Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளியகப் புலனாய்வுப் பணியகத்தின் அறிக்கை

Featured Replies

diltstatementtamil1page.jpg

diltstatementtamil1page.jpg

  • Replies 93
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
:)
:):)

ஓகே. அடுத்தது யாரோட அறிக்கை.. விரைவில் எதிர்பார்க்கிறோம்.

:)

  • கருத்துக்கள உறவுகள்

எங்;கட இயக்கத்திற்கு அறிக்கை விடுறதுக்கு கூட மக்களுக்கு நல்லா அறிமுகமான ஆட்கள் இல்லாமல் இருக்கு.புலனாய்வுத் துறையினர் பாதகாப்பான இடத்திற்கு போகக் கூடிய நிலையிலிருந்தும் தலைவரால் போக முடியாமல் இருந்திருக்கு.இதுவரை வெளிவந்த அறிக்கைகளைச் சீர்தூக்கி பார்த்ததில் மக்களுக்கும் ஒரு தெளிவு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே! எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வீரமரணம் அடைந்ததாகவே இருக்கட்டும். இப்ப அதுக்கு என்ன. அவரும் ஒரு மனிசன் தானே. ஒரு காட் அட்டாக்கோ அல்லது ஒரு நோயோ வந்து இறந்திருந்தா ஏற்றுக் கொண்டிருப்பம் தானே. அதுபோல இதுவும் என்று நினைச்சிட்டு இருப்பம். ஆனால் தலைவரின் இலட்சியம் என்பது இறக்காது. அது அவரை வாழ வைக்கும். தமிழீழத் தனியரசு அமையும் வரை தலைவர் எம்மை வழிநடத்திக் கொண்டே இருப்பார். அந்தளவுக்கு அவர் சக்தி படைத்த இலட்சியத்தை வகுத்து வழிகாட்டலை செய்திருக்கிறார்.

தேசிய தலைவர் வீரமரணம் அடைந்தது என்றால் கூட அது வீரம்.. தியாகமே அன்றி.. அழுவதற்கோ வருந்துவதற்கோ அதில் எதுவும் இல்லை. காரணம் வீரன்.. மரணிப்பது அழுவதற்கல்ல. இன்னொரு வீரனிடம் தனது இலட்சியத்தை ஒப்படைக்கவே..! தமிழர்கள்.. தமிழீழத்தை தாகமாகக் கொண்டிருப்பின்.. அவர்கள் அழமாட்டார்கள். தலைவர் வகுத்த வழியில் அவரின் நினைவுகளோடு இறுதி இலட்சியம் வரை நடப்பார்கள்.

சேகுவரா மாண்ட பின்னும் வாழ்கிறார். அதுபோல் தலைவரும் வாழ்வார். தலைவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக விதைத்த இலட்சிய விதை பெரும் விருட்ச்சமாக இருக்கும் போது.. அவர் மரணத்தை வென்று வாழ்வார் என்பதை மட்டும் சொல்லலாம். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்ஆனால் தாங்கமுடியவில்லை

என்னால் ஏற்கமுடியாது

ஐPரணிக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

எங்;கட இயக்கத்திற்கு அறிக்கை விடுறதுக்கு கூட மக்களுக்கு நல்லா அறிமுகமான ஆட்கள் இல்லாமல் இருக்கு.புலனாய்வுத் துறையினர் பாதகாப்பான இடத்திற்கு போகக் கூடிய நிலையிலிருந்தும் தலைவரால் போக முடியாமல் இருந்திருக்கு.இதுவரை வெளிவந்த அறிக்கைகளைச் சீர்தூக்கி பார்த்ததில் மக்களுக்கும் ஒரு தெளிவு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

:) தெளிவாக இருகிறோம் :)

:):):(
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு செய்தி மிகத்தெளிவாகச் சொல்லப்படுகிறது. தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று விவாதிப்பதை விடுத்து, அவர் இனி நேரடியாக வரமாட்டார் என்று நம்பிக்கொண்டு, பிரிந்து நில்லாமல் எல்லாரும் ஒற்றுமையாக இலட்சியத்தை நோக்கிய பயணத்தை தொடருங்கள்.

