Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓரிரு நாள் புலி அழிப்பும் தொலைந்து போன 59வது படையணியும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செய்தியின் படி புதுக்குடியிருப்புக்கு தெற்காக இதுவரை காலமும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 59 படையணி மெளனிக்க இப்போ சிறீலங்காவின் நம்பிக்கைப் படையணியான 58 படையணி புதுக்குடியிருப்புக்கு மேற்கு மற்றும் தெற்கு நோக்கி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.

அதுமட்டுமன்றி குடும்பிமலையில் என்ன கண்கட்டி வித்தைகளை காட்டினார்களோ அதை வன்னியிலும் அரங்கேற்றி சிங்கள மக்களை ஏய்த்து வருகிறது இராணுவம்.

பாதுகாப்பமைச்சோ மக்களோடு கலந்து வந்த 10 புலிகள் கைது எங்கின்றது. டெயிலிமிரரும் இராணுவமும் அதை திரித்து 10 புலிகள் சரண் எங்கிறது. ஆக 10 இளைய வயதினரைக் கைது செய்துவிட்டு கதை அளக்கிறது இராணுவம்.

இதற்கிடையே ஆயுதங்களைப் போட்டுவிட்டு வன்னி மக்களை இராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு புலிகள் அழிந்து தொலைய வேண்டியதுதான் என்று எக்காளத்தனமாக மீண்டும் கருத்துக் கூறி இருக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி. இக்கருத்தை சோனியாவை நேற்று பா.ம. க நிறுவனர் இராமதாஸ் அவர்கள் சந்தித்துப் பேசிய பின் முகர்ஜி தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே புலிகளுடன் சண்டை நிறுத்தம் என்பது நகைப்புக்கிடமானது என்று கூறி புலிகளுடன் யுத்த நிறுத்தமே கிடையாது.. அவர்களின் இறுதி கணக்கங்களை இன்னும் சில தினங்களில் காண்பீர்கள் என்று கூறுகிறது சிறீலங்கா.

India reiterates call for LTTE to lay down arms

India today asked the LTTE to give up their weapons and said it was ready to work with Sri Lanka to evacuate civilians caught up in the war zone.

Making a statement in the Lok Sabha, External Affairs Minister Pranab Mukherjee said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) would “best serve the interest of the Tamils by immediately releasing all civilians (under its control) and laying down arms”.

Pointing out that the LTTE was an outlawed group in India, the minister added that it “has done much damage to the Tamil community”.

The Indian government, he added, “is ready to facilitate the evacuation of civilians trapped in the area of conflict, working with the government of Sri Lanka and the ICRC (International Committee of the Red Cross)”.

IANS

------------------------

Govt rejects "laughable" call for truce

Government today rejected fresh calls for a truce with the LTTE as security forces took another village previously held by the cornered guerrillas.

Defence spokesman Keheliya Rambukwella said the government was firmly committed to wiping out "terrorism" and described the demand for a ceasefire from a Tamil Tiger proxy as "laughable."

"We have taken a policy decision to completely root out terrorism," Rambukwella told reporters here. "There will be no ceasefire with the LTTE (Liberation Tigers of Tamil Eelam)."

The ceasefire appeal had come from the Tamil National Alliance, which has 21 legislators in the 225-member national parliament.

Government troops are on the verge of crushing the LTTE and ending their 37-year campaign for an independent Tamil homeland after pushing the rebels back into a small stretch of coastal jungle -- less than 100 square kilometres (38 square miles) in size -- in the island's northeast.

A senior military official said security forces had taken another village that was previously under Tiger control.

AFP

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

-----

-----

இதற்கிடையே புலிகளுடன் சண்டை நிறுத்தம் என்பது நகைப்புக்கிடமானது என்று கூறி புலிகளுடன் யுத்த நிறுத்தமே கிடையாது.. அவர்களின் இறுதி கணக்கங்களை இன்னும் சில தினங்களில் காண்பீர்கள் என்று கூறுகிறது சிறீலங்கா.

