Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணைகள் நிறைவுபெறும் வரை ஜி.எஸ்.பி பிளஸ் நீடிப்பு: ஐரோப்பிய ஒன்றியம்

Featured Replies

சிறீலங்காவிற்கான வரிச்சலுகை நீடிப்பை ஐரோப்பிய ஒன்றியம் இடை நிறுத்தியது

திகதி: 02.12.2008 // தமிழீழம் // [பாண்டியன்]

சிறிலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவந்த வரிச்சலுகை (ஜீ.எஸ்.பி.) நீடிப்பை இடை நிறுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதனை கொழும்புச் செய்திகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்காக சிறிலங்கா அரசு பகிரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது. ஆனாலும் மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அக்கறை காண்பிக்காத நிலையில் இந்த வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியுள்ளதாக அறியவருகின்றது.

இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டதால் சிறிலங்காவில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை வேலை வாய்ப்பை இழப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்காக ரணில் விக்கரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

www.sankathi.com

உந்த ஒரு அறிவிப்புக்காக எவ்வளவு விலைவைச்சாங்களப்பா....

இவ்வளவு வேண்டுதகள், மனிதப்படுகொலைகளுக்குப்பிறக

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் முன்னேற்றகரமான நடவடிக்கை.... இலங்கை சிங்கள பாசிச அரசுக்கு எதிராக முதலாவது தடை... இதையே ஒரு தொடக்கமாக கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும்.

............................

நல்ல ஒரு செயல்.

இருப்பினும் மலையக ஏழைத் தமிழ்த் தொழிலாளர்களே அதிகமாக பாதிக்கப்படுவர். சரி பசி பஞ்சம் என்றால் எப்படி என்பதை நாட்டுப்புற சிங்களவரும் உணரட்டும். போரா சமாதானமா என மஹிந்த கேட்கையில் போரே வேண்டும் என்று வாக்குப்போட்டவர்கள் அதன் பிரதிபலிப்பை உணர்ந்து சிந்திக்க தோன்றும் நேரம் இது. இனி ஒரு தடவை தெளிவாக இருப்பார்கள்.

எமக்கு கிடைத்த ஆரம்ப வெற்றி ....இன்னும் உலகில் ஒரு மூலையில் நீதி இறக்கமால் இருக்கிறது...

உரியமுறையில் உரிய நேரத்தில் வெளிக்கொண்டுவரவேண்டியவற்றை உலகின் கண்களுக்கு ஆதாரங்களுடன் கொண்டு வந்தால் என்றோ ஒரு நாள் வெற்றி கிடைக்கும்...

இனி விழுந்தாலும் மண்படவில்லை என்று விட்டு தனது இனவெறியைத்தொடரும் இலங்கை..அதன் அடிப்படைதகமை சிங்களமும் புத்தமதமும்...

அதுவே அதன் பலவீனமும்..எத்தனை நாளுக்குதான் ஏமாற்றுவாய் இந்த உலகினை என்னும் பழையபாடல் நினைவு வருகிறது....

இலங்கையைத்திருத்துவதாக இருந்தால் உலகு இலங்கைக்கு கிடைக்கும் எதுவித பணவுதவியையும் உலகின் சட்டதிட்டங்கள், மனிதவுரிமைகளை முறையாக பின்பற்றும் வரை நிறுத்த வேண்டும்.. உலகத்தமிழர்களின் கடமை ஆதாரங்களுடன் தகவல் வழங்கி நிருத்த வைக்கவேண்டும்..

இன்னும் தொடரவேண்டும்..ஐரோப்பிய பாரளுமன்றத்திற்கு நன்றி சொல்லவேண்டும் இலங்கைக்கு ஒரு சிறு தண்டிப்பு கொடுத்தற்கு...

அடுத்து தமிழர் இயக்க தடையை எடுக்கவேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த ஒரு வெற்றியாக இதை கருதலாம்.

இலங்கை அரசுக்கு மனித உரிமைகள் மீறியதானால் கிடைக்கப் பெற்ற இரண்டாவது பின்னடைவு இது. ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் (UN Human Rights council) இருந்து இலங்கை வெளியேற்றப் பட்ட முதலாவது நிகழ்வின் பின் இடம்பெற்ற இன்னுமொரு நிகழ்வு இது.

