Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG6624-1251655098.jpg

கொழும்பிலிருந்து முதற்தடவையாக மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தை ஒருவரின் கமராவில் சிக்கியது தான் இந்தப் படம்.

பரந்த இந்த நிலப்பரப்பில் நீல நிறமாக காணப்படும் வானில் ஏதாவது உங்களுக்குத் தென்படுகிறதா…? உங்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா…? அப்படியானால் கூர்ந்து அந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் அந்தப் படத்தில் ஒரு உருவம் தென்படுவதை காண்பீர்கள். நிச்சயமாக அது புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தான் என்கிறார் செல்வி லாவண்யா பகீரதன்.

இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. வெள்ளவத்தையைச் சேர்ந்தவர். இந்தப் புகைப்படம் குறித்தும் அதில் தென்படும் அந்த அம்மன் உருவம் குறித்தும் லாவண்யா மெய்சிலிர்க்க எம்மிடம் பின்வருமாறு கூறினார்.

கொழும்பைச் சேர்ந்த நாங்கள் முதற்தடவையாக மட்டக்களப்புக்கு போயிருந்தோம். அந்தப் பயணத்தின் போது மிக மிக சக்தியும் அதன் மூலம் பிரசித்தியும் பெற்ற புன்னை சோலை அம்மன் கோயிலுக்கு போக விரும்பினோம். இந்த ஆலயத்தில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன.

நாங்கள் போன போது ஆலயம் மூடப்பட்டிருந்தது. ஓரிருவர் மட்டும் வெளியே நின்று வணங்கிக் கொண்டிருந்தனர். இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இரண்டு கதவுகள் உண்டு. ஒரு கதவு பௌர்ணமி தினத்தில் மட்டுமே திறக்கப்படும். மற்றைய கதவு வருடத்தில் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும்.

பௌர்ணமி நாட்களில் மட்டும் திறக்கப்படும் கதவின் பின்னே பெரிய அம்மன் சிலை ஒன்று உள்ளதாம். வருடத்திற்கு ஒருமுறை திறக்கும் கதவின் பின்னே மூன்று அம்மன் சிலைகள் உண்டாம். பெரும்பாலும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அம்மன் உரு வந்து ஆடுவதுண்டாம். பிள்ளை வரம் இல்லாதவர்கள், திருமணம் கை கூடாதவர்கள் எல்லாம் இங்கு வந்து நேர்த்தி வைத்தால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுமாம். இவை எல்லாம் இங்குள்ள மக்களிடம் இருந்து தெரிந்து கொண்ட விடயங்கள்.

மூலஸ்தானக் கதவு மூடப்பட்டிருந்ததால் ஆலயத்திற்கு வெளியே நின்று அம்மனை தரிசித்து விட்டு மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணித்தோம். அந்தச் சமயம் அமிர்தகழிக்கும் புன்னைச் சோலைக்கும் இடையில் ஒரு பெரிய வெற்று நிலப்பரப்பு காணப்பட்டது. வானம் முகில்கலின்றி மிக ரம்மியமாக காணப்பட்டது.

அந்த காட்சி என் மனதை மிகவும் கவர்ந்ததால் உடனே என் கமராவைக் கொண்டு அந்த இயற்கை சூழலை கிளிக் செய்தேன். இப்படி நிறைய புகைப்படங்களை எடுத்தேன். கொழும்பு திரும்பியதும் அந்தப் படங்களை டெவலப் பண்ணி எடுத்து பார்த்த போது ஆச்சரியப்பட்டு போனோம். அதிசயத்தில் பரவசப்பட்டு போனேன்.

