Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவீடன் தூதுவராலயம் கொழும்பில் மூடப்பட்டது

Featured Replies

சுவிடன் அரசு தனது துதரை திரும்ப அழைத்துள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு அனைத்து அரசுகளையும் தங்கள் துதரை திரும்ப அழைக்க கொரலாம

http://www.radionetherlands.nl/news/intern...-Lanka-recalled

Sweden_Colombo_TamilNational.jpg

சுவீடன் எம்பசி கொழும்பில் மூடப்பட்டது.விசா மறுக்கபட்டத்தை அடுத்து சுவீடன் திடீர் முடிவு

Source Link: http://tamilnational.com/news-flash/824-sw...-recalled-.html

courtesy:TamilNational.Com

ஆகா.. :( பொறி.... :o போறி...... :(

அப்பாடி இப்பத்தான் இன்று முடிந்திருக்கு...

இன்னும் பல தூரம் போகவேண்டியிருக்கு, அதைவிட பெரிசு சுவீடன் மனம் மாறமல் இருப்பதுதான்.

சுவீடன் வாழ் தமிச்சாதியே தொடர்ந்து போராடுவீர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முடிவு

சுவீடன் வெளிநாட்டு அமைச்சரை காரணம் கூறாது நிராகரித்து போட்டு சொல்லிச்சினாமாம் உங்களை இப்ப வேண்டாம் வேறு ஒரு முறை அழைக்கின்றோம் எண்று...

அதுக்கு AFP க்கு கருத்து சொன்ன அவர் நான் இதுக்கு பிறகு அங்கு போகும் முடிவில் இல்லை எண்று...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல மாற்றம் :o ,இனிமல் தான் சொறிலங்காவுக்கு பின்விளைவுகள் தெரியும் :(

பெரிய பெரிய இழப்புகளுக்கிடையே சிறிய சிறிய நற்செய்திகள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி ஒவ்வொருவராக மூடிக்கொண்டு வெளிக்கிட்டா நல்லாத்தானிருக்கும். அடுத்தது யார் நோர்வேயோ தெரியேல்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்கு தனக்கு நடக்கும் போது தான் சர்வதேசம் புரிந்துணர்வுக்கு வருகின்றது. கொன்னா கேட்க மாட்டார்கள், இனித் தெளிவடைவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனை அரவணைச்சவை.. சுவீடனை ஏன் பகைச்சவை. பிச்சை வாங்க வருவினம் தானே.. அப்ப பார்த்துக்குவோம் சுவீடன். இப்ப வெளியேறுங்கோ. நல்ல முடிவு. மானமுள்ள எந்த மனிசனும் சிங்களவனோட சேர்ந்து வாழ முடியாது...! சில மானமிழந்த விலங்குகளை விட..!

புலத்தில் எங்களின் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அந்ததந்த நாடுகளை அசைக்கத் தொடங்கியுள்ளது!

சோர்வடைய வேண்டாம் உறவுகளே! தொடர்ந்து உறுதியுடன் களத்தில் இறங்கி போராடுவோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகச்சரியாகச் சொன்னீங்கள் நெடுக்ஸ் அண்ணை.

மானமிழந்த ஈனப்பிறவிகளுக்கும் மகிந்த & கோவிற்கும் தான் கூட்டணி சரியாக வரும்

  • கருத்துக்கள உறவுகள்

மான ரோசம் உள்ளவர்கள் விலக்கி கொண்டார்கள்........மற்ற நாடுகளுக்கும் இது விளங்க வேண்டும்

சுவீடன் தான் அடுத்த EU president(Jul-Dec)ஆக வரப்போகிறவர்கள் சரியான முறையில் அணுகி தடையை நீக்க எல்லா நாடுகளிலும் முயற்சி செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ், பிரெஞ்சு அமைச்சர்களுக்கு அனுமதி சுவீடிஷ் அமைச்சரின் வருகையை விரும்பவில்லை

[28 - April - 2009] [Font Size - A - A - A]

