Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல!:இந்திய உளவுத்துறை 'ரா' அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் "கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது : தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்து வந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, "பிரபாகரன் போர்க்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…" என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது!

தமிழக முதல்வர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங்கிடமே இவ்வாறு கடுமையாக பேசியிருப்பதன் காரணமே, அவருக்கு பிரபாகரன் மரணம் தொடர்பான அச்சம் பெருமளவு இருந்ததுதான் என்று, அரசியில் நோக்கர்கள் கூறுகின்றனர்! இதன் அடிப்படையில் 'நெற்றிக்கண்' புலனாய்வுக் குழு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் தொகுப்பு :

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழக முதல்வர் கலைஞர் கண்ணீர் கவிதை ஒன்றை 'முரசொலி'யில் எழுதினார்! ஜெயலலிதா உட்பட பலரும் இதனை கண்டித்தார்கள்!

பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறுவதை, முதல்வர் கலைஞர் நம்பவில்லை என்பதால்தான் பிரபாகரன் தொடர்பாக கண்ணீர் அஞ்சலி கவிதையை கலைஞர் எழுதவில்லை! 'மாவீரன்' பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்கு இது ஒரு நிரூபணம்! அடுத்து…

'மாவீரன்' பிரபாகரனின் கை விரல் ரேகை சென்னை போலீசாரால் 1982-ல் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பில் இருக்கின்றது.

கரிகாலன் என்பது – பிரபாகரனின் புனை பெயர்களில் ஒன்று. பிரபாகரன்-சிறிசபாரத்தினம் துப்பாக்கிசண்டை விபரம் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகின்றது. அவரது உத்தரவின்படி இந்த துப்பாக்கி சண்டை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்படுகின்றது!

பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (கமிசனர் ஆபீஸ்) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு டிஜிபி சண்முகம் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தார்! பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் ஆகிய மூவரது கைவிரல் ரேகைகளும் அங்க-அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை டிஜிபி சண்முகம் பதிவு செய்தார்!

இதை தவிர பிரபாகரனின் கை அங்க அடையாளங்களும் ரேகைப்பதிவுகளும் இந்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ கூட கிடையாது என்று புலிகளின் தலைமை வட்டாரம் கூறுகிறது!Image

1986-ல் சென்னை – திருமங்கலத்தில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார் பிரபாகரன். பெசன்ட் நகரில் வீட்டுவசதி வாரிய வீட்டில் பிரபாகரனின் தளபதிகளான கிட்டு மாத்தையன் பேபி சுப்பிரமணியம் போன்ற தளபதிகள் தங்கியிருந்தனர்! அந்த சமயம் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவுப்படி விடுதலைப்புலிகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்! திடீரரென்று விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு! முதல்வர் எம்.ஜி.ஆரால் இதனை தடுத்து நிறுத்த இயலாத சூழல்!

அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் கிட்டு மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிசனர் தேவாரம் தலைமையிலான குழு சுற்றிவளைத்து கைது செய்தது. சென்னை பொலீஸ் கமிசனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்! இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் எட்டு கோணங்களில் போலிசார் புகைப்படம் எடுத்தனர்! அடுத்த நாள் அதிகாலை இந்திய இராணுவ விமானத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு சிங்கள இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளாதவாறு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

1982-ல் பாண்டி பஜாரில் போலிஸ் ஸ்டேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனது கை விரல் ரேகைப் பதிவுகளும்….

1986-ல் சென்னை போலிஸ் கமிசனர் தேவாரம் எடுத்த எட்டு கோணங்களிலான புகைப்படமும்…

தமிழக 'க்யூ' பிராஞ்ச் போலீசாரிடம் அந்தந்த கால கட்டங்களில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது! தற்போது 'க்யூ' பிராஞ்ச் ஐ.ஜி – சங்கர் ஜுவால்!

சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது ஒரிஜினல் பிரபாகரன்தானா என்பதை உறுதி செய்து கொள்ள இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவு பிரதமர் அலுவலக கட்டளைப்படி முயற்சிகளை மேற்கொண்டது!

அந்த அமைப்பின் தென்னிந்தியப் பகுதிக்கான இணை – டைரக்டர் விஜயசங்கர். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இலங்கை - இந்தியா தொடர்பான பிரச்சினைகளை இவர்தான் மேற்கொண்டுள்ளார்! இவரது அலுவலகம் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவில் கமுக்கமாக செயல்படுகின்றது! பங்களா வாடகை ரூ.3 லட்சம்.

