Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழிச்சிகள்

Featured Replies

வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது..

வளைய முட்கம்பிகள்

வற்றியொடுங்கிய

உடலும் முகமும்

வயதையும் வடிவையும்

வைத்து

விடிய விடிய நடக்கும்

விசேட விசாரணைகள்

நாளைய பொழுதாவது

நன்றாய் விடியாதாவென

நாட்களை எண்ணி

புரளும்

நள்ளிரவென்றில்

மப்படித்த சிப்பாயின்

கைகள் என்னை

தட்டியிழத்துப்போகும்

கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

கசக்கப்படும் முலைகளில் கடி

அடி...இடி...கடி..

அடுத்தடுத்து விசாரித்தில்

அடிவயிற்றில்வலி

மெல்லப்பெய்த மழையில்

மகிழமரத்தில்

மெதுவாய்

சாய்ந்துகொண்டேன்

கால்கள்வழியே

கரைந்தோடிய

கட்டிஇரத்தம்

கண்டதும்

கவலையடைந்தான்

காவலிற்கு நின்ற

சிப்பாய்

அவன் ஆண்மையில்

அவன் சந்தேகப்பட்டு

அவமானமடைந்திருக்கலாம்

ஆனாலும்

யோனிகள் மீதான

விசாரணைகள்

தொடர்ந்து கொண்டேயிருக்கும்..

ஏனெனில் நாங்கள்

தமிழிச்சிகள்

Edited by சுமங்களா

  • Replies 60
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமங்களா

இரத்தக் கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்... அனுதாபம் என்ற வார்த்தையில் அடங்குமா இந்த வரலாற்று வலிகள்...

மனக்கண்ணில் பார்த்துக் கவிதை எழுதியிருந்தேன் இந்தக் கொடுமைகளை... நீங்கள் உங்கள் சொந்த உறவின் கொடுமைகளை நேரில் கேட்டு எழுதிய வரிகள் கேட்டு உண்மையிலே மனம் செத்துவிட்டது.....

சத்தியமாய் இன்னொரு தடவை வாசிக்க முடியாத கொடுமை... அழுகையைத் தவிர ஒன்றும் முடியாத நிலமை புலம்பெயர்ந்த நாட்டில் போராடுவதைத்தவிர.....

சுமங்களா,

உங்கள் கவிதையில் எனக்கு வரிகள் தெரியவில்லை, வலிகள் தான் தெரிகின்றன.

முடிந்தால் உங்கள் சகோதரி மூலமறிந்த அக்கிரமங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி சொன்னதுபோல் மீண்டும் படிக்க பயமாயிருக்கிறது..இதைவிட கொடுமை இந்த உலகத்தில் உண்டா? கவலைதருவது இது எல்லாம் பற்றி கவலைப்படாமல் காகித கப்பல்விடும் எங்கள் ???தலைவர்களும் அவர்தம் தொண்டர்களும்..

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது..

கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

கசக்கப்படும் முலைகளில் கடி

அடி...இடி...கடி..

அடுத்தடுத்து விசாரித்தில்

அடிவயிற்றில்வலி

சுமங்களா இது போன்ற கொடுமையை அனுபவித்துவரும் சிலருடன் கதைக்கக் கிடைத்தது. நாமெல்லாம் இன்னும் தட்டச்சில் தமிழ்வீரம் பேசியே அவர்களை சாகவிடப்போகிறோமோ என்று கலக்கமாக இருக்கிறது. அண்மையில் எனது நண்பி ஒருத்தி மருத்துவமனையிலிருந்து தொடர்பு கொண்டாள் அவள் சொன்னதிலும் இத்தகைய அநியாயங்கள் நடைபெறுவதைத் தெரிவித்திருந்தாள். தாங்கள் போராளிகளானதற்காகவாவது புலம்பெயர் உறவுகள் தங்களைக் காப்பாற்றும்படி அழுதாள்.

சில பெயர்களைச் சொல்லி உதவி கேட்கச் சொன்னாள். அந்து நபர்களோ போரட்டத்தில் இவையெல்லாம் சாதாரணம் என்றார்கள். சிலர் இன்னும் சிலபடி முன்னேறி 'நாங்கள் இலங்கையரசிற்குப் பணத்தை கொடுக்கமாட்டோம் என்றார்கள்.