இந்தியா கொடுக்கும் தைரியத்தில் வரும் ஆணவப்பேச்சு . :)

இப்ப அவங்க சொல்லனும் நாங்க கேக்கனும் அதுதான் நிலமை....

இது கனகாலத்துக்கு நிலைக்காது சிறி.... நிச்சம இந்த சொற்களை அவர்கள் உண்ணும் நாட்கள் வந்தேதீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அவங்க சொல்லனும் நாங்க கேக்கனும் அதுதான் நிலமை....

இது கனகாலத்துக்கு நிலைக்காது சிறி.... நிச்சம இந்த சொற்களை அவர்கள் உண்ணும் நாட்கள் வந்தேதீரும்.

உண்மை தான் சூறாவளி ,

இவ்வளவு மக்களின் சாபங்களும் பலித்தே தீரும் . பலிக்க வேண்டும் .

59 வது படையணி ஓரளவு அழிந்து போனதை இலங்கை அரச தரப்பு உறுதி செய்வதோடு இன்னும் ஒரு தகவலையும் சொல்கிறது.

முகமாலையில் இருந்து ஆனையிறவை கைப்பற்றிய 53 வது மடையணி வன்னியில் நடக்கும் போருக்கான மேலதீக படையணியாக மங்குளம் ஒட்டுசுட்டான் பகுதியில் நிலை கொள்ள செய்யப்பட்டு இருந்தது. அது 59 வது படையணியின் அழிவுக்கு பின்னர் 53 வது படையணியின் 4வது பிரிகேட்டான Air mobile brigade 59 வது படையணியுடன் இணந்து 59 வது படையணியாகவும் 533 எனும் பிரிகேட் 53வது படையணியாகாவும் களமுனையில் செயற்படுகிறது.

பல வெற்றிகளின் நாயகனான ஜெகத் டயசின் படையணியான 57 கல்மடு சம்பவத்துக்கு பின்னர் இரண்டு பிரிகேட்டுகள் சுருங்கி ஒரு பிரிகேட் மட்டுமே நடவடிக்கையில் ஈடு படுகிறது. 58 வது படையணி முழுமையாக இருக்கிறது. சாலை கடற்கரை பாக்கமாக 55 வது படையணியும் முழுமையான பலத்துடன் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கணக்கில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

புலி கடித்த வலி தாங்க முடியாமல் தான் மக்களை தாக்கீனம். இந்த சரண் அடையும் கோரிக்கையெல்லாம் வீரத்தின் வெளிப்பாடு அல்ல இயலாமையின் வெளிப்பாடு. சிங்க வேட்டை அமைதியாக வன்னிக்குள் நடை பெறுகிறது ஆனால் அது புலி வேட்டை என்று மகிந்தவாலும் இந்தியாவலும் கூறப்படுகிறது. எமது கடமை சிங்கம் செய்வது அறியாது அது கடித்துக் குதறும் மக்களை காப்பார்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தாஸ் அருமையாக சொன்னீர்கள்!

நிதானமாகவும் மகா பொறுமையாகவும் புலிகள் இந்த கடித்து குதறல் எல்லாம் நிறைவு செய்யும் போது வன்னியில் ஒரு ஐம்பதாயிரம் மக்கள் பலியாகியும் மிச்சம் இருப்பவர்கள் அங்கவீனமாகியும் போயிருப்பர்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் ஒரு ஐம்பதாயிரம் மக்கள் பலியாகியும் மிச்சம் இருப்பவர்கள் அங்கவீனமாகியும் போயிருப்பர்

அவர்களை நாம் தியாகிகள் என்போம்.

Edited by காவடி

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கிடையே புலிகளுடன் சண்டை நிறுத்தம் என்பது நகைப்புக்கிடமானது என்று கூறி புலிகளுடன் யுத்த நிறுத்தமே கிடையாது.. அவர்களின் இறுதி கணக்கங்களை இன்னும் சில தினங்களில் காண்பீர்கள் என்று கூறுகிறது சிறீலங்கா.

