Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருத்திரகுமாரைப் புறக்கணியுங்கோ இல்லாட்டி நீங்க துரோகியள்

Featured Replies

உருத்திரகுமாரைப் புறக்கணியுங்கோ இல்லாட்டி நீங்க துரோகியள்

14:31, Posted by முல்லைமண், 3 Comments

இதென்ன இழவு வில்லங்கமெண்டு யோசிக்கிறியளெல்லோ. ஏற்கனவே புலத்து ஏகபிரதிநிதிகளையும் வணங்காமண்ணைக் கல்கத்தாவில உடைக்கிறதையும் உடைச்சுச் சொன்னதில கடுப்பேறிக் கன அவதாரங்களில வெருட்டு மிரட்டு விடுகிற சாமிகளே ! நீங்கள் துரோகியேண்டாலும் சரி றோவெண்டாலும் சரி உண்மைகள் வெளிவருவதை நீங்கள் நேத்தி வைச்சுக் கும்பிடுற கடவுளுகளாலையும் இனிக்காப்பாற்றேலாது.

உங்களுக்கு இன்னும் ஒரு விசயம் விளங்குதேயில்ல. உளவாளி எப்பவும் நல்லவனாகவே நடிப்பான். எங்களைமாதிரி உங்களைப்போல உருவேறி உண்மையளைச் சொல்றவையளாக இருக்காயீனம். உங்களை எங்களையெல்லாம் உளவாளியா வைச்சிருந்தா எந்த உளவு அமைப்பும் உளவு பாக்கேலாது மாடுகட்டி உழவுசெய்யத்தான் முடியும்.

சரி இனி வியசத்துக்கு வாறன். புறநிலை அரசை உருவாக்கும் முயற்சியில் திரு.பத்மநாதன் அவர்களினால் தேர்வு செய்யப்பட்ட உருத்திரகுமாரைப் புறக்கணிக்கட்டாம். இதை நான் சொல்லேல்ல. இது புலத்தில இப்ப குறுநிலமன்னர்களாக விளங்கும் தலைகளிடமிருந்தே வருகிறது.இன்னும் ஆயுதப்போராட்டம் செய்து தமிழீழ அரசை நிறுவுவோம் என்று இங்கிருந்து குரல் விடுவோரே ! இந்தக் கனவுகளையும் உங்கள் கற்பனைகளையும் போரால் பாதிக்கப்பட்டவர்களாலோ மற்றும் அந்த மக்களில் கரிசனையுள்ளோராலோ நினைத்தும்பார்க்க முடியாத ஒன்று என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

‘வணங்காமண் பேரீச்சம்பளத்துக்குப் போகுது‘ என்று சொன்னதுக்கு அடுத்து யேர்மனியிலயிருந்து வன்னிக்கப்பல் விடவுள்ள வன்னிரெக்கிலிருந்து சில நாட்களுக்கு முதல் ஒரு தொ(ல்)லைபேசி. அழைச்ச அண்ணாச்சி வன்னிரெக்கின் உசிர். (கேக்கப்படாது மற்றவை தாங்கிறதெல்லாம் என்னெண்டு) பென்சன் எடுத்திட்டு ஊருக்கு சமாதான காலத்தில் உலாத்துப்போட்டு வந்து தாயகம் , தேசியம் , சுயநிர்ணயம் என்றெல்லாம் ஊதின சங்கு இவர்.

சமாதானகாலம் வந்ததும் இவர்கள் கனவு கண்டது என்னெண்டா…., கெதியில தமிழீழம் வந்திடும் பென்சன் எடுத்திட்டு வன்னியில போய் புலிகளுக்கு ஆலோசகர்களாகவும் , அமைச்சர்களாகவும் , புனர்நிர்மாண நிறுவனர்களாகவும் ஆகலாம் என்றதுதான். அந்தக்கனவிலை அந்த மண்ணின் நிமிர்வு தியாகம் உழைப்பு எல்லாத்தையும் மண்மூடிப்புதைக்கும் வரை இந்த ஆலோசகர்கள் ஆங்கிலம் படித்த அதிமேதாவிகள் ஒருவரும் விஸ்கியில மூழ்கியிருந்த தலையை நிமித்தவேயில்லை. முள்ளிவாய்க்காலில் எங்கள் முதிசங்கள் உயிர்களை இழக்கும் வரை இவர்களுக்கு ஒண்டுமே தெரியேல்ல.

3தாசாப்தங்கள் தான் நேசித்த தலைவனைப் போராளிகளை இழந்த உண்மையை வெளியில் சொன்னார், விடுதலைப்புலிகளால் உலகத்துக்குத் தெரிவிக்கப்பட்ட பத்மநாதன் அவர்கள். எந்த மக்களுக்காகத் தங்களைக் கருக்கினார்களோ , தியாகங்களைச் செய்தார்களோ அந்த 30ஆயிரத்துக்கும் மேலான மாவீரர்களின் கனவெல்லாம் பொடியான உண்மையைச் சொன்னதற்காக இந்த ஆங்கிலம் படித்த மேதாவிகளாலேயும் இந்த மேதாவிகளின் குரல்களை நம்பிய அப்பாவிகளாலும் பத்மநாதன் துரோகியாக்கப்பட்டார். அத்துடன் முடியவில்லை துரோகப்பட்டம். அவரது செய்தியை வெளியிட்ட ஊடகர்களை , ஊடகங்களையெல்லாம் (குறிப்பாக ஜீ.ரீ.வி) ஒதுக்கும் முயற்சியிலும் இறங்கிவிட்டது இந்த இயலாத இயங்கிகள்.

