Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையை சொல்லுங்கள், எல்லாம் முடிந்து விட்டதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காருண்யத்தினையும், மனிதாபிமானத்தினையும் போதித்த புத்தபெருமானின் போதனைகளை ஏற்றிருக்கும் தேசம் வெசக் தினங்களை அனுட்டித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது.

சோடனைகள், வெளிச்ச அலங்காரங்கள், உணவு தானங்கள் என்று வெசக் தினங்கள் களைக் கட்டியிருந்தன. அமைதியும், கருணையும் வழியும் மனிதாபிமானமும் கொண்ட தேசத்தில் வசித்துக் கொண்டிருப்பதனைப் போன்று மக்கள் வெசக் நாட்களை இனிதே அனுட்டித்து மகிழ்ந்தனர்.

கூட்டம் கூட்டமாக குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் வெசக் தொரண எனப்படும் வெளிச்ச அலங்காரங்களைப் பார்த்து சுதந்திரமாக நடந்து திரிந்து உண்டு மகிழ்ந்து கழிந்தன தலைநகர் மக்களின் பொழுதுகள். ஒலிவாங்கிகளில் குத்துப் பாடல்கள் ஒலிக்க நடுவீதிகளில் அர்த்தராத்திரியில் நடனங்கள் தொடர்ந்தன. இதே தேசத்தின் ஒரு பகுதியில் நிகழும் அவலக் கொடூரங்கள் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள், ஓடும் இரத்த ஆறு என்பன பற்றி எந்த கவலையும் இங்கு இவர்களுக்கில்லை. அது வேறு. இது வேறு. அப்படித்தான் இங்கு எல்லாம்.

இந்த வெசக் தினம் அனுட்டிக்கப்படும் நாட்களில் நாட்டிற்கும் சிங்களவர்களுக்கும் பெரும் தலையிடியாக இதுவரை இருந்த வந்த அவர்கள் கூறும் புலிப் பயங்கரவாதிகள் அவர்களைப் பொறுத்தவரை அழிந்து விட்டனர். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடன் வசிக்கும் சி;ங்கள இனம் விடுதலைப் பெருமூச்சுடன் இம்முறை வெசக்கினை அனுட்டித்தது. சிங்களவர்கள் அனைவர் முகத்திலும் பெருமிதம். ஏதோ ஓர் மலர்ச்சி.

வெசக் அனுட்டிப்புக்கு பங்கம் ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றார்கள் என்ற முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில் மக்களின் இந்த களியாட்டங்களுக்கு பலமான பாதுகாப்பு வேறு. காவற்துறையினரின்; நடமாட்டம் அதிகரித்திருந்ததுடன், சோதனைக் கெடுபிடிகளும் வெசக் பார்க்க சென்ற மக்களை இம்சித்தன. எனினும் அவற்றை அனைவரும் சகித்து ஒத்துழைத்தனர்.

மனிதாபிமானம் மரணித்து விட்ட தேசத்தில் தமிழினம் சொல்லொணா துயரத்தினையும் பேரழிவையும் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் தலைநகரில் எல்லாம் சுமுகமே. இங்கு அது பற்றி எல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை. பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகளும் அரங்கேறின.

தமது தாயகப் பிரதேசத்தில் சிறப்புற உழைத்து தலைநிமிர்ந்த வாழ்ந்த மக்களை நிர்க்கதியாக்கி அகதிகளாக்கி உடுத்த மாற்றுடையின்றி பட்டினிப்போட்டு அலைக்கழித்து நடுவீதியில் நிறுத்தி வைத்து விட்ட பெருமையைக் கொண்டாடும் சிங்கள இனம் அவர்களுக்காக இரக்கப்பட்டு நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை வீதிக்கு வீதி வெசக் தினங்களில் முன்னெடுத்தது. ஏனெனில் அது தான் அவர்களுக்கு புண்ணியக் காரியமாம்.

பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழினம் அழிகின்றது அதனை அனைவரும் வரவேற்கின்றனர். புத்தபகவானும் அப்படித்தான் போதித்து இருக்கின்றார் என்று இவர்கள் விரைவில் வியாக்கியாணம் சொல்லக் கூடும். எல்லாம்; சிங்களவர்களின் கைகளில். அந்தரப்பட்டு நிற்கும் எங்களினால் மறுத்துப் பேசத்தான் இயலுமா?

