Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரம் செல்வி ஜெயலலிதா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ! நான் ! நான் !,“ என மக்களுக்குத் தமது மன உறுதியைப் பாட்டால் உணர்வுகளையும் இலட்சியங்களையும் மக்களின் மனதில் ஆழப் பதிய வைத்து நீங்காத இடம் பிடித்தவர் புரட்சித் தலைவர் எம். ஜீ. ஆர்.ஆவர். அவருடைய அரசியல் வாரிசாகத் தன்னைப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நிலை நிறுத்திச் சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்பவர்தான் செல்வி ஜெயலலிதா.

எம்.ஜீ.ஆரின் பாடல் வரிகளை வரிக்கு வரியாக சாதனை படைக்கும் சாமர்த்தியம்

ஆய்வு:பத்மா

படைத்தவராக செல்வி ஜெயலலிதா காணப்படுகிறார். நிறைந்த மனத் திடமும் மதி நுட்பமும் கொண்டு செயல்படும் திறமை படைத்தவர் செல்வி ஜெயலலிதா. அவர் எதையும் இலேசில் நினைத்து விடமாட்டார். ஆனால் நினைத்து விட்டாலோ எதனையும் நிறை வேற்றாது விடவும் மாட்டார். இதுவே அவரது சுபாவமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. காழ்ப் புணர்வுகளுக்கு அப்பால் அவரது அரசியல் வாழ்க்கையைப் பார்த்தால் தன்னந் தனிப் பெண்மணியாக பலமுனைகளிலும் இருந்து பலத்த சோதனைகளை எதிர் நோக்கி அவற்றை எல்லாம் முறியடித்துச் சாதனை படைத்தவர் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

அதுவும் பல வருட வயது முதிர்ச்சியும் அரசியல் அனுபவங்களும் நிறைந்த அரசியல் வித்தகர் சாணக்கியர் எனப் பெயர் பெற்ற கலைஞரை எம்.ஜீ.ஆராலும் வை.கோவாலும் எதுவும் செய்ய முடியாமல் போன நிலையில் இன்றுவரை கலைஞருக்குக் கடுக்காய்ப் பேதி கொடுக்கும் திறமை பெற்றவராக செல்வி ஜெயலலிதா ஒளிவீசுகிறார். ஜேயலலிதா முதல்வராக இருந்த நாட்களில் கலைஞர் சட்டசபைக்கே செல்லாது தவிர்த்து வந்த வரலாறு எவரும் மறந்து விடக் கூடியதல்ல. கலைஞர் சிங்கம் என்றால் அவர் சிங்கிளாகவே சட்டசபையில் சந்தித்து இருக்க வேண்டாமா?

இன்றுவரை உலகத் தமிழரின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்த்துப் பாராட்டப் பட்ட கலைஞர் கருணாநிதி இப்போ எரி நட்சத்திரமாக எரிந்து கருகிச் சாம்பலாகி விழுந்து கிடக்கிறார். அவர் விழுந்தது உலகத் தமிழ் மக்களின் இதய வானில் இருந்து மட்டும் அல்ல, ஈழத் தமிழர் வரலாற்றுப் பதிவிலிருந்தும் விழுந்து முற்று முழுதாகவே மறைந்து விட்டார். அவரைத் தமிழ் உலகம் வெறும் இலக்கியவாதியாக மட்டும் நினைவு கூருமே அல்லாது ஒரு இலட்சியவாதியாகப் பார்க்;கப் பட முடியாத அளவுக்கு அவரது நிலைமை தாழ்ந்து விட்டது.

வள்ளுவர் கோட்டமும் வள்ளுவருக்குச் சிலையும் திருக் குறளுக்கு உரையும் எழுதிய கலைஞருக்கு வள்ளுவரின் - ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற குறளின் அர்த்தம் தெரிந்து வாழ மட்டும் கலைஞருக்கு முடியாமற் போனது அவரது இரட்டை வாழ்க்கை முறைதான் காரணம் என நினைக்கத் தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் ஊருக்குச் சாத்திரம் சொன்ன பல்லி கூழுக்குள் விழுந்து அவிஞ்ச கதையாக உள்ளது.