இதுவரையான தவறுகள் தீமைகள் யாவையும் சீர்தூக்கிப்பார்த்து பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்பட்ட புறநிலை அரசில் இடம்பெற்றுள்ளவர்கள் வெறும் பொழுது போக்கிகள் போலத்தெரியவில்லை. எல்லோருமே பேராசிரியர்கள் கல்விமான்கள். ஆனால் இத்தகையதொரு கூட்டணியை இதுவரைகாலமும் வைக்கல்பட்டடையைக் கிழறிய சிங்கங்கள் சீறிக்கொண்டு எதிர்க்கின்றனர். இக்குழுவின் பொறுப்பை வகிக்கும் சட்டநிபுணர் உருத்திரகுமார் அவர்களை வேண்டியபடிக்கு விமர்சிக்கின்றனர். தொ(ல்)லைபேசியில் உருத்திரகுமார் பற்றி ஊதித்தள்ளியவர் சொன்னதிலிரந்து சிலவற்றைக் கீழே தருகிறேன்.

வணங்காமண்ணை பேரிச்சம்பளத்துக்குப் போகுதெண்டு நக்கலடிச்சிட்டியள். அதுகூடப்பறவாயில்ல அதை ஏற்பாடு செய்த முக்கியமான ஆக்களுக்கெல்லாம் எப்பிடி அனுப்புவீங்கள் ?(சிவனறிய அந்த முக்கியங்களை அந்த அண்ணாச்சி சொன்னாப்பிறகும் ஆரேண்டே அவையளை எனக்குத் தெரியாது) எங்களுக்குத் தெரியும் கப்பல் போகாதெண்டு ஆனால் நாங்கள் அனுப்பினனாங்கள். ஏனெண்டா எங்கடை பலத்தை உலகத்துக்கும் மகிந்தவுக்கும் காட்ட. கப்பல் போகுமெண்டு நீங்கள் நம்பினதுக்கு நாங்கள் பொறுப்பில்ல…. அங்கை வணங்கா மண்ணில வாற அரிசியைச் சாப்பிடச் சனம் இருக்கேல்ல. போராட்டமெண்டா இதெல்லாம் வரும்.

சரி எங்களைக் கிழிச்சியள். இப்ப உருத்திரகுமாரை என்ன செய்யப்போறியள் ? உருத்திரகுமார் தலைமை தாங்கினா தமிழன் இன்னும் முப்பது வருசம் உய்யமாட்டான். உருத்திரகுமார் இதுவரை சட்டநிபுணத்தால என்ன புண்ணாக்குப் புடுங்கினவர் ? அகதியளுக்கு கேஸ் செய்யிறவர். அவராலை எப்பிடித் தமிழீழப்புறநிலையரசை நிறுவ ஏலும் ? பத்மநாதன் துரோகி. ரண்டு துரோகியளின்ரை கையிலயும் தமிழன்ரை விதி நாறப்போகுது. அவரைவிடப்படிச்சவையள் எவ்வளவு பேர் இருக்கினம் எங்களுக்குள்ள (அவர்தன்னையும் படிச்ச லிஸ்டிலை சொல்றார்) அவையை ஏனுந்தப் பத்மநாதன் தெரிவு செய்யேல்ல ? (வெற்றிடங்கள் இன்னும் உள்ளதாக பத்தநாதன் உருத்திரகுமார் கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களால் இயன்றவர்கள் இணையலாம்) நாங்கள் விடமாட்டோம். உவங்களை நாறடிப்போம். நான் எங்கடை பாதிரியாருக்குச் சொல்லீட்டன் உடனடியா அறிக்கைவிடச்சொல்லி. எங்களிட்டை ஆக்கள் இருக்கினம். எங்களுக்குச் சனத்திட்டைச் செல்வாக்கிருக்கு. உருத்திரகுமார் பேச்சுவார்த்தையளுக்குப் போய் பிரபாகரனோடை படமெடுத்தவுடனும் தலைவனாகலாமோ ? (இன்னும் தலைவர் என்ற வார்த்தையை விட்டு இறங்க முடியவில்லை. அந்தளவுக்கு எங்களுக்குள் நேசிக்கப்படும் தலைவன் மீதே பாயும் இந்தப் படித்தவர்கள் நிலமை இப்பிடியிருக்கு)

இந்தா யேர்மனிலயிருந்தும் கப்பல் விடப்போறொம். அதுகும் போகாதெண்டு தெரியும். ஆனா அனுப்பப்போறோம்.

இனி நான்,

ஆரந்த முக்கியமானவை ? முக்கியமெண்டா கொம்போ எனக்கவையள் ? உங்கடை குறுநிலமன்னர்களுக்குச் சொல்லி வையுங்கோ. உண்மைகள் கசக்கும் உறைப்பாச் சாப்பிடச் சொல்லி…நீங்கள் சாதாரணைமாய் உடைக்கவோ நாங்கள் காசு தந்தனாங்கள் ? நாங்கள் நம்பினோம். எங்கடை சனத்தைக் காக்குமெண்டு நம்பினோம்.

