Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2

Featured Replies

விடுதலைக்கான போரை அழித்தது ..................

உதற்கான காரணங்கள் தேடி ........

1. விற்கவோ, வாங்கவோ முடியாது என மார்பு தட்டியதை, பணம், பணம், பணத்துக்காக யுத்த நிறுத்த காலத்தில் கூறு போட்டு விற்று விட்டோம்??

2. சர்வதேச மாறுதலுக்கு ஏற்ப நாம் மாற தவறி விட்டோம்??

3. போட்ட கணக்குகள் எல்லாம் தப்பாக போனது??

4. தொடர்ந்து கட்டமைப்புகளை காப்பாற்ற முற்பட்டது??

5. மரபு ரீதியான கட்டமைப்பில் இருந்து கரந்தடிக்கு மாற விரும்பாமை??

6. யுத்த நிறுத்த காலத்தில் உலகெங்கும் நிதி சேகரிப்பிற்காக "இறுதி யுத்தம்" எனும் கோசத்தால், பின் நடை பெற்ற கூத்துக்களும் சர்வதேசத்து பிழையான செய்தியை சொல்லி விட்டது??

7. குடும்பங்களை விட்டு வெளியேற முடியாமை??

8. ..

.....

... புரியாத புதிர்!!!!!!!!!!!!

  • Replies 100
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதிரிக்கு எதிரான அறவழிப்போராட்டம் சரிவரவில்லை. ஆயுத போராட்டம் சரிவரவில்லை என்கிறீர்கள். அப்போ என்ன தான் எமது மக்களுக்கான முடிவு?

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

எம்மில் பிளவுகள் இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் அமெரிக்காவுக்கு எதிரான போரில் வியட்னாம் இரண்டு பட்டு தான் இருந்தது. வியட்னாமின் ஒரு பகுதியினர் அமெரிகாவுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ரஸ்யா எனும் வல்லரசு பின்னணியாக இருந்தது. ஆனால் எமக்கு எல்லா வல்லரசுகளும் இலங்கை அரசுடன் இருந்ததாலும் , ஐ. நா சபையின் பாராமுகமும் தான் எம்மை தோல்வி அடைய செய்தன என்பது எனது தனிப்பட்ட கருத்து.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இனி எல்லாம் வரும்

வர்க்க வேறு பாடு, ஏழை பணக்காரன் வித்தியாசம், மதம், மாற்றுக் கருத்து மாணிக்கங்களைத் தலையில் தூக்கி வைக்காமை..இப்படி எல்லாக் காரணமும் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணங்களாக வெளி வரும். இது நல்லது செய்யும் "எங்களுக்கு". முன் செல்லாமல் ஒரே இடத்தில் மல்லுப் பிடிச்சுக் கொண்டு நிற்க இந்தக் காரணங்களின் கண்டு பிடிப்பு "எமக்கு" உதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.அண்ணனை நேசிப்போர் அவருக்காகவும், அவரை விமர்சிப்போர்கள் - அவருக்காக அல்லாவிட்டாலும், எமக்காகத் தமது உயிர்களை தந்த அந்த 30 ஆயிரம் போராளிகளின் உயிர்களுக்காகவேனும் அவர்கள் அணிவகுத்த அதே கொடியின் கீழே அணிவகுப்போம்.

என்னைப் பொருத்தவரையில் எங்கள் இனத்தின் விடுதலைக்காய் போராடியவர் அவர் அவரை நான் என் உள் மனதில் வைத்துள்ளேன் அவர் வீரகாவியம்யடைந்தாலும் அவர் என் மனதில் வாழ்கின்றார்

சிங்களவன் சில முறைதான் என் தலைவனைக் கொன்றான் ஆனால் நாங்கள் பலமுறை கொள்ளுங்கின்றோம் இங்கே. வேண்டாம் விடுங்கள்...........

அவர் இருப்பவர் மனதில் இருக்கடும் அவர் இல்லாதவர் மனதில் இல்லாது இருக்கடும் ...நாங்கள் முதல் ஒற்றுமையாக இருப்போம்

அப்போது...........................................................

.............[இடைவெளியை நிரப்பவும்

Edited by analai theevaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இன்டைக்கும் தான தெரியும் யாழிலையும் கணக்க வேலை வெட்டி இல்லாத ஆக்கள் உறுப்பினராய் இருக்கினம் என்று!

ஏன் என்றா பிரயோசனமாய் எதையும் 4 பக்கத்தை தாண்டியும் கதைக்கவில்லை. சும்மா நானும் நானும்... இல்ல இல்ல எனக்கும் தெரியும் ... அட ஐயோ அவரோட தான் ஓ நான் அவரோட தான் கடைசியாக கதைச்சனான்....

உருப்பட்ட மாதிரி தான்...

வழுதி அண்ணாக்கு ஒரு வேண்டுகோள்!

தயவு செய்து மன்னிக்கனும் நான் உங்கட விசுறி அதனால தான் கேக்கிறன் முந்தி நான் நெருப்பு... ஈ... தேனி என்று தேடி Nதுடி போய் நகைச்சுவை படிக்கிறனான் ஆனால் இப்ப புதினம், அதை விட புதினத்தில வந்ததுகளை வெட்டி ஒட்டி யாழ்ல இருக்கிற அரசியல் காமடியர்கள் எழுதுற கருத்துக்களை பார்த்து சிரிக்கிறதாலை பாவம் ஈ காக்காக்கு நான் போறதில்ல...

அதனால் கொஞ்ச நாளைக்கு ஒரு 2 வருசத்துக்காவது பேசாமல் இருந்த நல்லது தானே!...

அதுக்குள்ள சரி...பிழை... தவறுகள் எல்லாம் தீர்க்கப்பட்டு விடும்....

யாழ்களத்து கருத்தாளப்பெரு மக்களே.... காமடி மன்னர்களே!

உங்கள் சிந்தனைக்கு ஓய்வு கொடுத்து நகைச்சுவை பகுதியில் எழுதுங்கள் நானும் ஓடி வந்து சிரிப்பேன் அதை விட்டிட்டு புலிகள் ஏன் தோற்றவை.... தலைவர் ஏன் வீரச்சசாவடைந்தவர்.... ஐயோ எங்கட மண் ஏன் பறிபோனது என்றெல்லாம் வெட்டி கதை பேசாதீங்கோ......

.....அதனால் கொஞ்ச நாளைக்கு ஒரு 2 வருசத்துக்காவது பேசாமல் இருந்த நல்லது தானே!...

அதுக்குள்ள சரி...பிழை... தவறுகள் எல்லாம் தீர்க்கப்பட்டு விடும்....

....... அதை விட்டிட்டு புலிகள் ஏன் தோற்றவை.... தலைவர் ஏன் வீரச்சசாவடைந்தவர்.... ஐயோ எங்கட மண் ஏன் பறிபோனது என்றெல்லாம் வெட்டி கதை பேசாதீங்கோ......

என்ன அறிவு! இதைத்தான் புத்தி..சீவிகளின் கருத்தென்பதா? :icon_mrgreen:

தற்போது நெருப்பு, ஈ, பீ, தேனிகளின் நிலைக்கு சங்கதி, பதிவு, அதிர்வு, நெருடல் வந்து விட்டது. இவைகள் எல்லாமே தங்கள் மூஞ்சையில் துப்பும் கூட்டங்கள்!!

ஐயோ எங்கட மண் ஏன் பறிபோனது என்றெல்லாம் வெட்டி கதை பேசாதீங்கோ......

நாங்கள் ஏன் அழிந்தோம்? ஏன் எம் மண் பறி போனது? என்பதை பேசாமல் ..................!!!!!!!!!!!!!!!????????????

மீண்டும் பூறூஸுகளையும் வானவேடிக்கைகளையும் விட்டுக் கொண்டிருப்போம்!! ..... எம்மக்களுக்கு விடிவு வரும்! நாம் மீண்டும் தாயகம் சேல்வோம்!!! .... தமிழீழமும் கிடைக்கும்!!!!

