Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது பிரபாகரன் சபதம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது பிரபாகரன் சபதம்? ??

prabakaran-7.jpg

சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் போர், இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. ராணுவத் தரப்பிலும் புலிகளின் தரப்பிலும் எண்ண முடியாத அளவுக்கு மரணங்கள்.

கடந்த வாரத் தில் சிங்கள ராணுவத்தின் மூர்க்கமான தாக்குதலில், புலிகளின் முக்கியத் தளபதிகளே உயிரை விட்டிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன.

தற்போதைய இலங்கை நிலவரம் குறித்து வன்னியில் இருக்கும் நடுநிலையாளர்களிடம் பேசினோம்.

”ராணுவத்தைத் தாக்குவதைவிட உலகத்தின் கவனத் தைத் திருப்புவதற்காகத்தான்

ுலிகள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்கா, இங்கி லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளின் கவனம் ஈழத் துக்கு ஆதரவாகத் திரும்பியும் இந்தியாவின் தலையீடு இருந்ததால், போர்நிறுத்தம் சாத்தியமற்றுப் போனது. அதனால் ராணுவத்தின் தாக்குதலை முறியடிக்கும் வண்ணம், புலிகள் ஊடறுப்புத் தாக்குதலைக் கையிலெடுக்கத் தொடங்கினார்கள்.

இதில் சிங்கள ராணுவத்தினர் சிதறுண்டுபோனார்கள். ஆனால், போர் நிறுத்தத்துக்கு பதிலாக வெளிநாடுகளின் உதவியோடு கொடூர ஆயுதங்களைக் கொண்டுவந்து குவித்து, புதிய வியூகங்களை வகுத்துச் செயல்படத் தொடங்கிவிட்ட சிங்கள ராணுவம், கடந்த இரண்டுவாரங்களாக இந்தியாவின் ஆயுதங்களைப் பயன்படுத்தி படுஉக்கிரமான தாக்குதலை நடத்திவருகிறது.

இந்தியாவின் ஆயுதங்களை சரிவரப் பயன்படுத்த இலங்கை ராணுவத்தினருக்குத் தெரியாததால்… இப்போது இந்திய ராணுவத்தினரே போரில் குதித்துவிட்டார்கள். அதனால் ஈழப் போராட் டம் இன்னும் சில நாட்கள்கூட நீடிக்காது.

முப்பதாண்டு காலமாக ஆயுதமேந்திப் போராடிய புலிகள் மடிகிற காலம் வந்துவிட்டது…” என இலங்கை நிலவரத்தை கவலையோடு பகிர்ந்து கொண்டார்கள்.

பொறியில் சிக்கிய புலித் தளபதிகள்!

அவர்களே தொடர்ந்து பேசும்போது, ”கொடூரமான ஆயுதங்கள் கைக்கு வந்தவுடனேயே அசுரப் பாய்ச்சலால் புலிகளின் கைவசமிருந்த இரணைப்பாலை, ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேறிய ராணுவத் தரப் பினர், புலிகளின் முக்கியத் தளபதிகளான கேணல் பானு, கேணல் லாரன்ஸ் ஆகியோரை உயிரோடு பிடிக்கத் திட்டமிட்டனர்.

பிரபாகரனின் அபிமானம் பெற்ற இந்த இருவரையும் உயிரோடு பிடித்தால், சித்ரவதை செய்து பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட முடியும் என்று கணக்குப் போட்டது ராணுவம்.

அதன்படி, ராணுவத்தின் முக்கியஸ்தர்களான பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் தலைமையில் 58-வது டிவிஷனும், கேணல் ரவிப்பிரியவின் தலைமையில் 68-வது டிவிஷனும், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் தலைமையில் 53-வது படையணியும் ஒருசேர வியூகம் வகுத்தன.

அதன்படி, புலித் தளபதிகளின் உணவு விநியோகப் பாதைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.

ஒரே நேரத்தில் புலிகளின் முக்கியத் தளபதிகளைக் குறிப்பிட்ட வளையத்துக்குள் கொண்டுவந்து, நான்கு முனைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது ராணுவம். எப்போதுமே பல கூறுகளாகப் பிரிந்து போர் செய்யக் கூடிய புலிகளின் தளபதிகள், ராணுவத்தின் சூழ்ச்சிக்கு இலக்காகி… அம்பலவன்பொக்கனை சந்திப்பை மட்டும் பயன்படுத்தி ஒரே குழுவாகினர்.

