Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுப்பேத்தும் செயல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களின் புரபயல்[profile] போய் பார்த்து யாருக்கு யார் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என பார்க்கும் டங்கு போன்ற கருத்தாளரைக் கண்டால் கடுப்பு வரும்.

ஓ.. இப்பிடி ஒரு வழி கூட இருக்கா..? :lol:

  • Replies 165
  • Views 19.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு அதிகமா ஆசைபட்டு கிடைக்கல்லன்னா எல்லாமே கடுப்புத்தான்... இது இப்படி இருக்கு... :lol: :lol: :D :D

http://www.youtube.com/watch?v=DBwr-ET8wME

  • கருத்துக்கள உறவுகள்

நான் மாமிசம் சாப்பிடுவதை விட்டால் பிராமணருக்கு கொடுக்கப்படும் உயர்ந்த அந்தஸ்தை எனக்கும் கொடுப்பீர்களா கறுப்பி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடுப்பேத்தும் செயல்களில் முக்கியமானவை அல்லது முக்கியமானவர்கள் என்று சொன்னால்..

1. குடி போதையில் என்னோடு யாரும் பழகுவது எனக்குப் பிடிப்பதில்லை.

2. புகைப்பிடித்துக் கொண்டு எமக்கு அசெளகரியம் தருபவர்களைப் பிடிப்பதில்லை.

3. பொது இடங்களில்.. போக்குவரத்து ஊடகங்களில்... நிகழ்வுகளில்.. எங்கென்றாலும்.. ஆக்களோடு உரசிக்கொண்டு.. முட்டிக் கொண்டு நிற்பது எனக்குப் பிடிக்காது.

4. உள்ளொன்று வைச்சுக் கொண்டு வெளிப்படைக்கு நல்லவர்களாக நடிப்பவர்களைக் கண்டு பிடிச்சன்.. வாழ்க்கையில் அவர்களை எனக்குப் பிடிக்காது.

5. அன்பைக் காட்டவே தெரியாமல் நட்பென்றால் என்னென்றே உணராமல்.. அன்பாய் நட்பாய் இருக்கிறன் என்று சொல்பவர்கள் மிகக் கடுப்படிப்பவர்களாக இருக்கின்றனர்.

6. புழுகர்கள் கடுப்பின் உச்சியில் இருப்பார்கள்.

7. அளவுக்கு அதிகமாக நேரிலோ.. தொலைபேசியிலோ கதைப்பர்வகளைக் கண்டாலும் கடுப்புத்தான்.

8. மீன்.. முட்டை.. இறைச்சி வாசனைகளோடு துப்பரவு செய்யாத பாத்திரங்களில் உணவு அல்லது நீர் பரிமாறுவதும் எனக்குக் கடுப்படிக்கும் விடயம்.

9. குளிக்காமல்.. வாழும் இடத்தை துப்பரவு பண்ணாமல் இருப்பவர்கள் மிகவும் கடுப்படிப்பவர்களாவர்.

10. வீட்டிற்குள் வெளியில் போட்டுக் கொண்டு போன சப்பாத்து அல்லது செருப்போடு வருபவர்களும் கடுப்புக்குரியவர்கள்.

11. அதிக நகை அல்லது அதிக செயற்கை அலங்காரம் போடுபவர்களை கண்ணில் காட்டக் கூடாது.

12. மூக்கை அரிக்கும் வாசனை திரவியங்களை பாவித்துவிட்டு அருகில் உட்கார்பவர்களை பிடிக்காது.

13. அருகில் இருந்து கொண்டு பத்திரிகை படிக்கும் போது பத்திரிகை தாள்களை எங்கள் மூஞ்சியில் பறக்க விட்டுக் கொண்டிருப்பவர்களை பிடிக்காது.

14. பேரூந்தில்.. தொடரூந்தில்.. சீற்றுக்கு மேல் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு போகும் குரங்குகளை பிடிக்காது.

