Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபரேஷனால் திரும்ப வந்துள்ள இந்த உயிர் இனி உங்கள் உயிர் - கருணாநிதி

Featured Replies

சென்னை: அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

........................

என் கண்ணீரை- கவலையை- துச்சமாகக் கருதுகிறார்கள். இருக்கும் வரையில் ஏழைபாழைகளுக்கு- பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் ஆக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்களுக்கு- எதையாவது செய்ய வேண்டும், அதையும் அவர்களை வாழ வைக்கும் வண்ணம் செய்ய வேண்டும், தன்மானம் பெறும் வண்ணம் செய்ய வேண்டும், தமிழ் வானம் இருக்கு மட்டும்- அதில் தமிழ் மக்களுக்காக நான் பாடும் கானம்-ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும், நான் இல்லாவிட்டாலும், அது ஒலித்துக் கொண்டே இருக்கும் என நினைத்துக்கொண்டே வாழ்வேன்.

அகவை 85 இப்போது! அறுவை சிகிச்சை மூலம் பெற்றுள்ள இந்த உயிர்- என்னுயிர் என்று எழுதப்பட்டாலும்; இனிய தமிழர்களே, என்னரும் உடன்பிறப்புகளே, இது அப்போதும்-இப்போதும்-இனி எப்போதும் உங்கள் உயிர் என்று உருக்கமாக கூறியுள்ளார் கருணாநிதி.

யாழ்களம் சார்பாக அம்மான் சீச்ச் கலைஞர் கருணா....விற்கு ஒரு ஓப் போடுவம்!!!

அறுவைச்சிகிச்சை செய்தது முள்ளந்தண்டிலேயே, மூளையில் அல்லவே <_< :lol

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பேசிப் பேசியே.. தமிழகத்தை நல்லா ஏமாற்றிட்டாங்க. எனி என்ன இருக்கு..! <_<:wub:

உலகத்தில எவனும்.. முதுகு வலிக்கு இறந்ததா வரலாறில்லை. பேசிறது.. பகுத்தறிவுவாதம்.. ஆனால்.. அவிழ்கிறதோ மக்களை முட்டாள் ஆக்கிற புளுகுவாதம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் தேர்தல் வருது. செய்வதை விட்டு சனங்களட சென்டிமென்ட்டை உசுப்பிவிட நினக்கிறாரு.

செய் அல்லது செத்து மடி.

கலைஞரே நீங்கள் சுகம் பெற்று

தொடர்ந்து ஈழத் தமிழர் இன்னல் தீர

செயல்பட வேண்டி பிராத்திக்கிறேன்.

கலைஞரே

நீங்கள் மட்டும் ஆட்சியில் இல்லை என்றால்

ஜெயா ஆட்சியில் இருந்திருந்தால்

ஈழத் தமிழர் தொடர்பான உணர்வாளர்களது போராட்டம்

தொடக்கத்திலேயே சவப் பெட்டியில்லாமலே அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.

உங்களுக்கு பல அழுத்தங்கள் என்பது தெரியும்.

உங்கள் கட்சி தோற்று ஜெயா ஆட்சி பீடம் ஏறினால்

அடுத்த நிமிடமே தமிழக உணர்வுகள்

உணர்விழந்து போகும்?

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில எவனும்.. முதுகு வலிக்கு இறந்ததா வரலாறில்லை. பேசிறது.. பகுத்தறிவுவாதம்.. ஆனால்.. அவிழ்கிறதோ மக்களை முட்டாள் ஆக்கிற புளுகுவாதம்..! <_<:wub:

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ்களம் சார்பாக அம்மான் சீச்ச் கலைஞர் கருணா....விற்கு ஒரு ஓப் போடுவம்!!!

