Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தனி ஈழம் தான் ஒரே தீர்வு! அதை அமைக்கும் நடவடிக்கையை நான் நிச்சயமாக செய்வேன்!!": ஜெயலலிதா பரபரப்பான வாக்குறுதி

Featured Replies

ஜெயா அம்மாவின் மனதை மாற்றிய ரவிசங்கர் அய்யருக்கு கோடானு கோடி நன்றிகள்.

ஈழத்தமிழனின் ஏகபிரதிநிதிகள் த.ஈ.வி.பு தான் அம்மா சொன்னால் இன்னும் நல்லா இருக்கும்.

  • Replies 57
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Independent Tamil Eelam only solution, we will fight to attain it: Jayalalitha

[TamilNet, Saturday, 25 April 2009, 22:13 GMT]

A separate Tamil Eelam is the only solution that will permanently put an end to the problems of the Tamil people in the island of Sri Lanka, said Tamil Nadu former Chief Minister and principal Leader of the Opposition, Ms. Jayalalitha at a election rally in Salem city Saturday. In a powerful, moving speech, she resolved to fight to attain independent Eelam.

"I met Art of Living founder Sri Sri Ravishankar who has just returned from the war-zone in the Vanni. He gave me CDs and photographs of the atrocities. My heart boils when I looked at it," the AIADMK leader said. If this pathetic situation of the Tamil people has to be removed, if the problems of the Lankan Tamils has to come to an end, an independent Eelam is the only solution, she added.

"We will fight to attain that independent, separate Eelam. Till today, I have never said that separate Eelam is the only solution. I have spoken about political solution, this and that. But, now I emphatically say, a separate Eelam is the only permanent solution to the Lankan conflict, " she said.

Earlier, Jayalalitha had announced at an election rally in Thirunelveali (Tirunelveli) on April 18 that if elected in all the 40 seats, the AIADMK-led alliance would have a say in the next Union Government and would strive to get Eelam if a fair political solution was not found for the Tamil people in Sri Lanka.

Ms. Jayalalitha, had earlier espoused that a solution to the Tamil problem had to be found within the constitution of Sri Lanka.

Meanwhile, twenty women who were on a fast unto death in Chennai since April 13 demanding Congress chief Sonia Gandhi to bring about an immediate ceasefire, gave up their fast after Ms. Jayalalitha requested them to end it.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29171

--------------

வாக்கு வேட்டைக்காக.. சிங்கள இனவெறியினனின் தமிழர் வேட்டையைப் பயன்படுத்தாத பேச்சாகவும் செயல்வடிவம் பெறக் கூடிய பேச்சாகவும் இது இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்..! :unsure::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சோந்தி (n)கலைஞர் கருணாநிதி இந்தத்தடவை மண் கௌவுவார். முசோலினியின்வாரிசு சோனியாவிற்கும் அதேகதிதான். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மையான வாரிசு தானே என்பதை நிதர்சனமாக்க அம்மாவிற்கு நல்லொரு சந்தர்ப்பம். கடவுளே குடிகாரன் பேச்சுப்போல் தேர்தல் முடிந்தால் போச்சு ஆகாமலிருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னமோ பயமாய்க்கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதாவின் உரை :

http://www.esnips.com/doc/b43e13a4-7c6a-4b...alalitha-Speech.

இது தேர்தல் ஒட்டுகாகவா அல்லது உண்மையா என்று தெரியவில்லை .. பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்

Edited by senthil5000

அடுத்து ஜெயலலிதாவுக்கு முன்பு இப்படி சொன்னா, அப்படி சொன்னா என்றெல்லாம்,

கடிதம் அல்லது கவிதை எழுதும் வரை கருணாநிதிக்கு நித்திரை வராது.

இனி பழைய கதை எல்லாம் திரும்ப தோண்டுவார். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மணி கலக்கிட்டீங்க.... ! பேச்சைச் சொன்னேன்.... கலைஞருக்கு ஆப்பு நிச்சயம்.. சரி அத விடுங்க அடுத்த விசயத்துக்கு வாரன். எங்கட தலைவரின் தலைமையின் கீழ் தமிழீழத்தை நாங்களே பெற்றுக்கொள்வோம்... ஆனா நீங்கள் முதலமைச்சரா வந்தா வெளி நாடுகளுக்கு போகும் போதெல்லாம் ஈழத்தமிழருக்கு தமிழீழந்தான் ஓரே தீர்வு என்று சொல்லிக்கொண்டிருங்கோ அதுவே எங்களுக்கு பெரிய உதவி.. , அத்துடன் 6 கோடி தமிழர்களின் முதலமைச்சரின் பேச்சை மற்றய நாடுகள் கொஞ்சமென்றாலும் கேட்குமல்லவா...!

