Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு நகரை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு

Featured Replies

முல்லைத்தீவு நகரை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு

இராணுவத்தின் 59வது படைப்பிரிவு இன்று காலை முல்லைத்தீவு நகரத்தினை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

13 வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு நகரம் இராணுவக்கட்டுப்பாட்டினுள் வந்ததாக அமைச்சர் கெகெலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.

- அத தெரண.

Edited by சாணக்கியன்

  • Replies 54
  • Views 15.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் அப்படியா?? என்னவோ நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடங்கள் கைமாறுவது வழமை, முன்னைய காலங்கள் மீளவும் திரும்புகின்றன.

தமிழன் இடங்களை விட்டுக்கொடுக்கலாம் அவனினுள் எரிந்துகொண்டிருக்கும் தமிழீழம் என்னும் குறிக்கோளை யாராலும் அழிக்கமுடியாது அந்த குறிக்கோள் இருக்குமட்டும் சிங்கள பேரினவாத அரசாங்கம் நிம்மதியாய் இருக்கமுடியாது.

Lanka troops enter rebel town

Sri Lankan troops have entered the last Tamil Tiger rebel stronghold of Mullaitivu in the north-east of the island, military sources say.

The town has not been captured and heavy fighting is going on, the military spokesman said.

There has been no comment from the Tamil Tigers, who have suffered a series of reverses in recent months.

The government has vowed to crush the rebels, who have been fighting for a separate homeland for 25 years.

At least 70,000 people have been killed during the insurgency.

A government spokesman said troops from the 59th division had entered Mullaitivu and that it was "a matter of time before they take full control of the area".

Tamil Tiger rebels blasted through the walls of a reservoir on Saturday in an attempt to stall the advancing troops, the military said.

The government has won a string of military victories in recent months, including the capture of the rebels' de facto capital of Kilinochchi.

The rebels are now confined to their sole remaining stronghold - the area surrounding the town of Mullaitivu.

There is no way of confirming any of the claims as independent journalists are barred from conflict zone

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7849684.stm

ஓ! இதை தான் முல்லை முல்லால் எடுப்பது என்பதா! :)

இல்லை! இல்லை!! கல்லை (கல்மடுக்குளத்தை) முல்லால் எடுக்க முயன்றிருக்கிறார்கள்! :)

பாவம் மகிந்த அவரும் தான் என்ன செய்வார்!

எப்படியாவது பெப்ரவரியில் நடக்க இருக்கும் மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய நிலை அவருக்கு.

இல்லை என்றால் கிழிந்து விடும் கோவணம்!

Edited by vettri-vel

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முல்லைத்தீவு நகரை சிறிலங்கா படையினர் கைப்பற்றியுள்ளதாக அரச இலத்திரனியல் ஊடகங்களில் நேரடியாக தோன்றி அந்நாட்டு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணுமே புரியல உலகத்தில என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது.

Sri Lankan troops inside last big Tiger town Reuters

Sri Lanka says troops enter final rebel stronghold AP

Sri Lanka troops enter final Tiger town: govt AFP

ஒண்ணுமே புரியல உலகத்தில என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது.

நேற்று பொங்கி எழுந்த விடுதலை வேட்கையை ஒரு முல்லைப்பூவை போட்டு மூடிவிட முயற்சிக்கிறார்கள்! அவ்வளவு தான்!!

முல்லைத்தீவு நகருக்குள் நுழைந்தது ராணுவம்: இலங்கைஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 25, 2009, 14:42 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற

கொழும்பு: முல்லைத்தீவு நகருக்குள் ராணுவம் நுழைந்து விட்டதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவெல்லா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் வசம் உள்ள ஒரே கடைசிப் பகுதி முல்லைத்தீவு மாவட்டம்தான். அதைப் பிடிக்க கடும் சண்டை நடந்து வருகிறது.

நேற்று கல்மடுக்குளம் அணைக்கட்டை விடுதலைப் புலிகள் குண்டுவைத்துத் தகர்த்து, ராணுவத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை ராணுவம், முல்லைத்தீவு நகருக்குள் நுழைந்துள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ரம்புகவெல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முல்லைத்தீவைப் பிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முல்லைத்தீவு நகருக்குள் இனறு ராணுவத்தின் 59வது பிரிவு படையணி நுழைந்துள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் நகர் முழுவதையும் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2009/01...r-mullaitt.html

சனிக் கிழமை புலி வெற்றி,ஞாயிறு இரானுவம் வெற்றி என்று செய்தியை போட்டு யாழ் கலக்குது.