காலம் நேரம் கருதிக் கிடைத்த சந்தர்ப்பத்தை கையில் எடுத்துக் கொண்டதன் மூலம் இன்று செல்வி ஜெயலலிதா தமிழகத் தமிழரின் இதயத்தில் மட்டும் அல்ல ஈழத் தமிழரின், ஏன் உலகத் தமிழினத்தின் இதயத்திலும் நம்பிக்கை நட்சத்திரமாக எழுந்து நிற்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஈழத் தமிழர் பற்றியும் தொடக்க காலத்தில் இருந்தே பல ஆணித்தரமான கருத்துக்களை தெரிவித்து வந்தவர்தான் இந்த ஜெயலலிதா.

இடையிலே துக்ளக் சோ ராமசாமியும் சுப்பிரமணியசுவாமியும் ஏற்படுத்திக் கொண்ட சகவாசமும் மற்றும் உளவுத் துறைச் சதிகளும் அவரைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராகவும் ஈழத் தமிழர் நலனுக்குப் பாதகமானவராகவும் செயற்பட வைத்தன என்பதே நடுநிலையாளரின் கருத்துக்களாக உள்ளன. பல முறை புலிகள் தம்மைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என பத்திரிகைகளில் அறிக்கைகளும் அதற்கென அதி சிறப்புப் பாதுகாப்புப் படையும் கேட்டு பிரபல்யம் தேடியவர்.

இத்தனைக்கும் புலிகள் அவரைச் சீண்டவோ பதில் அறிக்கை விடுத்துச் சேற்றைப் பூசிக் கொள்ளவோ முன் வந்தது கிடையாது. புலிகளின் இந்த அமைதி, புலிகள் பற்றிய தெளிவான புரிந்துணர்வை ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தி இருந்தாலும் நாம் ஆச்சரியப் படத் தேவையில்லை

அண்மைக் காலம் வரைக்கும் ஊரோடு ஒத்து ஓடி ஈழத் தமிழர் விவகாரத்தை தமது அரசியல் துருப்புச் சீட்டாக மட்டுமே பயன் படுத்தி வந்தவர். கலைஞரைச் சினிமாத் துறையில் உள்ள தமிழ் உணர்வாளர்களான சீமான, அமீர், பாரதிராஜா ஆகியோருக்கு எதிராகச் செயற்பட வைத்து அவரைப் பெரும் இக்கட்டுக்குள் மாட்டி மகிழ்ந்தவர். எனவே இப்போது அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு பலருக்கும் அவரைப் பற்றிய சந்தேகம் பலமாகவே ஏற்படும் வாய்ப்புகளே அதிகம்.

ஆனாலும் அவரது இந்த நிலைப்பாட்டில் படிப்படியாக மாறுதல் ஏற்பட்டு வந்ததை,“ இலங்கையில் பாதுகாப்பு வலையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை இராணுவம் விரட்டி அடித்துக் கொல்கிறது’ என 21. ஏப்பிரிலில் விடுத்த அறிக்கை அவரது ஈழத் தமிழர்கள் பற்றிய பார்வையில் ஏற்பட்ட பாரிய மாற்றத்தைக் காட்டுகிறது.

அதே தினத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அறிக்கையில், “விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம் அதன் தலைவர் போர்க் குற்றவாளி என அறிக்கை விட்டுள்ளார். இந்த இரண்டு அறிக்கைகளையும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நாளில் இரு துருவங்களில் இருந்தும் நேரெதிர்க் கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாய் உள்ளன்.

23ம் திகதி பத்திரிகைகளுக்குப் பேட்டி வழங்கிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி இலங்கையில் தாம் கண்டவற்iறையும் மகிந்த ராஜபக்ஷவின் பதில்களையும் விமர்சித்து இப்படிக் கூறுகிறார்- “பிச்சைக் காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என ஈழத் தமிழரின் சோகத்தை, தாம் நேரில் கண்ட அவலத்தை பட்டவர்த்தனமாக வெளி உலகுக்கு படம் பிடித்துக் காட்டி அதற்கான அரசியல் களங்களையும் சாடியுள்ளார்;.

25 ஏப்பிரிலில் சேலத்தில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பகிரங்கமாகவே இலங்கைப் பிரச்சனைக்குத் தனி ஈழம் தான் நிரந்தரத் தீர்வு என்கிறார். இதனைப் பத்திரிகை அறிக்கையாக விடுக்காமல் தேர்தல் பிரகடனமாகவே தெரிவித்திருப்பது கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். அதே கூட்:டத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி தமக்குக் கூறிய வற்றையும் அவர் காண்பித்த ஒளித் தடடுகள் பற்றியும் முதன் முறையாக வெளிப் படுத்துகிறார்.

