Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வி.பி சிங் காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இந்தியப் பிரதமரும் ராஜீவ் காந்தி அரசால் ஈழத்துக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படையினரை ஈழத்தில் இருந்து விலக்கிக் கொண்ட தலைவருமான வி. பி. சிங் அவர்கள் காலமாகிவிட்டார்.

ஈழத்தில் இருந்து இந்தியப் படை விலகலை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் அழிவைத் தடுத்து நிறுத்திய பொறுப்பு இவரையும் சாரும்..!

அன்னாருக்கு எமது கண்ணீரஞ்சலிகள்.

Edited by nedukkalapoovan

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் !

இந்திய அரசு பார்ப்பனிய அதிகாரிகளால் மட்டுமே செயல்படுகிறது, இந்நிலை என்றைக்கு மாறுகிறதோ அன்றுதான் உண்மையான ஜனநாயக நாடாக இந்திய இருக்க முடியும் என்று வெளிப்படையாய் ஒப்புக்கொண்ட தலைவர் அவர்

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்ப்பலிகளை தடுத்து நிறுத்திய

மாண்புமிகு. வி.பி.சிங் அவர்களுக்கு வெற்றிவேலின் சிரம் தாழ்த்திய அஞ்சலிகள்!!!

அன்னாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்தார்.

singh250.jpg

டெல்லி: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இன்று பிற்பகல் மரணமடைந்தார்.

77 வயதாகும் வி.பி.சிங்குக்கு புற்று நோய் தாக்கியிருந்தது. இதனால் நீண்ட காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் அவர் காலமானார்.

டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

வி.பி. சிங்குக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

1931ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங்.

இந்திய அரசியலில் புதிய சகாப்தம் படைத்தவர், திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இந்தியாவின் 10வது பிரதமராக அவர் பதவி வகித்தார். ஒரு வருட காலம் அவரது தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

இந்தியாவின் முதல் கூட்டணி ஆட்சியைக் கொடுத்த பெருமைக்குரியவர் வி.பி.சிங்.

உ.பி. முதல்வராக, இந்திரா, ராஜீவ் காந்தி அமைச்சரவையில், நிதித்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் அமைச்சர் பதவியை வகித்தவர் வி.பி.சிங்.

ராஜீவ் காந்திக்கு எதிராக புரட்சி செய்து காங்கிரஸிலிருந்து வெளியேறி ஜனதாதளம் என்ற கட்சியைத் தொடங்கினார். ராஜீவுக்கு எதிராக மாபெரும் அலையை உருவாக்கி மத்தியில் ஆட்சியைப் பிடித்தார். பாஜக-இடதுசாரிகள் துணையோடு கூட்டணி ஆட்சியை அமைத்தார்.

பின்னர் ஜனதாதளம் பல துண்டுகளாக சிதறிப் போய் விட்டது.

சிறந்த நிர்வாகியாக திகழ்ந்த வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக உரக்கக் குரல் கொடுத்தவர்.

சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் நல்ல கவிஞராகவும், ஓவியராகவும் திகழ்ந்தவர்.

புற்றுநோய், சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றால் கடந்த சில ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் மீது ஆழ்ந்த மரியாதை கொண்ட வி.பி.சிங் முதல்வர் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர். டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் இவரை சந்திக்க கருணாநிதி தவறியதில்லை.

வி.பி.சிங் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தால் தனது இருக்கையை அவருக்குத் தந்துவிட்டு விருந்தினர் இருக்கையில் அமர்ந்து கொள்வார் கருணாநிதி. அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை தந்தவர் கருணாநிதி.

தமிழகத்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட வி.பி.சிங், மீண்டும் பிறந்தால் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுவதாகக் கூறியது நினைவுகூறத்தக்கது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பரி்ந்துரைத்த மண்டல் கமிஷனின் அறிக்கையை அமல்படுத்துவதில் முழு உறுதியுடன் இருந்து சாதித்துக் காட்டியவர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மனதில் வி.பி.சிங் நிரந்தரமாக இடம் பிடித்தார்.