15. சிக்னலை மதிக்காது ரோட்டை கடந்து சாரதிகளுக்கு இடைஞ்சல் பண்ணுபவர்களையும் பிடிக்காது அதேபோல் நடைபாதையில் செல்பவர்களை மதிக்காத சாரதிகளும் கடுப்பேத்துபவர்களாக இருக்கின்றனர்.

16. கெட்ட வார்த்தைகள் மற்றும்.. ஒருமையில் விளித்து.. அல்லது பாவித்து கதைப்பவர்களோடு கதைக்கவே விருப்பம் வராது.

17. அருகில் இருந்து கொண்டு கத்தி கதைப்பவர்கள் விரைவாக கடுப்பேத்துபவர்களாக இருப்பர். இவர்கள் மட்டுமன்றி தொலைபேசியில் எம்மை கதைக்க விடாமல் தாங்கள் மட்டும் சொல்வதை கேட்க வேண்டும் என்று அளந்து கொண்டிருப்பவர்களும் கடுப்படிப்பவர்களாவர்.

18. கதைக்கும் போது அதிகம் சிரிப்பவர்களும் கடுப்புக்குரியவர்கள்.

19. றோட்டில் போகும் போது கட்டிப்பிடிச்சு கொஞ்சிக் கொண்டு போகும் மந்திகளையும் பிடிப்பதில்லை. கைகோர்த்துக் கொண்டு பின்னால் முன்னால் வருபவர்கள் பற்றிக் கவலை இன்றி அலையும் ஜந்துகளையும் பிடிப்பதில்லை.

20. அதிக ஓசையில் பாடல் கேட்பவர்களையும் பிடிப்பதில்லை.

இந்த 20 வகையினரும் முதன்மையாக கடுப்படிப்பவர்கள். இன்னும் இருக்கிறார்கள். என்ன தான் கடுப்படிச்சாலும் நானா விலகி நடந்துக்குவனே அன்றி வாயால் கதைக்கமாட்டன். :lol:

நான் முன்பே சொல்லிவிட்டேன்

திருந்தவேண்டியது நாங்களல்ல

நீங்கள்தான்..

ஆனாலும் இதில் 100 வீதம் எனக்கும் கடுப்பேத்தும்

அத்துடன் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காது தேடத்தொடங்குவார்களே...

அந்த நேரத்தில் வரும் கடுப்பு இருக்கே.............

  • கருத்துக்கள உறவுகள்

எனது குடும்ப வைத்தியர்! 2 மணிக்கு நேரம் எடுத்து சென்றால் சுத்தமாய் 5 மணிக்குத்தான் அழைப்பார்! அதற்காக நான் போகும் போதே பெரிய புத்தகம் ஒன்றுடன் போய் விடுவது!

மனைவி சொல்வாள் பேசாமல் இவரை மாத்துவோம் என்று, அவளுக்கு என்ன தெரியும் அந்தாள் கேட்க முதல் மெடிக்கல் லீவ் எழுதுவது! :D

எனது வீட்டிலும் எல்லோரும் அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்திலிருந்து எடுத்து விடுவினம், நான் தேடும் போது மட்டும் அவை அங்கே இருக்காது! பின் நான் கடுப்புடன் தேடி பாவித்து விட்டு அந்த இடத்தில் வைத்தால் மீண்டும் அவர்கள் சுலபமாய்.... . :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் மாமிசம் சாப்பிடுவதை விட்டால் பிராமணருக்கு கொடுக்கப்படும் உயர்ந்த அந்தஸ்தை எனக்கும் கொடுப்பீர்களா கறுப்பி :D

மாமிசம் சாப்பிடாதவர்கள் பிராமணர்கள் என்றில்லைத்தானே. இங்கே வெள்ளையர்கள் பலர் இப்போ சைவமாக மாறிக் கொண்டு வருவதை காணக்கூடியதாய் இருக்கு.