ஒரு எறும்பைக் கூட நாங்கள் மிதிக்க மாட்டோம். அது பெரும் பாவம் என்று பௌத்தர்கள் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. எறும்புகள் மீது கொண்ட அன்பு தமிழனிடம் இவர்களுக்கு இல்லாதது பெரும் துரதிருஷ்டமே.

வளம் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்த நம் தமிழினம் இன்று அந்தரப்பட்டு பரிதவித்து கொண்டு அவலங்களையெலாம் ஒட்டு மொத்தமான அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழனாக இருப்பதனாலேயே, சிங்கள மனங்கள் அவலப்படும் தமிழினம் மீது ஈரம் காட்ட மறுக்கின்றன. தமிழன் என்றாலே பெரும் வெறுப்பு. யுத்தம் என்றால் இந்த அவலங்கள் ஏற்படுவதும் சகஜம் என்ற நியாயப்படுத்தும் அபிப்பிராயங்கள் வேறு.

ஒரு இனத்தினை அழித்துக் கொண்டு எப்படி இப்படி இவர்களினால் அமைதியடைய முடிகின்றது. சிங்களத்திற்கு மனச்சாட்சி என்ற ஒன்றே இல்லையா? அல்லது ஒட்டு மொத்தமாக ஏமாறக் கூடிய பெரும் முட்டாள்களாக இருக்கின்றனரா? சந்தேகம் வலுக்கின்றது.

சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் பிரபாகரனின் குடும்பத்தினர் புகைப்படங்களை கடந்த வாரம் முழுவதும் பிரசுரித்திருந்தன. மகிந்தவின் குடும்பப் புகைப்படங்களுக்கு கூட இப்படியொரு முக்கியத்துவத்தினை சிங்களப் பத்திரிகைகள் வழங்கியிருக்கவில்லை.

தமிழ் மக்கள் வன்னியில் உணவின்றி பட்டினிக் கிடக்க பிரபாகரனும் அவர் குடும்பமும் ஆடம்பர வாழ்வில் ஈடுபட்டதற்கான சான்றுகள் இவை என அப்பத்திரிகைகள் கருத்துக் கூறியிருந்தன.

அந்த அவலத்திலிருந்து தமிழ் மக்களை வன்னியிலிருந்து காப்பாற்றியிருக்கின்றது சிங்களப் படை என்றும் அதற்கு நியாயம் கூறப்பட்டிருந்தது.

இப்புகைப்படங்களை பிரசுரித்ததன் ஊடாக சிங்களத்திற்கு வழங்கப்பட்ட செய்தியும் அதுவே. ஒரு போராளியின் அரிய இந்த புகைப்படங்களை பார்வையிட வேண்டுமெனில் நாம் ஒன்று பிரபாகரனின் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றிருக்க வேண்டும். அல்லது அவரது நெருங்கிய உறவினராக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த இரு தகுதிகளும் இல்லாமல் சாதாரண மக்களுக்கு குறிப்பாக அவரை நேசிக்கும் தமிழ் மக்களுக்கு இந்த அரிய படங்களைப் பார்க்க மட்டுமல்லாது. அதனைப் பேணிப் பாதுகாக்கவும் (பிரசுரிக்கப்பட்ட பத்திரிகைகளோடு) வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவே விதிவிலக்காக ஒரு சிங்கள அன்பர் குறிப்பிட்டார்.

ஆனால் பொதுவான எம் சகோதர சிங்கள இனமோ சந்திக்கு சந்தி நின்று, பொது இடங்களில் கூட்டம் சேர்த்து இப்படங்களைப் பார்த்து பிரபாகரனை திட்டித் தீர்த்ததுடன் பல விமர்சனங்களையும் தகாதச் சொற்களையும் தாராளமாகக் கையாண்டது.

