Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2

Featured Replies

இந்தக் கருத்துக்களம் 'புதினம்' தளத்திற்காக தி.வழுதி அவர்களால் எழுதப்பட்டதாகும். அண்மையில் அவர் எழுதியிருந்த "முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!" என்ற கருத்துக் களத்தின் இரண்டாவது பாகமாக அவர் இதனை எழுதியுள்ளார்.

முற்குறிப்பு:

ஏராளமான கதைகள் உலவுகின்றன.

என்னைப் பற்றியும் ஒரு கதை உலாவியது: 'மெளனம் சம்மதம்' என்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக இரண்டு தகவல்களையும் ஒரு வேண்டுகோளையும் விடுத்து விட்டு முடிக்கின்றேன்.

தகவல் ஒன்று: சிவபெருமானே இறங்கி வந்தாலும் அவருடன் கருத்து வேறுபடுவதற்கும், எனது கருத்தை வெளியில் சொல்வதற்கும் எனக்கிருக்கும் உரிமையை அவர் நிராகரிக்க மாட்டார்.

தகவல் இரண்டு: தமிழ்ச்செல்வன் அண்ணனே எழுந்து வந்தாலும் அவர் மீது எனக்கிருந்த மரியாதையையோ அல்லது எனது ஒழுக்கத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையையோ மறுக்க மாட்டார்; அதனை என்னையும் அவரையும் நன்கறிந்தவர்களும் மறுக்க மாட்டார்கள்.

வேண்டுகோள்: தமிழர்களாகிய நாம் உன்னதமான பண்பையும், மேன்மையான பண்பாட்டு விழுமியங்களையும் கொண்டு 2,500 ஆண்டு காலமாகக் கூர்ப்படைந்து முதிர்ச்சி பெற்ற ஒரு மக்கள் இனம். ஒரு மனிதனின் கருத்தோடு உடன்படவில்லை என்பதற்காக - அவனின் ஒழுக்கத்தைக் களங்கப்படுத்தி Character Assassination செய்யும் விதமாக - கடுகளவேனும் உண்மையற்ற விடயங்களைத் தயவு செய்து எழுதாதீர்கள், தயவுசெய்து மின்னஞ்சல் செய்யாதீர்கள், தயவு செய்து எங்கும் வெளியிடாதீர்கள்.

நன்றி.

* * * * *

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2

ஏராளமான கதைகள் இப்போது உலவுகின்றன.

உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்ப வேண்டிய துயரச் சூழலுக்குள் தமிழ்த் தேசிய இனம் சிக்குண்டுள்ளது.

தேசியத் தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்ற உண்மையை வதந்தி எனவும், செல்வராஜா பத்மநாதன் அவர்கள் யாரிடமோ விலை போய் விட்டார் என்ற வதந்தியை உண்மை எனவும் நம்ப வேண்டிய சூழலுக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

உண்மை சொல்லும் நம்பக ஊடகங்களாக ஒரு காலத்தில் போற்றிய தளங்களையெல்லாம், வதந்தி பரப்பும் துரோகத் தளங்களாகப் பார்க்க வேண்டிய கதிக்குள் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்கள்.

முன்பு அறிக்கை விட்டபோது அறிவழகன் உண்மையானவர் என்றும் பின்பு அறிக்கை விட்டபோது அறிவழகன் பொய்யானவர் என்றும் நம்ப வேண்டிய நிலைக்கு மக்கள் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

பல கதைகளின் உண்மைத் தன்மையைத் தெளிவுபடுத்தும் பொறுப்பைக் காலத்தின் கைகளில் விட்டுவிடுகின்றேன்; நிகழ்காலத் தேவை கருதி - அதில் ஏதோ ஒரு வகையில் பங்கேற்றவன் என்ற வகையில் - ஒரு கதைக்கு மட்டும் விளக்கம் சொல்லி விட்டு முடிக்கின்றேன்.

தலைவர் அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும், "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்று சொல்லி "யாரோ" அவரை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு கதை உலாவுகின்றது.

வன்னிப் போரை நிறுத்தி, மக்களைக் காத்து, தலைவரையும் தலைமைப்பீடத்தையும் பாதுகாப்பான ஒர் இடத்திற்கு நகர்த்துவதற்காக -

கடந்த வருடம் (2008) செப்ரெம்பர் முதல் எடுக்கப்பட்டு வந்த கடுமையான - இடையறாத - முயற்சிகளிலும் -

விடுதலைப் புலிகளின் வன்னித் தலைமை, சில மேற்குலக நாடுகள், சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு இடையில் கடந்த 9 மாத காலமாக இது தொடர்பாக இடம்பெற்று வந்த தொடர்பாடல்களிலும் -

நடேசன் அண்ணனின் அங்கீகாரத்துடன் ஏதோ ஒரு வகையில் பங்கேற்றவன் என்ற முறையில் ஒரு விடயத்தைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்:

பரப்பப்படுகின்ற எந்தக் கதையிலும் எந்தவிதமான உண்மையும் இல்லை.

leader_20090629004.jpg

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்

ஆயுதங்களை மெளனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது.

நோர்வே அரசு, குறிப்பாக திரு. எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் தனிப்பட்ட அக்கறையுடன் இதில் நேரடியாகச் சம்மந்தப்பட்டிருந்தார். அவரும் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் தலைமைக்கு யாருடைய உதவியும் தேவைப்பட்டிருக்கவில்லை.

எவரையும் நம்பியோ, அல்லது "கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றுவோம்" என்ற எவருடைய வாக்குறுதியையும் நம்பியோ தலைவர் அவர்கள் அங்கிருந்து போராடவில்லை.

2009, மே 14, வியாழக்கிழமை வரை - தொடர்ந்து போராடுவதில் தமக்கு இருந்த உறுதிப்பாட்டையே விடுதலைப் புலிகளின் தலைமை வெளிப்படுத்தியபடி இருந்தது.

ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது; ஆனால், அது வெளியிலிருந்து யாராலும் கொடுக்கப்பட்டதல்ல.

மே 14, வியாழன் அன்று, தம்மால் இன்னும் தொடர்ந்து சில காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்று புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் சொன்னார்; அதே விடயத்தை, அதே நாள், அவர் பத்மநாதன் அண்ணனுக்கும் சொல்லியுள்ளார்.

போரை இடைநிறுத்தி, அயுதங்களை "மெளனிக்கச் செய்வதற்கு" மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது.

அப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை - ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும்படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் என்னிடம் சொன்னார்; எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்.

இதே தகவல் - பத்மநாதன் அண்ணனுக்கு சூசை அண்ணனால் சொல்லப்பட, அவரும் உருத்திரா அண்ணனும் தமது பங்கு நடவடிக்கைகளை எடுத்தனர்.

வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர்.

ஆனால் - விடுதலைப் புலிகளின் தலைமை அவ்வாறு முன்வந்த போது, எல்லாம் காலம் கடந்தவையாக ஆகிவிட்டிருந்தன.

இவை தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக நடந்த தொடர்பாடல்கள், உரையாடல்கள், பரிமாற்றங்கள், ஆதாரங்கள் என்பனவற்றை - தேவையேற்படும் போது - வரலாற்றைச் சீர்படுத்துவதற்காக - சம்மந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள் என்று நம்புகின்றேன்.

