Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை துறைமுகத்தின் மீது புலிகளின் வானூர்தி தாக்குதல்: 18 கடற்படையினர் காயம்; ஜெட்லைனர் துருப்புக்காவி இலக்கு?

Featured Replies

இராணுவம் முன்னேறும்போது துவண்டுவீழ்வதும் புலிகள் தாக்குதல் தொடங்கும்போது துள்ளிக்குதிப்பதும் எம்மவர்களின் இரத்தத்தோடு ஓட்டியிருக்கின்றது . .

கணனி முன் இருந்து கதைகள் அளக்கும் நாம் சிந்திப்பதையும் களத்தில் கரைந்துகொண்டிருக்கும் எம் தலைவன் யோசனையும் ஓன்றாகுமோ ? அவரின் ஒவ்வொரு அசைவும் ஆயிரம் வழிகளை நகர்த்தும். . . .

அன்றிலிருந்து இன்றுவரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. கட்டாயம் இந்த மாவீரர் தினம் எம் சொந்த ஈழத்தில் கொண்டாடுவோம் அதற்கான அடிக்கல்லே இது. . .

  • Replies 66
  • Views 19.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான தாக்குதல்கள் தொடர வேண்டும். வெற்றி மமதையில் இருக்கும் சிங்களவனுக்கு ஒருகணம் யதார்த்தத்தை இது புரிய வைத்திருக்கும்.

தாக்குதலில் பங்குபற்றிய வான்புலிகளுக்கு வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

இது வெற்றிக்காகக விழுந்த அடியல்ல..

எதிரியின் எகத்தாளத்துக்கு விழுந்த அடி...

மக்களின் நம்பிக்கை இறங்காமலிறக்க விழுந்த அடி...

எதிரிக்கு மூச்சுத்திளறப்போகும் காலம் வருகுதௌ சொல்லும் முதல் அடி...

வாழ்த்துகள் வானுயரப்பறந்த புலிவீரர்களுக்கு

வாழ்த்துக்கள்

நேற்றைக்குத்தான் பிரதமர் ஏதோ பினாத்தினதா செய்தி ஒண்டு வந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மனிசன் திணறப் போறார். மகிந்தரும் பொன்னரும் என்ன சொல்லப் போகினமோ தெரியாது. இது ஜெட்லைனருக்கான இலக்கல்ல. பேரினவாதப் பிரசாரத்திற்கான இலக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு செய்தி :D .வான் புலிகளுக்கு வாழ்த்துக்கள் :D . மிகிந்தவின் கழுத்து மேலும் மேலும் இறுக்கப்பட்டிருக்கிறது மூச்சு போகும் காலமும் வெகுதொலைவில் இல்லை :) . இந்த தாக்குதலை தேர்தலுக்கு முன் செய்திருந்தால் மகிந்தவுக்கு மக்களின் ஆதரவு எப்படி இருந்திருக்கும் ? ஏன் புலிகள் அதை செய்யவில்லை? செய்யாததுக்கு காரணம் உண்டு :D . சிந்தியுங்கள் மக்களே . புலிகளே முடிவு எடுக்கிறார்கள் யார் ஆட்சியில் இருக்கவேண்டும் என்று அப்படியிருக்கும் போது நாங்கள் பலமிழந்தவர்களா :D ?

  • கருத்துக்கள உறவுகள்

அன்றிலிருந்து இன்றுவரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. கட்டாயம் இந்த மாவீரர் தினம் எம் சொந்த ஈழத்தில் கொண்டாடுவோம் அதற்கான அடிக்கல்லே இது. . .

எல்லொரது ஆசையும் அதுதான்

எல்லொரது ஆசையும் அதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில் இரு தடவைகள் புலிகள் விமானத் தாக்குதல்

[27 - August - 2008] [Font Size - A - A - A]

திருகோணமலை கடற்படைத் தளம் மற்றும் துறைமுகப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விடுதலைப்புலிகளின் வான்புலிகள் இரு தடவைகள் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளன.

நேற்றிரவு 9 மணியளவிலும் நள்ளிரவு 12.15 மணியளவிலும் திருமலை வான் பரப்புக்குள் நுழைந்த வான்புலிகளின் விமானமொன்றே இந்தத் தாக்குதல்களை நடத்திவிட்டுச் சென்றுள்ளது.