சிலர் வதந்தி பரப்புவது போல எமக்கிடையே (இயக்கத்துக்குள்) பிளவுகள் இல்லை. நாடு கடந்த அரசு முயற்சிக்கு அனைவரும் உங்களால் ஆன பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நல்குங்கள்.

நெருக்கடியான சூழ்நிலைகளில் தவறுகள் தவிர்கமுடியாதவை

சரியான தகவலை தற்போது வெளியிட்டமைக்கு நன்றி

"மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்." - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

எல்லோறும் விவாதிக்க முதல் ஏன் இப்படிபட்ட ஒர் அறிக்கை விடப்பட்டது என்பதை யோசியிங்கோ??

தலைவரை முடிக்க வேண்டும் என்பதே எமது எதிரிகளின் அவா, அதை மீறி எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், என்வே இந்த நேரத்தில் தலைவர் உயிருடன் உள்ளார் என்பது தெரிந்தால் நாம் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீண் தான், எனவே இப்போது புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரால் புற நிலை அரசு அமைக்கும் திட்ட்ம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, என்வே இந்த நிலையில் தலைவர் உயிருடன் இருக்கிரார் என் அறிவிக்கும் பட்சத்தில் அவ் அமைப்பும் பயங்கரவாத் அமைப்பு என் கூறப்பட்டு புறக்கணிக்கப்படும், இவ்விடயம் நேர்றே கள உறுப்பினர்கள் பலரால் குறிப்பிடப்பட்டது. எனவே

1.புற நிலை அரசு சம்பந்தமாக புலிகளின் உத்தியோக பூர்வ அறிக்கை வந்த பின்னர் இப்படியான ஒரு அறிக்கை வருகிரது

2.லண்டனில் நடைபற்று வந்த போராட்டம் முடிந்த பின்னர் இவ்வாரான அறிக்கை வருகிரது

என்னை பொறுத்த வரையில் புலிகள் எமது போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக தெள்வாகவே இருக்கின்ரனர் ஆனால் இங்கே எம்மவர் தான் தமக்குள்லே குடும்பிப் பிடி சண்டை

அதிவிட இது இன்னமும் tamil net இல் வரவில்லை, அதிவிட யார் நினைத்தாலும்

இப்படியான ஒரு அறிக்கையை யார் நினைத்தாலும் ஒரு பேப்பர் துண்டில் அச்சிட்டு வெளியிடலாம்.

நெடுக்கர் கூறியது போல சுதந்திர தாகத்துடன் இருப்பவர் எவரும் இவ்வறிக்கையை கண்டு கலங்கப்போவது இல்லை

இப்போதெல்லாம் தலைவர் பற்றிய அறிக்கைகளுக்கு ரஜனி பட ரிலீஸ் போல் ஆகிவிட்டது :)

மிகவிரைவில் இன்னுமோர் அறிக்கை வரும் பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து

மீண்டும் குழப்பாமல்

அந்த நல்ல இதயத்தை

அந்த நல்ல தகப்பனை

அந்த நல்ல மனிதரை

அந்த நல்லபோராளியை

அந்த நல்ல தளபதியை

அந்த நல்ல தலைவனை

எம் தேசியத்தலைவனை

ஒருகணம் ஒருகணம் நிம்மதியாய்

கண்மூடிபிரார்த்திக்க அனுமதியுங்கள்

தலைவர் எம்முடன் இருக்கிறார்

அவர் இறை அவதாரம்

அவருக்கு எங்கே மறைவு

விடுங்கள்

நிம்மதியாய் ஒரு நிமிடம்

என் தானைத்தளபதிக்காய்............................

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

என் தலைவனுக்காக ஒரு பாட்டாவது யாராவது எழுதமாட்டீர்களா?

