Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை வீரனாக நடத்த வேண்டும் - கருணாநிதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரின் முடிவு எப்படியிருந்தாலும்- ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும்-நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன் போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும், பிரபாகரன் தோல்வியுறுத்தாலும், போரஸ் மன்னனை அலெக்சாண்டர் வீரனாக நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.

------------------

எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே .. சோனியாவுக்கு கருணாநிதி வேண்டுகோள்

சென்னை: எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எனக்கு அவர் இளையவராக இருந்தாலும் கூட- ``எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே'' என்று சோனியா காந்தியை பார்த்து நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தக் கோரி சென்னையில் திமுக சார்பில் தமிழர் பேரணி நடைபெற்றது.

பேரணியின் முடிவில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே நடந்த கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

இலங்கை அரசே! போரை நிறுத்து! என்று வலியுறுத்தி முழக்கமிட்டு லட்சக்கணக்கிலே பேரணியாக வந்த இந்த நிகழ்ச்சிக்கு நான் தலைமையேற்கின்ற வாய்ப்பு பெற்றதை மகிழ்ச்சியாக கருதவில்லை-இருந்தாலும் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு உரையாற்றி இருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழம்பித் தவிக்கிறேன்..

இங்கு உரையாற்றியவர்கள் எல்லாம் வழிசொல், வழிசொல் என்று எனக்கு ஆணையிட்டு இருக்கிறார்கள். எவ்வழியை நான் கண்டுபிடித்து சொல்வதென்று புரியாத நிலையில் குழம்பி தவிக்கிறேன்.

ஏனென்றால், ஏறத்தாழ் 50 அல்லது 60 ஆண்டு காலமாக, இந்த பிரச்சினை, அறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோருடைய காலத்தில் இருந்து ஈடுபடுத்தி கொண்டவன் என்ற முறையில் ஒவ்வொரு காலத்திலும் இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமைகளை கண்டிக்கும் நிலையிலும்-அங்கே விழுகின்ற தமிழர்களுடைய பிணங்களைப் பார்த்து, கண்ணீர் உகுக்கின்ற நிலையிலும், இலங்கையோடு எனக்கு தொடர்பு உண்டு.

இலங்கைக்கு நான் செல்வதற்கு அங்கேயிருந்த அரசுகள் தடை விதித்தபோதும், இலங்கையில் தமிழர்களுக்கு காவலர்களாக, துÖதுவர்களாக இருக்கின்ற நண்பர்களுக்கெல்லாம் நான் தோழனாக இருக்கிறேன். அந்த வகையில் இலங்கை பிரச்சினை எனக்கு புதிய பிரச்சினை அல்ல.

ஏன் ஆட்சியை துறக்கவி்ல்லை..

நானும் பேராசிரியரும் இந்த இலங்கை பிரச்சினைக்கு எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்தோம் என்று இங்கே திருமாவளவன் குறிப்பிட்டார். ஆனால், இப்போது சில பேர் ஏன் இலங்கை பிரச்சினைக்காக ஆட்சியை துறக்க கூடாது என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். ஆட்சியை துறக்காமல் இருப்பதற்கு காரணம், எனக்காக துறக்காமல் இல்லை, கேட்பவர்களுக்காகத்தான் ஆட்சியை நான் துறக்காமல் இருக்கிறேன்.

