Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதத்தை முடித்தார் திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார்.

இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

அவரது உடல் நலன் கருதி, தமிழக முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், ஆற்காடு வீராசாமி, தா.பாண்டியன். என்.வரதராஜன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினர்.

இன்று திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் கேட்டுக்கொண்டார்.

இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் நிர்வாக குழு கூட்டம் உண்ணாவிரத பந்தல் அருகே நடந்தது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிடுவாரா என்பது பற்றி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுவதாக இருந்தது.

ஆனால் இந்த கூட்ட முடிவில் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக இல்லை என்று முடிவெடுத்தார் திருமாவளவன்.

இந்நிலையில் இன்றூ மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று

சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார்.

நன்றி: நக்கீரன்

Edited by Muhil

  • கருத்துக்கள உறவுகள்

நன்று. உங்களைப் போன்ற சிலர் தான் எமக்காகப் போராடுகின்றார்கள். உங்களையும வருத்திக் கொண்டால்் யார் எங்களை ஆதரிப்பார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முடிவும் இல்லாமல் உண்ணா விரதத்தை முடித்து கொண்டாரா? ஆனாலும் நன்றி திருமாவளவன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ...... நல்ல ஆறுதலான செய்தி . நன்றி திரு . தொல் திருமாவளவன் அவர்களே .

ஒரு முடிவும் இல்லாமல் உண்ணா விரதத்தை முடித்து கொண்டாரா? ஆனாலும் நன்றி திருமாவளவன்.

ரதி , நீங்கள் யாரிடம் முடிவை எதிர்பார்க்கிறீர்கள் ...... அது தப்பு .

அவர்கள் வேடிக்கை பார்த்து திருமாவின் உயிரை திலீபன் போல் , அன்னை பூபதி போல் பிரிய விட்டிருப்பார்கள் .

இவர்கள் தான் , பிரித்தானியாவிடமிருந்து உண்ணாவிரதமிருந்து நாட்டை மீட்டதாக மேடையில் அவ்வப்போது பேசிக்கொள்வார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நன்று. உங்களைப் போன்ற சிலர் தான் எமக்காகப் போராடுகின்றார்கள். உங்களையும வருத்திக் கொண்டால்் யார் எங்களை ஆதரிப்பார்கள்??
  • கருத்துக்கள உறவுகள்

http://video.google.ca/videoplay?docid=4973319842600269537

தீலீபன் அண்ணா பற்றிப் பலர் அவதூறாகச் சொன்னார்கள். ஆனால் அவன் தியாகத்தினை இந்தக் காணோளி வெளிப்படுத்தும். எதிரிகளின் வாயை முடக்கும்.

காலத்தின் தேவை கருதி...

சில முக்கியமான காட்சிகள்,

23.24 இல் தலைவரின் அன்பான வருடல்

35.52 மூச்சிழுக்கக் கஸ்டப்படும் திலீபன் அண்ணத

36.34: தீலீபன் அண்ணாவின் இறுதி விநாடி

நல்ல செய்தி. அறப் போராட்டத்தையே ஆளை முடிக்க சந்தர்ப்பமாக பயன்படுத்தும் நாட்டில் இவ்வாறான போராட்டங்களின் வெற்றி குறித்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. திருமாவளவன் அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்து தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எமது விரும்பமும் கூட. அறப்போராட்டங்களுக்கு இந்திய அரசால் எவ்வாறான மதிப்பளிக்கப்படும் என்பதற்கு அன்னை பூபதியினதும் தியாகி திலீபனதும் தியாகங்கள் சாட்சி.