இதெல்லாம் பார்த்த பிறகு என்னால் உங்களுக்குத் தரமுடிந்த ஒரு ஜ்டியா இதுதான்

போய் சிங்களம் படிங்கைய்யா.... மண்ணும் மண்ணாங்கட்டியும்.

எதையும் சுயமா எழுத வக்கில்லை

சுயமான சிந்தனை இல்லை.

அறிவில்லை

ஆனால் ஆரும் எழுதினால் போது வந்து வாங்கு வாங்கெண்டு வாங்கவேண்டியது.

கேட்டால் அண்ணா தலைவா என்று பீத்த வேண்டியது.

முடிவாக ஒன்று மாத்திரம் தெளிவா தெரியுது. நீங்கள் எந்த ஒரு முடிவுக்கும் வரமாட்டியல்

உங்களால எவருக்கு ஒரு நன்மையும் வரப்போறாதுமில்லை.

சும்மா கத்தி கத்தி கத்தி காலத்தை ஓட்டாமல் போய் சிங்களவனுக்கு கு**** கழுவுங்கோ.

தலைவர் வந்தாப்பிறகு விடிவைப்பற்றி யோசிக்கலாம்.

இதெல்லாம் பார்த்த பிறகு என்னால் உங்களுக்குத் தரமுடிந்த ஒரு ஜ்டியா இதுதான்

போய் சிங்களம் படிங்கைய்யா.... மண்ணும் மண்ணாங்கட்டியும்.

எதையும் சுயமா எழுத வக்கில்லை

சுயமான சிந்தனை இல்லை.

அறிவில்லை

ஆனால் ஆரும் எழுதினால் போது வந்து வாங்கு வாங்கெண்டு வாங்கவேண்டியது.

கேட்டால் அண்ணா தலைவா என்று பீத்த வேண்டியது.

முடிவாக ஒன்று மாத்திரம் தெளிவா தெரியுது. நீங்கள் எந்த ஒரு முடிவுக்கும் வரமாட்டியல்

உங்களால எவருக்கு ஒரு நன்மையும் வரப்போறாதுமில்லை.

சும்மா கத்தி கத்தி கத்தி காலத்தை ஓட்டாமல் போய் சிங்களவனுக்கு கு**** கழுவுங்கோ.

தலைவர் வந்தாப்பிறகு விடிவைப்பற்றி யோசிக்கலாம்.

நீங்கள் விசனத்தோடு எழுதினாலும் இவைகள் நளை நடக்கப்போவதும் நேற்று நடந்ததும் இன்று நடப்பதும் ஆகும். சிங்களமக்களில் பெரும் எண்ணிக்கையானோர் முன்பு தமிழராக இருந்தவர்களே. பல பிரதேசங்கள் தமிழ்களதே. இன்று புத்தளம் மாவட்டத்து தமிழ் மக்களுக்கும் எங்களுக்குமான தொடர்பு எப்படி உள்ளது. அம்பாறையும் இதே நிலையை அடைந்;து கொண்டிருக்கின்றது.

நேற்று விடுதலைக்கென்று புறப்பட்ட பல இயக்கங்களின் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் கு கழுவிக்கொண்டிருக்கின்றார்க

ஆனால் கோபுரத்துக்கான அத்திவாரங்களை தகர்க்கும் உள்ளக முரண்பாடுகள் குறித்தே நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனுபவம் எமக்கு உணர்த்துகின்றது.

கோபுரமும் வேண்டாம் ஒரு அறுப்பும் வேண்டாம்.

அதை முதலில் தகர்த்தெறிவோம்... பிறகு எங்காவாவது இருந்து

ஒரு பிச்சா பாத்திரம் கிடைக்காமலா போகப்போது.

அதை வந்த்து நக்கிப் பிழைப்போம். நக்கிப் பிழைப்பது ஒன்றும் கஸ்டமில்லை

இன்று 90% யாழ்கள உறுப்பினர்கள் பழக்கப்படவில்லையா? அதே போல் மீதமுள்ள சனமும்

பழகிவிடும். அதுக்குப்பிறகு யாரை வைத்து இங்கு இக்களத்தில் கருத்து எழுதுவது?

பேசாமல் இன்றே மாறிவிடுவது நல்லது.

ஒரு இலச்சியத்துக்கா வாழ்ந்து வீழந்த வீரர்களை வைத்து கருத்து விபச்சாரம் செய்வதை விடுத்து

நக்கி பிழைக்கலாம்.

மீண்டும் சொல்வேன் எங்களைப்போன்ற ஒரு இனத்துக்கு எதிரியை சிங்களத்த்தில் தேடவேண்டியதில்லை. நாமே போதும்.

இனி ஒரு தலைவன் எங்களுக்கு வரப்போவதில்லை. அப்படி ஒருவனும் இனியும் தன்னை இழக்கவேண்டியதுமில்லை.

எங்கள் மாசற்ற தேசத்தின் விடிவெள்ளிக்கே கருத்தென்றபோர்வையில் களங்கப்படுத்தி விட்டோம், இனி யார்தான் மிச்சம்? என்னதான் முடிவு?

பேசாமல் போய் வழும் வழியை பாருங்கள். எவனாவது காலை நக்கி பிறவிக்கடலை கடவுங்கள்.

ஊரில எத்தனையோ கோயிலுக்கு கும்பாபிசேகமாம், காசனுப்புங்கள் முடிந்தால் போய் தேரிழுங்கள்

உங்களுக்கு இதுக்கு விடுதலை தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி !!

எமது உள்ளகத்தில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படாமல் எமது இனத்திற்க்கு விடுதலை இல்லை என்பதே உண்மை. உள்ளகப் பிரச்சனையே இனத்தை சிதைத்து சீரளித்து உருவமற்றதாக்கி விட்டுள்ளது. இவைகள் உங்களுக்கு சாதராணமாக தெரியலாம் ஆனால் இவைகள் சிங்கள இனவாதத்துக்கு ஒப்பானது அல்லது அதை விட அதிகப்படியானது.

கருணா என்ற தனிமனிதனின் தவறுக்காக தண்டனை கொடுக்க முனைந்த போது எவ்வாறு பிரதேசவாதம் கிழம்பியது? அதற்கு முன்னர் கருணா வன்னியில் சண்டைகள் பல பிடித்து வன்னி மக்கள் கருணாவை தோழில் தூக்கி ஊர்வலம் போனார்கள். அப்போதெல்லாம் வடக்கென்ன கிழக்கென்ன எல்லாம் தமிழீழம் எல்லோரும் தமிழர்கள் என்றுதான் இருந்தது. அது உண்மையல்ல. பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் பூசி மொழுகிய நிலையே ஆகும். உரிய நேரத்தில் பிரதேசவாதப்பூதம் கிழம்பியது.

இஸ்லாமியத் தமிழர்கள் பெருந்தொகையானோர் என்று கருதாமல் எடுத்தேன் கவுத்தேன் என்று கையாண்டது இனம் மதமாக பிளந்தது.

எம்மில் எவ்வளவு தூரம் ஓற்றுமை? ஒரு இஸ்லாமியத் தமிழன் இந்துத் தமிழனை கொல்வான் அல்லது இந்து இஸ்லாமியத் தமிழனை கொல்வான். இதைச் செய்வதற்க்கு மதம் போதுமானது. இதை தடுப்பதற்கு இன உணர்வு வக்கற்றது. இதே தான் யாழ்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற உணர்வும் ஆகும்.

கனடாவின் சி ரி அர் வானொலியில் எத்தனை இஸ்லாமியத் தமிழர்கள் கிழக்கு தமிழர்கள் பணியாற்றுகின்றார்கள் எத்தனை பேர் நேயர்கள்? யாழ்க்களத்தில் எத்தனை பேர்?

