Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக விடுதலைக்காக போராடி 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவு

Featured Replies

தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982 முதல் 31.10.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.

இவர்களில் 17,305 ஆண் மாவீரர்களும், 4809 பெண் மாவீரர்களும் அடங்கியுள்ளனர். 2008ம் ஆண்டு இதுவரை 1974 போராளிகள் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

maveerarft3.png

விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு

தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர்கள் மதிக்களிக்கப்பட்டு வருகின்றனர். வட்டக்கச்சி கோட்டத்திற்குட்பட்ட மாவடி வட்டத்தில் மதிப்பளிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை இராமநாதம் மேற்கு அ.த.க பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. வட்டக்கச்சி கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழு செயலாளர் க. கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பொதுச்சுடரினை இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலை அதிபர் க.திரவியம் ஏற்றினார்.

தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை வட்டக்கச்சி கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சின்னண்ணா ஏற்றி வைத்தார். அடுத்து மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கருத்துரையினை ஓய்வு பெற்ற ஆசிரியர் தனிநாயகம் நிகழ்த்த சிறப்புரையிளை தமிழீழ மகளிர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழினி நிகழ்த்தினார்.

கண்டாவளையில் வட்டப் பொறுப்பாளர் குமரன் தலைமையில் இடம்பெற்ற மதிப்பளிப்பு நிகழ்வில் கண்டாவளை வட்டத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்;. கண்டாவளையில் அமைந்துள்ள நினைவாலையத்தில் ஆரம்பமான நிகழ்வுகளைத் தொடர்ந்து கண்டாவளை மகாவித்தியாலய மாணவர்களின் தமிழ் இன்னிய வாத்திய இசையுடன் இவர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கருத்துரைகளை வடபோர்முனைப் பொறுப்பாளர்களில் ஒருவரான மகேஸ், தமிழீழ தேசிய தொலைக்காட்சி செய்திப்பிரிவுப் பொறுப்பாளர் நகுலன் ஆகியோர் ஆற்றினர்.

புளியம்பொக்கணை கலவெட்டித் திடலில் நேற்று நடைபெற்ற மதிப்பளிப்பில் பொதுச்சுடரினை மாவீரரின் பெற்றோர் ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை மகளிர் வெளியீட்டுப்பிரிவுப் போராளி இளநிலா ஏற்றினார். கருத்துரையினை கண்டாவளைக் கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சீராளன் ஆற்றினார். சிறப்புரையினை மகளிர் வெளியீட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் உலகமங்கை ஆற்றினார்.

இரணப்பாலை கோம்பாவில் வட்டத்தில் மதிப்பளிப்பு நிகழ்வு நேற்றுக்காலை இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கல வாத்தியத்துடன் நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பொதுச் சுடரை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் க.வே பாலகுமாரன் ஏற்ற தேசியக் கொடியினை இரணைப்பாலை வட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் து.செம்பருதி ஏற்றினார்.

மாவீரர் நினைவு பொதுக்கல் கல்லறைக்கு புதுக்குடியிருப்புக் கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தார். இரணைப்பாலை பாடசாலை மாணவிகளின் மாவீரர் வரவேற்பு நடனத்தை அடுத்து புதுக்குடியிருப்புக் கோட்ட பெண்கள் மேம்பாட்டு பொறுப்பாளர் காருணியா மதிப்புரை ஆற்ற சிறப்புரையை க.வே. பாலகுமாரன் ஆற்றினார்.

www.sankathi.com

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

வீரவணக்கங்கள்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!

நான் சிறு துரும்பென உணர்கின்றேன்

உங்கள் ஒவ்வொருவரின் இழப்புகளில்

வேகின்றது ஆகுதி ஆன எம் பரம்பரையின்

உயிர்

என் வயது தான் உங்களுக்கும்

சில வருடம் குறையலாம்

பெண் சுகம் என்னவென்று தெரியுமா?

அல்குளின் இன்பம் தெரியுமா?

உங்களுக்கு நான் சொல்வேன் என்னவென்று?

