Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமாயி வயசுக்கு வந்திட்டா..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

கன‌ நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த‌ கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல‌. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! :D

பூப்புனித நீராட்டு விழா.. ஒரு சிறுமி வளர்ந்து வரும் ஒரு கட்டத்தில் இயற்கையாக ஏற்படுகின்ற ஒரு உடலியல் மாற்றத்தை சந்தைக்கடை போல் கூவி விக்க வேண்டிய அவசியம் என்ன? யோசிச்சுப் பார்த்ததில எனக்கு மனதில் பட்டது.... :D

அந்தக்காலத்தில் பெண்கள் தலையை நீட்டி வீட்டுக்கு வெளியால‌ எட்டிப்பார்ப்பதே அதிசயம். இந்த நிலைமையில் ஒரு சிறுமி வயதுக்கு வந்திட்டாள் என்றால் யாருக்குத் தெரியும்? மாப்பிள்ளையை ரெடி பண்ண வேண்டுமல்லோ? அதுக்கு இது ஒரு சடங்காக இருந்திருக்கலாம். அதாவது மன்னர்கள் மகளுக்கு சுயம்வரம் வைப்பினம். மக்கள் சாமத்தியச்சடங்கு வைப்பினம். :blink:

இது சரியா இருந்தால் இந்தக்காலத்துக்கு இந்த நடைமுறை பொருந்துமா? நான் பார்த்த அளவில் புலம் பெயர்ந்த நாடுகளில் பலர் எப்படா மகள் வயசுக்கு வருவா.. நாங்கள் சாமத்தியவீடு வைக்கலாம் எண்டு திரியுறினம்..! :(

அவையளிட்ட எல்லாம் சிறப்புப் பேட்டிகள் கண்டதில சில விசயங்களை அறிய முடிஞ்சது. :D

1) தன்ர மகளை ஒத்த வயசில உள்ள மற்ற சிறுமிகளின் பெற்றோருடன் போட்டி போட்டு சடங்கு வைக்க நிக்கினம். :o

2) சாமத்தியச் சடங்கை தாங்கள் மேக்கப் போட கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாக நினைக்கினம். :lol:

3) சடங்கு வைத்து கலக்சன் பார்க்கிற எண்ணத்தில பல பேர் இருக்கினம். :D

பெண் வயதுக்கு வந்திட்டால் எங்கட சமூகத்தில சில சடங்குகளை வீட்டில் செய்யிறது வழக்கம்தான்..! அதில ஒரு பிழையும் இருக்கிறதா தெரியேல்ல. ஆனால் ஒரு வருடமோ ரெண்டு வருடமோ கழித்து எதுக்கு மண்டபத்தில பெரிசா வைக்கினம்? பொண்ணு வயசுக்கு வந்திட்டா எண்டு கூவிக்கூவி விக்கிறதில என்ன மரியாதை இருக்கு? இந்தக்காலத்தில இளம்பிள்ளைகள் தாங்களாவே காரியத்தை கொண்டு போகினம். இதில இந்தச் சடங்கு வேற‌ தேவையா? :)

என்ன சொல்லுறியள்?

பி.கு: ஏற்கனவே இப்பிடி சாமத்தியச் சடங்கு வச்சவை தயவு செய்து இந்தத் திரியை வாசிக்கேல்லை எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா? இதை இத்தனை பேர் அலசி ஆராஞ்சிட்டாய்ங்களா? தெரியாமல் போச்சே..! :D:D

டெலிபோன் எடுத்தால், எங்கட சனம் ஆடு, மாடு குட்டி போட்டதையே பெரிய புதினமா சொல்லுதுகளாம்... தங்கட மகள் வயதுக்கு வந்ததை ஊருக்குச் சொல்லாதுகளா??

சிறுமி வயதுக்கு வந்து ஒரு வருசத்துக்குப் பின்பு... (நாட்டில சனம் படுற பாடு ஒருபக்கம் இருக்க...) ஊரில கொண்டு போய் பந்தாக்கு சடங்கு செய்தவையலும் இருக்கினம்... இதெல்லாம் சகஜமப்பா புலத்தில... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயி ராக்காயி மூக்காயி எல்லாம் வயசுக்கு வரட்டுமே விட்டிடுங்கோ!