நல்ல வேளை நான் நேற்றே பொப்கோணை முடித்திட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

இடங்கள் கைமாறுவது வழமை, முன்னைய காலங்கள் மீளவும் திரும்புகின்றன.

தமிழன் இடங்களை விட்டுக்கொடுக்கலாம் அவனினுள் எரிந்துகொண்டிருக்கும் தமிழீழம் என்னும் குறிக்கோளை யாராலும் அழிக்கமுடியாது அந்த குறிக்கோள் இருக்குமட்டும் சிங்கள பேரினவாத அரசாங்கம் நிம்மதியாய் இருக்கமுடியாது.

உண்மை தான் தான் மச்சான் .

எமது ஐரோப்பிய நிருபர்கள் வழங்கிய அப்டேற் நியூஸ்னால் ஐரோப்பிய தமிழினமே நேற்று கதிகலங்கி இருந்தது. 2000 கும் மேற்பட்ட இராணுவத்தினர் பலி, 500 சடலங்கள் இதுவரை எடுக்கப்பட்டது, 5000 கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆயுதங்கள் அற்ற நிலையில் சுற்றிவளைப்பட்டுள்ளனர், பெருந்தொகை ஆயுதங்கள், கவசவாகனங்கள் மீட்பு, ஒரு அணி பூநகரிவரை முன்னேறி சென்றுவிட்டது, மற்ற அணி ஆனையிறவூடாக கிளாலிவரை சென்றுவிட்டது, இதனிடையே 2 கிபீர்கள் சுட்டு விழுத்தப்பட்டன அப்பப்பா உலக தமிழினமே வசந்தியால் பரவசமடய அவர்களோ சத்தமின்றி முல்லைதீவையும் பிடித்துவிட்டார்களாம். அற்புதம், பிரமாதம்

இதைத்தான் நோகாமல் நொங்கெடுபதெண்டு சொல்லுறது.

-1- கவனயீர்ப்பு நிகழ்வுகள் பற்றி சிந்திப்பவர்கள் தயார்படுத்துபவர்கள் மக்களின் அவலங்கள் பற்றி பிரச்சாரம் செய்பவர்கள் என எத்தனை ஆயிரம் புலம்பெயர்ந்த மக்களின் எத்தனை ஆயிரம் மனித மணத்தியாலங்கள் நேற்று விரைய மடிக்கப்பட்டது?

-2- நேற்று அப்படி ஒரு வெற்றி மயக்கம் இன்று முல்லைத்தீவு ஆக்கிரிமிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி. இது கொடுக்கக் கூடிய மோசமான உளவியல் தாக்கம்.

-3- இது போன்ற வதந்திகள் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் புதிது இல்லை என்றாலும் நேற்று சம்பவம் வழமைக்கு மாறாக 1 நாள் முழுவதும் தொடர்ந்தது (முல்லைத்தீவு நகர் கைப்பற்றும் வரை?).

-4- அடுத்தாக தமிழ்நாட்டு உறவுகள் இலக்கு வைக்கப்பட்டிருந்தார்கள். இதனால் அவர்கள் மத்தியில் ஏற்படக் கூடிய உளவியல் தாக்கம்.

இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு யார்?

இதை தமிழர் மத்தியில் பரப்பியவர்கள் யார்?

பரப்பியது அணையாது கிட்டத்தட்ட 24 மணத்தியாலங்கள் இருக்க பின்னுக் நின்று செயற்பட்டவர்கள் யார்?

இவர்கள் அடுத்த முறை எப்படிப்பட்ட விசத்தை விதைக்கப் போகிறார்கள்?

எப்படியான காலகட்டத்தில் விதைக்கப் போகிறார்கள்?

யாரை எப்படிப்பட்ட செயற்பாடுகளை முடக்க முனையப் போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் பிரசாரங்களுக்கு நாம் அடிபணிகிறோம் என்பதே தவிக்க முடியாத உண்மை.

-2- நேற்று அப்படி ஒரு வெற்றி மயக்கம் இன்று முல்லைத்தீவு ஆக்கிரிமிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி. இது கொடுக்கக் கூடிய மோசமான உளவியல் தாக்கம்.

-3- இது போன்ற வதந்திகள் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் புதிது இல்லை என்றாலும் நேற்று சம்பவம் வழமைக்கு மாறாக 1 நாள் முழுவதும் தொடர்ந்தது (முல்லைத்தீவு நகர் கைப்பற்றும் வரை?).