இப்பொழுது சிங்கள மக்களின் ஆசைகள் எந்தவிதமான தடங்கல்களும் இன்றி நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. புலிகள் பூண்டோடு அழிந்து விட்டனர். நாடு பிளவுப்படப் போவதேயில்லை. வன்னியில் இருந்த புலிகளை எல்லாம் முகாம்களில் பிடித்து வைத்தாயிற்று. அவர்களினால் இனி எந்தவிதமான தொந்தரவும் இல்லை. ஆனால் வெளிநாட்டினரைப் பகைத்துக் கொண்டோமே என்ற கலக்கம் ஒன்று மட்டுமே இவர்களிடம் உள்ளது.

இந்தியாவில் எந்த ஆட்சி வந்தால் என்ன இங்கு சிங்கள மக்களின் காவல் தெய்வம் எங்கள் மகிந்தவின் ஆட்சி தொடரும் அதனால் கவலையில்லை. மகிந்த முன் புலிகள் வாலாட்டவே முடியாது. இவை தான் எங்கள் அயலவர்களின் ஒட்டுமொத்தக் கருத்து நிலைகள்.

மனிதப் பேரவலம் என்று கூறிக் கொண்டு அதனை இரசித்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்தின் முன் எங்கள் நம்பிக்கைகள் தவிடு பொடியாகி விட்டன. தமிழனுக்கு எதுவும் நேர்;ந்தால் அவன் வருவான், இவன் வருவான் என்ற நம் உள்ளத்து நம்பிக்கைகள் தகர்ந்து பல நாட்களாகி விட்டன. தமிழர்களின் கண்ணீ;ருக்கும் உயிர்களுக்கும் பெறுமதியற்றுப் போனதன் வலி நெஞ்சில் இருந்து அகல மறுக்கின்றது. எங்களில் பலருக்கு அதுவே மன அழுத்தமாகவும் மாறி நித்திரையற்ற இரவுகளைப் பரிசளிக்கின்றன. தமிழினத்திற்கு நம்பிக்கை தரும் நிகழ்வுகள் ஏதேனும் நிகழ மாட்டாதா? எத்தனை நாட்களுக்கு இந்த பேரவலம்? மனச்சாட்சியும், மனிதாபிமானமும் இல்லாத சிங்களவர்கள் மத்தியில் என்றைக்கு நாம் தலைநிமிரப் போகின்றோம்?

அல்லது உண்மையை சொல்லுங்கள், எல்லாம் முடிந்து விட்டதா?

http://www.globaltamilnews.net/tamil_news....=9620&cat=5

Edited by ஜீவா

இல்லை எல்லாம் முடிந்துவிடவில்லை! போராளிகள் போராட நாங்கள் எல்லோரும் விசிலடித்த அல்லது கலங்கிய அத்தியாயம்தான் முடிந்துவிட்டது.

நாங்கள் எல்லோரும் போராட்டத்தில் இறங்கவேண்டிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது!!

ஒன்றும் முடியவில்லை புதிய திடட்ங்களுடனும் பழைய பட்டறிவுடனும்,மீண்டும் எழுவோம்

tamilskynews.com அல்ல இதன் மூலம்.... இது அப்படியே globaltamilnews.com இல் இருந்து உருவப்பட்டது

globaltamilnews. தமது தளத்தின் பெயரை குறிப்பிடும் மாறு வேண்டியும் கூட, எந்த ஒரு நன்றியும் சொல்லாது போடுதல் கேவலமான தொழில் தர்மம்

மற்றவனின் பிள்ளைக்கு தன்னை அப்பா என்று சொல்லும் கேவலமான தொழிலை எப்ப நிறுத்தப் போகின்றீர்கள்?

இது தான் மூலம்:

http://www.globaltamilnews.net/tamil_news....=9620&cat=5

இது தான் அவர்கள் குறிப்பிட்டு இருந்தது

இந்தக் கட்டுரை குளோபல் தமிழச் செய்திகளுக்காக ரட்ணா எழுதியது – மீழ்பிரசுரம் செய்வோர் www.globaltamilnews.net என பெயரிட்டு பிரசுரிக்கவும்:

ஈழத்தமிழர்கள் மாத்திரமல்ல, இந்தியத்தமிழர்கள் கூட உங்களைப்போல குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். தேர்தலின் முடிவும் அதையே வெளிப்படுத்துகின்றது. தமிழகத்திலே காங்கிரசுக்கு முடிவு கட்டப்பட்டாலும், காங்கிரஸ் குழம்பிய குட்டையிலே மீனைப்பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை!