ஆனால் இதுவே போதும் என்று புலம் பெயர் தமிழர்களாகிய நாம் இருந்து விட முடியாது. இன்னமும் செய்து முடிக்க வேண்டி ஏராளம் உள்ளது. அவற்றுடன் இதனை ஒப்பிடுகையில் இது மிக சாதாரண விடயம். இந்த தடையினை விட , ஐரோப்பிய யூனியன் இந்த தடையினை கொண்டு வரும் முன் வெளியிட்ட அறிக்கையில் எம் போரட்டத்தை பற்றி கூறிய விடயம் பாரதூரமானது. இலங்கை அரசின் போரினை அது நியாயப்படுத்து இருந்தது. எமது பணி அவற்றினை, அக் கருத்தினை மாற்றி எமக்கு சாதகமாக ஆக்கும் வரைக்கும் ஓயாமல் இருப்பதே

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது ஊடகங்கள் என்றுதான் திருந்துமோ?

இன்னமும் GSP plus இடைநிறுத்தப்படவில்லை. அதே வேளை அடுத்தவருடத்திற்கான நீடிப்பு உத்தியோகபூர்வமாக வழங்கப்படவும் இல்லை. ஆனால் விசாரணைகள் தொடர்கின்றனவாம். அவ் விசாரணைகள் முடிய 6 மாதம் தொடக்கம் 1 வருடம் வரை இழுக்கலாம். அதுவரை இச் சலுகைகள் தொடரும்.

An E.U. spokesperson in Colombo said the rights probe started in October and must be completed within a year.

"We cannot say it will be six months or a year. Until a decision is made afterward, Sri Lanka will continue with GSP Plus," the spokesperson said on condition of anonymity.

எனவே நாம் இப்போது தான் மும்மரமாக EU வின் முன்னால் ஸ்ரீ லங்காவின் மனித உரிமை மீறல்களை சாட்சிப் படுத்தவேண்டும்.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL339176.htm

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=33941

எவ்வளவு காலம் விசாரிக்க போகிறார்களோ???? நல்ல ஏமாற்று வித்தை

மீண்டும் சிறிது காலத்தின் பின் நீடிப்பார்கள் போல உள்ளது,

"We will enjoy the facility until the investigation is over," S. Ranugge, secretary at the ministry of export development and international trade, told Reuters.

However, he said the government would not cooperate with investigators if the European bloc sends them to Sri Lanka.

"That has been communicated to the E.U. by the government. Sri Lanka will cooperate with the investigations, but not with the investigators," Ranugge said.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு செயல்.

இருப்பினும் மலையக ஏழைத் தமிழ்த் தொழிலாளர்களே அதிகமாக பாதிக்கப்படுவர். சரி பசி பஞ்சம் என்றால் எப்படி என்பதை நாட்டுப்புற சிங்களவரும் உணரட்டும். போரா சமாதானமா என மஹிந்த கேட்கையில் போரே வேண்டும் என்று வாக்குப்போட்டவர்கள் அதன் பிரதிபலிப்பை உணர்ந்து சிந்திக்க தோன்றும் நேரம் இது. இனி ஒரு தடவை தெளிவாக இருப்பார்கள்.

ரொம்ப

ரொமபத்தான் மக்கள் மக்கள் என்று உபதேசிக்கிறார்

நல்ல??? அரசியல்வாதியாக வரஆசையோ???????

