Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடையல்ல - 53ஆவது படையணி தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அதை நாமே அணிவித்தோம் என இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மே 19 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பிரபாரகன் சண்டையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

53 ஆவது படையணியே பிரபாகரனின் சடலத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிங்கள வார இதழான லங்காதீபவுக்கு வழங்கி செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:

(19 ஆம் திகதி) 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் சென்ற எமது சிப்பாய் ஒருவர் என்னுடன் பேசினார். "சேர், பிரபாகரனின் உடல் இருக்கிறது' என அவர் கூறினார். அவர் அப்படிக் கூறும்போது அதை நம்புவதா இல்லையா என்று தெரியவில்லை. அப்போது சண்டை நடந்துகொண்டிருந்தது.

நான் அந்த உடலைக் காட்டிற்கு வெளியே கொண்டு வருமாறு கூறினேன். எனது பொடியன்கள் (சிப்பாய்கள்) அந்த உடலை எனது காலடியில் கொண்டுவந்து போட்டனர். முழு இலங்கையும் பார்க்க ஆவலாக இருந்த உடலை நான் பார்க்கும் வரை உறக்கமின்றி இருந்தேன். அந்த உடலை தண்ணீரில் இழுத்துக்கொண்டு வரும்போது சுமார் 3000 சிப்பாய்கள் அங்கு கூடிவிட்டனர்.

19ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது தான்

பிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டார். பிரபாகரன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு 2 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுவதெல்லாம் பொய்யானது.

பிரபாகரனை கொன்றது எனது படைப்பிரிவின் சிப்பாய்களே. பிரபாகரன் பற்றி கூறப்பட்ட பல கதைகளில் ஒரு கதை உண்மையானது. அதாவது, பிரபாரகனின் சடலத்திலிருந்த சீருடை பிரபாகரன் மரணடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல.

அது பிரபாகரன் மரணமடைந்த பின்னர் எம்மால் அணிவிக்கப்பட்ட ஆடையே. அந்தச் சீருடையை பிரபாகரனின் சடலத்திற்கு அணிவித்தவர்கள் எமது சிப்பாய்களே. அந்த சடலத்தைப் பார்த்த முதல் டிவிசன் தளபதி நானே. என்னால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

நான் இராணுவத் தளபதிக்கு அழைப்பு மேற்கொண்டு பேசினேன். பிரபாரகனின் சடலம் இருப்பதாக கூறியதும் இராணுவத் தளபதி "ஆர் யூ ஷவர்?' என்று கேட்டார். "ஷவர் சேர்' எந்த சந்தேகமுமில்லை.

பிரபாரகனின் சடலத்தை நாம் இனங்கண்டுள்ளோம் என நான் பதிலளித்தேன். பின்னர் எனது சகோதரர்கள் போல் பழகிய ஏனைய படைத்தளபதிகளுக்கும் தகவல் தெரிவித்தேன்.

www.virakesari.lk

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

"ஆர் யூ ஷவர்?confused1bb.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஆர் யூ ஷவர்?confused1bb.gif

நுணா அண்ணா இன்னும் கொஞ்ச நாளாலை நாங்க தான் மாஸ்க் போட்டம் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

சொல்லுற சிங்களவன் முட்டாளா இல்லை கேக்கிற நாம் முட்டாளா ஒரே குழப்பமா இருக்கு :(

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கொஞ்சமா தான் விசயங்களை வெளிவிடுவினம் பொறுத்திருப்பம்.

பிரபாகரனின் உடலுக்கு வேறு உடையை மாற்றியதா அல்லது உடைக்குள் வேறு உடலைப் போட்டதா தெரியத்தான் போகுது.

பொய்யை உண்மையாக்க ரொம்பதான் கஸ்டப்படுகினம்.. இப்படி அடிக்கடி சொன்னால்தான் தமிழர்கள் சோர்ந்துபோவார்களாம். ஆனால் உண்மையை பொய்யாக்க ஒருவர் ரொம்பவும் கஸ்டப்படுகின்றார். என்ன உலகமடா சாமி? மலிஞ்சால் எல்லாம் சந்தைக்கு வரத்தானே செய்யும் :( :( :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Are You OK

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நந்திக் கடலடியில் எடுத்தது என்டு சொன்னாங்கள்... இப்ப காட்டுக்குள்ள எண்டுறாங்கள்......