எடுத்த படங்களில் வானில் அம்மன் உருவம் ஒன்று தென்பட்டது. இது நிச்சயம் புன்னைச்சோலை அம்மன் தான் என்று எங்கள் உள்மனம் சொல்கிறது. அதுதான் உண்மையும் கூட. கொழும்பிலிருந்து சென்று அம்மனை தரிசிக்க முடியாது போன எங்களுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடாது என்று நினைத்த அம்மனின் அருள் தரிசனம் தான் அது.

http://www.paristamil.com/tamilnews/?p=30310

Edited by ஜீவா

உண்மைதான்

இதே அம்மன், முள்ளிவாய்க்காலிலும் வன்னியிலும் தம் பிஞ்சுக் குழந்தைகளை யுத்த காட்டேரிகளிடம் இருந்து காப்பாற்று என அம்மாமார் கதறும் போது அடிக்கடி வந்து அருள்பாலிச்சு காப்பாத்தினாவாம் என்றும் கேள்வி.

அம்மன் ஏன் சக்கரநாற்காலியில் இருக்கிறார்?

இதிலிருந்து என்ன தெரியுதென்டால் எங்கட சனத்தில நிறைய பேருக்கும் என்னும் photoshop என்ற சாமான் இருக்கெண்டே தெரியவில்லை :icon_mrgreen: :icon_mrgreen: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ பட்டம் விட்டிருக்கிறாங்கள்.. :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சனத்தை ஏமாத்த நல்லவழி

இது பயங்கரவாதி மகிந்த ராஜபக்சவின் குருவானா, அரண்மனை சுகம் வேணாம் என்று ஓடிவந்ததாக கருதப்படும் , நவீன உலகின் உலக பயங்கரவாதி புத்தர் தான் என கெகலியா ரம்புக்வல்ல நாளை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுவார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மன் ஏன் சக்கரநாற்காலியில் இருக்கிறார்?

பாவம் அவவுக்கும் நாரிப் பிடிப்பு போல :lol:

யாரோ பட்டம் விட்டிருக்கிறாங்கள்.. :lol: :lol:

அதே தான் போலை :lol:

உண்மைதான்

இதே அம்மன், முள்ளிவாய்க்காலிலும் வன்னியிலும் தம் பிஞ்சுக் குழந்தைகளை யுத்த காட்டேரிகளிடம் இருந்து காப்பாற்று என அம்மாமார் கதறும் போது அடிக்கடி வந்து அருள்பாலிச்சு காப்பாத்தினாவாம் என்றும் கேள்வி.

நிழலி அண்ணா கதிர்காம முருகனை விட்டிட்டிங்க அவரும் அவரும் காட்சி கொடுத்து பணமும் குடுத்ததா சொன்னாங்க :(

இது பயங்கரவாதி மகிந்த ராஜபக்சவின் குருவானா, அரண்மனை சுகம் வேணாம் என்று ஓடிவந்ததாக கருதப்படும் , நவீன உலகின் உலக பயங்கரவாதி புத்தர் தான் என கெகலியா ரம்புக்வல்ல நாளை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுவார்

முடியலை சுனாமி(சிரிச்சு) :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் பலத்த காவற்துறை பாதுகாப்புடன் பிள்ளையார் சிலை ஊர்வலம், கதிகாமக் கந்தனின் பக்தைக்கு கந்தன் நேரடியாகக் காட்சி, இப்போது அம்மன் விமானமேறி வானத்தில் காட்சி. இச்செய்திகளை வாசிக்கும் போது, முன்னைநாள் அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஸ்க்கும், சிதம்பரத்துக்கும் செருப்பால் சாத்துப்படி கொடுத்ததுபோல், சாமிகளும் வாங்குவினம்போல் இருக்குது.

நல்லூர்த் திருவிழாவுக்கு நான் விரதமிருக்கவில்லை அனால் மாமிசம் சாப்பிடவில்லை. கந்தன்மீது பக்தியோ அன்றேல் கந்தனைக் காரணம்காட்டி உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம் என்றோ என்ன காரணமோ எனக்குத் தெரியாது. ஆனால் யாருக்காகவெனும் என்னால் எனக்கு கடவுள் நம்ம்பிக்கை இருக்குது இல்லை எனப் பொய் சொல்லமுடியாது.

