Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹலோ! வணக்கம்...ஒன் மினிட்டு உள்ள வந்திட்டுப் போறியளா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தாச்சா!....வாங்கோ...வாங்கோ...யாழ்கள நண்பர்களே.....வணக்கம்.....ஒரு டீ...காப்பி...எதனாச்சும்?

‘அடீங்....எவன்யா இது நம்ம ஏரியாவுல வந்து நம்மலேயே கலாய்க்கிறது’

சாரி, அந்தமாதிரி எந்த ஐடியாவும் டெம்புருவரியா இல்லீங்க, மை லேடீஸ் அன்டு ஜென்டில்மென்ஸ்!. ஏரியாவுக்கு புதிசா, அதான் ஒரு கஷுவல் அரென்டன்ஸ போட்டிட்டு......

‘அட! போதும் நிறுத்துப்பா, நிலம புரியாம....கஷுவலாவது, விஷுவலாவது’

புரியுது...புரியுது....என்ன பண்ணட்டும், கூடவே பிறந்திடிச்சு, அடங்கெண்ணாலும் அடங்கவே மாட்டேங்கிறது.

‘என்னாங்கோய், ஓவரா பீட்டர் வுடுராப்பல, தமிழ் வராதா, இல்ல பிலிமா?’

வருதுங்கண்ணா.. பின்னால வண்டில வருது, நான் கொஞ்சூண்டு சீக்கிரமா வந்துட்டணோன்ணோ, அதான் பீட்டரு, மேட்டரு எல்லாம்.

‘அது சரி, அதென்ன, டீ..காப்பி... போட்டு தரப்போறியலோ?’

அட, அதில்லிங்கண்ணா... ரொம்பத் தூரமா... ரொம்பவும் டயர்டா.... அதான் ஒரு..டீ...காப்பி... எதனாச்சும் கிடைக்குமான்னு?....

‘சரி..சரி..வந்தாச்சில்ல... ஆரம்பிக்க வேண்டியது தானே...’

ஆல்ரெடி, ஆரம்பிச்சிட்டோமில்ல.... இனி அதிரடி.... from....me... சரவெடி... (எப்படீங்க நம்ம பஞ்சு டயலாக்கு?)

‘ஆ!... சூப்பர் கேவலாமாயிருக்கு... ஆல்ரெடி, அதிரடி, சரவெடி, ஜின்னுரொட்டீன்னு....கிழிஞ்சது போ‘

இட்ஸ் ஓகே.... Mr.வள்ளுஸ் என்ன சொல்றார்னாக்கா... “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”.

with that...

நன்றி...நன்றி...நன்றி.. அன்பர்களே...my dear... நண்பர்களே...

May I......?

  • Replies 60
  • Views 5k
  • Created
  • Last Reply

வாருங்கள் சரவெடி, உங்களை வரவேற்கிறோம்.

கள விதிகளை இங்கு சென்று பாருங்கள் :

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22182

ஆங்கில, தமிழ்-ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து தமிழில் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாரப்பா இது அதிரடி சரவெடி என்று .........தமிழ் நாட்டு உறவா ? ......வந்தமா எழுதினமா என்று இருக்காம ....

..அட்டகாசமாய் வாறீங்கள். கவனம் ........பார்த்து ............வாங்கோ வருக தருக உங்கள் ஆக்கங்களை ....

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::unsure:

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்ம் :o

வணக்கம் வருக. வருக.

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சரவெடி. :rolleyes:

வணக்கம் வருக. வருக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் சரவெடி, உங்களை வரவேற்கிறோம்.

கள விதிகளை இங்கு சென்று பாருங்கள் :

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22182

ஆங்கில, தமிழ்-ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து தமிழில் எழுதுங்கள்.

