Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2008 எப்படி இருந்தது உங்களுக்கு?

Featured Replies

2008 எப்படி இருந்தது உங்களுக்கு?

முற்றிலுமாய் முடிய போகின்ற இந்த 2008 வருடம் உங்களுக்கு எப்படி அமைந்தது? ஒவ்வொருவருக்கும் முக்கியமாக அல்லது மறக்க முடியாததாக நிகழ்வு ஒன்றாயினும் நிச்சயம் நிகழ்ந்து இருக்கும். அவற்றில் சிலவற்றை யாழிலும் பகிர கூடியதாக இருக்கும்...அப்படி ஏதேனும் இருந்தால் இந்த திரியில் எங்களுடன் பகிருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்கள் எனது பெற்றோரை பிரிந்து. படிப்பு, வேலை காரணமாக பார்க்க முடியவில்லை. பார்க்க நினைத்த போது அவர்களால் ஊரை விட்டு வெளிக்கிட முடியாத நிலை இருந்தது. ஒரு வழியாக அவர்கள் கொழும்பு வந்தும் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. பாதுகாப்பு காரணங்களால் பெற்றோஎர் என்னை கொழும்பு வர அனுமதிக்கவில்லை, இறுதியில் வேறு ஓர் நாட்டில் அவர்களை சந்திக்க முடிந்தது என்னால் 2008ல் மறக்கமுடியாத நினைவுகள்.

2008...வெறுமையான ஆண்டு...இழப்புகள், மரணங்களை மட்டுமே காட்டிய ஆண்டு...இனிவரும் 2009 இல் ஆவது விடியுமா என காத்திருக்கேன்..

  • கருத்துக்கள உறவுகள்

2008ம் ஆண்டு தாயகத்தில் எம்மின மக்களைப் பொறுத்தவரை மீண்டுமொரு கொடூரமான ஆண்டாகவே கணிக்கப்படுகின்றது.

என்னைப் பொறுத்தவரையில்(தனிப்பட்ட முறையில்) கனடிய நண்பர் வட்டத்தின் ஒன்றுகூடல் மறக்கமுடியாத ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக இந்த 2008ல் இடம்பிடிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வருடங்களுக்கு முன் ,புரியாமல் கால் வைத்த பிரச்சினை ஒன்று 2007 இல் மார்கழியில் கருக்கொண்டு ,வேதனைகளை சுமந்து பங்குனியில் தீர்வு கண்ட சுமையான ஆண்டு ,நட்புகள் பலவிதம் ,கை தூக்கி விடுவதும் உண்டு ,குழி பறிப்பதும் உண்டு . நம்பி ஏமாந்ததும் என் இரக்க குணத்தால் . நடுப்பகுதியின் பின் முன்னேற்றம் கண்ட ஆண்டு உடல் உள நிலையில் மாற்றம் கண்டு மகிழ்ந்த ஆண்டு என்னை தமிழ் எழுதவைத்த ,இனிய நட்புகளை காட்டி திசை (நல்ல ) மாறவைத்த ஆண்டு , மேலும் அந்த இன்பம் அடுத்த வருடமும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொழில்ரீதியா நல்ல ஆண்டு. மற்றும்படி எல்லாம் நல்லபடியாப் போச்சிது ஆண்டுக் கடைசி வரும் வரைக்கும். கடைசியில ஒரு ஆட்டு ஆட்டி விட்டிட்டுது. ஏழரைச் சனி கடைக்கூறு எண்டால் என்ன சும்மாவே...?!! :mellow::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமெ என்று ..........தொழ்புக்கொடி உறவுகள் ......அதுதான் நம்ம ஈழத்து உறவுகள் இருக்கிற இடம் சரியில்லை........

  • தொடங்கியவர்

ஏற்றமும் இல்லாது, இறக்கமும் இல்லாது ஒரே மாதிரியாக இந்த வருடம் எனக்கு இருந்தது. அசைந்து சென்றாலே அது வாழ்க்கை, ஒரே இடத்தில் தேங்கி நின்றால் அது குளம் அல்லது குட்டை என்றாகிவிடும் என்றெ ஒரே நினைப்பன்..ஆனால் இந்த வருடம் அப்படித்தான் கிட்டத்தட்ட எந்த அசைவும் இன்றி எனக்கு அமைந்தது. வருட இறுதியில் நிகழ்ந்த யாழ் களம் மூலம் நண்பர்களானவர்களின் ஒன்று கூடல் தவிர்ந்த மற்றவை அனைத்தும் மிக சாதாரண நிகழ்வுகளாகவே இருந்தன

1. யுத்தம்:

இந்த வருடம் முழுதும் பெரும் கரிய புகையாக போர் தந்த மன துயரம் படர்ந்து இருந்தது. மனம் முழுதும் இலங்கையில் நிகழும் யுத்தமும், பிரதேசம் பறிபோகுதல்களும் கடும் மன உளைச்சலை தந்தன. பல இரவுகள் தூக்கம் இல்லாமல் கடும் அழுத்ததிற்குள்ளாகி கிடந்திருக்கின்றேன். காலை மூன்று மணிக்கு கூட எழும்பி இணையம் மூலம் செய்தி பார்த்திருக்கின்றேன். கொல்லப்பட்ட, காயப்பட்ட எம் குழந்தைகளின் நினைவுகள் பெரும் ஆற்றாமை உணர்வையும், இயலாமை உணர்வையும் தந்தன. ஒவ்வொரு தரமும் போராளிகள் பின்வாங்கும் போது, எந்த பங்களிப்பும் செய்யாமல் அவர்களிடம் இருந்து வெற்றி செய்தியை எதிர்பார்க்கும் என் மன ஓட்டம் மீது வெறுப்பு கொண்டு என்னை நானே வெறுத்து கிடந்து இருக்கின்றேன். இந்த வருடத்தின் மோசமாக என்னை பாதித்த விடயம் போர்தான்

2. தொழில்:

கனடாவுக்கு வந்த பின் (2007) எனது துறையிலேயே வேலை தேடிக் கொள்ள பெரிய கஷ்டம் ஒன்றும் படவில்லை. ஆனால் இந்த வருடம் வேறு ஒரு 'நல்ல' நிறுவனத்தில் சேர்வதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும் இறுதியில் எனது அணுகு முறைகளால் வீணாணது. மூன்று மாதங்களில் 3 நிறுவனங்களில் அடுத்தடுத்து இணைந்து கடைசியில் மீண்டும் பழைய நிறுவனத்திற்கே வந்து சேர்ந்தேன். சம்பள அதிகரிப்பு தந்து மீள இணத்து கொண்டதை தவிர வேறு ஒரு முன்னேற்றமும் கிடைக்கவில்லை

3. மீண்டும் எழுத தொடங்கியது

சில தனிப்பட்ட காரணங்களால், எழுதவே கூடாது என்று இருந்த நான் மீண்டும் 8 வருடங்களின் பின் எழுத ஆரம்பித்தது இந்த வருடத்தில் தான். நான் எழுதாமல் விடுவதால் யாரிற்கும் எந்த நஷ்டமும் இல்லை என்பதற்கும் அப்பால் எமது தாயகத்தில் இடம்பெறும் துயரங்களால் ஏற்படும் அழுத்தங்களில் இருந்து என்னை வெளியே எடுக்க எழுதியே ஆக வேண்டி எனக்கு இருந்தமையால் மீண்டும் யாழ் களத்தில் பதில்கள் எழுதுவது மூலம் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்

4. யாழ் கள நண்பர்களின் ஒன்று கூடல்

இந்த வருடத்தில் எனக்கு நடந்த தனிச்சிறப்பான ஒரு நிகழ்வு என்று இதனைத்தான் நான் சொல்லமுடியும். ஏற்கனவே இதனைப்பற்றி இதற்குரிய திரியில் எழுதியாச்சு என்பதால் அதிகம் சொல்லவில்லை

இங்க நுழைய கிடைச்சது சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2008-

உங்கள் எல்லோரைப்போலவும் என்னை அதிகம் பாதித்தது தாயகத்தில் நடைபெறும் அழிவுகளும் போரும் எம் மக்களின் அவல வாழ்க்கையும். இது இன்னும் எமக்கான கடமைகளையும் பொறுப்பையும் உணர்த்திச்சென்றது என்றும் தான் கூறவேண்டும்.

நிறைந்த வலிகளையும் சுமைகளையும் சுமத்திச்சென்றாலும் உறுதியையும் கூட்டிச்சென்றது.

***மீண்டும் தமிழகத்தில் எமக்காக ஏற்பட்ட எழுச்சி...ஒரு வித மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தந்தது.

2008-12-27

யாழால் இணைந்த உறவுகளின் ஒன்றுகூடலில் கலந்து இனிமையான நினைவுகளையும் நட்புகளையும் சேகரித்தது. "தாயகத்தில் உறவுகளுடன் கூடிக்களித்த நினைவலைகள் மீண்டும் உங்களால் கிடைக்கப்பெற்றேன்" ஆண்டவனுக்கும் சமூகமளித்த உறவுகளுக்கும் நன்றி.