கே.பி.-யருக்குத் துதிபாடுவது எனது நோக்கமல்ல: அவரை நான் பார்த்ததும் கிடையாது; அவருடன் தொடர்பு கொள்ளும் படி நடேசன் அண்ணை சொல்லும் வரை அவருடன் நான் பேசியதும் கிடையாது.

கே.பி. அண்ணரைப் பற்றி பல கதைகள் உலாவவிடப்பட்டுள்ளன. "துரோகி", "விலை போனவர்", "ஏமாற்றியவர்" என்று ஒரு மாத காலத்திற்குள் அவருக்குச் சூட்டப்பட்டுவிட்ட பட்டங்கள் பல.

கடந்த 30 வருடங்களாக அவர் என்ன செய்தார் என்பது - அவருக்கும், தலைவருக்கும், இடையிலிருந்த தொலைத் தொடர்பு கருவிக்கும், அதனை இயக்கிய போராளிகளுக்கும் மட்டுமே தெரிந்த விடயங்கள். மற்றவர்களாகிய நாங்கள் கற்பனைகளை வளர்க்காமல் சும்மா இருப்பதே நல்லது.

அவருடைய பாதுகாப்பும் அந்தப் பணிகளின் பாதுகாப்பும் கருதி - ஆயுதக் கொள்வனவு மற்றும் நிதிக் கையாளுகை விடயங்களிலிருந்து கடந்த நான்கு வருடங்களாக ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த கே.பி. அண்ணர் அவர்கள் - அவர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக - பாலா அண்ணை விட்டுச் சென்ற இடத்தை ஓரளவுக்காவது நிரப்புவதற்காக தலைவர் அவர்களால் இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தா

  • Replies 100
  • Views 10.8k
  • Created
  • Last Reply

வான்கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு மற்றவர்கள் தன்னை பார்க்கமாட்டார்கள் என்டு என்னுவதைபோல புலம்பெயர் தமிழர்களும் தலைவர் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற உண்மையை எவர் வந்து சொன்னாலும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை. அவர்கள் இப்பவே வர்த்தக கண்காட்சி ஊர் ஒன்றுகூடல் என்டு பழையபடி தங்கட வேலைய பார்க்க துவங்கிவிட்டார்கள். வழுதி என்ன சொன்னாலும் இவர்கள் அவருக்கு கொடுக்க போகின்ற பட்டம் "துரோகி"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" 2. பனிப் போருக்குப் பின்னான காலம் (1990 - 2001): கொம்யூனிசம் கரைந்து போக, ஒற்றை வல்லரசாகிய அமெரிக்காவின் கீழ் உலகம் திரண்டது: மேற்கின் நலன்சார்ந்த ஆயுதப் போராட்டங்கள் வெல்ல வைக்கப்பட்டன."

..................................................

அதே என்.டி.ரி.வி காரர்கள், அடுத்த ஒரே வாரத்தில் கிளிநொச்சிக்குப் போய் தமிழ்ச்செல்வன் அண்ணனிடம் கேட்க, அவர் அது பாலசிங்கத்தின் தனிப்பட்ட கருத்து என்றவிதமாகப் பதிலளிக்க - குழப்பமாகி, சர்ச்சையாகி - மனம் நொந்த பாலா அண்ணை புற்றுநோய் தாக்கி படுக்கையில் வீழ்ந்து, டிசெம்பர் 14 அன்று அவர் கண்களை மூடிய போது, கிழக்கு ஏற்னெவே தமிழர்களிடமிருந்து பறிபோய்விட்டிருந்தது.

......................

"மோட்டு சிங்களவன்" என்று கிண்டலடிக்கும் எம்மின அறிவுக்கொழுந்துகளுக்கு இந்த விஷயங்கள் புரிபடாமல் போனதேனோ?! ஈழத்தில் தமிழன் பட்ட, படும் கஷ்டங்கள் போல வேறெந்த இனமும் பட்டதில்லை. ஆனால், எதிரியை மட்டம் தட்டிக்கொண்டே, 1000 ஆண்டுகளாக நசுக்கப்பட்டுக்கொண்டிருக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.

நிச்சயம் தலைவர் உயிருடன் இருக்கமாட்டார். இருந்திருப்பின் வழுதி போன்றோர் கொரில்லா போர் சாத்தியமே இல்லை என்பதற்கும், புலிக்கொடி பிடிக்ககூடாது, துப்பாக்கி தூக்கக்கூடாது என்று சொல்ல கே,பிக்கும் துணிச்சல் கிடையாது. தலைவர் இல்லை என்றீர். சரி நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். காந்தி கதரும் கடலை மிட்டாயும் வைத்துக்கொண்டு, கடலை பொரி புலிப்படை என ஏதாவது சல்லி பார்க்கும் வேலை பாருங்கள். மணிக்கணக்காய்.. செத்தவன் கதை பேசுவதை விடுத்து.. தடுப்பு முகாமில் இருக்கும் மக்களுக்காக போராளிகளுக்காக என்ன எழுதி கிழித்தீர்கள். நீங்கள்தானே சொன்னீர்கள்.கடைசி வரை தன் கொள்கையில் உறுதியுடன் நின்று களமாடினான் பிரபாகரன் என்று.. இப்ப இருக்கின்ற மக்களுக்காக மட்டும் அல்ல இனி வரும் தமிழருக்காக போரடினான்..

எம் புலிகள். ஆயுதம் அவர்கள் விரும்பிய முறை அல்ல. கொடுஞ் சிங்களவன் திணித்த முறை. இந்த உலகம் வெள்ளைக் கொடியில் செத்த எமது அண்ணன்களை வேடிக்கை பார்த்தது. இனியும் பார்க்கும். நீங்கள் செல்லும் வ்ழிதான் சரி என்றால் சொல்லுங்கள்.செல்லுங்கள். ஆனால் பிரபாகரன் முட்டாள் என்ற தொனியில் பேசாதீர்கள். ஒரு போராளியின் தியாகத்தை குறைத்து பேச.. உங்களையும் என்னையும் போன்ற காகித புலிகளுக்கு அருகதை இல்லை. டக்ளஸ், கருணா போல நீங்களும் புதிதாய்.. இயக்கம் கட்டுங்கள், போராடுங்கள். எப்படியோ.. தமிழனை வாழ விடாது நாசம் செய்யுங்கள்.

நன்றி

Edited by thileepan.india

...... சில உண்மைகள் வெளிவரப்பட வேண்டும் .......

யுத்த நிறுத்தம் கையெழுத்தாகிய பின், மீண்டும் புலிகளின் தலைமை யுத்தத்துக்கு தயார் படுத்தலில் ஈடுபட்டிருந்த போதும், புலம்பெயர் தேசத்தில் இறுதி யுத்தம் என புலிகளின் சர்வதேச அமைப்பினரால் பெயரிடப்பட்டு நிதி சேகரிப்புகள் முடுக்கி விடப்பட்ட நிலையில், ... "தயவு செய்து யுத்தத்துக்கு செல்ல வேண்டாம், உலக ஓட்டம் மாறி விட்டது, ... யுத்தத்துக்கு போனால் நாம் அழிவோம்" .... என பாலா அண்ணாவினால் தலைமையின் காலில் விழாத குறையாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் உதாசீனம் செய்யப்பட்டது. அதனை விட பாலா அண்ணா விலை போய் விட்டார் என எமது அரசியல் பிரிவு வதந்தியையும் பரப்பியது.