நான் மாநில ஆட்சியை துறந்து, மத்திய அரசு, நேரடியாக தமிழகத்தை ஆளுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்குமேயானால்-குடியரசு தலைவருடைய ஆட்சி நேரடியாக ஏற்பட்டிருக்குமேயானால் இவர்கள் பேசுகின்ற பேச்சுகளுக்கு, இறையாண்மைக்கு விரோதமாக, திருமதி சோனியா காந்தியை இழித்தும் பழித்தும் பேசுகின்ற இந்த பேச்சுகளுக்கு எத்தனை ஆண்டுக்காலம் சிறைத்தண்டனை கிடைத்திருக்கும் என்பதையெல்லாம் நான் எண்ணிப் பார்க்கிறேன். எனவே இவர்களை காப்பாற்றுவதற்காகத்தான் நான் ஆட்சியை இழக்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இது ஒரு நிலை. இன்னொரு நிலை-இன்றைக்கு செத்து சுண்ணாம்பாக ஆகிக் கொண்டிருக்கிறார்களே, நச்சுப்புகை குண்டுகளை வெடித்து நம்முடைய இனத்தை அழிக்கிறார்களே, இன்னும் இதைப்பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று புலம்புவது எனக்கு புரிகிறது. அந்த புலம்பலின் தாத்பரியம் என்னைப்போல் எல்லோருக்கும் இருப்பதையும் நான் உணருகிறேன்.

நீங்களும் அடிமை - நாங்களும் அடிமை ..

தமிழ் ஈழத்தின் தந்தை என்று புகழப்படுகின்ற மறைந்த செல்வநாயகம், 1974ம் ஆண்டு வாக்கில் தமிழகத்துக்கு வந்தார். அவரை நான் சந்தித்து எங்களால் இயன்ற உதவியை தமிழர்களுக்கு, தமிழ் ஈழத்துக்கு செய்வோம் என்று குறிப்பிட்டேன். பெரியாரிடம் சென்று, அதே விவரங்களை எடுத்துச் சொல்லி எங்களுக்கு உதவிட வேண்டுமென்று சொன்னபோது பெரியார்-நீங்களும் அடிமைகளாக இருக்கிறீர்கள், நாங்களும் அடிமைகளாக இருக்கிறோம், ஒரு அடிமை, இன்னொரு அடிமைக்கு என்ன உதவ முடியும் என்று சொன்னார்.

அது இன்றைக்கும் உண்மையாக இருக்கின்றது. நான் அந்த நிலையில்தான் இருக்கிறேன். நான் மாத்திரமல்ல. நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.

இன்றைக்கு உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே போர் நிறுத்தப்பட வேண்டுமென்று உரக்க ஒலிக்கின்றன. நம்முடைய இந்திய பேரரசும் நம்முடைய குரலை மதித்து, கோரிக்கையை மதித்து போரை நிறுத்த வேண்டுமென்று கேட்கிறது. அந்த குரல் இன்றைக்கு சோனியா காந்தியின் குரலாக ஒலிக்கிறது.

இந்திரா போல செயல்பட வேண்டும் சோனியா..

நாம் விரும்புவது, திருமாவளவன் போன்றவர்கள் விரும்புவது, அது திருமதி இந்திரா காந்தியின் குரலாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். மாமியாரின் குரலை மருமகள் பின்பற்ற வேண்டுமானால் மற்ற நாடுகளின் நிலைமைகளை, மாமியார் காலத்திலே இருந்த உலக நிலவரம் இன்று மருமகள் காலத்திலே இருக்கின்ற உலக நிலவரத்தையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் எண்ணிப் பார்க்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் - விரைவில் எண்ணிப் பார்த்து முடிவு செய்து, எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எனக்கு அவர் இளையவராக இருந்தாலும் கூட- ``எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே'' என்று சோனியா காந்தியை பார்த்து உங்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த போரில் போர் நிறுத்தம் ஏற்பட்டால்-ஒரு வேளை ஏற்படாவிட்டால், ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் என்ன முடிவாக இருக்கும்? அது இங்கே சட்டமன்றத்திலே சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாரே, அந்தத் தீர்மானத்தை போல பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிப்பதாக இருக்கும்.

பிரபாகரனுக்கு இங்கே தண்டனை தர வேண்டும்..

இதைத்தான் ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது தீர்மானமாக முன் மொழிந்து அதை நிறைவேற்றினார்கள். இந்த போரின் முடிவு நமக்கு தோல்வியாக இருந்தால், தமிழர்களுக்கு தோல்வியாக இருந்தால்- பிரபாகரன் தலைமையிலே உள்ள அந்த புலிகளுக்கு தோல்வியாக இருந்தால், ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானப்படி இங்கே பிரபாகரனை அழைத்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும்.