பழைய களத்தில இருந்து பலவருசமா சந்துகிடச்சா புகுந்து விளையாட நம்ம யாழில நிரந்தரமா வச்சிருக்கிற தலைப்புகளிலை முதலிடம் சாமத்தியச்சடங்கிற்குத்தான்.

லொள்ளு தாங்கமுடியல போதுமடா சாமி வயசுக்குவந்த விசயத்தை இதோட சொல்லித்திரியாமல் மூடி மறைச்சு வைப்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராமாயி ராக்காயி மூக்காயி எல்லாம் வயசுக்கு வரட்டுமே விட்டிடுங்கோ!

பழைய களத்தில இருந்து பலவருசமா சந்துகிடச்சா புகுந்து விளையாட நம்ம யாழில நிரந்தரமா வச்சிருக்கிற தலைப்புகளிலை முதலிடம் சாமத்தியச்சடங்கிற்குத்தான்.

லொள்ளு தாங்கமுடியல போதுமடா சாமி வயசுக்குவந்த விசயத்தை இதோட சொல்லித்திரியாமல் மூடி மறைச்சு வைப்பம்.

யாழில எங்களை மாதிரி புதுசுகள் இளசுகள் ஏல்லாருக்கும் யாழின்ர பழைய கதை தெரியாதுதானே..! அப்ப இடைக்கிடை இது வெளில வாறது நியாயம்தானே..! :lol:

அதுசரி.. யாழ் பழைய களத்தைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்..! நல்ல பரீட்சயமோ? :D:blink:

டெலிபோன் எடுத்தால், எங்கட சனம் ஆடு, மாடு குட்டி போட்டதையே பெரிய புதினமா சொல்லுதுகளாம்... தங்கட மகள் வயதுக்கு வந்ததை ஊருக்குச் சொல்லாதுகளா??

சிறுமி வயதுக்கு வந்து ஒரு வருசத்துக்குப் பின்பு... (நாட்டில சனம் படுற பாடு ஒருபக்கம் இருக்க...) ஊரில கொண்டு போய் பந்தாக்கு சடங்கு செய்தவையலும் இருக்கினம்... இதெல்லாம் சகஜமப்பா புலத்தில... :D

இதைப் பற்றிக் கதைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை எண்டுறீங்கள்..! அப்ப இதைச் செய்யிறது நல்லதா எண்டு சொல்லுங்கோ குட்டி..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பண்பாட்டில் ...........

உறவினர்களை மிகவும் மதிக்கும் பழக்கம் உள்ளது . அதில் தாய் மாமனுக்கு உள்ள மதிப்பை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .

அதுகும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து துடக்கு கழிவு , பல்லுக் கொழுக்கட்டை , சாமத்தியச் சடங்கு , திருமணம் என்று அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் தாய் மாமனின் பங்களிப்பு இல்லாமல் எதுவுமே நடை பெறாது . அப்படியிருக்க குழந்தையின் சாமத்தியச் சடங்கை தாய்மாமன் உட்பட நெருங்கிய உறவினர்களுக்குள் குடும்ப விழாவாக கொண்டாடுவதில் தவறு இல்லை .

ஆனால் ஊரில் குறிப்பிட்ட சிலர் லவுட் ஸ்பீக்கரை பனை மரத்தில் கட்டி ( அது தானாப்பா அந்த சாம்பல் நிறமுள்ள குழாய் ) நாலு நாளாய் ஊர் சனத்தை நித்திரை கொள்ள விடாமல் செய்வதும் ,

புலம் பெயர் நாடுகளில் தாய் மாமன் கிடைக்காமல் ........ கண்ட , கண்ட அங்கிள் மாரெல்லாம் வயசுக்குக் வந்த பெண்ணுக்கு பாத்ரூமுக்கை போய் தலைக்கு தண்ணி வாக்கிறதும் தான் தப்பு .

தமிழ்சிறி ஊரெல்லாம் அலைஞ்சாலும் (அதான் நடந்துகொண்டே இருக்கிறாரே..) நச்செண்டு நாலு வார்த்தை சொல்லியிருக்கிறாரப்பா..! :D

இதைப் பற்றிக் கதைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை எண்டுறீங்கள்..! அப்ப இதைச் செய்யிறது நல்லதா எண்டு சொல்லுங்கோ குட்டி..! :D

சுட்டுப் போட்டாலும் நல்லது என்று நான் சொல்லவே மாட்டேன்...!