அதே தினத்தில் சென்னையில் ம.தி.மு.க. தாயக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்களைப் பார்த்துப் பேசிய ஜெயலலிதா அவர்களை உண்ணா விரதத்தைக் கைவிட்டு தமிழீழ மக்களுக்கான நிவாரண உதவிகளில் கவனம் செலுத்துவதே முக்கியமானது என அறிவுரையும் வழங்கியுள்ளார். இவற்றை நோக்கும் போது வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சுவாமி குருஜி ரவி சங்கரின் வருகையானது ஜெயாவில் புது மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது.

இன்று ஈழத் தமிழர் பற்றிய இவரது நிலைப்பாடு சீரும் சிறப்பும் சிந்தனைத் தெளிவும் கொண்டு விளங்கி வருவது தெரிகிறது. குருஜி ரவி சங்கரின் ஆன்மீக வாழ்க்கையும் அவரது உலகளாவிய செயற்பாடுகளும் கடந்த பல மாதங்களாக ஈழத் தமிழர் பற்றிய கரிசனை அவரது கவனத்தை ஈர்த்துள்ளமை அவரது பல ஊடக நேர்காணல்கள் மூலம் உலகம் அறிந்த ஒன்றாக உள்ளது. இலங்கையில் அமைதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சி அவருக்கு ஏமாற்றம் தந்ததோடு ஈழத் தமிழர் அழிவில் இந்தியாவின் வகிபாகம் நன்கு தெரிந்தவராக அவரது கருத்துக்கள் வெளிச்சம் போட்டுப் பிரதிபலிப்பதைக் காணலாம்.

மிகச் சரியாக அவர் அறிந்து வைத்துள்ள ஈழத் தமிழர் தொடர்பான உண்மைகள், அவர் நேரடியாகவே கண்டு அறிந்து கொண்ட தமிழ் மக்கள் படும் அவதி, அல்லல் துன்பம் என்பனவும் அவற்றுக்கு அவர் தீர்வு நாடிச் சென்ற இடமும் அவரின் மதி நுட்பத்தைக் காட்டுகிறது. இந்திய இலங்கை அரசுகளோ அல்லது இந்திய மத்திய அரசுக் கூட்டணிக் கட்சிகளோ எதுவித நல்ல பயனும் தரப் போவதில்லை என்பதை உணர்ந்தே குருஜி செல்வி ஜெயலலிதாவிடம் விசயத்தை ஒப்படைத்துள்ளார் என்பது உணரமுடிகிறது.

வெறும் ஒளிப் படப் பதிவுகளை மட்டும் அவர் செல்வி ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டுப் போனார் எனக் கருதிவிட முடியாது. மாறாக அவர் இதுவிடயத்தில் பெற்ற நெடுநாள் பட்டறிவும் படிப்பறிவும் சேர்த்தே ஒரு தீர்க்கமான முடிவுக்கான வழி முறைக்கு எடுத்துச் செல்லப் பணித்துள்ளார் எனக் கருத வேண்டியுள்ளது. குருஜியை வெறும் ஏமாற்றுக்காரச் சாமியாராக கருதிவிட முடியாது. உலக அளவில் அறியப்பட்ட சிந்தனைவாதி ஆன்மீகவாதி வாழும் கலை என்ற வாழ்வியலின் பிதாமகர்.

மக்கள் மத்தியில் சாந்தியும் சமாதானமும் பரப்பி அதன் மூலம் வாழும் கலை என்ற தத்துவத்தின் மூலம் மனித குலம் மகிழ்வுடன் வாழப் போதித்துவரும் பணியில் தம்மை ஈடு படுத்திக் கொண்டவர். எவரும் நினைத்தும் பார்த்திராத விதத்தில் ஈழத் தமிழர் அவலத்தை நேரில் கண்டும் கேட்டும் காட்சிப் பதிவு எடுத்தும் அநுமன் சஞ்சீவி மலையைப் பேர்த்து எடுத்து வந்தது போல் எடுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளார்.

