Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணந்திண்ணும் சாமியார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிணந்திண்ணும் சாமியார்கள்

இந்த வீடியோவில் வரும் சில காட்சிகள் மிகவும் கொடூரமானவை. தைரியமுள்ளவர்கள் மட்டுமே பாருங்கள். இது வட இந்தியாவின் ஒரு பகுதியில் அரங்கேறுகிறது.

https://sites.google.com/site/geeyensite/kaci-vitiyo

என்ன கோலமப்பா இது?

வணக்கம் . இந்த காட்சியில் வரும் ஊரின் பெயர் காசி . இப்படத்தில் காண்பிக்கப்படும் சாமியார்களுக்கு அகோரி என பெயர் . இவர்கள் அனைத்து சக்திகளையும் பெற்றவர்களாகவும் எந்த கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படா சக்தியும் உள்ளதாக நம்பப்படுகிறது . மேலும் விளக்கங்களுக்கு நான் கடவுள் என்ற தமிழ் திரைப்படம் பார்க்கவும் . இவர்கள் எதையும் செய்யலாம் . எந்த முடிவும் எடுக்கலாம் . அதற்கான அதிகாரம் இவர்களுக்கு இருப்பதாகவும் நம்ப படுகிறது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை சாமி

பிணத்தைத்தானே தின்னுகிறார்கள்..

நல்லவேளை உயிரோடு பிடித்து தின்னவில்லை :lol::D:lol:

இதில ஆச்சரியப்பட என்ன இருக்கிது. நாங்கள் ஒரு உலகத்தில இருக்கிறம்.. வேடுவர்கள், கிராமவாசிகள், சாமியார்கள் வேற உலகங்களில இருக்கிறீனம். நாங்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம், சட்டதிட்டங்கள் இதுகளிண்ட அடிப்படையில எங்கட வாழ்க்கையை அமைச்சு இருக்கிறம். ஆனால்... இவர்களிண்ட வாழ்க்கை அப்படி அமைக்கப்பட இல்லை. இவர்களது சிந்திக்கும் முறையே அடிப்படையில் மிகவும் வேறுபாடு உடையது. இந்தவகையில வேறுவிதமான எண்ணங்கள், சிந்தனைகளை கொண்டு இருக்கிற சாமியார்களிண்ட உளவியல் எங்களுடையதுடன் ஒப்பிடக்கூடியதாக நிச்சயம் இருக்காது.

நாங்கள் கோழி, மீன், ஆடு இதுகளை சுட்டுச் சுவையூட்டி சாப்பிடுறம். அவங்கள் இறந்த உடலை பச்சையாக சாப்பிடுறாங்கள். ஆனால்.. ஒருவிசயம் மாத்திரம் உண்மை. அவங்களுக்கு ஆவி, பேய் இதுகள் பற்றி பயம் ஒண்டும் இருக்காது. :D

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: :lol: :):D :D :D:o :o :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் உயிரோட எங்களை மக்களை ஒவ்வொருநாளும் நின்னுறான்...அதை பார்க்கத்தான் ஒருத்தரும் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசி நேரம் காசிக்கு போவம் என்று பார்த்தான் உவங்களை பார்த்தல் காசிக்கு போனாலும் கோவிலுக்க போகேலாது உவங்கட வயிற்றுக்குள்ள தான் போவன் போல கிடக்கு :icon_idea: .என்ன மாதிரி பிரிச்சு மேயினம் ...........நல்ல காலம் முதல் கையை வெட்டினம்.....அவசரப்படல :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஹோரிஸ் ஐ சேர்ந்தவர்கள் உயிரோடு இருப்பவர்களை கொன்று தின்பதும் இல்லை. ஒருவருக்கும் ஒரு பங்கமும் விளைவிப்பதில்லை. அவர்கள் இறந்த உடலைத்தான் உண்கிறார்களாம். தவிர youtube ல் பார்த்த ஒரு ஒளிக்கோவையில் சொல்கிறார்கள். அவர்கள் நரமாமிசத்தை சாப்பிடவேண்டும் என்பதற்காகவே சாப்பிடுகிறார்களே அன்றி அதனை இரசித்து உண்பதில்லையாம். தாம் தான் உருத்திரன் என்கிறார்கள். அவர்களுக்கு சொறி சிரங்கு போன்ற தோல்வியாதிகள் எதுவும் அண்டுவதில்லையாம். எந்த குளிருக்கும் அஞ்சியதில்லையாம். அதன் இரகசியம் அவர்கள் பூசுவது இறந்தவர்களை எரிக்கும் சாம்பல். அதனை உடல் முழுவதும் பூசியிருப்பார்கள். அது எங்கும் கிடைக்காத அரிய கிருமிநாசினி என்கிறார்கள் அவர்கள்...

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குரு இருக்கிறார். அந்த குருவினை பெறுவதற்கு முன் அவர்கள் ஒரு மண்டை ஓட்டினை தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு தாம் படாத பாடு படுவோம் என்கிறார்கள். இவை எல்லாம் youtube ஒளிக்கோவையில் நான் பார்த்து அறிந்தது.