தமிழக மக்களின் வேதனைகளை ஒரு இம்மியளவும் மதிக்காதவகையில் மத்தியரசு இப்போது நடந்து கொள்கின்றது. இவ்வாறான மத்திய அரசின் கடும் போக்கல் ஏளைய மாநிலத்தவர் முன் தமிழகம் தலைகுனிந்து நிற்கின்றது. தனது இனம் தனது அரசின் அனுமதியுடன் அழித்தொழிக்கப்படும் கொடுமையை கைகட்டி வேடிக்கை பார்க்கும் கொடுமை வேறு எந்த இனத்துக்கும் நேர்ந்ததில்லை. தமிழகத்தின் நிலை வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிக பரிதாபகரமாக உள்ளது என்பதே யதார்த்தம்.

நல்ல செய்தி. அறப் போராட்டத்தையே ஆளை முடிக்க சந்தர்ப்பமாக பயன்படுத்தும் நாட்டில் இவ்வாறான போராட்டங்களின் வெற்றி குறித்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. திருமாவளவன் அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்து தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எமது விரும்பமும் கூட. அறப்போராட்டங்களுக்கு இந்திய அரசால் எவ்வாறான மதிப்பளிக்கப்படும் என்பதற்கு அன்னை பூபதியினதும் தியாகி திலீபனதும் தியாகங்கள் சாட்சி.

தமிழக மக்களின் வேதனைகளை ஒரு இம்மியளவும் மதிக்காதவகையில் மத்தியரசு இப்போது நடந்து கொள்கின்றது. இவ்வாறான மத்திய அரசின் கடும் போக்கால் ஏளைய மாநிலத்தவர் முன் தமிழகம் தலைகுனிந்து நிற்கின்றது. தனது இனம் தனது அரசின் அனுமதியுடன் அழித்தொழிக்கப்படும் கொடுமையை கைகட்டி வேடிக்கை பார்க்கும் கொடுமை வேறு எந்த இனத்துக்கும் நேர்ந்ததில்லை. தமிழகத்தின் நிலை வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிக பரிதாபகரமாக உள்ளது என்பதே யதார்த்தம்.

:unsure::unsure::huh:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ...... நல்ல ஆறுதலான செய்தி . நன்றி திரு . தொல் திருமாவளவன் அவர்களே .

ரதி , நீங்கள் யாரிடம் முடிவை எதிர்பார்க்கிறீர்கள் ...... அது தப்பு .

அவர்கள் வேடிக்கை பார்த்து திருமாவின் உயிரை திலீபன் போல் , அன்னை பூபதி போல் பிரிய விட்டிருப்பார்கள் .

இவர்கள் தான் , பிரித்தானியாவிடமிருந்து உண்ணாவிரதமிருந்து நாட்டை மீட்டதாக மேடையில் அவ்வப்போது பேசிக்கொள்வார்கள் .

சிறி,

ஒட்டு குழுக்களைச் சார்ந்தவர்கள் திருமா அவர்கள் உண்ணாவிரத்தை ஆரம்பித்தவிடன் சொன்னார்கள் இது ஒரு நாடகம் என அது உண்மையாகிவிடாதா? தீலிபனும்,பூபதியும் உண்ணா நோன்பு இருக்க கண்டும் காணத மாதிரி இருந்து சாக விட்டது இந்தியா அப்படியிருந்தும் எப்படி துணீந்து இவ் உண்ணாவிரதத்தை திருமா தொடங்கினார்? திட்டமிடல் இல்லாமலா தொடங்கினார்? நான் எனது ஆதங்கத்தினை எழுதினேன் எமக்காக ஒரு உயிர் துறப்பது எனக்கு கொஞ்சம் கூட இஸ்டம் இல்லை.