* நாசூக்காக அரசு நிராகரிப்பு

டிட்டோ குகன்

பிரிட்டிஷ், பிரான்ஸ் மற்றும் சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் நாளை புதன்கிழமை இலங்கை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சுவீடனுடன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாமெனக் கூறி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வருவதை இலங்கை அர சாங்கம் நாசூக்காக மறுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரான டேவிட் மிலிபான்ட் நேற்று திங்கட்கிழமை இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது போகொல்லாகம இந்த மறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் , பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கௌச்னர் மற்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சார்ல் பில்ட்ற் ஆகியோர் நாளை புதன்கிழமை இலங்கை வரவிருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் மின்னஞ்சல் மூலம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே நேற்று பிரிட்டிஷ் அமைச்சர் மிலிபாண்ட் அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இந்தத் தொலைபேசி உரையாடலின் போது சுவீடன் வெளிவிவகார அமைச்சர் பில்ட்ற் இலங்கை வருவதில் இலங்கை அரசாங்கத்தின் விருப்பமின்மையை அமைச்சர் போகொல்லாகம வெளியிட்டிருப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

சுவீடன் அமைச்சருக்கு இலங்கை அரசாங்கத்தால் எந்த அழைப்பும் விடுக்கப்பட்டிருக்காததுடன் அவர்களும் ஸ்டொக்கோமிலுள்ள இலங்கை தூதரகத்திடம் இலங்கை வர விருப்பம் தெரிவித்து எந்த விண்ணப்பமும் செய்திருக்கவில்லையென்றும் ரோகித போகொல்லாகம பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளார். இதேநேரம், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருவதற்கு ஸ்டொக்கோமிலுள்ள இலங்கை தூதரகத்தில் விண்ணப்பித்த போது அதை அங்குள்ள இலங்கைத் தூதுவர் வரவேற்றதாக பிரிட்டிஷ் அமைச்சர் மிலிபாண்ட் கூறவே அது குறித்து உடனடியாக ஸ்டொக்கோமிலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லையென அங்குள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்து விட்டதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் கூறின.

அது மட்டுமல்லாது சுவீடன் அமைச்சரை இலங்கை அழைத்து வர பிரிட்டிஷ் அமைச்சர் மிலிபாண்ட் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத்துவம் அடுத்ததாக சுவீடன் வசம் செல்லவிருப்பதை காரணமாக சுட்டிக்காட்ட அதற்கு பின்னொரு சந்தர்ப்பத்தில் இருதரப்பு கலந்துரையாடல்களை வைத்துக் கொள்ளலாமென கூறி சுவீடன் வெளிவிவகார அமைச்சர் புதன்கிழமை இலங்கை வருவது தொடர்பான விருப்பமின்மையை அமைச்சர் ரோகித போகொல்லாகம நாசூக்காக வெளியிட்டு விட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

http://www.thinakkural.com/news/2009/4/28/...s_page72430.htm

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான , வரவேற்கத்தக்க முடிவு . இந்நேரம் சுவீடன் உடனும் , சுவீடனின் நட்பு நாடுகள் உடனும் மிக நெருங்கிய தொடர்புகளை தொடர்ந்து பேண தமிழர் தரப்பு முயற்சி எடுக்க வேண்டும் . அதற்கு பொறுப்பாக சிலரை நியமிப்பது மிக முக்கியம் . வெளி நாட்டு விடயங்களை கையாளும் போது மிக அவதானமாக நடந்து கொண்டால் எமது வெற்றி மிக அருகில் கிட்டும் . சுவீடனை சமாளிக்க சிங்கள தரப்பு தனது நட்புநாடுகள் மூலம் முயற்சிக்கும் என்பதனை மறக்க வேண்டாம் .

Send a note of thanks:

a) Go here: http://www.regeringen.se/sb/d/7505

On the right click at "email to Carl Bildt, via the senior registry clerk"

Subject: Sweden recalls its Charge d'Affaires in Sri Lanka for consultations

Message1: Thanks for recalling Your Charge d'Affaires in Sri Lanka. We need to impose sanctions and cancel GSP Plus.

Message2: Please do more to save Tamils from Sri Lanka's Genocide!

Message3: Thanks for understanding Sri Lanka's real motives, genocide of Tamils without witnesses.

b) Irena Busic (use the form) Click here: http://www.regeringen.se/sb/d/11858/a/125399

Subject: Sweden recalls its Charge d'Affaires in Sri Lanka for consultations

Message1: Thanks for recalling Your Charge d'Affaires in Sri Lanka. We need to impose sanctions and cancel GSP Plus.