சிலவேளை நான் நினைப்பதுண்டு திருவிழாக்காலத்தில் போய் கந்தன் வெளிவீதிவலம் வரும்போது செருப்பால் எறியைவேண்டுமெண்டு. இது கடவுள் இல்லை என்பதற்காக அல்ல, உன்னைத்தானே தமிழ்க் கடவுள் எனக் கொண்டாடிணோம் என்பதற்காக.

இன்னுமொரு நல்லூர்த் திருவிழா வராமலா போகுது. அதுவரை பொறுத்திரு முருகா. உனது அடியாட்களை ஆயத்தமாக வைத்திரி தர்ம அடி எனக்குத்தர.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன முருகன்,அம்மன் என்று கிளம்பிட்டினம்...

அவைக்கும் ஒருவேளை மேலோகம் போரடிச்சிட்டுதோ? :lol:

இல்லை வடை,பொங்கல்,கடலை,மோதகம் சாப்பிடுவதை விட்டிட்டு நரமாமிசம் சாப்பிட வெளிக்கிட்டினம் போலை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் சில ஊடகங்களில் சுனாமி காலத்தில் அம்மன், ஜேசு, அல்லா போன்றவர்கள் கடலில் தோன்றியதாக செய்தி வெளியிட்டு இருந்தார்கள். வன்னி அவலங்கள் நடக்கும் போதும், சுனாமியின் போது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று தாங்கள் வணங்கும் கடவுள்களை மக்கள் வேண்டவில்லையா?. அப்பொழுது கடவுள் மார் எங்கே போயிருக்கினம்.

சுனாமியின் போது பலர் கடற்கரையில் இருந்த தேவாலயங்களுக்கு கும்பிடச் சென்ற போது தான் கொல்லப்பட்டிருக்கினம். நத்தாருக்கு மறுநாள் ஜேசுபிரானைக் கும்பிட சென்றபோது இவர்கள் கொல்லப்பட்டார்கள். வீட்டில் இருந்தால் இவர்கள் தப்பி இருக்கலாம். ஏன் ஜோசப் பராஜ சிங்கமும் தேவலாயத்தில் தான் கொல்லப்பட்டார். நவாலி சென்பீட்டர் தேவலயத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் தான் சிறிலங்கா வான் படையினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். புகழ் பெற்ற மடுத்தேவலாயத்தில் அகதிகளாக இருந்த போதும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவின் போது 1993ல் உலங்குவானூர்தி தாக்குதலினால் சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.ப

முள்ளிவாய்க்காலிச சனம் கொத்துக் கொத்தாய் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கேக்க அம்மன் விடுமுறையில நிண்டவ போல......

இப்பிடியான செய்திகளையும் சில யென்மங்கள் நம்புதுகள் தானே.......

  • கருத்துக்கள உறவுகள்

இது உற்றுபார்க்க தெரியாவர்களின் உலுடா.

நன்றாக உற்றுபாருங்கள் இது அம்மனா என்று. அதில் அம்மணமாக ஐஸ்வர்யா ராய் தான் தெரிகிறார்!

உது வேற யாரும் இல்லை எங்கட ஜெயலலிதா அம்மையார்தான்.

இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. வெள்ளவத்தையைச் சேர்ந்தவர். இந்தப் புகைப்படம் குறித்தும் அதில் தென்படும் அந்த அம்மன் உருவம் குறித்தும் லாவண்யா மெய்சிலிர்க்க எம்மிடம் பின்வருமாறு கூறினார்.

சட்டக்கல்லூரி மாணவி சொன்னபடியால் உண்மையாகத்தான் இருக்கும். அம்மனுக்கு அரோகரா,கிழக்கின் உதயம் அம்மாணுக்கும் அரோகரா

ஆகா என்ன ஒரு கண் கொள்ளா காட்ச்சி.... அது சரி அம்மன் என்ன மங்கலா தெரியிறா...??? படம் எடுத்தவ ஆடி கொன்டு எடுத்தவவோ..?? இல்லை அம்மன் வழமை போல ஆடி கொன்டு நிண்டவவோ...??