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவர்கள் செய்வதை எந்தவிதத்திலும் நாம் குறைகூறமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பன்,

நீங்கள் சொல்லும் கருத்தோடு ஒன்றுபடுகின்றேன். அதுவே உண்மையும் கூட.

உயிரோடு இருக்கிறவனை தொந்தரவு பண்ணாமல் விட்டாலே புண்ணியம் தான்:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா. இதற்குள் நமச்சிவாய வேற..! இறைவா..???! அதுசரி.. உனக்கு இதையெல்லாம் காண நேரமா இருக்குமா இறைவா..??! :unsure::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உலகம் அப்பா!

பிணம் கிடைக்காவிட்டால், பிணத்தை தாங்கலாகவே உருவாக்குவாங்களோ?

வீட்டைவிட்டு வெளியிலை போகவே முடியாது போலுள்ளது.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

உவாக் . குமட்டிக்கொண்டு வருது . :icon_idea::unsure:

கற்பனை உலகில் வாழும் அறிவிழிகள்....

தொண்டு நிறுவனங்கள் கவனிக்கலாம்....

இது தான் நாம் வணங்கும் இந்து மதம். மனிதனைத் தின்னும் மதம். நாம் மானிடர்கள் என்ன தூயவர்களா?

கோழி;@ ஆடு மாடு என்று உயிரோடு கொன்று உண்ணவில்லையா?

மதம் எனும் பெயரில் இதுபோன்று எத்தனை கொடுமைகள்.... இவர்கள் ஒன்றும் வரம் பெற்று வரவில்லை...

இவர்களின் வாழ்கை உலகம் அறியாத பலவகை DRUGS தான் அடங்கி இருக்கிறது... இவர்களிற்கு எம்மைப் போன்று வேறு சிந்தனை ஒன்றும் இருக்காது.... எப்போதும் போதையில் இருப்பாதல் காவல்த்துறையினரே பெதுமக்களோ இவர்களை அண்டுவதில்லை.... கிட்டே சென்றால் அடித்கொன்று சாப்பிட்டுவிடுவார்கள் என்று பயம்...

காசியில் சென்று அங்கு ஒன்றினையும் மூன்று ஆறுகளான கங்கை...யமுனை...காவேரியில் குளித்துவிட்டு அங்கையே செத்துவிட்டால் புண்ணியம் என்று ஒரு கதை இருப்பதல் அங்கு பிணங்களின் வருகை அதிகம்...

அவற்றினை முளுமையாக எரியவிட்டால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்று எண்ணி...அங்கிருக்கும்

பிணம்எரிப்பர்கள் எரிந்த அரைகுறை பிணத்தை ஆற்றில் போடுதல் வேண்டும் என்று ஒரு கதைளை உருவாக்விட்டார்கள்....

இதுபோன்று பல விடையங்கள் இருக்கின்றன.....

Edited by notpoet

அகோரிகள் ஆண்களின் பிணத்தை உண்பார்கள். பெண்களின் பிணத்தை என்ன செய்வார்கள் என்று தெரியுமா?

பெண்களின் பிணத்தோடு புணர்வார்கள்.

***

Edited by இணையவன்
நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகோரிகள் ஆண்களின் பிணத்தை உண்பார்கள். பெண்களின் பிணத்தை என்ன செய்வார்கள் என்று தெரியுமா?

பெண்களின் பிணத்தோடு புணர்வார்கள்.

***

மெத்தச்சரி சபேசன். மூடநம்பிக்கைகளுக்கும், பொய்ப் பித்தலாட்டங்களுக்கும் வக்காலத்து வாங்கவென ஒரு கூட்டம் அலையுது. இல்லாவிட்டால் பிணந்திண்ணும் சாமியார்கள் செய்வது சரி. அதுதான் ஞானம் என்பது, அவர்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை என்றெல்லாம் நற்சான்றிதழ் கொடுப்பார்களா?!இவ்வாறான பிறவிகள் இருக்கும்வரை இவ்வாறான அக்கிரமங்கள் நடப்பதையும் தடுக்க முடியாது.

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்களவன் செய்கிறதிலும் பார்கவ

  • கருத்துக்கள உறவுகள்

உடலமைப்பியல் (அனட்டமி) உடற்றொழிலியல் (பிசியோலஜி) ரீதியாக நோக்கும்போது பிணத்தோடு புணர்வது எந்தளவுக்குச் சாத்தியம் என்று புரியவில்லை.

மேலும் அவ்வாறு அவர்கள் பெண்களை இழிவு செய்வதைப் பொறுத்துக்கொண்டு இறந்தவர்களின் உறவினர்கள் சும்மா இருப்பார்களா?

இந்திய நடுவண் அரசுக்கு இந்த விடயங்களைப் பற்றித் தெரியாதா? ஏன் இத்தகைய அருவருக்கத்தக்க செயல்கள்இ பலரும் வந்துபோகும் காசியில் இடம்பெற அரசு அனுமதிக்கின்றது?

இப்படிப் பலகேள்விகள் எழுகின்றன.