குருஜி பற்ற வைத்த பொறி ஜெயலலிதாவை ஆழப் பற்றிக் கொழுந்து விட்டு எரிவதாகவே தெரிகிறது. தொடரும் சம்பவங்கள் ஜெயலலிதா தமது நிலைப் பாட்டில் மிக உறுதியாக உள்ளவராகக் காணப் படுகிறார். இதனை அவர் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் சிபாலின் அறிக்கைக்கு விடுத்த பதிலடியில் இலங்கைத் தமிழர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிள் தான் முன்வைத்துள்ள தனித் தமிழீழக் கொள்கை எவ்வாறு தேசக் குற்றமாகும் கேட்டடிருப்பதும் தமது பதிலிலும் தனித் தமிழீழக் கொள்கையை அழுத்திக் கூறி இருப்பதும் கவனிக்கத் தக்கது.

இவற்றைப் பார்க்கும் போது குருஜி வள்ளுவரின் குறள் வரிக்கு ஏற்ப ,“ இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்“ எனத் nதிரிவு செய்து இதனை முடிக்கும் ஆற்றலும் திறனும் செல்வி ஜெயலலிதாவிடம் உள்ளது எனக் கண்டு அவரிடம் ஒப்படைத்து இருப்பது போன்றே தெரிகிறது. இதற்கு முன்னோடியாக சிபாலுக்கும் காங்கிரஸ{க்கும் கொடுக்ப் பட்ட பதில் உள்ளது.

இனி கோத்தபாயா ராஜபக்ஷ இலங்கையில் தனி ஈழம் ஒருபோதும் அமைக்க முடியாது வேண்டுமானால் ஜெயலலிதா வேறு ஒரு நாட்டைத் தெரிவு செய்வதே புத்திசாலித்தனமானது எனக் கிண்டல் அடித்துள்ளார். அதற்கான பதில் அறிக்கை இதுவரை விடாது அமைதி காப்பது அவர் தமது நிதானத்தைக் கடைப்பிடிப்பது போல் தெரிகிறது. செல்வி ஜெயலலிதா விடுக்கின்ற தமது அறிக்கைகளில் கலைஞர் போன்று மழுப்பலோ, தளம்பலோ தாமதமோ இல்லாது தடாலடியாக நெத்தியடி கொடுப்பதே தமது தனிப் பாணியாக வைத்துள்ளார்.

மீண்டும் சோ ராமசாமியோ , சுப்பிரமணிய சுவாமியோ ஒட்டிக் கொள்ளாது விட்டால், தமிழர் வரலாற்றிலும் ஈழத் தமிழர் வரலாற்றிலும் புரட்சித் தலைவர் எம்.ஜீ.ஆர் போன்ற ஒரு முக்கிய வகிபாகம் செல்வி ஜெயலலிதாவுக்குக் காலம் வழங்கி இருப்பது போல் தெரிகிறது. அதற்குப் பலமாக தமிழகத் தமிழ் உணர்வாளர்களும் வாக்காளர்களும் உதவும் பட்சத்தில் தமிழரின் இருண்ட வரலாற்றில் மீண்டும் ஒளி தரும் நட்சத்திரமாக ஜெயலலிதா ஒளிவிடும் சாத்தியப்பாடு தெரிகிறது.

தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற்று மத்திய அரசில் முக்கிய வகிபாகம் இவருக்கு கிடைக்கும் பட்சத்தில் தளராத உறுதியுடன் செயற்படும் ஆற்றல் கொண்ட இவரால் இந்திய மத்திய அரசுக் கொள்கையை எமக்குச் சார்பாக செயற்படவைத்து தனித் தமிழ் ஈழ அரசை அங்கீகரிக்க வைத்து எமது வரலாற்றில் அழியாத இடம் பிடிப்பார் என உலகத் தமிழினம் பார்த்திருக்கிறது.

thank you swissmurasam.net

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:unsure: நாங்கள் ஏமாறவே பிறவி எடுத்தனாங்களோ என்று தோன்றுகிறது...!
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவைப் பற்றி அதிகம் புகழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது. புலிகளின் முன்னெடுப்பில் தமிழரின் ஆயுதப்போரை சொல்லிலும் செயலிலும் உணர்வுபூர்வமாகவும் ஆதரித்தாலன்றி ஜெயலலிதாவின் வார்த்தைகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தேர்தல்கால புளுகுப் பொட்டலமாகவே கவனிக்கப்படவேண்டும். ஜெயலலிதா அல்ல எவர் வந்தாலும் மத்திய அரசை எதிர்த்து தமது ஆட்சியைப் பறிகொடுக்கும் எந்தச் செயலையும் ஈழத்தமிழருக்குச் சார்பாக செய்யமுடியாது - செய்யவும்மாட்டார்கள். தமிழர்கள் ஏன் தொடர்ந்து இவ்வாறான வார்த்தைகளை நம்புகிறார்கள் என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