கேட்கவேண்டும்போல் உள்ளது

diltstatementtamil1page.jpg

diltstatementtamil1page.jpg

இந்த அறிக்கை எந்த அளவுக்கு உண்மை என்பதை யாழ் நிர்வாகம் உறுதி செய்த பின்பு கருத்துக் களத்தில் பிரசுரிக்க அனுமதி அளிக்க வேண்டுகிறேன்...

-நன்றி-

நீங்கள் படும் பாட்டைப் பார்த்தால் நீங்கள் தான் அந்த அறிக்கையை தயாரித்தவரா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது

நிட்சயம் உண்மையாக இருக்கும்

காரணம் வெளியிட்டிருப்பது இந்தியாவின் உளவுத்துறை தலைவன் சேதுவின் இணையத்தளத்தில்

nitharsanam.com

தயவு செய்து இனியாவது அந்த மாபெரும் தலைவனை வழியனுப்ப ஒன்றுபடுவோம்! கடந்த 4 வாரகாலமாக நாம் அனுபவித்த அந்த சித்திரவதை போதும்! வைகாசி 19 அதிகாலை விரமரணமடைந்த நம் தலைவனுக்கு சரியாக ஒருமாதம் போயாவது ஒரு வணக்கத்தை செலுத்த அணிஅணியாக நாம் திரள்வோம்! ஏற்பாட்டாளர்களே தயவு செய்து உலகம் முழுதும் எம்தலைவனின் இறுதிவணக்க நிகழ்வுகளை நாம் நடாத்த தயாராகுவோம்! கேபி அண்ணன் தமிழ் மக்களின் காலைபிடித்து கேட்ட ஒரு விடயம் எம் தலைவனின் இறுதிஅஞ்சலி! அதை இனியாவது காலம் தாழ்த்தாது செய்வோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கர் மற்றும் தாஸ் உங்கள் க்ருத்துக்களோடு நானும் மிக உடன்படுகின்றேன்.

தமிழினம் தன் வரலாற்றில் இதுவரை காணாத ஒரு தன்னிகரில்லாத்தலைவனைப் பற்றி நாம் விவாதிக்கிறோம். ஆனால் அவரது இரத்தமும் சதையும் உள்ள உடல் ஒரு நாள் மறைந்தே தீரும். அது இயற்கையின் நியதி,மனிதனாகப் பிறந்த எவரும் அதற்கு விதிவிலக்கல்ல.ஆனால் அவர், எமது தேசியத்தலைவர் என்பதற்கு மேலாக, எம்மை எமக்கு அறிவித்தவர், அவர் மூட்டிய விடுதலைத்தீப்பொறி, தமிழீழம் பிறக்கும் வரை எம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லும். அவர் எமது விடுதலைப்போராட்டத்தின் ஆன்மபலம். பிரபாகரன் என்ற பெயர் வரலாற்றில் தமிழன் வாழும் வரை வாழும், அந்தப்பெயரே எமது விடுதலைப்போராட்டத்தின் உயிர்நாடியாக எம்மை வழி நடத்தும். ஆகவே அவர் இருக்கிறாரா இல்லையா என விவாதிப்பதை விடுத்து அவர் காட்டும் வழியில் விடுதலைப்பயணத்தைத் தொடர்வது தான் நம் அனைவரதும் தலையாய கடமை.

மேலும் புத்தனின் கருத்து பற்றி ஒரு வார்த்தை. அறிவழகன் மிக மூத்த புலனாய்வுத்தளபதிகளில் ஒருவர், உண்மையில் அறிக்கை சொல்லும் செய்தியை ஏற்கனவே சிலர் இங்கு சுட்டிக்காட்டிய படி நாம் கிரகிப்பது முக்கியம். அவர்கள் இத்தனை நெருக்கடிகளுக்கும் மிகத்தெளிவாகவ இருப்பது உற்று நோக்கப்படவேண்டியது.

Edited by Viduthalai Virumby

தலைவர் வீரமரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை இப்போது அறிவழகன் உறுதிப்படுத்தியுள்ளார். இதைபோன்று தலைவர் இருக்கிறார் என்று அறிக்கை விட்டபோது அந்த அறிக்கையை வைத்து கடந்த ஒருமாதமாக காலத்தை ஓட்டிய ஒவொருவரும் உங்களின் மனச்சாட்சிப்படி நடந்தீர்களா?

