Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வற்றா நதி [கண்ணீர்]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை பிறந்து

பல முறை இறந்து

பட்டப் பகலில் பார்வை

இழந்து

பசியோடு அலைகிறோம்

பார்பவன் யாரும் இல்லை

போர் ஒன்று வந்து புயல் போல் வீச

அங்கும் இங்குமாக அலைகிறோம்

ஆற்றில் கிடக்கும் ஆல இலைபோல

மனிதப் பிறவியை மதிக்காத

இந் நாட்டில்

மனிதப் பிறவியே வேண்டாமையா

என்று மனது உறுத்துகிறது

மறுயென்மம் இருந்தால்

பிறப்போம் நல்ல மனிதர்களாக

இந்த வையகத்தில்

உங்கள் உள்ள குமுறல்களையும் கொட்டி விடுங்கள்

இது எனது முதலாவது கவிதை உங்கள் விமர்சனங்களை எதிர் பார்த்து

அடடா...முனிவர் மாமுவின் கவிதை..தங்களின் கவி வற்றாம ஊற்றேடுக்கிறது மாமா வாழ்த்துக்கள்.. :) (சரி மாமோய் நானும் வந்துட்டன் தானே இரண்டு பேரும் சேர்ந்து அழுவோம் என்ன)..நான் சும்மா பகிடிக்கு.. :lol:

கண்ணில் இருந்து

விழுந்த

கண்ணீர்

கேட்டது..

இன்னுமா

உன்

தாகம்

தீரவில்லை..?? :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சிந்திய கண்ணீர்

இன்று கடலாக

அதில் நான் கால் நனைக்கிறேன்

உன் நினைவாக

நீ வந்து மீட்பாய என்னை

நிழல் இன்றி வாடுகிறேன்

அழியாத சுவடுகள் என்

கண் முன்னே

அலறுகிறேன் .....அலை

அடிக்கும் முன்னே கரை சேர்ப்பாய

என்னை....................

நன்றி ஜம்மு இது எப்படி

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது...!*

கொஞ்சம் நாள்

இருந்துவிட்டு

செல்ல வந்தாய்

என்பதை மறந்தாய்

இறுதி நாட்களில்

மட்டுமல்லாமல்

இருக்கும் வரை

இனிமையாய் பேசு...

இன்னலை மறந்து

இயல்பாய் இரு...

இன்று வரை

இப்படியெல்லாம்

வாழ்ந்த வாழ்க்கைகாக

வருந்தாதே...

நாளை முதல்

நம்பிக்கையோடும்

நல்லெண்ணதோடும்

நடை போடு...

நல்லதே நடக்கும்...!

Edited by nunavilan

நான் சிந்திய கண்ணீர்

இன்று கடலாக

அதில் நான் கால் நனைக்கிறேன்

உன் நினைவாக

நீ வந்து மீட்பாய என்னை

நிழல் இன்றி வாடுகிறேன்

அழியாத சுவடுகள் என்

கண் முன்னே

அலறுகிறேன் .....அலை

அடிக்கும் முன்னே கரை சேர்ப்பாய

என்னை....................

நன்றி ஜம்மு இது எப்படி

அடடா..அந்த மாதிரி இருக்கு முனிவர் மாமா.... :D

நான் சிந்திய கண்ணீரில்

வற்றிவிட்டது

என்

விழி நதி

இன்று

துடுபுடன் ஒரு

படகு

என்

விழியில்

ஆனால்

பயணிக்க

முடியவில்லை..!! :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

கரை சேர்வாய் முனிவா கலங்காதே

காக்கும் கடவுள் மேல் நம்பி ...கை வை

நம்பிக்கை வை .என்று கூறும் நிலாமதி அக்கா ...

அடடா..அந்த மாதிரி இருக்கு முனிவர் மாமா.... :)

நான் சிந்திய கண்ணீரில்

வற்றிவிட்டது

என்

விழி நதி

இன்று

துடுபுடன் ஒரு

படகு

என்

விழியில்

ஆனால்

பயணிக்க

முடியவில்லை..!! :)

அப்ப நான் வரட்டா!!

:D:lol: கண்ணீர்துளி விழுந்து அதில் படகு எல்லாம் ஓட்டுறாங்களாம். அச்சோ என்னமா யோசிக்கிறாங்கப்பா. :lol: லீற்றர் லீற்றராக அழுது கண்ணீர் வடிக்கிறியளோ? ஒருவேளை வானம் அழுவதை சொல்லுறியளோ :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாமதி அக்கா......

ஈழம் என்ற நம் நாட்டில்

இறுதி அத்தியாயம் படப்போம்

வெற்றி முரசம் முழங்க

வீறு கொண்டு எழுவோம்

வேங்கைகளாக

விண்ணை பிளக்கும்

மின்னல் போல்

முட்டி முளைக்கும்

விதை போல்

அண்ணன் என்ற மலையிருக்க

அடிமை விலங்கை உடைப்போம்

அத்தியாயம் படைப்போம்

வாரும்..............