அந்த அமைப்பின் இணை – டைரக்ரர் விஜய சங்கர் தமிழக க்யூ பிராஞ்ச் ஐ.ஜி சங்கர் ஜுவாலை மே 18-ம் தேதி இரவு தனது சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து 1982-ல் சென்னை போலீசாரால் எடுக்கப்பட்ட பிரபாகரன் கைவிரல் ரேகைகளின் பிரதியையும் 1986-ல் எட்டு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்பட பிரதிகளையும் பெற்றார்!

பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர் தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடை அறிவியல் நிபுணர்களுடன் இலங்கைக்கு பறந்து சென்றார்! இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை மே 19-ம் தேதி இரவு நேரில் சந்தித்தார். சிங்கள ராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கைவிரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று பொன்சேகா முன்னிலையிலேயே தன்வசம் உள்ள- தமிழகக் க்யூ பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிரபாகரனின் கைவிரல் ரேகைகளை தடைய அறிவியல் நிபுணர்களின் துணையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்! அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரேமாதிரியாக இல்லாததுடன் ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க அடையாளங்களும் ஒன்று கூட ஒத்துப்போகவில்லை!

இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான அந்த அமைப்பின் தென் இந்திய ஆணை டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இந்தியா திரும்பினர்!

இது தொடர்பான விரிவான அறிக்கையை 'ரா' டைரக்டர் கே.சி.வர்மா வழியாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தனர்!

இந்த முழு விபரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது!

http://www.adhikaalai.com/index.php?option...a&Itemid=52

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை ஒரிரு நாட்களுக்கு முன் போட்டேன். தூக்கிட்டாங்களே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை ஒரிரு நாட்களுக்கு முன் போட்டேன். தூக்கிட்டாங்களே

நீங்கள் இணைத்திருந்த போது நான் படிக்கக் கிடைக்கவில்லை. இச்செய்தி 12.06.2009 இல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது நேற்று முந்தினம்.

இது செய்தி. அதில் உண்மைகளை ஆராய வேண்டியது வாசகர்களின் கடமை. நிர்வாகம் ஏன் தூக்கினாங்க என்பது தெரியவில்லை. ஒருவேளை நிர்வாகத்துக்கு ஏதேனும் ரகசிய புலனாய்வுத்தகவல்கள் வந்திருக்குமோ என்னமோ..??! :rolleyes:

ஒ.... அப்ப ஒரே செய்தியைத்தான் மாறி மாறி போடுகிறார்களா?

நான் முதலே படிச்சு கருத்தும் எழுதினனான் ஏன் தூக்கினவையாம்?அது காலைக்கதிர் என்ற இனையம்

Edited by Jil

1982-ல் பாண்டி பஜாரில் போலிஸ் ஸ்டேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனது கை விரல் ரேகைப் பதிவுகளும்….

அது தமிழ்நாட்டு பொலிஸுக்கு லஞ்சம் கொடுத்து திருப்பி வாபஸ் வாங்கியாச்சாம் என்று புண்ணாக்கு .கொம் (www.punnaakku.com)போட்டுஇருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அது தமிழ்நாட்டு பொலிஸுக்கு லஞ்சம் கொடுத்து திருப்பி வாபஸ் வாங்கியாச்சாம் என்று புண்ணாக்கு .கொம் (www.punnaakku.com)போட்டுஇருக்கு

அப்படியா சரியான புண்ணாக்காய் இருக்கிருங்களப்பா? :icon_mrgreen:

Edited by nunavilan

அப்படியா சரியான புண்ணாக்காய் இருக்கிருங்களப்பா? :icon_mrgreen:

<_<:unsure: ஜயோ இது ஒரு இனவெறித்தாக்குதல் இதை நான் ஜக்கிய நாடுகளுக்கு எடுத்து சென்று நியாயம் கேட்பேன் :lol:

இந்த செய்தியை ஒரிரு நாட்களுக்கு முன் போட்டேன். தூக்கிட்டாங்களே

ஆம். கறுப்பி நானும் வாசித்தேன் ஆனால் ஒரு சில மணித்தியாலத்தில் தூக்கிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கரிகாலன் என்பது – பிரபாகரனின் புனை பெயர்களில் ஒன்று. பிரபாகரன்-சிறிசபாரத்தினம் துப்பாக்கிசண்டை விபரம் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகின்றது. அவரது உத்தரவின்படி இந்த துப்பாக்கி சண்டை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்படுகின்றது!

பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (கமிசனர் ஆபீஸ்) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு டிஜிபி சண்முகம் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தார்! பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் ஆகிய மூவரது கைவிரல் ரேகைகளும் அங்க-அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை டிஜிபி சண்முகம் பதிவு செய்தார்!

