Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உறவுகளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளே இந்தக் களத்தில் சுமார் 5 ஆண்டுகள் என்னுடைய ஆக்கங்களினாலும் கருத்து்க்களினாலும் பலருடைய கவனத்தினை ஈர்ந்தும் அதே போல பலருடைய கவனத்தினை சிதைத்தும் இருக்கின்றேன். பல பாராட்டுக்கள் பல திட்டுகள் பல கவலைகள் என்று எல்லாவற்றிலும் சம்பந்தப் பட்ட அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு யாழ் களத்தினை விட்டு வெளிறேறும் காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன்.அதே நேரம் இனி வேறு எந்தப் பெயரிலும் வர மாட்டேன் என்று உறுதியாய் தெரிவித்துக் கொள்வதுடன் இனி உறுப்பினராய் இல்லாமல் ஒரு விருந்தாளியாய் மட்டுமே இருப்பேன் என்று கூறி விடை பெறும் அதே வேளை என்னுடைய பல வளர்ச்சிகளிற்கு யாழ்களமும் உதவியது என்பதனை மறக்காமல் அந்தக் களத்தின் மீது எவ்வித மனக்கசப்பும் இல்லாமல் வெளியேறுகிறேன் நன்றி வணக்கம் அன்புடன் சாத்திரி.

  • கருத்துக்கள உறவுகள்

முடிவை மாற்றுங்கள் சாத்திரி. நான் யாழில் கதைகள் பகுதியில் விரும்பிப்படிக்கும் ஆக்கங்களைத் தருபவர்களில் முதன்மையானவர் சாத்திரி. நீங்கள் யாழுக்கு வராவிட்டால் உங்களின் ஆக்கங்களை என்னைப் போன்ற இரசிகர்கள் படிக்க முடியாது. எனவே முடிவை மாற்றுங்கள்.

என்ன??!!!!!!!!!!!!!!!! :unsure:

வேண்டாத விளைவுகளை தவிர்க்க யாழ் நிர்வாகம் சில நடைமுறைகளை கைக்கொள்ளுவது இன்றியமையாதது. அதற்காக, தாங்கள் விலகுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. எணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுப்பது மனித இயல்பு. சிந்தித்து முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள்!

ஒரு ஊடகத்துக்கு அனுப்பப்படும் கருத்துகளோ ஆக்கங்களோ பிரசுரமாகாதவிடத்து.. அனுப்பிய நபர் அந்த ஊடகத்தை புறக்கணித்தால்.. ஊடகம் பரவ முடியாது.. இது பத்திகைகளாயினும் சரி.. வேறு ஊடகங்களாயினும் சரி.. எனவே முடிவும் மீளாய்வும் தங்கள் கையில்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்து ஏன் இந்த முடிவு :unsure: ? நீங்கள் உங்கள் முடிவை மாற்றவேண்டும் என்பதே எனது விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆ.............என்ன சாத்திரியாரே இப்படி .........

அப்போ எப்படி உங்கள் கதைகளை படிப்பது?

உங்க கதைகளின் விசிறி நான்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் உங்கள் முடிவை மாற்றி யாழ் குடும்பத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சென்று வருக சாத்திரி. எம்எஸ்என் பக்கம் வழமை போல வருவீர்கள் தானே? அங்கு சந்திப்போம்...:-)

இங்கு பலர் குறிப்பிட்டது போல உங்கள் கதையின் ரசிகன் நான். அதை நாங்கள் இங்கு இழக்கப் போகிறோம்.

இப்படி ஒவ்வொருவராக விலகிச் செல்கிறீர்கள். களம் சோபை இழக்கிற மாதிரி தெரியுது.

இது உங்கள் முடிவு. எனினும் மீண்டும் ஒரு முறை யோசியுங்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா.. முனி.. சாத்திரி.. என்று கூட்டாளிகள் எல்லாம் ஒன்றாக கிளம்பிட்டினம். ம்ம்... காலச்சக்கரம்.. யாழ் களத்தையும் சுழற்றி விட்டிருக்குது போல..!