பேச்சுவார்த்தை மேசையில் முக்கியமாக ஒரு தடவை, எரிக் சொல்கைம் பாலா அண்ணா தலைமையிலான குழுவிடம் ..."நீங்கள் தொடர்ந்து தனி ஈழம் எனும் கற்பனை உலகில் நில்லாது, நிய உலகிற்கு வாருங்கள். சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுவிஸ், கனடா போன்ற நாடுகளில் உள்ள கூட்டாட்சி முறௌக்கு ஒத்த தீர்வுக்கு வாருங்கள் ..." ..... என்று முக்கிய கோரிக்கை விடப்பட்டது. அப்போது பாலா அண்ணா சுற்றும் முற்றும் பார்த்தாராம், சுற்றி இருந்தவர்கள் அமெரிக்க, பிரித்தானியா உட்பட்ட மேற்குலகு இராஜாங்க அமைச்சு அதிகாரிகள். நிச்சயமாக எரிக்கினது இக்கோரிக்கை, மேற்குலகின் கோரிக்கையாகத்தான் இருக்கும் என பாலா அண்ணா ஊகித்தார். இச்சந்தர்பத்தில் மறுத்தால் நாம் பேச்சு வார்த்தை மேசையில் இருந்தும் வெளியேற்றப்படலாம் எனவும் சந்தேகப்பட்டார். உடனேயே ...."இல்லை நாங்களும் அப்படியான ஒரு தீர்வுக்கு வரத்தான் உறுதியாக இருக்கிறோம் . ...." ...... என பதிலளித்த உடனேயே, தமிழ்செல்வனுக்கு பக்கத்தில் இருந்த மொழிபெயர்ப்பாளர் இதனை தெரிவிக்க, பாலா அண்ணையை நோக்கி ஒரு பார்வை. அன்று அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற உடனேயே தலைவருக்கு தொலைபேசி அழைப்பு .......... "இவரும் அவங்களுடன் சேர்ந்து எம்மை விற்க நிற்கிறார். ...." . அன்றிலிருந்து அம்மகத்தான மனிதன் இறக்கும் வரை தலைவர் அவருடம் பேசவில்லை.

....................... ......................

நல்ல வேளை அம்மனிதன் இறந்து விட்டார். இல்லை அவரை இன்று எம்மவரே துரோகி என்று கூசாமல் அழைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வான்கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு மற்றவர்கள் தன்னை பார்க்கமாட்டார்கள் என்டு என்னுவதைபோல புலம்பெயர் தமிழர்களும் தலைவர் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற உண்மையை எவர் வந்து சொன்னாலும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை. அவர்கள் இப்பவே வர்த்தக கண்காட்சி ஊர் ஒன்றுகூடல் என்டு பழையபடி தங்கட வேலைய பார்க்க துவங்கிவிட்டார்கள். வழுதி என்ன சொன்னாலும் இவர்கள் அவருக்கு கொடுக்க போகின்ற பட்டம் "துரோகி"

இத்தனை அவமதிப்புகளுக்கப் பின்னாலும் வழுதி அவர்கள் நிதானமாக மீண்டும் எழுதியுள்ளார். ஆனால் இதை விசிலடிச்சு வீராப்போடு கதை சொல்ல வளர்த்து வார்த்த கருத்துக்களை மாற்றமாட்டார்கள் என்பதை பல வழிகளில் அறிந்து கொள்ள முடிகிறது.

'துரோகி' இப்போது அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப்பட்டம்.

நடைமுறை யதார்த்தத்தை வழுதி அவர்கள் கூறியது போல யாவரும் சிந்தித்துப் பார்த்தல் நன்மைபயக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். நிச்சயம் தலைவர் உயிருடன் இருக்கமாட்டார். இருந்திருப்பின் வழுதி போன்றோர் கொரில்லா போர் சாத்தியமே இல்லை என்பதற்கும், புலிக்கொடி பிடிக்ககூடாது, துப்பாக்கி தூக்கக்கூடாது என்று சொல்ல கே.பிக்கும் துணிச்சல் கிடையாது.

தலைவர் இல்லை என்றீர். சரி நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். காந்தி கதரும் கடலை மிட்டாயும் வைத்துக்கொண்டு " கடலை பொரி புலிப்படை" என ஏதாவது சல்லி பார்க்கும் வேலை பாருங்கள்.

மணிக்கணக்காய்.. செத்தவன் கதை பேசுவதை விடுத்து.. தடுப்பு முகாமில் இருக்கும் மக்களுக்காக போராளிகளுக்காக என்ன எழுதி கிழித்தீர்கள். நீங்கள்தானே சொன்னீர்கள்.கடைசி வரை தன் கொள்கையில் உறுதியுடன் நின்று களமாடினான் பிரபாகரன் என்று.. இப்ப இருக்கின்ற மக்களுக்காக மட்டும் அல்ல இனி வரும் தமிழருக்காக போரடினான்.. எம் புலிகள். ஆயுதம் அவர்கள் விரும்பிய முறை அல்ல. கொடுஞ் சிங்களவன் திணித்த முறை.

இந்த உலகம் வெள்ளிக் கொடியில் செத்த எமது அண்ணன்களை வேடிக்கை பார்த்தது. இனியும் பார்க்கும். நீங்கள் செல்லும் வ்ழிதான் சரி என்றால் சொல்லுங்கள்.செல்லுங்கள். ஆனால் பிரபாகரன் முட்டாள் என்ற தொனியில் பேசாதீர்கள். ஒரு போராளியின் தியாகத்தை குறைத்து பேச.. உங்களையும் என்னையும் போன்ற காகித புலிகளுக்கு அருகதை இல்லை. டக்ளஸ்இ கருணா போல நீங்களும் புதிதாய்.. இயக்கம் கட்டுங்கள்இ போராடுங்கள். எப்படியோ.. தமிழனை வாழ விடாது நாசம் செய்யுங்கள்.

நன்றி

மிகவும் உணர்ச்சி வசப்படுகிறீர் நண்பரே!

நிதானமாக,பொறுமையாக நடந்தவைகளை அலசிப்பாருங்கள். நான் குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது இந்த கட்டுரை அழகாக விளக்குகிறது. நான் கூட, இந்த கட்டுரையை படிக்கும் முன், மாறி வரும் உலக ஒழுங்கிற்கேற்ப போராட்டத்தை மாற்ற வேண்டிய தேவை மெத்தப் படித்த பாலா அண்ணனுக்கும் கூட விளங்காமல் போய்விட்டதா என்று புழுங்கியதுண்டு. ஆனால் அவர் தெளிவாகவே இருந்திருக்கிறார். இயக்கத்தின் ஒட்டுமொத்த முடிவு என்று வரும்போது இணக்கப்பாடு இல்லாமல் போய்விட்டது. அதுதான் இன்றைய சீரழிவிற்கு காரணம்.