போராட்டம் இன்னமும் முடியவில்லை. மானமுள்ள கடைசித்தமிழன் உள்ளவரை போராட்டம் தொடரும்............

Edited by nishanthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்கள் மாத்திரமல்ல, இந்தியத்தமிழர்கள் கூட உங்களைப்போல குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். தேர்தலின் முடிவும் அதையே வெளிப்படுத்துகின்றது. தமிழகத்திலே காங்கிரசுக்கு முடிவு கட்டப்பட்டாலும், காங்கிரஸ் குழம்பிய குட்டையிலே மீனைப்பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை!

போராட்டம் இன்னமும் முடியவில்லை. மானமுள்ள கடைசித்தமிழன் உள்ளவரை போராட்டம் தொடரும்............

மானம் என்பது தமிழினத்திற்கு இருக்கா? அது எப்படி இருக்கும்? என்ன விலை? எங்கை கிடைக்கும்? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இது மிக மோசமான சோதனைக் காலம். தன் கண்ணைத் தானே குத்திக்கொண்டது போல் தமிழக மாக்கள் இத்தேர்தலில் விலைபோயுள்ளார்கள். ஆனாலும் ஈழத்தமிழர்கள் மனவுறுதியுடன் கலங்காது போராட்டத்தை முன்னெடுத்து வென்றெடுப்பார்களென உறுதியாகத் தெரிகிறது. இனியும் தொப்புள்கொடியுறவு எனச்சொல்லி ஏமாறுவதற்கு ஒரு முடிவு கட்டட்டும். எவ்வளவோ எதிர்பார்த்தோம் மனதில் சிறிதாவது ஈரமிருக்குமென்று..ஆனால், தானும் கொலைஞனுக்கு நிகரானவனென காட்டியுள்ள தமிழக தமிழர்களை என்ன சொல்வது...

  • கருத்துக்கள உறவுகள்

பதில் இன்று இல்லை ...பூச்சி புளு பூண்டு ஒரு நாள் வாய் திறக்கும் .....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இது மிக மோசமான சோதனைக் காலம். தன் கண்ணைத் தானே குத்திக்கொண்டது போல் தமிழக மாக்கள் இத்தேர்தலில் விலைபோயுள்ளார்கள். ஆனாலும் ஈழத்தமிழர்கள் மனவுறுதியுடன் கலங்காது போராட்டத்தை முன்னெடுத்து வென்றெடுப்பார்களென உறுதியாகத் தெரிகிறது. இனியும் தொப்புள்கொடியுறவு எனச்சொல்லி ஏமாறுவதற்கு ஒரு முடிவு கட்டட்டும். எவ்வளவோ எதிர்பார்த்தோம் மனதில் சிறிதாவது ஈரமிருக்குமென்று..ஆனால், தானும் கொலைஞனுக்கு நிகரானவனென காட்டியுள்ள தமிழக தமிழர்களை என்ன சொல்வது...

தமிழக தேர்தலைப் பொறுத்த வரையில் பெரிய விஞ்ஞானம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. போன தடவை பாமக கொலைஞருடன் இருந்ததால் 40-0. அவர்கள் அணி மாறியதால் இப்போது திமுக கூட்டணியின் வெற்றி விகிதம் குறைந்துள்ளது. எல்லாமே தேர்தல் கூட்டணிக் கணக்குதான் போல.