Message2: Please do more to save Tamils from Sri Lanka's Genocide!

Message3: Thanks for understanding Sri Lanka's real motives, genocide of Tamils without witnesses.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு

உப்பிடியே எல்லாத்தையும் மூடினால் தமிழர் படுகொலையை வெளியுலகுக்கு போகாது என்ற நிணைப்போ??? :rolleyes:

Edited by மனிதன்

இந்தியா எப்போது மூடப்போகிறார்களாம்?

வெளிவிவகார அமைச்சருக்கு அனுமதி மறுப்பின் எதிரொலி: சிறிலங்காவுக்கான தூதுவரை திருப்பியழைத்தது சுவீடன்

சுவீடனின் வெளிவிவகார அமைச்சர் சார்ள் பில்டிற் கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளதற்கான பதில் நடவடிக்கையாக சிறிலங்காவுக்கான தனது தூதுவரை சுவீடன் அவசரமாகத் திருப்பி அழைத்துள்ளது.

"சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கான அனுமதியை மறுத்த சிறிலங்காவின் செற்பாடு மிகவும் மோசமான ஒரு தவறு" எனச் சுட்டிக்காட்டியுள்ள செக் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கார்ல் சுவர்சென்போர்க், "இது ஐரோப்பாவில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதுடன், சிறிலங்கா அரசுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உறவுகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை செக் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தற்போது வகித்துவரும் அதேவேளையில், அவருக்கு அடுத்ததாக அந்தத் தலைமைப் பதவி சுவீடன் வெளிவிவகார அமைச்சரைச் சென்றடையவிருக்கின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

போர் நடைபெறும் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக சிறிலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மனிதாபிமான அடிப்படையிலான போர் நிறுத்தம் ஒன்று அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திவரும் நிலையில் அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் நோக்கத்துடனேயே மூன்று வெளிவிவகார அமைச்சர்களும் தமது கொழும்புக்கான பயணத்தைத் திட்டமிட்டிருந்தனர்.

சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவிட்டதால், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டுமே நாளை புதன்கிழமை கொழும்பு செல்லவிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் பயணத்துக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு இராஜதந்திர மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

லக்ஸம்பேர்க்கில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட செக் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கார்ல் சுவர்சென்பேர்க், சுவீடன் வெளிவிவகார அமைச்சரை இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதில் ஒரு நிபுணர் என வர்ணித்தார்.

"ஸ்ரொக்ஹோமுக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்தவரையில் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு நல்லதல்ல" என இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சுவீடனின் வெளிவிவகார அமைச்சர் சார்ள் பில்டிற் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது முன்னர் குறிப்பிட்டார். "என்னை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா அதிகாரிகள் திடீரெனத் தெரிவித்தார்கள். இதற்காக எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இது மிகவும் ஆச்சரியாகமாக இருக்கின்றது" எனவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளையில் இவ்விவகாரம் தொடர்பாக இன்று செவ்வாய்கிழமை கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள், சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கான அனுமதியை தாம் மறுக்கவில்லை எனத் தெரிவித்திருக்கின்றனர்.

மே மாதத்தில் தனக்கு வசதியான ஒரு நாளில் அவர் வரலாம் எனவும் அவருடன் தொலைபேசியில் உரையாடிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அதற்கான அழைப்பை விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், இவ்வாரம் பிரத்தானிய, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதால் சுவீடன் வெளிவிவகார அமைச்சரை வரவேற்பதற்கு தாம் தயாராகவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

http://www.puthinam.com/

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய எதிர்பார்ப்பு உதுதானே!

சிங்களவனின் வாலில் தொங்கிக்கொண்டிருக்கம் வரையிலும் ஒன்றும் நடவாது. ஏதாவது தமிழருக்குச் சாதகமாக சொல்ல முற்பட்டால்தான் மூடுவிழா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவீடன் தூதுவரை ஆலோசனைக்காக அழைத்துள்ளதாக தான் சுவீடன் அமைச்சரின் கூற்று உள்ளது. ஆலோசனை முடிந்த பின் ??

No, I am recalling my ambassador for consultation,'

http://www.straitstimes.com/Breaking%2BNew...ory_369656.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.