Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரு உற்பத்தி பொருட்கள்

Featured Replies

புறக்கணிப்போம் நிரு உற்பத்தி பொருட்களை.

நிரு நிறுவனம் பெரிய அளவில் தமிழர் மத்தியில் பிரபலமானது. நிரு நிறுவனம் தான் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் கூடுதலான பொருட்களுக்கு வெளிநாட்டு உரிமம் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தினர் தான் பிரதான ஏற்றுமதியாளராக சிறிலங்காவின் பொருட்களுக்கு உள்ளார்கள்.

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கன் business counsil என்ற சிறிலங்கா தூதரகத்தின் அமைப்பில் அங்கத்தவராக உள்ள ஒரே ஒரு தமிழர் நிறுவனம் நிரு நிறுவனம் தான். இதில் அங்கத்தவராக இருந்தால் அரசாங்கத்தின் ஏற்றுமதிக்கான பல சலுகைகள் கிடைக்கும்.

உறவுகளே நிரு நிறுவன பொருட்களை வாங்குவதை விட மற்றைய சிறிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க ஊக்குவிப்போம்.

நிரு நிறுவனம் தற்போது மெலிபன் கீறீம் பிஸ்கட் தங்கள் பெயரில் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளார்கள். நிரு பிரான்ட் என்ற பெயரில் வருகிறது. அதில் origin from srilanka

என்று எழுதப்பட்டுள்ளது. வியாபார நோக்கத்திற்காக பல ஏமாற்று வேலைகளை செய்கிறார்கள்.

தகவலுக்கு நன்றி, நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நிரு தயாரிப்புகள் பாவிப்பதில்லை ஆனால் எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார் நிரு தயாரிப்புகள் கனடாவில் தயாராகிறது என அது பொய்யா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
boy2.gif

Edited by Nada

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய தயாரிப்பு பொருட்களை வாங்குவது. ? ஏராளமானவர்களின் தயாரிப்புக்கள் சந்தையில் உலாவுகின்றன.

நான் நிரு தயாரிப்புகள் பாவிப்பதில்லை ஆனால் எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார் நிரு தயாரிப்புகள் கனடாவில் தயாராகிறது என அது பொய்யா?

இப்போ அப்படி இல்லை என்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது தெரிந்தவர் சொல்லுங்கள் ஜரோப்பாவிலோ அல்லது கனடாவிலோ அரிசிமா,தூள் வகைகள் ஒன்றும் தயாரிப்பது இல்லையா?

இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொன்னால் அதற்கு மாற்று பொருட்களை கூறினால் மக்கள் இலகுவாக இலங்கைப் பொருட்களை புறக்கணிப்பார் இல்லையா?

கனடாவில் உற்பத்தி செய்து இலாபம் சம்பாதிக்க முடியாது. ஆகவே, நிச்சயமாகக் கனடாவில் உற்பத்தி செய்திருக்க முடியாது. மேலே கூறப்பட்ட செய்தி உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரவர் உங்கடை அடுப்படிக்கை என்னென்ன சாமான் தேவையெண்டு சொல்லுங்கோ.

அப்ப உங்களுக்கு என்ன சாமான் மாற்றீடாய் வருமெண்டு இஞ்சையிருக்கிற பலதும் பத்தும் படிச்ச ஆக்கள் வந்து சொல்லுவினம் :lol:

எனக்கு தெரிந்த அளவில், நிரு இலங்கையில் இருந்து தான் வாங்கி இங்கு பொதி செய்கின்றது. நிரு பகிரங்கமாக இல்லை என்று அறிக்கை விட்டதா என விசாரித்துப் பார்த்தேன்... இல்லை என்று தான் பதில் வந்தது

இது தவிர ரெட் ரூபி எனும் மிகப் பிரபலமான மிளகாய்த்தூள் மற்றும் மசாலா தூள் நிறுவனமும் இதனைத் தான் செய்கின்றது.