அந்த நேரத்தில் சிங்கள ராணுவத்தின் வலிமை வாய்ந்த விஜயா காலாட்படையும், கஜபா ரெஜிமென்ட் படையும் கைகோத்து, ஒரு சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் புலிகளையும் அவர்களின் தளபதிகளையும் மடக்கினர். கடைசி நேரத்திலேயே இந்த சூழ்ச்சி புலிகளுக்குத் தெரியவந்திருக்கிறது.

அடுத்தகணமே அவர்கள் கடுமையான தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் பானு, லாரன்ஸ் உள்ளிட்ட தளபதிகளை உயிரோடு பிடிக்க நினைத்த சிங்கள ராணுவத்தினர், தாக்குதல் நடத்தாமல் புலிகளை சரணடையும்படி வேண்டினர்.

ஆனாலும், உயிரோடு பிடிபட்டால் என்னாகும் என்பது தெரிந்து புலிகளும் தளபதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள்.

பதினாறு மணி நேரம் இரு தரப்புக்கும் தொடர்ந்து நடந்த தாக்குதலில் சில தளபதிகளும் சில புலிகளும் மட்டுமே தப்பிக்க முடிந்தது.

இருநூறுக்கும் மேற்பட்ட புலிகளும் புலித் தளபதிகளும் மொத்தமாகக் கொலையான விஷயம் அடுத்த நாள் காலையில்தான் புலிகளின் மேல்மட்டத் தலைவர்களுக்குத் தெரியவந்தது…” என்று புலிகளின் பின்னடைவு குறித்தும் பகிர்ந்து கொண்டார்கள்.

”என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது…”

இலங்கை அரசு மற்றும் ராணுவத் தரப்பில் விசாரித்தபோது, ”இலங்கையில் இதுநாள் வரை சவாலாக இருந்துவந்த ஒட்டுமொத்தப் புலிகளையும் ஒடுக்கி விட்டோம்.

பிரபாகரன், ராணுவத்திடமிருந்து தப்புவதற்காக வன்னி காட்டுக்குள் தன்னுடன் ஒருசில புலிகளை மட்டும் அழைத்துக்கொண்டு போய்விட்டார். போகும்போது ஒரு விஷயத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

‘இனி யாரும் என்னோடு தொடர்பு கொள்ள வேண்டாம். ராணுவம் காட்டுக்குள் வந்தாலும் நான் உயிரோடு சிக்க மாட்டேன். என் சாம்பல்கூட அவர்களின் கையில் கிடைக்கக் கூடாது…’ என்று சபத மிட்டுச் சென்றிருக்கிறார்.

கூடவே, ‘இந்திய அரசின் உதவிகளால்தான் ராணுவத்தை எதிர்த்துப் புலிகளால் முழு பலத்தோடு போரிட முடியவில்லை…’ என்றும் சொன்னவர், இந்திய அரசையும் தமிழக அரசையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். இருந்தாலும், பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளிலும் நாங்கள் இறங்கி இருக்கிறோம்.

அவருடைய மகன் சார்லஸ் ஏற்கெனவே எங்கள் தாக்குதலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். பிரபா கரனின் மற்ற பிள்ளைகளும் மனைவியும் லண்டன் போய்விட்டார்களாம். விரைவில் அவர்களையும் பிடிப்போம்.

இனி புலிகள் இலங்கையில் தலையெடுக்க முடியாது… அதற்கு பிரபாகரன் ஜாதகமே சாட்சி. சமீபத் தில் பிரபாகரனின் ஜாதகம், போட்டோ ஆல்பமெல்லாம் அவர் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டபோது சிக்கியது.

அந்த ஜாதகத்தை வைத்துக் கணித்ததில் பிரபாகரனுக்கு உடல்ரீதியாகப் பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது…” என்கிறார்கள்.

வருமா வணங்கா மண்?

