Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோல்டன் குளோப் விருதை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

66வது கோல்டன் குளோப் விருதுக்காக இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் (‘ஸ்லும்டொக் Mஇல்லிஒனைரெ') படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

இந்த படத்துக்கு இசையமைத்த ரஹ்மானின் பெயரும் ஒரிஜினல் இசைக்காக விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

மேலும் சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சிமோன் பியூபோ) ஆகிய பிரிவுகளி்ன் கீழும் இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

இந் நிலையில் இந்தப் படம் இசைக்கான விருதை வென்றுள்ளது. படத்துக்கு இசைமைத்த ரஹ்மான் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.

இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.

இந்தப் படம் மும்பையைச் சேர்ந்த வீதிச் சிறுவன் ஒருவனின் கதையை விவரிக்கிறது. ஒரு ஏழைச் சிறுவன் கோன்பனேகா குரோர்பதி மாதிரி ஒரு ஷோவில் பங்கேற்று மாபெரும் பணக்காரனாகும் கதை இது.

நன்றி தற்ஸ் தமிழ்

  • Replies 63
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைப்புயலில் இவ் அபார வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் ரகுமான்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்!!!

இந்த விருதை வெல்பவர்கள் ஒஸ்காரும் வெல்வார்கள் என கருதப்படுவது வழமை.

இணைப்புக்கு நன்றி தமிழ்சிறீ,

இப்படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்திருக்கு.

மேலதிக விபரங்கள் இங்கே...

http://www.goldenglobes.org/nominations

http://www.foxsearchlight.com/slumdogmillionaire

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தமிழ்சிறி. மேலும் பல விருதுகளை இசைப்புயல் பெற வாழ்த்துகிறேன்.

The list of winners:

Best Actor-

Mickey Rouke "The Wrestler"

Best Actress -

Kate Winslet "Revolutionary Road"

Best film-

Slumdog Millionaire

Best Score-

AR Rahman "Slumdog Millionaire"

Best Supporting Actor-

Heath Ledger "Dark knight"

Best Supporting Actress-

Kate Winslet "The Reader"

Best Director

Danny Boyle "Slumdog Millionaire"

Best Screenplay

Simon Beaufoy "Slumdog Millionaire". AGENCIES

வாழ்த்துக்கள்!

Golden Globe awards are presented annually by the Hollywood Foreign Press Association for excellence in film and television. Some 90 members of the HFPA, who maintain a permanent, primary residence in Southern California, vote for outstanding achievement in acting and directing of both dramas and comedies. The Cecil B. DeMille Lifetime Achievement in Motion Pictures award is also given out each year.

The awards were first given out in 1944, and they have come to be considered a harbinger (Forerunner) of Oscar winners.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை நானும் பார்த்தேன். அதில் ஹ{ வாண்ஸ் ரு பி எ மில்லிலியனியர் நிகழ்ச்சியில் வரும் இசை நிறைய இடத்தைப் பிடித்திருக்கிறது.

எப்படி ஏ ஆh ரகுமானின் இசையை வேறுபடுத்திப் பரிசு கொடுத்தார்களோ தெரியவில்லை.

மிகவும் பிரபலமான அந்த இசை அதிகம் இருந்ததால் ஏ ஆர் ரகுமானின் ஏனைய கொம்போஸிங்குகள் பெரிதாகத் தெரியவில்லை.

ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகப்புகழ் பெற்ற தங்க பூமி (கோல்டன் குளோப்) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.உலகம் முழுவதும் சினிமா, டிவி துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஹாலிவுட் வெளிநாட்டு செய்தியாளர் சங்கம் சார்பில் 1944-ம் ஆண்டு முதல் கோல்டன் குளோப் (தங்க பூமி) விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் விருதுக்கு இணையாக சிறந்த திரைப்படம், நாடகம், இயக்குனர், நடிகர், நடிகைகள் என பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது.

கோல்டன் குளோப் விருதுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பெவர்லி ல்ஸ் நகரில் 66-வது ஆண்டு விருது விழா நேற்று நடந்தது. ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.

சிறந்த சினிமா, இயக்கம் ஆகிய பிரிவுகளிலும் இந்த படத்துக்கு தங்க பூமி விருது கிடைத்துள்ளது.

http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=489

-தினகரன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரகுமானின் இசை பிடிப்பதில்லை.

உலக அரங்கில் தன் அயரா உழைப்பால் முன்னேறி சிகரம் தொட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

எனக்கு ரகுமானின் இசை பிடிப்பதில்லை.

:lol:அப்ப அதாலை கொடுத்த விருதை எனி பறித்திடுவாங்களா?? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரகுமானின் இசை பிடிப்பதில்லை.