ஆசையிருந்தும் மனக்கட்டுபாட்டுடன் அதை விடுவது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன?

(யாழ்களத்தின் சமையல்பகுதியிலேயே தெரிகிறதே)

அப்படி ஒருவேளை சைவமாக மாறினால் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

உங்கள் வாயிலிருந்து உயிரினங்கள் தப்பித்துக்கொண்டன எண்டு உயிரினங்களும் வாழ்த்தும் மேலாக ஒர் அந்தஸ்தும் காத்திருக்கிறது. :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடுப்பேத்தும் செயல்களில் முக்கியமானவை அல்லது முக்கியமானவர்கள் என்று சொன்னால்..

1. குடி போதையில் என்னோடு யாரும் பழகுவது எனக்குப் பிடிப்பதில்லை.

2. புகைப்பிடித்துக் கொண்டு எமக்கு அசெளகரியம் தருபவர்களைப் பிடிப்பதில்லை.

3. பொது இடங்களில்.. போக்குவரத்து ஊடகங்களில்... நிகழ்வுகளில்.. எங்கென்றாலும்.. ஆக்களோடு உரசிக்கொண்டு.. முட்டிக் கொண்டு நிற்பது எனக்குப் பிடிக்காது.

4. உள்ளொன்று வைச்சுக் கொண்டு வெளிப்படைக்கு நல்லவர்களாக நடிப்பவர்களைக் கண்டு பிடிச்சன்.. வாழ்க்கையில் அவர்களை எனக்குப் பிடிக்காது.

5. அன்பைக் காட்டவே தெரியாமல் நட்பென்றால் என்னென்றே உணராமல்.. அன்பாய் நட்பாய் இருக்கிறன் என்று சொல்பவர்கள் மிகக் கடுப்படிப்பவர்களாக இருக்கின்றனர்.

6. புழுகர்கள் கடுப்பின் உச்சியில் இருப்பார்கள்.

7. அளவுக்கு அதிகமாக நேரிலோ.. தொலைபேசியிலோ கதைப்பர்வகளைக் கண்டாலும் கடுப்புத்தான்.

8. மீன்.. முட்டை.. இறைச்சி வாசனைகளோடு துப்பரவு செய்யாத பாத்திரங்களில் உணவு அல்லது நீர் பரிமாறுவதும் எனக்குக் கடுப்படிக்கும் விடயம்.

9. குளிக்காமல்.. வாழும் இடத்தை துப்பரவு பண்ணாமல் இருப்பவர்கள் மிகவும் கடுப்படிப்பவர்களாவர்.

10. வீட்டிற்குள் வெளியில் போட்டுக் கொண்டு போன சப்பாத்து அல்லது செருப்போடு வருபவர்களும் கடுப்புக்குரியவர்கள்.

11. அதிக நகை அல்லது அதிக செயற்கை அலங்காரம் போடுபவர்களை கண்ணில் காட்டக் கூடாது.

12. மூக்கை அரிக்கும் வாசனை திரவியங்களை பாவித்துவிட்டு அருகில் உட்கார்பவர்களை பிடிக்காது.

13. அருகில் இருந்து கொண்டு பத்திரிகை படிக்கும் போது பத்திரிகை தாள்களை எங்கள் மூஞ்சியில் பறக்க விட்டுக் கொண்டிருப்பவர்களை பிடிக்காது.

14. பேரூந்தில்.. தொடரூந்தில்.. சீற்றுக்கு மேல் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு போகும் குரங்குகளை பிடிக்காது.

15. சிக்னலை மதிக்காது ரோட்டை கடந்து சாரதிகளுக்கு இடைஞ்சல் பண்ணுபவர்களையும் பிடிக்காது அதேபோல் நடைபாதையில் செல்பவர்களை மதிக்காத சாரதிகளும் கடுப்பேத்துபவர்களாக இருக்கின்றனர்.