:lol::lol: கண்ணீர்துளி விழுந்து அதில் படகு எல்லாம் ஓட்டுறாங்களாம். அச்சோ என்னமா யோசிக்கிறாங்கப்பா. :lol: லீற்றர் லீற்றராக அழுது கண்ணீர் வடிக்கிறியளோ? ஒருவேளை வானம் அழுவதை சொல்லுறியளோ :rolleyes:

கண்ணீர் துளி விழவில்லை..கண்ணுகுள் இருக்கும் அந்த கண்ணீரில் :o ..படகு ஓட்டலாம் தானே அக்கா..(பெண் எண்ட படகை ஓட்டலாம்)..அந்த கண்ணீர் வற்றி விட்டாள்..நிலை என்ன..?? :lol:

ஓ..உப்படி எல்லாம் நாம நன்னா யோசிப்போம் தானே..சா..சா அழுது எல்லாம் கண்ணீர் வடிப்பதா வீதியால போய் வரும் பறவைகளை பார்க்கும் போது வடியும் ஏக்க கண்ணீர் விளங்கிச்சோ :lol: ..வானம் அழுதா பூமி சிரிக்கும் அதை போல் ஒரு கண் அழுதால் தான் மறு கண் சிரிக்கும்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

முனிவரே முதல் கவிதை சுப்பர் தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன்:............

அழகான ஊரில்

அடிமைகள் ஆகி

ஆயிரம் உறவுகள்

அங்கும் இங்கும்

அடியும் உதையும்

அன்றும் இன்றும்

ஆதவன் எழுமுன்

ஆயிரம் செல்கள்

அன்னை மண்ணில்

அரக்கன் ஏவீட

உள்ள உயிரை

இறுக்கி பிடித்து

ஊர் சுற்றுகிறோம்

அகதிகளாக........அகதிகளாக

முதல் கவிதையிலேயே முழுதாய் வெறுக்கின்றீர்கள். . .

கன்னிக்கவிதையே கருசுமந்து நிற்கின்றது வாழ்த்துக்கள். . .

தொடருங்கள் தாயகம் நோக்கிய கவிப்பயணத்தை . .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரணி [ஜயா] அண்ணா .............நன்றி

வெறுக்கவில்லை எம் மக்கள் படும்

துன்பங்கள் துயரங்க்களை பார்த்து

என்னால் இருக்கமுடியவில்லை

அதனால்தான் அப்படி எழுதினேன்.

தமிழ்பூக்கும் சோலைக்குள் கவி மகரந்தங்களை காவும் முனியா!

வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

உணர்வுப்பூக்கள் விரக்தியுறல் ஆகாது.

தொடர்க....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆதிவாசி ஜயா

எண்ணற்ற உயிர்கள்

எங்கள் மண்ணில்

ஏறி வந்த பகைவிரட்டி

எரிகின்ற விளக்குகள்

அழியா பெயர் கொண்டு

அன்னை மண்ணை

அணைத்து கொண்டு

தூங்கும் ஆயுதங்கள்

எங்கள் மாவீரர்கள்

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை மண்ணில் அன்று அழுதோம்

அதுதான் ஏனோ

அன்று துடைத்தாள் அன்னை

இன்று மனம் குமுற மழை வெள்ளம் போல்

ஓடுகிறது

எங்கள் கண்ணீர் ........

கலங்கிய மனதை கட்டுப்படுத்த முடியவில்லை

காலமோ பதில் சொல்லவில்லை

கறை படிந்த பஞ்சுகள் போல்

காற்றில் பறக்கிறோம்

கவனிப்பார் யாருமில்லை

படைத்தகடவுள் பார்வை அற்றவனாக

பார்த்திருக்கிறான் இவ்வுலகத்தை

நாங்கள் பரதேசியாக பரண்களிலும் ,பள்ளிகளிலும்

படுத்துறங்குகிறோம் பார்ப்பவன் எவனும் இல்லை.............................

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பரதேசியாக பரண்களிலும் ,பள்ளிகளிலும்

படுத்துறங்குகிறோம் பார்ப்பவன் எவனும் இல்லை

உள்ள குமுறல்கள் கவிதைகளாக வடிக்கப்பட்டது அழகு. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் முனிவர். கவிதையில் விரக்தி தான் நிறையவே வெளிப்படுகிறது. நன்றி கவிதைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாமதி அக்கா......

ஈழம் என்ற நம் நாட்டில்

இறுதி அத்தியாயம் படப்போம்

வெற்றி முரசம் முழங்க

வீறு கொண்டு எழுவோம்

வேங்கைகளாக

விண்ணை பிளக்கும்

மின்னல் போல்

முட்டி முளைக்கும்

விதை போல்

அண்ணன் என்ற மலையிருக்க

அடிமை விலங்கை உடைப்போம்

அத்தியாயம் படைப்போம்

வாரும்..............

