Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

80% யாழ்ப்பாண நகர மக்கள் திணிக்கப்பட்ட தேர்தலை புறக்கணித்தனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_46175430_srilanka_jaffna_uva_0809.gif

image: bbc.co.uk

பெரும் வெற்றி முழக்கங்களோடு.. ஜனநாயகப் பீற்றுகைகளோடு நேற்றுவரை துப்பாக்கிகள்.. ஆல்டறிகள்.. விமானங்கள்.. மல்ரி பறல்கள் கொண்டு வேட்டையாடிய யாழ்ப்பாண மாநகர மற்றும் வவுனியாக நகர மக்கள் மீது தேர்தலை திணித்தன சிங்களப் பேரினவாத மகிந்த ராஜபக்ச அரசும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களும்.

இறுதியாக குறித்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் (08-08-2009) நிகழ்ந்தது.

இதில் யாழ்ப்பாண மாநகரில் மொத்த வாக்காளர்களில் வெறும் 20% வாக்குகளே பதியப்பட்டுள்ளன என்றும் மிகுதி வாக்குகள் பதியப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆக 80% யாழ் நகர மக்கள் இத்தேர்தலைப் புறக்கணித்து சிறீலங்கா சிங்கள அரசிற்கும் அதன் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் சாட்டை அடி கொடுத்திருப்பதுடன்.. உலகிற்கும் தெளிவான ஒரு செய்தியைக் கூறியுள்ளனர்.

சிறீலங்காவின் ஜனநாயக நடைமுறையில் தமக்கு நாட்டமில்லை என்பதை யாழ் மாநகர மக்கள் தெளிவாகக் கூறிவிட்ட நிலையில் அந்த மக்களின் மன கிடக்கைகளுக்கு இந்த உலகம் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வவுனியா நகரத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு மற்றும்.. தமிழ் தேசியம் போன்றவற்றை வெளிப்படையாக ஆதரிக்கும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் இத்தேர்தலில் தமிழீழத்தை முன்மொழிந்த தந்தை செல்வாவின் கருத்தியல்களோடு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ILANKAI TAMIL ARASU KADCHI (ITAK)) என்ற பெயரில் போட்டியிட்டனர்.

அதேவேளை அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவான புளொட் என்ற அமைக்கும் குறிப்பிடத்தக்க அளவு ஆசனங்கள் கிடைத்துள்ளன. முன்னைய தேர்தல்களில் புளொட்டுக்கு கிடைத்த ஜனநாயக விரோத வாக்குகளோடு ஒப்பிடும் போது இம்முறை அதற்குக் கிடைத்த மொத்த வாக்குகள் குறைவாகும். அதுமட்டுமன்றி வவுனியாவிலும் 48% மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

வவுனியாவில் சிங்கள குடியேற்றங்களும் இருப்பதால் சிங்கள வாக்காளர்களின் வாக்களிப்பால் மொத்த வாக்களிப்புச் சதவீதம் 52% ஆக இருக்கிறது.

என்ன தான் ஜனநாயகம் பேசும் உலகமும் சிறீலங்கா சிங்களப் பேரினவாதிகளும் அதன் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களும் மக்கள் மீது தேர்தலை இராணுவ அதிகாரங்களின் கீழ் இராணுவக் குவிப்பின் கீழ் திணித்திருந்தாலும்.. யாழ் மாநகர மக்களும்.. வவுனியா நகர மக்களும் மேற்படி தேர்தல்களை புறக்கணிப்பது என்ற முடிவை மெளனமாக இருந்து தீர்மானித்து சாதித்துள்ளனர்.

40,000 சிங்களப் படைகள் நிரந்தரமாக குவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அதன் மாநகர சபைக்கு இத்தேர்தல் நடத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. வவுனியாவிலும் சுமார் 20,000 சிங்களப் படைகள் நிரந்தரமாக நிலை கொண்டுள்ள நிலையில் இத்தேர்தல் நடந்துள்ளது.

ஜனநாயகம் பேசும் மேற்குலக மற்றும் அமெரிக்க ஜனநாயகவாதிகள் லண்டனிலும்.. வார்சிங்கடனிலும்... ஈரான் இராணுவத்திடம் குறிப்பிட்ட நகரங்களை கையளித்துவிட்டு தமது மக்களுக்கான தேர்தலை அந்த இராணுவ அதிகாரிகளின் அதிகாரங்களின் கீழ் நடத்துவார்களா..??! அல்லது நடத்த அனுமதிப்பார்களா..??! செய்தாலும் செய்வார்கள்.. அவர்களின்.. ஜனநாயகம், ஜனநாயகம் என்று உச்சரிப்பதற்கு மட்டும் தானே. மக்களின் உரிமைகள் தொடர்பில் இல்லையே..!