16. கெட்ட வார்த்தைகள் மற்றும்.. ஒருமையில் விளித்து.. அல்லது பாவித்து கதைப்பவர்களோடு கதைக்கவே விருப்பம் வராது.

17. அருகில் இருந்து கொண்டு கத்தி கதைப்பவர்கள் விரைவாக கடுப்பேத்துபவர்களாக இருப்பர். இவர்கள் மட்டுமன்றி தொலைபேசியில் எம்மை கதைக்க விடாமல் தாங்கள் மட்டும் சொல்வதை கேட்க வேண்டும் என்று அளந்து கொண்டிருப்பவர்களும் கடுப்படிப்பவர்களாவர்.

18. கதைக்கும் போது அதிகம் சிரிப்பவர்களும் கடுப்புக்குரியவர்கள்.

19. றோட்டில் போகும் போது கட்டிப்பிடிச்சு கொஞ்சிக் கொண்டு போகும் மந்திகளையும் பிடிப்பதில்லை. கைகோர்த்துக் கொண்டு பின்னால் முன்னால் வருபவர்கள் பற்றிக் கவலை இன்றி அலையும் ஜந்துகளையும் பிடிப்பதில்லை.

20. அதிக ஓசையில் பாடல் கேட்பவர்களையும் பிடிப்பதில்லை.

இந்த 20 வகையினரும் முதன்மையாக கடுப்படிப்பவர்கள். இன்னும் இருக்கிறார்கள். என்ன தான் கடுப்படிச்சாலும் நானா விலகி நடந்துக்குவனே அன்றி வாயால் கதைக்கமாட்டன். :D

1,2,3)சரி

4)அப்படியானவர்களை எப்படி கண்டு பிடிப்பீங்கள்?

5)அன்பை,நட்பை எப்படிக் காட்ட‌ வேண்டும் என நினைக்கிறீங்கள்?[உண்மையான அன்பின்,நட்பின் அடையாளம் என்ன]

6)6றில் இருந்து 15 வரை சரி

16)மிக நெருக்கமானவர்கள்,நண்பர்கள் ஒருமையில் கதைப்பது தப்பில்லை என்பது என் அபிப்ராயம்.

17)சரி

18)கதைக்கும் போது இடையிடையே சிரிக்காமல் எப்போதும் சீரியசாய் முகத்தை வைத்திருந்தால் விச‌ர் எனத் தான் நினைப்பார்கள்.

19,20)சரி

மாமிசம் சாப்பிடாதவர்கள் பிராமணர்கள் என்றில்லைத்தானே. இங்கே வெள்ளையர்கள் பலர் இப்போ சைவமாக மாறிக் கொண்டு வருவதை காணக்கூடியதாய் இருக்கு.

ஆசையிருந்தும் மனக்கட்டுபாட்டுடன் அதை விடுவது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன?

(யாழ்களத்தின் சமையல்பகுதியிலேயே தெரிகிறதே)

அப்படி ஒருவேளை சைவமாக மாறினால் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

உங்கள் வாயிலிருந்து உயிரினங்கள் தப்பித்துக்கொண்டன எண்டு உயிரினங்களும் வாழ்த்தும் மேலாக ஒர் அந்தஸ்தும் காத்திருக்கிறது. :D

கறுப்பி கட‌வுள் நினைத்திருந்தால் எல்லோரையும் மர‌க்கறி சாப்பிடுற ஆட்களாய் படைத்திருக்கலாம்...ஆனால் ஏன் அப்படி படைக்கவில்லை?...நம்மட கட‌வுளே மாமிச‌ம் சாப்பிட்டவர் தானே...எங்கட‌ ஊரில எவ்வளவு மனிச‌ன் சாகிறான் அதை எல்லாம் விட்டு விட்டு மிருகம் சாகிறது என கவலைப்பட்டு கொண்டு :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு உற்று பார்ப்பவர்களைக் கண்டால் கடுப்பு வரும். (எங்கே பார்க்கினம் எண்றே தெரியாமல் விழிக்கும் நிலை)

மிருகவதை - மாமிசம் சாப்பிடுபவர்களைக் கண்டால் கடுப்பு வரும்.