இலட்சங்கள் இருந்தால் தானும் வெளியில் வரலாம் என்றாள். அதற்கு எம்மால் உதவமுடியாத கையறுநிலையில் இருக்கிறோம். முள்ளிவாய்க்காலில் செத்திருக்காலம் போலிருக்கென்றாள். அவளுக்காக ஆறுதலாய் சில வார்த்தைகளைத் தவிர வேறெதுவும் சொல்ல வரவில்லை.

சுமங்களா

பெண்ணுறுப்புகள் கவிதைகளில் பேசப்படுவது பற்றி கடந்த சில காலங்களாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதில் நீங்கள் துணிச்சலுடன் சொற்களை பிரயோகித்தல் மற்றும் பெண்கள் பேசப்பயந்த விடயங்களை பேசுகிறீர்கள். அந்தத்துணிச்சல் பற்றி பல இணையத் தோழிகள் ஸ்கைப் மூலம் கருத்தாடியுள்ளார்கள். உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். சிலவேளை நீங்கள் ஒரு முன்னாள் போராளி என்பதால் இந்தத் துணிச்சலோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரத்தக் கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்... அனுதாபம் என்ற வார்த்தையில் அடங்குமா இந்த வரலாற்று வலிகள்.

. உங்கள் கவிதையில் எனக்கு வரிகள் தெரியவில்லை, வலிகள் தான் தெரிகின்றன.

Edited by ஜீவா

பரிதாபமான நிலை எம் பெண்களுக்கு. சாந்தி சொன்னது போல சுமங்களாவின் எழுத்தில் துணிச்சல் அதிகம். வரவேற்கப்படவேண்டியது தான்.

கவிதையின் ஒவ்வொரு எழுத்திலும் வலி சொட்டிப்போயுள்ளது. இது ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை. இன்னும் எத்தனை எத்தனை பெண்களோ.

  • கருத்துக்கள உறவுகள்

வரிகளில் வலி சொன்ன கவிதை ...........எத்தினை பேருக்கு இது உறைக்கும்.வெளி வந்தது ஒரு சில இன்னும்

வெளி வராதது எத்தனியோ ?

வலிக்கின்றது சுமங்களா................

வாசிக்கும் போதே நரம்புகளில் ரணங்களை ஏற்படுத்தும் இந்த கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவரின் உணர்வுகள் எத்தனை துயரமாக இருக்கும் என்பதை நினைக்கும் போது மனசு வலிக்கின்றது. தாயக கனவுகளை நனவாக்க புறப்பட்டு சென்ற போராளிகளை கிழித்தெறியும் சிங்களக் கொடூரங்களை அடக்க எவருமில்லையே எனும் நிதர்சனம் மனதுள் உறைக்கும் போது "நாமெல்லாம் ஏன் இன்னும் உயிர் வாழ்கின்றோம்" எனும் கையாலாத்தனமே மிஞ்சி நிற்கின்றது.

வசம்பு கூறியுள்ளது போல், அங்கு நடக்கும் கொடுமைகளை உங்கள் சகோதரி மூலம் வெளிக்கொண்டு வந்து ஆவணப்படுத்த முடியுமா?

சுமங்களா, உங்கள் சகோதரி பட்ட துன்பங்களைக் கவிதையாகப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

சிறீலங்கா அரசின் இத்தகைய மனித உரிமை மீறல்களை ஊடகங்களுக்கு, முக்கியமாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருக்கொண்ட, எம் இனத்தின் சாபத்தை வெளிக்காட்டும் கவிதை.

எம் மக்கள் எதிர்கொள்ளும் சகல விதமான அடக்கு முறைகளையும் நீக்குவதற்காக தம் அனைத்து சுகங்களையும் இழந்து சாவைக்கொடுத்து போராடச் சென்ற தோழர் தோழியரும் கூட அதே அடக்கு முறையை மிக மோசமாக எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய கட்டத்துக்குள் நாம் நிற்கின்றோம்.