கலைஞருக்கு ஒரு ஒ............போட்டாச்சு,உங்களுடைய அரசியல் வாரிசுக்கு(ஸ்டாலினுக்கு)உங்க

ளுடைய அரசியல் சித்துக்களை சொல்லி கொடுக்கவும் நீங்கள் இல்லாத காலங்களில் டமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதற்க்கு <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலஞரும் சரி ஜெயலலிதாவும் சரி தமிழர்களை காங்கிரசுக்கு விற்கும் அடியாள் கூட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரே நீங்கள் சுகம் பெற்று

தொடர்ந்து ஈழத் தமிழர் இன்னல் தீர

செயல்பட வேண்டி பிராத்திக்கிறேன்.

கலைஞரே

நீங்கள் மட்டும் ஆட்சியில் இல்லை என்றால்

ஜெயா ஆட்சியில் இருந்திருந்தால்

ஈழத் தமிழர் தொடர்பான உணர்வாளர்களது போராட்டம்

தொடக்கத்திலேயே சவப் பெட்டியில்லாமலே அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.

உங்களுக்கு பல அழுத்தங்கள் என்பது தெரியும்.

உங்கள் கட்சி தோற்று ஜெயா ஆட்சி பீடம் ஏறினால்

அடுத்த நிமிடமே தமிழக உணர்வுகள்

உணர்விழந்து போகும்?

:wub::lol: இப்ப மட்டும் தமிழக தமிழர் எழுச்சி என்ன கல்யாணப் பந்தலிலா நிக்குது? எங்க இருந்து தான் கிளம்பியறியளோ இப்படி எ.இ.பொ.க்களுக்கெல்லாம் கண்ண மூடிக்கினு "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ" போட! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே கடவுளே...

சிலதுகளை தாங்க முடியலை சாமி...

யாழை சன் நெட்வேர்க் வேண்டீட்டேன்டு கதைகிறாங்கள் உண்மைய??

கலைஞரே நீங்கள் சுகம் பெற்று

தொடர்ந்து ஈழத் தமிழர் இன்னல் தீர

செயல்பட வேண்டி பிராத்திக்கிறேன்.

கலைஞரே

நீங்கள் மட்டும் ஆட்சியில் இல்லை என்றால்

ஜெயா ஆட்சியில் இருந்திருந்தால்

ஈழத் தமிழர் தொடர்பான உணர்வாளர்களது போராட்டம்

தொடக்கத்திலேயே சவப் பெட்டியில்லாமலே அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.

உங்களுக்கு பல அழுத்தங்கள் என்பது தெரியும்.

உங்கள் கட்சி தோற்று ஜெயா ஆட்சி பீடம் ஏறினால்

அடுத்த நிமிடமே தமிழக உணர்வுகள்

உணர்விழந்து போகும்?

எப்படி இவ்வளவு சீரியசா ஜோக் அடிக்க முடியுது உங்களால <_<:wub::lol::(:D :D :D

சென்னை: அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மாப்பு இனியும் உங்கட பருப்பு வேகாது வேறு ஏதாவது புதுசா திங் பண்ணும். மோன் வேற காத்திருக்கிறார் 57 வயசாயும் இன்னும் அரியணை கிடைக்கேல்ல என்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி இவ்வளவு சீரியசா ஜோக் அடிக்க முடியுது உங்களால <_<:wub::lol::(:D :D :D

நீங்கள்தான் நல்ல சோக்கு அடிகிரீங்கள்..உங்கட பதிலைகேட்டு வாய் விட்டு சிரிச்சான்

மாப்பு இனியும் உங்கட பருப்பு வேகாது வேறு ஏதாவது புதுசா திங் பண்ணும். மோன் வேற காத்திருக்கிறார் 57 வயசாயும் இன்னும் அரியணை கிடைக்கேல்ல என்று

ச்ச்ச்ச் ஸூஉ... சத்தமா கதைகாதீங்கோ ....இங்க கனக்க தி.மு.க வின் ர.ர கள் இருக்கினம்..மஞ்சள் கரை வெட்டியா மடிச்கிக்கடிகொண்டு வருவினம்...

பிறகு உங்களுக்குக் மண்டையால போகும் என்ரா இந்த கருத்தை சொன்னான் எண்டு..