இப்போ 80% மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் பதியப்பட்ட 20% வாக்குகளில் கிட்டத்தட்ட 12% வாக்குகள் பெற்ற சிலர் 80% வாக்காளர்களை அவர்களின் எண்ணங்களுக்கு எதிராக அவர்களை ஆளப்போவதுதான் ஜனநாயகமாக இருக்கப் போகிறது. இது எந்த வகையில் நியாயமானதோ தெரியவில்லை.

எதுஎப்படி இருப்பினும் இத்தேர்தல் மூலம் யாழ்ப்பாண மாநகர மக்கள் சிங்கள அரசிற்கும் அதன் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களுக்கும் மற்றும் ஜனநாயகம் பேசும் சர்வதேச, பிராந்திய சக்திகளுக்கும் நல்ல செய்தி ஒன்றை வழங்கியுள்ளனர்.

ஜனநாயகம் என்ற போர்வையில் மக்கள் மீது இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமான இராணுவ நிர்வாகத் திணிப்பை செய்வதும்.. அதன் கீழ் தேர்தல் நடத்துவதும் ஈராக், ஆப்கானிஸ்தான் முதற்கொண்டு யாழ்ப்பாணம் வரை நடத்தப்படுகின்ற ஜனநாயக கேலிக்கூத்துக்களாக இருக்கின்றன என்பதை அம்மக்கள் தெளிவாக உலகிற்கு கூறியுள்ளதன் வெளிப்பாடே இத்தேர்தல் புறக்கணிப்பாகும்.

அதுவும் இத்தனை இராணுவ அச்சுறுத்தல்கள் ஒட்டுக்குழுக்களின் கொலை அச்சுறுத்தல்கள் கப்ப அச்சுறுத்தல்கள்.. செய்தியாளர்கள் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் யாழ்ப்பாண மாநகர மற்றும் வவுனியா நகர மக்கள் துணிச்சலுடன் இச் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

நன்றி யாழ் மாநகர மற்றும் வவுனியா நகர வாக்காளர்களே..!

source: http://kundumani.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் இத்தனை இராணுவ அச்சுறுத்தல்கள் ஒட்டுக்குழுக்களின் கொலை அச்சுறுத்தல்கள் கப்ப அச்சுறுத்தல்கள்.. செய்தியாளர்கள் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் யாழ்ப்பாண மாநகர மற்றும் வவுனியா நகர மக்கள் துணிச்சலுடன் இச் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

80% மான மக்கள் இத்தேர்தலை புறக்கணித்தமை உண்மையில் ஆச்சரியமாக உள்ளது .

பாராட்டுக்கள் யாழ் . வாக்காளர்களே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வாக்காளர்களே இது ஒரு நல்ல சாட்டையடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

80% மான மக்கள் இத்தேர்தலை புறக்கணித்தமை உண்மையில் ஆச்சரியமாக உள்ளது .

பாராட்டுக்கள் யாழ் . வாக்காளர்களே .

நன்றி வாக்காளர்களே இது ஒரு நல்ல சாட்டையடி

ரொம்ப சந்தோசப்படாதேங்கோ... யாழ் மக்கள் ஒன்றும் தேர்தலை புறக்கணிக்கவில்லை,அவர்களுக்

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூக்கிரலிடும் சர்வதேசம் இதற்கு என்ன சொல்லப் போகிறது.80 வீதமான மக்கள் புறக்கணித்த தேர்தல் ஜனநாயக முறைப்படி செல்லுபடியற்றதாகும். இதையே தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே கோயில் திருவிழாக்கள் களை கட்டியுள்ளன. இரவில் பாட்டுக் கச்சேரி வேறு நடாத்த முடிகின்றது. மக்கள் சாதாரண வாழ்வுக்குத் திரும்பி, வீதிக்கு வீதி சண்டியர்கள் நிற்கவும், ஊர்ச் சண்டைகள் ஆரம்பிக்கவும் அதிக காலம் எடுக்காது. மக்கள் சுதந்திரமாக, அச்சமின்றி வாழ்வார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

80% மான மக்கள் இத்தேர்தலை புறக்கணித்தமை உண்மையில் ஆச்சரியமாக உள்ளது .