முதல் முறை நடைபெற்ற தாக்குதலையடுத்து புலிகளின் விமானத்தை நோக்கி திருமலை கடற்படைத் தளம், துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து 25 நிமிட நேரத்திற்கும் மேல் தொடர்ச்சியாக கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முதல் தடவை வான்புலிகள் வீசிய இரு குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாலும் அதன் பின்னர் நகரின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து இடைவிடாது வானத்தை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலாலும் திருமலை நகரும் அதனையண்டிய பகுதிகளும் 25 நிமிட நேரத்திற்கும் மேலாக அதிர்ந்த வண்ணமிருந்தது.

இதேபோன்றே இரண்டாவது தடவை வான் புலித் தாக்குதல் நடைபெற்றபோதும் அதன் பின்னர் நடைபெற்ற தாக்குதலாலும் திருமலை நகரம் அதிர்ந்தது.

இதேநேரம், வான்புலிகள் முதல் தடவை தாக்குதலை நடத்திவிட்டுச் சென்ற சில மணிநேரத்தில் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திலிருந்து வன்னிக்குச் சென்ற விமானப் படையினரின் குண்டு வீச்சு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.

முதல் தாக்குதல்

நேற்றிரவு 9 மணியளவில் நடைபெற்ற முதல் தாக்குதலில் வான்புலிகள் கடற்படை முகாமையும் திருமலைத் துறைமுகத்தில் நின்ற துருப்புக் காவி கப்பலான "ஜெற்லைனரையும்' இலக்கு வைத்தே தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முதலில் கடற்படைத் தளம் மீது ஒரு குண்டும் அதன் பின்னர் "ஜெற்லைனர்' கப்பலை இலக்கு வைத்து துறைமுகப் பகுதியிலுமாக இரு குண்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வான்புலிகள் விமானத் தாக்குதலை நடத்திய பின்னரே, விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்து கடற்படைத் தளத்திலிருந்தும் துறைமுகப் பகுதிகளிலிருந்தும் விமானப் படைத் தளம் மற்றும் திருமலை நகரின் பல பகுதிகளிலிருந்தும் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் கலிபர் தாக்குதல்களை படையினர் சுமார் 25 நிமிட நேரம் நடத்தியுள்ளனர்.

இதேநேரம், வான்புலிகள் துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதியில் இருகுண்டுகளை வீசியதாகவும் இதில் ஒன்று "ஜெற்லைனர்' கப்பலை இலக்கு வைத்ததாயிருக்கலாமென்றும் எனினும் அந்த இலக்கு தாக்கப்படவில்லையெனவும் படைத்தரப்பு தெரிவித்தது.

இந்தத் தாக்குதலையடுத்து விடுதலைப் புலிகளின் விமானத்தின் மீது படையினர் கடும் தாக்குதலை நடத்தியதாகவும் எனினும் அது தப்பிச் சென்றுவிட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

புலிகளின் விமானத் தாக்குதலையடுத்து கடற்படைத் தளம் மற்றும் துறைமுகப் பகுதியில் பாரிய சத்தங்கள் கேட்டதாகவும் அதன் பின் அப்பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் 18க்கும் மேற்பட்ட கடற்படையினர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. எனினும் அதனைப் படைத்தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

இதேநேரம், விமானத் தாக்குதலையடுத்து படுகாயமடைந்த பத்திற்கும் மேற்பட்டோர் திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலால் கடற்படைத் தளத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

வான்புலிகள் தாக்குதலை நடத்திவிட்டு சென்ற பின்னரும் திருகோணமலையில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. இத் தாக்குதலையடுத்து திருகோணமலையெங்கும் பெரும் பதற்றம் நிலவியது.

இதேநேரம், வான்புலிகளின் தாக்குதலையடுத்து சுமார் 45 நிமிடநேரத்தின் பின் வன்னியில் விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.

2ஆவது தடவை தாக்குதல்

இந்த நிலையில் நள்ளிரவு 12.15 மணியளவில் மீண்டும் வந்த வான்புலிகளின் விமானமொன்று கடற்படைத் தளத்தினுள் குண்டொன்றை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

கடற்படைத் தளத்தினுள் வீழ்ந்த குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறவே கடற்படைத் தளம், துறைமுகம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 15 நிமிடம் விமான எதிர்ப்பு பீரங்கிகள் முழங்கின.