நல்ல விடயம் , திருமா என்றும் தமிழினத்திற்கு தேவை

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆறுதலாக இருக்கிறது.அவர் உயிரோடு இருப்பது மிக அவசியமானது.ஆனானப்பட்ட கலைஞருக்கே (கலைஞர் தான் ஏமாற்றப் பட்டதைப் போன்றும் நடிப்பார்) போக்கு காட்டும் மத்திய அரசு திருமாவளவனைக் கண்டு கொள்ளாது அவரைச் சாகவும் விட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி,

ஒட்டு குழுக்களைச் சார்ந்தவர்கள் திருமா அவர்கள் உண்ணாவிரத்தை ஆரம்பித்தவிடன் சொன்னார்கள் இது ஒரு நாடகம் என அது உண்மையாகிவிடாதா? தீலிபனும்,பூபதியும் உண்ணா நோன்பு இருக்க கண்டும் காணத மாதிரி இருந்து சாக விட்டது இந்தியா அப்படியிருந்தும் எப்படி துணீந்து இவ் உண்ணாவிரதத்தை திருமா தொடங்கினார்? திட்டமிடல் இல்லாமலா தொடங்கினார்? நான் எனது ஆதங்கத்தினை எழுதினேன் எமக்காக ஒரு உயிர் துறப்பது எனக்கு கொஞ்சம் கூட இஸ்டம் இல்லை.

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தீலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்து சாவடைந்தது, இந்தியா அரசுக்கு எதிராகவா என்று நினைக்கின்றீர்கள். அது இந்திய அரசு என்னமும் உதவும், அது தமிழ்மக்களுக்காக உதவும் என்று நம்பிக் கொண்டிருந்த அபலைத் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக... (இப்போதும் சிலர் நம்பவது வேதனையானது தான். )

மற்றும்படி இந்தியா வந்து உதவும் என்று தீலீபன் அண்ணா கூட நம்பியிருக்கமாட்டார். அவருக்கு முதலே முடிவு தெரியும் என்பதை அவர் முதலே சொல்லித் தான் ஆரம்பிப்பார். அவர் எதிர்பார்த்தது, மக்கள் புரட்சிக்கு தான் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று.

ஆகவே இந்தியாவிற்கு எதிராக என்று ஏன் எம்மை ஏமாற்றிக் கொள்ளவேண்டும். எமக்கு இந்தியாவைப் பற்றி விளங்கப்படுத்த அதைச் செய்தார்..

இப்போது திருமாளவன் அவர்கள் கூட இந்தியா உதவும் என்று நம்பிக்கையோடு செய்யவில்லை. அவருக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால் இந்த 4நாட்களில் இந்திய அரசு என்ன செய்ததது, அது உண்ணாநோன்புக்குக் கொடுத்த கெளரவம் என்ன என்பது தொடர்பாகவும், சிவசங்கர் மேனன் என்ன செய்தார் என்பது குறித்தும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

திருமா அவர்களின் உண்ணாவிரதம் தமிழ்மக்களை என்னமும் பலப்படுத்த வைத்திருக்கின்றது. எதிர் எதிராக இருந்த பாரதிய ஜுனதாக்கட்சியும், முஸ்லீம் லீக்கும் ஒரே மேடைக்கு வந்து, திருமா அவர்களின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தமை கூட ஒரு வித வெற்றி தான்.

என்றைக்குமே தமிழ்மக்களுக்கு இந்தியா உதவாது. சமாதனப்படை வேடத்தை அதனால் எனிப் போடமுடியாது என்பதை காலங்கள் தமிழக மக்களுக்குச் சொல்லி வருகின்றன. அதற்காகத் தன்னை 4 நாட்கள் வருத்திய திருமாவிற்கு எம் உளங்கனிந்த நன்றிகளையும், பாசத்தையும் இச்சமயத்தில் தெரிவிப்போமாக.

துரோகக் கும்பலுக்காகவும் எதிரிகளுக்காகவும் உண்ணாநோன்பை அவர் செய்யவில்லை. அது பற்றிக் கணக்கில் எடுக்க வேண்டிய தேவையும் யாருக்குமில்லை. அவர்கள் தீலிபன் அண்ணா குறித்தும் இப்படி ஒரு அவதூறைத் தான் செய்தார்கள். ஆனால் நாம் ஒரு வீரத்தளபதியை இழக்க வேண்டி வந்தது.