சரி உருத்திரகுமார் தகுதியில்லாத ஆள். பத்மநாதன் துரோகி. நீங்கள் தியாகியள் நடத்துங்கோவனண்ணை. அதுக்கு எங்களுக்கு அனுமதி வரேல்ல ? அது எங்கையிருந்தண்ணை வரும்? நாட்டிலையிருந்து வரும். எந்த நாட்டிலையிருந்தண்ணை வரும் ? உது குதர்க்கம். அண்ணாச்சிக்கு குருதியழுத்தம் கூடீட்டுது இந்த லூசோடை கதைச்சு., தொ(ல்)லைபேசி கட். இவர்களையெல்லாம் இன்னும் தலைவர்களாக வைத்துக் காரியம் செய்யாட்டி எல்லாரும் துரோகிகள் இவர்கள் பட்டியலில்.

இத்துடன் நிற்காமல் லண்டனில் ‘தமிழீழ மக்களவை ` என்ற ஒன்றையும் உருவாக்குவதாக அறிக்கைவிட்டு பற்றிமாகரன் (பெயருக்குப் பின்னால் தமிழிலும் ஆங்கிலத்திலும் கன பட்டங்களை வைச்ச நிமிரமுடியாமல் நிக்கிற மனிதனைப் பிடிச்சு ஆய்வும் செய்விச்சாச்சு) அவர்களை வைத்து அடுத்த குழப்பக்கூட்டணியை நிறுவுதற்கான பின்கதவு அலுவல்கள் அவசர அவசரமாக ஆரம்பித்து விட்டார்கள் இந்தப் படித்தவர்கள். பாவம் பற்றிமாகரன் அவர்கள் இந்த உசுப்பிகளின் உசுப்பலைக் கேட்டு “தமிழீழ மக்களவை” குறித்து ஒரு பார்வை. சூ.யோ.பற்றிமாகரன். என்று பார்வையும் பார்த்திட்டார்.இதை்தான் சொல்றது போல வைக்கல்பட்டடைநாய்க்குணமெண்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரைகாலம் புலிகள் மீது உலகம் தடைபோட்டதற்கான காரணங்கள் பல. ஆனாலும் புலிகள் என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு ஒரு அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க முடியாது. காரணம் 30ஆயிரத்துக்கும் மேலான மாவீரர்களின் தியாகத்தையும் தமிழருக்கான ஓர் தேச உருவாக்கத்துக்கான பாதைகளையும் திறந்தவர்கள் விடுதலைப்புலிகள். உலகம் வெறுத்த அனைத்தையும் கைவிட்டு புலிகள் இப்போது அரசியல் வழியில் அடுத்த கட்டத்தை நகர்த்த இறுதிக்கள முனையில் இருந்து தலைமையினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பத்மநாதன் அவர்கள். விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை அதன் கட்டுமானத்தை நம்பிய அனைத்து மாவீார்களுக்காகவும் அந்தப்பெயரிலேயே அடுத்த அரசியல் விடிவு தமிழினத்துக்குக் கிடைக்க வேண்டும்.

இதைப்பற்றி யார் சிந்திக்கிறார்கள்...இருக்கிற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இதைப்பற்றி யார் சிந்திக்கிறார்கள்...இருக்கிற

தலையங்கத்தை வேறு மாதிரி போட்டால் நல்லம் என்று நினக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி பத்மநாதன் துரோகி.... உருத்திரகுமார் பச்சை துரோகி... அறிக்கை விடும் தயாமோகன் றோ விற்கு விலை போய் விட்டார்...... என்று கூறும் நாட்டுப்பற்றாளர்களே அடுத்த கட்டம் அடுத்த நகர்வுக்கு பொறுப்பேற்று வழி நடத்துவது யார்.... கூறுங்கள் யார் அந்த நாட்டுப்பற்றாளர்

எதாவது செய்பவனையாவது செய்ய விடுங்கள்.... இல்லாட்டி சும்மா பொத்திக்கொண்டு இருங்கள்... வாயை...

சரி பத்மநாதன் துரோகி.... உருத்திரகுமார் பச்சை துரோகி... அறிக்கை விடும் தயாமோகன் றோ விற்கு விலை போய் விட்டார்...... என்று கூறும் நாட்டுப்பற்றாளர்களே அடுத்த கட்டம் அடுத்த நகர்வுக்கு பொறுப்பேற்று வழி நடத்துவது யார்.... கூறுங்கள் யார் அந்த நாட்டுப்பற்றாளர்

எதாவது செய்பவனையாவது செய்ய விடுங்கள்.... இல்லாட்டி சும்மா பொத்திக்கொண்டு இருங்கள்... வாயை...