யாழ் களத்தால் உருவான சாத்திரியார்.. ஒரு பேப்பரில வருவார் தானே. அவர் இல்லாமல்.. அந்தப் பேப்பரா என்ற நிலையே வந்திட்டுது. :o:unsure:

Edited by nedukkalapoovan

காலச்சக்கரம்.. யாழ் களத்தையும் சுழற்றி விட்டிருக்குது போல..!

யாழ் களத்திலும் குரு மாற்றம் தனது வேலையைக் காட்டுது போல.... :unsure:

யாழ் களத்தால் உருவான சாத்திரியார்.. ஒரு பேப்பரில வருவார் தானே. அவர் இல்லாமல்.. அந்தப் பேப்பரா என்ற நிலையே வந்திட்டுது. :(:o

இது கொஞ்சம் ஆறுதல்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பேசிப் , பறைஞ்சு வெளிக்கிடுற மாதிரியெல்லோ இருக்குது சாத்திரியார் .

உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யுங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி என்னது ? ஏன் உங்களுடைய முடிவை தயவுசெய்து மாற்றுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை இது ஏன் எல்லாரும் இப்படி ஒரு முடிமை எடுக்குறிங்கள்

சாத்திரி அங்கில் முடிவை மாற்றுங்கள்..

கொஞ்சா நாளுக்கு முதல் தமிழ் எழுத வாசிக்க தெரியாமல் இருந்தென் , இங்கை வந்து நீங்கள் எழுதுர கதைகளை வாசிச்சு.. கொஞ்சம் கொஞ்சமாய் எழுத கற்ருகொன்டென்

சாத்திரி அங்கில் தயவு செய்து களத்தை விட்டு போக்க வேன்டாம்... எங்களுடன் இனைந்துருங்கள் எப்பவும்..போக்க வேன்டாம் வேன்டாம் வேன்டாம் வேன்டாம் :):(

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை இது ஏன் எல்லாரும் இப்படி ஒரு முடிமை எடுக்குறிங்கள்

சாத்திரி அங்கில் முடிவை மாற்றுங்கள்..

கொஞ்சா நாளுக்கு முதல் தமிழ் எழுத வாசிக்க தெரியாமல் இருந்தென் , இங்கை வந்து நீங்கள் எழுதுர கதைகளை வாசிச்சு.. கொஞ்சம் கொஞ்சமாய் எழுத கற்ருகொன்டென்

சாத்திரி அங்கில் தயவு செய்து களத்தை விட்டு போக்க வேன்டாம்... எங்களுடன் இனைந்துருங்கள் எப்பவும்..போக்க வேன்டாம் வேன்டாம் வேன்டாம் வேன்டாம் :(:(

ஓம் குட்டி பையா ......... முந்தி நீங்கள் எழுதினதை நானும் வாசிக்க முடியாமல் கஷ்டப்பட்டேன் . இப்ப எவ்வளவோ பரவாயில்லை . :)

சாத்திரி கதை எழுதுபவரா??????!!!!!!!!!!!!!!!!! :)

விமர்சனங்களும் எதிர்ப்புகளும் முரண்பாடுகளும் எல்லாத்துறைகளுக்கும் பொதுவானது. அவற்றில் சரியானவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும்

தவறானவற்றை எதிர்த்து வெல்லும் சாதுரியமும் இல்லாவிட்டால் எந்த துறையிலும் பிரகாசிக்க முடியாது.

நல்ல திறமைகள் இருந்தும், அதிகமாக உணர்ச்சிவசப்படுவதாலும் கோபப்படுவதாலும், அடிக்கடி தொடங்கிய வேலைத்திட்டங்களை நிறுத்தி விடுவதால்

Jack of All Trades Master of None

என்ற நிலையில் இப்படியான பலர் இருப்பதை கண்டுள்ளேன்!