நாம் எந்த நிலையில் உள்ளோம்? இனம் எந்த நிலையில் உள்ளது? புறநிலை அரசு என்பது சாதி மதம் வர்க்கம் புத்திஜீவித மேலாண்மை கடந்த ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசையாக உருவாக எந்த அடிப்படையும் இல்லை. இந்த அடிப்படை இல்லாமல் ஒரு சாராரின் மேலாண்மை எண்ணத்தின் விருப்பாக உருவாகும் புறநிலை அரசால் எந்த பிரயோசனமும் இல்லை. அதை சிதைக்க சிங்களவன் மினைக்கடத் தேவை இல்லை. நாமே சிதைப்போம். ஏனெனில் இது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பாக இல்லை. தமிழன் ஒன்றாக இல்லை.

தாய் நாடு மீதான பற்று என்பது தேவை சார்ந்தது. எமக்கு நிலம் வேணும் விவசாயம் செய்ய கடல் வேணும் மீன்பிடித் தொழில் செய்ய. இதனை விட வெளிநாடு போனால் அதிகமாக உழைக்கலாம் என்னும் போது நிலமும் கடலும் முக்கியத்துவம் அற்றதாகின்றது. தேவைகளை நிவர்த்தி செய்ய என்னுமொரு மொழி தேவைப்படுகின்றது. எமக்கு வெளிநாடு முக்கியம். எம்மைப்பார்த்து நாட்டில் உள்ள சனங்களுக்கு முக்கியமாகின்றது. பற்று என்பது தேவைசார்ந்தது. அப்படி இல்லை எனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கொஞ்சமாவது தாயகம் சென்று ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்திருப்பார்கள். யதார்த்தம் தேவை சார்நத அசைவில் இருந்து விலக முடியாது உள்ளது. தமிழீழம் என்பது புலம்பெயர்ந்த மக்களுக்கு விருப்பமானது தவிர தேவையானது என்பது இரண்டாம் படச்சமானது. எனவே தமிழீழத்துக்கான செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைகின்றது.

இனத்துக்குள் இருக்கும் பிரதேசவாதம் சாதி மத வர்க்கப் பிளவுகள் மேலாண்மைநிலை போன்றனவும் அவை வளர்த்து விட்ட மனோபாவமும் என்றைக்கும் ஒன்றுபட முடியாதது. தேவைகளை தீர்ப்பது என்ற இலக்கு வெளிநாடுகளுக்கு சென்றுவிடுதல் என்ற திசையை நாடி நிற்கின்றது. எந்த ஒரு இனவாத வன்முறைக்கு ஊடகவேனும் படித்து பட்டம்பெற்று உத்தியோகம் நாடி நிற்கின்றது. இவ்வாறான சிக்கல்கள் சிங்களவனுக்கு அடிமையாதலை ஒரு பொருட்டாக காட்ட மாட்டாது. சாதி மத வர்க்க மேலாண்மைகளால் சிதைந்த தமிழ்த்தேசியவாதம் தேவை சார்ந்த வெளியேற்றங்களால் மேலும் சிதைகின்றது.

நான் மேலே குறிப்பிடும் மனோபாவம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதுகின்றேன். 32 க்கும் மேற்பட்ட இயக்கங்களின் உருவாக்கமும் அது ஒன்றுபட முடியாமல் போனதும் இந்த மனோபாவத்தினை அடித்தளமாகக் கொண்டுள்ளது.

பானையில் உள்ளதே அகப்பையில் வரும் என்றதுபோல் இந்த மனோபாவம் முரண்பாடுகளில் இருந்து புலிகள் இயக்கமும் மீளவில்லை. இது புலிகளின் குற்றம் என்பதை விட இனத்தின் இயல்பு என்பதே பொருத்தமானது.

உன்னத தலைவனை கொண்ட தியாகத்தின் எல்லை கடந்து சென்ற போராட்டம் சிலரின் மேலாண்மைக் கனவுகளால் அழிந்தது என்பதே உண்மையானது. ஒருகாலத்தில் சிறந்த படையணிகளை கொண்ட மன்னார் மாவட்டம் ஓரிரு நாட்களில் ஒன்றுமே இல்லாமல் போனது. தளபதிகள் சிறைக்குச் சென்றனர் காசுப்பிரச்சனை என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு மன்னார் மாவட்டமே ஒத்திசைந்து துடித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்து விலகிப்போனது. இவ்வாறுதான் பின்னாளில் கிழக்கிலும் நடந்தது. இன்று காவியமாகிப்போன பல்வேறு தளபதில் நேற்று ஒரு நாள் அல்லது பல நாள் பல மாதங்கள் சிறையில் இருந்தது உண்மை. அப்போதும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது. நேற்றும் தீபன் நீட்டிய கைகளை தொட மறுத்த கணங்கள் உண்டு.றி

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று அறிவதற்கு அவன் கையில் அதிகாரத்தை கொடுத்துப்பார் என்பார்கள். தலைவன் அறிந்து கொள்ள சந்தர்ப்பமே இருக்கவில்லை. தலைவன் அகவிளக்கேற்றி அழுத முகத்தோடு நின்ற காட்சிகள் அவனின் மனட்சாட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு இனம் குறித்தது என்பதை புரிந்து கொள்ள போதுமானது. சுழல் நாற்காலியில் சுழன்றபடி காவியமான வீரர்களைப்பற்றி கதைத்தவன் மேலாண்மையின் அடையாளம்.

இயக்கத்திலும் சரி மக்களிலும் சரி மேல்வர்க்கம் நழுவிக்கொள்ளும். இறுதியில் சிலுவையில் அறையப்பட்டது வறிய உழைக்கும் மக்களே. எல்லாமிழந்த நலிந்த வன்னி மக்களே. இந்த நிகழ்வுகளின் ஊடே கொழும்பில் பரத நாட்டியமும் யாழில் தேரிழுப்பும் கிரிக்கெட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. எவன் நழுவினும்; வேலியே பயிரை மேயினும் மக்களுக்கான தலைவன் மக்கள் மடிந்த இடத்திலே மடிந்து கிடந்தான்.

மக்கள் ஒன்றுபட முயற்ச்சிக்காமல் மேலாண்மையின் விருப்பாக உருவாக்கப்படும் எந்த ஒரு அமைப்பையும் பணிகளையும் எதிர்ப்பது பேதங்களுக்கு அப்பால் மக்களை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது. அது புறநிலை அரசாகினும் எந்த அரசாகினும் மீண்டும் ஒரு ஆயுதப்போராகினும் எதிர்ப்பது கடமை. அதற்காக மேலாண்மை வாதிகளிடம் துரோகிப்பட்ம் பெறுவது ஒரு பொருட்டல்ல. உழைக்கும் மக்களை அழிக்க முனைந்தவர்களே துரோகிகள் ஆக முடியும் என்பதை காலம் சொல்லும்.