ஈழத்தில் பசியாலும் காயங்களாலும் அல்லல்படும் தமிழ் மக்களுக்கு உதவும் விதமாக பிரிட்டனில் இருந்து ‘வணங்கா மண்’ என்ற கப்பல், உலகத் தமிழர்கள் திரட்டிக் கொடுத்த பொருட்களோடு கடந்த சில தினங்களுக்கு முன் முல்லைத்தீவுக்குக் கிளம்பியிருக்கிறது. பிரிட்டன் எம்.பி-க்கள் உள்ளிட்ட பல நாட்டுப் பிரதிநிதிகள் இலங்கையின் கொடூரத்தையும் அப்பாவித் தமிழ் மக்களின் துயரத்தையும் வெளிப்படையாகவே பேசி ‘வணங்கா மண்’ பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

ஆனால், இலங்கையின் கடற்படை அதிகாரிகளோ, ‘வணங்கா மண் கப்பல் புலிகளுக்குச் சொந்தமானது. அதனால் எக்காரணம் கொண்டும் அதை வன்னிக்கு வரவிட மாட்டோம். மீறி அந்தக் கப்பல் வந்தால்… அதன் மீது சரமாரி தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம்!’ என பகீர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்

Wed, Apr 8 2009 | நன்றி: விகடன்

  • Replies 55
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணா அண்ணா,

இந்தச்செய்தியை நீங்கள் போடாமல் விட்டிருக்கலாம் அல்லது நானாவது வாசிக்காமல் விட்டிருக்கலாம்!.

வெந்து போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியான செய்திகள் இன்னும் மனசை வலிக்கச்செய்கின்றன.

பலரை இழந்துவிட்டோம் என்கின்ற பகிரங்க உண்மையை அறிவு ஏற்றுக்கொண்டாலும் மனசு ஏற்கவே மறுக்கிறது.

இந்தியச்சதியால்!!!....எங்கள் விதியை வெல்ல முடியுமா?!. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

‘என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது பிரபாகரன் சபதம்? ??

பிரபாகரன், ராணுவத்திடமிருந்து தப்புவதற்காக வன்னி காட்டுக்குள் தன்னுடன் ஒருசில புலிகளை மட்டும் அழைத்துக்கொண்டு போய்விட்டார். போகும்போது ஒரு விஷயத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

‘இனி யாரும் என்னோடு தொடர்பு கொள்ள வேண்டாம். ராணுவம் காட்டுக்குள் வந்தாலும் நான் உயிரோடு சிக்க மாட்டேன். என் சாம்பல்கூட அவர்களின் கையில் கிடைக்கக் கூடாது…’ என்று சபத மிட்டுச் சென்றிருக்கிறார்.

கூடவே, ‘இந்திய அரசின் உதவிகளால்தான் ராணுவத்தை எதிர்த்துப் புலிகளால் முழு பலத்தோடு போரிட முடியவில்லை…’ என்றும் சொன்னவர், இந்திய அரசையும் தமிழக அரசையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். இருந்தாலும், பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளிலும் நாங்கள் இறங்கி இருக்கிறோம்.

நிச்சயம் அது நடக்கப்போவதில்லை. போராட்டம் தொடரவே செய்யும். இந்தியா கனவு வேணுமென்றால் காணலாம்.. அது அவர்கள் உரிமை.

நுனுவிலானுக்கு தேடல் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்திய விகடனின் கற்பனையாக இருக்கும்........

இதுவும் கடந்துபோகும்............

நன்றி தூயவன்

------------------------------

அப்படியே விகடன் கீழே "யாவும் கற்பனை" என்றும் போட்டிருக்கலாம். மிகச் சில உண்மைகள் தவிர ஏனையவை அனைத்தும் நல்ல கற்பனை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனையோ கதைகளை கேள்விப்பட்டிருக்கிறம் அதில இதுவும் ஒண்டு :lol:

Edited by சேகுவாரா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை எதுவாக இருந்தாலும் சில விடயங்களை வித்தியாசமாக கையாள வேண்டும்.