Edited by Thamilthangai

2008ஜ நினைத்தாலே ஈழமக்களின் துன்பங்களும், சோதனைகளும் தான் கண்முன் தோன்றுகின்றன.

ஒருபுறம் ரானுவத்தின் கெடுபிடி, மறுபுறம் ஒட்டுக்குழு என்றழைக்கப்படும் காட்டுமிராண்டிகளின் அட்டகாசம், இதைவிட இயற்கையின் சீற்றம் இப்படி எத்தனை வேதனைகளின் மத்தியில் அவர்களது வாழ்க்கை.

அடுத்ததாக மகிழ்ச்சியான விடயமாக, எத்தனை எதிர்ப்புக்கள் மத்தியில் வெற்றியுடன் நடந்தேறிய கனடிய நண்பர் வட்டத்தின் ஒன்றுகூடல் 2008ல் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.

என்னனைப்பற்றி என்ன சொல்ல? நான் ஒரு சின்னப் பெண்ணாச்சே1

2008 எண்டு சொன்னால் எனது தனிப்பட்ட வாழ்வில முக்கியமான ஓர் ஆண்டு என சொல்லலாம்:

1. படிப்பு ஓர் கட்டம் முடிஞ்சிது.

2. நீண்டகால சத்திரசிகிச்சை ஓரளவு நிறைவுக்கு வந்திச்சிது.

3. எனது அன்புக்குரிய சேர்.கிளார்க் அவர்கள் மறைந்தார்.

4. எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒருவவிடம் எனது காதலை தெரிவித்தேன்.

5. இணையத்தள நண்பர் வட்டம் ஒன்றுகூடல். மீண்டும் பல வருடங்களின் பின் நண்பர் கூட்டம் ஒன்று கிடைத்துள்ளது.

6. வீட்டினுள் இருந்த ஓர் பிரச்சனை சுமுகமான முறையில தீர்வுக்கு வந்திச்சிது.

வெளியில எண்டு பார்த்தால்...

1. தாயகப்போரிண்ட அடுத்த கட்டம் ஆரம்பிச்சிது. மக்களிண்ட அவலம்.

2. கனடாவில தேர்தல் - பிறகு மீண்டும் குழப்பம்.

3. அமெரிக்காவில புஸ்ஸின் மறைவும், ஒபாமாவிண்ட தோற்றமும்.

4. மும்பாய் கொலைகள்.

5. உலக மற்றும் அமெரிக்க பொருளாதார நலிவு / வீழ்ச்சி.

6. ஒலிம்பிக் மற்றும் யூரோ கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள்.

2009 இல என்ன நடக்கப்போகிதோ?

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல் அடுத்த ஆண்டை எதிர்பார்க்க வைத்துவிட்டு நகர்ந்து விட்டது!!!

  • கருத்துக்கள உறவுகள்

4. எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒருவவிடம் எனது காதலை தெரிவித்தேன்.

எவா அவா? சொல்லவே இல்லை. ஒரு 3 நாட்களுக்கு முன்னதாகவே சொல்லியிருந்தால், பெரிய ஆராட்சியே பண்ணியிருக்கலாமே... :mellow:

எவா அவா? சொல்லவே இல்லை. ஒரு 3 நாட்களுக்கு முன்னதாகவே சொல்லியிருந்தால், பெரிய ஆராட்சியே பண்ணியிருக்கலாமே... :lol:

இதாவது பரவாயில்ல. நல்லகாலம் காதலை சொன்னபிறகு என்ன நடந்திச்சிது எண்டு கேட்க இல்லை. :D

நல்லகாலம் வருகுது

நல்லகாலம் வருகுது..

தெருவிலேயே நிற்கிறான்

குடுகுடுப்பைக்காரன்...

-காசி ஆனந்தன்-

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டு 2008ம் நானும்

நிறைய விடயங்களை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் பல விடயங்களை மனதிற்குள்ளேயே போட்டுப் புதைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

பொதுவாக இந்த 2008 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இருந்து அரைவாசிவரை வேடிக்கைப் பொருளாக பார்க்கப்பட்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல எனது நண்பர்களுந்தான்.