இந்த ஒரு மாதகாலத்தில் தமிழ்தேசியம் தலைவர் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு உங்கள் ஒவ்வொருவரிடமும் இருந்ததா?

அல்லது தலைவர் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டு கடந்த ஒரு மாதகாலத்தில் நீங்கள் ஓவ்வொருவரும் செய்த தமிழ் மக்களின் விடுதலைக்காக ஓவ்வொருதரும் செய்த கடமை என்ன? வெறுமனே யதார்தங்களை புரிந்து கொள்ளாது துரோகிப்பட்டம் கட்டியதும், உண்மையானவர்களை பற்றி மிகமோசமான மஞ்சல் தனமான கிசுகிசுக்களை பரப்பியதை தவிர செய்த ஒன்றை உங்கள் ஒவ்வொருவராலும் பட்டியல் போட முடியுமா என மனச்சாட்சி இருந்தால் கேட்டுப்பாருங்கள்....மீண்டும் நண்பர்களே நீங்கள் எல்லோரும் கடந்தகாலத்தில் தான் இருக்கிறீர்கள்...... நிகழ்காலத்தில் இல்லை ........ துரோகிகளும் அயோக்கியர்களும் சுய நலமிகளும் யார் என்பது வெகு சீக்கிரமே தெரிந்துவிடும்.

இப்போது உருவாகியுள்ள நிலமை கன்னை பிரித்து அணி சேர்த்து குழுவாகி ஒரு தமிழ் மாபியாவை உருவாக்கும் பணியில் ஒவ்வொரு நாட்டில் சிலர் செயற்படத்தொடங்கியுள்ளனர். 1980 யூன் மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முதன் முதலாக ஒரு உடைவு ஏற்பட்டு 12பேர் வெளியேறி வேறு பல இயக்கங்களை உருவாக்கினர்.

சுந்தரம் புதியபாதை என்றும் நெப்போலியன் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவையையும் தமிழ்மாறன் என்.எல்.எவ்.டியிலும் சேரும் போது குமரன் பத்மநாதன் மட்டும் எந்த அமைப்புடனும் சேரமால் வெளியில் இருந்து மீண்டும் தேசியதலைவருடன் இணைந்து செயற்பட்டதும் அல்லாமல் இரு சகாப்தகாலமாக புலிகளின் வெளி நாட்டு பணியகங்களை நிர்வகித்தது மட்டுமல்லாமல் இப்போது போராளிகள் என ஒவொரு நாட்டிலும் படை எடுத்து அதிகாரத்துடன் வேலை செய்யும் போது, கடந்த இரு சகாப்த காலமாக தீவிரதமிழ் தேசிய ஆதரவாளர்களை மட்டும் ஒவ்வொரு நாடுகளிலும் முன்னிறுத்தி தொலைபேசிக்குள்ளால் மட்டும் பேசி வேலை வாங்கியவர் கேபி. அத்துடன் மட்டும் நிற்கவில்லை.....களத்தில் போராடும் ஆற்றலுக்கும் சாதனைகளுக்கும் எத்தனையோ உளவு அமைப்புகளுக்கு கண்ணில் மண்ணை தூவி விட்டு கப்பல் கப்பலாக அனுப்பியதையும் ஒவ்வொருவரும் மனச்சாட்சியை தொட்டு கேட்டுப்பார்க்கவும்......