தேர்தல் கால மனமாற்றம் நம்பக்குடிய விடயம்அல்ல. இது nஐயலலிதாவுக்கு ஆதரவானவர் ஏழதினமாதிரி இருக்கு. ஆனால் உண்னையாக அவர் மனம்மாறி இருந்தால் மிக நல்ல விடயம். ஆனைத்து வழிகளிலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டிய நிலயில் நாம் உள்ளோம

எனது தனிப்பட்ட கருத்தின் படி nஐயலலிதாவுக்கும் சோனியாவுக்கும் இடையில் ஒத்துவராது அதனால் எமது பிரச்சினயை கையில் எடுத்து சோனியாவுக்கு எதிராக அரசியல் செய்கிரார்.

நமது பிரச்சனையே இது தான்! யாரையும் நம்ப மாட்டம். ஆனால் நம்ப வெளிக்கிட்டால் சந்தேகப் படவே மாட்டம். பிறகு ஆப்பு வைச்சவுடன் தான் முழுசுவம்! ஜெயலலிதாவை நம்புவதல்ல இங்கு பிரச்சனை. ஜெயலலிதா ஈழ தமிழ் மக்களின் பிரச்சனைக்கு சரியாக தீர்வு தமிழீழம் என்ற கூற்றே நாம் முதன்மை படுத்த வேண்டிய ஒன்று. ஜெயலலிதா இதை தேர்தல் வெற்றிக்கா சொல்லியிருந்தால் நாமும் ஏன் நம் தேசவிடுதலைக்கு இந்த அரசியலை பாவிக்க கூடாது! அரசியலில் இது அனைத்தும் சகஜம். சரியான நேரத்தில் சரியான காய்நகர்தலை செய்ய தவறினால் நமது இலட்சியமும் தவற வாயப்புள்ளது.

இந்த நேரத்தில் நாம் ஜெயலலிதாவை மட்டுமல்ல ஒரு பேயை கூட ஆதரிக்க வேண்டும் அது நம் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தால்! ஆனால் ஜெயலலிதா ஒரு பலமான தன் கருத்தை அறுதியிட்டு சொல்லும் ஒரு பெண்மணி என்பதை நாம் அனைவரும் அறிவோம். கருணாநிதிபோன்ற ஓரு நசுங்கல் கள்ளன் அல்ல!

இதே பெண் இந்திய படை காலத்தில் பிரபாகரன் மீது ஒரு கீறல் விழுந்தாலும் தமிழ்நாடு பற்றி எரியும் என்று சொன்னார். பிறகு ஒரு வருடத்தின் பிறகு பிரபாகரன் மிக பெரிய பயங்கரவாதி என்று பிரச்சாரம் செய்ததும் இந்த பெண் தான் (ராஜீவ் காந்தி கொல்லப்பட முன் நடந்த தேர்தலில்)

உண்மை! பிரபாகரன் மீது கீறல் விழுந்ததா? இல்லை! ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் உண்மை! இதுதான் அரசியல். இதற்குள் நாமும் புகுந்து உதைபந்தாட்டம் அடிக்க வேண்டும்!

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை.

உதாரணத்திற்கு அமரிக்கா!

அன்று புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள், அண்மையில் ஹிலரி அரசியல் தீவிரவதிகள் என்ற சொற்பதத்தையே பாவிக்கிறார்!

நாமும்ம இந்த ஆட்டத்தில் அவர்கிளின் போக்கில் ஆட வேண்டும்! பழைய கதைகளை விடுத்து புதிய சரித்திரம் படைக்க அரசியல் சாக்கடையில் நாமும் சதிராடியே ஆக வேண்டும்!

இதற்காக நான் வேண்டி நிற்பது செல்வி ஜெயலலிதான் தேர்தல் வெற்றி! ஹி ஹி ஹி.....