வன்னி மக்களின் அவலம் சிறிதளவாவது மனங்களை அசைக்கும் என்று நினைத்திருந்தேன்..! நடக்கவில்லை. இனி சீமான் பாரதிராஜா போன்றவர்கள் மீண்டும் படப்பிடிப்புத் தளங்களுக்குச் செல்லலாம், யாராவது கூப்பிட்டால். :icon_idea:

தமிழர்களுக்கு இது மிக மோசமான சோதனைக் காலம். தன் கண்ணைத் தானே குத்திக்கொண்டது போல் தமிழக மாக்கள் இத்தேர்தலில் விலைபோயுள்ளார்கள். ஆனாலும் ஈழத்தமிழர்கள் மனவுறுதியுடன் கலங்காது போராட்டத்தை முன்னெடுத்து வென்றெடுப்பார்களென உறுதியாகத் தெரிகிறது. இனியும் தொப்புள்கொடியுறவு எனச்சொல்லி ஏமாறுவதற்கு ஒரு முடிவு கட்டட்டும். எவ்வளவோ எதிர்பார்த்தோம் மனதில் சிறிதாவது ஈரமிருக்குமென்று..ஆனால், தானும் கொலைஞனுக்கு நிகரானவனென காட்டியுள்ள தமிழக தமிழர்களை என்ன சொல்வது...

உங்கள் ஆதங்கம் தெரிகிறது நானும் இந்த தேர்தல் முடிவில் ஏமாந்த தமிழக தமிழன் தான் ஆனால் அதற்காக தவறான வசனங்களை எழுதி எங்கள் அர்ப்பனிப்புகளை கொச்சை படுத்தாதீர்கள் - உங்களுக்கு அப்படி எண்ணம் இருந்தால் உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். என் சிறு கேள்வி இதுவரை தமிழீழ போராட்டாத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனமானது நீங்கள் எழுதியது. பணம் வென்ற சனநாயகம் அங்கே! ரித்தீஷ் யார்? அவன் வெற்றி! அழகிரி 1 லட்சம் வாக்குக்கு மேல் வெற்றி....ஈழ ஆதரவு தமிழர்கள் எவ்வளவு பணிசெய்தார்கள் என்று தெரியுமா? எவ்வளவு அடி வாங்கினார்கள் தெரியுமா? வெற்றி பெற்ற ப.சிதம்பரம் வங்கி மூலம் கடன் என்ற பெயரில் காசை அள்ளி வீசி ஒரு சில பொய் வாக்கில்தான் வென்றான்..இப்படி எவ்வளவோ....இனி தண்டனை காலம் சீமான், பாரதிராஜா போன்றவருக்கு...இவ்வளவும் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? சொல்லுங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் தெரிகிறது நானும் இந்த தேர்தல் முடிவில் ஏமாந்த தமிழக தமிழன் தான் ஆனால் அதற்காக தவறான வசனங்களை எழுதி எங்கள் அர்ப்பனிப்புகளை கொச்சை படுத்தாதீர்கள் - உங்களுக்கு அப்படி எண்ணம் இருந்தால் உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். என் சிறு கேள்வி இதுவரை தமிழீழ போராட்டாத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனமானது நீங்கள் எழுதியது. பணம் வென்ற சனநாயகம் அங்கே! ரித்தீஷ் யார்? அவன் வெற்றி! அழகிரி 1 லட்சம் வாக்குக்கு மேல் வெற்றி....ஈழ ஆதரவு தமிழர்கள் எவ்வளவு பணிசெய்தார்கள் என்று தெரியுமா? எவ்வளவு அடி வாங்கினார்கள் தெரியுமா? வெற்றி பெற்ற ப.சிதம்பரம் வங்கி மூலம் கடன் என்ற பெயரில் காசை அள்ளி வீசி ஒரு சில பொய் வாக்கில்தான் வென்றான்..இப்படி எவ்வளவோ....இனி தண்டனை காலம் சீமான், பாரதிராஜா போன்றவருக்கு...இவ்வளவும் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? சொல்லுங்கள்....

உண்மைதான்

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்

ஈழம் என்பது மட்டுமே தமிழகமக்களின் வாழ்க்கையல்ல

எத்தனையோ பிரச்சினைகள்

சிக்கல்கள்

சோதனைகள்

பொய் பித்தலாட்டம் தேர்தல்நேர சுத்துமாத்து வாக்குறுதிகள்.....

எல்லாவற்றையும் செவிமமடுத்து .....

எது நல்லது கெட்டது என நாமே குழம்பியுள்ள நிலையில்....

அவர்களது இந்த முடிவுக்கு தலைவணங்கி....