அனுராதபுரச் சண்டையில் இறந்த கரும்புலிகளின் ஆடைகளை அகற்றி மக்கள் பார்வைக்காக வைத்திருந்த இந்த சிங்கள காடையர் கூட்டமா எமது தலைவனுக்கு ஏதாலும் ஒன்று நடந்திருந்தால் சீருடைமாட்டி மக்களுக்கு காட்டியிருப்பாங்கள்....?

அட கள்ளப்பயலுகலே.... ஏன்ரா விட்டு விட்டு film காட்டுறீங்க...? உங்கட்ட இருந்து 30 வருடத்துக்கு மேலே நல்லா படிச்சிட்டமடா....!

  • கருத்துக்கள உறவுகள்

முழு இலங்கையும் பார்க்க ஆவலாக இருந்த உடலை நான் பார்க்கும் வரை உறக்கமின்றி இருந்தேன்பிரபாகரனை கொன்றது எனது படைப்பிரிவின் சிப்பாய்களே

அடுத்த ஜனாதிபதி யாக வருவதற்க்கு இப்பவே பிள்ளையார் சுழி போடுகிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ilankavi Posted Today, 09:06 PM

நந்திக் கடலடியில் எடுத்தது என்டு சொன்னாங்கள்... இப்ப காட்டுக்குள்ள எண்டுறாங்கள்......

நன்றி

நந்திக் கடல் , காடு, குகை ,ஏன்? டக்ளஸ் பன்னாடை முந்தி சொன்னமாதிரி முல்லைத் தீவுக்குள்ள இருந்த மலையெண்டும் சொல்லலாம்

(முல்லைதீவிலை மலை இருக்குதெண்டு சொன்ன முதல் முட்டாள் அத்தியடி குத்தியன்தான்)

இன்னும் என்னென்ன சொல்லப் போறியளோ?

கொட்டிண்டு போவாங்களே! விடுகிற கதையெல்லாம் விடுங்கோடா ! ஆனால்

ஐயன் வரேக்கை பொய்யை மலையாக் குவிச்ச முஞ்சியளை மூட

கறுப்புத் துணியளை இப்பவே தேடி வச்சிடுங்கோடா!

........ இருக்கிறார்???.. இல்லை?????????........ இருக்கிறார்??????...... இல்லை??????......... ......... இனி இருந்து என்னத்தை செய்ய முடியும்?????????????????????????????????????????????????????????????

வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவ விட்டோம்! ...... எதை எதை செய்வோம் என கூறினோமோ ....... அவற்றை இட்டு எமது வளவிற்குள் எதிரியை அழைத்து வந்து அழிந்தோம்!!!!!!!

இவ்வளவு ஆட்பலம், ஆயுத பலத்தையும் வைத்து செய்யாததை, இனியா செய்யப் போகிறோம்??????????

இவ்வளவு அழிவு வந்தும் அங்கீகரிக்காத சர்வதேசம், இனியும் ..............????????????

....... 1983 கால கட்டங்களில் நாம் தமிழர் விடுதலை கூட்டணியினரை நோக்கி கூறினோம் ....... "இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கினோம், நீங்கள் ஒன்றும் செய்யவில்லை! இனியும் செய்ய மாட்டீர்கள்! ஆகவே நீங்கள் ஒதுங்கத்தான் வேண்டும்" ........ இக்கேள்வியை இன்று எம்மை நோக்கி பலர் கேட்கிறார்கள் ..... "1983இல் இருந்து நேற்றுவரை சந்தர்ப்பம் தந்தோம், அதிலும் எம் உழைப்பு, உயிர், உடல் அனைத்தையும் தந்தோம்! இனியும்......" .......!!!!!! பதில் கூற முடியவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விளையாட்டுக் கழகம் , வாசகசாலை , கோவில் நிர்வாகக் குழு எதுவென்றாலூம் .......

நாலு தமிழன் சேர்ந்தால் , ஆறு விதமான கருத்து இருக்கும் ,

ஒரு பொது விஷயத்தில் ஒன்றுபட மாட்டான் தமிழன் . :(

இதுக்குள்ளை ஈழமும் .......