நேற்றுகனடாவில் யேன் அன் பின்ஞ் இல் சிறிலங்கா பொருட்கள் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடந்ததாக வானொலியில் கேட்டேன்

விபரம் அறிந்தவர்கள் ஏற்பாட்டளர்களோடு தொடர்பு கொண்டு இது பற்றிய் முழுவிப்ரங்களையும் வெளியிடுமாறு கேட்டால் அறியலாம்

இது தொடர்பாக இங்குள்ள தொலைக்காட்சிகள் வானொலிகள் ஆராய்கின்றனவா ??? பார்ப்பவர்கள் கேட்பவர்கள் அறியத்தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நிருவின் சிவப்பு அரிசிமா(25x1kg) பெட்டியில் Product of Canada என்று இருக்கிறது.

சிவப்பு பச்சை அரிசி கனடாவில் விளைகிறதா? அல்லது அரிசியை இலங்கை இந்தியாவிலிருந்து கனடாவிற்கு இறக்கி கனடாவில் வைத்து மாவாக அரைக்கிறார்களா?

உங்களுக்கு தெரிந்த யாராவது நிருவின் கனடா தொழிற்சாலையில் வேலை செய்கிறார்களா?

நிருவின் சிவப்பு அரிசிமா(25x1kg) பெட்டியில் Product of Canada என்று இருக்கிறது.

சிவப்பு பச்சை அரிசி கனடாவில் விளைகிறதா? அல்லது அரிசியை இலங்கை இந்தியாவிலிருந்து கனடாவிற்கு இறக்கி கனடாவில் வைத்து மாவாக அரைக்கிறார்களா?

உங்களுக்கு தெரிந்த யாராவது நிருவின் கனடா தொழிற்சாலையில் வேலை செய்கிறார்களா?

அரிசி பொருட்கள் இலங்கையில் இருந்து இப்போ ஏற்றுமதி ஆகின்றனவா.? அனேகமாக அரிசி இந்தியா, பாக்கிஸ்தானில் இருந்துதான் வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இந்த விடயத்தை தெளிவாக்கினால் நல்லது:

வாணி, ஜே, சூரியா என்றெல்லாம் சொல்கின்றார்கள் அதுவும் சூரியா'வன்னி மண்ணின் வாசனையோடு வருகிறதாம் அப்படியெண்டால் இப்ப இரத்த வாடைதான் அடிக்கும் !...

இவையெல்லாமே ஸ்ரீலங்கா உற்பத்தி பொருட்கள் தானே?

  • தொடங்கியவர்

எல்லா பொருட்களும் ஏதோ ஒரு வகையில் சிறிலங்காவில் இருந்து தான் வருகிறது.. மொத்த பொருட்களை வாங்கி அந்தந்த நாடுகளில் பொதி செய்து அந்த நாடுகளின் பெயரை உற்பத்தி நாடாக போடுகிறார்கள்.

இதில் முக்கியமாக நிரு நிறுவனம் சிறிலங்கா business counsil ல் அங்கத்துவமாக இருப்பதால் தான் மிக பெரிய ஏற்றுமதி நிறுவனமாக வளர்ந்துள்ளது. அதனால் தான் அந்த நிறுவன பெயரில் வரும் பொருட்களை முதன்மையாக வாங்குவதை நிறுத்துமாறு அனைவரையும் கோருவோம்.

இலண்டன் நோர்வேயை பொறுத்த மட்டில் N.S.R உணவு ப்பொருட்களை வாங்கலாம். அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து தயார் செய்து பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றது. தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலையையும் நேரடியாக ஈழத்தமிழர் மூலமே நடாத்துகிறார்கள்...

லீலா , ரபினா நிறுவனங்கள் நேரடியாக கொழும்பில் இருந்தே பொருட்களை அனுப்புகிறார்கள்

மிளகாய்தூள், மல்லிதூள் தான் பெரிய புறக்கணிப்பு என இல்லை.

முக்கியமானது சிறிலங்காவில் இருந்துவரும் சிங்கள உற்பத்தி பொருட்கள் தான், ஆணை மார்க் சோடா, பியர், பிஸ்கெட், தேயிலை , இன்னும் பல பொருட்கள் அதை வாங்காமல் விட்டாலே போதுமானது. இவை தான் சிங்களவருக்கு வேலை வாய்ப்பு அரசுக்கு வரி, என பல வகையில் உதவி செய்கிறது.