பாராட்டுக்கள் யாழ் . வாக்காளர்களே .

ஈரானின் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூக்கிரலிடும் சர்வதேசம் இதற்கு என்ன சொல்லப் போகிறது.80 வீதமான மக்கள் புறக்கணித்த தேர்தல் ஜனநாயக முறைப்படி செல்லுபடியற்றதாகும். இதையே தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறர்கள்.

இது யாழை தாண்டி வெளியேபோகாது.. சர்வதேசமும் மண்ணாங்கட்டியும்...

தேர்தல் உண்மையில் புறக்கணிக்கப்படவில்லை.. சும்மா எதுக்கு வம்பு எண்டு... வோட்டுசாவடிப்பக்கம் போகவில்லை... மற்றும் வோட்டு போட போறவங்களை படம் எடுக்கிறாங்களாம் எண்ட வதந்தியும் கடசி நாளில் காட்டுத்தீ போல பரவியது..

நீங்கள் நினைக்கலாம்.... வோட்டு போடுமிடங்களில் படம்,,, வீடீயோ எடுக்கப்படுவது உலகெங்கும் சாதாரணம் தானே எண்டு.... எங்கட ஊர் கொஞ்சம் வித்தியாசமுங்கோ.. பொங்குதமிழ் விழாக்கு வாழைமரம் கட்ட கை கொடுத்தவர் மட்டுமல்ல அவர் குடும்பமே உயிருடன் இல்லை.. இலங்கையில் தமிழ் சனம் சும்மா நிமிர்ந்து நடந்தாலே.. நடுரோட்டில் தர்ம அடி விழும் அபாயம் உள்ளது.. இதுல புறக்கணிப்பு எல்லாம் செய்வது தற்கொலைக்கு சமம்....

உந்த புறக்கணிப்பு செய்தி உண்மையில் ஓசி சுய இன்பம் பெற பரப்பபட்ட வதந்தி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவே கோயில் திருவிழாக்கள் களை கட்டியுள்ளன. இரவில் பாட்டுக் கச்சேரி வேறு நடாத்த முடிகின்றது. மக்கள் சாதாரண வாழ்வுக்குத் திரும்பி, வீதிக்கு வீதி சண்டியர்கள் நிற்கவும், ஊர்ச் சண்டைகள் ஆரம்பிக்கவும் அதிக காலம் எடுக்காது. மக்கள் சுதந்திரமாக, அச்சமின்றி வாழ்வார்கள்!

தாங்கள் ஊர்சண்டியாக இருந்ததிறகாக எதிர்காலத்தில் ஊர்சண்டி தோண்ற வேண்டிய தேவையில்லை. திரும்ப திரும்ப ஒரே பல்லவிய பாடாமல், எல்லாரும் தாங்களாகவே நல்லதை நினைது, நல்லதை செய்தால், நல்ல இனமாக மாறலாம். வதை முகாமில், சிறையில் உள்ள மக்களை காப்பாற்ற முயற்சி செய்வோம் இப்போது. அந்த மக்களுக்கு எங்களை விட்டால் யாரும் இல்லை. வதை முகாமில் மிகவும் கஸ்ட்டப்படுகிரார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வதை முகாமில், சிறையில் உள்ள மக்களை காப்பாற்ற முயற்சி செய்வோம் இப்போது. அந்த மக்களுக்கு எங்களை விட்டால் யாரும் இல்லை. வதை முகாமில் மிகவும் கஸ்ட்டப்படுகிரார்கள்

கடந்த மூன்று மாதமாக புலம் பெயர் தமிழர்களால் வதைமுகாமில் இருப்பவர்களைக் காப்பாற்ற காத்திரமான என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? குறைந்த பட்சம் அங்குள்ள மக்களின் பட்டியலை எடுக்க முடிந்ததா? சிங்களச் சிறைகளில் அடைபட்டிருக்கும் போராளிகளின் பட்டியலையாவது வெளியிட அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடிந்ததா? புலம் பெயர் தமிழர்களின் இயலாமையைச் சுட்டிக் காட்ட இவை சிறு உதாரணங்களே. சிறிலங்கா அரசு (சர்வதேச நாடுகளின் ஆசீர்வாதத்தோடு) தனது நிகழ்ச்சி நிரலின்படி சகல விடயங்களையும் கையாள்கின்றது.