http://thatstamil.oneindia.in/news/2008/11...asses-away.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

vpsinghdo3.png

http://www.indianetzone.com/3/vishwanath_pratap_singh.htm

தற்ஸ்தமிழ் போன்ற ஊடகங்கள் ஈழத்தமிழர் நலன் சார்ந்த விடயங்கள் பலவற்றை (மறைந்த தலைவர் விபி சிங் வரலாற்றில் கூட அவர் செய்த சாதனைகளில் குறிப்பிட்ட ஒன்றை திட்டமிட்டு தவிர்த்துவிட்டார்கள்.. என்றால் பாருங்களேன்..!) வெளிப்படையாக குறிப்பாக இந்திய நலனுக்கு (காங்கிரஸ் கட்சியின் நலனுக்கு) எதிரானதாக எண்ணிக் கொண்டு பிரசுரிப்பதில்லை. ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான.. ஈழத்தமிழருக்கு எதிரான கருத்துக்களை பிரசுரிப்பதை அதிகம் செய்வார்கள்.

விபி சிங்கின் சாதனையில்.. ராஜீவ் காந்தியின் ஈழத்தமிழர் மீதான அணுகுமுறையில் இருந்த தவறை சுட்டிக்காட்டி.. அதனை மாற்றி அமைத்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய காங்கிரஸ் அரசு.. அதே பழைய ராஜீவ் காந்தி கொள்கையையே ஈழத்தமிழர் விவகாரத்தில் கொண்டிருக்கிறது.

விபி சிங் ஈழத்தமிழருக்காக பதவிக்கு வந்து போனவர் போன்று ஒரு ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் பிரதமர் பதவியில் இருக்க முடிந்தது. அக்காலத்திலேயே அவர் ஈழத்தமிழர்கள் எல்லோரும் விரும்பிய இந்திய இராணுவ விலகலை மேற்கொண்டிருந்தார்.

அன்று அவர் தாமதித்திருப்பின்.. இன்னும் என்னென்னவோ எல்லாம் நேர்ந்திருக்கும்..! :(:blink:

Edited by nedukkalapoovan

அன்னாருக்கு அஞ்சலிகள்

என்ன சொல்வது எங்களுக்கு சார்பானவர்களுக்கு காலம் சார்பாக இருந்ததில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வி பி சிங் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபம் .தெரிவித்து கொள்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற வி. பி. சிங் அவர்களின் மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாருக்கு எம் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து தமிழர்களின் மனங்களிலும் நிறைவோடு நிமிர்ந்து நிற்கும் இந்தியத் துணைக்கண்டத்தின் தலைமை அமைச்சர் ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் அவர் வி.பி.சிங் மட்டுமே.

மதவாதத்திற்கும் (பி.ஜே.பி. ) மிதவாதத்திற்கும் (காங்கிரஸ்) மாற்றாக ஒரு கட்சியை உருவாக்கி பெரு வெற்றி கண்டவர். இந்திய அமைதிப் படையை திரும்பப் பெற்றதில் அன்னாரின் பங்கு போற்றுதலுக்குரியது.

மண்டல் அறிக்கையை அறிமுகம் செய்து பிற்படுத்தப் பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர். அன்றைய ஜெய்பிரகாஷ் நாரயணன் போன்று மதவெறியர்களுக்கும் தேசிய வெறியர்களுக்கும் பார்ப்பன மேலாதிக்கவாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சமூகநீதிக் காவலர். தமிழர்களின் மீதும் தமிழ்த் தலைவர்களின் மீதும் மதிப்பு வைத்திருந்தவர்.

அந்த மனிதருக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படைகளை விலக்கி தமிழரின் போராட்டத்தை முன்னெடுக்க உதவி செய்த அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

காங்கிரஸ் காறர்களால் கடுமையாக வெறுப்புக்குள்ளாகி எதிர்க்கப்பட்டவர் எனும் வகையில் வி பி சிங் அவர்களும் ஒரு தமிழனே...!!

அன்னார் செய்த பணிகள் அவரை நிலைத்து நீண்டகாலம் இருக்க செய்யும்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப்படைகளை விலக்கி ஈழத்தமிழர்களைக் காப்பாற்றிய எனக்குப் பிடித்த இந்தியத்தலைவர்களில் ஒருவரான திரு. வி.பி.சிங் அவர்களின் மறைவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

நேர்மை மிக்க தலைவர் . அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

அன்னாருக்கு அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் வைத்திருந்த கொள்கைக்காக தன்ட பதவிய விட்டவர் என்டதால இவர எனக்கு ரெம்ப பிடிக்கும்.