அதிலிருந்து எழுவோம்

இனி தண்டனை காலம் சீமான் பாரதிராஜா போன்றவருக்கு...இவ்வளவும் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? சொல்லுங்கள்..................??????????

இதற்கு எங்கள் பதிலென்ன..............??????????????????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நாம் தொடங்கி விட்டோம், எமது தொப்புள்கொடி உறவுகளை நிந்திப்பதற்கு. ஆரம்ப காலங்களில் நாம் சினிமாப் பயித்தியங்கள் அது இதுவென பல அடைமொழிகள் கூறி அவர்களை வசை பாடிணோம். அதற்கு பிராச்சித்தம் செய்வதற்காய் முத்துக்குமார் தொடங்கி பன்னிருவர் தீயில் வொந்தார்கள். இப்போதும் அதையா எதிர்பார்க்கிறீர்கள் உறவுகளே?

இதைவிட எமது தமிழக உறவுகள் எதைச்செய்வது நீங்களே கூறுங்களேன்!

ஐரோப்பியத் தெருக்களில் எமதுறவுகள் உண்ணாதிருநஇதபோது உங்களில் எத்தனைபேர் கிரமமாக அங்கு சென்றிருந்தீர்கள்?

அந்தவேளையிலும் கருத்தெழுதிய யாழ்கள உறவுகளை நாம் அறிவோம்!

சீமான், அமிர், பாரதிராஜா போன்றோர் இனிமேல் கனவிலும் கோடம்பாக்கம் பக்கம் போகக்கூடிய சந்தர்ப்பம் வருமோ தெரியாது!

சிவகங்கையில் சிதம்பரத்தை எதிர்த்து நின்றானே ராஜீவ்காந்தி அவன் சிதம்பரத்தின் மகனால் சின்னாபின்னப்படுத்தப்படப்ப

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிந்து விட்டதா?

யார் சொன்னார்கள்?

இன்னும் எங்களுக்காகத் தம்மை வருத்தும் தமிழக உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்றென்றும் தலைவணங்குவோம்.

கேவலம் பணத்திற்காக தொப்புள் கொடி உறவுகளின் மரணத்தை மலினப்படுத்திய உறவுகளில் எத்தனை பேருக்கு தாங்கள் பணத்தின் மூலம் தமிழினத்தை சூரையாடும் சூழ்ச்சிக்கு இரையாகியுள்ளோம் என்று தெரியும்? பாமரத்தனமான அவர்களுக்கு இந்த வல்லாண்மைத் திமிர் தெரிய உள்ள வாய்ப்புகள் எல்லாம் தடுக்கப்பட்டிருக்கும் போது அவர்கள் என்ன செய்வார்கள்? இன்னும் சிறிது காலத்தில் இந்த விலைபோனவர்கள் தங்கள் செயலுக்காக தாங்களே வருந்திக் கொள்வார்கள். அவர்கள் வருந்தும் வேளை காலம் கடந்து தமிழினத்தின் நிலை வேறொரு பரிமாணத்தில் இருக்கும் என்பதுதான் உண்மை.

இரத்தக்களரியில் தாயகம்

எங்கள் தாயகத்தைப் பொறுத்தவரை பிறப்பும், இறப்பும் இரத்தக்களரியில்தான்.... வன்னியை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிவிட்டால் விடுதலை உணர்வையும், போராளிகளையும் அழித்துவிட்டார்கள் என்று அர்த்தமாகாது. எங்களுடைய தாயகத்திற்கான களம் வன்னிக்குள் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதை அனைத்துலகமும் உணரும். சிங்களம் கொக்கரிக்கலாம் ஆனால் நீண்ட காலத்திற்கு அவர்கள்?........

இப்போது தாயகவிடுதலை என்பது புலம் பெயர்ந்த மக்களின் கைகளில் பயணிக்கிறது. அப்படியிருக்க எப்படி எல்லாம் முடிந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது?