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது? இடை நிறுத்தி விட்டார்களா? அல்லது விசாரணை முடியும் வரை தொடர்ந்து கொடுப்பார்களா? முடிவாக என்ன சொல்ல வருகிறீர்கள்.குழப்பாதீங்கப்

Edited by புலவர்

சங்கதியில இருக்கிற ஆக்களுக்கு என்ன ஆங்கிலம் தெரியாதோ? காட்டாறு சொன்னமாதிரி அப்பிடி ஒண்டும் இடைநிறுத்தியதாய் தெரிய இல்லையே? இப்பிடியே எங்களுக்கையே நாங்கள் பிழையாக ஒண்டை விளங்கிவச்சு சந்தோசப்பட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான். சங்கதியிண்ட செய்தி இஞ்ச இருக்கிற தராக்கி என்பவரிண்ட செய்திகளிண்ட தரத்துக்கு வந்திட்டிது போல இருக்கிது. ஒருஇடமும் ஆங்கில ஊடகங்களில இப்படி இடைநிறுத்தியதான செய்தியை காண இல்லையே.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL339176.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்னப்பா இது? இடை நிறுத்தி விட்டார்களா? அல்லது விசாரணை முடியும் வரை தொடர்ந்து கொடுப்பார்களா? முடிவாக என்ன சொல்ல வருகிறீர்கள்.குழப்பாதீங்கப்

காட்டாறு முரளி, தமிழ் ஊடகங்களில பிழை பிடிக்கிறனீங்கள் அதை சரிய செய்து காட்டலாமே? நீங்கள் ஒரு ஊடகம் நடத்திக் காட்டினா உங்களுக்கு பின்னாலை எல்லாரும் வருவினம்.

சங்கதி நடத்திறவை தங்கடை சுகபோகங்களை துறந்து சம்பளமும் இல்லாமல் இந்தளவுக்கு செய்கிறார்கள் என்று நன்றிக்கடனாகுதல் இருக்கா?

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாது இருங்கள்.

நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும்.

என்னாலை நம்பவேமுடியலை..

கு.போ எழுதினதுக்கு நான் சொல்லலை.. ஐரோப்பிய ஒன்றியம் கொஞ்சம் காரசாரமா இருக்கிறத சொல்றன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டாறு முரளி, தமிழ் ஊடகங்களில பிழை பிடிக்கிறனீங்கள் அதை சரிய செய்து காட்டலாமே? நீங்கள் ஒரு ஊடகம் நடத்திக் காட்டினா உங்களுக்கு பின்னாலை எல்லாரும் வருவினம்.

சங்கதி நடத்திறவை தங்கடை சுகபோகங்களை துறந்து சம்பளமும் இல்லாமல் இந்தளவுக்கு செய்கிறார்கள் என்று நன்றிக்கடனாகுதல் இருக்கா?

குறுக்ஸ் நீங்க நக்கலாய்ச் சொன்னாலும் உண்மை அது தான்.

அவர்களை நக்கலடிக்க எனக்கு எந்த உரிமையோ தகுதியோ இல்லை.

என்னையும் உங்களையும் மாதிரி சாதாரண ஆக்கள் தான் சங்கதியை நடத்துறாங்கள். அவங்களுக்கும் கல்வி, தொழில், குடும்பச் சுமை என்பது உள்ளது.

எனவே அவர்களை கேலி செய்வது என் நோக்கமல்ல. பிழையான செய்தியை எம் மக்கள் நம்பிவிடக் கூடாதே என்ற ஆதங்கம் தான்.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் விசாரணைகள் நிறைவுபெறும் வரை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் விசாரணைகள் நிறைவுபெறும் வரை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

விசாரணைகள் முடிந்தாலும் உந்தச் சலுகையினை உவங்கள் நிப்பாட்ட மாட்டினம். சிங்கள அரசுக்கு தொடர்ந்து கொடுப்பாங்கள்.

குறுக்ஸ் நீங்க நக்கலாய்ச் சொன்னாலும் உண்மை அது தான்.

அவர்களை நக்கலடிக்க எனக்கு எந்த உரிமையோ தகுதியோ இல்லை.

என்னையும் உங்களையும் மாதிரி சாதாரண ஆக்கள் தான் சங்கதியை நடத்துறாங்கள். அவங்களுக்கும் கல்வி, தொழில், குடும்பச் சுமை என்பது உள்ளது.

எனவே அவர்களை கேலி செய்வது என் நோக்கமல்ல. பிழையான செய்தியை எம் மக்கள் நம்பிவிடக் கூடாதே என்ற ஆதங்கம் தான்.