பிரபாகரனும் சிறியும் துப்பாக்கியில் சண்டை பிடித்தார்களா?? எப்பவாம்?? இதிலிருந்து இவங்கடை புலனாய்வு எவ்வனவு தூரம் ஆய்ந்திருக்கினம் என்று புரியிது.. தமிழ்நாடு பாண்டி பாஜாரில் சுடுபட்டது உமாமகேஸ்வரனும் பிரபாகரனும்.. அப்பொழுது ஊமாமகேஸ்வரனுடன் கண்ணன் என்பவரும்.. பிரபாகரனுடன் இராகவனும் அருணாவும் நின்றிருந்தனர்.. நடந்தது 82ம் ஆண்டுஅத்ன்பொழுதான் அவர்களை தமிழ்நாடு காவல்த்துறை கைது செய்தது... ஆளாளுக்கு எங்கள் இழவுகளையும் வித்து காசாக்கிறாங்கிறாங்கள் இந்தியாவிலை கேவலம் கெட்டவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ரிகாலன் என்பது – பிரபாகரனின் புனை பெயர்களில் ஒன்று. பிரபாகரன்-சிறிசபாரத்தினம் துப்பாக்கிசண்டை விபரம் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகின்றது. அவரது உத்தரவின்படி இந்த துப்பாக்கி சண்டை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்படுகின்றது!

பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (கமிசனர் ஆபீஸ்) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு டிஜிபி சண்முகம் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தார்! பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் ஆகிய மூவரது கைவிரல் ரேகைகளும் அங்க-அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை டிஜிபி சண்முகம் பதிவு செய்தார்!

அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் கிட்டு மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிசனர் தேவாரம் தலைமையிலான குழு சுற்றிவளைத்து கைது செய்தது. சென்னை பொலீஸ் கமிசனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்! இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் எட்டு கோணங்களில் போலிசார் புகைப்படம் எடுத்தனர்! அடுத்த நாள் அதிகாலை இந்திய இராணுவ விமானத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு சிங்கள இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளாதவாறு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

புலநாய்வு எண்ட பெயரிலை எங்கடை அவலங்களையும் நல்லா வியாபாரம் செய்யிறாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்திருந்த போது நான் படிக்கக் கிடைக்கவில்லை. இச்செய்தி 12.06.2009 இல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது நேற்று முந்தினம்.

இது செய்தி. அதில் உண்மைகளை ஆராய வேண்டியது வாசகர்களின் கடமை. நிர்வாகம் ஏன் தூக்கினாங்க என்பது தெரியவில்லை. ஒருவேளை நிர்வாகத்துக்கு ஏதேனும் ரகசிய புலனாய்வுத்தகவல்கள் வந்திருக்குமோ என்னமோ..??! :icon_mrgreen:

ரா மட்டும் அதிர்ச்சி இல்லை. கறுப்பிக்கும் அதிர்ச்சிதான்.

இன்று புலனாய்வு நிறைவடைந்த செய்தி வந்திருக்குமோ? <_<

கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது!

http://www.adhikaalai.com/index.php?option...a&Itemid=52

மிக விரைவில் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவோர் சங்கதிடம் இருந்து அடி வாங்கப் போறியள்.

:icon_mrgreen:<_<:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் அதிகாலை இந்திய இராணுவ விமானத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு சிங்கள இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளாதவாறு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

அதெப்படி? சிறீலங்காவுக்கு தெரியாமல் இறக்கி விட்டவையாமோ? முல்லைத்தீவு விமான நிலையத்திலயா இருக்குமோ? :icon_mrgreen:

பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர் தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடை அறிவியல் நிபுணர்களுடன் இலங்கைக்கு பறந்து சென்றார்! இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை மே 19-ம் தேதி இரவு நேரில் சந்தித்தார். சிங்கள ராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கைவிரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று பொன்சேகா முன்னிலையிலேயே தன்வசம் உள்ள- தமிழகக் க்யூ பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிரபாகரனின் கைவிரல் ரேகைகளை தடைய அறிவியல் நிபுணர்களின் துணையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்! அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரேமாதிரியாக இல்லாததுடன் ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க அடையாளங்களும் ஒன்று கூட ஒத்துப்போகவில்லை!

இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான அந்த அமைப்பின் தென் இந்திய ஆணை டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இந்தியா திரும்பினர்!