உங்களின் கருத்துக்களை நான் மறுத்திருக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அதே நேரம் சில விடயங்களை புத்திசாலிதனமாக கையாள வேண்டிய காலம் இது என்றுதான் சொன்னேன். காரணம் பல பழை பூதங்கள் தூங்கி கொண்டிருக்கின்றன அவை விழித்தால் மீண்டும் தலைவிரித்தாடுவதற்கு உரிய நேரம் இது என்பதனால். ஆகவே ஒற்றுமையின்மையால் தமிழன் அழிந்தான் என்பது யாருமே அறிந்ததுதான். அதற்காக போராட்டங்களை தள்ளிபோடுவதால் காலங்கள் எமக்காக காத்திராது. ஆகவே வெடிமருந்து சுமந்து கொண்டு வெடிப்பதற்கு சென்ற கரும்புலிகளின் நினைவுகளை நான் ஒரு கணம் நின்று சிந்திக்கின்றேன்........ எனது கடமை எனும் வட்டத்திற்குள் வந்துவிட்டு எனது வாழ்வை வாழ்ந்துவிட்டு போகிறேன் எனும் தெரிவுதான் என்னோடு உள்ளது. துரோகிகள் துண்டாடபடும் காலம் தூரத்தில் இல்லை தமிழ் என்ற பெயர் கொண்டு இவர்களால் இனியும் வாய்திறக்க முடியாது ஆகவே சிங்ககொடியை ஏற்றிவிட்டு எத்தனை நாளுக்கு இவர்கள் சிரித்துகொண்டிருப்பார்கள்? அடுத்த தலைமுறை ஆக குறைந்தது 10 வருடத்தில் எட்டிபார்க்காதா? தொழில்நுட்ப வளர்சிகளே அப்போது பலருக்கு எமனாக நிற்கும் இதை என்னால் உணர முடிகின்றது .......... தற்போதைய காலத்தின் தேவை கருதி செயற்பட நினைப்பவர்கள் வாருங்கள் தமிழ் எனும் சக்கரத்தை இயன்ற அளவில் சூழற்றிடுவோம் என்பதே எனது கருத்து. அங்கே இங்கே என்று கையை நீட்டுவதால் ஆவதற்கு ஒன்றுமில்லை. தூரோகத்தனத்தால்தான் நாம் அழிந்தோம் என்பது எமக்கு ஒரு பாடமாக வேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள் பல காரணங்கள் மனப்பாங்குகள் இருக்கின்றது. இதனால் எமக்குள் ஒரு பிரச்சனையாயின் அவன் எதிரியுடன் சேர்ந்து தன்னினத்தையே கருவறுக்கின்றான்;. இனத்தை கருத்தில் கொண்டு சகிப்புத்தன்மை என்பது எமக்குள் இல்லை. சாதி மத பிரதேசவாத புத்திஜீவித மேலாண்மை உணர்வுகள் இனத்தில் இருந்து மட்டுமல்ல சக மனிதர்களிடம் இருந்தும் இயல்பான உறவு நிலையில் இருந்தும் பிரித்து வைத்துள்ளது. இது சமயத்தில் சக மனிதனை போட்டுத்தள்ளவும் சிங்களவனுடன் சேர்ந்து போட்டுத்தள்ளவும் துளியளவேனும் தயங்குவதில்லை.

வன்னியில் மக்கள் ஆயிரமாயிரமாக கொல்லப்பட்ட போது எத்தனையோ புத்திஜீவித மேலாண்மை வாதிகள் புலிகளின் அழிவை நாறல் மீனை புனை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தனர். இதே நிலை பிரதேசவாதமாகவும் கணிசமானளவு நிலவியது. இங்கே மக்கள் குறித்த பொதுவான நேசிப்பு என்பது பரிதாபகரமாக இருந்தது. அடிப்படை மனித நேயத்தையே தொலைத்துவிட்டு சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என்றதில் நாம் தொங்கிக் கொண்டிருக்கின்றறோம்.

எமக்கு ஒரு அரசு வேண்டும் என்பதில் குறியாய் இருக்கின்றோம். அகநிலையில் இல்லாவிட்டால் புறநிலையில் என்கின்றோம். இதை மறுப்பது அல்ல நோக்கம். இந்த ஆசை கோபுரத்தில் மேலிருக்கும் கலசத்தைப்போன்றது. ஆனால் கோபுரத்துக்கான அத்திவாரங்களை தகர்க்கும் உள்ளக முரண்பாடுகள் குறித்தே நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனுபவம் எமக்கு உணர்த்துகின்றது.

நீங்கள் சொல்வது உண்மைதான் இதை வேண்டுமானால் புலத்தில் நாம் முயற்சிக்கலாம் எமது அடுத்த தலைமுறையை தமிழ் என்ற குடைக்குள் நாம் கொண்டுவரவேண்டும். துரோகத்தின் துரோகங்கள் பற்றி நாம் வழிப்புணர்வை கொண்டுவந்து மனதநேயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு உன்னத சமுதாயமாக எமது அடுத்த சந்ததியை புலத்தில் உருவாக்குவது ஒரளவு சாத்தியம்.

சென்றவாரம்தான் யூதர்களை பற்றி ஆராய வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களை பற்றி பல ஆய்வுகளை தேடி தேடி வாசித்தேன் அவர்களின் ஆரம்ப நிலையும் இப்படித்தான் இருந்திரக்கின்றது. துரோகத்தின் உச்சத்தால்தான் அவர்கள் நாடுளந்து அங்கே இருந்து வெளியேறுகிறார்கள். பின்பும் வந்த இடங்களிலும் அது தொடர்கின்றது..... பின்பு அடுத்த அடுத்த தலைமுறைதான் அதை புரிந்து கொண்டு யூதர்கள் எனும் வட்டத்திற்குள் நிற்ப்தாற்கு முயற்சி செய்துகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அறிவு! இதைத்தான் புத்தி..சீவிகளின் கருத்தென்பதா? :icon_mrgreen:

உங்க பாராட்டுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியல்ல... :wub:

நாங்கள் ஏன் அழிந்தோம்? ஏன் எம் மண் பறி போனது? என்பதை பேசாமல் ..................!!!!!!!!!!!!!!!????????????

மீண்டும் பூறூஸுகளையும் வானவேடிக்கைகளையும் விட்டுக் கொண்டிருப்போம்!! ..... எம்மக்களுக்கு விடிவு வரும்! நாம் மீண்டும் தாயகம் சேல்வோம்!!! .... தமிழீழமும் கிடைக்கும்!!!!

நெல்லையன்....

நீங்கள் ஆராயுங்கள்.. அலசுங்கள்... ஏன் விமர்சனம் செய்யுங்கள் அந்த விமர்சனங்களை அந்த கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்யாதீர்கள்.. இது உங்களுக்கு மட்டும் நான் சொல்ல வில்லை அனைவருக்கும் இது பொருந்தும். தாம் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அனால் யதாாத்தத்தன் படி அப்படி யாராலும் செய்ய முடியாது. வழுதி தவறானவர் என்று வாதிடுவதோ, அல்லது தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று வாதிடுவதோ... அதினிலும் மேலாய் 34 ஆண்டுகாலமாக எம் தலைவர், தளபதிகள், அவர்களோடே வாழ்ந்த அந்த வன்னி வாழ் , தென்தமிழீழ மக்கள் கட்டிக்காத்த, விடுதலைப் போரில் பிழைகள் விடப்பட்டன என்று சொல்வதையோ எதிார்த்து நான் வாதிடவில்லை.

இன்று எம்முடன் பாாலா அண்ணாவோ, தமிழ்ச செல்வன் அண்ணாவோ இல்லை. ஏன் உங்களின் கருத்துப்படி தலைவர் கூட இல்லை என்றால் நீங்கள் அவர்களைப்பற்றி அவர்கள் தவறு செய்தார்கள் என்று சொல்லி எதை சாதிக்க பாார்க்ககிறீர்கள்? ( உங்களை மட்டும் குறிப்பிடவில்லை)

எம் மக்கள் மத்தியில் இதுவரையில் நடந்த விடுதலைப்பேராட்டம் தவறான வழியில், யாரின் கதைக்களையும் கேட்காத தலைமையின் வழியில் சென்றது என்ற விசமத்தனமான கருத்தை தவிர இப்படி கருத்து எழுதும் உங்களால் எதை சாதிக்்க முடியும்?

தமிழீழம் என்ற உச்ச இலக்கு இன்று வழிதவறி.. உங்களால்...(புதினம்...வழுதி.... ஏனைய ஊடகங்கள் , கருத்தாளர்கள்) முகாம்களுக்குள் இருக்கும் மக்களை, சிறையிருக்கும் போராகளை மீட்பது என்ற குறியி இலக்காக்கப்பட்டுள்ளமை வெட்ககேடில்லையா?