காட்டாறு, அதற்கு நீங்கள் இத்தவறினை சங்கதிக்குச் சுட்டிக்காட்டிவேண்டுமே தவிர, இங்கு கூறி எந்தப் பிரியோசனமும் இல்லை. காரணம், சங்கதி நடத்துபவர்கள் யாழ் களத்திற்கு வருகிறார்களோ இல்லையோ யாருக்குத் தெரியும்???? எனக்குத் தெரிந்தவரையில் சங்கதி இணையத்தளம் தாயகத்திலுள்ளவர்களால் நடத்தப்படுகிற இணையத்தளம். அவர்களின் ஆங்கில அறிவும் மட்டுப்படுத்தப்பட்டது என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜி.எஸ்.பி. சலுகை பெற அரசாங்கம் விசாரணைக்கு அனுமதியளித்துள்ளது - சபையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

- ஜி. எஸ். பி. பிளஸ் வரிச்சலுகையினை பெற்றுக் கொள்வதற்காக 2008 ஆம் ஆண்டின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என்று ஐ.தே.க.வின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைக்கான இந்த விசாரணை 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே நிறைவடையும். அதற்கு பின்னரே ஜி. எஸ். பி. பிளஸ் சலுகை கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தொடர்பில் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சிறப்பு கூற்றை விடுத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது, ""சுதந்திரத்திற்கு பின்னர் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களில் பலதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமையத்தின் கொள்கையின் பிரகாரம் அதன் அழுத்தங்களுக்கு அமையத்திலுள்ள சகல நாடுகளும் உடன்படல் வேண்டும்.

பெரும்பாலான சர்வதேச ஒப்பந்தங்களில் இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுகின்றது. சர்வதேச ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும்போது பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்காமையினால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் குறிப்பாக ஜி. எஸ். பி. பிளஸ் சலுகை தொடர்பில் கலந்துரையாடுவது பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.

ஜி. எஸ். பி. பிளஸ் சலுகை 2004ஆம் ஆண்டு பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் சிங்கராஜா வழக்கின் தீர்ப்பினால் சலுகையை பெற்றுக் கொள்வதில் 2006ஆம் ஆண்டு பிரச்சினையாக இருந்தது. கொள்கையடிப்படையில் 27 சாசனங்களை அமுல்படுத்துவதில் எம்முடைய பொறுப்பை நாம் செய்து கொள்ளாமையினால் 2009ஆம் ஆண்டிற்கான ஜி. எஸ். பி. பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வது தடையாக இருக்கின்றது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஐ. தே. க. அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிய யோசனைகளை முன்வைத்துள்ளது. நடைமுறையிலுள்ள சட்டம் மற்றும் அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள சகல சர்வதேச ஒப்பந்தங்களும் அமுல்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் சர்வதேச ஒப்பந்தங்கள் செய்யப்படல் வேண்டுமாயின் தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நான்கு யோசனைகளை ஐ. தே. க. முன்வைத்துள்ளது.

இதனை மேற்கொள்வதன் மூலமாக ஜி. எஸ். பி. பிளஸ்ஸை பாதுகாத்துக்கொள்ள முடியும். இல்லையேல் இலட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின் ஆடைத்துறைக்கு மட்டும் மூன்று வருடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் 2,100 கோடி ரூபா வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 3,000 கோடி ரூபாவையே இலாபமாக பெறப் போகின்றது என்பதனால் இவை சாத்தியப்படுமா?

ஐ. தே. க. வின் யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடாமல் அரசாங்கத்தினால் அவை நிராகரிக்கப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும். எனினும் இந்த யோசனைகள் அந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்று அரசாங்கம் எமக்கு சுட்டிக்காட்டியது. எனினும் அரசாங்கம் இன்று 2008ஆம் ஆண்டின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக விசாரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விசாரணை 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவடையும். அதற்கு பின்னரே ஜி. எஸ். பி. பிளஸ் சலுகை கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தொடர்பில் தெரிந்துகொள்ள முடியும். 2008ஆம் ஆண்டின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதனால் இறைமை மீறப்படுவதாக கூற முடியாதுள்ளது.

