Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குமாகாண முதலமைச்சரின் செயலாளர் உட்பட இருவர் சுட்டுக்கொலை!

Featured Replies

இன்று காலை கொழும்பில் உள்ள அத்துருகிரிய பகுதியில் குமாரசாமி நந்தகோபன் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்

தகவல்:

அததெரண.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=460577

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

பிள்ளையானின் செயலாளர் சுட்டுக்கொலை

[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008, 08:45.55 AM GMT +05:30 ]

அத்துருகிரியவில் காரொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரு சடலங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒருவரது சடலம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் ரகு எனப்படும் குமாரசுவாமி நந்தகோபனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட காரில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினருடையது என அடையாளம் காணப்பட்டபோதிலும் மற்றைய சடலம் இதுவரை யாருடையதென தெரியவரவில்லை.

http://www.tamilwin.com/

செயலாலர் பற்றி தவறான செய்திகலல பறப்பி படுகொலை செய்துவிட்டார்கள் போல?

அதுவும் பாதுகாப்பு இல்லாமல போய் இருப்பார்?

சூட்டது புது எம்பியின் ஆக்களாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் புலநாய்வுதுறையின் வேலைதான்

இரு களைகளுக்கு சங்கு ஊதியிருக்கிறார்கள் அந்த வகையில்..................

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி

யாரிந்த குமாரசாமி நந்தகோபன்

எங்:கேயோ கேள்விப்பட்ட பெயர்போல் உள்ளது??????

  • கருத்துக்கள உறவுகள்

KUGATHASAN Posted இன்று, 03:41 PM

அதுசரி

யாரிந்த குமாரசாமி நந்தகோபன்

எங்:கேயோ கேள்விப்பட்ட பெயர்போல் உள்ளது???

அவுசில் இருந்து பறந்து வந்ததாக கேள்வி திருகோணமலையை சேர்ந்தவர் :)

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் இருந்து பறந்து வந்ததாக கேள்வி திருகோணமலையை சேர்ந்தவர் :)

புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

ரி.எம்.வி.பி(யாழ்கள உறுப்பினர்கள் முக்கிமாக கவனிக்க: இங்கு இந்த புல்லுருவிகளின் பெயரைத் நான் தமிழில் பெயர் குறிப்பிடவில்லை) அமைப்புக்குள்ளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவி இருக்கினமெண்டு நேற்று அரசதரப்பு அறிக்கை விட்டபோதே நினைச்சனான் இனி பிள்ளையானுக்கு சங்குதானெண்டு. அதுபோக உவன் கருநாய் திரும்பிவந்து அரசதரப்போடை நல்ல டீல் ஒண்டு செய்திருக்கிறான் போலத்தான் தெரியுது. பொறுத்திருந்து பாப்பம் யாருக்கு முதலிலை சேடம் இழுக்குதெண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை?

கருணா இங்கிலாந்தில் சிறையில் இருந்த நேரம் அவுஸ்ரேலியாவில் இருந்து பிள்ளையானுடன் போய் ஒட்டிக்கொண்டவர். என்றும் இவர்ஊடக புலிகள் கருணா குழுவில் ஊடுருவி விட்டார்கள் என்றும் கதை அடிபட்டது :)

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இன்று அத்துறுகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் வாகனத்தின் சாரதியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானாவின் உத்தியோகபூர்வ சாரதியான சமீர் என்பரே சம்பவத்தில் உயிரிழந்த மற்றைய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானாவின் வாகனத்திலேயே குமாரசுவாமி நந்தகோபன் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குமாரசுவாமி நந்தகோபன் பிள்ளையான் அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.ajeevan.ch/content/view/7261/1/

அதுசரி

யாரிந்த குமாரசாமி நந்தகோபன்

எங்:கேயோ கேள்விப்பட்ட பெயர்போல் உள்ளது??????

raku.jpg

நன்றி-neruppu.org

மேலுள்ல படத்தில் சிவப்பு வட்டத்தினுள் இருப்பவர்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ குறிசெயலாளருக்கா???

தலைவருக்கா???

முதலை அமைச்சருக்கா???

பேச்சாளருக்கா???

எதென்றாலும்

ஒரு படிதான்

  • கருத்துக்கள உறவுகள்

KUGATHASAN Posted இன்று, 02:48 PM

புரியவில்லை?