இன்னம் கொஞ்சநாள் அமைதியாக இருங்கள் எல்லாம் சரியாகிடும் :huh: புதியபாதை பிறக்கும்... :lol:

தனிப்பட்ட என் கருத்து :lol: இப்போ பெரிய கட்டுரைகள் வாசிப்பதும் இல்லை :icon_idea: கருத்தும் எழுதுவதில்லை... :icon_idea:

குளம்பிய குட்டயில்.... :icon_idea:

ஓய்ய்ய்ய்ய்........... உங்களை, எங்களை மாதிரி இந்த பூசாரிகளை முட்டாள்கள் என்றா நினைத்தீர்கள்????????? கஸ்டப்பட்டு வேலை செய்து புலத்தில் சீவியத்தைக் கொண்டு போக!!!! இன்னும் வெட்டுவோம், கிளிப்போம் என்று இவர்கள் விடும் பூரூசுகளை நம்பி பாக்கட்டுகளை இவர்களின் உண்டியல்களில் கொட்டும் பாழாய்ப்போன தமிழர்கள் இருக்கிறார்கள்!!! அவர்கள் வாழுவார்கள் ........ நீங்கள் எழுதுகிறதுகளை எழுதிக் கொண்டே இருங்கள் .... ஒன்றும் செய்ய முடியாது!!!!!

புலத்தில் உள்ள பூசாரிகளை விட, அவர்களை கிண்டி விட்டு கூத்துப் பார்க்கும் ஒரு கூட்டம் இன்னும் தொடர்கிறது! இவர்களை அம்பலப்படுத்த வேண்டும், முதலில்!!

நேற்றைய தினம் ஊர்வலத்துக்கு சென்றிருந்தேன், அங்கு ஒரு பூசாரியிடம் கதை கொடுத்தேன் ....... " ....... சும்மா சும்மா வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள். தருணம் பார்த்து துரோகிகள் வெளிக்கிட்டிருக்கிறார்கள். அவரை இல்லை, இல்லை என்று கொட்டுகிறார்கள். அவர் வெளிக்கிடாமல் இப்படி இருப்பதே எங்களுக்குப் பலம் ..." .... தொடந்தார், ஓரிடையில் கேட்டேன் "இருக்கிறார், இருக்கிறார் என்கிறீர்கள் இனி இருந்து என்னத்தை செய்யப் போகிறார்?" .... என் முகத்தை நோக்கி எரிந்து விழும் பார்வை! பதிலில்லை, அகன்றார்!!! ..... ஒன்று மட்டும் தெரிந்தது, இவர்களுக்கு அவர் இருக்கிறார் என்பது தேவையானதே என்று!!!!!

இத்தனைக்கும் நேற்றைய தினம் கறுத்த உடையுடன் வாருங்கள் என்றிருந்தார்கள். என்னிடம் இருக்கவில்லை, அன்கு வந்த பூசாரிகள் அனைவரும் புது கறுத்த உடை!!!! ... நல்லது எம்மக்களுக்காக நாங்கள் எம்மை ஒறுத்துக் கொடுத்ததில் இருந்து ................

Edited by Nellaiyan

ஒன்று மட்டும் வெலிப்படையாக தெரிகிறது! வெளியே கொட்ட முடியாமல் பலர் கொதிக்கிறார்கள்!!! ...... இனியும் சனத்தை ஏமாற்றலாம் என்று நினப்பவர்கள் ........ அதை அறுவடை செய்ய நேரிடும்!!! நேற்றைய தினம் வந்த பலரின் கருத்து ......"இன்று இவ்வூர்வலத்துக்கு நாம் வந்தது, அங்கு படும் மக்களின் அவலங்களை பார்க்க/கேட்க இயலாமல் .......... வேறொன்றுக்கும் இல்லை" ..... இதை புரியுங்கள்!! தொடர்ந்து மக்களெல்லாம், மக்களெல்லாம் ............ என்று நினைக்காதீர்கள்!!!

சேர்ப்பவர்கள் சேர்த்தவர்கள் அவர்களுக்கு தமிழீழமாவது விடுதலையாவது வீழ்வது தமிழ்மக்களாக இருந்தாலும் வாழ்வது அவர்களாகவே இருக்கும். எத்தனை சுனாமிகள் வரலாம் ஆனால் தமிழர்களின் சாபக்கேடு இவர்கள். குட்டை குழம்பி இருக்கின்றது யாரெல்லாம் விரும்புகின்றார்களோ அவர்களெல்லாம் மீன் பிடிக்கலாம்

தமிழா நீ சபிக்கப்பட்டவன். மக்கள் பலரை புறக்கணிக்க தயாராகவேண்டும். இல்லையென்றால் ஏமாற்றினார்கள் ஏமாற்றுகின்றார்கள் ஏமாற்றுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுடைய பகுதிநேரப் பவிசுக்கு ஆப்பு வந்துவிடும். அறிவுஜீவிகள் கைக்கு

புலம்பெயர்;தேசத்தின் தமிழீழம் நோக்கிய போராட்டம் போய்சேர்ந்து முனைப்புப் பெற்று விடக்கூடாது இதுவே இவர்களது ஆவல். அவர்கள் சுருட்டினார்களே இல்லையோ எமக்குத் தெரியாது. தற்போதைய நிலை தெரியாது, தமக்குள்தான எல்லாம் அடங்கி இருக்க வேண்டும் எனும் எண்ணம் இந்த புலம் பெயர் தேசத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் தூண்கள் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் மனதில் இப்போதும் இருக்கின்றது. ஆனால் நான் அறிந்தவரையில் அதுக்கும் ஆப்பு வந்து விட்டது இங்கே இளையோர், புலம்பெயர் தேசம் எங்கும் கல்விமான்களைத்தேடியும், அவர்களை ஒன்றிணைக்கும் பணியிலும் ஈடுபடுவதாக அறிந்தேன்.