உங்களுக்கு ஏற்படும் அந்த நம்பிக்கை உணர்வும், ஒற்றுமையும் மட்டும் போதும். யாருக்காவும் பதில் சொல்லத் தேவையில்லை.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறி,

ஒட்டு குழுக்களைச் சார்ந்தவர்கள் திருமா அவர்கள் உண்ணாவிரத்தை ஆரம்பித்தவிடன் சொன்னார்கள் இது ஒரு நாடகம் என அது உண்மையாகிவிடாதா? தீலிபனும்,பூபதியும் உண்ணா நோன்பு இருக்க கண்டும் காணத மாதிரி இருந்து சாக விட்டது இந்தியா அப்படியிருந்தும் எப்படி துணீந்து இவ் உண்ணாவிரதத்தை திருமா தொடங்கினார்? திட்டமிடல் இல்லாமலா தொடங்கினார்? நான் எனது ஆதங்கத்தினை எழுதினேன் எமக்காக ஒரு உயிர் துறப்பது எனக்கு கொஞ்சம் கூட இஸ்டம் இல்லை.

ரதி ,

ஒட்டுக்குளுக்கள் ஆயிரம் சொல்லும் , அவர்கள் பிலாக்காய் பால் போல , எங்கும் ஒட்டிக் கொள்ளவே விருப்புவார்கள் . அது தேனாக இருந்தாலும் , பீ ...யாகா இருந்தாலும் , அவர்களுக்கு சுவை தான் முக்கியம் .

ஆனால் நடப்பதோ ..... ஒரு பண்டைய தமிழ் இனத்தின் விடிவுப்போராட்டம் . இதில் தவற விட்டால் நமக்கு விடிவு இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து .

நல்ல முடிவு திருமா போன்றவர்களின் சேவை இன்னமும் தேவை.

இந்தியாவின் குணம் முன்பே தெரிந்ததுதான். காந்தி பிறந்தமண்தான் ஆனால் காந்தியத்துக்கு 5 சதமும் மதிப்பில்லாத நாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை - இலங்கை பிரச்சனையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக திருமாவளவன் கூறினார். திருமாவளவனுக்கு ராமதாஸ் பழரசம் கொடுக்க அதனை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டாலும் தனது போராட்டம் தொடரும் என்று முன்னதாக அவர் கூறினார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று இலங்கை கொடிகளை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தாம் உண்ணாவிரதம் இருப்பதைத் தொடர்ந்து தமது கட்சியினர் பஸ் எரிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கண்டதும் சுடப்படுவார்கள் என்றும் தமிழக காவல்துறை கூறியிருப்பதாலும் அவர் தனது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் அந்நாட்டு அரசுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு துணை போவதால் காங்கிரஸ் கட்சியுடன் எதிர்காலத்தில் எந்த உறவும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் திருமாவளன் கூறினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக சென்னையை அடுத்த மறைமலை நகரில் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரதம் முடித்துக் கொள்ளப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டதாக கருதக்கூடாது என்றும் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

http://video.google.ca/videoplay?docid=4973319842600269537

தீலீபன் அண்ணா பற்றிப் பலர் அவதூறாகச் சொன்னார்கள். ஆனால் அவன் தியாகத்தினை இந்தக் காணோளி வெளிப்படுத்தும். எதிரிகளின் வாயை முடக்கும்.

காலத்தின் தேவை கருதி...

சில முக்கியமான காட்சிகள்,

23.24 இல் தலைவரின் அன்பான வருடல்

35.52 மூச்சிழுக்கக் கஸ்டப்படும் திலீபன் அண்ணத

36.34: தீலீபன் அண்ணாவின் இறுதி விநாடி

தியாக தீபம் திலீபனின் காணொளிகண்டு அழுவதைத்தவிர என்னசெய்யமுடியும்.