இந்த செய்தியை வாசிக்கும்போதே அரசாங்க தரப்பினரால் வெளியிடப்பட்டது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

இந்த செய்தியை தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவும், மக்களின் மனங்களில் விரக்தியை ஏற்படுத்தவேண்டும் என்பதிற்காகவும், "தற்போதைய இலங்கை நிலவரம் குறித்து வன்னியில் இருக்கும் நடுநிலையாளர்களிடம் பேசினோம்." இந்த வசனம் பாவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழ் நெஞ்சங்களே தளராது உங்களது பணிகளை முழுமூச்சாக, நம்பிக்கையுடன் தொடருங்கள், வெற்றி நிச்சியம் எங்களுக்கே.

இந்தியா என்றால் கடவுளா?

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா கடவுள் என்றால் பிரச்சனை இல்லையே அது சாத்தான்களின் கூடாரம். துரோகத்தின் மொத்த உருவம். வன்முறையின் பிறப்பிடம்.

'தலைவனின் ஓர்மம்" நமக்குத் தெரிந்தது தான். இருப்பினும் இழப்புக்களின் எண்ணிக்கையை எண்ணும் போதெல்லாம் மனசு கலங்கித்தானே போகிறது! புலம்பெயர்ந்து உயிரைத்தக்க வைக்கும் இருப்பை விட களத்தில் போராடியிருக்கலாம் என்ற குற்ற உணர்வு இப்போதெல்லாம் அதிகமாய் மேலோங்குகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் எல்லோரும். கட்டுரை இணைக்கப்பட்டதன் நோக்கம் விகடன் எம்மக்களுக்கு சார்பாக தான் உள்ளதா என்பதை எல்லொருக்கும் அறிய தரவே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கம் என்பதல்ல. மிக்க நன்றி.

வெல்லும் வரை தமிழர் போராட்டம் தொடரும்!

எங்கள் சுதந்திர தாகத்தை அழிக்க நினைக்கும் சிங்கள கனவும், இந்திய கனவும் சிதையும்!!

இராசயன ஆயுதங்களை சிங்கள இனவெறியருக்கு வழங்கி,

ஈழத்தமிழருக்கு இந்திய தேசம் இழைத்த அநீதிக்கு அந்த நாடு ஒரு நாள் துண்டு துண்டாக சிதறிப் போகும்!!!

Edited by vettri-vel

ஈழத்தமிழருக்கு இந்திய தேசம் இழைத்த அநீதிக்கு அந்த நாடு ஒரு நாள் துண்டு துண்டாக சிதறிப் போகும்!!! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் உரையில் இருந்து இந்தியா பற்றிய நிலைப்பாடு

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வெல்லும் வரை தமிழர் போராட்டம் தொடரும்!

எங்கள் சுதந்திர தாகத்தை அழிக்க நினைக்கும் சிங்கள கனவும், இந்திய கனவும் சிதையும்!!

இராசயன ஆயுதங்களை சிங்கள இனவெறியருக்கு வழங்கி,

ஈழத்தமிழருக்கு இந்திய தேசம் இழைத்த அநீதிக்கு அந்த நாடு ஒரு நாள் துண்டு துண்டாக சிதறிப் போகும்!!!

இந்த வசனம் சில சிக்கல்களை கொடுக்கலாம், பலரும் பலவிதமாக புரிந்துகொள்ள சந்தர்ப்பம் உள்ளது ஆகவே வசன நடையை மாற்றிக்கொள்வது நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெல்லும் வரை தமிழர் போராட்டம் தொடரும்!

எங்கள் சுதந்திர தாகத்தை அழிக்க நினைக்கும் சிங்கள கனவும், இந்திய கனவும் சிதையும்!!

இராசயன ஆயுதங்களை சிங்கள இனவெறியருக்கு வழங்கி,

ஈழத்தமிழருக்கு இந்திய தேசம் இழைத்த அநீதிக்கு அந்த நாடு ஒரு நாள் துண்டு துண்டாக சிதறிப் போகும்!!!

இதுவே எனது கருத்தும்!

மன்னிக்கவும் எல்லோரும். கட்டுரை இணைக்கப்பட்டதன் நோக்கம் விகடன் எம்மக்களுக்கு சார்பாக தான் உள்ளதா என்பதை எல்லொருக்கும் அறிய தரவே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கம் என்பதல்ல. மிக்க நன்றி.

