Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகள் பேரம் பேசும் வல்லமையை இழந்துள்ளனர் – நோர்வே தூதுவர் :

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பேரம் பேசும் வல்லமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹாட்ரெம் (Tore Hattrem) தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பேரம் பேசும் வல்லமை பற்றி இந்த சந்தர்ப்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்றே நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிகோலும் என அவர் தெரிவித்துள்ளார்.

சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மை மக்களும், பெரும்பான்மை மக்களும் இந்த நாடு தங்களது நாடு என உணரக் கூடிய ஓர் சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள அப்பாவி பொதுமக்கள் குறித்தே நேர்வே உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் முழுக்கவனமும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு நோர்வே அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களினால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் ஊடாக அப்பிரதேச அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிGTN

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?????????????????????????????

பேரம் பேசும் திறனை இழந்தாலும் திறன் இருந்தாலும் சிறுபான்மையினருக்கான தீர்வு சிங்களத்திடமிருந்து எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தரும். இருந்தாலும் இது ஒரு நல்ல நகர்வாகத்தான் தெரிகிறது. சிறிலங்காவின் முகம் வெளிறப்போகும் ஒரு கோரிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை புலிகளின் பேரம் பேசும் சக்தி சிங்கள பயங்கரவாத அரசு - உலகநாடுகள் என்பனவற்றால் திட்டமிடப்பட்டு இழக்கவைக்கப்பட்டிருக்கிறது என்பதே சரியான கூற்று .தற்போது விடுதலை புலிகள் இழந்துவரும் நிலப்பரப்புக்கள் (வேறு எதையும் பெரிதாக இழக்கவில்லை) அவர்களின் போராடும் சக்தியை பெரிதாக பாதிக்காது அவர்களின் போராடும் சக்தி தக்கவைக்கப்பட்டிருக்கும் வரைக்கும் அவர்களால் எப்போதுவேண்டுமானாலும் பேரம்பேசும் சக்தியை பெறமுடியும்.

சுப்பண்ணா பேரம் பேசும் சக்தி இல்லையென்றே வைத்துக்கொண்டு இவர்கள் தமிழருக்கான தீர்வை வழங்கட்டும் பார்ப்போம். மாகாணசபையல்ல, கிராமசபைக்குரிய அதிகாரங்களையே கொடுக்க மாட்டார்கள். கிழக்குமாகாண முதலமைச்சரின் ஒப்பாரி கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா பேரம் பேசும் சக்தி இல்லையென்றே வைத்துக்கொண்டு இவர்கள் தமிழருக்கான தீர்வை வழங்கட்டும் பார்ப்போம். மாகாணசபையல்ல, கிராமசபைக்குரிய அதிகாரங்களையே கொடுக்க மாட்டார்கள். கிழக்குமாகாண முதலமைச்சரின் ஒப்பாரி கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

இறைவன் அது தான் ஒருவர் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று போட்டு மாநிலத்தில ஆளையே காணகிடைக்காதம் விடுதலை புலிகளும் இப்பிடி பயங்கரவாத அரசுக்கு அடியாள் மாதிரி இருக்கிறதைத்தான் உலகநாடுகளும் சிங்களமும் விரும்புது.சிங்களத்திடம் இருந்து எந்தவிதமான உரிமைகளையோ ஏதிர்பார்க்கமுடியாது என்று ஒவொரு உணர்வுள்ள தமிழனும் தெரிந்திருக்கிறான் ஆனால் உலகநாடுகள் தாங்கள் ஏதோ கதைச்சு பேசி வாங்கிகுடுத்திடுவம் என்று தான் நிக்கினம் அவையளுக்கும் இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் விளங்கதொடங்கியிருக்கு இனிமல் கொஞ்ச காலத்தல சொல்லுவினம் விடுதலை புலிகள்தான் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும் அதற்கு எந்த உதவயும் செய்ய தாயாக இருக்கின்றோம் என்று. பிள்ளையான் இப்ப பார்க்க பாவமா இருக்கு ஏதோ வருத்தம் வந்த ஆக்கள் மாதிரி எல்லாத்தையும் பார்க்கத்தான் முடியும் கதைக்கேலாது,ஆனால் அவருக்கும் காலம் வந்திட்டு

  • கருத்துக்கள உறவுகள்

பேரம் பேசும் வல்லமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹாட்ரெம் (Tore Hattrem) தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் வல்லமை இருக்கும் பொழுது என்னத்தை இந்த சர்வதேசம் புடுங்கினவை......முக்கியாமா நோர்வே

சிறீ லங்கா பயங்கரவாத அரசாங்கத்தின் பரப்புரைக்கு ஆதரவாக இருக்கின்ற தமிழ் ஊடகங்களே!

இந்த செய்தியை எங்கிருந்து திருடினீர்கள் என்று சரியாக கூறமுடியுமா?