இது தொடர்பான விரிவான அறிக்கையை 'ரா' டைரக்டர் கே.சி.வர்மா வழியாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தனர்!

இந்த முழு விபரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது!

பிரபாகரனும் சிறியும் துப்பாக்கியில் சண்டை பிடித்தார்களா?? எப்பவாம்?? இதிலிருந்து இவங்கடை புலனாய்வு எவ்வனவு தூரம் ஆய்ந்திருக்கினம் என்று புரியிது.. தமிழ்நாடு பாண்டி பாஜாரில் சுடுபட்டது உமாமகேஸ்வரனும் பிரபாகரனும்.. அப்பொழுது ஊமாமகேஸ்வரனுடன் கண்ணன் என்பவரும்.. பிரபாகரனுடன் இராகவனும் அருணாவும் நின்றிருந்தனர்.. நடந்தது 82ம் ஆண்டுஅத்ன்பொழுதான் அவர்களை தமிழ்நாடு காவல்த்துறை கைது செய்தது... ஆளாளுக்கு எங்கள் இழவுகளையும் வித்து காசாக்கிறாங்கிறாங்கள் இந்தியாவிலை கேவலம் கெட்டவர்கள்

:icon_mrgreen:

அதெப்படி? சிறீலங்காவுக்கு தெரியாமல் இறக்கி விட்டவையாமோ? முல்லைத்தீவு விமான நிலையத்திலயா இருக்குமோ?

அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை

செய்தி வாசிக்கலாம் ஆனால் கெள்வி கேட்கக்கூடாது.

இதை மீறினால் கிடைக்கும் தண்டனை உங்களால் சகிக்கமுடியாது.

அதாவது

சூறாவளி நான் அழுதிடுவேன்...

மற்றவன் குடும்பியில பேன் பார்த்த "றோ"விற்கு தன் தலையிலையே மொட்டையடிக்கப் போறாங்கள் என்று இன்னும் புரியவில்லை.

காலங்கடந்து புரியும்போது, எல்லாமே புரியும் இந்த நரிகளுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் கட்டுரையில் வரும் தவறான மிகப் பழைய செய்திகளைச் சுட்டி காட்டுவதன் மூலம் மொத்தக் கட்டுரையும் அது சொல்லும் உட் கருத்தும் தவறானவை என்று நிறுவ முற்படுகிறார்.

என்னை பொறுத்த மட்டில் இறந்து விட்டார் என்று சொல்லப்படும் ஒருவர் இல்லை என்று மறுக்கும் வரையும் அதே போல் இருக்கிறார் என்று சொல்ல படுபவர் இல்லை என்று தெரியும் வரையும் அதை ஆரய்வது கேவலமான ஒன்று.

அதாவது இந்திய காலத்தில் கூட தலைவர் ஈறந்து விட்டார் என்று நம்பியவ்ர்களும் உண்டு இல்லை என்று நம்பியவர்களும் உண்டு ஆனால் அபோது எல்லாம் இந்த முரன் பாடு வந்ததில்லை ஆனால் இபோது மட்டும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகமாக இருக்கிறோம் ஏன்?

அம்மா சொல்கிறார் நீ எனது கனவருக்கு பிறந்த செல்வ குழந்தத எனு ஊரார் சொல்கிறார் வீட்டு வேலைக் காரனுக்கு பிறந்தவன் என்று இந்த் ஆராச்சி தேவைய்யா?

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, நெடுக்ஸ்!

உங்கள் ஆதங்கம் புரிகிறது, எங்களது தலைமைப்பீடத்தைப் பொறுத்தவரை இரண்டுவிதமான வழிகளில் செயல்படவேண்டிய கட்டாயம் ஒன்றுள்ளது.

ஒன்று எமது மக்களுக்காக மற்றது உலகத்துக்காக.

கறுப்பி, நெடுக்ஸ்!

உங்கள் ஆதங்கம் புரிகிறது, எங்களது தலைமைப்பீடத்தைப் பொறுத்தவரை இரண்டுவிதமான வழிகளில் செயல்படவேண்டிய கட்டாயம் ஒன்றுள்ளது.

ஒன்று எமது மக்களுக்காக மற்றது உலகத்துக்காக.

வல்வைமைந்தன்!

மிகச்சரியாக கணித்துள்ளீர்கள்.

இந்த யதார்த்தத்தினை உணரும் பண்பு,தெளிவு நம் அனைவரிற்கும் பிறக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அ"றோ'கரா!

பிளபஸ்டிக் செர்ஜரி வல்லுனர்களை இலங்கைக்கு அழைத்து சென்றதே அவர்கள்தாம். பின்பு அதிர்சியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.