யுத்தம் எங்கு நடந்தாலும், உயரிய வன்முறையையும் கொடூரங்களையும் எதிர்கொள்வது பெண் இனமே. யுத்ததின் முதலும் இறுதியுமாக அவள் மீதான வன்முறையே இடம்பெறுகின்றது. அந்த வன்முறையை வெளியே சொல்வது கூட மேலும் அவளை வன்முறைக்குட்படுத்தப் படும் சந்தர்பங்களை வழங்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் அவளின் மொழியில் சுமங்களா பேசுக்கின்றார். அவளின் வலியில் மொழியெழுதி அவளின் துயரங்களை உலகறியச் செய்கின்றார்

சுமங்களா,

உங்களின் கவிதை மொழி பற்றி,

நல்ல முயற்சி... இன்னும் கொஞ்சம் முயலுங்கள். சில இடங்களில் வசனங்களின் ஆக்கிரமிப்பு கவிதையில் வந்து விடுகின்றது. சில இடங்களில் கவிதைத்தன்மை மறைந்து போகின்றது

நாளைய பொழுதாவது

நன்றாய் விடியாதாவென

நாட்களை எண்ணி

புரளும்

நள்ளிரவென்றில்

மப்படித்த சிப்பாயின்

கைகள் என்னை

தட்டியிழத்துப்போகும்

என்பதில் சொல்லப்பட்ட துயரத்தின் கவிதை மொழி

"கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

கசக்கப்படும் முலைகளில் கடி

அடி...இடி...கடி.."

என்ற சந்தங்களில் மறைந்து ஒரு சினிமா பாடலைப் போலாகின்றது. எமக்கு இந்த வைரமுத்து பாணியிலான கவிதைகள் தேவையில்லை. அப்படிப்பட்ட மொழி எம் துயரைச் சொல்ல பெரியளவில் உதவாது. இங்கு பெண் உறுப்புகளை பற்றி எழுதியமையால்தான் இதைச் நான் சொல்கின்றேன் என எடுக்க வேண்டாம்

ஒரு இடத்தில் கருத்து ரீதியான தவறொன்று இருக்கின்றது என நினைக்கின்றேன்

"அவன் ஆண்மையில்

அவன் சந்தேகப்பட்டு "

ஒரு பெண்ணை பலவந்தப் படுத்தி இன்பம் காணுபவன் ஆண்மை கொண்டவன் அல்ல. அவனால் தன்னை ஆண் எனக்கூட உள்மனதுள் நினைக்க முடியாது. சிதைக்கப்பட்ட மனவியலைக் கொண்ட ஒரு வன்முறையாளனான அந்த சிப்பாய் தன் வன்முறையின் நோக்கத்தில் சந்தேகம் பட்டவனாகவே இந்த காட்சியில் வந்திருப்பான்

தொடர்ந்து எழுதுங்கள். பேசாப் பொருளை பேசுகின்ற தேவையும், அதனூடாக எம் சமூக கட்டுப்பாடுகளை மீற விரும்பும் காலத்தின் அவசியமான துணிவும் உங்களுக்கு இருக்கு.

இங்கு விமர்சனத்தை தாங்காத பலர் இருக்கின்றனர். தாம் எழுதிய இரவல் உணர்ச்சி கவிதைகள் அனைத்துக்கும் "நல்லாய் இருக்கு" என்ற ஒரு வகைப்பட்ட விமர்சனத்திற்காக எழுதுபவர்களே அதிகம். விமர்சனத்தை தாங்காது விமர்சித்தவரை இழிவாக குறிப்பதும், அழுது குளறி ஓடி ஒழிவதுமானவர்களைக் கொண்ட சூழலில் இந்த விமர்சனத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.

மேலும் மேலும் எழுதுங்கள்...

Edited by பிழம்பு

இப்படியெல்லாம் நடக்கிறது என்று சொன்னால்

இல்லையென்பவர்களுக்கு இது ஒரு அடையாளப் பதிவு

மனம் மிகவும் கனக்கிறது சகோதரி

  • தொடங்கியவர்

சுமங்களா

இரத்தக் கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்... அனுதாபம் என்ற வார்த்தையில் அடங்குமா இந்த வரலாற்று வலிகள்...

மனக்கண்ணில் பார்த்துக் கவிதை எழுதியிருந்தேன் இந்தக் கொடுமைகளை... நீங்கள் உங்கள் சொந்த உறவின் கொடுமைகளை நேரில் கேட்டு எழுதிய வரிகள் கேட்டு உண்மையிலே மனம் செத்துவிட்டது.....

சத்தியமாய் இன்னொரு தடவை வாசிக்க முடியாத கொடுமை... அழுகையைத் தவிர ஒன்றும் முடியாத நிலமை புலம்பெயர்ந்த நாட்டில் போராடுவதைத்தவிர.....

இது ஒரு உதாரணம்தான் இளங்கவி..எம்மினத்திறகாக போடாரப்புறப்பட்ட ஒரு பெண்ணின் இன்றை நிலை இதுதான் யாரை நோவது

சுமங்களா,

உங்கள் கவிதையில் எனக்கு வரிகள் தெரியவில்லை, வலிகள் தான் தெரிகின்றன.

