Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது அன்பின் மோகன் அண்ணா, தமிழரின் கரி நாளான இன்று இப்படி ஒரு முடிவை எடுத்தது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை தந்தது. என்றாலும் இம்மாலை பொழுதில் என்னை சுதாகரித்துக்கொண்டு எனது மன கிலேசத்தையும் சொல்ல வேண்டும் என்பதில் மிக்க அவா.

தற்செயலாக யாழில் கால் பதித்தவன் நான். அன்பு நண்பன் சாணக்கியனுடன் ஏற்பட்ட ஆங்கில வாதத்தால் யாழில் தமிழில் எழுத வேண்டும் என்ற உந்துததால் யாழில் காலடி வைத்தேன்.உண்மையை சொல்ல போனால் எனது பல்கலைகளக வாழ்வில் செலவளித்த நேரத்திலும் பார்க்க யாழுக்கு என்னால் செலவளித்த்த மணித்தியாலங்கள் அதிகம் என்பது தான் நிதர்சனம்.

என்றாலும் பல விதப்பட்ட சிந்தனைப்போக்குள்ள மக்களையும் உள்வாங்கி கொண்டுள்ள யாழ் களம் கடந்த 10 வருடங்களாகாக பல விதப்பட்ட தமிழ் உள்ளங்களை உள்வாங்கியுள்ள பெருமையயும் கொண்டுள்ளது.

குறிப்பாக ஏன் இப்படியான வாதங்கள் யாழில் ஏற்படுகின்றது என பார்த்தால் எமது போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் பல இயக்கங்கள் பல கொள்கையினூடாக உருவாக்கப்பட்டன. அதனூடே பல விதமாக எமது மக்களின் சிந்தனை போக்குகள் வித்தியாசப்படுகின்றன. நான் குறிப்பிடுவது விடுதலை போராட்டம் பற்றி. இப்படி என்னால் ஆராட்சி செய்து கொண்டே போகலாம்.

என்னால் மோகன் அண்ணாவிடம் ஒரு கேள்வி 10 வருடங்களாக சாதிக்காத எதனை இப்போ சாதிக்க முயலுகிறீர்கள்? அதாவது இப்போ மட்டும் எப்படி ஏனையவர்களின் தவறுகள் உங்களை பாரதூரமாக பாதிக்கின்றன. அத்தோடு களத்தை மூடுமளவுக்கு பொறுமையை சாதித்தீர்கள்?அல்லாமலும் குறிப்பிட்ட திரிகளை மூடிவிட்டு வந்து எங்களிடம் நியாயம் கேட்பது எவ்விதத்தில் நியாயம்.?(உங்களுடைய தளம் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்)

மோகன் அண்ணா உங்களின் உள்ள குமுறல்கள் புரிகின்றது. இக்களத்தில் சில காலம் இருந்தாலோ என்னவோ ஒரு குடும்பம் போல நான் எண்ணுகிறேன். இக்கட்டான கால கட்டத்தில் எமது பேதங்களை மறந்து ,களத்தில் அல்லும் பகலும் விடியல் தேடும் எமது போராளிகளுக்கும், மக்களுக்கும் அளப்பரிய தொண்டாற்றும் யாழ் களத்தை மூடுவது சாலச்சிறந்தது அல்ல அல்லவே அல்ல.

  • Replies 163
  • Views 23.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரி மோகன் அண்ணா, யாழை தொடர்ந்து நடாத்துவதில் பிரச்சனையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து வையுங்கள். உங்களின் சகோதரன் போல கேட்கிறேன். ஏனெனில் இத்தளம் பல தமிழ் நாட்டு நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது மட்டுமல்லாமல் அவர்களின் பங்களிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நன்றி வேலவன் போன்ற சகோதரர்களுக்கு.