யாழ்களத்தில் நல்ல எழுத்து திறமைகொண்டவர்கள், பக்குவப்பட்டவர்கள், என்று நாம் நினைத்து கொண்டிருப்பவர்கள் கூட குழந்தைப்பிள்ளைகள் போல்

கிறுக்கத் தொடங்குவதை பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமாக உள்ளது!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

யோவவ் சாத்து என்ன லொள்ளா :) ஊருக்குத்தான் உபதேசம் உனகில்லையடி என்ற மாதிரி இருக்கு உங்கள் இந்த முடிவு.அண்மையில் நீங்கள் எழுதிய ஒரு படப்படிப்பு என்ற கதையில் வந்த முடிவுக்கும் உங்கள் முடிவும் ஒன்றாக இருக்குது. தயவு செய்து எடுத்தேன் கவிள்த்தேன் என்று முவெடுக்காமல் ஆறஅமர இருந்து யோசியிங்கள்.மேல பலர் குறிப்பிட்டது போல உங்கள கதைகளை தேடிப்பவர்களில் நானும் ஒருவன்.

சாத்திரி

நீங்கள் மட்டுமல்ல எவரும் களத்திலிருந்து வெளியேறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதுபோல் எமக்குள்ள கருத்துச் சுதந்திரத்தை வைத்து அடுத்தவர்களை தேவையில்லாமல் கேவலப்படுத்துவதிலும் எனக்கு உடன்பாடு கிடையாமது. தவறுகளைச் சுட்டிக்காட்டுவது என்றால் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். எல்லோரினதும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியமும் இருக்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவரை கேவலமாக விமர்சிப்பதும், உண்மையிலேயே கேவலமாக வாழ்வோரின் பின்னணிகளுக்காக அதை மறைப்பதும் ஒரு நல்ல கருத்தாளனின் பண்பாகாது. முடிந்தவரை ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிப்படியாவது நடக்க முயல வேண்டும். ஒருவன் உண்மையிலேயே தவறு செய்திருந்தால் அவனை திருத்த முயலலாம். ஆனால் அவனை திருத்த முயலாமல் விமர்சிக்க முயல்வதால் மேலும் மேலும் அவனை தவறு செய்யவே தூண்டுகின்றோம். அதுவும் தவறே செயய்யாத ஒருவனை எமது தனிப்பட்ட காரணங்களுக்காக கேவலமாக விமர்சிக்க தொடங்கினோமென்றால் எம்மை விட கேவலமான ஒருவன் இருக்க முடியாது. புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

சாத்திரி கதை எழுதுபவரா??????!!!!!!!!!!!!!!!!! :(

:)இல்லை அவர் உங்களைப் போல் கதை விடுபவர். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை மீண்டும் யாழ்களத்திற்கு வரும்படி அழைத்த அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள். நான் வெளியேறியதற்கு காரணம் ஜெர்மனி கம் காமாட்சியம்மன் கோயில் பூசாரி பற்றிய கட்டுரையை திருத்தியோ அல்லது அதில் வசனங்களை தணிக்கை செய்திருந்தால் பரவாயில்லை ஆனால் அதை அப்படியே தூக்கியதுதான் கொஞ்சம் சூடாயிட்டன். எனவேதான் அந்தக் கட்டுரையை மீள் இணைப்பு செய்தால் தவிர இனி திரும்ப யாழிற்கு வருவதில்லையென்று முடிவெடுத்திருந்தேன். அதனால்தான் இங்கு யாரிற்கும் பதிலளிக்கவில்லை. அதற்காக மன்னிக்கவும். மற்றபடி கட்டுரை மீண்டும் நிருவாகம் இணைத்துள்ளதால் அதில் சில மாற்றங்கள் செய்துள்ளேன் அது பற்றிய விவாதங்களை நாகரீகமாக அங்கேயே தொடரலாம்.நான் யாழிற்கு வராவிட்டால் தான் (தீ) குளிக்கப்போவதாக தொலைபேசியில் மிரட்டிய குமாரசாமிக்கும் :( யாழ் கள உறவுகளிற்கும் விரைந்து செயல்பட்ட இணையவனிற்கும் மோகனிற்கும் நன்றிகள். :)

Edited by sathiri

நான் யாழிற்கு வராவிட்டால் தான் (தீ) குளிக்கப்போவதாக தொலைபேசியில் மிரட்டிய குமாரசாமிக்கும்