இந்தியப் பேரரசின் துரோகத்துக்கும் ஈவிரக்கமற்ற கல்நெஞ்சம் கொண்டவர்களின் ஈனச்செயலுக்கும் இது ஒரு உதாரணம். இவ் ஈனச்செயலை அறிந்த வகையில் திருமாவளவனையும் இழக்கமுடியாது. அவர் இப்போராட்டத்தை கைவிட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்தேன் தற்போது பிரார்த்தனை வீண்போகவில்லை.

திலீபனின் உன்னதமான போராட்டத்தின் காணொளியினை உலகத்திற்கும் குறிப்பாக ஈழவிடுதலையை எதிர்ப்பவர்களுக்கும் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் சென்றடயக்கூடிய வகையில் செய்தால் நல்லது என்று நினைக்கிறேன்.

சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா?????????

Edited by suryaa

நல்ல முடிவு. எமக்காக குரல்கொடுக்க கட்டாயம் அவர் இன்னும் பல வருடங்கள் வாழவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு ........இரும்பு மனிதர்களின் மனங்களை .இனத்துவேசம் பிடித்தவர்களின் கல் மனங்களை அறப்போராடதினால் அசைக்க முடியாது ,திருமா போன்றவர்கள் தமிழ் உணர்வாளர்கள் நமக்கு மேலும் பணியாற்ற வேண்டும். தேச நலன் கருதியும் இம் முடிவை எடுத்தமைக்கு நன்றி.

சரியான முடிவு

உங்களைப் போன்றவர்கள் என்றும் தேவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீறிப்பாய்ந்த சீமான் அண்ணாவையும் சிறையில் போட்டுவிட்டார்கள்; உங்கள் உடல்நிலையை வருத்துவதால் வருந்துவது அதே உணர்வுள்ள தமிழர்கள் மட்டும்தான் திருமா அண்ணா. உடல்நிலை பேணுங்கள். நீங்கள் எமக்காக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ,

ஒட்டுக்குளுக்கள் ஆயிரம் சொல்லும் , அவர்கள் பிலாக்காய் பால் போல , எங்கும் ஒட்டிக் கொள்ளவே விருப்புவார்கள் . அது தேனாக இருந்தாலும் , பீ ...யாகா இருந்தாலும் , அவர்களுக்கு சுவை தான் முக்கியம் .

ஆனால் நடப்பதோ ..... ஒரு பண்டைய தமிழ் இனத்தின் விடிவுப்போராட்டம் . இதில் தவற விட்டால் நமக்கு விடிவு இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து .

சிறி சரியான கருத்து ஏற்றுக் கொள்கிறேன்.நன்றி தூயவனின் விளக்கத்திற்கு இப்ப தான் எனக்கு உண்மையாக விளங்கியது திருமா ஏன் உண்ணா விரதம் இருந்தார் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி சரியான கருத்து ஏற்றுக் கொள்கிறேன்.நன்றி தூயவனின் விளக்கத்திற்கு இப்ப தான் எனக்கு உண்மையாக விளங்கியது திருமா ஏன் உண்ணா விரதம் இருந்தார் என்று.

உண்மையை புரிந்து கொண்டமைக்கு , நன்றி ரதி . :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் திருமாவளவனின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அவரின் உயிர் நிச்சயம் பறிக்கப் பட்டிருக்கும் காரணம் இந்தியாவில் காந்தியோடு அகிம்சையும் செத்துவிட்டது. திருமா உண்ணாவிரதத்தைக் கைவிட்டது எங்கள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோசமே. இலங்கையில் தமிழர்களைக் கொன்றுகுவிக்க ஆயுதம் வழங்கிவரும் இந்தியா தமிழ் நாட்டில் ஓர் தமிழன் உண்ணாவிரதம் இருந்தால் கண்டுகொள்ளவா போகிறது..? அ நியாயமாக ஒரு தமிழ் தலைவரை இழந்திருப்போம் அவர் உயிரோடு இருந்து தமிழீழம் அடையும் வரை எங்களுக்கு பல சேவைகள் ஆற்றவேண்டும்.