மோகன் அண்ணா 10 வருடங்கள் உங்களின் பின்னால் பல இன்ப துன்பங்களிலும் பங்காற்றிய அக்காவுக்கு நன்றிகள் பல சொல்லி விடை பெறுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தை மூடப்போறீங்களா...ஃ?? சீ சீ சும்மா தமாசு தானே! மோகன் அண்ணா

பாருங்க எல்லாரும் சீரியஸ் என்று நினைச்சு கருத்தெழுதினம் ஒருக்க வந்து சொல்லீட்டு போறது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களம் பெரும்பாலானோர் பார்க்கும் தளங்களில் ஓன்று இந்த தளத்தை நிறுத்துவதால் பாதிக்கப்படப்போவது அவர்களே ஆனால் மோகன் அண்ணா தான் இறுதி முடிவு எடுக்கவேண்டும்.இந்த யாழ்களமானது உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் தளமாக விளங்குகிறது இங்கு நடக்கும் சில செயல்கள் வேண்டத்தகாதவையே அவற்றை நீக்கும் வழிவகைகளை செய்துவிட்டு தளத்தை தொடரலாம் என்பது எனது தாழ்வான வேண்டுகோள் எது எப்படியாயினும் மோகன் அண்ணா எடுக்கும் முடிவுகள் அனைத்திற்கும் நானும் பக்கபலமாக இருப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் மோகன் அண்ணா ,

நீங்கள் யாழ் களத்தை மூடுவது என்று முடிவெடுத்திருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ,

மற்றைய தளங்களுடன் ஒப்பிடும் போது , இங்கு தனிந்பர் தாக்குதல் என்பது குறைவு என்பது என் அபிப்பிராயம் . என்றாலும் அதனை முற்றாக தவிர்ப்பது சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை சார்ந்தது .

மேலும் அங்கத்துவ உறுப்பினர்களிடம் 6மாத சந்தாவாகவோ , ஒரு வருட சந்தாவாகவோ அங்கத்துவ பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கின்றே.

ஏனெனில் உங்கள் ஒருவராலேயே வருடக்கணக்கில் பணத்தை , இதற்குள் போட்டுக்கொண்டிருக்க முடியாது .

யாழ் களத்தை மூடுவது என்ற பேச்சே எடுக்காதீர்கள் . ஒவ்வொரு நாழும் யாழ்களத்திற்கு வந்து போகாவிட்டால் அன்று ஏதொ குறை இருப்பது போல் உணர்வு ஏற்படும் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தளத்தினை தொடர்வதா

வணக்கம் மோகன்,

யாழ்களத்தை தொடர்வது தான் எனக்கும் விருப்பம்.இதனால் பல நன்மைகளை நான் அடைந்துள்ளேன்.

இல்லை என்று நீங்கள் மூடுவது என்று நீங்கள் தீர்மானித்தால்.

எதை நீ எடுத்து கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கபட்டது

எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கபட்டது

எது இன்று உன்னுடையதோ நாளை மற்றொருவருடையதாகிறது

என்று சொல்லி மனதை தேற்றி போட்டு இந்த சிட்னியில வாற இலவச பேப்பரில எழுத தான் இருக்கு ஆனா அவர்கள் பிழை கண்டு பிடித்து ஆக்கத்தை பிரசுரிக்கமாட்டார்கள். :D

இங்கே கருத்தொருமித்து இல்லாது எல்லாரையும் நக்கலும் நளினமாக உண்மையான தீவிர பிரச்சினைகளை கூட அணுக முற்பட்டதன் பின் விளைவுகள்தான் இவை...

கருத்துக்களை புரிய முடியாதவர்களுக்கு புரிய வைக்கும் நோக்கமே இல்லாது, அவர்களை சீண்டுவதும் அதற்கான பாணியில் அவர்களிடம் இருந்து பதில் வருவதையும் தடுக்க முடியவில்லை...

எவரையாவது எப்போதாவது குறை காண வேண்டும்... நட்புறவு என்பது மூண்றாம் பட்ச்சம் ஆகிவிட்டது....