கறுப்பி,

இப்படி நீங்க சொன்னால் தாங்காதுப்பா இந்த பூமி.

அநியாயத்துக்கு ரொம்ப நல்லா இருக்கிறிங்களே :D

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி கட‌வுள் நினைத்திருந்தால் எல்லோரையும் மர‌க்கறி சாப்பிடுற ஆட்களாய் படைத்திருக்கலாம்...ஆனால் ஏன் அப்படி படைக்கவில்லை?...நம்மட கட‌வுளே மாமிச‌ம் சாப்பிட்டவர் தானே...எங்கட‌ ஊரில எவ்வளவு மனிச‌ன் சாகிறான் அதை எல்லாம் விட்டு விட்டு மிருகம் சாகிறது என கவலைப்பட்டு கொண்டு :D

சரி சரி

  • கருத்துக்கள உறவுகள்

1,2,3)சரி

4)அப்படியானவர்களை எப்படி கண்டு பிடிப்பீங்கள்?

5)அன்பை,நட்பை எப்படிக் காட்ட‌ வேண்டும் என நினைக்கிறீங்கள்?[உண்மையான அன்பின்,நட்பின் அடையாளம் என்ன]

6)6றில் இருந்து 15 வரை சரி

16)மிக நெருக்கமானவர்கள்,நண்பர்கள் ஒருமையில் கதைப்பது தப்பில்லை என்பது என் அபிப்ராயம்.

17)சரி

18)கதைக்கும் போது இடையிடையே சிரிக்காமல் எப்போதும் சீரியசாய் முகத்தை வைத்திருந்தால் விச‌ர் எனத் தான் நினைப்பார்கள்.

19,20)சரி

இதைப்பார்த்தால்.........

வேறு எதற்கோ ஒத்திகை போல் தெரிகிறது

இதைப்பார்த்தால்.........

வேறு எதற்கோ ஒத்திகை போல் தெரிகிறது

நான் நினைத்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள். அவங்கட பாட்டில விடுங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பே சொல்லிவிட்டேன்

திருந்தவேண்டியது நாங்களல்ல

நீங்கள்தான்..

ஆனாலும் இதில் 100 வீதம் எனக்கும் கடுப்பேத்தும்

அத்துடன் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காது தேடத்தொடங்குவார்களே...

அந்த நேரத்தில் வரும் கடுப்பு இருக்கே.............

உங்கள் நிலைப்பாட்டை என்னால் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. நாங்க திருந்த வேணும் என்றீங்க பின்னர் 100% இதிலும் எனக்கும் கடுப்பேத்தும் என்றீங்க.. ஏன் இந்த இடத்தில் நாங்கள் என்ன திருந்த வேண்டி இருக்கு. எனக்குப் புரியல்ல.. உங்கள் மொழியும்.. திருந்துவது எதில் இருந்து எனவும்.

என்னைப் பொறுத்தவரை.. எனக்கு என்னைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும் திறன் இருக்குது. அடுத்தவர் சொல்வதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் ஓரளவு இருக்குது. அதன்படி நானே தீர்மானிப்பேன்.. திருந்தனுமா இல்லையா என்று. பிறர் சொல்லி திருந்தும் அளவுக்கு நாங்கள் சமூகத்தை தவறாக வழி நடத்தவில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். :lol::D

இதைப்பார்த்தால்.........

வேறு எதற்கோ ஒத்திகை போல் தெரிகிறது

இதைத்தான் ஊர் வழக்கில் சொல்வார்கள் அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று.

அந்த அக்கா தனக்கு பட்டதை எழுதினா.. அதுக்கு ஒத்திகை.. ஓரம்போ கணக்கா எழுதிறதே பிழைப்பா போச்சு. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

1,2,3)சரி

4)அப்படியானவர்களை எப்படி கண்டு பிடிப்பீங்கள்?