ஆத்ம சாந்திக்காக பிரார்த்திகின்றேன்...!

Edited by நிரூஜா

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணைத் தொட்டவர் வி.பி.சிங்

pg3us1.jpg

ஈழத்தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத தலைவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் வி.பி.சிங்கின் பெயர் இடம்பெற்றே தீரும். ராஜிவ்காந்தி அரசால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதிப் படையைத் திரும்ப அழைத்துக் கொண்ட புண்ணியம் இவருக்கே உரித்தானது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தின் மைந்தனாக ஜூன் 25, 1931-ல் பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங்கை, மண்டா என்ற அரச குடும்பம் தத்தெடுத்துக்கொண்டது. பூனேவில் இருக்கும் ஃபெர்குஸன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அப்போதே அவருக்கு காதல் வந்துவிட்டது. காதலியின் பெயர், காங்கிரஸ். வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் மீது சிங்குக்கு அதீத ஈர்ப்பு இருந்தது, தனக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுக்கும் அளவுக்கு.

ஜவாஹர்லால் நேரு காலத்தில் அரசியலில் தடம் பதித்து மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டு வந்த இவரை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தவர் இந்திரா காந்தி. 1980-ல் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக வி.பி.சிங்கைத் தேர்வு செய்தார். கொள்ளை என்றாலே அவருக்கு அறவே பிடிக்காது. நிஜ வாழ்விலும் சரி, அரசியலிலும் சரி. இவர் முதல்வராக இருந்தபோது கொள்ளைக்காரர்களின் அட்டூழியம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது.

தான் முதல்வராக வந்தவுடன் அவர்களை வேரோடு அழிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அந்தக் கொள்ளையர்களாலேயே தன்னுடைய சகோதரர் கொல்லப்பட்டதை அடுத்து, வாக்குத் தவறிய தான் இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது என்று சொல்லி பதவியை ராஜினாமா செய்தார். வெறும் மாநில அரசியல்வாதியாக இருந்த வி.பி. சிங்குக்கு தேசிய கவனம் கிடைத்தது அதன்பிறகுதான்.

1984_ல் அமைந்த ராஜிவ் அமைச்சரவையில் சக்திவாய்ந்த நிதித்துறை இவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நடிகர் அமிதாப்பச்சன், தொழிலதிபர் திருபாய் அம்பானி உள்ளிட்ட பல பிரபலங்களின் இல்லங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் அம்பானியின் பாலியெஸ்டர் தொழிலுக்கான மூலப்பொருளான சுத்திகரிக்கப்பட்ட டெரிப்தாலிக் அமிலத்தை இறக்குமதி செய்வதற்கு சில கெடுபிடிகளை விதித்தார். இதனால் அம்பானிக்கு பெரும் சிக்கல் உருவானது.

காங்கிரஸ் கட்சியின் நிதியாதாரங்களாக இருந்தவர்கள் மீது அவர் எடுத்த நடவடிக்கைகள் ராஜிவை தர்மசங்கடப்பட வைத்தன. உடனடியாக பாதுகாப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். அங்கும்போய் மனிதர் வெறுமனே நின்றுவிடவில்லை. ஆயுதக் கொள்முதல் தொடர்பாக பல சங்கதிகளைத் தோண்டித் துருவத் தொடங்கினார். போஃபர்ஸ் பற்றிய பல அந்தரங்கமான தகவல்கள் அவர் வசம் சென்றுவிட்டதாக ராஜிவுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

பிறகு போஃபர்ஸ் விவகாரத்தில் ராஜிவ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த வி.பி.சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனமோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார். பிறகு, 1988-ல் ஜனதா கட்சி, லோக் தளம் ஆகிய கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார். அதன் தலைவரும் அவரே. பிறகு ஜனதா தளம் தலைமையில் மாநிலக் கட்சிகளான தி.மு.க., தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத் ஆகியவற்றை இணைத்து தேசிய முன்னணி என்ற அணியை உருவாக்கினார். அதன் தலைவராக இருந்தவர் என்.டி. ராமராவ்.