வணங்காமண் திட்டம் ஆரம்பிக்க முதலிலேயே, வன்னியில் அவலத்தின் ஆரம்ப நாட்களிலேயே யாழ் களத்தில் ஒருவர் கூறியிருந்தார்;. அங்கு உணவு உடை மற்றும் போதிய வசதிகளின்றி தவிக்கின்ற மக்களுக்கு உதவிகள் சென்றடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நாளொன்றிற்கு ஒரு டாலர் வீதம் புலம்பெயர் உறவுகள் அனைவரும் பங்களிப்புச் செய்வதன்மூலம் அவர்களது பசியைப் போக்குகின்றோம் நீங்கள் தமிழருக்கெதிரான போரை நிறுத்தி அவர்களது அமைதியான வாழ்விற்கு வழிசமைத்துத் தாருங்கள் என ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான நிறுவனத்தையும் உலகநட்டுத்தலைவர்களையும் கேட்போம் இதன் மூலம் நாம் நியாயத்தின் வழியிலேயே எமது போராட்டத்தினை நடத்துகின்றோம் என்பதை வெளிப்படுத்தும் அவ்வேளை எமது இனப்பிரச்சனையை வைத்து அரசியல் பண்ணும் உலகநாடுகள் வெட்கித்தலைகுனியும் செயலாகவும், உலகின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பம் செயலாகவும் இதுவிருக்கும் எனவும் எழுதியிருநஇதார் யாராவது கேட்டார்களா?

யாழ் களம் சரியான திசையில் செல்கின்றது

இந்த கட்டுரையை எழுதியவரையும் (சாந்தி அக்காவை) அவரின் துணிவையும் காலாகாலத்திற்கு தமிழர் விடுதலையை உண்மையாகவே நேசிக்கும் மக்கள் பாராட்டுவர்

முன்னம் எல்லாம், தம்மை தட்டிக் கேட்க யாரும் இல்லையென்ற துணிவில் இருந்த பன்னாடைகளுக்கு இப்ப காச்சல் வந்திருக்கும், வன்னி போய் தலைவரோட ஒரு படம் எடுத்ததை வைத்தே மிகுதி காலம் முழுதும் அப் படத்தினை காட்டி பம்மாத்து விடும் பேர்வழிகளுக்கு இப்படியான கட்டுரைகள் வயிற்றை கலக்கத் தான் செய்யும்

உருத்திரகுமாரன் அண்ணாவினை எதிர்பதாய் சொல்லி, ஒட்டு மொத்த தமிழினத்தினை காட்டிக் கொடுக்கும் கேடு கெட்டவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்

Edited by நிழலி

ஈழத்தமிழனின் சாபக்கேடு என்பது இனத்திற்குள் தங்களை புத்திஜீவி என்று சொல்லிக் கொள்பவர்களாலே ஏற்படுகின்றது. புத்திஜீவிதம் என்பதன் பொருள் எமது இனத்துக்கு மட்டும் விதிவிலக்கானது. ஒரு புத்திஜீவி ஒரு கருத்தை சொன்னாலோ அல்லது ஒன்றை செயற்பட முனைந்தாலோ அதை எதிர்ப்பது குறிக்கோளற்று விமர்சிப்பது தர்க்கம் புரிவது போன்றனவே அடுத்த புத்திஜீவியை அடையாளப்படுத்துகின்றது. புத்திஜீவிதத்துள் நல்ல விடயங்கள் குறித்த ஒருமைப்படு என்பது எப்போதும் வந்ததும் இல்லை வரப்போவதும் இல்லை. கடிபடுதல் புடுங்குப்படுதல் குதர்க்கம் இவைகளே புத்திஜீவிகள் எமது இனத்துக்கு போதித்வைகள். சாதி மத வர்க்க மேலாண்மை முரண்பாடுகள் போட்டி நிலைமைகளின் தலமை இடம் புத்திஜீவிதமாக விளங்குகின்றது. ஒரு நாய் குரைத்தால் ஊரில் உள்ள அத்தனை நாய்களும் குரைக்கும் என்பது போல் அமைந்ததே இந்த புத்திஜீவிதம் என்ற மமதை. அர்த்தமற்றது. ஒரு சராசரி தமிழனை கூட இந்த புத்திஜீவிதத்தால் நிச்சயமாக காப்பாற்ற முடிந்ததும் இல்லை இனியும் அது நிகழப்போவதில்லை. புத்திஜீவி என்று தன்னை ஒருவன் உணரும் போது அவன் ஒன்றுபடும் மற்றும் செயற்படும் ஆழுமையை இழந்து அர்த்தமற்று குரைக்க மட்டும் தெரிந்த புறம்போக்கு தெருநாயாக மாறிவிடுகின்றான். புறம்போக்கு தெருநாய்களே ஒரு இலக்கும் அற்று ஒன்றைப்பார்த்து ஒன்று குரைத்துக்கொண்டிருக்கும். அதுவே தான் இதுவும்.

எமது அவலப்பட்ட மக்களுக்கு ஒரு புத்திஜீவி தான் தலைமை தாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மனிதாபிமானம் உள்ள சராசரி மனிதனே எம்மை வழிநடத்த தகுதி உடையவன். புத்திஜீவி என்ற மமதையோடு எவன் குரைக்க வருகின்றானோ அவனை நிராகரிப்பது அவசியமானது.