நல்லதையே நினைத்து நல்லதையே செய்யக்கூடிய இனமாக இருந்தால் தமிழர்கள் தற்போதைய நிலையை அடைந்திருக்கமாட்டார்கள். தலைமை தாங்கவே குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டுக்கொண்டு எப்படி தமிழர்களை "உய்ய" வைக்கமுடியும்?

80% யாழ்ப்பாண நகர மக்கள் திணிக்கப்பட்ட தேர்தலை புறக்கணித்தனர்.

புலத்தில் உள்ள ஊடகங்களும், இணையங்களும் தேர்தலைப் பற்றி அலட்டிக்கொண்ட அளவிற்கு தாயகத்தில் உள்ளவர்கள் அலட்டிக்கொள்ளவில்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. ஆனால் நாங்கள் இப்போதும் அலட்டிக்கொண்டே இருக்கிறோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இருந்தால் ஒன்றும் வராது. நாம் தான் தொடர்ந்து எமது பிரச்சனையை, சலிப்படையாமல் சொல்லி உதவி கேட்கவேணும். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள் வதை முகாம்களில். நாம் ஒன்றும் செய்யாதுவிடின் அவர்கள் இறந்துவிடுவார்கள். சுயனலம் பார்காது சில மணி நேரங்களை மின்னஞ்சல் அல்லது கடிதம் மூலமாகவோ உதவி கேட்பதற்காக பாவிப்போம்.

80% மான மக்கள் இத்தேர்தலை புறக்கணித்தமை உண்மையில் ஆச்சரியமாக உள்ளது .

பாராட்டுக்கள் யாழ் . வாக்காளர்களே .

எங்கட சனத்தின் குழப்பமான முடிவுகளில் இதுவும் ஒண்று...

சிங்களவன் ஒருவனை தெரிவு செய்யாமல் புறக்கணித்து இருந்தால் உங்களின் பாராட்டு நல்லதாக இருந்து இருக்கும்... ஆனால் இப்ப தோத்து போனது தமிழர் விடிவை முன்னிறுத்திய கூட்டமைப்பு...

எதை புறக்கணிக்க வேண்டுமோ அதை புறக்கணிக்காமல் இதை புறக்கணிச்சு என்ன பயனை குடுக்க போகினம்...???? நீண்ட காலமாக அரச கட்டுக்கை இருக்கும் வவுனியாமக்கள் தங்கட வாக்குகளை கூட்டமைப்புக்கு போட்டு தாங்கள் விடிவை நோக்கி போபவர்களுக்கு ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்...

இந்த வகையில் பாராட்டுக்கு உரியவர்கள் தங்களின் நம்பிக்ககயை கூட்டமைப்பின் மீது அச்சுறுத்தலையும் மீறி காட்டிய வவுனியா மக்களே....

இந்த வகையில் பாராட்டுக்கு உரியவர்கள் தங்களின் நம்பிக்ககயை கூட்டமைப்பின் மீது அச்சுறுத்தலையும் மீறி காட்டிய வவுனியா மக்களே....

உண்மை

உங்கள் பலருக்கு யாழ்ப்பாணத்தில் உறவுகள் இருக்கும். அவர்களிடம் புலம் பெயர் நாடுகளில் இருந்து கொண்டு வீறாப்புடன் கேள்வி கேட்காமல், சாதாரணமாக கதைத்தால் அங்குள்ளவர்களின் உண்மையான மனநிலையை அறிய முடியும்

சாதாரணமான வாக்குப்பதிவு வீதம் - 70%

போக்குவரத்து தடை, செலவு காரணமாக மருத்துவ, கல்வி, தொழில் காரணமாக கொழும்பு மற்றும் வெளியிடங்களில் இருப்பவர்கள் திரும்பாத காரணத்தினால் - 20%

ஆக இம்முறை உண்மையில் ஆர்வமின்மை காரணமாக வாக்களிக்காத வீதம் (கிட்டத்தட்ட) - 30%

யதார்த்தமில்லாத கொள்கைகளையே தொடர்ந்தும் சுற்றிச் சுற்றி வலம்வருவது துன்பத்தையே தரும்.