இனி அவன் தாறதை வாங்கிக் கொண்டு , தலை குனிந்து இருக்கட்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

....... 1983 கால கட்டங்களில் நாம் தமிழர் விடுதலை கூட்டணியினரை நோக்கி கூறினோம் ....... "இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கினோம், நீங்கள் ஒன்றும் செய்யவில்லை! இனியும் செய்ய மாட்டீர்கள்! ஆகவே நீங்கள் ஒதுங்கத்தான் வேண்டும்" ........ இக்கேள்வியை இன்று எம்மை நோக்கி பலர் கேட்கிறார்கள் ..... "1983இல் இருந்து நேற்றுவரை சந்தர்ப்பம் தந்தோம், அதிலும் எம் உழைப்பு, உயிர், உடல் அனைத்தையும் தந்தோம்! இனியும்......" .......!!!!!! பதில் கூற முடியவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!

நீ ரெம்ப நல்லவன் என்று எமக்கு தெரியும். இதன் பொருள் என்னவெண்றும் தெரியும், உமது பழைய கருத்துகளை படித்தவருக்கு நீர் யார் என்று புரியும். :rolleyes:

ilankavi Posted Today, 09:06 PM

நந்திக் கடலடியில் எடுத்தது என்டு சொன்னாங்கள்... இப்ப காட்டுக்குள்ள எண்டுறாங்கள்......

நன்றி

நந்திக் கடல் , காடு, குகை ,ஏன்? டக்ளஸ் பன்னாடை முந்தி சொன்னமாதிரி முல்லைத் தீவுக்குள்ள இருந்த மலையெண்டும் சொல்லலாம்

(முல்லைதீவிலை மலை இருக்குதெண்டு சொன்ன முதல் முட்டாள் அத்தியடி குத்தியன்தான்)

இன்னும் என்னென்ன சொல்லப் போறியளோ?

கொட்டிண்டு போவாங்களே! விடுகிற கதையெல்லாம் விடுங்கோடா ! ஆனால்

ஐயன் வரேக்கை பொய்யை மலையாக் குவிச்ச முஞ்சியளை மூட

கறுப்புத் துணியளை இப்பவே தேடி வச்சிடுங்கோடா!

டக்குமாமா சில வேளை ""கன்னத்தில் முத்தமிட்டால்"" படத்தை பாத்திட்டு சொல்லி இருப்பார், மாங்குளத்திலேயே மலை இருக்கு பக்கத்தில் இருக்கிற முல்லைத்தீவில் இருக்காத என நினைத்திருப்பார். :lol: :lol: :lol:

சூப்பர் .. நல்லவேளை தமிழீழம் மலரவில்லை!

இதில இடம் ஊர்வாசம் சொல்ல வரவில்லை என்ன நடந்தது என்று தான் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டுஅரசன் குப்பிற படுத்தான். கை விரிச்சான். உள்ளிருந்தவர்கள் ஓடிய பிறகும் நல்லாத்தான் இருந்தனாங்கள்.

ஆனால் தமிழக அரசன் கால் வாரினான் அவ்வளவு தான்.

ஈழமே மரணஓலம்.

நெடுமாறன் ஜயா இன்று சொல்லி இருக்கிறார் தமிழகத்தில் கிளர்ச்சி வந்தால் தான் ஈழ மக்களுக்கு விடுதலை. செத்த பிணம் போல் ஒன்றும் தெரியாமல் இருக்கு தமிழகம்.

பலஸ்தீன விடுதலை தீ இன்றுவரை அணையாமல் இருப்பதற்கு முதல் காரணம் அரேபிய நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு. வேறு அரேபியர்கள் பலஸ்தீனருக்காக சாக போகவில்லை அனால் மற்றைய அரேபிய மக்களின் தார்மீக ஆதரவு அளப்பரியது.

எங்களுக்கு தமிழகதமிழர் இப்படி ஒரு தார்மீக ஆதரவை கொடுத்து இந்தியாவை கட்டுபடுத்தி வைத்திருந்தால் நாங்கல் சுயநிர்னய உரிமையுடன் கூடிய தீர்வை பெற்றிருக்கலாம்.

சரி தமிழீழம் இல்லை என்று சொல்பவர்கள் சொன்னவர்கள் சிங்களத்திடம் அடிமைப்படாத ஒரு தீர்வை முன்வைத்திருக்க வேண்டும்.

ஒன்ரும் இல்லாமல் பின்பக்கத்தால் வந்து சாம்பலாகி போட்டார்கள். இப்பழி முழுக்க தமிழகத்தையே சாரும். வேற்று ஒருவரும் தார்மீக ஆதரவு தர எங்களுக்கு உலகத்தில் யாரும் இருக்கவில்லை. தமிழகம் வேடிக்கை பார்த்ததானால் வந்த வினை.

யார் என்ன சொன்னாலும் இதுதான் உண்மை.

