Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, ஹோவர்கிராப்ட் கலம் மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்

Featured Replies

நாகர்கோவில் கடலில் கடற்சமர் இடம்பெற்றுள்ளது.

SLN Dvora, hoover craft sunk in major naval clash - Sea Tigers

[TamilNet, Saturday, 01 November 2008, 02:53 GMT]

Naval flotillas of the Sea Tigers of the Liberation Tigers of Tamileelam (LTTE) engaged in a major clash with the Sri Lanka Navy (SLN) gunships in the seas off Naakarkoayil in Vadamaraadchi East Saturday morning from 5:15 a.m. to 7:00 a.m., sinking an SLN Dvora Fast Attack Craft (FAC) and a hoover craft, and causing damage to another vessel. Sea Tiger officials told TamilNet that 20 attack crafts took part in the mission and seven Black Sea Tigers laid down their lives in the operation.

The SLN was forced to withdraw, towing the damaged vessel to Kaangkeasanthu'rai (KKS) naval base, the Sea Tigers said.

The clash was reported off the Kudaththanai coast.

Sri Lanka Army has launched heavy artillery barrage across the Northern Front following the sea battle.

Source: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27351

கடற்புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே இன்று அதிகாலை 5.15 மணிமுதல் காலை 7:00 மணிவரை நாகர்கோவில் கடற்பரப்பில் கடுமையான சமர் ஒன்று நடைபெற்றுள்ளது.

20 வரையான கடற்கலங்களுடன் சென்ற கடற் புலிகளின் தாக்குதல் அணி கடற்படையினருக்கு எதிராக கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடும் சமர் வெடித்தது. சிறிலங்கா கடற்படையினருக்கு ஆதரவாக வடமராட்சி பகுதிகளில் உள்ள படைத்தளங்களிலிருந்து கடுமையான எறிகணைத் தாக்குதலும் கடற்புலிகளின் படகுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டது.

எனினும் கடற்படையினருக்கு எதிரான கடற்புலிகளின் தாக்குதல் படகுகளை கடுமையாக நடத்திக் கொண்டிருக்க கடற்கரும்புலிகள் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு, கூவர் கலம் என்பவற்றைத் தாக்கி மூழ்கடித்ததுடன் ஜெற் கலம் ஒன்றை கடுமையாக சேதப்படுத்தினர். இதன்போது கடற்படைக்கு பலத்த உயிரழிவுகள் ஏற்பட்டுள்ளன.

கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறிலங்கா கடற்படையினர் தேசமடைந்த தமது கடற்கலத்தை கட்டியிழுத்துக்கொண்டு காங்கேசன்துறை நோக்கி பின்வாங்கினர்.

கடற்படையினரின் கடற்கலங்களை மூழ்கடித்த இந்த வெற்றிகரச் சமரில் ஏழு கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்துள்ளனர்.

நீண்ட கால இடைவெளியின் பின்னர் சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக பெருமெடுப்பில் கடற்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: மின்னல் - மூலம்: தமிழ்நெட்

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது இன்னுயிரை துச்சமாக மதித்து எதிரியை புறமுதுகிட வைத்த அந்த ஏழு கரும்புலிகளுக்கும் வீர வணக்கங்கள்.

56025959_05a9119ad7.jpg

வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, ஹோவர்கிராப்ட் கலம் மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்

[சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:29 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 20 டோறா பீரங்கிப் படகுகளுடன் ஹோவர்கிராப்ட் கலம் நிலைகொண்டிருந்த போது அந்த அணி மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 5:15 நிமிடத்துக்கு கடற்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதல் வேளையில் சிறிலங்கா தரைப்படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்திய அதேவேளை, சிறிலங்கா வான்படையினரின் மிகையொலிவேகத் தாக்குதல் வானூர்திகளும் தாக்குதல் நடத்தியுள்ளன.

இவற்றுக்கு மத்தியில் சிறிலங்கா கடற்படையினருக்கு கடற்புலிகள் அழிவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் தரையிறக்க கொமாண்டோத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஏ-530 தொடரிலக்கத்தினைக் கொண்ட ஹோவர்கிராப்ட் கனரக கலம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீருந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

பெரும் இழப்புக்களையடுத்து சிறிலங்கா கடற்படையின் கலங்கள் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடிவிட்டன.

இம் மோதலில் கடற்புலிகள் தரப்பில் ஏழு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கடற்கலமான கூவர் கலமானது கடலில் மாத்திரமல்ல தரையிலும் பயணிக்கக்கூடியது.

slnwallpaper4xc1.jpg

களவெற்றிக்கு வாழ்த்துக்கள். களமாடி வெற்றிவாகை சூடிய மாவீரர்களிற்கு எனது வீர வணக்கங்கள் உங்கள் வீரத்திலே எங்கள் ஈழம் மிளிர்கின்றது தாய்க்குத்தன் பிள்ளை பாதுகாப்பு எம் ஈழத்தாய்க்கும் நீங்கள்தானே . . . .

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரரான வேங்கைகளுக்கு வீரவணக்கம் !

களமாடிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

கடல் கரும்புலிகளுக்கு வீர வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடல் கரும்புலிகளுக்கு வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

தந்தானானே தாரேனானா தானா ஏய்

தந்தானானே தாரேனானா தானா.........