குகதாசன் கருணா லண்டனுக்கு ஓடிய நேரம் பார்த்து பிள்ளையானுடன் கூட்டு சேர்திருந்த்தார் இவர் ஒரு அவுஸ்ரேலிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது தனது மனைவியிடம் விவாகரத்து பெற்று மூன்று குழந்தைகளையும் விட்டு விலகியிருந்தார் அவுஸ்ரேலியாவில் சிட்னி சிற்றி ரயில்வேயில் பணிபுரிந்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான்,கருணா போன்ற தலைகள் இருக்கும் போது ஏனிந்த வால் என்று தட்டி போட்டாங்க போல. :)

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன் கருணா லண்டனுக்கு ஓடிய நேரம் பார்த்து பிள்ளையானுடன் கூட்டு சேர்திருந்த்தார் இவர் ஒரு அவுஸ்ரேலிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது தனது மனைவியிடம் விவாகரத்து பெற்று மூன்று குழந்தைகளையும் விட்டு விலகியிருந்தார் அவுஸ்ரேலியாவில் சிட்னி சிற்றி ரயில்வேயில் பணிபுரிந்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருணா இங்கிலாந்தில் சிறையில் இருந்த நேரம் அவுஸ்ரேலியாவில் இருந்து பிள்ளையானுடன் போய் ஒட்டிக்கொண்டவர். என்றும் இவர்ஊடக புலிகள் கருணா குழுவில் ஊடுருவி விட்டார்கள் என்றும் கதை அடிபட்டது :)

தகவலுக்கு நன்றி

அந்தத்தம்பியா ??? இது

இவர்தானே தமக்குத்தலைவர் என்று பிள்ளைவாழ் சொன்னவர்???????

அடப்பாவி

அவுஸ்ரேலியவை விட்டுப்போகும்போதே எழுதியாச்சு உனக்கு............????

ரி.எம்.பி அரசியல் கட்சியாக பதிவு பண்ணும் போது, அதன் தலைவராக இவரின் பெயர் தானே முதலில் இருந்தது?

சந்திரகாந்தன் கட்சியிற்குள் இருக்கும் இவரினை தான் புலிகளின் முகவர் என முரளிதரன் குற்றம் சுமத்தி வந்தார். இது வரைக்குமான சந்திரகாந்தன் - முரளிதரன் மோதலில் கொல்லப்பட்ட இரண்டாவது முக்கிய புள்ளி இவர். முரளிதரன் ஆதரவாளரான சிந்துஜனுக்கு (ரி.ஆர்.ஓ பணியாளர்கள் கொலையிலும் , பாலியல் வல்லுறவிலும் நேரடியாக பங்குகொண்ட நபர்) அடுத்து கொல்லப்பட்ட முக்கிய நபர்தான் என நினைக்கின்றேன். இதன் மூலம் மேலும் முரளிதரன் - சந்திரகாந்தன் மோதல் வலுவடைந்து, இன்னும் சிலரின் காவு வாங்குதல் மூலம் ரி,எம்.பி சிதைக்கப்படலாம்.

Edited by NIZHALI

முதலமைச்சரும் ஆயுததாரியுமான பிள்ளையானின் செயலாளர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

வெள்ளி

கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆயுததாரியுமான பிள்ளையானின் செயலாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் இருந்து பறந்து வந்ததாக கேள்வி திருகோணமலையை சேர்ந்தவர் :rolleyes:

அவுஸிலிருந்து பறந்து வந்து , அத்துருகிரியவிலை சாகவேணும் எண்டு அவற்ரை தலையில எழுதியிருக்கு போல .......... போகட்டும் விடுங்கோ .

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவின் பிரத்தியேக செயலாளரும் சாரதியும் நேற்று அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

சுட்டவர்களை அடையாளம் காணமுடியாவிட்டாலும் சுடப்பட்டவர்களையாவது சரியாக அடையாளம் காண முடிகிறதா?

கிழக்கின் உதயத்தினை காருக்குள்ளேயோ கீழேயோ தேடுகிறான் போல ......... என்னே ஒரு துப்பறிவு!

97307560bm7.jpg

14550920it5.jpg

26099889jz2.jpg

படங்கள்: நன்றி பதிவு இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு முதலமைச்சர் பிள்ளையான் அந்த மகிழூர்ந்தில் கொல்லப்பட்டவர்களுடன் கொழும்புக்குத் வந்ததாகவும், தனிப்பட்ட விடயமாக ரகு பின்னர் அத்துகிரிய பகுதிக்குச் சென்றபோதே கொல்லப்பட்டதாகவும் டெயிலி மிரர் சொல்லுகின்றது. எனவே மாண்புமிகு முதலமைச்சரைக் கொல்ல எடுத்த முயற்சி பலிக்கவில்லை.

கட்சியின் அதிகாரபூர்வமான தலைவரின் மரணத்தை அடுத்து அப்பதவி உண்மையான தலைவருக்குப் போய்ச் சேர வாய்ப்புள்ளது. அதற்குள் அவர் போய்ச் சேராமல் தப்பி இருக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையானின் வலதுகரத்தை, கருணாவின் இடதுகரம் போட்டது.

இன்று கொழும்பு புறநகர் பகுதியில் பிள்ளையானின் வலதுகரமாக திகழ்ந்த ரகு என அழைக்கப்பட்ட குமாரசாமி நந்தகோபனை, கருணாவின் இடதுகரம் ஒன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

கொழும்பு புறநகர் பகுதியான அத்துருகியவில் இன்று, ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் பிள்ளையான் பிரிவின் முக்கியஸ்தகர் ரகுவுடன் இன்னொரு ஒட்டுக்கும்பல் உறுப்பினர் கருணா பிரிவால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.