எங்களை அழிக்கச் சிங்களவனே வேறு எவனோ தேவையில்லை.

நாங்களே இனி எங்களிற்குள்ள அடிபட்டு அழிஞ்சு போவோமே!

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் போரில் வெற்றி கொண்ட சிறிலங்கா அரசு, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களைப் பிரிக்க முனைக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ்த்தேசிய ஆதரவுள்ள ஊடகங்கள், ஆதரவாளர்களுக்கு எதிராக கருத்துக்களை விலை போன எட்டப்பர்களில் உதவியுடன், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் விரும்பிய கருத்துக்களை வெளியிட்டு அவ்வூடகங்கள், ஆதரவாளர்களை புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு துரோகிகளாக காட்ட முயல்கிறது. கற்பனை உலகில் வாழும் சில ஆதரவான தமிழர்களும் தெரியாமல் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். இதனால் தான் தேசியத்தலைவரினால் நியாமிக்கப்பட்ட செல்வராசா பத்மநாதன், GTV, புதினம் போன்ற ஊடகங்களையும் துரோகிகளாக கற்பனை உலகில் வாழும் எம்மவர்களில் சிலர் கருத்துக்களை வைக்கிறார்கள். சிங்களவன் செய்ய விரும்பியதை இவர்கள் இங்கு செய்கிறார்கள்.

இப்பதிவில் பதில் அளித்த அனைவரும் துரோகிகள் என்று சிலர் சொன்னாலும் சொல்லுவினம்.

:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னம் எல்லாம், தம்மை தட்டிக் கேட்க யாரும் இல்லையென்ற துணிவில் இருந்த பன்னாடைகளுக்கு இப்ப காச்சல் வந்திருக்கும், வன்னி போய் தலைவரோட ஒரு படம் எடுத்ததை வைத்தே மிகுதி காலம் முழுதும் அப் படத்தினை காட்டி பம்மாத்து விடும் பேர்வழிகளுக்கு இப்படியான கட்டுரைகள் வயிற்றை கலக்கத் தான் செய்யும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Pழளவநன வுழனயலஇ 11:54 யுஆ

நம்மளை துரோகி என்றால் நாங்கள் கவலைப்படப் போவதில்லை... துன்பப்பட்ட மக்களுடன் கடைசி வரைக்கும் கூட இருந்தவன் நான்.... துன்பங்களை மற்றவர்களை போல யாழ் களத்தில் மட்டும் அனுபவிக்கவில்லை....

தலைவர் இருக்கிறார்.. இல்லை என்பது இப்போது எமக்கு முக்கியமில்லை.....

மக்ககளின் மனங்களும் வாழ்வும் இப்போது இயல்பிற்கு கொண்டு வரவேண்டிய அதே நேரத்தில் எமது போராட்டம் ஏதோ ஓரு வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.... ஆயுதப்போராட்டம் தற்போது சாத்தியமில்லை.... ஆகவே மாற்று வழியினை தேர்ந்து எடுப்போம்.......

குற்றுவது யாராக இருந்தாலும் எமக்கு வேண்டியது அரிசியே.....

Edited by asan

சாந்தியுடன் தனிப்பட்டரீதியில் ஒருவர் தொலைபேசியதை அடிப்படையாகக் கொண்டு இதை எழுதியிருப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரி பத்மநாதன் துரோகி.... உருத்திரகுமார் பச்சை துரோகி... அறிக்கை விடும் தயாமோகன் றோ விற்கு விலை போய் விட்டார்...... என்று கூறும் நாட்டுப்பற்றாளர்களே அடுத்த கட்டம் அடுத்த நகர்வுக்கு பொறுப்பேற்று வழி நடத்துவது யார்.... கூறுங்கள் யார் அந்த நாட்டுப்பற்றாளர்

எதாவது செய்பவனையாவது செய்ய விடுங்கள்.... இல்லாட்டி சும்மா பொத்திக்கொண்டு இருங்கள்... வாயை...

ஐயனே!

அதெல்லாம் செய்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்..... எல்டீலாரும் அதையும் ஏற்கிறார்கள். சில பிதற்றல் காரர்கள் இந்த சூழலை பயன்படுத்தி ஏதோ தாம் சொன்ன சாத்திரபடிதான் எல்லாம் நடக்குதென்று துடித்து எழுதி தமிழம ஒரு உச்ச நிலையில் உட்கார வைக்க முயற்சிக்கிறார்கள் அதுவே இங்கு நடக்கின்றது. உணர்வுகளின் உரசலால் சிலர் வார்த்தை தவறுகிறார்கள்தான் ஆனால் எல்லோரும் யாதார்த்தத்தை உணாந்தே செல்கிறார்கள். ஆனால் சிலருக்கு சிலரை எப்டியாவது ஓரம் கட்டவேண்டும் என்ற நீண்ணட நாள் ஆசை அதற்கான காலம் இதுவெண்று ஒடி திரிகின்றார்கள். யாரும் யாரையும் துரோகியாக்கவில்லை. ஆனால் இவர்கள் ஓடி ஓடி அதை சொல்கின்றார்கள்..... சும்மா ஆடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம் எல்லாம், தம்மை தட்டிக் கேட்க யாரும் இல்லையென்ற துணிவில் இருந்த பன்னாடைகளுக்கு இப்ப காச்சல் வந்திருக்கும், வன்னி போய் தலைவரோட ஒரு படம் எடுத்ததை வைத்தே மிகுதி காலம் முழுதும் அப் படத்தினை காட்டி பம்மாத்து விடும் பேர்வழிகளுக்கு இப்படியான கட்டுரைகள் வயிற்றை கலக்கத் தான் செய்யும்