மிளகாய்தூள் வாங்குவதில் பிரச்சனை யாகி புறக்கணிப்பை நிறுத்தி விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிர்வாகத்தினர் இதைப்போன்ற சந்தேகங்களை தெளிவுபடுத்த முயற்சிக்கலாம் என்பது எனது கருத்து.

சிங்களத்துத் தயாரிப்பு என்று நன்கு தெரிந்த பொருட்களை (MD- Marketing Department products, Kadda Sambal, Lemon puff, Protinex, Luxpray, Necto and ext.)வாங்குவதை முற்றாக்த் தவிர்துக் கொண்டு, மேலும் நுட்பமாகச் செல்லலாமே. சரியான தகவல்களுடன் மக்களை அணுகுவது பயணுள்ளதாக அமையும். வினியோகித்தர்களும் இறக்குமதிதாரர்களும் தற்போதிருந்தே இதில் அக்கறை செலுத்தினால், எம்மவர் யாரும் பாதிக்கப்படாமல், எமது நோக்கம் இலகுவாய் நடந்தேறும்.

தமிழ், தேசியம், விடுதலை என கோசம் போடும் ஒலி, ஒளி ஊடகங்கள் நிரு, ஐங்கரன், எயர் லங்கா விமான சேவைக்கான விளப்பரங்களை விளம்பரம் செய்யும் நிலையில் எமது ஊடகங்களின் நிர்வாக நிலைப்பாடு இருக்கும் வரை ???????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனம் நிருக்காரர் இப்ப கோர்ட்ஸ்க்கு போக போகின்றோம் இந்த தலைப்பை தூக்கி எமத நிறுவனத்துக்கு ஏற்பபட்ட அவமானத்தை துடையுங்கள் என்று மோகன் அண்ணாவுக்கு மின்னஞ்சல் செய்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

இது எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து எழுதியவை! அவர்களின் வழி தனி அவர்களை கேள்வி கேட்க யாருமிருக்க போவதில்லை. உண்மையில் இப்போது நாம் எதை புறக்கணிப்பது எதைவிடுவது என்ற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தி விட்டோம்.

நிருவின் பெரும்பாலன பொருட்கள் இந்தியாவில் தயாராகின்றது. குறிப்பாக தூள்கள், மல்லித்தூள், இதனால் கடந்த காலங்களில் சுகாதார பிரிவால் அவர்களது சில பொருட்கள் தடை செய்யப்பட்டன.

அதே நேரம் கனடாவில் எலிபன்ட் மார்க் பானங்கள் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எலிபன்ட் பிரான்ட் என்ற ஒரு தமிழர் நிறுவனம் கனேடிய தயாரிப்பா அவற்றை தயாரிப்பதால் அவை சட்டத்துக்கு புறம்பானவை. தமிழ் வணிப நிறுவனங்கள் இப்போதும் அவற்றை விற்பனை செய்தால்...

அவர்களுக்கு பதில் மன்னிக்க.... நீங்கள் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

அதைப்போலவே பல பொருட்கள் கனடாவில் சட்டப்படி விற்பனை செய்ய முடியாதவை. அவற்றை கண்டறிந்து நாம் வணிக நிலையத்தவர்களோடு பேசுவது உகந்தது. இல்லை எனில் புறக்கணி புறக்கணி எதை புறக்கணிப்பார்கள்?

போராட்ட வடிவங்களை மாற்றுங்கள்... எங்களுக்குள் தேசியம் பாடிய படி தோளிளல் குத்துவோரை தூக்கி எறியத் தயங்காதீர்கள்.!

கனடாவில் யுவனின் இன்னிசையின் ஆரம்பத்தோடு அடுத்தடுத்து வரப்போகும் வானொலி தொலைக்காட்சிகளின் நிகழ்வுகளுக்கு புறக்கணிப்பு செய்யுங்கள்.! அவர்கள் யாராக இருந்தாலும்!

சிங்களவன் கொல்லுறான் எங்கடை சிலது பிணத்துக்கு மேல இசைக்கச்சேரி வைக்குதுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சன் கண்டிப்பாக உங்கள் கருத்துகள் மிக ஆணித்தரமானவை.