வீதிகள் தோறும்

வீரரின் காற்றடங்கள்

விதியை மாற்றிடும்

தலைவனின் விழியசைவில்

முடிவாகும் வேளைவரை

கலையாத கனவுகளோடு

கலையாத..........

தமிழீழக் கனவோடு

தொடர் பயணம் ஓயாது !

தொடரட்டும் முனிவார்ஜீ அவர்களே......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் ஒன்று வந்து புயல் போல் வீச

அங்கும் இங்குமாக அலைகிறோம்

ஆற்றில் கிடக்கும் ஆல இலைபோல

நிஜங்கள் என்றுமே

மனம் தொடாமல்

செல்வதில்லை...!

அழகான வரிகள்

வாழ்த்துக்கள் - முனித் தாத்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறை படிந்த பஞ்சுகள் போல்

காற்றில் பறக்கிறோம்

கவனிப்பார் யாருமில்லை

முனிவர் ஜீ

கவலைகளை அழகான வரிகள் கொண்டு வடித்திருக்கிறீர்கள்..... சும்மா சொல்லக்கூடாது மிக அருமை.... நீங்கள் இன்னும் எழுத வேண்டும்..

என்ன முனிவராய் இருந்து முனிவர் ஜீ ஆக பதவி உய்ர்வு அனைந்து விட்டீர்கள்....வாழ்த்துக்கள்... :icon_mrgreen: சும்மா....!

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

nunavilan Posted Yesterday, 09:00 PM

QUOTE

நாங்கள் பரதேசியாக பரண்களிலும் ,பள்ளிகளிலும்

படுத்துறங்குகிறோம் பார்ப்பவன் எவனும் இல்லை

உள்ள குமுறல்கள் கவிதைகளாக வடிக்கப்பட்டது அழகு. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் முனிவர். கவிதையில் விரக்தி தான் நிறையவே வெளிப்படுகிறது. நன்றி கவிதைக்கு

எங்க தமிழ்ழ மக்கள் படும் வேதனை கண்டு எங்கோ ஒரு மூலையில் எதுவும் செய்ய முடியாதநிலையில் இருந்து கொண்டு கண்ணீர் மட்டும் விட முடிகிறது அந்த வேளையில் எழுதிக்கொள்வது தான்

நன்றி நூணாவிலன் :)

வீதிகள் தோறும்

வீரரின் காற்றடங்கள்

விதியை மாற்றிடும்

தலைவனின் விழியசைவில்

முடிவாகும் வேளைவரை

கலையாத கனவுகளோடு

கலையாத..........

தமிழீழக் கனவோடு

தொடர் பயணம் ஓயாது !

தொடரட்டும் முனிவார்ஜீ அவர்களே......

நன்றி நொச்சி

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிஜங்கள் என்றுமே

மனம் தொடாமல்

செல்வதில்லை...!

அழகான வரிகள்

வாழ்த்துக்கள் - முனித் தாத்தா

நன்றி நிருஜா

என்னது தாத்தாவா :):wub::lol:

முனிவர் ஜீ

கவலைகளை அழகான வரிகள் கொண்டு வடித்திருக்கிறீர்கள்..... சும்மா சொல்லக்கூடாது மிக அருமை.... நீங்கள் இன்னும் எழுத வேண்டும்..

என்ன முனிவராய் இருந்து முனிவர் ஜீ ஆக பதவி உய்ர்வு அனைந்து விட்டீர்கள்....வாழ்த்துக்கள்... :) சும்மா....!

இளங்கவி

நன்றி இளங்கவி :D

என்னது பதவி உயர்வா ம்ம் அதை பற்றி சொல்ல மாட்டேன் :)

  • 7 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்னை துரத்துகிறது 
வாழ்வோம் என்று மனது சொல்கிறது
இதுவும் வாழ்க்கை தானா??
என்று கேள்வி வந்தாலும் 
இதுவும் கடந்து போகும் 
எண்ணத்தோன்றுகிறது 

வலி இல்லாமல் வாழ்க்கை ...இல்லை
என்றாலும் வலி வந்த பின்பே
வார்(ழ்கை)த்தையின் வலி..... தெரிகிறது 

என்ன வாழ்க்கையடா இது :unsure:

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதுதான் பார்க்கிறேன் நன்றாக எழுதியுள்ளீர்கள்.... தொடர்ந்தும் நிறைய கவிதைகள் எழுதலாமே முனிவர்......!

என்னமோ தெரியவில்லை சோகமும், விரக்தியும் கவிதையைத் தூக்கி நிறுத்துவதுபோல் இன்பமும், மகிழ்ச்சியும் சிறப்பு செய்வதில்லை....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் அப்போதிருந்த மனநிலைக்கும் இப்போதும் பெரும் வித்தியாசமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.