புலத்து சொகுசு வாழ்வை இலக்்க விரும்பாது நீங்கள் எழுதும் கருத்துக்கள் தாயக மக்கனதன்று. தங்கள் தங்கள் இருப்பை கருத்தை நிலை நிறுத்தவே தவிர நீங்கள் எல்லோரும் போாராட்டத்தின் வெற்றி தோல்லிகளை ஆராய்ந்து அடுத்த போராட்டத்துக்கு குறிப்பாக ஆயுதப்போராட்டத்துக்குள் குதிப்பதற்க்கு அல்ல.

எனக்கும் தெரியும்...நானும் பேசுவேன்... என்னாலும் முடியும் என்ற சுயத்தின் வெளிப்பாடே அன்றி... மற்றும் படி நீங்கள் யாராயினும் தேசத்தின் உயிர்்ப்பிற்காய்... அதன் எதிர்கால நலனுக்ககாய் கருத்து வைப்பதாய் என்னால் உணரமுடியவில்லை.

போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் சின்ன சின்ன போராட்டக்குழுக்களாக ஆரம்பித்த ஆயதப்போராட்டத்தில் எப்படி ஒவ்வோரு குழுவுக்கும் ஒவ்வொரு கருத்து இருந்ததோ அப்படியே தான் மீண்டும் இப்போ புலம்பெயா' தேசங்களில் அமைப்புகளுக்கு ஒரு அறிக்கை... குழுக்களுக்கு ஒரு கருத்து.

இவை எவையும் எதையும் சாதிக்கப் போவதில்லை (வழுதி தமிழ் வழுவல் இன்றி நன்றாக எழுதும் கட்டுரைகள் உட்பட)

யாரின் மீதும் குற்றம் சாட்டி என்னை பெரியாளக காட்டுவதோ, அல்லது என் கருத்து வலிமையை காட்டுவதோ என் எண்ணமில்லை.

நண்பர்களே

இந்த புதியவன் சொல்வதை கேளுங்கள்.

நம் இனம் தொன்மை வாய்ந்த இனம். 6.5 கோடி தமிழர்களும் ஒரு வகையில் அடிமைகள் தான்.. நாகரீகமான முறையில் அடிமையாய் உள்ளோம்.

நம் இனம் மிக புத்திசாலி இனம், Intellectuals. நம்மை அடக்க, ஒடுக்க நினைத்தான் அதன் காரணம் இன வெறி. ஏன் இந்த இன வெறி வந்தது என்று ஆராய வேண்டும். நாம் அறிவு ஜீவிகளாகவும், தொன்மையான, சிறப்பான பண்பாடு கொண்டதனாலேயே இதர இனத்தோர் நம் மீது காழ்ப்புணர்ச்சி கொள்கின்றனர்.. :icon_mrgreen:

இதற்கு சில ஒட்டுண்ணிகளும் உடன் போகின்றனர். அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தேசிய தலைவர் ஒரு தன்னலமில்லாத. ஒழுக்கம் மிகுந்த போராளி. இப்படி ஒரு தலைவன் இனி வருவது கடினம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஈழ மக்கள் ஒற்றுமையாக இருக்க்க வேண்டியது மிக அவசியம்

நாடு கடந்த தமிழீழம் அமைக்க அறைகூவல் விடுக்கும் கே.பி என்பவரை துரோகி என்று ஒதுக்குவது மிக முட்டாள்தனம்

இப்போது நமக்கு தேவை ஒற்றுமை. இவ்வரசு அமைப்பதின் மூலம் அவ்வொற்றுமை தாமாகவே வந்து விடும். இது இந்திய "ரா"வின் நடவடிக்கை என்றால் ஈழ மக்ககளை ஏன் ஒன்று சேர அனுமதிக்க, நிர்பந்திக்க வேண்டும்?

இந்நேரம் இந்தியா ஈழ மக்ககளுக்குச் சார்பாகத்தான் செயல்பட விரும்புகிறது. கே.பி இந்தியாவிற்கு விலை போய் விட்டாரென்றாலும் கூட, புறநிலை அரசு அமைப்பது இன்றியமையாதது..

ஒற்றுமை இதன் மூலம் தான் வரும்..

Edited by அருண் மொழி வர்மன்

  • கருத்துக்கள உறவுகள்

புழுதி வாரும் வழுதிக்கு ஒரு கடிதம்"

Tuesday, June 30, 2009

திரு. வழுதி,நாலு சுவர்களுக்க உள்ளே பேசப்பட வேண்டிய விமர்சனங்களை இப்படி புதினத்தில் எழுதி எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. உமது புலம்பலுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் புதினத்தின் நோக்கம் என்னவென்பதும் எனக்கு விளங்கவில்லை.

இதே புதினம்தான் லெனின்கிராட் போர் பற்றியும், சிங்கள இராணுவம் அகலக் கால் வைக்கிறது, வன்னி சிங்கள இராணுவத்தின் புதைகுழியாக மாறப் போகிறது என மனம் போன போக்கில் எழுதிய பரபரப்புக்கட்டுரைகள், அரசியல் களங்கள் முதலியவற்றையும் வெளியிட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.

உம்மை ஒரு அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு அந்த மிதப்பில் இப்படியான கட்டுரைகளை எழுதுகிறீர்கள் என நான் எண்ணுகிறேன். நிகழ்வுகள் நடந்த பின்னர் அதன் பிழை சரி பற்றி எந்தப் பேயனும் விமர்சனம் செய்யலாம். அதைத்தான் நீர் செய்கிறீர். மறைந்த தேசத்தின் குரல் பாலசிங்கம் பற்றி எனக்கும் அவ்வப்போது சில கருத்து வேற்றுமைகள் எழுந்ததுண்டு.

அதற்காக அவரை விழுந்தடித்துக் கொண்டு விமர்சனம் செய்ய நான் நினைக்கவில்லை. அவர் தமிழீழ விடுதலைக்கு ஆற்றிய தொண்டு, அதற்காக அவர் கொடுத்த விலைதான் எனக்கு மேலாகப்பட்டது. இப்போது அவர் மறைந்துவிட்டார். மறைந்தவர் திரும்பி வரமாட்டார் என்ற துணிச்சலில் யாரும் அவர் சொன்னதாக எழுத முடியும். அதில் நீரும் ஒருவர்.

(1) "உண்மை சொல்லும் நம்பக ஊடகங்களாக ஒரு காலத்தில் போற்றிய தளங்களையெல்லாம், வதந்தி பரப்பும் துரோகத் தளங்களாகப் பார்க்க வேண்டிய கதிக்குள் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பத்தின் நாயகன் தெய்வீகனும் செய்வதறியாது திணறும் புதினமும்

என்ற கட்டுரையிலிருந்து

அதன்படி புதினம் நடத்துபவரிடம் தொடர்பு கொண்டு

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!

தி.வழுதி

இந்த கருத்துக்களம் 'புதினம்' இணையத்தளத்துக்காக எழுதப்பட்டதாகும்.

இந்தக் கட்டுரையை பிரசுரிக்கும்படி கூறியுள்ளனர்.

இதை பிரசுரிக்காவிட்டால் இந்த தளத்தை நடத்தவிடமாட்டோம் என்று கூறி பிரசுரிக்கச் செய்தார்கள்.

--------------

இது நம்பும் படியாக இல்லையே சரிந்த பெயரை நிமிர்த்த முற்படுகின்றதா புதினம் ?

தமிழ்மக்களின் விடிவிற்கு தமது உயிரைக் கூட துச்சமாகமதித்து வீரகாவியம் படைத்த மறவர்கள் புலிகள்

ஆனால் இவர்கள் இணையத்தை நடாத்துவதற்கு புலிகளுக்கும் எதிராகவும் தமிழ்மக்களுக்கும் எதிரான துரோகத்திற்கு துணைபோவதும் துரொகமே

தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு துணைபோய் ஒரு இணையத்தை யாருக்காக நாடாத்தவேண்டும் ??