5)அன்பை,நட்பை எப்படிக் காட்ட‌ வேண்டும் என நினைக்கிறீங்கள்?[உண்மையான அன்பின்,நட்பின் அடையாளம் என்ன]

6)6றில் இருந்து 15 வரை சரி

16)மிக நெருக்கமானவர்கள்,நண்பர்கள் ஒருமையில் கதைப்பது தப்பில்லை என்பது என் அபிப்ராயம்.

17)சரி

18)கதைக்கும் போது இடையிடையே சிரிக்காமல் எப்போதும் சீரியசாய் முகத்தை வைத்திருந்தால் விச‌ர் எனத் தான் நினைப்பார்கள்.

19,20)சரி

ரதி.. அக்கா இதோ உங்கள் கேள்விகளுக்கு எனது பதில்..

4. மிக இலகு.. கொஞ்சம் நெருங்கி பழகினால் எல்லாம் வெளிப்பட்டு விடும். தூர இருந்து நோக்கின் அழகாக இருக்கும் பொருள் கிட்ட இருந்து நோக்கின் அழகற்று இருக்கும்.. அது போலத்தான் இதுவும். எப்பவும் எட்ட வைத்துக் கொண்டு மனிதர்களின் இயல்புகளை துணியலாம் (predict).. ஆனால் தீர்மானிக்கக்( decide) கூடாது.

5. எவன்/ள் ஒருவன்/ள் துன்பத்திலும் கஸ்டத்தின் போதும் அன்பு செலுத்தி ஆறுதல் தருகிறானோ/ளோ அவனே/ளே உண்மையான அன்பை காண்பிப்பவனாகிறான்/ள்.

16. அப்பா அம்மா என்றால் கூட என்னிடம் ஒருமையில் பேசுவதை அழைப்பதை நான் விரும்புவதில்லை.

18. கதைக்கும் போது மற்றவரும் சிரிக்க வாய்ப்பு ஏற்படும் போது சிரிப்பது அழகு. தானே கதை சொல்லி தானே சிரித்துக் கொண்டிருப்பது கேட்டுக் கொண்டிருப்பவருக்கு.. கடுப்பேத்தும். :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பார்த்தால்.........

வேறு எதற்கோ ஒத்திகை போல் தெரிகிறது

தெரியாத்தனமாய் ஒரு தலைப்பை சமூக சாளரத்தில் தொடங்கி நான் படுகிற பாடு பெரும்பாடாய் இருக்கும் போல இருக்கு...பாவம் நெடுக்ஸ் தம்பி அவரை விட்டு விடுங்கள்.

சரி சரி

கறுப்பி எனது மனதில் பட்டதை எழுதினேன் தப்பென்றால் மன்னியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கலங்க வேண்டாம் ரதி .கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

எல்லோரும் தங்கள் கருத்துக்களை மனதில்

உள்ளதை சொல்ல வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி.. அக்கா இதோ உங்கள் கேள்விகளுக்கு எனது பதில்..

4. மிக இலகு.. கொஞ்சம் நெருங்கி பழகினால் எல்லாம் வெளிப்பட்டு விடும். தூர இருந்து நோக்கின் அழகாக இருக்கும் பொருள் கிட்ட இருந்து நோக்கின் அழகற்று இருக்கும்.. அது போலத்தான் இதுவும். எப்பவும் எட்ட வைத்துக் கொண்டு மனிதர்களின் இயல்புகளை துணியலாம் (predict).. ஆனால் தீர்மானிக்கக்( decide) கூடாது.

5. எவன்/ள் ஒருவன்/ள் துன்பத்திலும் கஸ்டத்தின் போதும் அன்பு செலுத்தி ஆறுதல்தருகிறானோ/ளோ அவனே/ளே உண்மையான அன்பை காண்பிப்பவனாகிறான்/ள்.