சிறீ லங்கா பயங்கரவாத அரசின் இரண்டு ஆதரவுத் தளங்களில் மட்டும் மேற்கூறிய செய்தி வந்துள்ளது. வேறு இடங்களில் காண இல்லை. அதைக்கூட பிழையாக - கருத்து தழும்பும் விதத்தில் திரித்து எழுதி இருக்கிறீங்களே வெங்காயங்களே!

சிறீ லங்கா பயங்கரவாத அரசின் ஊதுகுழலாக நீங்கள் இருப்பதை முதலில் நிறுத்துங்கள்!

ஐயா..

முதலில் கீழ்க்கண்ட ஆங்கிலத்தை சரியாக தமிழில் மொழிபெயர்க்க முடியுமா?

“I don’t think it is helpful to talk about the LTTE’s bargaining power in this context.

  • கருத்துக்கள உறவுகள்

பேரம் பேசும் சக்தி இருந்தால்தான் ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகள் வழங்கப்படுமா? இவன் நோர்வேக்காரன் சொல்லாமல் சொல்வது என்னவென்று புரிகிறது. தமிழரின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான எதிர்கால நகர்வுகளில் புலிகள் செல்வாக்கு பொருட்படுத்தமுடியாத அளவுக்கு குறைந்துவிட்டதாக மேலே சொல்கிறான். போர்நிறுத்தமும் மனிதாபிமான உதவியும்தான் இப்போது தமிழினத்துக்கு அவசரம் தேவை அதற்கு வேண்டிய வழியை ஏற்படுத்த சிறிலங்கா அரசை முழங்காலில் இருத்த இந்த சர்வதேச உலகிற்கு வக்கில்லை பிறகு வந்திட்டான் கதைசொல்ல.

சுப்பண்ணா பேரம் பேசும் சக்தி இல்லையென்றே வைத்துக்கொண்டு இவர்கள் தமிழருக்கான தீர்வை வழங்கட்டும் பார்ப்போம். மாகாணசபையல்ல, கிராமசபைக்குரிய அதிகாரங்களையே கொடுக்க மாட்டார்கள். கிழக்குமாகாண முதலமைச்சரின் ஒப்பாரி கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

இவர்தான் அடுத்த வரதராஜாவோ???

“I don’t think it is helpful to talk about the LTTE’s bargaining power in this context.

ஆமாம், என்ன குழப்பமாக இருக்கிறது. சிறிலங்கா இராணுவத்திற்கு இன்னமும் அடியிருக்கிறது என்று சொல்வது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம், என்ன குழப்பமாக இருக்கிறது. சிறிலங்கா இராணுவத்திற்கு இன்னமும் அடியிருக்கிறது என்று சொல்வது போலுள்ளது.

இதிலென்ன........?

குழப்பமும.;.....?

கேள்வியும்.....?

தங்களுக்கு இறைவன்

என்ன குழப்பமாக இருக்கிறது

சிறிலங்கா இராணுவத்திற்கு இன்னமும் அடியிருக்கிறது என்று சொல்வது போலுள்ளது

இறைவன், விசுகு அண்ணா,

நோர்வே தூதுவர் இப்பிடி சொன்னாராம் என்று கீழ் உள்ளதை சொல்லி, அதை தமது பாணியில் அலங்கரித்து சிறீ லங்கா பயங்கரவாத அரசின் ஊதுகுழல்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றார்கள்.

அந்த செய்தியை (அது உண்மையா பொய்யா, மற்றும் அவர் இப்படி சொன்னார் என்ற கூற்று எவ்வளவு தூரம் உண்மை என்பதுபற்றி அறியாமல்) கிளிப்பிள்ளையாட்டம் எங்கட விளக்குமாறுகள் தமது பாணியில் சிங்களவனின் ஊடகத்தில் வந்த செய்தியை அலங்கரித்து எழுதி இருக்கின்றார்கள்.

நோர்வே தூதுவர் இப்படி சொன்னாராம்: (according to nation.lk)

“I don’t think it is helpful to talk about the LTTE’s bargaining power in this context. A political solution for Sri Lanka that addresses the grievances of the minorities can only be found by the Sri Lankan people. It is the Sri Lankan people that must decide what needs to be done and what will constitute a workable permanent solution to the conflict. One primary role for the state is to safeguard equal rights for all its citizens. If I were asked to give advice, I would recommend the government to develop the state in a way where all groups – the majority and the minorities – feel that the state belongs to them and that they are fairly treated,”

நமது விளக்குமாறுகளின் மொழிபெயர்ப்பு:

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பேரம் பேசும் வல்லமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹாட்ரெம் (Tore Hattrem) தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பேரம் பேசும் வல்லமை பற்றி இந்த சந்தர்ப்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்றே நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிகோலும் என அவர் தெரிவித்துள்ளார்.

சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மை மக்களும், பெரும்பான்மை மக்களும் இந்த நாடு தங்களது நாடு என உணரக் கூடிய ஓர் சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள அப்பாவி பொதுமக்கள் குறித்தே நேர்வே உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் முழுக்கவனமும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு நோர்வே அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களினால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் ஊடாக அப்பிரதேச அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறீ லங்கா பேரினவாத பயங்கரவாதிகளின் மொழிபெயர்ப்பு:

LTTE’s bargaining power insignificant now – Norway

In a major shift in its policy towards Sri Lanka, Norwegian Ambassador to Sri Lanka, Tore Hattrem said the bargaining power of one of the world’s most ruthless terror outfits – the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had become irrelevant in the wake of its imminent elimination and expressed his government’s backing for finding a permanent solution for Sri Lanka’s conflict.

Hattrem also said the LTTE’s bargaining power was not relevant in the present context, implying that the status quo would change with the complete elimination of the LTTE.

“I don’t think it is helpful to talk about the LTTE’s bargaining power in this context. A political solution for Sri Lanka that addresses the grievances of the minorities can only be found by the Sri Lankan people. It is the Sri Lankan people that must decide what needs to be done and what will constitute a workable permanent solution to the conflict. One primary role for the state is to safeguard equal rights for all its citizens. If I were asked to give advice, I would recommend the government to develop the state in a way where all groups – the majority and the minorities – feel that the state belongs to them and that they are fairly treated,” Hattrem said.

Commenting on his government’s stance on being removed from the role of facilitator in Sri Lanka’s peace process, Hattrem said the Norwegian Government would respect the decision of its Sri Lankan counterpart.

“Our role as facilitator is not something we took upon ourselves. We were invited by the government and the LTTE to exercise that role back in year 2000. So, when one of the parties that entrusted us that role perceives that Norway no longer can play such a role in the present circumstances, we must, of course, accept that. It also reflects the fact that Norway has not facilitated any peace process since 2006,” Hattrem said.

He also said Norway and many other countries considered the civilians trapped inside the conflict zone in the North as the most important priority and thus the LTTE must allow civilians to leave the No Fire Zone (NFZ).

“These civilians are suffering and humanitarian assistance must be given to them, and the LTTE must let these people leave the conflict area. Both the government and the LTTE must respect international humanitarian law. At the same time we will continue to support efforts to help all those IDPs that have come out from the conflict zone so that they can be given protection according to international norms. This is an enormous task and Norway and many other countries are ready to support Sri Lanka in protecting these people and assist them in the resettlement process,” he said.

“First, we need to focus on the immediate humanitarian needs of the IDPs that now are settled in camps. After the resettlement phase begins, we plan to follow up with livelihood support projects so that families and communities in the North can get their lives back on their feet. We are also prepared to see how Norway can contribute in addressing the needs of reconstructing the North as a part of a legitimate political process and where the people in the North can influence the development of their communities through elected and legitimate political leaders,” he added.

http://www.nation.lk/2009/05/03/news21.html

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு! :icon_idea:

தழிர்களின் ஊடகங்கள் தமிழ்த்தேசிய அறிவுடன் செயற்படுவது போதுமானதாக இல்லை.

இதுக்குத்தான் சொல்லுறது தனக்குத்தெரியாத சிங்களம் தன் பிடரிக்குச்சேதம் எண்டு. இதை எம் தமிழர் ஒருகாலத்தில் சிங்களம் தெரியாமல் சிறிலங்காவுக்குப்போய் அங்கு பட்ட அனுபத்தை சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தொன்று தொட்டு நடப்பதுதானே...

இதைத்தான் சொல்வது

இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம்.......

இறைவன்??? சொன்னது....

அதுதான் இறைவனுக்கே தெரியவில்லையா என்று கேட்டேன்.

செய்திகளை முந்தி போடவேணும் என்கிற ஆவலில் இப்படி தவறான செய்திகளை கொடுப்பது உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போடுவது போல!

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்னுமே புரியல்லையப்பா!

ஆனால் உலகநாடுகள் தாங்கள் ஏதோ கதைச்சு பேசி வாங்கிகுடுத்திடுவம் என்று தான் நிக்கினம் அவையளுக்கும் இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் விளங்கதொடங்கியிருக்கு இனிமல் கொஞ்ச காலத்தல சொல்லுவினம் விடுதலை புலிகள்தான் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும் அதற்கு எந்த உதவயும் செய்ய தாயாக இருக்கின்றோம் என்று.

அப்படி சொல்லட்டும் முதலில். அப்புறம் தெரியும் ... பேரம் பேச வேண்டிய அவசியமே இருக்காது.

பேரம் பேசும் திறனுடன்தான் கடைசிப் பேச்சுவார்த்தையில் கூட நாம் இருந்தோம். அப்போது... இந்த சர்வதேசம் என்ன செய்து கொண்டிருந்தது???

"இறுதிவரைக்கும் போராடும் திறனை இழக்கமாட்டோம்" என்பது உறுதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.