இந்தத் தடவை வான்புலிகளின் தாக்குதலால் ஏற்பட்ட சேதவிபரம் குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. எனினும் குண்டுவீச்சைத் தொடர்ந்து வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந்தத் தடவையும் வான்புலிகள் தாக்குதல் நடத்திய பின்னரே வான்தாக்குதலை படையினர் அறிந்து அதன் பின்னரே பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

முதல்தடவை வான்புலிகளின் ஒரு விமானம் இரு குண்டுகளை வீசிய அதேநேரம், நள்ளிரவு 2 ஆவது தடவையாக வந்த ஒரு விமானம் ஒரு குண்டையே வீசியுள்ளது.

வன்னியில் பாரிய படைநடவடிக்கை இடம்பெற்று வருகையில் வான்புலிகள் திருகோணமலையில் விமானத் தாக்குதலை நடத்தியமை அரசு தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://www.thinakkural.com/news/2008/8/27/...s_page56890.htm

சந்தோசம் ஆயிரம் சொல்லிட முடியா வார்த்தைகளில்

தயவு செய்து அடம் பறி பொகுது என்று அலட்சியம் அல்லது நம்பிக்கை கொள்ளாதீர்கள் இவ்வாறே வெகு விரiவில் சிங்கள சிப்பாய்களின் வீரத்தை புலம்பும் அரசு ஆயிரக்கணக்கில் சிதறுண்டு கிடக்கப் போகும் சிங்கள விப்பாய்களின் உடலத்தை ஏற்காமல் வன்னியில் கொளுத்தப்பேவது இதைப்போலத் தான் நடக்கப் பொகுது .

  • கருத்துக்கள உறவுகள்

வான் புலிகளுக்கு வாழ்த்துக்கள்

காட்டி கொடுக்க கங்கணம் கட்டி கொண்டு இருக்கும் .அண்டை நாட்டு மண்டையனுகளுக்கு

மண்ணை தூவி ......மண்வெட்டி செய்ய பயன் படும் றேடார்களுக்கு மத்தியில்

பறந்து தாக்குதல் நடத்தி பத்திரமாக தளம் திரும்பிய

..............................................வான்புலிகளு

  • கருத்துக்கள உறவுகள்

எல்டிடிஈ விமான தாக்குதல்-திரிகோணலை துறைமுகம் நாசம்!

திரிகோணமலை: விடுதலைப் புலிகள் நேற்று இரவு அதிரடி விமானத் தாக்குதலை நடத்தினர். அடுத்தடுத்து நடந்த இந்தத் தாக்குதலில் திரிகோணமலை துறைமுகம் பலத்த சேதமடைந்தது. வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்றும் சேதமடைந்தது. புலிகளின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இலங்கையில் நடந்து வரும் போரின் தீவிரம் உக்கிரமடைந்து வருகிறது. தற்போது கிழக்கை விட்டு விட்டு வடக்கில் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

அப்பகுதியில் சில முக்கிய இடங்களையும் ராணுவம் பிடித்ததாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் திரிகோணமலை துறைமுகத்தையும், அருகில் உள்ள கடற்படைத் தளத்தையும் குறி வைத்து விடுதலைப் புலிகள் விமான தாக்குதலில் ஈடுபட்டனர்.

துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த ஜெட்லைனர் என்கிற வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் மீதும் மற்றும் கடற்படை தளம் மீது அடுத்தடுத்து விமானம் மூலம் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் திரிகோணமலை துறைமுகம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு 2 குண்டுகளை வீசி புலிகள் தாக்குதல் நடத்தினர்.

துறைமுகத்தின் பல பகுதிகள் தீப்பிடித்து எரிந்தன. கடற்படை தளமும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டு வருவதாக திரிகோணமலை மக்கள் கூறுகிறார்கள். சேதம் பெருமளவில் இருக்கும் எனத் தெரிகிறது.

யாழ்ப்பாணத்துக்கு படையினரை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் 'ஜெட்லைனர்' என்ற கப்பலைக் குறி வைத்தும் புலிகள் குண்டு வீசியுள்ளனர். இந்தக் கப்பலில் பெருமளவிலான படை வீரர்கள் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் செல்ல தயாராக இருந்தனர் என்று கூறப்படுகிறது.