நான் இப்போதும் கேட்கின்றேன். ராஜபக்சேவுக்கு சொல்கிறேன். சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள்.

இந்திய சரித்திரத்தில் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, அக்ரோணி கணக்கிலே சைனியங்களையெல்லாம் அழித்து- பல நாடுகளை கவர்ந்து பல பூமிகளை தன்னுடைய காலடியிலே போட்டு மிதித்து வந்தபோது போரஸ் மன்னன் எதிர்ப்பை துச்சமாக கருதி `போரஸ்' என்று அழைக்கப்பட்ட புருஷோத்தமனை வென்றபோது- பெருந்தன்மையோடு கேட்டான், உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று. அந்த நிலையிலும் போரஸ் மன்னன், ``என்னை ஒரு மன்னனைப் போல் நடத்த வேண்டும்'' என்று சொன்னான். அவனுடைய பெருந்தன்மைக்கு, அலெக்சாண்டரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக, அலெக்சாண்டர், போரஸ் மன்னனின் வீரத்தை பாராட்டி, தனக்கு நிகராக, தனக்கு சமமாக ஒரு மன்னனாக உட்கார வைத்தான்.

பிரபாகரனை வீரனாக நடத்த வேண்டும்..

போரின் முடிவு எப்படியிருந்தாலும்- ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும்-நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன் போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும், பிரபாகரன் தோல்வியுறுத்தாலும், போரஸ் மன்னனை அலெக்சாண்டர் வீரனாக நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.

இது தனிப்பட்ட ஒரு பிரபாகரனுக்காக சொல்லப்படுவதல்ல, கடந்த காலத்திலே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மத்திய அரசு அண்மையிலே வெளியிட்ட கருத்துக்கள், பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தானாலும், குடியரசு தலைவர் வெளியிட்ட கருத்தானாலும், அதைத் தொடர்ந்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்தானாலும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட கருத்தானாலும், இந்த கருத்துக்கள் எல்லாம் தமிழர்களை, தமிழ் மக்களை சம அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலே சம சுதந்திரம் கொடுத்து அவர்களை நடத்த வேண்டும் என்ற கருத்துத்தான், அந்த கருத்தின் அடிப்படையில் என்ன முடிவானாலும் அந்த முடிவை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ராஜபக்சே நடந்து கொள்வாரேயானால், சரித்திரம் அவரை மன்னிக்காது.

சரித்திரத்தின் மூலையில் தள்ளப்படுவார் ராஜபக்சே..

சரித்திர பள்ளத்தாக்கிலே எங்கோ ஒரு மூலையில்தான் அவர் தள்ளப்படுவார். அதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு தமிழன், தன்மானம் உள்ள தமிழனாக, தமிழன் தரணி போற்றும் தமிழனாக வாழ- தமிழன் சுயமரியாதை உள்ள தமிழனாக வாழ எங்களை அனுமதியுங்கள் என்று வீரசபத முழக்கமிட்டு பேரணியில் கலந்து கொண்ட லட்சோப லட்சம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

தட்ஸ்தமிழ்.கொம்

Edited by nedukkalapoovan

இது ஒரு வெத்துவேட்டு. ********************************தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளாலும் திட்டியிருக்கின்றேன் சேர்த்து வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரை அலெக்சாண்டர் போரஸ் மன்னனை கெளரவமாக இலங்கை அரசு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இங்கு பேசிய பலரும் இப்பிரச்னைக்கு வழி சொல்லுங்கள் என என்னை வற்புறுத்துகின்றனர். ஆனால் என்ன வழி என்று தெரியாமல் புலம்பித் தவிக்கிறேன் என்பதுதான் உண்மை நிலை. கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பிரச்னையில் தீர்வு கிடைக்காமல் உழலும் நிலைதான் உள்ளது என்றார்.