எல்லாரும் இல்லை, சில தமிழ் பெற்றோர் பிள்ளையைப் பெற்றால் இதுவும் ஒரு கடமையைப் போல ஜோசிக்கினமோ என்று நினைக்கத் தோன்றுகிறது...

(பெண் பிள்ளைகளைப் பெற்றவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்... கேட்டல் செருப்படி விழுமோ என்ற பயம் வேறு... இங்க யாரும் பெண் குழந்தைகள் பெற்றவர்கள் இருந்தால் சொல்லித் தெரியப் படுத்தினால் அறிந்து கொள்ளலாம்...)

பெண்ணாகப் பிறந்தால் எல்லாரும் வயதுக்கு வாறது இயற்கை தானே? அதை ஏன் மேடை ஏத்தவேண்டும்? மாறாக பெண்ணின் உடல் உள மாற்றங்களைப் பற்றிய விளங்கங்களை வீடில் உள்ள பெரியவர்கள்(பெண்கள்) அந்தப் பெண்ணுக்கு எடுத்து சொல்லி கொடுக்கலாம்... இப்ப புலத்தில அதுவும் அவசியம் இல்லாமல் போகிறது... பள்ளிக் கூடத்திலே எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள்...)

வேற்று இனத்தவர்கள் இப்படி சடங்கு சம்பிரதாயங்கள் என்று நேரத்தைச் செலவு செய்கிறார்களா? நலத்தை தெரிந்து எடுக்கும் மனப் பக்குவம் இருப்பின் இவைகளை தவிர்ப்பது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து...

பாவம் பொடியளுக்குத் தான் சடங்குகள் குறைவு... :D

கஷ்டம்.... இபோதெல்லாம் சடங்கு வைக்கிறது ஒருபக்கமிருக்க அதை youtube-இல் பிரசுரித்து உலகம் முழுதும் தங்கட மகள் வயதுக்கு வந்துட்டா என்று விளம்பரப் படுத்துறவையளும் இருக்கினமே... எல்லாம் ஒரு பகட்டான வாழ்வு....

இங்க சிலவற்றை இணைக்கலாம் என்று தான் நினைச்சன்... யாழ் நிர்வாகம் என்னை ஆபிசில முழங்காலில உக்கார வைச்சுடுவினம் என்பதனால் தவித்துக் கொள்கிறேன்... :D

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

தெரியலைங்க.

ஓரே குழப்பமா இருக்கு.

அப்படின்னா என்ன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

சமூகத்தில் காணப்படும் அறியாமைகளை களைய வேண்டியது ஒரு நல்ல சமூகவாதிக்கு அழகாகும்.

பலர் சேர்ந்து கதைக்கும் போது இப்படி செய்யக்கூடாது என்பார்கள் பின் அவர்களே அப்பிழைகளை செய்வா்கள்.

இது இங்கு வழமைபோல் தோன்றுகின்றது.

தற்போது சாமத்திய வீட்டு அழைப்பு பத்திரிகையிலும் விளம்பரம் செய்யப்படுகின்றமையை பார்தால் வெளிநாட்டுப்பணம் என்பார்கள்.

எதற்கு விளம்பரம் செய்வது என்ற விவஷ்தை இல்லாமல் போட்டுது.

அடுத்து பெரிய வெட்ககேடான விசயம் என்னவென்றால்.

சுபமூகூர்தம் 10மணி தொடக்கம் 12.30வரை என்று அழைப்பிதழில் போடப்பட்டிருக்கும் .

ஆனால் பெண் அலங்காரம் முடித்து முதலில் மண்டபத்திற்கு வருவது இரண்டு மணிக்கு தான்.

பணம் கொடுக்க வரிசையில் காத்திருக்கும் நேரம்.

வீடியோ காரரின் விநோதங்கள் . இன்னும் எத்தனை வேடிக்கைகள்.

இங்கு மேலைதேசத்தவர்கள் நேரத்திற்கு கொடுக்கு மதிப்பு ஏன் எம் நாட்டவரின் வைபவங்களில் காணப்படுவதில்லை.