இந்த ஆண்டில் நான் வாழும் நாட்டில் எங்கள் மக்களுக்கான குரல் கொடுப்புகளில் எங்கள் மக்களின் வலிகளை வெளியுலகிற்குத் தெரிவிக்க சந்திக்குச் சந்தி பதாதைகளை காட்சிப்படுத்த துணிந்த பெண்களில் நானும் ஒருவள். நானும் ஒரு நாற்சந்தியில் துயர் சுமந்த எம்மக்களின் வலிகளை பதாதைப் பதிவாகத் தூக்கிப்பிடித்தபடி நின்ற அந்த முதற் பதினைந்து நிமிடங்கள் இன்றல்ல என்றுமே என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள். காரணம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்ட எங்கள் தாயக மக்களின் இன்னல்களை வெளிச்சமூகங்களுக்கு புரியவைக்க முன்னெடுக்கப்பட்ட இக்கவனயீர்ப்புக்கு…… பதாதையைச் சுமந்த என்னை வேடிக்கைப் பொருளாகப் பார்த்தவர்கள் எங்கள் மக்கள் என்பது எவ்வளவு விசித்திரமானது.

முதல் பதினைந்து நிமிடங்கள்வரை எம்மவர்கள் பார்வையிலேயே வேடிக்கைப் பொருளாகத் தனித்து நின்றதை எப்படி மறக்க முடியும்?

முடிந்த இவ்வாண்டில் வெற்றி, தோல்வி, ஏளனம், குற்றச்சாட்டு எல்லாவற்றையுமே,….. கடந்து வந்த காலங்களைவிட காத்திரமானதாக வாழ்வில் மறக்க முடியாதனவாகப் பெற்றிருக்கின்றேன். அனுபவம் நல்ல ஆசான்.

வழிப்படுத்துகிறது.

ஆண்டின் ஆரம்பக் காலத்தில் ஒரு கிடைத்தற்கரிய நண்பன் கிடைத்துள்ளான். காலங்கள் கடந்தும் வாழப்போகும் நட்பின் கவித்துவச் சாட்சியாக பின்பு ஒருகாலத்தில் ஏட்டுப் பதிவுகளில் உலா வரும் இந்நட்பு.

எழுத்து சார்ந்த விடயத்தில் அதிகமாக ஒன்றும் சாதிக்கவில்லை. சாதிக்கவேண்டும் என்ற வெறி மனதிற்குள் இருந்தாலும் காலத்தோடு ஒட்டிய வேலைகள் அதிகரித்திருந்தமையே எழுதும், சிந்திக்கும் தருணங்களை மட்டுபடுத்திவிட்டிருந்தது.

குடும்பம் என்ற ரீதியில் கொஞ்சம் கவனம் குறைந்திருந்தது. கணவனையும், பிள்ளைகளையும் கண்ணுக்குள் பொத்திவைத்துக் கவனிக்க முடியாதிருந்தது. ‘வீட்டைப்பற்றி அக்கறையில்லாத பிறவி” என்று வாழ்க்கைத்துணையின் கிண்டல் சமயங்களில் சுயத்தையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

இந்த ஆண்டின் இறுதி….

இந்த யாழ்க்களத்தின் கருத்துக்களத்தூடாக ஒரே மாநிலத்தில் வசிக்கக்கூடிய நட்புறவுகளை ஒரு ஒன்று கூடல் மூலம் இணைக்க எடுத்த முயற்சி. தோற்றப்பாட்டிற்குச் சுமூகமாகத் தென்பட்டாலும் இது ஒரு விசப்பரீட்சை. இம்முயற்சியில் இதுவரை நாம் வெற்றி பெற்றிருந்தாலும், தொடரும் காலங்களே எங்கள் நட்புறவுகளின் ஒன்றிணைவு வெற்றிக்குரியதா? வேதனைக்குரியதா? என்பதைத் தீர்மானிக்கும்.

மற்றப்படி யாழ் நண்பர்களின் அறிமுகம் மகிழ்ச்சிக்குரியதாகவும், ஒரு இலக்கிய வட்டத்தின் பன்முகத் தரிசிப்பாகவும் இருந்தது இவ்வாண்டின் சிறப்புக்குரியதாக அமைந்திருந்தது.

எவ்வளவோ எழுத வேண்டும் என்று மனதின் ஆழத்திலிருந்து பல அனுபவங்கள் எழுகின்றன. கோர்வையாக்கித் தர முடியாமல் ஒரு தத்தளிப்பு. சரி இவ்வளவு எழுதிவிட்டேன்தானே.

கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது, மிகவும் வெறுமையான ஆண்டாகிவிட்டது. முன்னெடுத்த எல்லா செயல்களிலும் தோல்விகளே மிஞ்சின. 2009ஐ வரவேற்கும் மனநிலைகூட அற்றுவிட்டது. :rolleyes: நட்புவட்டம் மட்டுமே மகிழ்ச்சியளித்த விடயம். அந்தவகையில், இதனை முன்மொழிந்த சஹாராக்காவிற்கு நன்றிகள் பல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.