1989 தேர்தலில் தேசிய முன்னணி, தேர்தலை எதிர்கொண்டது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய முன்னணிக்குக் கிடைத்தது. ஆனால் யார் பிரதமர் என்பதில் சிக்கல் உருவாகியிருந்தது. களத்தில் நின்றவர்கள் இருவர். வி.பி. சிங் மற்றும் தேவிலால். கூட்டணியின் முக்கியத் தலைவர்களிடம் கருணாநிதியும் என். டி. ராமராவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டிசம்பர் 1, 1989. தேசிய முன்னணியின் ஆலோ-சனைக்கூட்டம் தொடங்கியது. வி.பி.?சிங் பேச எழுந்தார். `பிரதமர் பதவிக்கு திரு. தேவிலால் அவர்களின் பெயரை முன்மொழிகிறேன்.' - சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டார் வி.பி. சிங். அவ்வளவுதான். பதறிவிட்டார் தேவிலால். சட்டென்று எழுந்தவர், `நான் இந்தக் குடும்பத்தின் மூத்த சகோதரனாக இருக்க விரும்புகிறேன். ஆகவே, திரு. வி.பி. சிங் அவர்களின் பெயரை இந்தப் பொறுப்புக்கு முன்மொழிகிறேன்' என்று கூறிவிட்டார். அத்தோடு பிரச்னை முடிவுக்கு வந்தது.

வி.பி.சிங் என்ற விஸ்வநாத் பிரதாப் சிங் இந்தியா-வின் பத்தாவது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் தேசிய முன்னணியின் அரசுக்கு முட்டுக்கொடுத்தது எண்பத்தாறு எம்.பி.க்களைக் கொண்டிருந்த அத்வானி தலைமையிலான பாரதிய ஜனதாக்கட்சிதான்.

பத்து ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைக் கோப்புகளைத் தூசுதட்டி எடுத்ததுதான் பிரதமரான பிறகு வி.பி. சிங் செய்த மிகப்பெரிய காரியம். மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு செயல்வடிவத்துக்குக் கொண்டுவர விரும்புகிறது. ஆகவே, மாநில அரசுகள் உடனடியாக இதுவிஷயமாக தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும் என்று, எல்லா மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதினார். அத்தோடு நின்றுவிடாமல், ஆகஸ்ட் 7, 1990 அன்று மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பையும் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்தது, வட இந்தியாவில் பெரும் கலகத்தை ஏற்படுத்தியிருந்தது. உயர்சாதி மாணவர்-கள் கலவரத்தில் ஈடுபட்டதோடு தீக்குளிக்கவும் முடிவு செய்தனர். விஷயம் பிரதமரின் கவனத்துக்கு வந்தது. தெளிவாகப் பேசினார். `இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுடன் சமரசம் செய்துகொண்டு அவர்-களுக்கு சலுகை வழங்குவதற்குப் பதிலாக பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக என்னுடைய பதவியையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்.'

மண்டலில் தப்பித்த அவருடைய அரசைக் காவு வாங்குவதற்கு, அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒருவரே காரணமானார். அவர் பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டபோது, அவரை பிகார் மாநிலம் சமஸ்தி-பூரில் வைத்து கைது செய்தது பிகார் அரசு.

என்னுடைய ஆதரவில் மத்தியில் ஆட்சி செய்துகொண்டு, என்னையே கைது செய்வதா என்று ஆத்திரப்பட்ட பா.ஜ.க., மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டது. வி.பி. சிங் அரசு பெரும்பான்மை இழந்தது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு-வரப்-பட்டது. அதில் அரசு தோற்கவே, பதவியை ராஜினாமா செய்தார் வி.பி. சிங்.

வெறும் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் கவிஞராகவும் ஓவியராகவும் இருந்த வி.பி. சிங்கை புற்றுநோயும் சிறுநீரகக் கோளாறும் விடாமல் துரத்தியதால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் மெல்ல மெல்ல ஒதுங்கத் தொடங்கினார். மருந்துகளின் உதவியோடு செயல்பட்டு வந்த வி.பி. சிங், டெல்லியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 27 வரைதான் மருத்துவர்களால் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடிந்தது.

பல பிராந்தியக் கட்சிகளை ஒருகுடையில் திரட்டி, தேசிய அளவில் அணி அமைக்க முடியும். அந்த அணியை ஆட்சியில் அமர்த்தவும் முடியும் என்று நிரூபித்த புரட்சியாளர் வி.பி. சிங்!

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.