:lol:

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது பிறப்பிலேயே நம்பிக்கையில்லாதவன் இந்த ஏ.ஆர்

இவர்கள் எதற்க்காக பிறப்பிலே சைவமாகிய இவர் முஸ்லீமாக மாறவேண்டும்?

இவர்கள் எல்லாம் பணம், பெயர்,புகழ் ,பேராசை என்பவற்றுக்கு அடிமையானவர்கள்

இப்படியானவர்கள் சொல்கிறார்கள் இசை உலகை ஒன்றிணைக்கின்றதாம்

இந்தப் படத்தை நானும் பார்த்தேன். அதில் ஹ{ வாண்ஸ் ரு பி எ மில்லிலியனியர் நிகழ்ச்சியில் வரும் இசை நிறைய இடத்தைப் பிடித்திருக்கிறது.

எப்படி ஏ ஆh ரகுமானின் இசையை வேறுபடுத்திப் பரிசு கொடுத்தார்களோ தெரியவில்லை.

மிகவும் பிரபலமான அந்த இசை அதிகம் இருந்ததால் ஏ ஆர் ரகுமானின் ஏனைய கொம்போஸிங்குகள் பெரிதாகத் தெரியவில்லை.

நானும் உண்ர்ந்தேன் , ஆனால் படம் மும்பாய் இன் இன்னொரு பக்கத்தை காட்டியது

MIA இன் பாடலும் இருக்கிறது

தனது பிறப்பிலேயே நம்பிக்கையில்லாதவன் இந்த ஏ.ஆர்

இவர்கள் எதற்க்காக பிறப்பிலே சைவமாகிய இவர் முஸ்லீமாக மாறவேண்டும்?

இவர்கள் எல்லாம் பணம், பெயர்,புகழ் ,பேராசை என்பவற்றுக்கு அடிமையானவர்கள்

இப்படியானவர்கள் சொல்கிறார்கள் இசை உலகை ஒன்றிணைக்கின்றதாம்

கு.சா

ஏ.ஆர்.ரஹ்மான் முஸ்லீமாக மாறவில்லை. அவரது தாய் தந்தையர் தான் முன்பே மாறிவிட்டனர். முஸ்லீம் தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் இந்துவாகவா வளர முடியும்.

கு.சா

ஏ.ஆர்.ரஹ்மான் முஸ்லீமாக மாறவில்லை. அவரது தாய் தந்தையர் தான் முன்பே மாறிவிட்டனர். முஸ்லீம் தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் இந்துவாகவா வளர முடியும்.

இப்பிடி wikipedia இல் இருக்கிறது

A. R. Rahman was born to Tamilian parents — his father R. K. Shekhar was a composer and conductor for Malayalam-language films in Keralite cinema.[3] His father died when Rahman was nine years old, and his family rented out musical equipment as a source of income.

He converted to Sufi Islam from Hinduism in 1989 along with his family.[4] Rahman was also a student at PSBB for a short while before changing schools.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா

ஏ.ஆர்.ரஹ்மான் முஸ்லீமாக மாறவில்லை. அவரது தாய் தந்தையர் தான் முன்பே மாறிவிட்டனர். முஸ்லீம் தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் இந்துவாகவா வளர முடியும்.

அப்படியாயின் அவர் எப்படி திலீப்குமாராக இருந்திருக்க முடியும்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரகும்மானுக்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள்..!

அப்படியாயின் அவர் எப்படி திலீப்குமாராக இருந்திருக்க முடியும்? :lol:

எனக்குத் தெரிந்து ரகுமான் (திலீப்குமார்) அவர்களின் தந்தை சேகர் அவர்கள் உயிரோடு இருக்கும்வரையில் ரகுமான் இந்துவாக இருந்தார். அவரின் தாயார் ஒரு முஸ்லிம். தந்தையின் மறைவுக்குப் பின் ஒரு முஸ்லிம் மதகுருவின் போதனையின் படி முஸ்லிம்ஆனார் ரகுமான்.

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா

ஏ.ஆர்.ரஹ்மான் முஸ்லீமாக மாறவில்லை. அவரது தாய் தந்தையர் தான் முன்பே மாறிவிட்டனர். முஸ்லீம் தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் இந்துவாகவா வளர முடியும்.

அது தவிர ரஜ்குமானின் தாயாரும் குடும்பமும் வறுமையில் வாடியபோது. முஸ்லிம் மத நண்பர்களே அவர்களுக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். ஆபத்திலும் வறுமையிலும் உதவியவர்களை பெருமையில் மறக்காது........ இசைஅமைபாளராக ஆனபோது அதை நினைவு கூர்ந்து அப்பெயரிலேயே அறிமுகமான ரஜ்மானை பாரட்டுவதே சிறந்தது.