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலி இதயம் இரும்பென எழுதும்

கவிதைகள் பொய் ஆகும்

அது இரும்பினிலில்லை அரும்பிய

முல்லை என்பதே மெய் ஆகும்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே

யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள்

சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும்

வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர்

அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை

யாருக்கு இங்கே இது தெரியும்

கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென

தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும்

இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர்

அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் சங்கமித்த கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்

வீரவேங்கைகளுக்கு சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்.

hovercraft_20081101001.jpg

சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள ஹோவர்கிராப்ட் கனரக கடற்கலம்

hovercraft_20081101004.jpg

சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள ஹோவர்கிராப்ட் கனரக கடற்கலம்

hovercraft_20081101003.jpg

thanks

puthinam

வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு,

ஹோவர்கிராப்ட் கலம் மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்

[சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:29 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா

கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீரூந்து

விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின்

20 டோறா பீரங்கிப் படகுகளுடன் ஹோவர்கிராப்ட் கலம் நிலைகொண்டிருந்த போது அந்த அணி மீது

இன்று சனிக்கிழமை அதிகாலை 5:15 நிமிடத்துக்கு கடற்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதல் வேளையில் சிறிலங்கா தரைப்படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்திய

அதேவேளை, சிறிலங்கா வான்படையினரின் மிகையொலிவேகத் தாக்குதல் வானூர்திகளும் தாக்குதல்

நடத்தியுள்ளன.

இவற்றுக்கு மத்தியில் சிறிலங்கா கடற்படையினருக்கு கடற்புலிகள் அழிவுகளையும் சேதங்களையும்

ஏற்படுத்தியுள்ளனர்.

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா

கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீரூந்து

விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

பெரும் இழப்புக்களையடுத்து சிறிலங்கா கடற்படையின் கலங்கள் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி

ஓடிவிட்டன.

இம் மோதலில் கடற்புலிகள் தரப்பில் ஏழு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுக்கு

தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

puthinam

Edited by vasisutha

வீரகாவியம் படைத்து, கெகலியவின் சொற் செருக்கை அடக்கிய கடற் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

அலை மாகடல் நிலம் வானிலுன்

அணிமாளிகை ரதமே

அவை ஏறிடும் விதமே

உனததிகாரம் நிறுவுவாய்!

கொலைவாளினை எடடா!

மிகு கொடியோர் செயல் அறவே!!

குகை வாழ் ஒரு புலியே!!!

உயர் குணமேவிய தமிழா!!!!

- - - புரட்சிக்கவி பாரதிதாசன் - - -

Edited by vettri-vel

வசிசுதா 2ஆவர் படம் துருப்புக்காவி jetliner. சேதமடைந்தது jetliner ஆக இருக்கும் போல் தான் உள்ளது.

ஆனால் waterjet என்று செய்திகளில் இருப்பது குழப்பமாக இருக்கு.

குறுக்ஸ் இதானே வேணாம். எனக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாது.. நீங்களே அதுபற்றி விபரமாக போடுங்கோ.

நாங்களும் தெரிஞ்சு கொள்ளுவோம்.

நீண்ட இடைவெளியின் பின்னர் கடற்புலிகள்ளின் நடவடிக்கைகள் தலைப்பட்டுள்ளது... கடற்பிலிகளை முடிக்கியாச்செண்டு கோத்தபாய சொன்னதும் பொய்யாப்போச்சு...

விரகாவியமான உறவுகளுக்கு வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: குறுக்கு, வசி !

சேதமடைந்த மூன்றாவது கலம் தாக்குதல்க் கலமல்ல. அது ஒரு துருப்புக்காவி...இப்படித்தான

  • கருத்துக்கள உறவுகள்

hovercraft.jpg

The hovercraft was invented by Christopher Cockerell, an English electronic engineer in the 1950s. The first full-sized hovercraft, the SRN1 was not built and ready for testing until May 28, 1959.

Because of friction between the boat and the water, boats could not be made to travel faster without using powerful jet engines which use a lot of fuel, so Christopher Cockerel thought of something to reduce the friction. To reduce any kind of friction, you need a lubricant. Cockerel thought air might be the answer. After attempting many experiments he came up with an solution. A curtain of air right around the hull of the boat in the form of an annular, or ring-shaped, jet was the answer to friction.

The hovercraft has improved in strength over the years and many other developments have also taken place. They include:

The Hoverbed: which is a light fabric bed supported on a rigid frame, which is used in the treatment of severe burn cases: it allows the injuries to dry up rapidly and heal much more quickly.

The hover-transporter: it is a heavy-load transporter working on the hovercraft is used for moving bulky loads

The hoverkiln: this device was used for a time in the manufacture of delicate china, which ‘floated’ through the kiln on a cushion of air.

The hovermower: Lawnmowers which ride over the grass on a cushion of air are proving of great value on banks and eneven ground as well as stretches of level turf.

Life would be quite different without the invention of the hovercraft. By using the hovercraft, people could travel to places quicker by sea and also the ability to transport heavy loads by sea quicker is also a great advantage to us. Many hovercrafts travel across the English Channel and they have reduced the journey time to 35 minutes, from 90 minutes on a ferry. Many people still believe that the hovercraft is a perfect military tool as it is the only true amphibious vehicle that can travel at the same speed over land and ocean.

http://images.google.ca/imgres?imgurl=http...l%3Den%26sa%3DG

களமாடி உயிர் நீத்த கரும்புலி வீர வேங்கைகளே உங்களுக்கு என் வீர வணக்கங்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

கடல் கரும்புலிகளுக்கு வீர வணக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.