நீங்கள் இருபக்கமும் எழுதும் நடுநிலை ஊடகம் என்றால் இவ்வளவு காலமும் ஏன் அப்படி எழுதவில்லை ???

இதுவரை தமிழ்த்தேசியத்தை மட்டுமே எழுதியது ஏன் ???

இதிலும் பார்க்க இணையத்தை மூடலாமே ???

தமிழ்மக்களுக்கு எதிராக கட்டுரையை பிரசுரிக்க முற்படுவதும் துரொகமே அப்படியானல் உங்களின் கூற்றுப்படியும் புதினமும் துரோகியே

-------------------

கட்டுரை இனி.............

"செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா" இப்படி ஒரு வரி கர்ணன் படத்தில் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' எனத் தொடங்கும் பாடலில் வருகிறது.

இதே நிலைதான் இன்று புதினத்தை நடத்துபவருக்கும் நிகழ்ந்துள்ளது.

இவரை சுற்றி இருக்கும் பலரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்ற போலி நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிற இவரும் இவர்களிடம் ஆலோசனை கேட்டே இந்த தளத்தை நடத்தி வருகிறார்.இப்படி ஆலோசனை வழங்குபவர்களின் கட்டுரையையும் அப்பப்போது தனது தளங்களில் பிரசுரித்து வந்துள்ளார். இவர்களுடன் சுற்றி இருந்த கூட்டமானது விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுடன் இருந்தே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நடித்து காரியத்தை கச்சிதமாக முடிக்க பகைவனால் அனுப்பப்பட்ட கூட்டம்.

இவர்களின் கச்சிதாமான நடிப்பை நம்பி இவர்கள் சொல்வதை கேட்டு இணையத்தை நடத்திக் கொண்டிருந்தவருக்கு இப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. இவ்வளவுகாலமும் அமைதியாக இருந்த கூட்டம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்று அரசாங்கம் அறிவித்த உடன் தனது சுயரூபத்ததைக் காட்டத் தொடங்கியது.

இச் சூழலைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்கள் மனங்களில் தலைவர் அவர்களைப்பற்றி அவர்களிடம் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முயன்றது. அதை எப்படிச் செய்யலாம் என்று யோசித்தபோதுதான் அவர்கள் புதினத்தை பயன்படுத்த முடிவுசெய்தார்கள். அவர்கள் புதினத்தை பயன்படுத்த முடிவு செய்ததற்கு வலுவான காரணம் ஒன்றுள்ளது.

அதாவது இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழத் தேசியத்தலைவருக்கும் ஆதரவாக இருந்த இணையத்தில் தலைவரைப்பற்றி அவரின் மதிப்பைக் குறைக்கக்கூடிய வகையில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டால் மக்கள் அதை நம்புவார்கள் என்று நினைத்தார்கள்.

அதன்படி புதினம் நடத்துபவரிடம் தொடர்பு கொண்டு இந்தக் கட்டுரையை பிரசுரிக்கும்படி கூறியுள்ளனர். இதை பிரசுரிக்காவிட்டால் இந்த தளத்தை நடத்தவிடமாட்டோம் என்று கூறி பிரசுரிக்கச் செய்தார்கள்.

இந்தக்கட்டுரை வழுதி அவர்கள் எழுதியதாகத்தான் நாம் எல்லாம் நினைத்துக்கொண்டுள்ளோம்.

ஆனால் இந்தக் கட்டுரையை எழுதியவர் வேறு ஒருவர் எனத் தெரியவருகிறது. இவரின் பெயர் தெய்வீகன்.

இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளனாக தன்னை தமிழ் சமுதாயத்தில் நிலைநிறுத்திக்கொள்ள சகல பிரயத்தனங்களும் செய்து ஒருவிதத்தில் அதில் வெற்றியும் அடைந்தவர்.

ஈபிடிபி ஆதரவாளரான இவர் அவர்களின் பணிப்பின்பேரில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளனாக நடிக்கத் தொடங்கினார். அதன் ஒருகட்டமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிகைகளான உதயன் மற்றும் வீரகேசரிப் பத்திரிகையில் இணைந்து பணிபுரிந்துவிட்டு வெளிநாடு ஒன்றுக்குச் சென்று அங்கே இருந்து செயற்பட்டுருகிறார்.

இவரின் மாமனார் ஈபிடிபியில் ஒரு முக்கியமான நபர். அவரின் கட்டளையின்படியே இவர் அனைத்துவேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார். இவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு முக்கியபணிகள்.

அதில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்குள் ஊடுருவி அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை பெற்று அந்த அமைப்பை ஈபிடிபிக்கு ஆதரவாக செயற்படவைப்பது

மற்றொன்று புலி ஆதரவு ஊடகங்களை தங்கள் பக்கம் இழுப்பது.இதில் முதலாவது வேலைத்திட்டத்தில் மும்முரமாக இறங்கிய இவர் சில இளைஞர்களை சேர்த்துக்கொண்டு அந்தமைப்பினர் விவேகமாக வேகமாக செயற்படவிலலை என்று காரணம் கூறி அமைப்பின் தலைவர் பதவியை கைப்பற்ற முயன்றார்.

இவரின் சுயரூபம் தெரிந்தவுடன் இவருக்கு ஆதரவாக இருந்த இளைஞர்கள் இவருக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தி இவர் சம்பந்தமாக பெரியோரிடம் முறையிட்டனர். இதனால் தான் புலி ஆதரவாளன் இல்லை என்று அனைவருக்குமே தெரிநதுவிடுமோ என்று பயந்த இந்த எட்டப்பன் உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார்.

அதாவது பக்கத்து மாநிலத்தில் சில இளைஞர்கள் நான்கம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் தொடங்கி மூன்றாவது நாள் இந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தவேண்டும் என்று எண்ணிய இந்தப் பச்சோந்தி இரு இளைஞர்களுடன் சேர்ந்து உண்ணாவிரத்தை ஆரம்பித்தது. இவருடைய உண்ணாவிரதத்தை நினைத்தால் எல்லோருக்குமே சிரிப்புத்தான் வருமாம்.

பக்கத்து மாநிலத்தில் இருந்துவந்த இளைஞர்கள் ஒரு சொட்டுத் தண்ணிகூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தபோது இவர் தோடம்பழச்சாறும் பாலும் அருந்திக் கொண்டிருந்தாராம். அதைவிட இந்த உண்ணாவிரதம் தொடர்ச்சியாகச் சென்றால் தமிழருக்கு சார்பாக அரசாங்கம் திரும்பிவிடுமோ என்று அஞ்சிய இவர் பலதில்லுமுல்லுகள் செய்து தங்களுடைய உண்ணாவிரத்தைமட்டுமல்ல பக்கத்து மாநில இளைஞர்களின் உண்ணாவிரத்தையும் முடித்துவிட்டார்.

3 நாட்கள் இவர் இருந்த உண்ணாவிரத்தால் தான் தமிழீழ ஆதரவாளன்தான் என்று நிரூபிக்க முயன்று அதில் வெற்றியும் கண்டார்.

அடுத்தது ஊடகம் இவர் இங்கே வந்திறங்கிய காலத்திலிருந்தே படிப்படியாக புதினம் நடத்துனரிடம் கதைத்து அவருக்கு சில செய்திகள் மற்றும் கட்டுரைகளைக்கொடுத்து தனது நட்பை வலுப்படுத்திக் கொண்டார்.