அவர்கள் ஏதோ சில அர்பணிப்புகளுக்கு தயாராக இருந்ததால்தான் அவர்களுக்கு அது கிடைத்தது. ஆனால் ஏதுமே செய்யாது இருந்துகொண்டு சும்மா உளறுவதால் ஏதும் ஆவதற்கில்லை. நீங்கள் ஆக்க போவதும் இல்லை. தயவு செய்து நீங்கள் நல்லதை செய்ய நினை;பவர்களாக இருந்தால் செ;யதுகொண்டே இருங்கள் அசலும் நகலும் ஒருபோது வெளியே தெரியும். அதைவிடுத்து ஏதோ நீங்கள்தான் கிழித்ததாகவும் பிறர் சும்மா பாசங்கு செய்தாகவும் விரண்டாவாதம் செய்வதால் நீங்கள் ஓரு குழுப்பவாதியாகின்றீர்கள் அது தவிர வேறேதும் இல்லை. பொறாமை உணர்வுகளை தள்ளி வையுங்கள் பொறுப்புணர்வுகளை பற்றுங்கள். முடியாவிடின் தயவுசெய்து பொத்துங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியுடன் தனிப்பட்டரீதியில் ஒருவர் தொலைபேசியதை அடிப்படையாகக் கொண்டு இதை எழுதியிருப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

சபேசன் அது தனிப்பட்ட விடயம் இல்லை. எல்லாருக்கும் கூறப்பட உரியவரால் சொல்லப்பட்ட விடயம்.

நீங்களும் அவரது கூட்டணியில் இயங்குவதால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

நீங்கள் சொல்லும் தனிப்பட்டவர் மின்னஞ்சலில் வலைப்பூவில் மிரட்டல் ஏலுமெண்டா வா பாப்பமென தொனிப்படும் எழுத்துக்களை எந்த வகையில் சேர்ப்பீர்கள் ?

மற்றும் உங்கள் வன்னிக்கப்பல் திட்டத்தில் அந்த முக்கிய புள்ளிகளை எனக்கு யாரையும் தெரியாது. (உங்களை மட்டும் தான் தெரியும்)

ஆங்கிலத்திலும் டொச்சிலும் கலப்பு விளக்கம் தந்த அவரது சில கடிதங்களை நீங்களும் பார்த்துள்ளீர்கள். ஆக அந்தக் கடிதங்களை எனக்கும் மற்றும் அவரது 650இற்கும் மேற்பட்டோருக்கும் அனுப்பியதாக எழுதுவது எதற்காக ? இதையும் உங்களால் அவரிடம் கேட்க முடியும்.

முல்லைமண் வலைப்பூவில் அவரது இரு கடிதங்கள் போட்டுள்ளேன். வாசியுங்கள். தனிப்பட்ட ரீதியான தொலைபேசலா அல்லது ஊரைக்கூட்டி அவர் உரைக்க விரும்பியது எதையென்பதை சிலவேளை புரிவீர்கள்.

தங்களைவிட்டு யாரும் தாயகம் சார்ந்து முடிவுகள் எடுக்கவோ இயங்கவோ கூடாது என்ற இத்தகைய மனப்போக்கும் தங்களைவிட யாரும் மேலில்லை என்ற கருத்து ஏன் ? நீங்கள் இணைந்து இயங்கும் அமைப்பில் இப்படி ஆட்பிரிப்பு செய்வோருக்கு ஆதரவாகவா இன்னம் எல்லாரும் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களா ?

Edited by shanthy

சாந்தி,

வன்னிக் கப்பல் குழுவில் நானும் இடம் பெற்றிருக்கிறேன் என்பது உண்மைதான். அதற்காக எனக்கு எந்த ஒரு அழுத்தமும் இல்லை.

எனக்கு என்று தனியான கருத்துகள் இருக்கின்றன. அதே போன்று உங்களுடன் தொலைபேசியில் உரையாடியவருக்கும் தனியான கருத்துகள் இருக்கின்றன.

நான் உருத்திரகுமார் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள குழுவை வரவேற்கிறேன். வேறொருவருக்கு வேறொரு கருத்து இருக்கலாம்.

நீங்கள் ஒருவரின் தனிப்பட்ட கருத்தை "வன்னிக்கான கப்பல்" நடவடிக்கையோடு சம்பந்தப்படுத்தி எழுதியிருப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

நீங்கள் இருவரும் சிறிய விடயத்தை பெரிது படுத்துகிறீர்களோ என்று எனக்குப் படுகிறது. அவர் உங்களோடு தொலைபேசியில் எழுதியதை நீங்களும் சீரியசாக எடுத்திருக்கத் தேவையில்லை. அதே போன்று நீங்கள் எழுதியதை அவரும் சீரியசாக எடுத்து பதில்கள் எழுதியிருக்கத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.