நுணா... நீங்கள் இதனைப் பிரசுரிக்காமல் விட்டிருந்தால், நான் பிரசுரித்து இருப்பேன். புதிய திரி திறந்து, விகடனில் இருந்து Copy & Paste பண்ண முற்படும் போது, யாராவது ஏற்கனவே போட்டுள்ளார்களா என்று தேடிப் பார்க்கையில் உங்களின் பதிவைக் கண்டமையால் நான் போடவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடனிலுள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு இலண்டன் மக்கள் போராட்டம் குறித்த செய்தி பிரசுரிக்கக் கேட்ட போது, இனி ஈழம் குறித்த விடயங்களைப் விகடன் பிரசுரிக்குமென எதிர்பார்க்க முடியாதெனக் குறிப்பிட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடனிலுள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு இலண்டன் மக்கள் போராட்டம் குறித்த செய்தி பிரசுரிக்கக் கேட்ட போது, இனி ஈழம் குறித்த விடயங்களைப் விகடன் பிரசுரிக்குமென எதிர்பார்க்க முடியாதெனக் குறிப்பிட்டிருந்தார்.

அதில பிரசுரிச்சு என்னத்தை கிழிக்க போயினம்...சும்மா இருங்கையா..பிரசுரிச்ச மாத்திரம் எதோ உடன மாற்றம் வந்திடுமா...

  • கருத்துக்கள உறவுகள்

‘என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது பிரபாகரன் சபதம்? ??

அவருடைய மகன் சார்லஸ் ஏற்கெனவே எங்கள் தாக்குதலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். பிரபா கரனின் மற்ற பிள்ளைகளும் மனைவியும் லண்டன் போய்விட்டார்களாம். விரைவில் அவர்களையும் பிடிப்போம்.

நல்ல கதை .. கை தட்டத் தான் ஆக்கள் இல்லை :icon_idea:

குலைக்கிற நாய் கடிக்காது :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இராசயன ஆயுதங்கள் என்ற பதத்தை மறைத்து கொடூர ஆயுதங்கள் என்ற வசனத்தைப் பாவித்திருக்கின்றார்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நிழலி அண்ணா,

இந்தக்கதைகளைக்கேட்டு வலிமை குலைந்து போகும் நிலையில் நம் இனம் இருக்கிறதே என்று குறிப்பெடுக்கவோ?!

அப்படியில்லை அண்ணா, இந்த நேரத்துள் இப்படியான வறட்டு வேதாந்த ஆய்வுகள் தேவையில்லை. என்பதே என் நிலை.

Edited by Thamilthangai

விகடனிலுள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு இலண்டன் மக்கள் போராட்டம் குறித்த செய்தி பிரசுரிக்கக் கேட்ட போது, இனி ஈழம் குறித்த விடயங்களைப் விகடன் பிரசுரிக்குமென எதிர்பார்க்க முடியாதெனக் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலுக்குள் விலை போய்விட்டனரா?

இந்த கட்டுரையைப்பார்க்கும் போதே தெரிகிறது. ஆரம்பத்தில் நல்வர்கள் மாதிரி நடித்துவிட்டு இப்போது மெதுவாக விசமேற்றத் தொடங்கிவிட்டார்களா?

Edited by Subiththiran

வணக்கம்

வன்னியில் செத்துமடியும் இந்திய படைகளின் உடல்கள் தமிழ்நாட்டில் குவிந்துகொண்டிருக்கிறது இணையத்தளங்கள் ஊடாக செய்திகள் வெளிவரத்தொடங்கிவிட்டன இவற்றையெல்லாம் ழூடிமறைப்பதற்கு முடியாமல்போனதால் சாத்திரம் வேறு பார்தது விகடனிலும் கதைஎழுத தொடங்கிவிட்டது இந்தியாவின் குள்ளநரிப்படையான றோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தலுக்குள் விலை போய்விட்டனரா?

இந்த கட்டுரையைப்பார்க்கும் போதே தெரிகிறது. ஆரம்பத்தில் நல்வர்கள் மாதிரி நடித்துவிட்டு இப்போது மெதுவாக விசமேற்றத் தொடங்கிவிட்டார்களா?

அவர்கள் விஷமிகள் தான். இத்தனை நாள் நடித்தார்கள். இனி !!! சுயரூபம்தானே வெளிப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.