இந்த நிலை எப்ப தான் மாறுமோ.எல்லாம் அவனுக்கு தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

கன‌ நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த‌ கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல‌. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! :D

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. :Dஎனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:D

  • கருத்துக்கள உறவுகள்

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:D

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்... இவரின் மந்தாரப்புன்னகையில் தமிழ் சிரிக்க, சிறக்க, தமிழ்சிறியைக் காண்போம். :D

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில எங்களை மாதிரி புதுசுகள் இளசுகள் ஏல்லாருக்கும் யாழின்ர பழைய கதை தெரியாதுதானே..! அப்ப இடைக்கிடை இது வெளில வாறது நியாயம்தானே..! :lol:

அதுசரி.. யாழ் பழைய களத்தைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்..! நல்ல பரீட்சயமோ? :D:blink:

Danguvaar வெளி வரவேண்டிய பழைய கதையள் வெளியில

வரும் ஆனால் வராது :D

இந்தமாதிரி விசயங்கள்தான்

வரும் திரும்பவும் வரும். :D

மோகன் யாழ் இணையத்தளத்தை தொடங்கின நாளிலையிருந்து

நான் யாழின் நிரந்தர வாசகன் & ரசிகனாக்கும்

அதுதான் சொன்னனான் இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

இணையவன் கன தொடுப்புகளெல்லாம் போட்டுவச்சிருக்கிறார்

அவருக்கும் பழைசெல்லாம் பரிச்சயமோ? கேட்டுப்பாருங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:unsure:

ஐயோ பாவம்..... இந்த ராமாயி நல்ல மனுசி மாதிரி தெரியுது...

சிறி அண்ணா நீங்கள் வழக்கமாய் போடற தமிழ் நடிகைகளிட மூஞ்சியளை விட

இவாட முகம் இயல்பாய் சாந்தமாய் அழகாய் இருக்கு.... :wub:

கட்டாயம் இவாக்கு ஒரு விழா வைக்க தான் வேணும்..

வைக்கேக்க சொல்லுங்கோ நானும் வாறன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. :lol:எனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :(

நாலு மணத்தியாலம் கார் ஓடி ஒரு சாமத்திய வீட்டுக்கு போகோணும் என்றால் - போற வழியில நாலு அஞ்சு ஹிட்ச் ஹைக்கெர்ஸ் ஐயும் எத்தி கொண்டு போய் நல்லாய் மூக்கு முட்ட சாப்பிட்டு ஒரு சதமும் குடுக்காம வாங்கோ.... அப்படியாவது நிறைய பேர் செய்தால் சனம் திருந்தும்! சீ எனேகென்ன விசரா - எங்கட சனமா? திருந்தவே திருந்தாது!!! <_<

எனக்கு விநோதமாய் இருக்கிறது என்ன சொல்லுங்கோ -

பாவம் நல்ல வடிவான பிள்ளையா இருக்கும் ஆனால் கறுப்பு எண்டதுக்காக எதோ சாம்பல் நிறத்தில முகத்துக்கு மேக் அப் அள்ளி பூசி விட்டு இருக்குங்கள்.... பிறகு வீடியோல பாட்டு பொருத்தமாய் போட்டு இருப்பினம் - - பெண் அல்ல பெண் அல்ல ஊதாப்பூ எண்டு.... :wub:

(பேய் கதை கதையாம சாம்பலை கலைச்சிட்டு பாருங்கோ - அது பெண் தான்... எண்டு தான் சொல்ல தோணும்!!) :unsure:

இவாட முகம் இயல்பாய் சாந்தமாய் அழகாய் இருக்கு.... :unsure:

கட்டாயம் இவாக்கு ஒரு விழா வைக்க தான் வேணும்..

வைக்கேக்க சொல்லுங்கோ நானும் வாறன்...

இளையபிள்ளை

சொல்லாட்டியும் கட்டாயம் நீங்கள் வரவேணும்

தூக்க நாலுபேர் வேணும்

மூண்டுபேர் ரெடி நாலாவது நீங்கள்தான் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை

சொல்லாட்டியும் கட்டாயம் நீங்கள் வரவேணும்

தூக்க நாலுபேர் வேணும்

மூண்டுபேர் ரெடி நாலாவது நீங்கள்தான் :wub:

<_<

:lol: ஐயோ பாவம், நானே வீட்டை கூட்டி கொண்டு போய் வடிவா சாப்பாடு போட்டு வளர்க்கிறேன்.