ர.ர ( ரத்தத்தின் ரத்தங்கள்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கிழடு மண்டையை போடோணுமெண்டு தமிழ்நாட்டிலையே கனசனம் தவமிருக்குதாம்.

இதுக்குள்ளை இந்த உயிர் உங்கடை உயிர் மயிர் எண்டு வசனம் வேறை.

எனக்கு கருணாநிதியிலை தனிப்பட்ட கோள்வம் ஒண்டுமில்லை.

குறுக்காலைபோகாதது ஏன் தான் அண்டு தொடக்கம் இண்டைவரைக்கும் ஒட்டுமொத்ததமிழினத்தையே பேக்காட்டிக்கொண்டு திரியுதோ?

அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்

ஆம் நிச்சயமாக இது உங்கள் உயிர் சோனியா காந்திக்கும் பிரணாப் முகர்ஜிகும் தமிழனை அடகு வைத்து சேவகம் செய்யும் உங்களுயிர் உங்களுக்கானது

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கான உயிர் என்றால் சரி, அப்ப நாங்கள் சொன்னால் அதை விட்டு விடுவிடுகிறீர்களா? எதுக்கு இந்தப் புலுடா எல்லாம்? இன்னும் 25 வருடங்களாவது இருந்து சோனியாவுக்குக் கழுவி, பிரணாப்புக்கு துடைச்சு உங்கட பிரவிப் பயனை அனுபவியுங்கோ !!!!!

கலைஞர் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள

அரசியல் நாடகம் ஆடும் நடிகர் என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால்

ஜெயா ஆட்சி நடக்கும் போது

இலங்கையில் சமாதான காலம்.

அப்போது யாரும் வன்னி என்ன எங்கும் சென்று வரலாம்.

அக் காலத்தில் வன்னி சென்று வந்த பலர்

குறிப்பிட்டுச் சொன்னால்

பாரதிராஜா மற்றும் ஆணிவேர் திரைப்படக் குழு

(இவை பலருக்கும் தெரியும்)

இதைவிட முக்கியமானவர்களும் சென்றனர்.

யாருமே தமிழகம் வந்து அங்கு போனதாகவோ அல்லது

முக்கியமானவர்களை சந்தித்ததாகவோ மூச்சு கூட விடவில்லை.

இன்று நிலை அப்படி அல்ல.

மிக மிக மோசமான சூழல் .

முன்னர் போனவர்களே கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்தான்

வாயே திறந்தார்கள். இதை யாராலும் மறுக்க முடியாது.

இக் கால கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியிலிருந்திருந்தால்

எமக்கான தமிழக குரல்கள் ஆரம்பத்திலேயே நசுக்கப்பட்டிருக்கும்.

இதுவே யதார்த்தம்.

தமிழ்நாடு ஒன்றும் தனிநாடு அல்ல

மத்திய அரசுக்கு பணிந்தே போக வேண்டிய நிலை உண்டு.

மத்திய அரசுக்கான தமது ஆதரவு காரணமாக சற்று அசைக்கலாம் .

கலைஞரால் தமிழீழம் பெற்று தர முடியாது.

உலகமே அப்பாவித் தமிழர்களை காப்பாற்றி

அவர்களது நியாயமான உரிமைகளை சிறீலங்கா அரசிடம் இருந்து

பெற்றுக் கொடுப்பதாக மட்டுமே பேசுகின்றன.

விடுதலைப்புலிகள் குறித்தோ அல்லது தமிழீழம் குறித்தோ பேசவே இல்லை.

இப்படி இருந்தும் கூட

சிறீலங்கா உலக நாடுகளின் அழுத்தங்களை கூட சட்டை செய்வதாக இல்லை.

ராஜபக்ஸ அரசு சாணக்கியமாக

தனக்கு சில நாடுகளை தன் வசப்படுத்தி வைத்துள்ளது.

அதைவைத்து காய் நகர்த்துகின்றனர்.

உலகத்தாலும் பேச முடியவில்லை.