ஆயுதப்போராட்டம் 2001 வரை சரியான தேர்வாகவே இருந்திருக்கிறது. 2001-க்கு பின்பு, நம் இயக்கம், துரிதமான சரியான முடிவெடுக்க தவறிவிட்டது. சிங்களனுக்குப்பின்னால் இரண்டு பிராந்திய வல்லரசுகள் துணை நின்றபோது நம் பின்னால் உலகின் போலீஸ்காரனை துணையாக நிறுத்த வாய்ப்பிருந்தும் தவற விட்டோம். அவன் வருகை இந்தியாவிற்கு பாதகம் ஏற்படுத்தும் என்றும், இந்தியா நம் உறவு நாடு என்றும் பீற்றிக்கொண்டோம். நம் மூலமாக வராவிட்டாலென்ன, நம்மை அழித்தொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருந்த இந்தியாவின் மூலம் வந்தான்.

பாலா அண்ணனின் தீரிக்கதரிசனமான வார்த்தைகளைப்பாருங்கள்:

"பல்லாயிரக்கணக்கில சனங்கள் சாகப் போகுது, எரிக்; எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அப்பால் அந்தப் போராளிகள் ஒவ்வொருத்தரும் தமது மக்களின் விடுதலைக்காகப் போராட வந்த தூய உள்ளங்கள். அவங்களைக் காப்பற்ற நான் உயிரோட இருக்கமாட்டன்; என்ன செய்தாவது அந்த உயிர்களைக் காப்பற்றுங்கோ".

தமிழ் மக்கள் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எரிந்தாலும், முடிவெடுக்கும் நிலையில் உள்ளோர், சரியான நேரத்தில், சரியான முடிவெடுக்காவிட்டால் மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான் வரும். இந்த சரியான முடிவெடுக்காமை இறுதிப்போரின் கடைசி வாரம் வரை தொடர்ந்ததுதான் நம் துரதிர்ஷ்டம்.

பிப்ரவரி மாதம் இரணைமடு ஏரியை உடைத்திருந்தால், சுமார் நாற்பதாயிரம் சிங்கள ராணுவ வீரர்களும், அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள ஆயுதங்களும் சேற்றில் புதைந்து நாசமாகியிருக்கும். சிங்கள ராணுவம் மீள கட்டமைக்கப்பட குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், வன்னியின் பொருளாதாரம் அத்தோடு போகுமென்று அந்த முடிவு கைவிடப்பட்டது. மக்கள் உயிரோடு, சுதந்திரத்தோடு இருந்தால்தான் பொருளாதாரம் பற்றி நினைக்க முடியுமென்ற தெளிவு நமக்கு இல்லாமல் போய்விட்டது.

இவ்வாறு நாம் விட்ட ஆயிரம் ஆயிரம் தவறுகள், இயக்கத்தவர் கொடுக்கும்/கொடுத்த ஒவ்வொரு செவ்வியை படிக்கும்போதும் என் நெஞ்சை குத்தி கிழித்தாலும், இவற்றிற்கெல்லாம் பதில் எழுத வேண்டாம் என்று எவ்வளவோ கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், உங்களைப்போன்றோர் உணர்ச்சி வசப்பட்டு நாம் செய்தது எல்லாம் சரியே என்று கருத்து எழுதும்போது, என்னை பதில் எழுத தூண்டுகிறது. இதனால் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உண்மை உண்மையே. தவறுகளை மீள்பார்வை பார்ப்பது பின்வரும் காலங்களில் அவற்றை செய்யாமல் தவிர்க்க உதவும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.

நிச்சயம் தலைவர் உயிருடன் இருக்கமாட்டார். இருந்திருப்பின் வழுதி போன்றோர் கொரில்லா போர் சாத்தியமே இல்லை என்பதற்கும், புலிக்கொடி பிடிக்ககூடாது, துப்பாக்கி தூக்கக்கூடாது என்று சொல்ல கே,பிக்கும் துணிச்சல் கிடையாது. தலைவர் இல்லை என்றீர். சரி நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். காந்தி கதரும் கடலை மிட்டாயும் வைத்துக்கொண்டு, கடலை பொரி புலிப்படை என ஏதாவது சல்லி பார்க்கும் வேலை பாருங்கள். மணிக்கணக்காய்.. செத்தவன் கதை பேசுவதை விடுத்து.. தடுப்பு முகாமில் இருக்கும் மக்களுக்காக போராளிகளுக்காக என்ன எழுதி கிழித்தீர்கள். நீங்கள்தானே சொன்னீர்கள்.கடைசி வரை தன் கொள்கையில் உறுதியுடன் நின்று களமாடினான் பிரபாகரன் என்று.. இப்ப இருக்கின்ற மக்களுக்காக மட்டும் அல்ல இனி வரும் தமிழருக்காக போரடினான்..

எம் புலிகள். ஆயுதம் அவர்கள் விரும்பிய முறை அல்ல. கொடுஞ் சிங்களவன் திணித்த முறை. இந்த உலகம் வெள்ளைக் கொடியில் செத்த எமது அண்ணன்களை வேடிக்கை பார்த்தது. இனியும் பார்க்கும். நீங்கள் செல்லும் வ்ழிதான் சரி என்றால் சொல்லுங்கள்.செல்லுங்கள். ஆனால் பிரபாகரன் முட்டாள் என்ற தொனியில் பேசாதீர்கள். ஒரு போராளியின் தியாகத்தை குறைத்து பேச.. உங்களையும் என்னையும் போன்ற காகித புலிகளுக்கு அருகதை இல்லை. டக்ளஸ், கருணா போல நீங்களும் புதிதாய்.. இயக்கம் கட்டுங்கள், போராடுங்கள். எப்படியோ.. தமிழனை வாழ விடாது நாசம் செய்யுங்கள்.

நன்றி

இதே போல புலத்திலும் நிலத்திலும் நாம் வசனம் பேசியே காலத்தை கடத்திவிட்டோம்.

திலீபன்,

வழுதி நெடுமாறன் போலவோ சீமான்போலவோ சிறுத்தை போலவோ வெத்துவேட்டு வேதாந்தம் பேசாமல் யதார்த்தம் பேசுகிறார். அமைதியாக கேளுங்கள். விடுதலைப்புலிகளை உளசுத்தியோடு ஏற்றுக்கொண்டு அவர்கள் செய்யென்றதை மறு கேள்வி கேட்காமல் செய்த பல்லாயிரம் பேரில் வழுதி போன்று பல்லாயிரம் பேருள்ளார்கள். எப்போதோ பேச வேண்டியவிடயங்களை இப்போது பேசுகிறார்கள். இவையே எதிர்காலத்தில் தமிழினத்தின் இருப்பை உறுதிப்படுத்தப் போகின்றன.

தமிழனை வாழ விடாது நாசம் செய்தது , இத்தகையோரது விமர்சனங்களையெல்லாம் உங்கள் கருத்துப்போல எதிர்த்து தமிழரைச் சிந்திக்க விடாது சாய்த்த வள்ளல்கள்தான்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.................................

நல்ல வேளை அம்மனிதன் இறந்து விட்டார். இல்லை அவரை இன்று எம்மவரே துரோகி என்று கூசாமல் அழைத்திருப்பார்கள்.

நான் நினைத்ததைதான் நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

இறக்கப்போகும் மக்களுக்காகவும், போராளிகளுக்காகவும், ஆயிரமாண்டு போராட்டம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வர இருப்பதை உணர்ந்தும் அம் மாமனிதர், என் அண்ணன், என்ன வேதனை அனுபவித்தாரோ? அண்ணா, உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.