இனிவரும் காலம் பல கதைகளை சொல்லி.....ஹி

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புகழ்கின்ற இந்த வாய்கள், நாளை புறணி பாடவும் செய்யும். அதிகபட்ச புகழ்ச்சி ஏமாற்றத்தைத் தரக்கூடும். தலைவர் மட்டுமே எம் நம்பிக்கை... அவர் பாதையே எம் எழுச்சி....

Edited by தூயவன்

நமது பிரச்சனையே இது தான்! யாரையும் நம்ப மாட்டம். ஆனால் நம்ப வெளிக்கிட்டால் சந்தேகப் படவே மாட்டம். பிறகு ஆப்பு வைச்சவுடன் தான் முழுசுவம்! ஜெயலலிதாவை நம்புவதல்ல இங்கு பிரச்சனை. ஜெயலலிதா ஈழ தமிழ் மக்களின் பிரச்சனைக்கு சரியாக தீர்வு தமிழீழம் என்ற கூற்றே நாம் முதன்மை படுத்த வேண்டிய ஒன்று. ஜெயலலிதா இதை தேர்தல் வெற்றிக்கா சொல்லியிருந்தால் நாமும் ஏன் நம் தேசவிடுதலைக்கு இந்த அரசியலை பாவிக்க கூடாது! அரசியலில் இது அனைத்தும் சகஜம். சரியான நேரத்தில் சரியான காய்நகர்தலை செய்ய தவறினால் நமது இலட்சியமும் தவற வாயப்புள்ளது.

இந்த நேரத்தில் நாம் ஜெயலலிதாவை மட்டுமல்ல ஒரு பேயை கூட ஆதரிக்க வேண்டும் அது நம் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தால்! ஆனால் ஜெயலலிதா ஒரு பலமான தன் கருத்தை அறுதியிட்டு சொல்லும் ஒரு பெண்மணி என்பதை நாம் அனைவரும் அறிவோம். கருணாநிதிபோன்ற ஓரு நசுங்கல் கள்ளன் அல்ல!

உண்மை...

சிங்களம் கருணாவை தன் தேவைக்கு எப்படி பயன் படுத்திக் கொள்கின்றது என்று பாருங்கள். கருணா செய்த தமக்கெதிரான இராணுவ ரீதியிலான அனைத்தையும் (தற்காலிகமாகவேனும்) மறந்து விட்டு எவ்வாறு பயன் படுத்துகின்றனர் என்பதை பாருங்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் அவர்கள் செய்யும் தந்திரங்களில் இருந்து நாம் படிக்க வேண்டியது நிறைய இருக்கு

நாளை ஜெயா மீண்டும் மாறலாம், அதனை பார்த்து இன்று ஜெயா நிற்கும் அதே ஆதரவு இடத்திற்கு நாளை கருணாநிதியையோ அல்லது ஸ்டாலினோ மீண்டும் வரலாம். நாம் அவற்றை அதற்கேற்றால் போல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சும்மா சந்தேகிக்கப்பது எம் அரசியல் பலவீனத்தினைத் தான் காட்டுகின்றது

எல்லா மீனும் உறுமீன் தான்... மீன் உறுமீனா இல்லையா என்பது எம் பசியையும் ஆற்றில் இருக்கும் நீரையும் பொறுத்தது

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புகழ்கின்ற இந்த வாய்கள், நாள் புரணி பாடவும் செய்யும். அதிகபட்ச புகழ்ச்சி ஏமாற்றத்தைத் தரக்கூடும். தலைவர் மட்டுமே எம் நம்பிக்கை... அவர் பாதையே எம் எழுச்சி....

...................................................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புகழ்கின்ற இந்த வாய்கள், நாள் புரணி பாடவும் செய்யும். அதிகபட்ச புகழ்ச்சி ஏமாற்றத்தைத் தரக்கூடும். தலைவர் மட்டுமே எம் நம்பிக்கை... அவர் பாதையே எம் எழுச்சி....

நல்லாச் சொன்னீங்க..!

அப்புறம் பார்பர்னச்சி.. காலை வாராட்டிட்டாள் என்றும் ஒரு கூட்டம் பிளந்து கட்டும். இப்ப திராவிட முத்து.. கறுப்புக் கண்ணாடிக்கு விழுகிறது.. அப்ப அம்மாக்கு விழும். ஐயா... உயரத்துக்குப் போயிடுவார்.

