Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா படைத் தலைமையகத்தில் பாரிய வெடிவிபத்து: பெருமளவான ஆயுதங்கள் அழிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன செய்தி மூன்று தினங்களுக்கு முன்னர் வன்னியில் தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்திற்க்கு அதிர்ச்சி வைத்தியம் வழங்கப்பட்டுள்ளது. இது உண்மையான தகவல்!

சில விடயங்கள் நடந்துள்ளன...... ஆனால் அதை வெளியீட தயக்கம் எம்மில் உண்மையை ஏற்க இப்ப பலர் இல்லை. இராணுவ பிரச்சாரத்திற்க்குள் அமிழ்ந்துள்ளனர்.

தலைவர் வந்தாலும் நம்பமாட்டினம்!!!

கிளம்பீட்டாங்கய்யா கிளம்பீட்டாங்க

வவுனியா முகாமில காணாம போன 13000 தொகைய 20000 ஆக ஆக்காம விடமாட்டம் என்டு தமிழரே கங்கணம் கட்டிக்கொண்டு நின்டா நாங்க என்ன செய்யிறது.

கொஞ்ச நாளைக்கு எங்கட சுய இன்ப செய்திகளை அடக்கி வச்சிருக்கலாமே ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அவுத்து விட்டனான்.. ஆனால் மோகன் அண்ணா வந்து இழுத்து கட்டி விட்டுட்டார் :(

அந்தோனியாருக்கு நேத்தி வைச்சு இளைக்கட்டியிருக்கிறீங்களோ ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

Largest ammunition dump explodes in SLA Vavuniyaa camp

[TamilNet, Tuesday, 09 June 2009, 13:08 GMT]

Residents of Eerapperiyaku'lam in Vavuniyaa reported hearing loud explosions, and seeing fire from the ammunition dump of the 211- Due Command of the Sri Lanka Army (SLA) in Vavuniyaa from 6:00 p.m. Tuesday. The explosions have been continuing for more than an hour, according to reports from Vavuniyaa. The ammunition dump is one of the largest used by the SLA, military observers said.

Further details were not available.

Similar explosions were also reported in Jaffna at Mayiliddi SLA camp on Saturday.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலே பெரிய சந்தேகங்கள் இருக்கு ஆதாரம் இல்லாமல் காணமற் போனவர்களையும் தடைசெய்யபட்ட ஆயுதங்களையும் அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசு இறங்கியிருக்கலாம்.அல்லது புலிகளை அழிச்சாச்சு அரசியல் தீர்வை வையுங்கோ இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றுங்கோ என்று உலக நாடுகள் சொல்ல முதல் இன்னும் அவையளை முற்றாக அழிச்சு முடிக்க இல்லை என்று சொல்லி மக்களைத் தடுத்து வைக்கவும் புலிகளை மீண்டும் ஒன்று சேர விடாமல் தடுக்கவும் தொடர்ந்தும் உலக நாடுகளின் அழுத்தத்தைக் குறைக்கவும் முயற்சிக்கலாம்.இன்னும் கொஞ்ச நாளையிலே அவையளே தலைவர் உயிரோடை இருக்கிறார் என்று உண்மையைப் போட்டு உடைத்தாலும் ஆச்சரியமில்லை.அல்லது ~ அவையின்ர வேலையாகக் கூட இருக்கலாம~;. யாருடைய வேலையாய் இருந்தாலும் மாப் புளிக்கிறது அப்பத்திற்கு நல்லது தானே.நாம நம்மட கடமையைத் தொடர்ந்து செய்வோம்,

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சந்தோசப்பட எதுவுமில்லை கடந்தகாலங்களில் தமிழின அழிப்பிற்காக பயன்படுத்திய சட்டவிரோத, சர்வதேசரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களினதும,; இராசாயன ஆயுதங்களினதும் மிச்சசொச்சங்களே தற்செயலான விபத்து என காரணம் காட்டப்பட்டு திட்டமிட்டரீதியில் அழிக்கப்படுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இதிலே பெரிய சந்தேகங்கள் இருக்கு ஆதாரம் இல்லாமல் காணமற் போனவர்களையும் தடைசெய்யபட்ட ஆயுதங்களையும் அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசு இறங்கியிருக்கலாம்.அல்லது புலிகளை அழிச்சாச்சு அரசியல் தீர்வை வையுங்கோ இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றுங்கோ என்று உலக நாடுகள் சொல்ல முதல் இன்னும் அவையளை முற்றாக அழிச்சு முடிக்க இல்லை என்று சொல்லி மக்களைத் தடுத்து வைக்கவும் புலிகளை மீண்டும் ஒன்று சேர விடாமல் தடுக்கவும் தொடர்ந்தும் உலக நாடுகளின் அழுத்தத்தைக் குறைக்கவும் முயற்சிக்கலாம்.இன்னும் கொஞ்ச நாளையிலே அவையளே தலைவர் உயிரோடை இருக்கிறார் என்று உண்மையைப் போட்டு உடைத்தாலும் ஆச்சரியமில்லை.அல்லது ~ அவையின்ர வேலையாகக் கூட இருக்கலாம~;. யாருடைய வேலையாய் இருந்தாலும் மாப் புளிக்கிறது அப்பத்திற்கு நல்லது தானே.நாம நம்மட கடமையைத் தொடர்ந்து செய்வோம்,

உண்மை வேற கற்பனை வேற.

