Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருநாகல் நகரில் பாடசாலை வானுக்குள் வெடிப்புச் சம்பவம்: பாடசாலை மாணவர்கள் 12 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருநாகலில் வாகன குண்டு வெடிப்பில் 13 மாணவர்கள் காயம்

குருநாகல் உடவல்பொல பிரதேசத்தில் இன்று காலை பாடசாலை வான் ஒன்றில் இருந்து குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒரு மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் போது குறித்த வாகனம் வீடொன்றின் முன்பாக தரித்திருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

http://www.meenagam.org/?p=12210

பாகிஸ்தான் அல்லது இந்தியாகாரனின் வேலையாகத்தான் இருக்கும்.

புலி பசித்தாலும் புல்லு திண்ணாது.

புலி நல்ல பிள்ளைகளாக வாழ நினத்தாலும் இவன்கள் விடமாட்டாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி. காரன் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டான் .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை-வேனில் குண்டு வெடித்து 12 குழந்தைகள் காயம்

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2009, 10:09 [iST]

கொழும்பு: இலங்கையின் வட மேற்கு பகுதியில் உள்ள குருநெகலாவில் நடந்த ஒரு பள்ளி வேனில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பள்ளிக் குழந்தைகள், டிரைவர் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினார்களா என்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை என்று அந் நாட்டு ராணுவம் கூறியுள்ளது.

அதில் இருந்தது குண்டா அல்லது வேனின் பெட்ரோல் டாங்க் வெடித்ததா என்றும் இன்னும் உறுதியாகவில்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை-வேனில் குண்டு வெடித்து 12 குழந்தைகள் காயம்

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2009, 10:09 [iST]

கொழும்பு: இலங்கையின் வட மேற்கு பகுதியில் உள்ள குருநெகலாவில் நடந்த ஒரு பள்ளி வேனில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பள்ளிக் குழந்தைகள், டிரைவர் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினார்களா என்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை என்று அந் நாட்டு ராணுவம் கூறியுள்ளது.

அதில் இருந்தது குண்டா அல்லது வேனின் பெட்ரோல் டாங்க் வெடித்ததா என்றும் இன்னும் உறுதியாகவில்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது.

தற்ஸ்தமிழ்

Bomb explosion in central Sri Lanka injures 13

Fri, Oct 2, 2009, 08:40 am SL Time, ColomboPage News Desk, Sri Lanka.

Oct 02, Kurunegala: A bomb explosion in a school van injured 12 school children and the driver this morning, the police said.

The explosion happened in a vehicle parked in a garage near the Nissanka Viduhala at Udawalpola, Kurunegala this morning. The injured have been rushed to the Kurunegala Hospital.

"The driver had just started the vehicle when the bomb went-off inside the garage of Mr. K. A Karunasena," Kurunegala Police said.

The police believe a personal dispute to be behind the incident. Police are conducting investigations.

- colombo page

தற்ஸ் தமிழ் கற்பனை செய்து எழுதுகிறதா?

சிறிலங்காவின் வடமேல் மாகாணத்தில் உள்ள குருநாகல் நகரில் பாடசாலை வான் ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் உட்பட 13 பேர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த வான் ஒன்றிலேயே இன்று வெள்ளிக்கிழமை காலை 7:30 நிமிடமளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குருநாகல் உடுவல்பொல பகுதியில் உள்ள நிசங்கா மகா வித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்ற இச்சம்பவத்தில் வானின் ஓட்டுநரும் பாடசாலை மாணவர்கள் 12 பேரும் காயமடைந்திருக்கின்றார்கள்.

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாகவே வேறு வாகனங்களில் ஏற்றப்பட்டு குருநாகல் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவசர சிகிச்சைப் பிரிவில் இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

வானுக்குள்ளேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்த காவல்துறை வட்டாரங்கள், இதற்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற உடனடியாகவே சிறப்பு காவல்துறைக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அப்பகுதியைத் தடை செய்திருப்பதுடன் தடயங்களைச் சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளதாக குருநாகலில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.

இச்சம்பவத்தையடுத்து குருநாகல் நகரில் பெரும் பதற்றநிலை காணப்படுகின்றது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

Many injured in Sri Lanka blast

An explosion in a van in central Sri Lanka has wounded 13 people, including many school children who were about to get on the vehicle, the military says.