அண்ணை கடைசி நேரத்தில் பலருக்கு உரிய கடமைகளை கொடுத்திருக்கிறார்.அவர் கே.பியருடன் மட்டும் தான் தொடர்பில் இருந்தார் என்பது அண்ணையினுடைய செயற்பாடுகளை அறியாத-அவருடைய குணாம்சத்தை புரிந்து கொள்ளாத பிழைப்புவாதிகள் சொல்லும் கட்டுக் கதை.அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படும் போது பலருடைய குட்டுகள் உடையும்.வீராப்பு பேசியவர்களுடைய வாய்கள் அடையும்.

மகிந்தவை ஆட்சிக்கு கொண்டுவர அண்ணைக்கு அழுத்தங் கொடுத்தவர்கள் யார்? உரிய இடங்களில் உரிய பொருட்கள் கையளிக்கப்பட்ட பின்பும் அவை உரிய நேரத்தில் அங்கே போய் சேராதது ஏன்? தொடர்ச்சியாக எமது விநியோகக் கப்பல்கள் அடி வாங்கியது ஏன்? கடல் பலத்தை உறுதியாக பற்றிப் பிடித்து அதற்கான அடித்தளங்களை இட்ட சூசை அண்ணையை படகால் மோதி கொலை செய்ய முயன்றதன் பின்னணில் இருந்தவர்கள் யார்?பலஸ்தீனத்தில் அரபாத்தை அழித்ததிலும் ஈழத்தில் அண்ணையை கவிழ்த்ததிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன இதில் நோர்வேயின் பாத்திரம் என்ன?

எரிக் சூல்கைம் உண்மையில் தமிழர்களுக்கு நன்மை செய்ய நினைத்தாரா? அல்லது அண்ணையின் தலைமைத்துவத்தை செயலிழக்க வைக்க நினைத்தாரா? இந்தக் கேள்விகளுக் கெல்லாம் விரைவில் விடை கிடைக்கும் .அண்ணையால் உருவாக்கப்பட்ட அண்ணையினுடைய தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட அனைத்து “உறவுகளும்” எதிரிகளின் பெய்யுரைகளுக்கு மயங்காமல் சூழ்சிக்கு பலியாகாமல் ஒன்றாயிருப்போம் ஒன்றுபட்டு உழைப்போம்.

வாயை கிளறி அல்லது பொய்யை எழுதி உணர்ச்சி வசப் படுத்தி தகவலகளை எதிரிக்கு சோப்பிக்கும் நயவஞ்சகர்களின் வலையில் விழாதிருப்போம். இது அண்ணைக்காவும் அவரது இலட்சியத்துக்காவும் தங்களை ஆகுதியாக்கிய கரும்புலிகள் மற்றும் தங்களை அழித்துக் கொண்ட சூசை அண்ணை சொர்ணம் அண்ணை மற்றும் களத்தில் வீரச் சாவை தழுவிக் கொண்ட தளபதிகள் போராளிகள் மீது ஆணை காலம் வரும் வரை கட்டுண்டு இருப்போம்.கலங்காது கடமையை சரிவரந் செய்வோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்லும் நாடு கடந்த அரசு -க்கு த.தே.கூ உடன்படவில்லை .எனில் மீண்டும் நான் சொன்ன கருத்து முக்கியத்துவம் பெறுகிறது சிங்கள சிறைஇல் உள்ள புலிகளில் தலைவர்களை விடுதலை செய்ய கோருங்கள் அவர்களை அரசியல் ரீதியாக அங்கிகரித்து புலிகளின் பிரதிநிதிகளாக அங்கிகரித்து ஒரு அரசியல் பேச்சுக்களை தொடங்குமாறு உலகத்தை இந்தியாவை இலங்கையை கோருங்கள் .தாயக போராட்டதிற்கும் புலம் பெயர் போராட்டத்திற்கும் ஒரு இணைப்பு உண்டாக்குங்கள். இதுவே முதல் தலையாய பணி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை தலைவர் உயிரோடு இருக்குறார்கள் என நம்புபவர்கள் அவர்கள் உயிரோடு இருக்குறார்கள் என எழுதியதையும் பார்க்க தலைவர் இல்லை என எழுதுபவர்கள் தான் அதிகமாக இருக்குறார்கள்.தலைவர் இருக்குறார் என நம்புவர்கள் கூட கேபியையும் புறநிலை அரசையும் ஆதரிக்கிறார்கள் ஆனால் எதற்காக திரும்பவும் திரும்பவும் தலைவர் இறந்து விட்டார்கள் என எழுதிக் கொண்டு இருக்குறார்கள் என எனக்கு விளங்கவில்லை.தலைவர் இன்னும் இருக்குறார் என நம்புவது அவர்களின்[அந்த மக்களின்] விருப்பம் அதே வேளை அவர் இறந்து விட்டார் என நம்புவதும் அவர்களின்[அந்த மக்களின்] விருப்பம்.தலைவர் உயிரோடு இருக்குறார் என்பவர்கள் பேசாமல் தான் இருக்குறார்கள் ஆனால் தலைவர் உயிரோடு இல்லை என்பவர்கள் மக்களை குழப்ப நிலையில் வைத்திருக்குன்றனர் அவர்களிடம் தலைவர் எப்படி இறந்தார் எனக் கேட்டால் பதிலில்லை சண்டையில் இறந்தார் என சொல்கிறார்கள் அந்த உடலைப் பார்த்தால் சண்டையில் இறந்த மாதிரி தெரியவில்லை.கட்டுரையாளர் ஒருவரையும் துரோகியாக்க வேண்டாம் என எழுதி விட்டு தான் மட்டும் தமிழ்செல்வனையும் அரசியல் துறையும் பழி சுமர்த்தி உள்ளார் அப்படியாயின் புலிகளின் புலனாய்வுத் துறை என்ன செய்து கொண்டு இருந்தது?தலைவர் அன்ரன் பாலசிங்கம் சொல்வதையும் பார்க்க தமிழ்செல்வனை மட்டுமா முழுவதுமா நம்பினார் அப்படியாயின் பிழை தலைவரிலும் தானே இருக்குறது பின் எதற்காக தமிழ்செல்வனை மட்டும் குற்றம் சொல்கிறீர்கள்? கட்டுரையாளருக்கு இப்படி ஒரு நிலை வரும் என தெரிந்திருந்தால் ஏன் இது பற்றி முதலே கட்டுரை எழுதவில்லை? கடைசி தமிழ்செல்வன் இறந்த பிறகாவது எழுதியிருக்கலாமே இப்ப கூட நீங்கள் எல்லாம் முடிந்த பிறகு வேறு பெயரில் வந்து தானே எழுதுதிறீர்கள் உங்களைப் பற்றி தெரிந்தவர்களுக்கு உங்களைத் தெரியும் என எழுதியிருக்குறீர்கள் ஆனால் தெரியாதவர்களுக்கு? புலம் பெயர் நாட்டில் இருந்து கொண்டு தானே எழுதுகிறீர்கள் ஏன் நீங்கள் சொந்தப் பெயரில் எழுதவில்லை?

மிக நிதானமாகவும் காலத்தேவையை உணர்த்தும் விதமாகவும் அமைந்த சிறந்த ஆக்கம். நன்றி வழுதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி,

உங்கள் கருத்தே எனது கருத்தும்,

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எண்டொரு பழமொழி சொல்லுவினம். இப்பத்தான் கண்கூடாகப்பார்க்கின்றேன்.