இளங்கவி

இந்த செய்தியை கேட்டு கருநாய்நிதிக்கு இண்டைக்கு நாள் பூரா வைத்தால போகுதாம்....எத்தன பேதி மாத்திரை கொடுத்தும் நிக்குது இல்லையாம்

இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால் - எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் - தனி ஈழம் அமைக்க தேவையான நடவடிக்கையை நான் எடுப்பேன். அதை நான் நிச்சயம் செய்வேன் என்று ஒரு பரபரப்பான வாக்குறுதியை அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதா வழங்கியிருக்கின்றார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜெயலலிதா மேலும் தெரிவித்துள்ளதாவது:

வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், சிறீ சிறீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், சில நாட்களுக்கு முன்பு, இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர்.

இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கின்றனர்.

எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் நாள் நான் சென்னை வந்த போது, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சிறீ சிறீ ரவிசங்கர் குருஜி அவர்கள் என்னை சந்தித்தார்.

அப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட காணொலிக் [ Video] காட்சிகளை இலத்திரனியல் காணொலித் தட்டில் [DVD] எனக்கு திரையிட்டு காண்பித்தார்.

அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன்.

இதுவரை தெரியாத பல உண்மைகளை, காணொலி காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரைக் காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், இந்த காணொலி காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.

இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.

அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன்.

உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை இராணுவம் உத்தரவிடுகிறது.

வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது.

நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள்.

இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றால் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன.

கைதிகளைப் போல் அவர்கள் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றவாளிகளா?... இதுபோன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது?...

குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக் கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக் கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?

இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் - தடுப்பு வதை முகாம்களை [Concentration Camps] நடத்தி, யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த - ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது.

இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை - மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை - இரவோடு இரவாக, இலங்கை இராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர். வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், "எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்'' என்று மன்றாடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது.

இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிக கொடுமையான திட்டம் இது. "முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம் குருஜி அவர்கள் கேட்டதற்கு, "இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

"இரண்டு மாதங்கள் கழித்தாவது அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, "அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்கு பிறகு தான் அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல் கண்ணிவெடிகள் அங்கே இருந்தால், சிங்களவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?... அந்த கண்ணிவெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா?... சிங்களவர்கள் நடந்தால் வெடிக்காதா?...

இலங்கை இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களிலேயே கைதிகளைப் போல் - அடிமைகளைப் போல் - அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது.

உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது.

இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.

இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.

இந்திய அரசின் இரு தூதுவர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்?... இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது?... எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது; இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.

இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

குறிப்பு: காட்சிகளைக் "காண்"பதையும், "ஒலி"களைக் கேட்பதையுமே Video என்ற ஆங்கில வார்த்தை அர்த்தப்படுத்துகின்றது என்பதால் Video என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் சொல்லாக இனிவரும் காலத்தில் "காணொலி" என்ற தமிழ் வார்த்தையை 'புதினம்' பயன்படுத்தும்.

புதினம்

உலகத்தமிழர்கள் பலரின் பாராட்டுக்கள் அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு

திகதி: 26.04.2009 // தமிழீழம் // [சோழன்]

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண தனி ஈழம்தான் ஒரேவழி. அதைநான் நிச்சயம் செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா அவர்கள் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், உலகத்தமிழர்கள் பலரின் பாராட்டுக்கள் அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு பறந்தவண்ணம் உள்ளன.

உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் அவருக்கு தமிழ் மக்கள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைப்பதாக தெரியவந்துள்ளது.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொற்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண தனி ஈழம்தான் ஒரேவழி. அதைநான் நிச்சயம் செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

தமிழ்வின்

இக்கட்டன இந் நேரத்தில் துணிவுடன் கருத்து வெளியிட்டமைக்கு நன்றிகள் அம்மணி ஆயினும் ...?

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொற்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.- அப்படி இல்லாவிட்டால் மறுபடியும் பழைய குருடி கதவைத்திறடி என்ற கதைதான அம்மணி?