எமது தலைவனின் வழிதான் தற்போதைய உலக ஓட்டத்துக்கு மிகவும் சரியான வழி..'' அடிக்கு அடி.....! துப்பாக்கிக்கு துப்பாக்கி..''. எமது இலங்கைத் தலைவர்களின் அகிம்சை தோற்றுத்தானே இளைஞர்கள் ஆயுதமேந்தினார்கள்.... அதனால் தானே இந்த ஆயுதப் போராட்டத்தை அழித்துவிட உலக நாடுகளையெல்லாம் கூட்டி நின்று கங்கணம் கட்டிக்கொன்று நிற்கிறார்கள்.. காரணம் தமிழரை முன்புபோல் அடக்கி ஆழ முடியாது, தமிழரை அடக்கும் வரை தங்களுக்கு நிம்மதி கிடையாது என்ற பயம். இந்தப் பயத்தை நீக்கத்தானே இவ்வளவு உயிர்ப் பலிகளைக்கொடுத்து இவ்வளவு பிரயத்தனம் செய்கிறான் எதிரி.

எனவே ' அவலத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக் கொடு..'' பொலிசிதான் வெல்லும். எப்படியோ தன் உயிரைப் பணயம் வைத்து போராட்டத்தில் இறங்கியிருந்த திருமா அண்ணனுக்கு பாராட்டுகைளையும் சொல்லி, அத்துடன் உங்கள் உயிரை அ நியாயமாகப் போகவிடாமல் தடுத்த அனைவருக்கும் நன்றியைச் சொல்லி திருமா அண்ணனின் உயிர் காக்கப் பட்டதற்கு மிகுந்த சந்தோசத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

ராமதாஸ் உட்பட தலைவர்களின் கோரிக்கையையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டார் தொல். திருமாவளவன்

வீரகேசரி நாளேடு 1/18/2009 11:17:21 PM - இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த நான்கு நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மாலை முடித்துக் கொண்டார்.

இவரின் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் மருத்துவருமான இராமதாஸ் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். கடந்த வியாழக்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய திருமாவளவன், தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்ததால் அவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.

இன்று மாலை திருமாவளவன் மயக்க நிலைக்குச் சென்றதால், அவரை அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊர்திக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். திருமாவளவனுக்கு மயக்கம் ஏற்பட்டதை அறிந்த கட்சித் தொண்டர்கள் அவர் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இரண்டு தடவை நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் இரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருமாவளவன் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் மேடைக்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும், திருமாவளவன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்தார். இன்று மாலை 5 மணிக்கு திருமாவளவனைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதால் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

இலங்கைத் தமிழர்களுக்காக நாம் இருவரும் (மருத்துவர் இராமதாஸ், திருமாவளவன்) இணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்கக் கோரி தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம். அப்போராட்டத்தின் போது பால் போன்ற அவசர தேவைக்கான பொருட்கள் தவிர மற்றவற்றை ஏற்றிச் செல்லும் எந்த ஊர்தியும் ஓடாது. எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை இத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

அதனைக் கேட்ட திருமாவளவன், இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு நடத்தப்படும் போராட்டத்திற்கு முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழ் இன உணர்வு கொண்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டுவதாகவும், இலங்கைச் சிக்கல் தொடர்பாக விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களில் முதல்வர் கலைஞர் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்வதாகவும் மருத்துவர் இராமதாஸ் உறுதியளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார்.

திருமாவளவனின் கோரிக்கையை மருத்துவர் இராமதாஸ் ஏற்றுக்கொண்டதையடுத்து உண்ணாவிரப் போராட்டத்தை கைவிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

தொடர்ந்து திருமாவளவனுக்குப் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை மருத்துவர் இராமதாஸ் முடித்து வைத்தார். திருமாவளவனுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்த கட்சியின் மற்ற தொண்டர்களும் போராட்டத்தை இன்று மாலையுடன் முடித்துக்கொண்டனர்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு. எங்களுக்கு நீங்கள் தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.