விரைவில் அரசை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி புதிய தொழில் வாய்ப்புகளை பெற்று தங்கள் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, இதன் மூலம் புலம் பெயர் தமிழர்களின் நிதியுதவியில் வாழ்வதை குறைத்து தங்களுக்கான அரசியல் முடிவுகளில் அவர்களின் யதார்த்தமற்ற தலையீடுகளை உள்ளுர் தமிழர்கள் தவிர்க்க வேண்டும்.

இனியும் அரசினை சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு மற்றும் நாடுகடந்த-அரசு என்று சீண்டும் அரசியலை தவிர்த்து, தமிழ்மக்களின் வாழ்வுக்கு முன்னுரிமை கொடுத்து அரசுடன் இணைந்து செயற்பட்டு இழந்த வாழ்வை மீளப்பெற்றுக் கொள்ள முனைய வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமாய் கேட்க பதார்த்தமாய் சொன்னாங்க யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படி " நாங்கள் கூட்டமைப்புக்கு போட அவங்கள் வெல்ல இங்க நாங்கள் இருந்த பாடில்லை தம்பி அதோடை உவைக்கு போட்டு இங்கை ஒண்டும் கிழிக்க போறதில்லை என்றார்கள். இனி கதைச்சிரோ தம்பி பின்னேரம் வீட்டு வாசலிலை நிப்பாங்கள் தாடிக்காரரின்டை ஆட்கள். ஏன் மோனை பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்குவான்." :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா சொன்னது:

நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும்

சாநக்கியன் சொன்னது:

அரசுடன் இணைந்து செயற்பட்டு இழந்த வாழ்வை மீளப்பெற்றுக் கொள்ள முனைய வேண்டும்!

இப்போது புரிகிறது ஏன் சில இனங்கள் விடுதலையின் உச்சத்தையும் சில இனங்கள் அடிமைத்தனத்தின் உச்சத்தையும் அனுபவிக்கின்றனவென.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமான வாக்குப்பதிவு வீதம் - 70%

போக்குவரத்து தடை, செலவு காரணமாக மருத்துவ, கல்வி, தொழில் காரணமாக கொழும்பு மற்றும் வெளியிடங்களில் இருப்பவர்கள் திரும்பாத காரணத்தினால் - 20%

ஆக இம்முறை உண்மையில் ஆர்வமின்மை காரணமாக வாக்களிக்காத வீதம் (கிட்டத்தட்ட) - 30%

யதார்த்தமில்லாத கொள்கைகளையே தொடர்ந்தும் சுற்றிச் சுற்றி வலம்வருவது துன்பத்தையே தரும்.

விரைவில் அரசை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி புதிய தொழில் வாய்ப்புகளை பெற்று தங்கள் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, இதன் மூலம் புலம் பெயர் தமிழர்களின் நிதியுதவியில் வாழ்வதை குறைத்து தங்களுக்கான அரசியல் முடிவுகளில் அவர்களின் யதார்த்தமற்ற தலையீடுகளை உள்ளுர் தமிழர்கள் தவிர்க்க வேண்டும்.

இனியும் அரசினை சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு மற்றும் நாடுகடந்த-அரசு என்று சீண்டும் அரசியலை தவிர்த்து, தமிழ்மக்களின் வாழ்வுக்கு முன்னுரிமை கொடுத்து அரசுடன் இணைந்து செயற்பட்டு இழந்த வாழ்வை மீளப்பெற்றுக் கொள்ள முனைய வேண்டும்!

நீங்கள் உங்கள் சதவீதக் கணக்கை பிபிசிக்கு அனுப்பி வைக்கவும். அவர்களும் தமிழ்நெட்டும் தும்பினியின் ஆட்டத்தை மலினப்படுத்துகிறார்கள்.

பெரிய பொருளாதார விடிவுதான் வரப்போகுது. கனவு கண்டு கொண்டிருங்கோ..!

போக்குவரத்துத் தடையா.. ஏன் இன்னும் புலிகளின் ஆவி நின்று ஏ9 பாதையில் கப்பம் வசூலிக்குதா.. போக்குவரத்துதடை போட. நல்லூர் திருவிழாவுக்கு விசேட விமான சேவை விட.. நட்டத்தில போற மகின் எயாரை மீட்சிப்படுத்த.. பொருளாதார மீட்சிக்கு உங்கட தோழர் தும்பினியை துயில் உரிஞ்சு ஆட விடுவார்.. நீங்களும் போய் கூட நின்று ஆடி.. முதலில் யாழ்ப்பாணத் தெருக்களின் மின்கம்பங்களையாவது ஒழுங்காக நடுங்கள்..! அப்புறம் மிச்சம் பேசுவம்.