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே ஆதரவாக பேசாத மகாராணி(?) திருவாய் மலர்ந்தருளுது சுதந்திர ஈழம்தான் தீர்வென்று ஆனால் கவிதையிலேயே எப்போதும் பேசும் பரதேசிக்கு என்னாயிற்று? நம்ப முடியவில்லை!

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு...! மக்கள் தெளிவாக 'போனியா'வுக்கும், 'தெருத்தவளை'க்கும் இம்முறை சரியான ஆப்படிக்க வேண்டும். இத்தேர்தலுக்காவே நான் தமிழகம் சென்று, என் வாக்குகளை ஈழ ஆதரவு கட்சிக்கு மட்டுமே பதிப்பேன்.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நாடகம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடப்பது ஹிட்லர் ஆட்சி - தனி தமிழ் ஈழமே இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு - ஜெ.

ஞாயிற்றுக்கிழமை

ஈரோடு: இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு ஏற்பட, தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி தமிழ் ஈழம் அமைப்பது மட்டுமே. அதிமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்தால் இந்த தனி தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக கூறியுள்ளார்.

ஈரோட்டில் நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது ஜெயலலிதா இவ்வாறு அறிவித்தார்.

ஜெயலலிதாவின் உரை...

வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர்.

இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கின்றனர்.

எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் நாள் நான் சென்னை வந்த போது, ரவிசங்கர் அவர்கள் என்னை சந்தித்தார்.

அப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை எனக்கு திரையிட்டு காண்பித்தார்.

அதிர்ச்சி அடைந்தேன்...

அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன்.

இதுவரை தெரியாத பல உண்மைகளை, வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரைக் காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது

தெரிகிறது.

மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள் தமிழர்கள்..

இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.

அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன்.

உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை ராணுவம் உத்தரவிடுகிறது.

வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது.

நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள்.

இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டன...

வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றால் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன.

கைதிகளைப் போல் அவர்கள் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றவாளிகளா?... இதுபோன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது?...

குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக் கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக் கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?

ஹிடலர் ஆட்சி நடக்கிறது...

இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் - தடுப்பு வதை முகாம்களை நடத்தி, யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த - ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது.

இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை - மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை - இரவோடு இரவாக, இலங்கை ராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர்.

வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், "எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்'' என்று மன்றாடி இருக்கிறார்கள்.

சிங்களர்களை குடியமர்த்துகிறது...

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது.

இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிக கொடுமையான திட்டம் இது. "முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம் குருஜி அவர்கள் கேட்டதற்கு, "இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

"இரண்டு மாதங்கள் கழித்தாவது அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, "அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்கு பிறகு தான் அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல் கண்ணி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?... அந்த கண்ணிவெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா?... சிங்களவர்கள் நடந்தால் வெடிக்காதா?...

இலங்கை ராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களிலேயே கைதிகளைப் போல் - அடிமைகளைப் போல் - அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது.

அதிகாரத் தீர்வு கண்துடைப்பு வேலை...

உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது.

இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.

இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.

மேனன், நாராயணன் பயணத்தால் ஒரு பயனும் இல்லை...

இந்திய அரசின் இரு தூதுவர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்?... இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது?... எதுவுமே இல்லை.

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது; இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

தனி ஈழம் ஒன்றுதான் ஒரே தீர்வு...

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.

இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

இதுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தனி தமிழ் ஈழ மாநிலம் அமைக்க அதிமுக பாடுபடும் என்று கூறி வந்தார் ஜெயலலிதா. ஆனால் முதல் முறையாக தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், உருவாக்கியே தீரும் என்பது மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா வாழ்க!! :lol:

அம்மா வாழ்க :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை விட கலைஞருக்கு செக் வைக்க முடியாது. இது அரசியல் காய்நகர்த்தல் தான்.

ஆனால்...

இந்த பேச்சுக்காக ஜெ இற்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் தமிழக மக்களின் தமிழீழ தனிநாட்டிற்கான ஆதரவாக கணிக்கப்படும். தமிழகத்தின் அங்கீகாரமாக கணிக்கப்படும். ஒருவேளை தேர்தலின் பிறகு ஜெ அட.. தமிழீழத்திற்கு தமிழகத்தில் இத்தனை ஆதரவா என உணர்ந்து அதை ஒரு சீரியசான விடயமாக / அல்லது தொடர்ச்சியான தனது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுமாகையால் அந்த விருப்பங்களை நிறைவேற்ற முயலலாம்.