A private dispute was suspected to be behind the blast, military spokesman Brigadier Udaya Nanayakkara said.

The attack took place near the town of Kurunegala. The bomb was set up to explode when the engine was started.

It is the first major blast in the country since government troops defeated Tamil Tiger rebels in May.

The Tigers had been fighting for an independent Tamil homeland in the north and east of the country for more than 25 years.

Police said they were investigating the blast.

bbc.co.uk

விசிலடிச்சான் பேர்வழிகளுக்கு

Personal enmity triggers off van bomb injuring school children : Tamilnet

தனிநபர்களுக்கிடையிலான மோதல் தான் காரணம் என தமிழ்நெற்றே கூறிவிட்டத!

புலிக்கு பதிலாய் இயக்கம் வேறை தலைமை வேணும் எண்டு சிலர் அங்கலாச்சவை... அவையின் வேலையாகத்தான் இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு பதிலாய் இயக்கம் வேறை தலைமை வேணும் எண்டு சிலர் அங்கலாச்சவை... அவையின் வேலையாகத்தான் இருக்கும்...

அதுதான்

குழந்தைப்பிள்ளைகளில் பழகிப்பார்க்கினமோ?

  • கருத்துக்கள உறவுகள்

Carefree violence is becoming a social phenomenon in southern Sri Lanka as a consequence of an attitude arising from the war that didn't care for human rights, journalistic circles in Colombo commented.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30354

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருநாகல் குண்டுவெடிப்பில் பாடசாலை சிறுமியும் சாரதியும் பலி

குருநாகலில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை குருநாகல், உடுவல்பொலவில் வேனொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்த மாலியாதேவ பாலிகா வித்தியாலய மாணவியான எரந்திகா திஸாநாயக்கவும் (12 வயது) உயிரிழந்துள்ளார். அதேவேளை வேனின் சாரதியும் உயிரிழந்துள்ளார். ஏனையோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.meenagam.org/?p=12257

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசிலடி தூள்பறக்குது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவின் வடமேல் மாகாணத்தில் உள்ள குருநாகல் நகரில் பாடசாலை வான் ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் உட்பட 13 பேர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

அடிங்கோ விசில. :)

  • கருத்துக்கள உறவுகள்

A private dispute was suspected to be behind the blast, military spokesman Brigadier Udaya Nanayakkara said.

வாசிக்க தெரியாத விசுக்கோத்துகள் தான் விசிலடிக்கும். :):D

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க தெரியாத விசுக்கோத்துகள் தான் விசிலடிக்கும். :):D

:wub:

  • கருத்துக்கள உறவுகள்

முகாமில் உள்ள மக்களை விடுவிக்குமாறு வரும் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க சிறிலங்காவே செய்த வேலையாய்தான் இருக்கும்.புலிகள் இன்னும் இருக்கினம்.முகாமில இருக்கிற ஆட்களை விட்டால் அங்க இருக்கிற புலிகளும் சேர்ந்து பிறகு பழையபடி பயங்கரவாதம் தலையெடுக்கும் என்று உலக நாடுகளுக்கு சொல்ல வசதியாக இருக்கும்.கடைசியில திட்டத்தில ஏதோ பிசகு வந்ததால இரு குழுக்களுக்கிடையிலான சண்டை என்று கதை விடுறாங்கள்.

விசிலடி தூள்பறக்குது. :lol:

நீங்கள் அடிச்ச விசிலை விடவா? :lol:

ஒவரு தமிழரின் படுகொலைக்கும் விசிலடித்த கூட்டமே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ந்த வெடிகுண்டுச் சம்பவத்துடன் தொடர்புள்ளவராக, பொலநறுவை மின்னேரியா ராணுவ முகாமில் பணியாற்றிய சிங்களப்படையின் சிப்பாய் ஒருவர் குருநாகல் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெடிப்புச் சம்பவத்தில் சேதமடைந்த வாகனத்தின் உரிமையாளரின் அயல்வீட்டில் வசிப்பவராவார். தான் கடமையாற்றிய முகாமிலிருந்து சி4 ரக வெடிமருந்துகளை அவர் சமீபத்தில் கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூலம்: தமிழ்நெற்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.