உலகம் நவீன மயமாகிக் கொண்டிருக்குது.. கொழும்பே உருப்படுற பாடில்ல.. இதுக்குள்ள சிங்களவன் யாழ்ப்பாணத்தை சிறீலங்காவின் தலைநகராக்குவான் என்று உவர் நல்லா கனவு காணுறார். காணட்டும்.

உவரும் கருணாவும் அடிப்படையில சொல்வது மகிந்தவின் மடியில விழுந்து என்றாலும்.. பிச்சை வாங்கிப் பிழைச்சிடனும் என்று. கேடுகெட்ட இவ்வகையான பிறவிகள் இருக்கும் வரை தமிழனுக்கு நாடு எதற்கு.. விடுதலை எதற்கு..??! இவையின்ர கணக்கு தனிநாடு வந்தா தமிழன் உருப்பட முடியாது.. மகிந்தவோட கூடிக் களிச்சால் தான் அபிவிருத்தி வருமாம்.. வரட்டும்.. முதலில்... ஏ9 பாதையைத் துறவுங்கோ. அதையும் புலிகள் தான் செப்பமிட்டு வைச்சிருந்தவங்க..! அதைக் கூடத் திறக்க வழியில்ல.

புலிகள் கட்டிவைச்ச கட்டிடங்களில அழகா சிங்கக் கொடியைப் பறக்கவிட்டிட்டு.. இருக்கிற.. கோமாளிக் கூட்டம் அபிவிருத்தி செய்யுமாம். செய்யும் செய்யும்.. கருணாவும் டக்கிளசும் லண்டனில பளஸ் வாங்கி தங்கள அபிவிருத்தி செய்துக்குவாங்கள்.. நீங்கள் கட்டுமரத்தில 8 மணித்தியாலம் மீன்பிடிக்கிறதே அபிவிருத்தி என்று கிடவுங்கோ..! :wub::(

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமாய் கேட்க பதார்த்தமாய் சொன்னாங்க யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படி " நாங்கள் கூட்டமைப்புக்கு போட அவங்கள் வெல்ல இங்க நாங்கள் இருந்த பாடில்லை தம்பி அதோடை உவைக்கு போட்டு இங்கை ஒண்டும் கிழிக்க போறதில்லை என்றார்கள். இனி கதைச்சிரோ தம்பி பின்னேரம் வீட்டு வாசலிலை நிப்பாங்கள் தாடிக்காரரின்டை ஆட்கள். ஏன் மோனை பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்குவான்." :(

பனங்கொட்டைத் தமிழர்கள் இப்போதும் புத்திசாலியாக இருக்கிறார்கள். அதைப் புரிந்தால் சரி..

தும்பினியின் இடுப்பைப் பார்த்து மக்கள் மயங்கவில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனங்கொட்டைத் தமிழர்கள் இப்போதும் புத்திசாலியாக இருக்கிறார்கள். அதைப் புரிந்தால் சரி..

தும்பினியின் இடுப்பைப் பார்த்து மக்கள் மயங்கவில்லை!

தும்பினியை துயில் இறக்கி யாழ்ப்பாணத்தில் ஆடவிட்டதே அத்தியடி குத்தியர்தான். அவர் தான்.. மயங்கிக் கிடக்கிறார். அவர் தான் தெளிய வேண்டிய மனிதன். இல்ல தெளிய வைக்கிறதை விட வேறு வழி இல்லை..! :(

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமான வாக்குப்பதிவு வீதம் - 70மூ

போக்குவரத்து தடைஇ செலவு காரணமாக மருத்துவஇ கல்விஇ தொழில் காரணமாக கொழும்பு மற்றும் வெளியிடங்களில் இருப்பவர்கள் திரும்பாத காரணத்தினால் - 20மூ

ஆக இம்முறை உண்மையில் ஆர்வமின்மை காரணமாக வாக்களிக்காத வீதம் (கிட்டத்தட்ட) - 30மூ

யதார்த்தமில்லாத கொள்கைகளையே தொடர்ந்தும் சுற்றிச் சுற்றி வலம்வருவது துன்பத்தையே தரும்.