எனது கருத்தும் அதேதான், தலைவரும் புலிகளும் மீள்க்கூடாது என்பவ்ர்களின் நோக்க்ம் பொதிந்த கட்டுரை இது, இதே வழுதி 3 மாதங்களுக்கு முதல் செப்டெம்பர் 11ம் புலிக்கு எதிரான போருக்க்ம் சம்பந்தம் இல்லை என எழுதி விட்டு இப்போது மாற்றி செப்டெம்பர் 11 பிறகு உலகில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணம் என கூறுகிரார்.

என்னைப் பொறுத்தவரை 2000ம் ஆண்டு எப்போது கல்விய்ன்காடு வரை முன்னெறிய புலிகள் யாழ்பாணத்தை விட்டு பின் வாங்கினார்களோ அன்றில் இருந் கடந்த 9 ஆண்டுகளும் நடந்த அனைத்துமே மர்மம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழுதியின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். அவர் குறிப்பிடும் தகவல்களின்படி, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவர் உறுப்பினராக இருந்திருக்கிறார். கடைசிவரை அவர்களுடன் தொடர்புகளள பேணியதாக வேறு குறிப்பிடுகிறார். மேற்குலகத்தை அப்படியே நம்பச் சொல்கிறார்.

விடுதலைப்புலிகளை தடை செய்துள்ள அமெரிக்காவில் அவர் வாழ்ந்தாலும், வழுதி எனப் பெயர்மாற்றம் செய்தமையால் அமெரிக்க உளவு நிறுவனங்களால் அவரை தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்களின் காதிலை பூச்சுத்திற அளவுக்கு கில்லாடியாகவிருக்கிறார். சொப்ற் பவர் - காட்பவர் பற்றி வகுப்பெடுக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்னர்தான் அங்கு போயிருக்கிறார். லண்டனில் வேறு பாலா அண்ணனுடன் தேனீர் அருந்தியிருக்கிறார். ஆகவே தங்கு தடையின்றி பயணிக்க முடிகிறது. பச்சை அட்டை வைத்திருப்பாரோ? அல்லது சிற்றிசன்சிப் கிடைத்திருக்குமோ?

இவை எல்லாவற்றையும் பார்க்க இவர் சாம் மாமாவுடன் (அங்கிள் சாம்) கொஞ்சம் நெருக்கமாக இருப்பது போலத் தோன்றவில்லையா? பாவம் உலகத் தமி்ழர் இயக்க கருணா உள்ளேயிருக்கிறார், புத்திசாலியான வழுதி வெளியே இருக்கிறார்.

Edited by MI7

என்னைப் பொறுத்த வரை தலைவர் உயிரோடு இருக்குறார்கள் என நம்புபவர்கள் அவர்கள் உயிரோடு இருக்குறார்கள் என எழுதியதையும் பார்க்க தலைவர் இல்லை என எழுதுபவர்கள் தான் அதிகமாக இருக்குறார்கள்.தலைவர் இருக்குறார் என நம்புவர்கள் கூட கேபியையும் புறநிலை அரசையும் ஆதரிக்கிறார்கள் ஆனால் எதற்காக திரும்பவும் திரும்பவும் தலைவர் இறந்து விட்டார்கள் என எழுதிக் கொண்டு இருக்குறார்கள் என எனக்கு விளங்கவில்லை.தலைவர் இன்னும் இருக்குறார் என நம்புவது அவர்களின்[அந்த மக்களின்] விருப்பம் அதே வேளை அவர் இறந்து விட்டார் என நம்புவதும் அவர்களின்[அந்த மக்களின்] விருப்பம்.தலைவர் உயிரோடு இருக்குறார் என்பவர்கள் பேசாமல் தான் இருக்குறார்கள் ஆனால் தலைவர் உயிரோடு இல்லை என்பவர்கள் மக்களை குழப்ப நிலையில் வைத்திருக்குன்றனர் அவர்களிடம் தலைவர் எப்படி இறந்தார் எனக் கேட்டால் பதிலில்லை சண்டையில் இறந்தார் என சொல்கிறார்கள் அந்த உடலைப் பார்த்தால் சண்டையில் இறந்த மாதிரி தெரியவில்லை.கட்டுரையாளர் ஒருவரையும் துரோகியாக்க வேண்டாம் என எழுதி விட்டு தான் மட்டும் தமிழ்செல்வனையும் அரசியல் துறையும் பழி சுமர்த்தி உள்ளார் அப்படியாயின் புலிகளின் புலனாய்வுத் துறை என்ன செய்து கொண்டு இருந்தது?தலைவர் அன்ரன் பாலசிங்கம் சொல்வதையும் பார்க்க தமிழ்செல்வனை மட்டுமா முழுவதுமா நம்பினார் அப்படியாயின் பிழை தலைவரிலும் தானே இருக்குறது பின் எதற்காக தமிழ்செல்வனை மட்டும் குற்றம் சொல்கிறீர்கள்? கட்டுரையாளருக்கு இப்படி ஒரு நிலை வரும் என தெரிந்திருந்தால் ஏன் இது பற்றி முதலே கட்டுரை எழுதவில்லை? கடைசி தமிழ்செல்வன் இறந்த பிறகாவது எழுதியிருக்கலாமே இப்ப கூட நீங்கள் எல்லாம் முடிந்த பிறகு வேறு பெயரில் வந்து தானே எழுதுதிறீர்கள் உங்களைப் பற்றி தெரிந்தவர்களுக்கு உங்களைத் தெரியும் என எழுதியிருக்குறீர்கள் ஆனால் தெரியாதவர்களுக்கு? புலம் பெயர் நாட்டில் இருந்து கொண்டு தானே எழுதுகிறீர்கள் ஏன் நீங்கள் சொந்தப் பெயரில் எழுதவில்லை?

வரிக்கு வரி உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.

நம்ப மறுப்பவனை கட்டாயபடுத்தி நம்பவைக்க வேண்டிய "தலை போகும்" அவசரம், அவசியம் என்னவென்றுதான் தெரியவில்லை

இது போன்ற விடயங்களில் ஒரே ஒரு கட்டுரையை மட்டும் எடுத்துக்கொண்டு சரி தவறு என்று சொல்லுவது சரியல்ல. மாற்று கருத்துடையவர்களின் கட்டுரைகளையும் படியுங்கள். அவற்றை நீங்கள் நம்ப வேண்டாம். என்ன சொல்ல வருகிறார்கள் என்று கவனியுங்கள். சார்பு கருத்துடையோரின் ஆக்கங்களையும் படியுங்கள். இரண்டு தரப்புமே சிலவற்றை விட்டுவிட்டுதான் சொல்லியிருப்பார்கள். கால அவகாசம் எடுத்துக்கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால், விடுபட்டுப்போன பல விடயங்கள் தெளிவாகும்.

உதாரணமாக,

௧. ஏன் இவற்றை முன்பே சொல்லவில்லை?

மாற்று கருத்துடையோர் எல்லோரும் துரோகிகளாக்கப்பட்ட நிலையிருந்தது.

௨.புலனாய்வுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது?