அம்மன் பளிச் என்டு தெரிய வேண்டாமா....??? மென் பொருளை மாத்துங்கயா...??

நாம் அடிமைகளானது இன்றில்லை.

அடிமைக்கு ஏது தெரிவு?

யாருக்கும்; எதுக்கும்; எப்பவும்;

அரோகரா.... அரோகரா....... அரோகரா...

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பார்க்கிற பொண்ணுங்கள் எல்லாம் அம்மணமா மன்னிக்கவும் அம்மனாத்தான் தெரியுறாங்க.

உண்மைதான்

இதே அம்மன், முள்ளிவாய்க்காலிலும் வன்னியிலும் தம் பிஞ்சுக் குழந்தைகளை யுத்த காட்டேரிகளிடம் இருந்து காப்பாற்று என அம்மாமார் கதறும் போது அடிக்கடி வந்து அருள்பாலிச்சு காப்பாத்தினாவாம் என்றும் கேள்வி.

ஏன் மடு மாதாவும் அந்தோனியாரும் மட்டும் வந்து ஏதாவது செய்தவையோ? அதைக் கேக்க மாட்டியல், ஆனால் உதுக்க்கு என்றால் மட்டும் முண்டியடித்துக் கொண்டு வந்து விடுவீர்கள் :unsure::huh::o

ஏன் மடு மாதாவும் அந்தோனியாரும் மட்டும் வந்து ஏதாவது செய்தவையோ? அதைக் கேக்க மாட்டியல், ஆனால் உதுக்க்கு என்றால் மட்டும் முண்டியடித்துக் கொண்டு வந்து விடுவீர்கள் :unsure::huh::o

பரீட்சைப் பெறுபேறுகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த மகனிடம் தகப்பன் கெட்கிறார் : டேய் நீ பாஸ் பண்ணிட்டியா?

அதற்கு மகனின் பதில் : அடுத்த வீட்டு ஆனந்தனும் பெயில் தானப்பா....

உங்களுடைய கருத்தை வாசித்த போது எனக்கு இந்தப் பகிடி தான் ஞாபகத்திற்கு வந்தது.

ஏன் மடு மாதாவும் அந்தோனியாரும் மட்டும் வந்து ஏதாவது செய்தவையோ? அதைக் கேக்க மாட்டியல், ஆனால் உதுக்க்கு என்றால் மட்டும் முண்டியடித்துக் கொண்டு வந்து விடுவீர்கள் :( :( :(

அரோகரா அரோகரா......ஐயோ பாவம் நீங்கள்

பரீட்சைப் பெறுபேறுகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த மகனிடம் தகப்பன் கெட்கிறார் : டேய் நீ பாஸ் பண்ணிட்டியா?

அதற்கு மகனின் பதில் : அடுத்த வீட்டு ஆனந்தனும் பெயில் தானப்பா....

உங்களுடைய கருத்தை வாசித்த போது எனக்கு இந்தப் பகிடி தான் ஞாபகத்திற்கு வந்தது.

:unsure::huh::o அது....!!!

யாரோ பட்டம் விட்டிருக்கிறாங்கள்.. :unsure::huh:

ஆஆஆ நானும் பார்த்த உடனை இதைத்தான் நினைச்சன் நீங்கள் முந்துட்டீங்கள் :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வகுற்றம் எங்கை போய் முடியப்போகுதோ எனெக்கெண்டால் ஒண்டும் விளங்கேல்லை எல்லாம் மேலை இருக்கிறவனுக்குத்தான் வெளிச்சம் :unsure:

தெய்வகுற்றம் எங்கை போய் முடியப்போகுதோ எனெக்கெண்டால் ஒண்டும் விளங்கேல்லை எல்லாம் மேலை இருக்கிறவனுக்குத்தான் வெளிச்சம் :unsure:

இனி முடியிறத்திற்கு என்ன இருக்கு! அதுதான் எல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சுதே :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு அம்மனுக்கு பின்னால திரியிறன் காட்டுறாவே இல்லை. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.