Edited by karu

சாய்பாபா, கல்கி, அம்மா சாமி, யேசு சிரிக்கிறார் என்று சொல்லும் , 'யேசு இந்தா வாரார்' என்று சொல்லும் கிறிஸ்தவ போதகர்கள் போன்ற பம்மாத்து சாமியார்கள் போன்று மக்களின் இயலாமையையும், அவர்களின் அறிவின்மையையும், பக்தி எனும் கொடும் போதையையும் பயன்படுத்தி ஏமாற்றாமல், மக்களின் மூட நம்பிக்கையினை பயன்படுத்தி சொகுசு வாழ்வு வாழாமல், எவருக்கும் பயனற்று போகும் மனித பிணத்தினை உண்டு வரும் இந்த சாமியார்களால் யாருக்கு என்ன நட்டம் தீங்கு வரப் போகின்றது?

இவர்களின் செயல்களை, பிணத்தினை உண்பதை எம்மால் ரசிக்க முடியவில்லை என்ற ஒரே காரணம் இவர்களை வெறுக்க போதுமானதாகிவிடாது. இவர்கள் போன்ற மனநிலை பாதிக்கப் பட்ட சாமியார்களை விட நான் மேற்சொன்ன பம்மாத்து சாமியார்களை(அல்லது கிறிமினல்கள்) எதிர்ப்பது, வெறுப்பதும் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதும் தான் நாம் செய்ய வேண்டியது

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானவர்களை இனம் கண்டு கொள்வது கடினம் நிழலி பாலுக்கும் கள்ளுக்கும் வேறுபாடு தெரியாமால் பழகியவர்களுக்கு இது போன்ற காரியங்கள் மிக கடினமானவை இவர்கள் தான் இப்படியானால் வைத்தியர்கள் உதாரணம் பிரகாஷ் இப்படியானவர்களை என்ன செய்யவேண்டும் போலிகளை கண்டும் ஏமாறி போகிறோம் [பிரகாஷை தெரிந்திருக்குமென நினைக்கிறேன்]

எனக்கும் காசி பற்றிய நிழல் படங்கள் யாரோ அனுப்பியிருந்தார் பார்த்து அதிர்ந்து விட்டேன் எல்லாம் ஊதிய மனித உடல்கள் :D:rolleyes:

பிணத்தை உண்பதைப் பொறுப்பவர்கள் அதனுடன் புணர்வதையும் பொறுப்பார்கள்.

பிணத்துடன் புணர்கின்ற தன்மையை Nekrophilie என்று அழைப்பார்கள். பிணத்தை உண்பதை ஹனிபாலிஸம் என்பார்கள்.

இரண்டும் தண்டனைக்கு உரிய கடுமையான குற்றங்கள். இதைச் செய்பவர்கள் மனநோயாளிகள்.

இந்த மனநோய்க்கு ஆட்பட்டவர்கள் கடவுளின் பெயரில் செய்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

என்னுடைய கவலை எல்லாம் ஒன்றுதான்.

நாளை யாராவது ஒரு விஞ்ஞானி "பிணத்தை உண்பதால் சில நோய்கள் தீரும்" என்றோ அல்லது "பிணத்தோடு புணர்வது உடலுக்கும் மூளைக்கும் நல்லது" என்றோ கண்டுபிடித்து விட்டால், அப்பொழுது சிலர் வந்து எமது(?) முன்னோர்களின் அறிவியில் சிந்தனையை பார்த்தீர்களா என்று மெய்சிலிர்த்துப் போய்விடுவார்களே என்பதுதான்.

பிணத்தை உண்பதைப் பொறுப்பவர்கள் அதனுடன் புணர்வதையும் பொறுப்பார்கள்.

பிணத்துடன் புணர்கின்ற தன்மையை Nekrophilie என்று அழைப்பார்கள். பிணத்தை உண்பதை ஹனிபாலிஸம் என்பார்கள்.

இரண்டும் தண்டனைக்கு உரிய கடுமையான குற்றங்கள். இதைச் செய்பவர்கள் மனநோயாளிகள்.

இந்த மனநோய்க்கு ஆட்பட்டவர்கள் கடவுளின் பெயரில் செய்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

என்னுடைய கவலை எல்லாம் ஒன்றுதான்.

நாளை யாராவது ஒரு விஞ்ஞானி "பிணத்தை உண்பதால் சில நோய்கள் தீரும்" என்றோ அல்லது "பிணத்தோடு புணர்வது உடலுக்கும் மூளைக்கும் நல்லது" என்றோ கண்டுபிடித்து விட்டால், அப்பொழுது சிலர் வந்து எமது(?) முன்னோர்களின் அறிவியில் சிந்தனையை பார்த்தீர்களா என்று மெய்சிலிர்த்துப் போய்விடுவார்களே என்பதுதான்.

இறந்த மனித உடலைப் புசிப்பவர்கள் மனநோயாளிகள் என்பதில் வேறு கருத்து இல்லை. ஆனால் அத்தகைய மனநோயாளிகள் செய்வது உண்மையில் தண்டனைக்குரிய குற்றங்களா? அப்படியாயின் அதனை தண்டனை என்று வகுத்தவர்கள் யார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.