16. அப்பா அம்மா என்றால் கூட என்னிடம் ஒருமையில் பேசுவதை அழைப்பதை நான் விரும்புவதில்லை.

18. கதைக்கும் போது மற்றவரும் சிரிக்க வாய்ப்பு ஏற்படும் போது சிரிப்பது அழகு தானே கதை சொல்லி தானே சிரித்துக் கொண்டிருப்பது கேட்டுக் கொண்டிருப்பவருக்கு.. கடுப்பேத்தும். :D :D

என்னை வைத்து இருவரும் ஏதும் காமெடி செய்யலையே....

ஏனென்றால்

இந்த பதில்கள் மிகவும் வில்லங்கமானவை...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வைத்து இருவரும் ஏதும் காமெடி செய்யலையே....

ஏனென்றால்

இந்த பதில்கள் மிகவும் வில்லங்கமானவை...

இந்த ஆள் பெரிய சந்தேகப் பேர்வழியா இருப்பாரோ..??! பாவம் இவரை சார்ந்தவங்க..! எனி இவரின் சந்தேகத்துக்கு விடை சொல்லுற கணக்கா எல்லோ யாழில எழுத வேண்டும் போல கிடக்கு. :D

ஒரு அக்கா தங்கைச்சி கூட பழகிடக் கூடாதே. உடன.. சந்தேகப் பட்டிடுவாங்கப்பா. என்ன உலகமோ..! :D:lol:

Edited by nedukkalapoovan

.

பழைய அலுவளகத்தில் முகாமையாளர் சிறுநீர் கழிக்கச்செல்வார். கை கழுவமாட்டார். மலசல கூடத்தால் நேராக அலுவளக குசினியுள் சென்று பிஸ்கட் டின்னுக்குள் (பொதுவானது) கையை வைத்து நாலு கிடாசு கிடாசி ஒரு பிஸ்கட்டை எடுத்து ஸ்டைலாக கடித்துக் கொண்டு செல்வார். தன்னுடைய தீர்த்தம் எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்று ஒரு பரந்த மனப்பான்மை.

********************

ரயிலில் முன்னால் இருந்த இருக்கையில் நம்மூர்காரர். என்ன பிரச்சனையோ... என்ன யோசனையோ... பாவம். மூக்கை டிரில் பண்ண ஆரம்பித்தார். சவூதியில் எண்ணை தோண்டவிடலாம். ஒரு 20 நிமிஷம்...மனுசன்.. பல ஆங்கிள்களில் தொழிலை மும்மரமாகச் செய்துகொண்டிருந்தது. அவுஸ்திரேலியர்களின் பொறுமையைப் பாராட்ட வேண்டும்.

*******************

வயோதிகர்.நடக்க வேண்டும் என்பதால் நம்முடைய ஜில்லாவில் மெதுவாக நடந்து திரிவார். உறவினர் கூட. தப்பித் தவறி மாட்டுப்பட்டால்.. "ஐசே நான் 50 ஆம் ஆண்டு..அங்க வேலை செய்யேக்கிள்ள.." என்று தொடங்குவார். எல்லாம் வல்ல இறைவன் தான் அம்பிட்டவரை காப்பாற்ற வேண்டும்.

****************

அய‌ல‌வ‌ர். புளுகுப் பெட்டி. இர‌ண்டு நாளுக்கு முன் சொன்ன‌ புளுகு ம‌ற‌ந்துபோய் இண்டைக்கு அதேபுளுகை மாத்திச் சொல்லுவார். க‌ட‌வுளே..

  • கருத்துக்கள உறவுகள்

கலங்க வேண்டாம் ரதி .கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

எல்லோரும் தங்கள் கருத்துக்களை மனதில்

உள்ளதை சொல்ல வருவார்கள்.