செம்மலையிலிருந்து வெறும் வாகரைக்கோ மூதூருக்கோ வண்டி அனுப்புவதில் உள்ள றிஸ்க் பற்றி தெரிந்தவர்களுக்கு, அப்படி எத்தனை வண்டி அடிபட்டிருக்கும் என்பதும் தெரியும்........ இப்போது தமிழீழம் தேசியம் கதைக்கும் யாரவது இனி ஒரு கப்பல் அனுப்பமுடியுமா என இவ்விடத்தில் கேட்கிறேன்..... சும்மா வெறும் வாய்ச்சவடால்களை விட்டுவிட்டு இந்த போராட்டத்தில் பெரும் பங்குள்ள கேபியின் கரத்தை பலப்படுத்தி முதலில் மக்களை காப்பாற்ற முயலுங்கள். அதே போல அறிவழகன் எனப்பெயர் அறியப்படாதவர்களை இனங்காண்பதிலுள்ள துடிப்பே அதிகமாயுள்ளதே தவிர யதார்த்தம் புறச்சூழல்கள் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிறிதும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. இவரைப்பற்றி சுருக்கமாக சொன்னால் எல்லொரும் பேசும் சமாதான ஒப்பந்தம் வர காரணமான நடவடிக்கை ஒன்றில் ஒருங்கிணைப்பாளர்.....அரசாங்கத்

துக்கு காட்டிக்கொடுக்க இன்னும் விபரம் தேவைப்பட்டால்......சமயம் வரும் போது சொல்கிறேன்.

மின்னஞ்சலில் கிடைத்தது

தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்

Nitharsanam.com மீது எனக்கு நம்பிக்கை இல்லை

எமது இணையத்தளங்களில் பிரசுரிக்கபடும் வரை பொறுத்திருப்போம்

Update:

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO3a030Mt3e

Edited by PeterRatna

Nitharsanam.com மீது எனக்கு நம்பிக்கை இல்லை

எமது இணையத்தளங்களில் பிரசுரிக்கபடும் வரை பொறுத்திருப்போம்

TamilNet, Puthinam, Sankathi, Pathivu

புதினத்திலும் வந்துள்ளது இச்செய்தி :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருமாச் சேர்ந்து இந்தப் பிரச்சனைக்கு ஒற்றுமையா முடிவுகட்டி தேசியத் தலைவரைக் கொல்லாமற் கொன்று ஒருவழியா அவரை அவருடைய பொஞ்சாதி புள்ளையளோட எங்காவது அமைதியாக வாழவிடுங்கோ உங்கள் எல்லாருக்கும் புண்ணியங் கிடைக்கும்.

Edited by karu

ஒரு செய்தி மிகத்தெளிவாகச் சொல்லப்படுகிறது. தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று விவாதிப்பதை விடுத்து, அவர் இனி நேரடியாக வரமாட்டார் என்று நம்பிக்கொண்டு, பிரிந்து நில்லாமல் எல்லாரும் ஒற்றுமையாக இலட்சியத்தை நோக்கிய பயணத்தை தொடருங்கள்.

சிலர் வதந்தி பரப்புவது போல எமக்கிடையே (இயக்கத்துக்குள்) பிளவுகள் இல்லை. நாடு கடந்த அரசு முயற்சிக்கு அனைவரும் உங்களால் ஆன பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நல்குங்கள்.

நீங்கள் யாரோ எந்த மகராசியோ

ஆனால் ஒரு நல்ல ஒரு கருத்தை சொல்லி யிருக்கிறீகள்

எமது மக்களுக்கு ஒரு உண்மை தெரியவேண்டும்

37 ஆண்டுகளாக அவர் படாதபாடு பட்டார் ஒரு சராசரி மனைதனுக்கு கிடைக்கக்கூடிய வாழ்வைக்குட அவருக்கு இயற்கை கொடுக்கவில்லை.

எவருக்காக இதெல்லாம்?....

எல்லாமே எங்களுக்கா. அவர் எம்முன் இன்றில்லை..... ஆனால் அவர் வருவாரா இல்லையா என்பது எங்களில்தான் தங்கியுள்ளது.

நாங்கள் எங்களின் கடமையையும் அவரின் வழிகாட்டலையும் விட்டுவிட்டால் அவர் எங்கள் முன் வரமாட்டார்.

நிமிர்ந்து இருங்கள்

தலைவரின் வழிவந்தவர்கள் நாங்கள், நாங்கள் அழமாட்டோம்.... வீறுகொண்டெழுவோம்.

ஒவ்வொரு தமிழ் வீரனுக்குள்ளும் தலைவன் வாழ்வான்.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.