வரவேற்பிக்கு நன்றிகள் இணையவன் சார் :)

புரியுது! தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள், ஆங்கில, தமிழ்-ஆங்கிலச் சொற்களை வேணுமென்று செருகவில்லை. அது பாட்டிற்கு, இயல்பாக.... மேலும், ஒரு நெருக்கம் இருக்கும் என்ற நோக்கிலும்.... இருப்பினும், வருங்காலங்களில் முடிந்தவரை தவிர்க்க முயற்சிக்கின்றேன். புரிதலுக்கு நன்றிகள்

சரவெடி

வணக்கம் யாரப்பா இது அதிரடி சரவெடி என்று .........தமிழ் நாட்டு உறவா ? ......வந்தமா எழுதினமா என்று இருக்காம ....

..அட்டகாசமாய் வாறீங்கள். கவனம் ........பார்த்து ............வாங்கோ வருக தருக உங்கள் ஆக்கங்களை ....

நன்றி கலந்த வணக்கங்கள் நிலாமதியக்கா!

அடிச்சுப் புடிச்சு வந்தாக்க... ரொம்ப அட்டகாசமா வரவேற்றீக...நான் அட்டகாசமா வந்தேனாயினும்...அஜீத் இல்லீங்கோ :D

ரொம்ப நன்றி அக்கா

சரவெடி

:rolleyes::unsure:

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்ம் :D

வணக்கம் ஜீ

ஆசீர்வாதங்களுக்கு நன்றி. தாங்கள் ஆஸ்ரமவாதின்னு புரிகிறது. நேக்குமொரு அங்கத்துவம் கிடைக்குமா....ஆமா... நம்ம அஸினும் அங்கத்துவராமே :o ...மெய்யாலுமா?

மீண்டும் மிக்க நன்றிகள் ஜீ

சரவெடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் வெடி சரவெடி வந்ததுமே இப்படி மொக்கை போடலாமோ சார் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரவெடி! வாங்கோ வணக்கம்.

வணக்கம் வசி சுதா

வரவேற்பிற்கு நன்றிகள்

சரவெடி

வணக்கம் வருக. வருக.

வணக்கம் ஆதிவாசி

எப்பவுமே வண்டி மேலதானா?

வரவேற்பிற்கு நன்றிகள்

சரவெடி

வணக்கம் சரவெடி. :rolleyes:

வணக்கம் நுண்ணாவிலான்ணா

வரவேற்பிற்கு மிக்க நன்றிகள்

சரவெடி

வணக்கம் வருக. வருக.

வணக்கம் சுஜீக்கா

வரவேற்றமைக்கு மிக்க நன்றிகள்

சரவெடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் வெடி சரவெடி வந்ததுமே இப்படி மொக்கை போடலாமோ சார் :rolleyes:

வணக்கம் வாரா சேகுவாரா சார்

மொக்கை போடனுமுன்னு வந்தப்புறம், சுபகாலம்..ராகுகாலம் வேறயா? போட்டமா..போனமான்னு போய்க்கின்னே இருக்கவேண்டியதுதான்....நான் மொக்கையைச் சொன்னேனு சார்:unsure:

வரவேற்பிற்கு நன்றிகள்

சரவெடி

வணக்கம் சரவெடி

உங்கள் வரவும் நல்வரவாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ சரவெடி , வணக்கம்

mangoom0.jpg

தொண்டை காஞ்சிருக்கும் ........

இதை குடியுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

வந்தாச்சா!....வாங்கோ...வாங்கோ...யாழ்கள நண்பர்களே.....வணக்கம்.....ஒரு டீ...காப்பி...எதனாச்சும்?

[May I......?

வணக்கம். வாருங்கள் சரவெடியாரே! களம் கலகலப்பாகட்டும். காலத்தைப் பதியட்டும். தேசத்தை

இணைக்கட்டும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சரைவெடி! வாருங்கோ!

எப்புடி சுகம்?குழந்தைகுட்டியெல்லாம் சுகமாயிருக்கினமோ?

நாட்டு நடப்புகள் என்னமாதிரி?

வீமன் நாய்க்குட்டி என்னசெய்யுது?

மாடுகள் எல்லாம் நேரகாலத்துக்கு கட்டைக்கு வருதுகளோ?