அப்ப சிங்களம் தன்னை அழிக்கிறதுக்கு முடிவு பண்ணியிட்டுது. கலங்காதீர்கள் தமிழர்களே!

ஜெயசிக்குறுவும் இப்படித்தான் கொஞ்ச நாளாய் இழுத்துக்கொண்டிருந்தது.இராண

இந்த செய்தியை வாசித்தவர்களின் எண்ணிக்கை 1000+...அனால் முல்லைத்தீவில் 50 சிறார் உட்பட 200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட செய்தியை பார்த்தவர்கள் வெறும் 200 பேர்...இதில் இருந்து உங்களுக்கு விளங்குவது என்ன??..இது புரிந்தால்..தமிழ்நாட்டு தமிழன் ஈழத்தில் இருப்பவனுக்கு உயிரையே கொடுக்கும்போது இங்கிருப்பவர்கள் வீதிக்கு வரவே தயங்குவது ஏன் என்று புரியும்.

:):icon_idea:

அப்படியானால் உங்களிடம் ஏதாவது தீர்வு கைவசம் இப்போது உண்டா, இருந்தால் கூறுங்கள்.

இந்த செய்தியை வாசித்தவர்களின் எண்ணிக்கை 1000+...அனால் முல்லைத்தீவில் 50 சிறார் உட்பட 200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட செய்தியை பார்த்தவர்கள் வெறும் 200 பேர்...இதில் இருந்து உங்களுக்கு விளங்குவது என்ன??..இது புரிந்தால்..தமிழ்நாட்டு தமிழன் ஈழத்தில் இருப்பவனுக்கு உயிரையே கொடுக்கும்போது இங்கிருப்பவர்கள் வீதிக்கு வரவே தயங்குவது ஏன் என்று புரியும்.

நெப்போலியன்,

நீங்கள் நினைப்பது தவறு. உதாரணத்துக்கு என்னையே எடுத்துகொண்டால் நான் முதலில் பார்ப்பது புதினம் சங்கதி பதிவு மற்றும் தமிழ்நெற்,இப்படித்தான் பலரும் இருக்கிறார்கள்.நான் யாழுக்கு வருவதே எல்லாப்பத்திரிக்கையிலும் மற்றும் இணையதளத்திலும் வரும்செய்திகளை ஒரே இணையத்தில் வாசிக்கலாம் மற்றும் வாசிக்கும் நேயர்களின் கருத்தை அவதானிக்கலாம் என்றே.

எற்கனவே வாசித்தசெய்தியை வாசிக்கத்தான் வேண்டுமா?

ஒரு செய்தி மிகமுக்கியமானதாக இருந்தால், அதைவாசிக்கும் நேயர்களின் கருத்துக்கள் எப்படி இருக்கின்றது என்று வாசிப்பதற்கு நிறையப்பேர் வருவார்களா? இல்லையா?

அதுதான் இங்கு நடக்கின்றது. :icon_idea:

நிதானமாகவும் மகா பொறுமையாகவும் புலிகள் இந்த கடித்து குதறல் எல்லாம் நிறைவு செய்யும் போது வன்னியில் ஒரு ஐம்பதாயிரம் மக்கள் பலியாகியும் மிச்சம் இருப்பவர்கள் அங்கவீனமாகியும் போயிருப்பர்

அவர்களை நாம் தியாகிகள் என்போம்.

நிழலி மற்றும் காவடிக்கு,

இன்று யுத்ததை இந்திய அரசே நடத்துவது தெரிந்தும், உங்கள் கருத்துகள் ஆச்சரியமாய் இருக்கு!