உங்களுக்கு அவர் "ஏலுமெண்டா வா பாப்பம்" என்று மிரட்டல் விடுகிறார் என்பதை நான் நம்பவில்லை. இது ஒரு தவறான புரிதலாக இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் உண்மையிலேயே நீங்கள் சொல்வது போன்று அவர் மிரட்டியிருந்தால், அவருடன் அது பற்றி பேசி என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இப்படிப் பார்த்தால் நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மகிந்தவுடன் சமரசம் பேசலாமே. சிலரது தனிப்பட்ட விருப்பங்களுக்காக ஒரு இனத்தின் இருப்பை அழிவிற்கு இட்டுச் செல்லக்கூடிய அதிகாரத்தை மேற்சொன்னவரிடமுள்ள பதவிக்கு உண்டு.

இங்கு நாம் முன்னெடுத்த பல அரசியல் மற்றும் வெளிநாட்டவருக்கான பரப்புரை போன்ற விடயங்களில் முட்டுக்கட்டையாக நின்ற பெருந்தகையாளர்களுள் இவரும் அடக்கம். சாதாரண ஒருவரெனவோ தனிப்பட்ட கருத்தெனவோ தீர்வு சொல்ல முடியாதபடி பல முன்னெடுப்புகளுக்கள் தங்கள் மூக்கை நுளைத்துக் கொள்வதில் இன்னும் மாறாமல் இருப்பவர்கள் இவர்கள்.

இனியும் அதிகாரிகளும் அதிகாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளட்டும்.

உருத்திரகுமார் பத்மநாதன் போன்றோர் பற்றி யேர்மனி டென்மார்க் நோர்வே என ஆளுக்கொரு பதவியில் இருக்கும் அதிகோரிகளின் பரப்புரைப்புகள் அவர்கள் பின்னே நிற்கக்கூடியவர்களையெல்லாம் அவர்கள் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதற்கான பரப்புரைகளாகவே செய்யப்படுகிறது.

யார் படித்தவர் படிக்காதவர் என்று தராசிட்டு மிஞ்சிய 3லட்டசத்தையும் பலிகொடுக்க முடியாது.(இந்த 3லட்சத்துள் எனக்கும் உறவுகள் பலருள்ளார்கள்) இதுவரையில்லாத மாற்றங்கள் உருத்திரகுமார் பத்மநாதன் கூட்டணியால் செய்ய முடியுமென்ற நம்பிக்கையுள்ளது. அதை அவர்கள் செய்யட்டும். அவர்கள் யார் தமிழர் பற்றி சிந்திக்க ? எத்தனை தரம் வன்னிக்குப் போய் வந்தார்கள் என்னத்தை செய்தார்கள் என்று கலாநிதிக்கனம் பிடித்தோர் தமது தவறுகளை திருத்திக் கொள்ளச் சொல்லுங்கள்.

அதிகாரங்களை கையிலெடுத்து நாங்கள் வைத்ததையே நீங்கள் பின்பற்ற வேண்டுமென்ற இதுவரைகால அதிகாரிகளின் ஆதிக்கம் போதும். இவர்கள் இனியாவது தங்கள் பக்க இதுவரையான தவறுகளை உணரட்டும். நாங்கள் சாதாரண மக்கள் எங்களுக்கு எவர் நன்மை செய்தாலும் ஏற்றுக்கொள்வோம்.

சபேசனுக்குள்ள தனித்த கருத்துக்கள் போல எனக்கும் உண்டு. இதைப்புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். நீங்களும் நானும் கருத்தாடுவோம் ஆனாலும் நான் சொல்வதெல்லாவற்றுக்கும் நீங்கள் சரியென வேண்டுமென்றோ , அல்லது நீங்கள் சொல்வதையெல்லாம் நான் பின்னபற்ற வேண்டுமென்றோ ஒருபோதும் முட்டிக்கொள்ளவில்லை. கருத்துக்களை நாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறோம். அதுபோல் இந்தக் கலாநிதிகள் கவரிங்மான்கள் தங்கள் கலாநிதி அதிகாரங்களை ஒதுக்கிவிட்டு மக்களுடன் பணி செய்ய கருத்தாடல் செய்ய முன்வரட்டும்.

கலாநிதிகளால் சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நம்மைப்போன்ற சாமான்யர்கள் நிறையவே இருக்கிறோம். விடுதலையின் பெயரால் நியமனம் பெற்றோரெல்லாம் இனிமேல் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யட்டும். அப்படியொரு நிலைமை வரட்டும். இப்படியான விமர்சனங்களையும் நாம் விட்டுவிடுகிறோம்.

சபேசன் நீங்கள் கூறும் தனிப்பட்டவரை மட்டும் கட்டுரையில் கண்டுள்ளீர்கள். அதையும் தாண்டிய சில விடயங்கள் கட்டுரைக்குள் அடங்கியுள்ளது.

நீங்கள் ஒருவரின் தனிப்பட்ட கருத்தை "வன்னிக்கான கப்பல்" நடவடிக்கையோடு சம்பந்தப்படுத்தி எழுதியிருப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

அப்படியானால் வன்னிக்கப்பலின் சகல அதிகாரங்களையும் தனது கையில் வைத்துக் கொண்டிருப்பது போல நடிக்கிறாரா அவர் ? :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் சாந்தி! நீங்கள் ரெண்டுபேரும் தொல்லைபேசியில் கதைச்சுமுடிக்கவேண்டியதையெல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.