கொல்லப்பாட்டதாக சொல்லப்படும் சார்லஸ் ஆண்டனியின் மெய்க்காப்பாளராக துரோகிகள் நியமிக்கப்படும் அளவுக்கு திறனிழந்து இருந்தது அல்லது புலிகளின் புலனாய்வு முறைகளை முற்றிலுமாக ஆரய்ந்து அவற்றை ஏமாற்றும் அளவுக்கு மிக மிக திறமையான ஊடுருவல்கள் எதிரிகளால் நிகழ்த்தப்பட்டன. தலைவரின்

பாதுகாப்பு பிரிவிலும் அவர்கள் ஊடுருவியிருக்கலாமல்லவா?

"பல தோல்விகளுக்கான காரணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவேயில்லை"

புலிகளின் தளபதிகளில் ஒருவர்.

இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். ஆராய்ந்து உணருங்கள். பல நேரங்களில் நாம் உணரும் உண்மைகளால் நம் நெஞ்சு வெடிக்காமல் இருந்தால் ஆச்சர்யம்தான்.

குறிப்ப்பிடப்பட்ட இந்த ஆக்கமே நயவஞ்ச்கத்துடன் எமக்கு எதிரானவர்களாள் தான் பதியப்பட்டது, அதை கவனமாக் வாசியுங்கள் பல நடைமுறையில் சாத்தியம் அற்ற விடயங்கள் உண்டு, அதிவிட அது சார்ள்ஸ் அண்டனி அல்ல, புலனாய்வுத்துறை சார்ள்ஸ்

ரதி,

இது போன்ற விடயங்களில் ஒரே ஒரு கட்டுரையை மட்டும் எடுத்துக்கொண்டு சரி தவறு என்று சொல்லுவது சரியல்ல. மாற்று கருத்துடையவர்களின் கட்டுரைகளையும் படியுங்கள். அவற்றை நீங்கள் நம்ப வேண்டாம். என்ன சொல்ல வருகிறார்கள் என்று கவனியுங்கள். சார்பு கருத்துடையோரின் ஆக்கங்களையும் படியுங்கள். இரண்டு தரப்புமே சிலவற்றை விட்டுவிட்டுதான் சொல்லியிருப்பார்கள். கால அவகாசம் எடுத்துக்கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால், விடுபட்டுப்போன பல விடயங்கள் தெளிவாகும்.

உதாரணமாக,

௧. ஏன் இவற்றை முன்பே சொல்லவில்லை?

மாற்று கருத்துடையோர் எல்லோரும் துரோகிகளாக்கப்பட்ட நிலையிருந்தது.

௨.புலனாய்வுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது?

கொல்லப்பாட்டதாக சொல்லப்படும் சார்லஸ் ஆண்டனியின் மெய்க்காப்பாளராக துரோகிகள் நியமிக்கப்படும் அளவுக்கு திறனிழந்து இருந்தது அல்லது புலிகளின் புலனாய்வு முறைகளை முற்றிலுமாக ஆரய்ந்து அவற்றை ஏமாற்றும் அளவுக்கு மிக மிக திறமையான ஊடுருவல்கள் எதிரிகளால் நிகழ்த்தப்பட்டன. தலைவரின்

பாதுகாப்பு பிரிவிலும் அவர்கள் ஊடுருவியிருக்கலாமல்லவா?

"பல தோல்விகளுக்கான காரணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவேயில்லை"

புலிகளின் தளபதிகளில் ஒருவர்.

இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். ஆராய்ந்து உணருங்கள். பல நேரங்களில் நாம் உணரும் உண்மைகளால் நம் நெஞ்சு வெடிக்காமல் இருந்தால் ஆச்சர்யம்தான்.

ஊடுருவல் மூலம் புலிகளை இலகுவாக அழிக்க முடியும் என்றால் இவ்வளவு மனித உயிர்களை பலி எடுத்து போர் செய்திருக்க தேவை இல்லை.

சும்மா வரும் கற்பனை கட்டுரைகளை வைத்து 30 வருடம் நடாத்திய விடுதலை போரை இலகுவாக மதிப்பிடமுடியாது.

வழுதி எழுதும் கட்டுரையை பார்த்தால் புலிகள் வலிந்து தாக்குதலுக்கு போய் போரை ஆரம்பித்த மாதிரி எழுதுகிறார்.

பாலா அண்னா ஏற்பாட்டில் இடைக்கால நிர்வாக கட்டமைப்புக்கு உரிய சட்ட முறைகளை ஆராய தமிழ்ச்செல்வன் குழு பல நாடுகளுக்கு சென்று கட்டமைப்பு சட்டத்தை உருவாக்கி நோர்வேயிடம் கையளிக்க வில்லையா?

வழுதி சொல்வது போல் பாலா அண்ணாவின் சர்வதேச அரசியல் நகர்வுகளை கணக்கெடுக்காது புலிகள் ஒரு போதும் களநிகழ்வுகளை நடாத்தியதில்லை.

இது ஒரு கூட்டு சேர்ந்து ஈராக் படை எடுப்பு போல் செய்ய பட்டது. யாராலும் தடுத்து நிறுத்தி இருக்க முடியாது..