"இலங்கையில் இப்போது நிகழும் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது இரண்டுவிதமான முடிவுகள்தான் எடுக்க முடியும். ஒன்று அங்கு போர் நிறுத்தம் செய்வது. மற்றொன்று போரின் முடிவு நமக்குத் தோல்வியாக இருந்தால் சட்டப்பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் போட்டதைப்போல பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வேண்டியது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு செய்து கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்ட கருத்து மற்றும் சோனியா காந்தி, பிரதமர் ஆகியோர் வெளியிட்ட கருத்துகளின் அடிப்படையில் தமிழர்களுக்குச் சம அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருணாநிதி, இதை ராஜபக்‌ஷே மீறினால் வரலாறு அவரை மன்னிக்காது என்றார்.

இலங்கையில் தமிழர்கள் தன்மானத் தோழனாக வாழ வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், இதையேதான் தமிழகம் வலியுறுத்துகிறது. சோனியா காந்தி இதை வலியுறுத்தினாலும் அது இந்திரா காந்தி வலியுறுத்தியதைப்போல இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் சில முடிவுகள் கால நிலைக்கு ஏற்பத்தான் அமையும். இப்போதைய சூழலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

இலங்கைத் தமிழ் தலைவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறோம். 1974-ம் ஆண்டு தமிழீழ தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோர் இங்கு வந்து ஈ.வெ.ரா. பெரியாரைச் சந்தித்தபோது, ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்று கூறினார். அதைப் போலத்தான் எங்களது நிலை உள்ளது.

இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அது உறுதியான குரலாக ஒலிக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

http://www.nigazhvugal.com/index.php?optio...am&Itemid=3

Edited by சேகுவாரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவரைத் திட்டாதீர்கள்.

அவர் தனது நிலையை.. அதாவது இந்திய தேசியத்தில் தமிழ்நாட்டு மக்களின் நிலையை தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.. அது போதுமே..!

தாம் கைலாகாதவர்களா உள்ளதை அவர் உணர்கிறார். அந்த உணர்வு போதும் தமிழகம் விழிக்க என்று நினைக்கிறேன்..

இலங்கைத் தமிழ் தலைவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறோம். 1974-ம் ஆண்டு தமிழீழ தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோர் இங்கு வந்து ஈ.வெ.ரா. பெரியாரைச் சந்தித்தபோது, ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்று கூறினார். அதைப் போலத்தான் எங்களது நிலை உள்ளது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் அழிந்தவுடன் தமிழர்களை மரியாதையுடனும் சரிசமமாகவும் நடாத்த வேண்டும் என்று இலங்கை அரசை கோரியுள்ளார் இந்த தமிழ் நாட்டு அடிமை. இவரையே "கோமாளி" என்று அழைப்பவர்கள் சாதாரண தமிழர்களுக்கு என்ன மரியாதையை சிங்களவர் தருவார் என்று இவர் எதிர்பார்க்கின்றார்?

அப்ப அந்த ஆளு நாம் தோற்றதாக முடிவே கட்டிவிட்டாரா ? இவரின் கூற்றுப்படி வெளிநாட்டு விவகாரத்தில் இந்த அளவு கருத்து சொன்னதே தவறு .

அப்ப அந்த ஆளு தமிழன் இந்தியாவில் அடிமைப்பட்டு இருப்பதாக சொல்கிறாரா ?உண்மையில் இதுதான் இந்திய இறையாண்மைக்கு எதிரானது

அப்ப அந்த ஆளு மகிந்தாவை அலேக்சாண்டேர்னு சொல்றாரா ?

இலங்கையில் உள்ள துரோகிகள் கூட இவ்வளவு சொன்னதில்ல

இலங்கை செல்ல எவன் தடை விதித்தது ? மஹிந்தா கூப்பிட்டானே போய் புடுங்க வேண்டியது தானே ?