சொல்லுங்கள் எனக்கு தியாகியாகி

போவதன் சுகம்

என்னவென்று

இனம் காக்க மண்

மேல் வீழ்வதன் சுகம்

என்னவென்று

பல இலட்சம் அடிமைகளின்

விலங்கு உடைக்கும் சுகம்

எனக்கு தெரியாது

பல் கோடி சதிகளின்

கண்ணி உடைக்க தெரியாது

ஆயினும் அல்குளின் சுகம்

என்னவென்று நான் சொல்வேன்

சொல்லுங்கள்

ஏன் என்னை போல

நீங்கள் இல்லை

ஏன் பெண் சுகம்

நாடவில்லை

காட்டாறுவென அழித்து

வரும் எதிரியின் படை

வரும் போது

உங்களை ஆகுதி ஆக்கினீர்கள்

ஏன் என்னை போல

தப்பி ஓடவில்லை

அது உங்களின் குற்றம் அன்றோ

என்னை போல ஓடி வந்து

கவி வடித்திட கூடாதோ

இன்னும் எத்தனை பேரை

இழக்க போரீர்கள்

புரிந்து கொள்ளுங்கள்

உங்களின் ஒவ்வொரு சாவும்

எம்மை கழு ஏற்றுகின்றது என

எமது உல்லாசத்தை

கேலி பண்ணுகின்றதென

எம்மால்

தோழிகளை முத்தமிட முடியவில்லை

அல்குள் பற்றி செவ் நாவால்

துலாவிட முடியவில்லை

ஒவ்வொரு முறையும்

முத்தமிடும் போது

உங்கள் முகம் வந்து போகின்றது

வடிகின்ற விந்துவில்

உங்களின் முகம்

தெரிகின்றது

சொல்லுங்கள்

ஏன் என்னை போல

நீங்கள் இல்லை

பெண் சுகத்தை விட

காமத்தினை விட

சுதந்திரம் பெரிதென்று

ஏன் சொல்லுங்கள்

அதை

என் மகனுக்காயினும்

சொல்லி சாகின்றேன்

அடிமையாய் சாதல்

துயரம் என்று காட்டி

சொல்கின்றேன்

அவனாவதுஒரு நிமிடம்

அடிமையாயின்றி

வாழட்டும்

உங்களை போல

:

அல்குள்: பெண் இனப்பெருக்க அங்கம்

ஆகுதி: இறப்பு அல்லது இறந்து போதல்

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

56025959_05a9119ad7.jpg

களமாடி வீழ்ந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Ele_pass_(5).jpg

Edited by nunavilan

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள் மாவீரர்களே....

வீரவணக்கங்கள் மாவீரர்களே....

தாயக விடுதலைக்காக போராடி 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவு

மிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1987 முதல் 31.10.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.

இவர்களில் 17,305 ஆண் மாவீரர்களும், 4809 பெண் மாவீரர்களும் அடங்கியுள்ளனர்.

2008ம் ஆண்டு இதுவரை 1974 போராளிகள் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

maveerar1iu0.jpg

http://www.tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் மாவீரர்களே

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,உங்கள் அந்த ஆழமான வரிகள் உண்மையிலேயே சிந்திக்க வைத்ததுடன் மனதும் கனத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தாயின் விடிவாக்க.. தம்முயிர் தந்த அவள் பிள்ளைகளுக்கு வீரவணக்கங்கள்.

Edited by nedukkalapoovan

தனது விடுதலைக்காக சிறிய இனமான தமிழினம் இந்தப் பெரிய விலையைக் கொடுத்திருக்கிறது.

மாவீரர்களே உங்கள் ஈகத்திற்கு தலை வணங்குகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்கங்கள் மாவீரரர்களே

  • தொடங்கியவர்

தாயக விடுதலைக்காக போராடி 22 ஆயிரத்து 390 போராளிகள் வீரச்சாவு

தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 390 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1987 முதல் 20.11.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.

இவர்களில் 17,496 ஆண் மாவீரர்களும், 4894 பெண் மாவீரர்களும் அடங்கியுள்ளனர். 2008ம் ஆண்டு இதுவரை 2239 போராளிகள் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். இதேவேளை 379 கரும்புலிகளும் இதில் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

29830823xu8.png

31139543ey8.png

49274400ud9.png

97906244mr6.png

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

22390 எமது உறவுகளிற்கு நாம் என்ன தான் கைமாறு செய்யப்பொகிறோம் ?????

  • தொடங்கியவர்

இம் மாதம் 20 நாட்களில் எமது இழப்பு அதிகமானதாக உள்ளது.276 போராளிகளை இழந்திருக்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

இம் மாதம் 20 நாட்களில் எமது இழப்பு அதிகமானதாக உள்ளது.276 போராளிகளை இழந்திருக்கின்றோம்

அந்த மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள் :)

கனவு சுமந்த மாவீரரே உங்கள் கல்லை மீதிலோரு சபதம் செய்கீன்றோம் கலங்கும் எங்கள்

கண்னின் நீர் காய முன் கதிகலங்கும் பகைவன் பாசறை பாயும் புலியுடன் நாமும்

இணைகிகிறோம் பாசறை மீதிலே பகைவணை அழித்திடுவோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.