நெக்ரோ குளிர்பானங்கள் கனடாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இது ஆரணி நிறுவனத்தினரால் இங்கு செய்யப்படுகிறது. ரெட் ரூபி, மற்றும் லீலா உற்பத்திகள் முழுமையாக இலங்கையிலிருந்தே தருவிக்கப்படுகிறது.

நிதர்சன் குறிப்பிட்டது போல, கோடைகால களியாட்டங்களுக்கான முன்னோட்டமே யுவன்சங்கர் ராஜாவின் இசைக் கச்சேரியை முழுமையாகப் புறக்கணிக்காததற்கு முக்கிய காரணம். ஆனால், அப்படியொன்று இங்கு நடக்குமாக இருந்தால், மக்களே அவர்களை மதிக்க மாட்டார்கள் என்பதை விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தியேட்டரில் படம் சென்று பார்ப்பதற்கே கொதித்தெழும் மக்கள், இவர்கள் இவ்வாறாக களியாட்டங்கள் வைப்பார்களேயானால், இவர்களை மனிதர்களாகவே கருத முடியாது.

இத்தனை கொடுமைகளுக்குப் பின்னரும் பலர் தேசியத்தைப் பயன்படுத்தி, தங்கள் தொழிலை வளர்க்கவே முன்னிற்கிறார்கள்.

சிங்களவன் கொல்லுறான் எங்கடை சிலது பிணத்துக்கு மேல இசைக்கச்சேரி வைக்குதுகள்

இது கச்சேரியில்ல ஒப்பாரி நிதர்ஸன்.

  • தொடங்கியவர்

கவனம் நிருக்காரர் இப்ப கோர்ட்ஸ்க்கு போக போகின்றோம் இந்த தலைப்பை தூக்கி எமத நிறுவனத்துக்கு ஏற்பபட்ட அவமானத்தை துடையுங்கள் என்று மோகன் அண்ணாவுக்கு மின்னஞ்சல் செய்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

புறக்கணிப்பு பற்றிய கருத்துக்கள் தான் இங்கே எழுதப்படுகிறது. நிரு நிறுவனம் சொல்லட்டும் தாங்கள் srilanakan business counsil ல் அங்கத்தவராக இல்லை என்று.

இதுவரை நிரு நிறுவனம் எந்த தமிழர் நிகழ்வுக்கும் முதன்மை விளம்பரதாரராக வந்ததில்லை. ஆனால் srilankan business counsill கூட்டங்களுக்கு எல்லாம் சென்று அரசாங்க தூதுவர்களின் சலுகைகளை பெறுகிறார்கள்.

மிளகாய்தூள் பெரிய பிரச்சனை இல்லை இப்படியான பெரிய நிறுவனங்களின் நிலைப்பாடு தான் சிறிலங்காவுக்கு முண்டு கொடுக்கிறது...

இன்றைய நாள்வரை வெளிநாடுகளில் வாழும் அரேபிய மக்கள் அதுவும் முஸ்லீம் மக்கள் made in isreal என்று பொறித்து வரும் தோடம் பழம், கரட் போன்ற அன்றாட காய்கறி பொருட்களை வாங்குவதில்லை. அதில் பலஸ்தீன மக்களின் இரத்தம் படிந்துள்ளது என்று சொல்வார்கள்.

சில போராட்ட உனர்வுகளை மற்ற இன மக்களிடம் இருந்தும் நாங்கள் அறிந்து கொள்ளல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் உங்கடை அடுப்படிக்கை என்னென்ன சாமான் தேவையெண்டு சொல்லுங்கோ.

அப்ப உங்களுக்கு என்ன சாமான் மாற்றீடாய் வருமெண்டு இஞ்சையிருக்கிற பலதும் பத்தும் படிச்ச ஆக்கள் வந்து சொல்லுவினம் :mellow:

சுளகு , அரிப்பெட்டி , நீத்துப்பெட்டி , இட்டலி சட்டி , மா வறுக்கிற பெரிய தாச்சி எல்லாம் கிடைக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

Niru Enterprise Inc.

Manufacturers of Niru Brand Products

Importers, Exporters and Distributers

40 Minuk Acres,

Scarborough, ON, M1E 4Y6

Tel: (416) 750-1976

Fax: (416) 750-8779

E-mail: info@niru.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.