இவரை பொறுத்த அளவில் ராஜ தந்திரம் என்பது தமிழனை பிரித்து ஏமாற்றி வாழ்வது மட்டுமே . தமிழகத்தை விட்டால் வேறு எங்கும் பப்பு வேகாது .

வந்தவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் வணக்கமும் ????? இது என்ன விருந்து படைக்கும் கூட்டமா ? இல்லை கஷ்டப்பட்டு கூட்டிய கூட்டமா ?

இவர் வாங்கிக்கொண்ட பட்டங்களே இப்படி வலுக்கட்டாயமாக வாங்கியது தான் .

தாயே ??? இவர் எது சொன்னாலும் ஆமாம் சாமி போட்ட தமிழனுக்கு இதுவும் வேணும் . இன்னமும் வேணும் ( ஈழ , இந்திய ரெண்டு தமிழனும் தான் ). நாளை இவர் சந்திரிகாவை தாயே என்பார் . நாளை மறுநாள் மகிந்தாவை கடவுளே என்பார் . எல்லாத்துக்கும் ஆமாம் போடுங்கள் .

எதோ யாரேனும் கவர்ச்சி நடிகையை சொல்லாதிருந்தால் சரி .

புடுங்கி . இந்த ஆளு ஆட்சியை துறந்து இருந்தால் மத்திய அரசும் சேர்ந்து கவிழ்ந்து இருக்கும் . இந்தியாவில் எல்லோருக்கும் நம் ஈழத்தின் மேல் கவனம் திரும்பி இருக்கும் . நல்ல வாய்ப்பை விட்டுவிட்டு ?????????

ஈழத்தின் மேல் கவனம் திரும்பினால் அவருக்கு விளையாட வேறு விஷயம் கிடைக்காது . அதனால் செய்யவில்லை .

பைத்தியக்கார கிழடு . இந்திராவையும் சோனியாவையும் ஒப்பிடுறார் . இந்திரா இருந்திருந்தால் இந்நேரம் ஈழம் மலர்ந்து பல வருடங்கள் ஆகி இருக்கும் .

அப்படியே ஓரளவு உன் குடும்ப செல்வாக்கும் காலி ஆயிருக்கும்

பிரபாகரனுக்கு தண்டனை ???? இவர் யார் அதை சொல்ல ????

அந்த ஆளுக்கு இது கூட தெரியாதா ?? குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜரானால் மொத்த வழக்கும் மறு விசாரணைக்கு வரும் என்று ???

எல்லாத்துக்கும் மேல இது ஒரு நியூஸ் . இத ஒரு ஆள் இணைத்திருக்கிறார் . பலர் பதில் எழுதுகின்றனர் . நான் ஒரு பைத்தியம் . நானும் எழுதுகிறேன் .

ஆக வேண்டியதை பார்ப்போம் . நாடகம் பார்க்கும் நேரமோ நகைச்சுவை படிக்கும் நேரமோ நமக்கு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

அவரைத் திட்டாதீர்கள்.

அவர் தனது நிலையை.. அதாவது இந்திய தேசியத்தில் தமிழ்நாட்டு மக்களின் நிலையை தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.. அது போதுமே..!

தாம் கைலாகாதவர்களா உள்ளதை அவர் உணர்கிறார். அந்த உணர்வு போதும் தமிழகம் விழிக்க என்று நினைக்கிறேன்..

தன் குடும்ப சுயநலத்திற்காக தான் சார்ந்த இனத்தையே பூண்டோடு அழிக்கவும்,மனித வாழ்க்கையின் அதிஉச்ச கொடுமைகளும் எம் இனத்தை ஆட்கொள்ளவும் துணைபோன இக்கயவன், தன் சுயநலத்தை, பதவி ஆசையை மறைக்க எவ்வளவு கீழ்த்தரமாக கையாலாகத்தனம், போதிய அதிகாரமில்லையெனச் சொல்லி பூசி மழுப்புகிறான்? இவனை தமிழக மக்கள் மன்னிக்கவே கூடாது. ஏழுகோடித் தமிழர்களின் உணர்வை மதிக்க, அவர்களின் உறவை காக்கத் தவறியவன், எங்களின் பிரதிநிதியென பதவியில் தொடர அருகதையற்றவன். பிரபாகரனின் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்ற பிண்டம்.