தீபெத்திய போராட்டம் எங்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

எத்தனை பெரிய வல்லரசு சீனா. அசுர இராணுவ‌ பலம் கொண்டு தீபெத்தை அடக்கிவைத்திருக்கின்றது. இருப்பினும் தீபெத் என்ற நாடும் அவர்களது போராட்டமும் வாழ்வதே புலம்பெயர்ந்த தீபெத்தியர்களால் தான்.

புலம்பெயர்ந்த திபெத்தியர்கள் நடத்தும் செயற்பாடுகளால் ஒரு வல்லரசுக்கு எதிரான‌ சுதந்திர போராட்டத் தீ அணையாமல் இன்னும் எரிகிறது.

இவர்களிடம் இருந்து நாம் படித்துக் கொள்ள வேண்டும்.

தீபெத்திய போராட்டம் எங்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

எத்தனை பெரிய வல்லரசு சீனா. அசுர இராணுவ‌ பலம் கொண்டு தீபெத்தை அடக்கிவைத்திருக்கின்றது. இருப்பினும் தீபெத் என்ற நாடும் அவர்களது போராட்டமும் வாழ்வதே புலம்பெயர்ந்த தீபெத்தியர்களால் தான்.

புலம்பெயர்ந்த திபெத்தியர்கள் நடத்தும் செயற்பாடுகளால் ஒரு வல்லரசுக்கு எதிரான‌ சுதந்திர போராட்டத் தீ அணையாமல் இன்னும் எரிகிறது.

இவர்களிடம் இருந்து நாம் படித்துக் கொள்ள வேண்டும்.

உண்மையை யார் சொல்வார்கள்?

வலியின் உச்சம்

ஏமாற்றத்தின் உச்சம்

குற்ற உணர்வின் உச்சம்

எல்லாவற்றையும் இந்த கணம் உணர்கிறேன்

என் தாகம் தமிழீழத்தோடுதான் தீரும்.............................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனித்தானுங்கோ தொடக்கம்

புலம்பெயர்ந்த தமிழர் நாங்க தான் தொடக்கி வைக்கோணும்

தமிழீழ கோரிக்கை

இனித்தானுங்கோ தொடக்கம்

புலம்பெயர்ந்த தமிழர் நாங்க தான் தொடக்கி வைக்கோணும்

தமிழீழ கோரிக்கை

எல்லாரும் வீதியிலை இறங்குங்கோ

Edited by paavalan

  • கருத்துக்கள உறவுகள்

அழுதழுதும் பிள்ளை அவளேதான் பெற வேண்டும் என்பதே தமிழகத் தேர்தல் முடிவுகள் எமக்குச் சொல்லும் செய்தி. இருந்தாலும் தமிழ் உணர்வாளர்களின் மு;யற்சி ஓரளவு பலனைத் தந்து இருக்கிறது என்பது மட்டும் உண்மை. காங்கிரஸ் பெருந்தலைகள் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சனம் சாகேக்க சும்மா தானே பார்த்துக்கொண்டிருந்தவை

இந்த உலகத்தை நிம்மதியா இருக்க விடக்கூடாது

நித்திரை கொள்ள விடக்கூடாது

எல்லாரும் ஒவ்வொருநாளும் வீதியிலை இறங்கி கத்துவம்

எங்கடை மக்களுக்காக அடிமை வாழ்வுக்கு எதிரா குரல் கொடுப்போம்

பிரிச்சு விடச்சொல்லி கேட்போம்

நிச்சயமாக எமக்கு சாதகமாக அமையும்

இதுதான் இனி எமக்கு இருக்கும் ஒரெ ஒரு வழி

இப்ப நாங்கள் சும்மா இருந்தமோ அவ்வளவுதான்

சர்வதேசமும் இதுதான் சாட்டென்று பேசாமை இருந்திடுவினம்

கடைசிவரைக்கும் தமிழினம் அடிமை வாழ்வு தான்

போராட்டம் இன்னும் முடியேல்லை

நிலத்தை இழக்கலாம் அது தற்காலிகம்

இனித்தான் திருப்பி எல்லாம் தொடக்கமே

நம்புவோம்

நம்பிக்கை இழப்பது நல்லதல்ல

எல்லாரும் வீதியிலை இறங்குங்கோ

இனிமேல் யாரையும் நம்பி பிரியோசனமில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.