யார் வேண்டுமானாலும் எப்படியும் எழுதி கொண்டிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளரைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்தெதுவும் இல்லை. ஆனால் இங்கே பலர் கேட்கிற சந்தேகங்கள் நியாயமானவை. இவ்வளவு உலக இயக்கத்தை தெரிந்து வைத்திருக்கும் ஒருவர் மறை முகமாகவாவது தலைமைக்கு அறிவுரை கூறாமல் இருந்தது ஏனென்று எனக்கும் சந்தேகம். எம்17 சந்தேகப் படுவது போல இவரை அமெரிக்க உளவுத்துறை கண்டு கொள்ளாமலிருக்கிறதா அல்லது கைக்குள் போட்டு வைத்திருக்குதா என்பதும் நியாயமான சந்தேகம் (இங்கேயுள்ள புலனாய்வு முறைகள் தாண்டி ஒருவர் பிழைத்திருப்பது கடினம்!). கட்டுரையில் ஒரு பகுதி எனக்கு சுவாரசியமாக தெரியுது. இந்தியா இல்லாமல் இந்துக் கடல் அலை கூட நகராது என்கிறார். இனி இந்தியாவை நாங்கள் ஆசுவாசப் படுத்தினால் தான் எங்களுக்கு மீட்சி என்ற கருத்தைக் கொடுக்கிறார். நான் நினைக்கிறன் இந்தியாவிடம் மண்டியிடுவது பற்றிப் பேச்செடுத்தாலே பெரும்பாலான புல/தாயக தமிழர்கள் விலகி நிற்க ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் இந்தியா இது வரை செய்தவையைத் தான் எங்களுக்குத் திருப்பிச் செய்யப் போகுது. இது பழைய மொந்தையில் புதிய கள் ஊத்துற கதை தான்.இந்தியாவைத் தூக்கிப் பிடிச்சுத் தான் நிறைய இழந்தோம். வெற்றிக்கு வழி சொல்லும் கட்டுரையும் அதையே சொல்லுது..ஆச்சரியம்... அதை விட சந்தேகம் அதிகரிக்குது. எல்லாப் "பவரையும்" விட இப்ப ulterior power ஒண்டு வேலை செய்யுது எண்டு மட்டும் விளங்குது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்னைப் பொறுத்த வரை தலைவர் உயிரோடு இருக்குறார்கள் என நம்புபவர்கள் அவர்கள் உயிரோடு இருக்குறார்கள் என எழுதியதையும் பார்க்க தலைவர் இல்லை என எழுதுபவர்கள் தான் அதிகமாக இருக்குறார்கள்.தலைவர் இருக்குறார் என நம்புவர்கள் கூட கேபியையும் புறநிலை அரசையும் ஆதரிக்கிறார்கள் ஆனால் எதற்காக திரும்பவும் திரும்பவும் தலைவர் இறந்து விட்டார்கள் என எழுதிக் கொண்டு இருக்குறார்கள் என எனக்கு விளங்கவில்லை.தலைவர் இன்னும் இருக்குறார் என நம்புவது அவர்களின்[அந்த மக்களின்] விருப்பம் அதே வேளை அவர் இறந்து விட்டார் என நம்புவதும் அவர்களின்[அந்த மக்களின்] விருப்பம்.தலைவர் உயிரோடு இருக்குறார் என்பவர்கள் பேசாமல் தான் இருக்குறார்கள் ஆனால் தலைவர் உயிரோடு இல்லை என்பவர்கள் மக்களை குழப்ப நிலையில் வைத்திருக்குன்றனர் அவர்களிடம் தலைவர் எப்படி இறந்தார் எனக் கேட்டால் பதிலில்லை சண்டையில் இறந்தார் என சொல்கிறார்கள் அந்த உடலைப் பார்த்தால் சண்டையில் இறந்த மாதிரி தெரியவில்லை.கட்டுரையாளர் ஒருவரையும் துரோகியாக்க வேண்டாம் என எழுதி விட்டு தான் மட்டும் தமிழ்செல்வனையும் அரசியல் துறையும் பழி சுமர்த்தி உள்ளார் அப்படியாயின் புலிகளின் புலனாய்வுத் துறை என்ன செய்து கொண்டு இருந்தது?தலைவர் அன்ரன் பாலசிங்கம் சொல்வதையும் பார்க்க தமிழ்செல்வனை மட்டுமா முழுவதுமா நம்பினார் அப்படியாயின் பிழை தலைவரிலும் தானே இருக்குறது பின் எதற்காக தமிழ்செல்வனை மட்டும் குற்றம் சொல்கிறீர்கள்? கட்டுரையாளருக்கு இப்படி ஒரு நிலை வரும் என தெரிந்திருந்தால் ஏன் இது பற்றி முதலே கட்டுரை எழுதவில்லை? கடைசி தமிழ்செல்வன் இறந்த பிறகாவது எழுதியிருக்கலாமே இப்ப கூட நீங்கள் எல்லாம் முடிந்த பிறகு வேறு பெயரில் வந்து தானே எழுதுதிறீர்கள் உங்களைப் பற்றி தெரிந்தவர்களுக்கு உங்களைத் தெரியும் என எழுதியிருக்குறீர்கள் ஆனால் தெரியாதவர்களுக்கு? புலம் பெயர் நாட்டில் இருந்து கொண்டு தானே எழுதுகிறீர்கள் ஏன் நீங்கள் சொந்தப் பெயரில் எழுதவில்லை?

நாமதான் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைச்சிடுவோமே 30 ரூபா பத்திரிகை விற்பதற்காக சூசை எப்படி தப்பினார் என்றே கதைவிடும் நாம் ஏன் எதிர்காலத்தை சிந்திக்கப்போகின்றோம்

தமிழழன்தான் இந்த ஈழப்போரின் தோல்விக்கு முழக்காரணமும்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

இது போன்ற விடயங்களில் ஒரே ஒரு கட்டுரையை மட்டும் எடுத்துக்கொண்டு சரி தவறு என்று சொல்லுவது சரியல்ல. மாற்று கருத்துடையவர்களின் கட்டுரைகளையும் படியுங்கள். அவற்றை நீங்கள் நம்ப வேண்டாம். என்ன சொல்ல வருகிறார்கள் என்று கவனியுங்கள். சார்பு கருத்துடையோரின் ஆக்கங்களையும் படியுங்கள். இரண்டு தரப்புமே சிலவற்றை விட்டுவிட்டுதான் சொல்லியிருப்பார்கள். கால அவகாசம் எடுத்துக்கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால், விடுபட்டுப்போன பல விடயங்கள் தெளிவாகும்.

உதாரணமாக,

௧. ஏன் இவற்றை முன்பே சொல்லவில்லை?

மாற்று கருத்துடையோர் எல்லோரும் துரோகிகளாக்கப்பட்ட நிலையிருந்தது.

௨.புலனாய்வுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது?

கொல்லப்பாட்டதாக சொல்லப்படும் சார்லஸ் ஆண்டனியின் மெய்க்காப்பாளராக துரோகிகள் நியமிக்கப்படும் அளவுக்கு திறனிழந்து இருந்தது அல்லது புலிகளின் புலனாய்வு முறைகளை முற்றிலுமாக ஆரய்ந்து அவற்றை ஏமாற்றும் அளவுக்கு மிக மிக திறமையான ஊடுருவல்கள் எதிரிகளால் நிகழ்த்தப்பட்டன. தலைவரின்

பாதுகாப்பு பிரிவிலும் அவர்கள் ஊடுருவியிருக்கலாமல்லவா?

"பல தோல்விகளுக்கான காரணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவேயில்லை"

புலிகளின் தளபதிகளில் ஒருவர்.

இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். ஆராய்ந்து உணருங்கள். பல நேரங்களில் நாம் உணரும் உண்மைகளால் நம் நெஞ்சு வெடிக்காமல் இருந்தால் ஆச்சர்யம்தான்.

சீனிவாசகன் நான் மாற்றுக் கருத்து இனையங்களையும் வாசிக்கிறனான் இன்று கூட தேசம் என்ற இனையத்தில் ''நடந்து முடிந்ததும் நடக்க வேண்டியதும்'' என்ற தலைப்பில் தேசபக்தன் என்பவர் ஒரு கட்டுரை எழுதி உள்ளார் புதினத்தில் வழுதி என்ன எழுதி உள்ளாரோ அதே கருத்தை என்னும் கொஞ்சம் மாற்று கருத்துக்காரருக்காக மெருகேற்றி எழுதி உள்ளார் அதை வாசித்துப் பார்க்க இருவரும் ஒருவரோ எனத் தோன்றுகிறது வேண்டுமென்றால் நீங்கள் வாசித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

நான் கூட எனக்கு நல்ல எழுதும் ஆற்றல் இருந்தது என்றால் ஒரு இனையத்தை ஆரம்பித்து விட்டு வேறு பெயரில் வந்து தலைவர் சாகும் வரை என்னோடு தொடர்பில் இருந்தவர் எனக் கூறினால் நீங்கள் எப்படி அதை நம்புவீர்கள்? இப்போது யார் என்ன எழுதினாலும் அதை புலி ஆம் என சொல்லப் போறதும் இல்லை,இல்லை என மறுக்கப் போறதும் இல்லை இந்த நிலையை சிலர் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்துகின்றனர்.இப்போது பிரச்சனை தலைவர் உயிரோடு இருக்குறாரா? இல்லையா? என்பது பற்றி அல்ல ஏன் இவர்கள் திரும்ப திரும்ப அதைப் பற்றியே எழுதுகிறார்கள் என்பது தான்.சிங்களப் பேப்பரில் கூட தலைவர் செத்தது என சொல்லப்பட்ட முதல் 3 நாள் மட்டும் தான் பேப்பரில் போட்டார்கள் ஆனால் இவர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.