ஒரு இன அழிப்பிற்கு துணைபோன இவன் செத்தொழிந்தாலாவது ஒரு உண்மைத் தமிழன் வரமாட்டானா எம் உணர்வுகளை மதித்து, இந்த இறுதிக்கட்டத்திலாவது எம்முறவுகளைக் காக்க... என்ற ஏக்கமும் பரிதவிப்பும், மிதமிஞ்சிய கோபமுமே இப்போது தமிழகத்தில்....இந்தக் கொந்தளிப்பு மிகச்சீக்கிரம் பிரளயமாக மாற நேரம் அதிகமில்லை.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய்யான நண்பன் கருணாநிதியை விட உண்மையான எதிரி ஜெயலலிதா மேல்

தேர்தல் கிட்டுவதனால் இப்படி பல கட்டுரைகள் கவிதைகள் வரைவார் இந்த தமிழீனத்தலைவர்

இயற்கை எய்தும் நாளே நல்ல நாள்

நாதாரி

கனவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொலை நோக்கில் கருணாநிதியும் பீச்சிய பார்வை பூச்சியமே.பிரபந்தத்தில் பிரபா கரம் பிரம்மம் பிறப்பேற்றும்,பீதி அகற்றி மோத அகம் கொள்க.அர்த்தமற்ற அகம் படைக்கும் அறிவிலி

தொலை நோக்கில் கருணாநிதியும் பீச்சிய பார்வை பூச்சியமே.பிரபந்தத்தில் பிரபா கரம் பிரம்மம் பிறப்பேற்றும்,பீதி அகற்றி மோத அகம் கொள்க.அர்த்தமற்ற அகம் படைக்கும் அறிவிலியே.

ஏய் கருணாநிதி! தினமும் தமிழர்களின் இரத்தம் குடிக்கும் முதல் தர உலக பயங்கரவாதி மகிந்தன் உனக்கு மாவீரன் அலெக்சாண்டரா?

தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தி, தமிழர்களை தினமும் கொன்று குவிக்கும் ஒரு பயங்கரவாதியை, ஒரு சிங்கள இனவெறியனை

அலெக்சாண்டர் என்று அழைத்து தமிழர்களுக்கு நல்ல கைமாறு செய்தாய்.

மகிந்தன் என்ன மாவீரன் அலெக்ஸாண்டர் போன்றா களத்தில் நேராக நின்று சண்டை செய்கிறான்???

ஏய் அரசியல் காடையனே! நீயும் உன் சோனியா காங்கிரஸ் ஆட்சியும் அள்ளிக்கொடுத்த இராசாயன ஆயுதங்களை

தமிழர்கள் மேல் ஏவி விட்டல்லாவா அந்த கோழை மகிந்தன் போர் புரிகிறான்!

நீ திருடன் என்பது என் சின்னஞ்சிறு வயதில் இருந்தே எனக்கு தெரிந்தது தான்.

ஆனால் உன் உளுத்துப்போன பதவி ஆசைக்கு லட்சக்கணக்கான தமிழர்களின் இரத்தம் குடிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்தவனாக இருப்பாய்

என்று நான் கூட நினைக்கவில்லை!!!

தமிழ் ஈழத்தின் தந்தை என்று புகழப்படுகின்ற மறைந்த செல்வநாயகம், 1974ம் ஆண்டு வாக்கில் தமிழகத்துக்கு வந்தார். அவரை நான் சந்தித்து எங்களால் இயன்ற உதவியை தமிழர்களுக்கு, தமிழ் ஈழத்துக்கு செய்வோம் என்று குறிப்பிட்டேன். பெரியாரிடம் சென்று, அதே விவரங்களை எடுத்துச் சொல்லி எங்களுக்கு உதவிட வேண்டுமென்று சொன்னபோது பெரியார்-நீங்களும் அடிமைகளாக இருக்கிறீர்கள், நாங்களும் டிமைகளாக இருக்கிறோம், ஒரு அடிமை, இன்னொரு அடிமைக்கு என்ன உதவ முடியும் என்று சொன்னார்.