நான் எங்க சமைக்கிறது..... இந்த ஆச்சி சமைச்சு தந்தால் சாப்பிட்டு நான் தான் வளருவேன்! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. <_<எனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :lol:

பாம்பின்கால் பாம்பறியும்..! :unsure:

குழையடிக்கிற வேலையை சரியாச் செய்யுங்கோ..! சரிவரும்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அலையடிக்கும் சீசன் ..........நன்றாக அலை வீசட்டும் . பாராடுக்க்ள. டங்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருவகை பாலியல் விளம்பரம்..! பெண்களை பாலியல் விளம்பரப் பொருளா பார்க்கிற இந்த உலகத்தில.. இதெல்லாம் சகஜம்..! இதுவே பின்னாடி பெண்களுக்குப் பிரச்சனையாகவும் அமையுது..! அதையெல்லாம் நாம சொல்லி எவன் கேட்கப்போறான். நமக்கு முன்னரே இதுகள பல பேர் எடுத்துச் சொல்லியும் கேட்காதவங்க.. நம்மள... ம்ம்ம்...!

டங்கு.. போனமா.. ராமாயி பார்த்தமா.. கொடுக்கிறதை கொடுத்தமா.. தாறத வாங்கினமா.. சாப்பிட்டமா வந்திட்டு இருக்கனும்..! கூப்பிட்டு வைச்சுத் தாறன் தாறன் என்றாங்க.. ஓசியில வாறத ஏன் விடுவான்..! :unsure:

Edited by nedukkalapoovan

எனக்கு இந்த சாமத்தியவீடு செய்யிறதில் உடன்பாடு இல்லை, மகள் வயதிற்க்கு வந்திட்டா அதை ஊருக்கு சொல்லி பெரிசா செய்து அதை எல்லாருக்கும் தெரியப்படுத்திறது, அதை பார்த்திட்டு பெடியங்கள் பின்னால சுத்த வெளிக்கிட்டா அவங்களை தப்பா பார்க்கிறது. இதெல்லாம் பறவாயில்லை இதைவிட கொடுமை என்ன தெரியுமா வீடியோ என்ற ஒன்று எடுப்பினமே அதில அந்த பிள்ளை குளிக்கிறதை எத்தனை விதமா எடுப்பினம், பிறகு பூங்காவில் பிள்ளையை ஓடவிட்டு எடுப்பினம், பிறகு இந்த வீடியோ காட்சி ஊர்முழுக்க பார்ப்பினம் , எவ்வளவு பைத்தியக்காரத்தனம். சினிமா பாடல்களில் கூட மழையில் நனையிற காட்சியோ குளிக்கிற காட்சியோ ஒருவித கவர்ச்சிக்காகத்தான் எடுக்கினம். அதைக்கூட நாங்க வித்தியாசமாத்தான் பார்க்கிறம். அப்படிப்பட்ட சமுகத்தில் பிள்ளைகளை பெற்றோரே சாமத்தியாவீடு செய்யிறம் என்று அசிங்கப்படுத்திறது நல்லாவா இருக்கு. சில சாத்திர சம்பிரதாயங்கள் இருக்கு அதை வீட்டுக்குள் வைத்தே செய்யலாமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயம் குறித்து ஏற்கனவே போன வருசம் பூப்பெய்தி அடுத்த வருசம் சாமத்திய சடங்கு மண்டபத்தில் விமரிசையாகக் கொண்டாடக் காத்திருக்கும் ஒரு சிறுமி நேற்று எனக்கு செவ்வி வழங்கினார்..! :unsure:

எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டது இந்தச் சிறுமிக்கு இந்த விழா நடக்கிறதில விருப்பம் எண்டு. நேற்றுக் நேராக அவவிட்ட‌ கேட்டபோது சொன்னா.. "I don't care..!" :wub:

ஆக, பெரிய ஆக்கள் தங்கட ஆசைக்கு நடத்திக்கொண்டு சிறுமிமேல பழி போடுகினம் எண்டு விளங்கிச்சிது..! <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.