மற்றது இப்பவும் புள்ளிபசுமாட்டின்ரை பின்காலைகட்டித்தான் பால் பிசுக்கிறனீங்களோ?

கிணத்தடியிலை நிக்கிற வாழை குலை போட்டுட்டுதோ?

பக்கத்துவீட்டு அன்னலச்சுமி என்னவாம்?(அவள் திருந்தவே மாட்டாள்)

அம்மன் கோயில் திருவிழா எப்பவருது?

சின்னையாவோடை இருந்த வயல்வரம்பு பிரச்சனை எந்தமட்டிலை நிக்குது?(நான் உங்கை நிண்டால் கதை வேறை)

ஐயம்புள்ளையின்ரை கடைசி வடி கோதை ஏதோ தஸ்புஸ் எண்டு இங்கிலிசு பறைஞ்சு கொண்டு திரிஞ்சாள் பாவி இப்ப செய்யிது பெட்டை?

சிதம்பரப்புள்ளை அண்ணையை சுகம் கேட்டதாய் சொல்லவும்.

இப்படிக்கு

மூலைவெடி

வருக வருக சரவெடியே வருக.....

அதிகமான ஆங்கில / சினிமா பாணி வார்த்தைகள் காணப்பட்டாலும், வாசிக்கும் போது வாய்விட்டு சிரிக்க கூடியதாக எழுதியுள்ளீர்கள். வாழ்துகள்

அருமை.... பலதடவை வாசித்து விட்டேன் இதனை.... இப்படி இனிமையாக ஊர் மொழியில் எழுதக் கூடியவர் நீங்கள் என்று எனக்கு இன்றுதான் தெரியும். அதுவும் இறுதியில் மூலை வெடி என்று போட்டு இருந்ததை பார்த்து டமால் என்று வெடித்து சிரித்து விட்டேன்

.....அருமை !!!

Edited by நிழலி

வணக்கம் :icon_mrgreen:

வணக்கம் சரவெடி.பெரிய வெடியாக(கோட்டை வெடி) மாறாமல் இருந்தால் சரி!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்றே தாமதமாக பதிலைப் பதிவதற்கு ஒரு எஸ்கிகியூஸ்மியை.......

‘இன்னாதது, சற்றே தா..ம..த..மா...க.... இதானே வேணடாங்கிறது. ஆடிக்கொருவாட்டி ஆவணிக்கொருவாட்டி ஆஜராகிறது பத்தாதுன்னு எச்சுஸ்மி வேறயா, விளங்கினாப்பலதான்‘

ஓகேண்ணா, ஓகே நேரா மேட்டருக்கே வந்திடுவோம்ங்றன்

வணக்கம் சரவெடி

உங்கள் வரவும் நல்வரவாகட்டும்

நன்றி பிரமாஸ்மி அவர்களே

உங்கள் சிக்னேச்சரின் ஆழம் தங்கள் ஆழத்தை தெரிவிக்குமாட்டம் தெரிகின்றது

தங்கள் வரவேற்பிக்கு நன்றிகள்

வாங்கோ சரவெடி , வணக்கம்

mangoom0.jpg

தொண்டை காஞ்சிருக்கும் ........

இதை குடியுங்கோ .

வணக்கம் டமில் சிறிண்ணா

எங்கோ கேட்ட குரலாட்டம் இருக்கே, நீங்கதானோ அவக?.

கூப்பிட்டு குந்தவச்சு குசும்படிப்பீகன்னு பார்த்தாக்க, குசலம் விசாரிச்சு, சாப்பிட பாங்கி..சாரி மாங்கி யூஸ் கொடுப்பீகன்னு இமாஜினு பண்ணவேல்லிங்கண்ணா

ஒங்க வீட்டு ட்ரீட்டு ரொம்ப சுவீட்டுங்கண்ணா

வரவேற்றமைக்கு மிக்க நள்றிகள்

வணக்கம். வாருங்கள் சரவெடியாரே! களம் கலகலப்பாகட்டும். காலத்தைப் பதியட்டும். தேசத்தை

இணைக்கட்டும்.