நிதானமாகவும் மகா பொறுமையாகவும் புலிகள் இந்த கடித்து குதறல் எல்லாம் நிறைவு செய்யும் போது வன்னியில் ஒரு ஐம்பதாயிரம் மக்கள் பலியாகியும் மிச்சம் இருப்பவர்கள் அங்கவீனமாகியும் போயிருப்பர்
மக்களை காப்பாற்றுவதற்கு இதைவிட வேறு மாற்றுவழி ஏதும் தெரியுமா உங்களுக்கு?

நிழலி மற்றும் காவடிக்கு,

இன்று யுத்ததை இந்திய அரசே நடத்துவது தெரிந்தும், உங்கள் கருத்துகள் ஆச்சரியமாய் இருக்கு!

உங்களின் ஆச்சரியம் தான் எனக்கு ஆச்சரியம் தருகின்றது. இந்திய அரசு தான் போரை நடத்துகின்றது என்பதற்காக மக்கள் கொத்து கொத்தாக அழிபடுவதை பற்றியோ அதனை புலிகள் உட்பட எவராலும் அதனைத் தடுக்க முடியாமல் இருக்கின்றது என்பதனையோ மறுக்க வேண்டும் என்கின்றீர்களா? ஒரே நாள் தாக்கியழிப்பில் எத்தனையாவது டிவிசன் ஆமி செத்துப் போனான் என்று சந்தோசப் படும் நிலையிலோ அல்லது அவ்வாறுதான் இன்னும் கொஞ்ச நாளில் மற்ற டிவிசனுக்கும் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கும் நிலையிலோ இன்று எவரும் இல்லை.

மக்களை காப்பாற்றுவதற்கு இதைவிட வேறு மாற்றுவழி ஏதும் தெரியுமா உங்களுக்கு?

மக்களை காப்பாற்றுவதற்கு நீங்கள் குறிப்பிடும் வழியோ அல்லது வேறு எந்த வழிமுறைகளோ இல்லாத வங்குரோத்தனமான அரசியல் நிலையில் தான் இன்று இருக்கின்றோம். உலகின் மிக மோசமான அரசியல் அனாதைகளாக்கப் பட்டு, ஆகக் குறைந்தது அழிவுகளை வெளியே, சர்வதேச மட்டத்தில் கொண்டுவரும் ஒரு ஊடக உதவிகள் கூட இன்று எம்மிடத்தில் இல்லாது நடுத் தெரிவில் அலைகின்றோம்.

உங்களின் ஆச்சரியம் தான் எனக்கு ஆச்சரியம் தருகின்றது. இந்திய அரசு தான் போரை நடத்துகின்றது என்பதற்காக மக்கள் கொத்து கொத்தாக அழிபடுவதை பற்றியோ அதனை புலிகள் உட்பட எவராலும் அதனைத் தடுக்க முடியாமல் இருக்கின்றது என்பதனையோ மறுக்க வேண்டும் என்கின்றீர்களா? ஒரே நாள் தாக்கியழிப்பில் எத்தனையாவது டிவிசன் ஆமி செத்துப் போனான் என்று சந்தோசப் படும் நிலையிலோ அல்லது அவ்வாறுதான் இன்னும் கொஞ்ச நாளில் மற்ற டிவிசனுக்கும் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கும் நிலையிலோ இன்று எவரும் இல்லை.

நிழலி,

உங்கள் கேள்விக்கு பதில் இருக்கு, நான் சொல்வதை விட காலம் உணர்த்தும்! :icon_idea:

நான் சொல்லவந்தது எம் மக்கள் (புலம்பெயர்ந்த டமில்ஸ்) என்னும் எத்தன ஆமி செத்தான் என்ற அற்ப சந்தோசத்திற்காக ஏங்குவதை பற்றி. நாம் இப்படி இருந்ததால் தான் சிங்கள புலநாய்வு பிரிவும் தமிழ் புல்லுருவிகள் சிலரும் கல்மடு குளம் உடைஞ்சதும் 1000 ராணுவம் பலி..2 கிபிர் வீழ்த்தியாச்சு...டக்கிலஸ் போட்டார்...கிளிநொச்சில கொடி ஏத்தியாச்சு என்டு கதை விட அதை கேட்டு வெளிநாட்டு தமிழர் கையில பொப்கோன்னும் பீயர் போத்துலும் என்டு சந்தோசத்தில ஓடி திரிஞ்சவங்கள். அன்றைக்கு நாம் எவ்வளவு அடி முட்டாளாக இருக்கிறோம் என்பதை சிங்களவன் நன்கு உணர்ந்திருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி மற்றும் காவடிக்கு,

இன்று யுத்ததை இந்திய அரசே நடத்துவது தெரிந்தும், உங்கள் கருத்துகள் ஆச்சரியமாய் இருக்கு!

நீங்கள் களத்துக்கு புதுசா? இதில் ஆச்சரியபட என்ன இருக்கு

மக்களை காப்பாற்றுவதற்கு நீங்கள் குறிப்பிடும் வழியோ அல்லது வேறு எந்த வழிமுறைகளோ இல்லாத வங்குரோத்தனமான அரசியல் நிலையில் தான் இன்று இருக்கின்றோம். உலகின் மிக மோசமான அரசியல் அனாதைகளாக்கப் பட்டு, ஆகக் குறைந்தது அழிவுகளை வெளியே, சர்வதேச மட்டத்தில் கொண்டுவரும் ஒரு ஊடக உதவிகள் கூட இன்று எம்மிடத்தில் இல்லாது நடுத் தெரிவில் அலைகின்றோம்.

இதை நீங்கள் இப்பதான் கண்டுபிடிச்சனீங்களோ?

இதைபற்றித்தான் இங்கு இருப்பவர்கள் யாழ்களம் தொடங்கிய நாளில் இருந்து பேசுகிறார்கள்.

இதற்கிடையே புலிகளுடன் சண்டை நிறுத்தம் என்பது நகைப்புக்கிடமானது என்று கூறி புலிகளுடன் யுத்த நிறுத்தமே கிடையாது.. அவர்களின் இறுதி கணக்கங்களை இன்னும் சில தினங்களில் காண்பீர்கள் என்று கூறுகிறது சிறீலங்கா.

அப்ப சிங்களம் தன்னை அழிக்கிறதுக்கு முடிவு பண்ணியிட்டுது. கலங்காதீர்கள் தமிழர்களே!

ஜெயசிக்குறுவும் இப்படித்தான் கொஞ்ச நாளாய் இழுத்துக்கொண்டிருந்தது.இராண

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்து விட்டோமே என்ற சோகம் சிலரின் கருத்தில் தெரிகிறது. இதை புலம்பி மாற்ற முடியுமென்றால் தமிழக மக்கள் இவ்வளவு காலமாகப் புலம்புகிறார்கள், மாறியிருக்க வேணும். புலிகள் அடிக்க மாட்டேனென்கிறார்கள் என்ற முறைப்பாடும் வெளிவர ஆரம்பித்திருக்கிறது.இரு நூறு சதுர கிலோமீற்றர்களுள் மக்களையும் சமாளித்து, படை நடவடிக்கையும் கச்சிதமாக செய்து முடிக்க வேணுமெண்ட எதிர் பார்ப்பு வெளிநாடுகளுக்கு வந்து நிதி ஆதரவு மட்டுமே (சிலர் அதுவும் இல்லை) கொடுத்து வரும் எங்களுக்கு வருவது எவ்வளவு பொருத்தமானது என்று அவரவரே தான் கேட்டுக் கொள்ள வேணும், ஆனால் யாரும் பார்க்காத அரசியல் வங்குரோத்து ஆகி விட்டோம் என்பது கொஞ்சம் அதிகப் படியான வாக்கியம் என நினைக்கிறேன். எங்களுக்கு நாம் ஒரு அரசு இல்லாத படியால் அங்கீகாரம் இல்லை என்பது உண்மை. இது ஒரு இரவில்,ஒரு வாரத்தில் நடந்து விட வேணுமெண்டு எதிர் பார்ப்போர், எங்களோடு ஒத்த நிலையில் வைக்கக் கூடிய கிழக்கு திமோர் போராட்டத்தை பற்றி வாசித்தறிய வேணும். இப்போது நடக்கிற புலம் பெயர் நடவடிக்கை எல்லாம் மக்கள் உயிரிழப்பைக் குறைக்க வலியுறுத்தித் தான் நடக்கின்றன. புலம்புவதை விட்டு விட்டு, இந்தப் பெரு வெள்ளத்தில் சிறு துளியாக வேணும். விளைவு உண்டு, இது ஒரு பிரார்த்தனை போன்ற நிலைமை, லட்சம் பேரின் நியாயமான வேண்டுதல் விளைவு தராமல் போகாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தின் இன்றைய நிலைக்குக் காரணம்:

1. தான் தப்பி இருக்க யாரேனும் போராடிப் பெறட்டன் என்ற தமிழர்களின் "அதி உன்னத மனநிலை"

2. காசு மட்டும் போராடும் என்ற கற்பனை.

3. விடுதலைப்புலிகளின் பலம் மீதான உருப்பெருப்பிப்பு.

4. போராளிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து தம்மை யுத்தத்துக்கு தயார் செய்யாத மக்கள்.

5. 35 வருட போராட்டத்தில் 25 வருட புலம்பெயர் வாழ்வில் எம்மவர்கள் தமிழீழம் கேட்டு தொடர்ச்சியாகப் போராடுவது வன்னிக்குள் புலிகளும் மக்களும் ஒரு சிறு துண்டுக்குள் அடக்கப்பட்ட பின்னரே. இதுதானா இவர்களின் தாயகத்தின் விடிவுக்கான போராட்டத்தின் தார்ப்பரியம். இவ்வளவு காலமும் என்ன குறட்டையா விட்டார்கள்.

6. தமிழீழம் என்ற கோரிக்கையை கைவிட்டு அரசுகளிடம் சரணாகதி அடைந்த, அடையத் தயாராக இருக்கும் துரோகிகள்.

7. காட்டிக் கொடுப்போரும் அதன் வழி பிழைக்கும் தமிழரும் முஸ்லீம்களும் பெருக இடமளித்தமை.

8. இந்தியாவை நம்பி அல்லது நோக்கி எமது போராட்டத்தின் தன்மையை தீர்மானிக்க வெளிக்கிட்டமை.

9. எமது போராட்டத்துக்கு இராஜதந்திர பலத்தைச் சேர்க்கத்தவறியமை.

10. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை எமது போராட்டம் நோக்கி ஒற்றுமைப்படுத்தி ஒன்றிணைக்காமை.

11. வாய்ச்சவடால் அறிக்கைகள் மூலம் எதிரியை உசார்ப்படுத்திக் கொண்டிருந்தமை.

12. எதிரியின் பலத்தை குறைவாக மதிப்பிட்டமை.

13. எமது போராட்டத்துக்கு ஜனநாயக சாயத்தைப் பூசாமை.

14. படைக்கட்டுமானங்களை எதிரியின் பலத்துக்கு ஏற்ப வலுப்படுத்தாமை. (குறிப்பாக ஆயுத ஆளணி வளம்)

15. களத்தில் இருந்த மக்களுக்கு எதிர்கால கள நிலவரங்களாக அமையக் கூடிய சாத்தியங்களை விளக்கி அவற்றை எதிர்கொள்ள மக்களை தயார் செய்யாமை. :icon_idea:

இக்காரணங்களை கூர்ந்து பார்த்தால்.. இவற்றில் பலவற்றுக்கு புலிகள் அல்லாத சக்திகளே முக்கிய காரணம் என்பதைக் காணலாம்..! :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.