கூட இருந்து கருத்து எழுதுபவர்களுடனையே பகைமை பாராட்டுபவர்கள், தாயக நலன் பற்றியும் மக்கள் ஒற்றுமை பற்றியும் பேசுவதுதான் இப்போதைய நாகரீக வழர்ச்சியாக உள்ளது...

ஆகவே மாற்றம் வேண்டும்... வராவிட்டால் மோகன் அண்ணாவின்( இவ்வளவுகால) உழைப்பு வீண்... இதை விட்டு அண்ணியையும் குழந்தைகளுடனும் நேரத்தை செலவளிப்பது நல்லது...

நீங்கள் சொல்வது 100% உண்மை.

மோகனின் மன உளைச்சல் புரிகிறது,

யாழில் இருக்கும் பிரதான பிரச்சினைகளும், சில நடைமுறைத் தீர்வுகளும் ஆலோசனைகளும் ,

1) 24 மணி நேரமும் இருந்து, நிமிடதுக்கு ஒரு பதில் எழுதுபவர்கள் ஆளமாகச் சிந்திக்காமால், வாசிக்காமால் வினாடிக்கு வினாடி மனக் கட்டுப்பாடு இன்றி எதிர்வினையாற்றுவது.அனேகமான விதண்டாவாத்னக்கள் இதனலாயே ஏற்படுகின்றன.

இதனை நிர்வாக ரீதியாக் கட்டுப்படுத்த, பதில் எழுதியவுடன் பிரசுரிப்பதை நிற்பாட்டி விட்டு , சில மணிதியாளங்களின் பின் பிரசிரித்தல் அல்லது மட்டுறுதியபின் பிரசுரித்தல்.

2)ஒருவர் ஒரு நளைக்கு பத்து இடுகைகள் மட்டுமே இடலாம் என்னும் கட்டுப்பாட்டைக் கொண்டு வருதல்.இதன் மூலம் வீணான அலட்டல்கள் ,விதண்டாவாதங்கள் தவிர்க்கப்படலாம்.

3)ஒருவர் ஒரு திரியை ஆரம்பிக்க வேண்டும் எனில், அதனை ஒரு சுய ஆக்கத்தின் மூலமே ஆராம்பிக்கக் கூடியவகையில் அமைத்தல்.இது கட்டுரை,கதை,கவிதையாக இருக்கலாம்.

4)இன்னொருவரின் ஆக்கத்தை இங்கெ வெட்டி ஒட்ட விரும்பினால், அந்த ஆக்கம் பற்றிய சுய கருதுக்களை காடுரையாக எழுதிய பின்னரே அதனைப் பிரசுரிக்க முடியும் என்னும் கட்டுப்பாட்டைக் கொண்டு வருதல்.மூல ஆக்கத்தின் இணைப்பை கட்டாயாம் கொடுக்க வேண்டும்.

5)அலட்ட விரும்புவர்களுக்கு,விதண்டாவ

நாரதர் நல்ல யோசனை.

யாழ் களத்தின் மூலம் பெற்ற பயனொன்றினை இதில் பகிர்ந்து கொள்கிறேன். அது இக்களம் மூடப்படுவதை தடுத்து நிறுத்த கோரும் ஆர்வலர்களின் கருத்தினை வலுப்படுத்தும் என நம்புகிறேன்.

பொதுவாக சிங்கள நண்பர்கள் என்னதான் இதயசுத்தியுடன் எம்முடன் பழகுவதுபோல் காட்டிக்கொண்டாலும் இனமேலாதிக்க உணர்வு இடைக்கிடையே தலைக்காட்டவே செய்யும். அதுவும் தற்போதைய தோற்றப்பாடுகளின் அடிப்படையில் இன்னும் அதிகமாகவே காணப்படும்.