வடிவா கேட்டனீங்களோ? அவர் ரீ குடிக்கப் போறன் என்று சொல்லியிருப்பார் :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மீண்டும் யாழ்களத்திற்கு வரும்படி அழைத்த அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள். நான் வெளியேறியதற்கு காரணம் ஜெர்மனி கம் காமாட்சியம்மன் கோயில் பூசாரி பற்றிய கட்டுரையை திருத்தியோ அல்லது அதில் வசனங்களை தணிக்கை செய்திருந்தால் பரவாயில்லை ஆனால் அதை அப்படியே தூக்கியதுதான் கொஞ்சம் சூடாயிட்டன். எனவேதான் அந்தக் கட்டுரையை மீள் இணைப்பு செய்தால் தவிர இனி திரும்ப யாழிற்கு வருவதில்லையென்று முடிவெடுத்திருந்தேன். அதனால்தான் இங்கு யாரிற்கும் பதிலளிக்கவில்லை. அதற்காக மன்னிக்கவும். மற்றபடி கட்டுரை மீண்டும் நிருவாகம் இணைத்துள்ளதால் அதில் சில மாற்றங்கள் செய்துள்ளேன் அது பற்றிய விவாதங்களை நாகரீகமாக அங்கேயே தொடரலாம். யாழ் கள உறவுகளிற்கும் விரைந்து செயல்பட்ட இணையவனிற்கும் மோகனிற்கும் நன்றிகள். :)

அடச்சா என்னாச்சு?? :o:o யாழில வர வர எல்லா இடமும் கிளைமாக்ஸ் மட்டும் சப்பெண்டு முடியுது? ஒரு 'கிக்கே' இல்லையே?? :(

இப்ப நான் சொல்லுறன் கேட்டுக்கோங்கோ, சாத்திரியிண்ட அந்த தலைப்பை நிர்வாகம் தூக்காட்டா நான் வெளியேறுவன் ஆ சொல்லீட்டன், பின்ன என்னப்பா, சாத்தியிண்ட அப்பட்டமான பிரச்சாரம் அது, அதுவும் ஹம் கோயிலை பற்றி இப்படியா சொல்லுறது, பக்த கேடிகளின் நன்மை கருதி சாயங்கால பூசை, விடிய, நள்ளிரவு பூசை, இந்த பூசை அந்த பூசை எண்டு சொல்லி 100 யூரோ தொடக்கம் 300 யூரோக்களுக்கு மேல் மிகவும் குறைந்த விலையில் கஸ்டப்பட்டு வேலை செய்யிறாங்க, (என்ன ஒரு வித்தியாசம் ஊரில 100 ரூபாவுக்கு செய்தம் இங்க 100 யூரோவுக்கு செய்யிறம் இதில என்ன தப்பு எண்டுறன்?? :( ) அந்த காசெல்லாத்தையும் அந்த பூசாரியா அடிக்கிறார்? இல்லையே அந்தா காசு வடிவத்தில கடவுள்ளுக்கெல்லோ போகுது? அந்த கடவுள்தான் இலங்கை அமைச்சரை ஹம்முக்கு கூப்பிட்டவர்? இது தெரியாமல் சாத்திரி போல ஆட்கள்... நல்லா இல்லை ஆமா எனக்கு அழுகை அழுகையா வருது.... எப்படி இப்படியெல்லாம் அபாண்டமா???? :(:(

Edited by Danklas

ஓய் சாத்து!...

சே... கு.சா தீக்குளிச்சுத் துடிக்கிற காட்சியை பாக்கவிடாம பண்ணி......

ஆமா கு. சா எத்தனை மணிக்குத் தீக்குளிக்கப்போறதா அறிவிச்சார்? மோகண்ணே மெல்லமா சாத்துவின் பதில் வரைவை காணாமப் பண்ணிடுங்க... ஆதிக்குப் பம்பல் பாக்கவேணும் போல இருக்கு :):(:(

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

10, 15 நாளுக்கு இழுத்திருக்கலாம்...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி மேட்டர் சப்பென்டு போச்சு கொஞ்சம் இழுத்திருக்கலாம் :)

திரம்பவும் வந்ததற்கு நன்றிகள்

Edited by puspaviji

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.