திரிகோணமலை கடற்படை தலைமையகம் மற்றம் சீனன்குடா வான்படைத்தளம் ஆகியவற்றிலிருந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளால் விடுதலைப் புலிகளின் விமானம் மீது தாக்குதல் நடப்பட்டது. எனினும் அது தப்பி வன்னி காட்டுக்குள் மறைந்து விட்டது.

தாக்குதல் இடம்பெற்ற நேரம் இருளாக இருந்ததால், விடுதலைப் புலிகளும் இலக்கை சரியாக தாக்க முடியவில்லை. கடற்படையினரும் புலிகளின் விமானங்களைத் தாக்க முடியாமல் போய்விட்டது என்று கூறப்படுகிறது.

இந்த திடீர் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் திடீர் விமானத் தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டிருப்பதை இலங்கை அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வடக்கில் ராணுவம் மேலும் முன்னேறாமல் தடுக்கும் பொருட்டே விமானத் தாக்குதலில் புலிகள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/08...malai-port.html

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வான்புலிகளுக்கு

நல்ல ஒரு செய்தி

கொன்ச நாளா ஒழுங்கா நித்திரைய் இல்லை இன்டைக்காவது சந்தொசமா படுத்து துங்குவோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு காலமும் கொட்டேக்க, என்ன பக்கத்து வீட்டு பொட்டநாயையோ நெச்சுக்கொண்டிருந்தீங்கள்? :D

எங்க இன்னும் ஒப்பாரி ஒண்டயும் காணேல்ல எண்டுபாத்தன்... வந்துட்டார் ஒருத்தர். :icon_idea:

கூறியதை சரியாக விளங்கிக்கொள்ள இல்லையென நினைக்கிறேன்

நீங்கள் தான் வெற்றிகர தாக்குதல் நடத்தினால் தான் பங்களிப்பு செய்வோம் எண்டு சொல்லுற ஆக்களாச்சே

அதை தான் சொல்ல வந்தேன்

(இது எல்லோருக்கும் பொருத்தமானதல்ல ஒரு சிலருக்கு மட்டுமே)

பி.குறிப்பு: தயவுசெய்து கருத்துக்கு எதிர்க்கருத்து எழுதாதீர்கள் (ஆதரவாக எழுதும்போது மட்டுமே)

ஆம் சில மாதங்களாக விடுதலைப்புலிகள் தோற்றுப் போய்விட்டார்கள் அல்லது மரபு வழித்தாக்குதல்களுக்கான வலுவை இழந்துவிட்டார்கள் என ஆய்வுகளும் ஆரூடங்கள் கூறிய இலங்கை இந்திய புலம்பெயர் மற்றும் வெளிநாட்டு அரசியல் இராணுவ ஆய்வாளர்கள் மற்றும் இராஜதந்திரிகள் என தமக்குத் தாமே பெயர்சூட்டிக்கொள்ளும் வல்லுனர்கள் தற்போது தமது ஆய்வுக்கான தலையங்கங்கள் போட்டிருப்பார்கள்.அவர்களின் ஆய்வுகளை(?) நாம் எதிர்பார்க்கின்றோம்.அதாவது புலம் பெயர் தமிழர்களாகிய நாம் இவர்களுடைய வெற்றுப் பசப்பு வார்தைகளை இனம்கண்டு அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு எமது சுயஅறிவில் சிந்தித்து நாம் கடந்து வந்த பாதைகளை மீட்டுபார்த்து எமது தேசியத்திற்கான ஆதரவினை தொடர்தும் வழங்க வேண்டிய கடமை ஒவ்வெரு புலம் பெயர் தமிழனுக்கும் உண்டு.

எமது வான்புலி வீரர்களுக்கு வாழ்துக்கள்

அவர்களுடைய இலக்குகள் எப்போதும் “வெற்றி” தான்.

யாழவன்

நன்றி வணக்கம்.

எல்லாம் சந்தோசம் தான்.. இந்த சந்தோசத்தோட எங்கட வன்னி சனத்தினுடைய சோத்துக்கும் கொஞ்சம் வழி காட்டுங்கோவன்....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42895

Edited by uthayam

இதுவும்... ஒரு அருமையான (இராணுவ) காய் நகர்த்தல்.... :D :D :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.