இவ்வகையில் சிங்கள நண்பரொருவர் என்னிடம் இனப்போர், பயங்கரவாதப்போர் சம்பந்தமான வாதத்திற்கு என்னுடன் வந்தார். யாழ்கள செய்திகள், அதனூடாகக் கிடைக்கும் தகவல்கள் அதன் உண்மைத்தன்மைகள் கிட்டத்தட்ட 1956 இலிருந்தான தற்போது வரையிலான சிற்சில தகவல்களை சேர்த்து வைத்திருந்தேன். அதனைக் காட்டி அவருடன் வாதிட்டு இது அரச பயங்கரவாதத்தினால் உருவான போர் என நிறுவியபோது என் தகவல்களை அவரால் மறுக்கமுடியவில்லை. அப்படியான ஆதாரங்களை யாழ்கள உதவியுடன் திரட்டியிருந்தேன். தமிழர்களின் நியாயமான உரிமைகளை வழங்கியிருப்பின் இது நிகழ்ந்திருக்காது என வலியுறுத்தினேன்.

இறுதியில் எனக்கு அவர் பூச்சாண்டி காட்ட எண்ணி

'நீ புலியா' என்றார்

அதற்கு நான் 'தமிழர்களின் உரிமைகளை புலிகள்தான் வலியுறுத்தலாம் என்கிறீர்களா? ஆதலால் அவர்களே தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் என்று நீங்களே நிறுவுகிறீர்கள்' என்றேன்......வாயடைத்துப்போனார்.

எனவே யாழ்களம் தகவல் திரட்டியாக திகழ்கிறது. கருத்துக்கள் பகிரப்படும்போது உண்மைத் தன்மை பெரும்பாலும் உறுதிப்படுத்தப்படுகிறது. பல இடங்களிலிருந்தும் ஒருவிடயம் குறித்த ஆதாரங்கள் வந்துசேருகின்றன. இதனால் எம்போராட்டத்தின் நியாயத்தன்மையை எந்த இடத்திலும் ஓர்மத்துடன் உரைக்கமுடியும்.

எனவே யாழ் களம் தொடரவேண்டும்.....நியாயமான கட்டுப்பாடுகளுடன்...............

யாழ்க் களம் பிரியோசனமான கட்டுரைகளை தகவல்களை வழங்க வேண்டுமாகில், wiki விகியைப் போன்ற ஒரு தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தலாம்.ஒரு திரியில் கூறப்பட்ட பலரது காத்திரமான கருத்துக்கள் ஒரு கட்டுரையில் தொகுக்கப்பட்டு, ஒரு தொகுப்பாக உருவாக்கப்படலாம்.

இவ்வகையான செயற்பாடுகள் தொழிற்துறை ரீதியான கருத்துக் களங்களில் பல தேசங்களிலும் இருக்கும் தொழில் நுட்பவியளாளரின் அனுபவத்தையும் அறிவையும் பாவித்து தகவற் கட்டுரைகளை உருவாக்கப்பயன் படுத்தப்படுகிறது.திரியை ஆரம்பிப்பவர் தொகுப்பளாராகவும், மட்டுறுதினர் , நடுவராகாவும் இருந்து இந்தத் தொகுப்பைச் செய்யலாம்.

மூடா வேண்டாம் என சொல்வதோடு நிற்காமல்...அண்ணாவில் பாரத்தில் பாதியை நாமும் சுமப்போம்..நாரதர் போன்றோரின் கருத்துக்களை செவிமடுப்போம்..

தீர்வு என்ன என்பதை மட்டும் பேசுவோமே..

ycia9.png

இதுவரை மோகன் அவர்கள் நேரடியாக எமக்கு எவ்வித பதில்க் கருத்தையும் தெரிவிக்காது விட்டாலும். மேலேயுள்ள மோகனின் அறிவித்தலும், களத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் இளைஞனின் MSN இல் "யாழ் இணையம் புதுப் பொலிவுடன் வரும்" என்ற வாசகமும் களத்திற்கு ஆபத்தில்லை என்பதை பறை சாற்றுகின்றது. அதுவரைக்கும் நன்றிகள்.