இன்றைய காலத்தை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்ததிட்டமிட்ட தேசவிரோதிகள் இவரிடம் இப்படியான கட்டுரை ஒன்றை எழுதி வழுதி என்ற பெயரில் பிரசுரிக்கச் செய்ததாகவும் மற்றும் பல புலிகளின் பொறுப்பாளர்களின் பெயர்களில் அறிக்கைகளை வெளியிடச் செய்து மக்களைக் குழப்பும் வேலையிலும் இவர் இறங்கியுள்ளார.

அண்மையில் தயாமோகனின் அறிக்கை என்று வேறோர் இதழில் வெளியான அறிக்கையும் செம்மலை என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையும் இவரால் எழுதப்பட்டவை என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளது.

இதைவிட தனக்குத் தெரிந்த இளையோரிடம் தலைவர் மற்றும் விடுதலைப்புலிகள் சம்பந்தமாக தப்பான கதைகளைச் சொல்லிவருவதாகவும் அவர் கூறுவது உண்மையா என பல இளையோர் எம்மிடம் தொடர்புகொண்டு கேட்டனர். இப்பொழுது அந்தக் கட்டுரையில் உள்ளவிடயங்கள் சரிதான் என்று நிருபிக்க ஆதரவு தேடிக்கொண்டிருக்கிறார் தெய்வீகன்.

கட்டுரை எழுதிய வழுதியே (???) அமைதியாக இருக்கும்போது அந்தக்கட்டுரைக்கு ஆதரவு தேட முயல்வது ஏன் என்பது எல்லோருக்குமே தெளிவான உண்மை

இந்தக் கட்டுரை மட்டுமல்ல விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயரில் அறிக்கைகள்விட்டதும் விடப்போவதும் எமக்குள்ளேயே ஊடுருவி எம்மைக் குளப்ப முயல்பவர் கடந்த ஒருவருடமாக வேலையேதும் பார்க்காமல் ஈபிடிபியின் சம்பளம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நம்பிக்கையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தெய்வீகன்.

மக்களே தலைவர் துரோகிகளைப்பற்றி கூறிய

"எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்"

என்ற சிந்தனையை நிலைநிறுத்தி துரோகிகளை ஒதுக்கி எமது இலட்சியத்தை நோக்கி முன்னகர்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து, எனி வரும் காலங்களில் என்ன செய்யணும் என்பது பற்றிக் கதையுங்கள்.. எங்களின் கடமைகளை நாங்கள் சரிவரச் செய்யாததாலும், காலம் பிந்திய நடவடிக்கைகளாலும் தான் இந்த நிலமைக்குக் காரணம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இந்த ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை மடுவில் ஆமி நிற்கின்றபோது செய்திருந்தால் இந்தளவு பிரச்சனை வந்திருக்குமா?? நாங்கள் விழித்தெழுந்தபோது, கழுத்துக்கு மேலே தண்ணி போய் விட்டிருந்தது.

இப்போதும் எவ்வளவோ செய்ய ணே;டியுள்ளது. ஆனால் எல்லாவற்றையும், மறந்து விட்டு, இதற்குள், இப்படியான விவாதங்களுக்குள் மூழ்கிக் கிடக்கின்றோம்.

நாடு கடந்த அரசு என்பது அவ்வளவு இலகுவானதல்ல. அதற்குப் பலருடைய ஆதரவு, தெளிவுபடுத்தல் அவசியம். அதையும் உருத்தகுமார் அண்ணாவின் தலையில் சுமையாகக் கிடத்தி விடாதீர்கள்.

ஒரு காலத்தில் தமிழ் ஈழத்திற்கான போராட்டம் விரைவில் வெற்றி பெறும். எம் வம்சத்தை அங்கே கொண்டு சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் இன்றைய நிலைமையில் நிறையப் போராட வேண்டியுள்ளது.

அந்தக் காலத்தை நாம் எடுக்கின்றபோது, எம் இனம் தமிழன் என்ற அடையாளத்தைத் தொலைத்து விட்டு, கறுப்பினத்தவர் போல வெறும் அடையாளமாக மாறிவிடும் நிலை உண்டு. அதைத் தடுக்க நமக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தி, ஒரு தனி சமுதாயமாக வளர்தெடுக்க வேண்டும்.

அத்தோடு பொருளாராதரீதியிலும் நம் வலுவை உயர்த்த வேண்டும்.

பொறுப்புள்ள ஒரு குழுவால் தமிழனுக்கென்ற வங்கி, கல்விக்கூடங்கள், நூலகங்கள், என்று பல தரப்பட்ட செயற்பாடுகள் செய்ய வேண்டும்.

அவனைத் தூற்றி, இவனைத் தூற்றி நேரத்தைக் கழிப்பதை விட்டு, ஏதாவது செய்யத் துணியுங்கள் உறவுகளே!

ரகுநாதன் அண்ணா எதிரிகளை விட துரோகிகள் ஆபத்தானவர்கள் என்பது உண்;மைதான் என்றாலும் துரோகிகளைவிட பிழைப்புவாதிகள் இன்னும் ஆபத்தானவர்கள்.நாங்கள் இவ்வளவு பெரிய பின்னனைடைவை சந்தித்ததற்கு பிழைப்புவாதம் தான் காரணம்.

அதுவும் இங்கே புலத்திலே பிழைப்புவாதம் கொடி கட்டிப்பறந்து.

'தகடு கொடுத்து வாழ்வரே வாழ்வார்-அல்லாதார்

தகட்டை கொடுத்து வெளிச்செல்வார்" என்ற புதுக்குறள் உருவாக்கப்படுமளவுக்கு இது ஒரு கலாச்சாரமாகவே மாறி இருந்தது.

அங்கே கரும்புலி மாவிரர் தங்கள் உயிரையே தாயக விடுதலைக்கு ஆகுதியாக்குகிறார்கள்.

ஆனால் இங்கே புலத்தில் தான் உண்ணும் உணவை தன்னுடன் பணிபுரியும் ஒருவனின் பசிக்கு பகிர்ந்து கொடுக்க விரும்பாதவன். சிங்களவன் எம்மக்களை அடிமைப்படுத்த உணவை ஆயதமாகப் பயன் படுத்தியது போல தன்னுடைய அதிகாரக் கட்டமைப்பை நிலை நிறுத்த உணவை ஆயுதமாகப் பயன் படுத்தியவன் தமிழ்தேசிய ஊடகக் கட்டமைப்பு ஒன்றின் நிர்வாகி.

இந்த நிலையில் இந்த அமைப்பு எப்படி அண்ணையினுடைய சிந்தனைக்கும் செயலுக்கும் வலுச் சோ;;த்து அவருக்கு துணை நின்றிருக்கும். சிந்தித்துப் பாருங்கள்….

Edited by athiyan

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் ரகுநாதன்!

பாலா அண்ணையை நோக்கி ஒரு பார்வை. அன்று அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற உடனேயே தலைவருக்கு தொலைபேசி அழைப்பு .......... "இவரும் அவங்களுடன் சேர்ந்து எம்மை விற்க நிற்கிறார். ...." . அன்றிலிருந்து அம்மகத்தான மனிதன் இறக்கும் வரை ??? தலைவர் அவருடம் பேசவில்லை.

மனிதன் இறக்கும் வரை ??? அப்படியானல் இறந்த பின்னர் பேசினாரா ??? தொலைபேசி எண் இருந்தால் கொடுங்கள் நாங்களும் பேசலாமே

இவரும் வழுதி போல் தேசத்தின் குரலுடனும் தலைவருடனும் இறுதி வரை தொடர்பில் இருந்தேன் என்று எழுதாமல் விட்டு விட்டார்

எல்லாவற்றையும் நேரில் நின்று பார்த்தது போல் எழுதி வருவது தான் உங்களை காட்டுக்கொடுத்து விட்டது

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் பிழையான வழியில் சென்றால், நிச்சயம் குடும்பத்தலைவனோ, தலைவியோ மிகப்பெரிய பங்காளிகள்!!