-4- அடுத்தாக தமிழ்நாட்டு உறவுகள் இலக்கு வைக்கப்பட்டிருந்தார்கள். இதனால் அவர்கள் மத்தியில் ஏற்படக் கூடிய உளவியல் தாக்கம்.

இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு யார்?

இதை தமிழர் மத்தியில் பரப்பியவர்கள் யார்?

பரப்பியது அணையாது கிட்டத்தட்ட 24 மணத்தியாலங்கள் இருக்க பின்னுக் நின்று செயற்பட்டவர்கள் யார்?

இவர்கள் அடுத்த முறை எப்படிப்பட்ட விசத்தை விதைக்கப் போகிறார்கள்?

எப்படியான காலகட்டத்தில் விதைக்கப் போகிறார்கள்?

யாரை எப்படிப்பட்ட செயற்பாடுகளை முடக்க முனையப் போகிறார்கள்?

நேற்றைய சம்பவங்கள் முழுக்க முழுக்க வதந்தி என்றா கருதுகிறீர்கள்?????

Edited by vettri-vel

இந்தச்செய்தியாவது உண்மைதானா?

ஒன்றை எவருமே கவனிக்கவில்லை, எந்தவொரு செய்தியும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையே !!!!!!!!!!

முல்லைத்தீவு பிடிபட்ட செய்தியை எந்தவித் கேள்வியும் இன்றி நம்புபவர்கள் ஏன் இவ்வாறு சிந்திக்கலாமே, நேற்றைய சேத்த்தை மறைக்க இவ்வாறு ஒரு செய்தியை இலங்கை அரசு வெளியிட்டு இருக்கலாம். அதுமட்டுமல்ல போர் இப்போது முல்லைத்தீவில் தான் நடைபெறுகின்றது, எனவே இதுவும் எதிர்பார்க்கக் கூடியது தான்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை இப்போது பலர் புலிகளை விட இலங்கை இராணுவத்தை தான் நம்புகின்றனர்.

கல்மடு அணைக்கட்டு உடைக்கப்பட்டது உண்மை. அதன் பிறகு சண்டை நடந்ததும் உண்மை.

ஆனால் ஆயிரக் கணக்கில் படையினர் கொல்லப்பட்டதும், 600 சடலங்கள் கைப்பற்றப்பட்டதும், 5000 படையினர் உயிரோடு பிடிக்கப்பட்டதும், இரண்டு கிபீர் சுட்டு வீழ்த்தப்பட்டதும், யாழ் குடாவிலும், கிளிநொச்சி நகரிலும் சண்டைகள் நடந்ததும் பொய்.

இவைகள் எதிரியால் பரப்பப்பட்ட வதந்தியா என்பதுதான் இதில் உள்ள கேள்வி

தமிழர் தரப்பின் இணைய ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் அல்லோலகல்லோப்பட்டுக் கொண்டிருக்க, சிங்கள ஊடகங்கள் கடும் அமைதி காத்தன. ஒரு மறுப்புக் கூட வெளியிடவில்லை.

இங்கே எதிரி எத்தனை ஒற்றுமையாகச் செயற்படுகின்றான் என்பது புரிகின்றது.

எமது தரப்பில் இந்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நேர காலத்தில் செய்யப்படவில்லை.

எதிரி நடத்தும் பரப்புரை, மற்றும் உளவியல் போரை எதிர்கொள்ள முடியாத மிகவும் பலவீனமான நிலையில் நாம் நிற்கின்றோம்.

முல்லைத்தீவைக் கைப்பற்றும் பொழுது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை கொடுப்பதற்கு எதிரி திட்டமிட்டு செய்த நடவடிக்கை வெற்றி அடைந்திருக்கின்றது.

இதை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாது நாம் தடுமாறிப் போய் நிற்கின்றோம்.

இப்படியான பலவீனம் மிக்க ஒரு மக்கள் கூட்டம் வல்லரசுகள் இணைந்து நடத்துகின்ற போரை தாக்குப் பிடித்து வெற்றி கொண்டால், அது உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும்.

இப்ப பிரச்சனை எனவெண்டா

வந்ததெல்லாம் செய்தியெண்டு எங்கட சனங்கள் வாசிச்சதும், இல்லை எல்லாம் வதந்தியெண்டமாதிரி நிர்வாகம் கொத்தி எறிஞ்சதும்தான்.

மற்றபடி எங்கள் கொள்கையிலும் உறுதியிலும் எந்தமாற்றமுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.