விரைவில் அரசை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி புதிய தொழில் வாய்ப்புகளை பெற்று தங்கள் பொருளாதாரத்தை நிலைப்படுத்திஇ இதன் மூலம் புலம் பெயர் தமிழர்களின் நிதியுதவியில் வாழ்வதை குறைத்து தங்களுக்கான அரசியல் முடிவுகளில் அவர்களின் யதார்த்தமற்ற தலையீடுகளை உள்ளுர் தமிழர்கள் தவிர்க்க வேண்டும்.

இனியும் அரசினை சர்வதேசம்இ இந்தியாஇ தமிழ்நாடு மற்றும் நாடுகடந்த-அரசு என்று சீண்டும் அரசியலை தவிர்த்துஇ தமிழ்மக்களின் வாழ்வுக்கு முன்னுரிமை கொடுத்து அரசுடன் இணைந்து செயற்பட்டு இழந்த வாழ்வை மீளப்பெற்றுக் கொள்ள முனைய வேண்டும்!

வாழ்வை அழித்தவர்கள் எப்படித் திருப்பி தருவார்கள்.தமாசாய் பேசுறீங்க

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதாரணமான வாக்குப்பதிவு வீதம் - 70%

போக்குவரத்து தடை, செலவு காரணமாக மருத்துவ, கல்வி, தொழில் காரணமாக கொழும்பு மற்றும் வெளியிடங்களில் இருப்பவர்கள் திரும்பாத காரணத்தினால் - 20%

ஏன் நீங்கள் புள்ள்ளிவிபரங்கள் எடுத்தனீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூக்கிரலிடும் சர்வதேசம் இதற்கு என்ன சொல்லப் போகிறது.80 வீதமான மக்கள் புறக்கணித்த தேர்தல் ஜனநாயக முறைப்படி செல்லுபடியற்றதாகும். இதையே தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறர்கள்.

படைக்குவிப்பு , ஆக்கிரமிப்பு , அச்சுறுத்தல், ஆயுதமுனை,....... உட்படப் பல்வேறு துன்பத்துள்ளும் நின்றவாறு தமிழினம் தனது சனநாயக விருப்பையும் அவர்களது மனவெளியில் உறைந்திருக்கும் தாயக தாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளமையானது பாராட்டுக்குரியதாகும். இணையங்களிலே வீரம் பேசும் எம்போன்றவர்களின் முன் உண்மையிலேயே போற்றுதற்குரியவர்கள்.

சனநாயகம் என்பது ஆக்கிரமிப்பாளனின் நச்சாயுதம்.சனநாயகம் என்பது மேற்கினது(சர்வதேசம்) செல்ல நாய்க்குட்டியாகும். இவர்கள் ஆகா சனநாயகத்தின் தந்தையென்று டக்ளசுக்கும் மகிந்தவுக்கும் பட்டம் கொடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஏனெனில் மேற்கினதும் அதன் ஆமாம் சாமிகளதும் சனநாயகம் அதுதான்.

ஆனால் தமிழினத்தை நீண்டகாலத்துக்கு அடக்குமுறைக்குள் வைத்திருக்க முடியாதென்பதை இந்தத் தேர்தலூடாக சிங்களம் கணித்திருக்கும். இனி மேலும் கொலைகளும் அச்சுறுத்தலும் அதிகரிக்கும். இளையோரை வேட்டையாடுவது அதிகரிக்கப் போகிறது.

அதையும் இந்த ஒன்றுக்கும் உதவாத சர்வதேசம் மனிதாபிமான நடவடிக்கையென்று மௌனியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

உங்கள் பலருக்கு யாழ்ப்பாணத்தில் உறவுகள் இருக்கும். அவர்களிடம் புலம் பெயர் நாடுகளில் இருந்து கொண்டு வீறாப்புடன் கேள்வி கேட்காமல், சாதாரணமாக கதைத்தால் அங்குள்ளவர்களின் உண்மையான மனநிலையை அறிய முடியும்

இது நான் சமாதன காலத்தில் கூட இருந்து அனுபவத்தில் கன்டது.உண்மை சில வேளை கசக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
ரொம்ப சந்தோசப்படாதேங்கோ... யாழ் மக்கள் ஒன்றும் தேர்தலை புறக்கணிக்கவில்லை,அவர்களுக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.