இன்று இவ்வளவு கேவலத்துக்கு எம்மக்கள் சென்றதற்கு யார் பொறுப்பு???????????????

டக்லஸ் . ஆனந்த சங்கரி சித்தாத்தன் எல்லாம் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களா ??? ஒரே குடும்பமோ ??

அப்பு மல்லாந்து படுத்து துப்புகிறாய்!! கவனம் உன் மூஞ்சையில் தான் விழப்போகிறது!!

இதால் மற்றவர்களுக்கு பாதிப்பில்லை ஆனால் நீங்கள் மற்றவர்கள் மூஞ்சையில் துப்புகின்றீர்கள்

இந்த உலகம் இது வரை பார்க்காத விடுதலைப்போராட்டமாக விடுதலைப்புலிகள் இருந்தார்கள் அவர்களை எந்த வரைவிலக்கணத்திற்குள்ளும் இட முடியவில்லை அது தான் உண்மை

சரி உலக வரலாறுகளில் இந்த முரண்பட்ட வல்லரசுகள் இரண்டு பட்டு எல்லா இனச்சிக்கல்களுக்குளாலும் மோதிக்கொண்டன ஆனால் எங்கேயாவது இவை ஒன்று பட்டு ஒரு இனத்தை அதுவும் ஒரு விடுதலைப் போராட்டத்தை அழித்த உலக வரலாறு இருக்கின்றதா ????

எதற்காக தமிழினத்தை மட்டும் இப்படி அழித்தார்கள் ????

இந்த முழு உலக வல்லரசுகளும் தமிழர்களுக்கு ஒரு சுனாமிக் கட்டமைப்பைக்கூட தர இயலாதவர்கள் ஏன் விரும்பாதவர்கள் என்றே கூறலாம் ??

சிறிலங்கா இனவாத சந்திரிக்காவால் போற்றப்பட்ட அமெரிக்க பில்கிளிடனால் பராட்டப்பட்ட தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தி

சில ஊடகங்கள் கூட இத்துரோகச் செயலை முன்னெடுப்பதற்கான காவிகளாக செயற்படுகி்ன்றன.

ஊடகம் என்பது பொதுக்கழிப்பறை அல்ல,கண்டதையும் எழுதவும் பேசவும்.அது ஒரு தனி மனிதனின் சுய விருப்பு வெறுப்புகளை எழுதும் நாட்குறிப்போ அல்ல. ஊடகம் என்பது ஒரு சமூகத்தின் குரல். இனத்தின் அடையாளம்.

-இதயச்சந்திரன்

நன்றி:ஈழமுரசு

ரகுனாதன் , நீங்கள் இதயச்சந்திரனின் ஆக்கத்தை இங்கே இணைத்திருக்கிறீர்கள். முதலில் இதயச்சந்திரனும், வேல்சில் இருந்து எழுதும் அருள்சும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அல்ல. இவர்கள் ஊடக வியலாளர்கள். அண்மைக்காலங்களில் இவர்கள் எழுதியவற்றில் சில, சரத் பொன்சேகா குண்டு வெடிப்பில் தாக்குதல் உண்டான போது, இவர்கள் சொன்னார்கள் இனி சரத் பொன்சேகா வரமாட்டார் உறுதியான செய்தி என்றார்கள். சம்பூர் மீது இராணுவம் தாக்கும் போது சொன்னார்கள். புலிகள் சம்பூர், மூதுரை விட மாட்டார்கள் ஏனென்றால் திருக்கோணமலை துறைமுகம் தாக்கவேண்டு மென்றால் சம்பூர், மூதூர் தேவை என்றார்கள். பிறகு கிழக்கில அது சதுப்பு நிலம் இங்கே புலிகளை வெல்ல முடியாது என்றார்கள். பிறகு குடும்பிமலை பிடிப்பது கஸ்டம் என்றார்கள். பிறகு வன்னியில் அகலக்கால் வைக்கிறார்கள். ஆமி அழியப்போகுது என்றார்கள். சிலவத்துறை பிடித்ததற்கு காரணம் தெற்கில் ஒரு வெற்றிச் செய்தியைக் காட்ட வேணும் என்பது தான் என்றார்கள். பிறகு தேள் வடிவில ஆமி நிக்குது என்றார்கள். விடத்தல் தீவை விடமாட்டங்கள் என்றார்கள். பூநகரியை விட மாட்டார்கள் என்றார்கள். கிளிநொச்சி பிடிக்க விடமாட்டார்கள் என்றார்கள்............................

இப்படி இப்படிச் சொல்லி இப்ப பதமநாதன் சொன்னது பிழை என்று சொல்கிறார்கள். நீங்களும் இணைக்கிறிர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுனாதன் , நீங்கள் இதயச்சந்திரனின் ஆக்கத்தை இங்கே இணைத்திருக்கிறீர்கள். முதலில் இதயச்சந்திரனும், வேல்சில் இருந்து எழுதும் அருள்சும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அல்ல. இவர்கள் ஊடக வியலாளர்கள். அண்மைக்காலங்களில் இவர்கள் எழுதியவற்றில் சில, சரத் பொன்சேகா குண்டு வெடிப்பில் தாக்குதல் உண்டான போது, இவர்கள் சொன்னார்கள் இனி சரத் பொன்சேகா வரமாட்டார் உறுதியான செய்தி என்றார்கள். சம்பூர் மீது இராணுவம் தாக்கும் போது சொன்னார்கள். புலிகள் சம்பூர், மூதுரை விட மாட்டார்கள் ஏனென்றால் திருக்கோணமலை துறைமுகம் தாக்கவேண்டு மென்றால் சம்பூர், மூதூர் தேவை என்றார்கள். பிறகு கிழக்கில அது சதுப்பு நிலம் இங்கே புலிகளை வெல்ல முடியாது என்றார்கள். பிறகு குடும்பிமலை பிடிப்பது கஸ்டம் என்றார்கள். பிறகு வன்னியில் அகலக்கால் வைக்கிறார்கள். ஆமி அழியப்போகுது என்றார்கள். சிலவத்துறை பிடித்ததற்கு காரணம் தெற்கில் ஒரு வெற்றிச் செய்தியைக் காட்ட வேணும் என்பது தான் என்றார்கள். பிறகு தேள் வடிவில ஆமி நிக்குது என்றார்கள். விடத்தல் தீவை விடமாட்டங்கள் என்றார்கள். பூநகரியை விட மாட்டார்கள் என்றார்கள். கிளிநொச்சி பிடிக்க விடமாட்டார்கள் என்றார்கள்............................

இப்படி இப்படிச் சொல்லி இப்ப பதமநாதன் சொன்னது பிழை என்று சொல்கிறார்கள். நீங்களும் இணைக்கிறிர்கள்.

அவர்கள் ஊடகவியலாளர்கள். தீர்க்கதரிசிகள் அல்லவே.!!!

அவர்கள் ஊடகவியலாளர்கள். தீர்க்கதரிசிகள் அல்லவே.!!!

நன்றிகள் நுனாவிலான்

இங்கே சிறந்த ஆய்வாளர் யார் என்று பட்டி மன்றமா நடத்துகின்றோம் ?

இவர்கள் எழுதுவதில் எதுவும் நடக்கவில்லை தான் ஆனால் நம்து தலைமை மீது சேறு பூசுபவர்களையும் இரட்டை வேடம் போடுபவர்களையும் தான் நாங்கள் விமசிக்கின்றோம்

இப்படி ஒரு தலைவனையே தூற்றுகின்றவர்கள் துரோகிகளாக மட்டுமே இருக்க முடியும்

என்னுடையா தனிப்பட்ட அலசல் --- நிக்ராகுவா

பெரிய வட்டம் ஒண்டு ஓடிப்போட்டு தொடங்கின இடத்துக்கே வந்து நிக்கிறோம்! எண்ட ரெண்டுசேம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.