கடந்த மூன்று தசாப்த காலத்தில் சர்வதேச ஒப்பந்தத்திற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படுவதாகவோ மீறுவதாகவோ அரசாங்கம் கூறவில்லை. எனினும் இந்த ஒப்பந்தம் அல்லது வேறு ஏதாவது சர்வதேச ஒப்பந்தம் இறைமையை மீறுவதாக இன்று கூறுவது எவ்வாறு? இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

-வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக எம்மீது ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை மேற்கொள்ள முடியாது - சபையில் பிரதமர் அறிவிப்பு

சர்வதேச சமவாய சட்டங்களுக்கு அமைவாகவே இலங்கை சட்டமும் இருக்கின்றது என்பதனால் ஜி. எஸ். பி. பிளஸ் சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியம் எம்மீது விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

இராஜதந்திர ரீதியில் சில தரவுகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பரிமாறிக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் விசேட கூற்றுக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

""உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு (சிங்கராஜா வழக்கு தீர்ப்பு) சர்வதேச, இலங்கை சட்டங்களுக்கு எவ்விதமான மாற்றங்களும் ஏற்படாது. இலங்கை அரசாங்கம் சர்வதேச இலங்கை சட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச சட்டத்தின் ஒரு பங்காளியாக இலங்கை சட்டமும் இருக்கின்றது. இலங்கைக்கென தனித்துவமான சட்டம் இல்லை. சமவாயங்களுக்கு உட்பட்டதாகவே நாடு அமைகின்றது. அதற்கான அரசியலமைப்பு ஏற்பாடுகள் எமக்கு இல்லை.

இலங்கை சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஜி. எஸ். பி. பிளஸ் 27 நாடுகளின் சமவாயத்தை கொண்டிருக்கின்றது. ஜி. எஸ். பி. பிளஸுக்காக தேசிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.

ஐரோப்பிய ஒன்றியம், சிவில் அரசியல் உரிமைகள் சர்வதேச சமவாயங்களுக்கு அமைவாக இருக்கின்றதா, சித்திரவதைக்கு எதிரான நடவடிக்கை, சிறுவர் உரிமைகள் போன்ற மூன்று விடயங்கள் தொடர்பில் காத்திரமான முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு இது என்ன விளையாட்டு? முடிவா என்ன சொல்லினமாம் :wub: ?

Sri Lanka hardens stand on GSP Plus

Tamil Guardian 29 October 2008

Sri Lanka defiantly refused to allow a European Union (EU) investigation into rights abuses callit an "infringement of Sri Lanka's sovereignty, self respect and dignity', and announced plans to support the garment industry financially if existing trade concessions are not renewed by EU.

Sri Lanka defiantly refused to allow a European Union (EU) investigation into rights abuses callit an "infringement of Sri Lanka's sovereignty, self respect and dignity', and announced plans to support the garment industry financially if existing trade concessions are not renewed by EU.

The EU recently warned it may not renew the GSP Plus (Generalised System of Preferences) trade scheme after it expires in December because of continuing human rights abuses stemming from Sri Lanka's civil war.

The EU had asked to send an investigating team to ensure Sri Lanka was complying with human rights standards.

"What the cabinet has decided is not to agree with investigations that are required by the EU to renew GSP Plus," Minister of Export Development and International Trade G.L. Peiris told reporters at a press conference held on Monday, October 20, at the Central Bank to brief the media on the GSP Plus Scheme.

Many in the island's garment and textile industry, which employs hundreds of thousands of mostly rural poor, fear a downturn if the special trade terms are axed.

However Peiris said the effect would be limited.

"We only get $150 million from GSP Plus. We are not ready to betray our country through this investigating," Pieris said.

"We should not betray our dignity and respect for US$ 150 million. We have to develop our strength and resources. In every sense we have capabilities to fulfil our task.”

At the same press conference, Ajith Nivard Cabraal, Governor of the Central Bank of Sri Lanka announced the government would provide a subsidy to offset any shock the loss of the concession may cause in an industry that in 2007 was its top foreign exchange source.