நல்ல செய்தி சொன்ன வசம்புண்ணா வாழ்க

நன்றி வசம்பு

ம்ம்... மகிழ்ச்சியான செய்தி. புதுப்பொலிவுடன் யாழ்களம்... :D

நன்றி வசம்பு அண்ணை. :D

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் தங்களின் முடிவை எண்ணி வருந்துகிறேன் காரணம் இந்த யாழ் களமானது இன்று என்னை முதலில் கணணியில் தமிழில் எழுத வைத்துள்ளது அதற்க்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்

முடிவு உங்கள் கையில்.......

நான் யாழ் களத்தில் யாருடனும் சண்டை போடவிரும்மவில்லை அதனால் எனது கருத்துக்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்க்காக எழுதப்படுவது

அதனால் என்னருமை முகம் தெரியாத சகோதரர்களிடம் இருந்து கண்ணீர் மல்க விடை பெற்றுக்கொள்கின்றேன் நன்றி

உங்கள் ஆக்கங்களை படையுங்கள் நான் வாசகனாக :D:D:D

Edited by muneevar

நல்ல செய்தி சொன்ன வசம்புண்ணா வாழ்க

நன்றி வசம்பு

ம்ம்... மகிழ்ச்சியான செய்தி. புதுப்பொலிவுடன் யாழ்களம்... :D

நன்றி வசம்பு அண்ணை. :D

எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். இதற்கு நாமெல்லாம் நன்றி சொல்லல வேண்டியது மோகன் அவர்களுக்குத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி ,,,,,,,,,,,,

யாழ் களம் பல மணி நேர தடங்கலுக்கு பின் வந்ததையிட்டு மகிழ்ச்சி . மேலும் புது பொலிவுடன் நீ.........ண்ட காலம் தொடர வாழ்த்துக்கள் .கள உறவுகளை சோகத்தில் ஆழ்த்த வேண்டாமென்பது அன்புக் கட்டளை .மீண்டும் நன்றி நிலாமதி (அக்கா ) .

  • தொடங்கியவர்

இங்கு களத்திலும், தனிமடல், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் messenger மூலம் கருத்துப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கருத்துக்களத்தில் நான் செலவு செய்யும் நேரம் மிக அதிகம் அத்துடன் பணம். இவ்வளவு நேரம், பணம் செலவு செய்து எந்தளவுக்கு பயன் எனப் பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவு. ஒரு குறிப்பிட்ட அளவு பயனான கருத்துக்களைத் தவிர அதிகமாக தூரநோக்கற்றதும், அரட்டையானதுமான கருத்துக்கள், அவைகளை மட்டுறுத்த வேண்டிய தேவைகள் போன்ற சூழலினாலேயே களத்தினை தொடர்ந்து நடாத்துவதா, விடுவதா என்ற ஒரு மனப் போரட்டம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நேற்று "யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?" என தெரிவித்திருந்தேன். எனினும் அனைவரினதும் வேண்டுகேளுக்கிணங்க நிச்சயம் சில மாற்றங்களுடன் களம் தொடர்ந்து இயங்கும்.

கருத்துக்களத்தில் உடனடியாக இல்லாதுவிடினும் படிப்படியாக நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு வழி செய்யப்படும். அம் மாற்றங்களை ஏற்படுத்தவும் சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. அதற்கு உங்கள் ஆலோசனைகளை தாராளமாக இங்கோ, அல்லது தனிமடல் மூலமாகவே அறியத் தாருங்கள்.

இங்கு களத்தில் யாரையும் கருத்துக்கள் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு விடயம் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், கருத்துக்கள் இருக்கும். கருத்துக்களை எழுதுங்கள். அவற்றை ஆரோக்கியமாக, எழுத்து நாகரீகத்திற்கு உட்பட்டு எழுதுங்கள். நிச்சயமாக அவை வரவேற்கப்படும்.