கலைஞரால் இப்படி அறிவிக்க முடியாதபடி.. அவர் காங்கிரசிடம் சிக்குண்டு கிடக்கிறார்.

ஒரு தமிழினத்தலைவர் நம் கண்முன்னாலேயே சுப்பிரமணிய சாமிக்கு ஒப்பான ஜோக்கர் நிலைக்கு தரமிறங்கியது பரிதாபத்திற்குரியது..

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் உரை :

http://www.esnips.com/doc/b43e13a4-7c6a-4b...alalitha-Speech.

இது தேர்தல் ஒட்டுகாகவா அல்லது உண்மையா என்று தெரியவில்லை .. பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்

அப்படியொரு பேச்சு தூள் பறக்குது தாயே

அம்மா தாயே நீ 100 வருசம் நல்லா இருப்பாய்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. இதைத்தான் எமது மக்களும் எதிர் பார்த்தார்கள். ஜெயலலிதாவின் உரையில் உறுதி காணப்படுகிறது, ஈழம் என்ற பதம் அவர் வாயில் இருந்து வந்துள்ளது.

நாங்கள், தமிழ் ஈழ மக்கள், எங்கள் தமிழக உறவுகளின் தேர்தல் சம்பந்தமான கடுமையான விமர்சனங்களை தவிர்ப்பது நன்று.

நிச்சயம் தலைவரின் தீர்க்கதரிசனம் என்றுமே பிழைக்காது. தமிழ் ஈழம் வெல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ பயமாய்க்கிடக்கு :lol:

தாத்தா நீங்கள் ஏன் பயபிடுறிங்கள் ..இவா குள்ள நரிய மாரி இல்லை :( .. சொன்னா சொன்னது தான்..

இவா பொய் பேசினது இல்லை.. ரொம்ம நேர்மையானவா :) ..

நீ சொல்வது உண்மையானால், நான் அன்றாடும் வணங்கும் அம்பிகையாகவே உன்னை மனதில் நிறுத்துவேன்!

அரசியல்வாதிகளால் ஏற்படுத்த முடியாத மாற்றங்களை ஆன்மீகவாதிகளால் ஏற்படுத்த முடியும்

என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சொன்னதை எண்ணிப்பார்க்கிறேன்!

சொன்னதை செய்திருக்கிறார்!

தனித்தமிழீழம் பற்றிய ஜெயாவின் இன்றைய நிலை நிலைத்து, மேலும் உரம் பெற காலம் அவருக்கு துணையிருக்கட்டும்!

Edited by vettri-vel

அம்மாவை ( ஐயோ, ஐயோ ) தூக்கிக் காவடி எடுக்கத் தேவையில்லை. எப்படியெல்லாமோ இரந்தவர்கள் இன்று இப்படி மாறியுள்ள நிலையில் இந்த செயல்லலிதா இதை தனக்கச் சாதகமாக்கியிருப்பது அவரது அரசியல் சாணக்கியம். மற்றய தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.

அமைதிப் பேச்சுக்கள் நடந்த காலங்களில் செயல்லலிதா பேசியவற்றை மறக்க முடியாது.

நீங்கள் சொல்வது என் மனதிலும் நிழலாடத்தான் செய்கிறது.

ஆனால் எப்படி கூட்டிக் கழித்து பார்த்தாலும் ஜெயாவின் இன்றைய அறிக்கை தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பு!

இது வரவேற்கப்பட வேண்டியது.

காங்கிரஸ் சில தொகுதிகளிலாவது கட்டுப்பணத்தை இழக்கும் என்று இனி நம்பலாம்!!!

Edited by vettri-vel

காலம் பதில் சொல்லும்

அவரின் மனமாற்றம் நிரந்தராமாக இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை ( ஐயோ, ஐயோ ) தூக்கிக் காவடி எடுக்கத் தேவையில்லை. எப்படியெல்லாமோ இரந்தவர்கள் இன்று இப்படி மாறியுள்ள நிலையில் இந்த செயல்லலிதா இதை தனக்கச் சாதகமாக்கியிருப்பது அவரது அரசியல் சாணக்கியம். மற்றய தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.

அமைதிப் பேச்சுக்கள் நடந்த காலங்களில் செயல்லலிதா பேசியவற்றை மறக்க முடியாது.

இறைவன் அங்கில்

அப்ப இருந்த அம்மா இல்லை இவா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.