அது இன்றைக்கும் உண்மையாக இருக்கின்றது. நான் அந்த நிலையில்தான் இருக்கிறேன். நான் மாத்திரமல்ல. நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.

ஏய் நீ அடிமை என்றால் எதற்காக உன்னை அடிமையாய் வைத்திருப்பவனுடன் தேர்தல் கூட்டு வைத்துக்கொள்ள அங்கலாய்த்து தமிழ் இனத்தையே காட்டிக் கொடுத்தாய்?

தூக்கி எறியும் துணிவு உனக்கு ஏன் இல்லாமல் போனது? கப்பல் போக்குவரத்திலும் சேது சமுத்திர பணத்திலும் நீயும் பாலுவும் சேர்ந்து அடித்த கூட்டுக் கொள்ளைகள் அல்லவா அதன் காரணம். யாரை ஏய்க்க பார்க்கிறாய்???

என்ன 1974ல் பெரியார் திரு.ஈ.வே. இராமசாமியுடன் நீ பேசினாயா? 24.12.1973 அன்று காலமடைந்த பெரியாரின் ஆவியா 1974ல் உன்னுடன் பேசியது?

1972ல் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க வை விட்டு உன்னால் வெளியேற்றப்பட்ட பின் தனி கட்சி தொடங்கியதும், எம்.ஜி.ஆரை பெரியார் அழைத்து ஆசீர்வாதம் செய்தாரே அன்றிலிருந்து உனக்கும் பெரியாருக்கும் ஆகாது என்பது இன்று பலருக்கும் தெரியாததால் ஏய்க்கப் பார்க்கிறாயா???

Edited by vettri-vel

மின்னஞ்சலில் வந்தது :)

kolaignar01.jpg

அச்சுத்தரத்தில் பெற்றுக்கொள்ள: இங்கு

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
soniaanddog.jpg
dog_kn.jpg

வன்னியில வாழ வேண்டிய எத்தனை இளம் சிறார்கள் அநியாயமாக சாகிறார்கள்........மண்டைய போடுற வயசில இந்த கிழம் போய் சேராம எங்கட உயிர வாங்குது...இவன மாதிரி ஆக்கள் போய் சேருகிற நாள் தான் தமிழர்களின் தீபாவளி

மின்னஞ்சலில் வந்தது :)

kolaignar01.jpg

அச்சுத்தரத்தில் பெற்றுக்கொள்ள: இங்கு

நீங்கள் இப்படி எழுதுவீங்கள் எண்று தெரிந்து இலவசமாக விட ஆரம்பித்து உள்ளார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

dog_kn.jpg

அந்த நாய் மாரியே இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நாய் மாரியே இருக்கு

கொஞ்சப் பேருக்கு நாயை கேவலப்படுத்துறதே தொழிலாப்போச்சுது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா”...வுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தான்.:)))

இவர் கருணாநிதியைப் பற்றி பேசவே கூடாது என்று இருந்தாலும் இந்த மனுசன்(?????) விடமாட்டார் போல இருக்கு...! வருது வாயில.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நயவஞ்சகனே உன் அரசியல்விளையாட்டுக்கு நாங்களா கிடைத்தோம்?

போ சோனியாவின் காலை நக்கு

எதற்காக இவ்வளவு முக்கியம் இந்தச் செய்திக்கு???????????????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்காக இவ்வளவு முக்கியம் இந்தச் செய்திக்கு???????????????????????????

துயரமும் ஆத்திரமும் :)

துயரமும் ஆத்திரமும் :)

நம்பிக்கை தரும் செய்திகள் வரும். தேவையின் நிமிர்த்தமே இந்தத் துயரங்கள் என்பதுதான் என் கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.