தமிழகம் கிளர்ச்சி வெடிக்கனும். மத்திய அரசு பயப்படுனும்.. இளைஞர்களை சேர்த்து அங்கு மத்திய அரசுக்கு எதிராக வன்முறையிலாவது இறங்கி தமிழக அரசை பேச வைக்கனும்.

இல்லையேல் ஈழத்தமிழனை சிங்களத்திடம் இருந்து காக்க ஒருவரும் இல்லை

Edited by நேசன்

தமிழகம் கிளர்ச்சி வெடிக்கனும். மத்திய அரசு பயப்படுனும்.. இளைஞர்களை சேர்த்து அங்கு மத்திய அரசுக்கு எதிராக வன்முறையிலாவது இறங்கி தமிழக அரசை பேச வைக்கனும்.

மிக மிக இலகுவான விடயம்.. மிக மிக இலகுவாக தமிழ்நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.... ஏற்படுத்தலாம். இதை பற்றி நான் பலமுறை யாழில் கூறி.. அவை உடனுக்குடன் அகற்றப்பட்டுவிட்டது.. மற்றும் எனக்கும் உங்களுக்குமே இவ்வளவு தெரிஞ்சிறுந்தா... 5,10 வரிசம் முன்னோக்கி சிந்திக்கிண்ற புலிகளுக்கு தெரிங்சிருக்காதா?

இந்தியாவை பார்த்து ஏன் எல்லோரும் பயப்பிடுகிறார்கள். பிசாசாக இருந்தாலும் எங்கட பிசாசு எண்டா? பல நாளாக மனதை குடையும் கேள்வி..

  • கருத்துக்கள உறவுகள்

அது நடக்க வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை!!!!!!!!!!!!!!!!!

:rolleyes::lol: அப்ப இடுப்பு பட்டி கைத்துப்பாக்கி எல்லாம் இராணுவமா அணிவித்தது?
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதிய சில பேரை பார்க்க அழுவதா,சிரிப்பதா என தெரியவில்லை அண்ணை எப்ப காலமாவார் திண்ணை எப்போது காலியாகும் என்ற மாதிரி இருக்கு இவர்களின் கதை.இவ்வளவு காலமும் எமக்காக போராடிய தலைவர் நலமாய் எங்கோர் மூலையில் இருந்தாலே காணும் தலைவர் இருக்குறார் என தெரிந்தாலே மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் அதை விட தலைவர் எப்போவே கூறி விட்டார் இனி மேல் போராட்டம் புலம் பெயர் இளையோர் கையில் தான் தங்கி உள்ளது என ஆகவே புலம் பெயர் நாட்டில் அகிம்சை வழி போராட்டத்தை தீவிரமாக முன்னெடுங்கள்.

//வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவ விட்டோம்// என ஒரு சகோதரர் எழுதியிருந்தார் அப்போது அவர்கள் கொடுத்த அரைகுறை தீர்வை புலிகள் ஏற்று இருந்தால் உட‌னே சொல்லி இருப்பீர்கள் இவ்வளவு காலம் போராடி மாவீர‌ர்களும் மக்களும் மர‌ணித்தது இந்த அரைகுறை தீர்வுக்காகவா எனக் கேட்டு இருப்பீங்கள்?

எல்லாம் முடிந்த பிறகு புலியை விமர்சிக்கும் நீங்கள் ஏன் யுத்தம் தொடங்கும் முன் புலியிடம் கூறி இருக்கலாமே யுத்தம் வேண்டாம் அப்போது நீங்களும் சேர்ந்து தானே யுத்தத்தை ஆதரித்தீர்கள். உங்களிலும் பார்க்க டக்லஸ்,சங்கரி,சித்தார்தன் போன்றோரும் அவர்களை புலம் பெயர் நாட்டில் இருந்து பின் பற்றுவோர் எவ்வளவோ மேல் அவர்களை பொறுத்த வரை அன்றில் இருந்து இன்று வரை புலி அழிய வேண்டும் ஆனால் நீங்கள் புலி பலமாய் இருந்தால் புலிக்கு வால் பிடிப்பதும் புலி அழிந்ததும் புலியை கடுமையாக விமர்சிப்பதுமே உங்கள் குணம் என நினைக்கிறேன்.கடைசியாக இவ்வளவு சனம் செத்திருந்தாலும் புலி இடங்களை இழக்காமல் இருந்திருந்தால் பேசாமல் இருந்திருப்பீங்கள் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.