வணக்கம் நொச்சி

நிச்சயமாக, என்றும் நாம இணைந்த கைகள்தான் நண்பரே

வரவேற்பிற்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருக வருக சரவெடியே வருக.....

அதிகமான ஆங்கில / சினிமா பாணி வார்த்தைகள் காணப்பட்டாலும், வாசிக்கும் போது வாய்விட்டு சிரிக்க கூடியதாக எழுதியுள்ளீர்கள். வாழ்துகள்

அருமை.... பலதடவை வாசித்து விட்டேன் இதனை.... இப்படி இனிமையாக ஊர் மொழியில் எழுதக் கூடியவர் நீங்கள் என்று எனக்கு இன்றுதான் தெரியும். அதுவும் இறுதியில் மூலை வெடி என்று போட்டு இருந்ததை பார்த்து டமால் என்று வெடித்து சிரித்து விட்டேன்

.....அருமை !!!

நிழலிக்கு வணக்கங்கள்

‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே,....... சிக்குமங்கு சிக்குமங்கு‘ சிரிக்கிறாப்பா

சிரித்து வரவேற்றமைக்கு நன்றிகள்

வணக்கம் :(

வணக்கம் தூயா

பதிவுக்கு நன்றி

வணக்கம் சரவெடி.பெரிய வெடியாக(கோட்டை வெடி) மாறாமல் இருந்தால் சரி!!!!!!!!!

வணக்கம் V.இந்தி

தற்சமயம் சாதாரண வெடிதான், தங்கள் ஓட்டு கிடைக்குமானாக்க... கமிங் தேர்தலில் ஜெயித்து, கோட்டைக்கு போயும் வெடிக்கலாம். இன்னா சொல்றீக?

பதிவுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சரைவெடி! வாருங்கோ!

எப்புடி சுகம்?குழந்தைகுட்டியெல்லாம் சுகமாயிருக்கினமோ?

நாட்டு நடப்புகள் என்னமாதிரி?

வீமன் நாய்க்குட்டி என்னசெய்யுது?

மாடுகள் எல்லாம் நேரகாலத்துக்கு கட்டைக்கு வருதுகளோ?

மற்றது இப்பவும் புள்ளிபசுமாட்டின்ரை பின்காலைகட்டித்தான் பால் பிசுக்கிறனீங்களோ?

கிணத்தடியிலை நிக்கிற வாழை குலை போட்டுட்டுதோ?

பக்கத்துவீட்டு அன்னலச்சுமி என்னவாம்?(அவள் திருந்தவே மாட்டாள்)

அம்மன் கோயில் திருவிழா எப்பவருது?

சின்னையாவோடை இருந்த வயல்வரம்பு பிரச்சனை எந்தமட்டிலை நிக்குது?(நான் உங்கை நிண்டால் கதை வேறை)

ஐயம்புள்ளையின்ரை கடைசி வடி கோதை ஏதோ தஸ்புஸ் எண்டு இங்கிலிசு பறைஞ்சு கொண்டு திரிஞ்சாள் பாவி இப்ப செய்யிது பெட்டை?

சிதம்பரப்புள்ளை அண்ணையை சுகம் கேட்டதாய் சொல்லவும்.

இப்படிக்கு

மூலைவெடி

அட இப்ப நம்ம தொரசாமி...சாரி...குமாரசாமி டேர்னு.....

வணக்கம் மூலைவெடி சாமிண்ணா....

முதல் முறையா திருட்டு VCD ரிலீஸ் பண்ணப்பவே அலட்டாயிருக்கணும். ஜஸ்டு மிஸ்ஸாயிடிச்சு. இட்ஸ் ஓகே.

எப்புடி சுகம்?குழந்தைகுட்டியெல்லாம் சுகமாயிருக்கினமோ?

கன்னாபின்னான்னு சுகம்...குழந்தை ஓகே....குட்டி யாருங்கண்ணா?

நாட்டு நடப்புகள் என்னமாதிரி?