உங்கள் ஒத்துழைப்புத்தான் சரியான முறையில் களத்தினைக் கொண்டு நடாத்த உதவும். ஒருவர் தவறாகக் கருத்தெழுதினால் அதை நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டுங்கள். முன்னர் குறிப்பிட்டது போல தொடர்ச்சியாக களத்தில் மட்டுறுத்துனர் யாரும் இருப்பதில்லை. அதனால் தவறான கருத்து நீக்கப்படுவதற்கு காலதாமதமாகலாம். அதற்கான சந்தர்ப்பத்தினையும் நிர்வாகத்திற்கு வழங்குங்கள்.

எனினும் அனைவரினதும் வேண்டுகேளுக்கிணங்க நிச்சயம் சில மாற்றங்களுடன் களம் தொடர்ந்து இயங்கும்.

வணக்கம் மோகன் அண்ணா,

மிக்க மகிழ்ச்சி. இங்கு இனி வரும் காலங்களில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வோம்.

மிக்க நன்றி :D

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு களத்திலும், தனிமடல், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் messenger மூலம் கருத்துப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கருத்துக்களத்தில் நான் செலவு செய்யும் நேரம் மிக அதிகம் அத்துடன் பணம். இவ்வளவு நேரம், பணம் செலவு செய்து எந்தளவுக்கு பயன் எனப் பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவு. ஒரு குறிப்பிட்ட அளவு பயனான கருத்துக்களைத் தவிர அதிகமாக தூரநோக்கற்றதும், அரட்டையானதுமான கருத்துக்கள், அவைகளை மட்டுறுத்த வேண்டிய தேவைகள் போன்ற சூழலினாலேயே களத்தினை தொடர்ந்து நடாத்துவதா, விடுவதா என்ற ஒரு மனப் போரட்டம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நேற்று "யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?" என தெரிவித்திருந்தேன். எனினும் அனைவரினதும் வேண்டுகேளுக்கிணங்க நிச்சயம் சில மாற்றங்களுடன் களம் தொடர்ந்து இயங்கும்.

கருத்துக்களத்தில் உடனடியாக இல்லாதுவிடினும் படிப்படியாக நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு வழி செய்யப்படும். அம் மாற்றங்களை ஏற்படுத்தவும் சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. அதற்கு உங்கள் ஆலோசனைகளை தாராளமாக இங்கோ, அல்லது தனிமடல் மூலமாகவே அறியத் தாருங்கள்.

இங்கு களத்தில் யாரையும் கருத்துக்கள் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு விடயம் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், கருத்துக்கள் இருக்கும். கருத்துக்களை எழுதுங்கள். அவற்றை ஆரோக்கியமாக, எழுத்து நாகரீகத்திற்கு உட்பட்டு எழுதுங்கள். நிச்சயமாக அவை வரவேற்கப்படும்.

உங்கள் ஒத்துழைப்புத்தான் சரியான முறையில் களத்தினைக் கொண்டு நடாத்த உதவும். ஒருவர் தவறாகக் கருத்தெழுதினால் அதை நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டுங்கள். முன்னர் குறிப்பிட்டது போல தொடர்ச்சியாக களத்தில் மட்டுறுத்துனர் யாரும் இருப்பதில்லை. அதனால் தவறான கருத்து நீக்கப்படுவதற்கு காலதாமதமாகலாம். அதற்கான சந்தர்ப்பத்தினையும் நிர்வாகத்திற்கு வழங்குங்கள்.

வரவேற்கத்தக்க முடிவு. உங்களுக்கு எம்மாலான சாத்தியமான வழிகளில் ஒத்துழைப்பை நல்கத் தயாராகவே இருக்கின்றோம். :D

நன்றி மோகன் அண்ணா.

நன்றி மோகன் உங்கள் சாதகமான முடிவிற்கு. புதிய உத்வேகத்துடன் களம் இயங்க ஒத்துழைப்புகள் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா , உங்கள் முடிவு வரவேற்கத்தக்கது. :D மிக்க நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.