எமக்கும் தமிழக வாக்காளர்களுக்கும் என்ன வித்தியாசம். எமக்குத் தேவை தமிழகத்தின் ஒன்றிணைந்த பலமும் செயற்பாடும் அன்றி.. வாய் வீச்சுக்கள் அல்ல..! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அம்மாவிற்கு 40 தொகுதிகளும் கிடைத்தால்,காங்கிரஸ்+அம்மா கூட்டு இடம்பெறாது என்பதற்கு இற்றைவரை ஏதாவது உறுதிமொழி தரப்பட்டதா...? இல்லையே..

அரசியலில் எதுவும் நடக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் கூட்டங்களில் சொல்லும் ஈழத்தமிழர் ஆதரவு வார்த்தைகளை ஜெயலலிதா ஏன் இதற்குமுன் ஒருபோதும் ஆணித்தரமாக கூறவில்லை. விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறேன் என்று ஜெயலலிதா மேடையில் சொன்னாலொழிய இவரின் வார்த்தைகளை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கப்போவதில்லை. தனித் தமிழீழத்துக்கு ஆதரவு ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை ஜெ. எடுத்திருப்பது எவ்வளவுக்கு சரியானது என்று யோசித்துப் பாருங்கள். இப்படியே நம்பி நம்பி ஏமார்ந்து போவது தான் தமிழரின் தலைவிதியா? ஜெயலலிதாவின் இன்றைய நிலைப்பாடு வரவேற்கவேண்டிய ஒரு விடயமேதவிர நம்ப வேண்டிய விடயமல்லை. அப்படி நீங்கள் நம்பி ஏமாந்தால் இன்னுமொரு தேர்தலுக்காக காத்திருக்கவேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகளுடன், நாங்களும் அரசியல்ரீதியாகத்தான் அணுகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: அரசியலில எல்லாம் சாதரணமப்பா!!!!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவே உங்களுக்கு வேலையா போச்சு

நம்புறது ஏமாறுறது

அதுதான் உள்ளூக்குள்ளை ஒரு சொடுக்கு வச்சிருக்கிறாவே

தனக்கு சார்பான ஒரு மத்திய அரசு அமைஞ்சா

நம்பலாம் அதுக்கு இப்பிடியா

யாருக்கு தெரியும் சிலவேளை எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கலாம்

தேர்தல் செய்யிற வேலையாவும் இருக்கலாம்

கவனமப்பா

இப்பிடி கண்மூடித்தனமா இருக்கக்கூடாது :icon_mrgreen::)

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு கொடுப்பதற்கு முன்னர் எம்மை நாமே கேட்கவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன,

இதுவரை காலமும் ஈழக்கோரிக்கையை நிராகரித்து(வெகு அண்மைக்காலம் வரையிலும், "ஈழத்தமிழர் என்று அழைக்க முடியாது, ஏனென்றால் ஈழம் என்ற நாடு இல்லையென்று ஆகிவிட்டதே"? என்று ஏகத்தாளத்துடன் கேட்டவர்) வந்தது ஏன்?

ஈழத்தில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவது கடந்த இரு வாரங்களாகத்தான் நடைபெறுகிறதா? ரவிஷங்கர் அவவுக்கு ஈழம் பற்றி இரு வாரங்களுக்கு முன் சொல்லிய பின்புதான் அப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவந்ததா? அதற்கு முன்னர் நடந்தது எல்லாம் என்ன? போர் நடக்கும் இடங்களில் மக்கள் இறப்பது சகஜம்தான் என்று கடந்த மாதம் கூடச் சொன்னாரே?

இருக்குமட்டும் இருந்துவிட்டு தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென ஈழத் தமிழர் மேல் பாசம் வழிந்தோடுவதற்குக் காரணம் என்ன?

ஒரு மாநில முதலமைச்சரால் மத்திய அரசிட கேட்கக் கூடிய கோரிக்கையின் அளவு என்ன? இவரால் இந்தியப்படையை ஈழத்திற்கு அனுப்ப முடியுமென்றால், ஏன் எம்.ஜி.அர் இனால் அப்படியொன்றைச் செய்து ஈழம் எடுத்துத் தர முடியவில்லை?