ரொம்ப ஸ்டெடியா தள்ளாடித் தள்ளாடி நடக்கீது

வீமன் நாய்க்குட்டி என்னசெய்யுது?

சூப்பராக் குலைக்கீது

மாடுகள் எல்லாம் நேரகாலத்துக்கு கட்டைக்கு வருதுகளோ?

கட்டைக்கு வர்தோ இல்லையோ, விற்றாக்கப் பட்டைக்கு வர்து

மற்றது இப்பவும் புள்ளிபசுமாட்டின்ரை பின்காலைகட்டித்தான் பால் பிசுக்கிறனீங்களோ?

பின்னால கட்டிக்கிண்ணா புள்ளிராசா...சாரி...பாஸா உதைக்கிதுண்ணா

கிணத்தடியிலை நிக்கிற வாழை குலை போட்டுட்டுதோ?

போட்ட குல...கிணத்துக்குள்ள...அது என்னிக்கும் மிஸ்சுங்கதான் தல

பக்கத்துவீட்டு அன்னலச்சுமி என்னவாம்?(அவள் திருந்தவே மாட்டாள்)

பப்ளிக்கா சொன்னாக்க நோ ஆங்ரி....அவ இன்னும் ஒங்கள க...க...க...போங்கண்ணா

அம்மன் கோயில் திருவிழா எப்பவருது?

அப்பப்ப வர்து... போகுது

சின்னையாவோடை இருந்த வயல்வரம்பு பிரச்சனை எந்தமட்டிலை நிக்குது?(நான் உங்கை நிண்டால் கதை வேறை)

வாழமரத்துப் பஞ்சாயத்துக்கட்டுல நிக்குதுண்னோய்.

ஐயம்புள்ளையின்ரை கடைசி வடி கோதை ஏதோ தஸ்புஸ் எண்டு இங்கிலிசு பறைஞ்சு கொண்டு திரிஞ்சாள் பாவி இப்ப செய்யிது பெட்டை?

இங்கிலீசுபீசு குட்டி, இப்ப வளகாப்புக்குப் போயிருக்கு வளயப்பட்டி.

சிதம்பரப்புள்ளை அண்ணையை சுகம் கேட்டதாய் சொல்லவும்.

மேட்டர் தெரியாதுங்களாண்ணா, நம்ம புள்ளண்ணா புளியம்பட்டி பூவாத்தாவக் கூட்டிக்கின்ணு அப்பீட்டாயிட்டரில்ல!

சொக்கனாட்டம் கேள்வி கேட்டீக, நாம சிவாஜியாட்டம் பதில் சொன்னோமோல்லியோ?

வரவேற்பிற்கு நன்றிகள்

சரவெடி..சாரி உங்க பாஷையில்...சரைவெடி

  • கருத்துக்கள உறவுகள்

சற்றே தாமதமாக பதிலைப் பதிவதற்கு ஒரு எஸ்கிகியூஸ்மியை.......

------

வணக்கம் டமில் சிறிண்ணா

எங்கோ கேட்ட குரலாட்டம் இருக்கே, நீங்கதானோ அவக?.

கூப்பிட்டு குந்தவச்சு குசும்படிப்பீகன்னு பார்த்தாக்க, குசலம் விசாரிச்சு, சாப்பிட பாங்கி..சாரி மாங்கி யூஸ் கொடுப்பீகன்னு இமாஜினு பண்ணவேல்லிங்கண்ணா

ஒங்க வீட்டு ட்ரீட்டு ரொம்ப சுவீட்டுங்கண்ணா

வரவேற்றமைக்கு மிக்க நள்றிகள்

-------

:o:D:mellow::lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்க உறவுகளே....அம்புட்டு தானுங்களா ?

முடிஞ்சாக்க இந்த அம்பியையும் கொஞ்சூண்டு உள்ள இழுத்து விட்டேனாக்க நன்னாயிருக்குமோன்னோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சரைவெடி? உங்களை உள்ளுக்கை வர விடீனமில்லையோ? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.