பிரபாகரன்(புலிகள்) தற்போது உயிரோடு இருக்கிறார்கள் என்ற செய்தி எங்களை விட சிங்கள அல்லது இந்திய வடக்கதைகளுக்கு தேவையய உருவாக்கி விட்டது.

ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் இவை கொஞ்சம் பொறுமை வேண்டும். எதுவாக இருந்தாலும் உண்மை வெளிவரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் இவை கொஞ்சம் பொறுமை வேண்டும். எதுவாக இருந்தாலும் உண்மை வெளிவரும்.

புரியுது ஆனா புரியல

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் ஆனால் இருக்காது.

இருக்கும் ஆனால் இருக்காது.

தம்பி சொல்லுற மாதிரி பூ என்றும் சொல்லலாம் நான் சொல்லுறது போல புஷ்பம் என்றும் சொல்லலாம். :unsure::(

உதையும், மயிலிட்டியிலயும் நடந்ததை வைச்சு இனி ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்கிவிட்டது எண்டு நாளைக்கு எங்கடை ஆய்வாளர்கள் துவங்கப்போறாங்கள்.

கோத்தா ராஜீனாமா... இராணவ ஆயுத கிடங்கில் தீ விபத்து....

ம்ம்ம்... நீங்களே ஆய்ஞ்சு ஆய்ஞ்சு பாருங்கோ...

இராணுவத்தின் திட்டமிட்ட நடவடிக்கை... :unsure:

வவுனியா ஜோசப் முகாமில் தான் கைது செய்த போராளிகளில் அனேகரை வைத்து இருந்தான்... போராளிகள் அனைவரையும் வெடிவிபத்தில் கொல்ல நிகள்த்தப்பட்ட சதி இதுவாக இருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிட்டியிலும் ஈரப்பெரியகுள முகாமிலும் அப்பாவி இளைஞர்கள், யுவதிகளை குண்டு வைத்து சிறிலங்கா அரசு கொலை செய்திருக்கலாம்.

வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத் தலைமையகத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பெருமளவான ஆயுதங்கள் அழிவடைந்துள்ளதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னிப் பகுதிக்கான படையினரின் படைத் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5:45 நிமிடமளவில் பாரிய வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பெருமளவிலான ஆயுதங்கள் அழிவடைந்துள்ளன.

படைத் தலைமையகத்திற்கு வெளியே உள்ள ஆயுதக்கிடங்கே வெடித்து சிதறியுள்ளது. அந்தப் பகுதியில் பீரங்கி எறிகணைகள் அதிகளவில் சேமிக்கப்பட்டிருந்தன.

விபத்தினால் ஏற்பட்ட தீ இரு மணிநேரமாக தொடர்ந்து எரிந்துள்ளதுடன், பல தொடர் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, சுற்றாடலில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பல வீதிகளும் மூடப்பட்டன என தெரிவித்துள்ளன.

இதனிடையே, களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டிருந்த காலாவதியான வெடிபொருட்களே வெடித்து சிதறியதாக படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனினும் இது குறித்த விசாரணைகளை தொடங்கப் போவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

யாழ். குடாநாட்டின் கடந்த சனிக்கிழமை கூட்டுப்படைத் தலைமையகத்தில் இவ்வாறானதொரு வெடிவிபத்து ஏற்பட்டிருந்ததும் அது தொடர்பில் அரசு சிறப்பு விசாரணைகளை தொடங்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதினம்

எல்லோறும் அந்த விறுவிறுப்பான பத்திரிகையின் பிரதியை வாங்க முந்துங்கோ !!!!!!!!!!!! தம்மை நம்பாதவன் எல்லம் மடயன் என்று என்பார்கள்

வவுனியாவின் இராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் என வைகோ தெரிவிப்பு

வவுனியாவில் இலங்கை இராணுவ ஆயுதக் களஞ்சியம் மீது, புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தென்காசியில் நெல்லை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக செயல் வீரர்கள் கூட்டம், நாஞ்சில் சம்பத் தலைமையில் இடம்பெற்றது.

அக்கூட்டத்தில் வைகோ உரையாற்றுகையில்,

இலங்கையில் இராணுவம், கர்ப்பிணிகளையும், சிசுக்களையும் கொன்ற சம்பவங்கள், உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

http://www.nerudal.com/nerudal.8152.html

இலங்கைப் பிரச்னையில், திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோபாலரத்னம், சிவப்பிரகாசம் தற்கொலை செய்து, உயிர் நீர்த்தனர்.

அவர்களுக்கு கூட இரங்கல் தெரிவிக்காதவர், தமிழக முதல்வர் கருணாநிதி என வைகோ குற்றம்சுமத்தியுள்ளார்.

வவுனியாவில் இலங்கை இராணுவ களஞ்சியத்தின் மீது புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தி, ஆயுதங்களை எரியச் செய்துள்ளனர். ஆனால், அந்த நிகழ்வு தற்செயலானது என, இராணுவம் கூறுவதாக வைகோ தெரிவித்தார்.

வவுனியாவில் இலங்கை இராணுவ ஆயுதக் களஞ்சியம் மீது, புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புலிகள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அரசின் பிடியில் சிக்கியுள்ள மக்களையும் சரணடைந்ததாகக் கூறப் படும் போராளிகளையும் விடுவிக்க பலரும் முயன்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு தேவை தானா?

  • கருத்துக்கள உறவுகள்

உருப்பட்ட மாதிரித்தான். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.