நீங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுகிறீர்கள்

நாங்களும் அதுவே என துருப்புச் சீட்டொன்றை காட்டி

வாய் மூட வைக்கிறது.

நாம் என்ன செய்கிறோம்?

கிணத்தில் விழும் நேரத்தில்

ஒருவர் கயிறைக் கொடுக்கும் போது

அவர் அறும் கயிறை தருவதாக எண்ணி

கயிறு வேணாம் உன் கையை கொடு எனக் கத்தி

அவனையும் சேர்த்துக் கொண்டே பாதாளத்தில் விழ முயல்கிறோம்.

இதுவும் ஜோக் என்றால்

ஆட்சி மாறும்

அங்க சிரிப்பாங்க

நாம அழுவோம்

அதைபாத்தும் இங்க உள்ள சிலதுகள் சிரிக்கும் :(

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அந்த உயிர் எங்கட உயிர் என்று கடதாசியில சுய நினைவோட இருக்கும் போது எழுதி தாங்கோ (எங்கட உயிரை நாங்கள் என்னவும் செய்வம்) அப்புறம் நாங்கள் பாத்துக்கிறம்,நாங்கள் எழுதி வாங்கல என்றால் எல்லாம் முடிஞ்சபிறகு தமிழ் நாட்டில கொஞ்சபேர் சொல்லுவாங்கள் அழகிரி, ஸ்டாலின்,கனிமொழி மறந்தாலும் நாங்கள் மறக்கமாட்டம் என்று :( ,அந்த மறக்கமுடியாத ஆக்களுக்கு தான் நீங்கள் எழுதிய கடதாசி

இதுவும் ஜோக் என்றால்

ஆட்சி மாறும்

அங்க சிரிப்பாங்க

நாம அழுவோம்

அதைபாத்தும் இங்க உள்ள சிலதுகள் சிரிக்கும் :(

இங்கே தான் எல்லோரும் தப்பு பன்னறோம்... கருணாநிதியின் மாற்று என்பது எந்தக்காலத்திலும் ஜெ அல்ல..

கருணாநிதியை தூக்கி எறிய வேண்டிய அதே தருணத்தில் வேறு சக்திவாய்ந்த மாற்றுக்கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்...

மற்ற பல இயக்கங்களின் தலைவர்களும் மக்களும் முயன்றால் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு" அதற்க்கு நல்ல மாற்றாக அமைய வாய்ப்பு உள்ளது...

இதனைப்பற்றை வெளிவந்துள்ள கருத்துப் பகிர்வை இந்தத்திரியில் காணவும்...

http://changefortn.blogspot.com/2009/02/blog-post.html

ஐயா நீங்கள் வைத்தியசாலையில் இருந்து நலமாக வந்தது சந்தோசம்.. ஆனால் தமிழர்கதைமட்டும் கதைக்கவேண்டாம்.

உண்மையான தமிழர் அன்பிருந்தால் மத்திய அரசுடன் மென்மைப்போக்கை கொண்டு இருக்கமாட்டீர்கள்.. சரி உங்கள் பதவி காரணமாகத்தான் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இனப்படுகொலையாகும் ஈழத்தமிழர்களை விட, உணர்ச்சி பிழம்பாக உயிரை தற்கொடையாக கொடுக்கும் தமிழர்களை விட உங்கள் பதவி முக்கியம். எனவே தமிழரைப்பற்றி இனி கதைக்க உங்களுக்கு தகுதி இல்லை...

ஜெயலலிதா தமிழுக்கு உயிர் விடுவதாக ஒரு போதும் நாடகம் ஆடுவதில்லை.. உள்ளத்தில் அப்ப என்ன தோன்றுகிறதோ அதை உடன் சொல்லுவார். இயற்கையில் சுயனலமும், பதவி ஆசையும் புலிகளின் மேல் வெறுப்பும் உடையவர். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் உலக தமிழின தலைவருக்குரிய தகுதியை எப்போதோ இழந்து விட்டீர்கள்.. இருக்கும் வரை இருங்கள்.. ஆனால் தமிழ், தமிழர் வாக்கு எல்லாம் இனி எதிர்பார்க்காதீர்கள்...