கலகத்தை கற்பனையிலேயே உருவாக்கி கற்பனையிலேயே கனா கண்டு கொண்டு கற்பனையிலேயே உளறிக்கிட்டிருந்தா.. கருத்து எல்லாம் கற்பனையாத்தான் இருக்கும். உண்மைக்கும் கருத்துக்கும் வெகு தூரம் நிலா அக்கா. :D

  • கருத்துக்கள உறவுகள்

.

ரயிலில் முன்னால் இருந்த இருக்கையில் நம்மூர்காரர். என்ன பிரச்சனையோ... என்ன யோசனையோ... பாவம். மூக்கை டிரில் பண்ண ஆரம்பித்தார். சவூதியில் எண்ணை தோண்டவிடலாம். ஒரு 20 நிமிஷம்...மனுசன்.. பல ஆங்கிள்களில் தொழிலை மும்மரமாகச் செய்துகொண்டிருந்தது. அவுஸ்திரேலியர்களின் பொறுமையைப் பாராட்ட வேண்டும்.

http://www.youtube.com/watch?v=QQ9mNDtMJjY

ஜேர்மன் பயிற்றுனருக்கு அப்படி என்ன தான் பசியோ??

1522.gif

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி,

இப்படி நீங்க சொன்னால் தாங்காதுப்பா இந்த பூமி.

அநியாயத்துக்கு ரொம்ப நல்லா இருக்கிறிங்களே :lol:

இப்படித்தாங்க அநியாயத்துக்கு துணைபோய் படாத பாடு பட்டிருக்கிறேன்.

தெரியாத்தனமாய் ஒரு தலைப்பை சமூக சாளரத்தில் தொடங்கி நான் படுகிற பாடு பெரும்பாடாய் இருக்கும் போல இருக்கு...பாவம் நெடுக்ஸ் தம்பி அவரை விட்டு விடுங்கள்.

கறுப்பி எனது மனதில் பட்டதை எழுதினேன் தப்பென்றால் மன்னியுங்கள்.

உங்கள் மனசில் பட்டது எப்படிங்க தப்பாகும்

  • கருத்துக்கள உறவுகள்

கலங்க வேண்டாம் ரதி .கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

எல்லோரும் தங்கள் கருத்துக்களை மனதில்

உள்ளதை சொல்ல வருவார்கள்.

எனக்கு கலக்கம் இல்லை நிலா அக்கா ... எல்லோரும் தாங்கள் ஒன்றை நினைக்கிறார்கள் அதை நாங்களும் செய்ய வேண்டும் என நினைப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது...யாழ் ஒரு குடும்பம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

...யாழ் ஒரு குடும்பம் தானே.

இல்லை அது ஒரு இசைக் கருவி! அதிலிருந்து நவரசங்களும் சப்த ஸ்வரங்களில் இசைக்கும்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

நாலு பேர் இருக்கும் இடத்தில்........ ஒருவர் சத்தமான‌, "குசு" விட்டுட்டு.........

mocantina.gif

சொறி........ என்று, சொல்லாமல் இருந்தால் கடுப்பு வரும்.ass.gif:(:(

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எனப்பா ... இந்த திரியை தோழர் தமிழ் சிறி விட்டதில் இருந்து அப்படியே நிக்குது... யாரும் தொடவே இல்லையா? எனக்கு கடுப்படிப்பது... உபயோகபடுத்தாமல் அப்படியே சோ கேஸில் மற்றவிருந்தினர் வரும் போது மட்டும் சோ காட்டுவதற்கு சில விலை உயர்ந்த பொருட்களை கண்ணில் படுமாறு காட்சிக்கு வைத்திருப்பது... என்ன மயிற்றுக்கு அப்படி உபயோகபடுத்தாமல் துடைத்து வைத்து அடுத்தவருக்கு சோ காட்ட வேண்டி கிடக்கு??? குடிப்பதற்கு கூழ் இல்லையென்றாலும் கொப்புளிக்க பன்னீர் கேட்டானாம் ... இந்த பழமொழிதான் நினைவுக்கு வருது எனக்கு...இந்த பீலீமு தேவையா? :):D:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.