"The government has decided to provide a subsidy equal to the total GSP Plus concession of $150 million to the garment industry," Cabraal told reporters.

http://www.tamilguardian.com/article.asp?articleid=1959

GSP+ நீடிக்கப்படுவதற்கான விசாரணையை சிங்கள நாடு ஒரு போதும் அனுமதிக்காது. ஏனெனில் மனித உரிமை மீறல்கள் இதுவரை குற்றச்சாட்டுக்களாகவே இருந்துள்ளன.

விசாரணை முடிவில் இவை நிரூபிக்கப்பட்டவை ஆகிவிடும்.

இது பாரதூரமான விளைவுகளை சிங்களவருக்கு ஏற்படுத்தும். GSP+ ஐ இழப்பதோடு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச ஸ்தாபனங்களில் மனித உரிமை மீறல்கள் கார‌ணமாக‌ இலங்கைக்கு எதிரான நிலமையை உண்டாக்கிவிடும்.

இப்படி ஒரு நிலமையை சந்திப்பதை விட GSP+ ஐ இழப்பதே மேல் என அவர்கள் முடிவெடுத்திருக்கலாம்.

இந்த நிரூபிக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நாட்டுக்கு எதிரானது மட்டுமல்லாது நபர்களுக்கு எதிராகவும் திரும்பலாம். உதாரணமாக மஹிந்த & CO.

இதை நினைத்தும் அவர்கள் அச்சமடைந்து இருக்கலாம்.

இதே சமயம் நாம் இந்த GSP+ ஐ இழப்பதால் இலங்கைக்கு பண வருவாய் குறையப்போகிறதே என்று துள்ளிக்குதிக்கலாமா ?

யோசிக்கப்பட வேண்டிய விடயம். ஏனென்றால்

1. ஆடை ஏற்றுமதியால் வருகின்ற பணம் அவ்வளவும் இலங்கைக்கு அல்ல.

இறக்குமதி செய்யப்படுகின்ற துணிக்கு செலவு போக மிஞ்சுவது தான் இலங்கைக்கு.

சரி.. எப்படியோ ஒரு பகுதி பணம் வருகிறது தானே ....

2. இந்தப்பணத்தில் தான் இலட்சக்கணக்கான ஏழை சிங்களவர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

சரி.. இந்த இலட்சக்கணக்கான ஏழை சிங்களவர் மேல் என்ன கரிசனை.. ?

3. இவர்களுக்கு வேறு வேலை இல்லாவிட்டல் இராணுவத்தில் சேர்ந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்க! - அரசுக்கு ரணில் ஆலோசனை

[04 டிசம்பர் 2008, வியாழக்கிழமை 11:50 மு.ப இலங்கை]

ஜி.எஸ்.பி. பிளஸ் எனும் ஏற்றுமதி வரிச் சலுகையைப் பெறுவதற்காக இலங்கையின் அரசியல் யாப்பில் சில திருத்தங்களைச் செய்யுமாறு ஏதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஏற்றுமதி வரிச் சலுகையைப் பெற வேண்டும் என்பதற்காக நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு ஒரு போதும் தயாரில்லை என்று பிரதமர் கூறினார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார்.

சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் தொழிலைப் பாதுகாப்பதற்காக எம்மை விட்டு நழுவப் போகும் நிலையில் உள்ள ஏற்றுமதி வரிச் சலுகையை மீளப் பெற நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரணில் கூறினார்.

இதற்கு ஏற்ப அரசியல் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியவை வருமாறு:

ஏற்றுமதி வரிச் சலுகையை எமக்கு மீண்டும் வழங்குவதற்காக எமது நாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த

இடமளிக்க வேண்டும் என்று ஜரோப்பிய ஒன்றியம் எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கு நாம் ஒரு போதும் தயாரில்லை இதற்காக எமது அரசியல் யாப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் நாடாளுமன்றில் தெரிவித்திருப்பதை எம்மால் ஏற்க முடியாது.

எனவே, வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இராஜதந்திர தகவல்களை பரிமாற நாம் தயார்என்றார்.

http://www.uthayan.com/pages/news_full.php?nid=968

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.