இந்துக்கள் என்றால் அவர்களின் தொழில்ரீதியாக ஒரு சாதிபட்டம் கொடுத்து அவர்களை இன்னும் வறுமையில் வாட்டியிருப்பார்கள். இதை நாம் காலம் காலமாக செய்ததன் பரிகாரமோ என்னமோ சிங்களவன் அடிக்கும் இவ்வேளையில் ஒருவரின் உதவி கரத்தையும் காணோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது பிறப்பிலேயே நம்பிக்கையில்லாதவன் இந்த ஏ.ஆர்

இவர்கள் எதற்க்காக பிறப்பிலே சைவமாகிய இவர் முஸ்லீமாக மாறவேண்டும்?

இவர்கள் எல்லாம் பணம், பெயர்,புகழ் ,பேராசை என்பவற்றுக்கு அடிமையானவர்கள்

இப்படியானவர்கள் சொல்கிறார்கள் இசை உலகை ஒன்றிணைக்கின்றதாம்

ஒருவரை வாழ்த்துவதற்கும் மதம் தடையா??? அவரது மதப்பற்று மற்றும் மதமாற்று அவரது தனி உரிமை. உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால் வாழ்த்தாது விடலாமே தவிர இவ்வாறான விமர்சனங்கள் சரியல்ல... அவர் மதம் மாறியதால் தான் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு மதவெறியர். இசை உலகை இணைக்கிறது என்று எல்லோரும் தான் கூறுகிறார்கள்.

அப்படியாயின் அவர் எப்படி திலீப்குமாராக இருந்திருக்க முடியும்? :)

நான் முன்பு ஒருமுறை ஒரு பத்திரிகையில் படித்த செய்தியை வைத்துத் தான் ஏ.ஆர்.ரஹ்மான் தாய் தந்தையர் முஸ்லீமாக மாறிய செய்தியைத் தந்திருந்தேன். அது தவறான செய்தியாக இருந்திருக்கலாம். இங்கே பல்லவன், டங்குவார் போன்றோரும் மேலதிக தகவல்களை இணைத்துள்ளதன் படி ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் ஒரு முஸ்லீம் பெண்மணி. தந்தையாரின் இறப்பிற்குப் பின் தாயாரின் விருப்பப்படி குடும்பமே முஸ்லீம்களாக மாறியுள்ளனர். மருதங்கேணியின் கருத்துப்படி தந்தையாரின் இறப்பிற்குப் பின் வறுமையில் வாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பத்தினருக்கு முஸ்லீம் மக்களே பெரிதும் உதவியிருக்ககின்றனர். இது கூட மதமாறியதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இங்கே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகும் முன்பே முழுக்குடும்பமும் முஸ்லீமாக மாறியுள்ளனர்.

எந்த மதத்தை பின்பற்ற வேண்டுமென்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட முடிவு. அதனை விமர்சனம் செய்வதால் நாம் தான் சிறுமைப்பட்டுப் போகின்றோம். ஒரு மனிதனின் சாதனைகள் மதம் மொழி கடந்து தான் போற்றப்படுகின்றன. அதனால்த் தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவமே போதாதா இசை தான் உலகை ஒன்றிணைக்கின்றது என்ற உதாரணத்திற்கு. இன்று மைக்கேல் ஜாக்ஸன், மடோனா போன்றவர்களின் பாடல்களை எம்மவர்கள் கூட எதற்காக இரசிக்கின்றனர். மொழி மதங்களைக் கடந்து இசை என்ற ஒன்றிற்காகத் தானே !!

ஒரு தமிழனின் திறமைகளை வைத்து மட்டுமே அமெரிக்கன் அவனை கெளரவிக்கும் போது நீஙகள் போற்ற மனமில்லா விட்டாலும், தூற்றாமலாவது இருந்திருக்கலாம் அல்லவா !!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.ஆர்.ரஹ்மானிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். எனக்கு ரஹ்மானின் இசையை மிகவும் பிடிக்கும். இவரது இசையை பிடிக்கவில்லை என எப்படிக் கூறுகிறார்களோ :) . இசையால் எல்லாரும் மதம், மொழி, இனத்தினைக் கடந்து ஒன்றினைகின்றனர் என்பது உண்மையே. நாம் கூட கருத்து விளங்காவிடினும் இசைக்காக வேற்று மொழிப் பாடல்களைக் கேட்கிறோமே :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

ரகுமானின் தந்தை ஒர் இந்து அவர் ஒரு மூஸ்லிம் பெண்னை காதலித்து மணந்தார்.ரகுமானின் தந்தை குடும்பம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.அவரின் தந்தை இறந்தவிடன் பார்ப்பதற்கு ஒருவரும் இல்லாமல் கஸ்டப்பட்டனர்.பிறகு மூஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் உதவி தான் செய்தனர்.தீலிப் குமார் ரகுமான் ஆக மாறியது அதற்கு பிறகு தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.