"நான் சொற்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், ஈழத்துக்கு இந்தியப்படை அனுப்புவேன்" என்கிறாரே, அப்படி அமையும் அரசு முடியாது என்றால் என்ன செய்வார்? ஈழத்தில் இதுவரையிலும் தமிழரைக் கொல்வதற்கே பழக்கப்பட்ட இந்தியப்படை, திடீரென்று, ஒரு மாத காலத்துக்குள் எப்படி தமிழீழம் அமைக்கப் போராடப் போகிறது?

சரி, இது எல்லாவற்றையும் விடுங்கள், இவர் இன்று சொல்வதையே தேர்தல் முடிந்தபின்னரும் செய்வார் என்பது என்ன நிச்சயம்? அப்படி செய்யாதவிடத்து இவரை அப்படிச் செய்யுமாறு பணியவைக்க எம்மிடமுள்ள பிடியென்ன? அல்லது இவரும் கருணாநிதி போலவே, மத்திய அரசு ஈழத் தமிழர் மேல் அக்கறை கொண்டுள்ளது, இலங்கையுடன் அவர்களின் நலன் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறோம், அது அவர்களின் இறையாண்மையை மீறும் செயல், போர் நிறுத்தம் வரப்போகிறது...என்று கதை விட்டால் மீண்டும் கருணாநிதியிடம் போகப் போகிறோமா?

இவை எவற்றுக்குமே எம்மிடம் பதிலில்லை. ஆனால் ஜெயாவை நம்பவேண்டும், அப்படித்தானே? குறைந்தபட்சம் விடுதலைப் புலிகள் மேலுள்ள தடையையாவது நீக்கச் சொல்கிறாரா? அப்போதாவது நம்பலாம். இன்னும், இலங்கைத்தமிழர், இலங்கைத் தமிழர் என்றுதானே விழிக்கிறார்?

கருணாநிதி பதவியிலிருந்து தூக்கியெறியப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவரின் இடத்தை நிரப்புவது ஜெயாதான் என்று எம்மில் சிலர் விரும்புவது உண்மையிலேயே எமக்கு நண்மைதருமா என்று சிந்தித்துப் பார்க்காமல்தான் என்று நினைக்கிறேன்.

கொலைகாரக் காங்கிரஸுடன் சேர்ந்து இனக்கொலையில் பங்குபற்றியதால் கருணாநிதியின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்து கொண்டிருப்பது ரகசியமல்ல. தமிழக மக்களின் உணர்ச்சிக் கொப்பளிப்புகளுக்கு முன்னால் அவரின் கோட்டை நொருங்கிக்கொண்டிருக்கிறது. ஜெயா இப்போது செய்வதெல்லாம், காங்கிரஸ் - தி.மு.க சவப்பெட்டியின் இறுதி ஆணியை அடிப்பதுதான். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இவர்களது தோல்வியை படுதோல்வியாக்கப் பார்க்கிறார். அவ்வளவுதான். இதற்கு அவர் கைய்யிலெடுத்த ஆயுதம், ஈழத்தமிழர் துயரம், ஏனென்றால் அதுதான் இன்று தமிழகத்தில் உணர்ச்சியான கருப்பொருளாக இருக்கிறது.

வேண்டுமென்றால். இந்த கொலைகார காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப ஜெயா எடுக்கும் முயற்சிக்கு வரவேற்ப்பளிப்போம். ஆனால் அவரே ஈழம் எடுத்துத் தருவார் என்று நினைப்பதெல்லாம், இலவு காத்த கிளிபோல் நாமும் இருக்க வேண்டும் என்று சொல்வதுபோல எனக்குப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நாங்கள் எல்லோ ஓட்டுப்போடப்போற மாதிரிஎல்லாரும் கதைக்கிறோம்.30 வருசமா தனிய போராடினோம்.பல இரானுவ வெற்றிகளை பெற்றோம்.ஆனால் இன்று நிலமை என்ன.இன்று ஏன் நாம் விதிகளில் இறங்கி போராடுகிறோம்.யாராவது ஆதரவு தரமாட்டார்களா,யாராவது அங்கீகரக்கமாட்டார்காளா என்றுதானே.திரும்பிப்பெற முடியாத எவளவோ நாம் இழந்துவிட்டோம்.இனியாவது ஆதரவுக்குரல் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.

"புத்திமான் பலவான்"..தேவை ஒருங்கிணைந்த பலம்

அரசியலில் பலகோணங்கள் உண்டு.... நேரடியாக அணுகினால் தோல்வி மிச்சமாகும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.