் செல்லமுடியாமல் செய்யவேண்டும். அப்போதுதான் போரின் முகத்தை மகிந்த சரியாக அறிந்து கொள்வார்.

ஐயோ ஐயோ உங்கடை ஆசையை குப்பையிலலை போடுங்கோ. தாக்கப்பட்ட உலங்குவானூர்தியில் மகிந்த இல்லை. மகிந்த சென்ற உலங்குவானூர்தி எந்தவித பாதிப்புமில்லாமல் போகவேண்டிய இடத்திற்குப் போய் விட்டது. ஆனால் தாக்குதலுக்கு இலக்கான உலங்கு வானூர்தியே உல்லைப்பகுதியில் தரையிறங்கியுள்ளது. எங்கடை ஊடகங்களிற்கும் இது தெரியும் ஆனால் உலங்கு வானூர்தி சேதமாகியும் மகிந்தவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென்று சொல்லி மகிந்த போன உலங்கு வானூர்தியே பாதிக்கப்பட்டதாக பீலா விடுகினம்.

Edited by மின்னல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.