அம்மா ஜெயாவும் தான் ஏன் எனில் தமிழக மக்கள் விழித்து விட்டார்கள்..ஈழத்தமிழரை சிங்களம் உயிருடன் சாப்பிட இந்தியவின் ஒத்துழைப்பை வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் தமிழின எதிரிகளாகிவிட்டீர்கள்... நிருத்துங்கள் உங்கள் நாடகங்களை... கோமாளிகள் என ஏன் இலங்கையரசு சொல்கிறது?

ஃஉஒடெ நமெ='ஸுபித்திரன்' டடெ='Mஅர் 1 2009, 06:45 PM' பொச்ட்='494143']

மாப்பு இனியும் உங்கட பருப்பு வேகாது வேறு ஏதாவது புதுசா திங் பண்ணும். மோன் வேற காத்திருக்கிறார் 57 வயசாயும் இன்னும் அரியணை கிடைக்கேல்ல என்று

[/ஃஉஒடெ]

அவருக்கு 57 வயது ஆகிது, இதுல இளைஞர் அணித் தலைவர் வேர :(:lol::lol:

இங்கே தான் எல்லோரும் தப்பு பன்னறோம்... கருணாநிதியின் மாற்று என்பது எந்தக்காலத்திலும் ஜெ அல்ல..

கருணாநிதியை தூக்கி எறிய வேண்டிய அதே தருணத்தில் வேறு சக்திவாய்ந்த மாற்றுக்கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்...

மற்ற பல இயக்கங்களின் தலைவர்களும் மக்களும் முயன்றால் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு" அதற்க்கு நல்ல மாற்றாக அமைய வாய்ப்பு உள்ளது...

இதனைப்பற்றை வெளிவந்துள்ள கருத்துப் பகிர்வை இந்தத்திரியில் காணவும்...

http://changefortn.blogspot.com/2009/02/blog-post.html

இந்த திரியில் உள்ளது போல் மாற்றுக் கட்சி ஒன்று செயல்படுமானால் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும்.

அதற்காக இதில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்கள் தாம் பற்றியுள்ள கட்சிகளை விட்டு வெளியேறுவார்களா?

தலைமைத்துவம் குறித்து மோதல்கள் ஏற்படாதா?

இல்லை. இதய சுத்தியோடு கரம் பற்றுவோம் என்றால் மட்டும் மாற்றம் உருவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்காக குரல் கொடுத்த சீமானை சிறையில் அடைத்து சீமானின் குரல்வளையை நெரிக்கும் இவர் எல்லாம் ஒரு தலைவர். இவர் உயிர் வந்தென்ன விட்டென்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் அடிக்கும் 'பகடியைப்பார்த்து சிரித்துவிட்டுப்போவீர்களா? உதுக்கெல்லாம் போய் கருத்து எழுதிக்கொண்டு!!! :(

இங்கே தான் எல்லோரும் தப்பு பன்னறோம்... கருணாநிதியின் மாற்று என்பது எந்தக்காலத்திலும் ஜெ அல்ல..

கருணாநிதியை தூக்கி எறிய வேண்டிய அதே தருணத்தில் வேறு சக்திவாய்ந்த மாற்றுக்கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்...

மற்ற பல இயக்கங்களின் தலைவர்களும் மக்களும் முயன்றால் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு" அதற்க்கு நல்ல மாற்றாக அமைய வாய்ப்பு உள்ளது...

இதனைப்பற்றை வெளிவந்துள்ள கருத்துப் பகிர்வை இந்தத்திரியில் காணவும்...

http://changefortn.blogspot.com/2009/02/blog-post.html

எங்க எல்லாகட்சியும் சீட்டுக்கு வரிசையில நிற்குதுகள் எத்தனை முத்துக்குமார் வந்தாலும் இதுகள் திருந்தாதுகள். எப்பவும் சேவகம் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டுவராது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.