முடிந்தால் உங்கள் சகோதரி மூலமறிந்த அக்கிரமங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்.

வசம்பண்ணா எனது சகோதரி சொன்னவகைளை முழுதுமாக என்னால் எழுத முடியாதென்பதில்லை ஆனால் இணையத்தில் ஈழப்போராட்டம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் யாரவது வந்து போராடப் போன உன் சகோதரி அப்பிடியே சயனைற் அடித்து செத்திருக்கவேண்டியதுதானே என்று எழுதுவார்கள் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு எழுத என்னால் முடியாது..ஏனென்றால் சரணடைந்தவர்கள் போராளிகளே அல்ல விபச்சாரிகள் என்கிற தொனியில் இதற்கு முன்னர் பலர் கருத்துக்களை எழுதியிருந்தனர்.

இளங்கவி சொன்னதுபோல் மீண்டும் படிக்க பயமாயிருக்கிறது..இதைவிட கொடுமை இந்த உலகத்தில் உண்டா? கவலைதருவது இது எல்லாம் பற்றி கவலைப்படாமல் காகித கப்பல்விடும் எங்கள் ???தலைவர்களும் அவர்தம் தொண்டர்களும்..

உண்மைதான் இது யாருடைய சிந்தனை என்று சொல்லமுடியாமல் இருக்கிறது

கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

கசக்கப்படும் முலைகளில் கடி

அடி...இடி...கடி..

அடுத்தடுத்து விசாரித்தில்

அடிவயிற்றில்வலி

இவ்வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று யாரேனும் விளக்க முடியுமா?

வசம்பண்ணா எனது சகோதரி சொன்னவகைளை முழுதுமாக என்னால் எழுத முடியாதென்பதில்லை ஆனால் இணையத்தில் ஈழப்போராட்டம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் யாரவது வந்து போராடப் போன உன் சகோதரி அப்பிடியே சயனைற் அடித்து செத்திருக்கவேண்டியதுதானே என்று எழுதுவார்கள் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு எழுத என்னால் முடியாது..ஏனென்றால் சரணடைந்தவர்கள் போராளிகளே அல்ல விபச்சாரிகள் என்கிற தொனியில் இதற்கு முன்னர் பலர் கருத்துக்களை எழுதியிருந்தனர்.

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனாலும் அடுத்தவர்களின் தவறான கருத்துகளுக்காக, உண்மைகள் தெரிந்தும் அவற்றை நாம் வெளிக் கொணராது விடுவதும் தவறல்லவா ?? அத்தோடு உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை, எவரும் சீண்டிப் பார்க்க விரும்ப மாட்டார்கள். அதனால் தயங்காது உண்மைகளை எழுதுங்கள், உலகமே அறியட்டும். உங்களதும் உங்கள் சகோதரியினதும் மனச்சுமையும், வேதனையும் கொஞ்சமாவது குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா உங்கள் கவிதை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணின் மொழி. உதட்டுச்சாயத்துடன் முத்தக் குவிகைகளை நீங்கள் இங்கு இணைக்கும் போது மற்றவர்களைப் போன்று எனக்கு விசனம் தோன்றவில்லை.... (நீங்கள் பெண்ணென்பது உண்மையாக இருந்தால்) ஒரு ஆளுமையான துணிச்சல் காரி என்றே எண்ணத் தோன்றியது. கவிதை மொழியிலும் வல்லுறவின் வன்மச் சொற்கள் இனம்புரியாத கோபத்தையும், இயலாமை நிலையில் இருக்கும் என் போன்றவர்களின் சுயத்தையும் கீறிக் கிழித்து அமிலத்தைத் தெளிக்கிறது. பெண்ணென்னும் பிம்பம் பாவப்பிறப்பாக உழல்வதொன்றே உலக வழக்காக இருக்கிறது. முடியவில்லை மனம் கொதித்து மூசும் அளவுக்கு செயலாற்ற முடியாமல் சூழல் கட்டிப் போடுகிறது. பெண்களைப் பெண்களாய் உணர வைப்பதற்கே போராட வேண்டியிருக்கிறது புலம் பெயர் தேசங்களில். பேதை, போதை என்ற நிலைகளுக்குள்ளேயே வேலி போட்டுக் கிடக்கும் பெண் சமூகம் விழித்தெழுந்தாலே எங்கள் சகோதரியரின் துயரை... ஆகக்குறைந்தது அவர்களின் கண்ணீரையாவது துடைக்க முடியும். ஆழ ஊன்றிக் கிடக்கும் பாலியல் வன்முறைகளை அடுத்த வீட்டுப் பெண்ணுக்குத்தானே என்று நாக்கு வளைத்து விட்டு மெகா சிரியலில் வரும் பெண்களுக்காக பிழியபிழிய அழும் தாய்க்குலங்களுக்கு இவற்றைக் காவி செல்ல வேண்டியவர்கள் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கவிதை வலிக்குது..! :lol:

  • தொடங்கியவர்

இவ்வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று யாரேனும் விளக்க முடியுமா?

inapcha'என்கிற அன்பரிற்கு

கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

மட்டுமல்ல கசக்கப்படும் முலைகளில் கடி என்பதற்கும் அர்தத்தினை உங்கள் குடும்பத்தில் யாராவது நன்கு தமிழ் தெரிந்த பெண் உறுப்பினர்கள் இருப்பார் அவர்களிடம் கேளுங்கள்..நிச்சயமாக பதில் தருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா.....

அந்தச் சகோதரி அனுபவித்தவை வார்த்தைகளால் வர்னிக்க முடியாத கொடுமைகளாக இருந்தாலும் கூட...நாமளுமா அந்தச் சகோதரி அனுபவித்தவற்றை வரி..வரியாய் எழுதி வரவிலக்கணம் கொடுக்கனும்.அந்தப்பிள்ளையின

  • தொடங்கியவர்

சுமங்களா உங்கள் கவிதை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணின் மொழி. உதட்டுச்சாயத்துடன் முத்தக் குவிகைகளை நீங்கள் இங்கு இணைக்கும் போது மற்றவர்களைப் போன்று எனக்கு விசனம் தோன்றவில்லை.... (நீங்கள் பெண்ணென்பது உண்மையாக இருந்தால்) ஒரு ஆளுமையான துணிச்சல் காரி என்றே எண்ணத் தோன்றியது. கவிதை மொழியிலும் வல்லுறவின் வன்மச் சொற்கள் இனம்புரியாத கோபத்தையும், இயலாமை நிலையில் இருக்கும் என் போன்றவர்களின் சுயத்தையும் கீறிக் கிழித்து அமிலத்தைத் தெளிக்கிறது. பெண்ணென்னும் பிம்பம் பாவப்பிறப்பாக உழல்வதொன்றே உலக வழக்காக இருக்கிறது. முடியவில்லை மனம் கொதித்து மூசும் அளவுக்கு செயலாற்ற முடியாமல் சூழல் கட்டிப் போடுகிறது. பெண்களைப் பெண்களாய் உணர வைப்பதற்கே போராட வேண்டியிருக்கிறது புலம் பெயர் தேசங்களில். பேதை, போதை என்ற நிலைகளுக்குள்ளேயே வேலி போட்டுக் கிடக்கும் பெண் சமூகம் விழித்தெழுந்தாலே எங்கள் சகோதரியரின் துயரை... ஆகக்குறைந்தது அவர்களின் கண்ணீரையாவது துடைக்க முடியும். ஆழ ஊன்றிக் கிடக்கும் பாலியல் வன்முறைகளை அடுத்த வீட்டுப் பெண்ணுக்குத்தானே என்று நாக்கு வளைத்து விட்டு மெகா சிரியலில் வரும் பெண்களுக்காக பிழியபிழிய அழும் தாய்க்குலங்களுக்கு இவற்றைக் காவி செல்ல வேண்டியவர்கள் யார்?

வல்வை அக்கா உங்கள் வார்த்தைகளிற்கு நன்றிகள்..இன்னமும் நான் பெண்தானா என்கிற சந்தேகம் உங்களிற்கும் இருக்கின்றதென நினைக்கிறேன்..எனவே உங்களிற்கு தனி மடலில் எனது படத்தினை அனுப்பியுள்ளேன் பார்க்கவும். முடிந்தால் சகொதரியின் விபரங்களை கதையாகவே எழுதுகிறேன்

சுமங்களா.....

அந்தச் சகோதரி அனுபவித்தவை வார்த்தைகளால் வர்னிக்க முடியாத கொடுமைகளாக இருந்தாலும் கூட...நாமளுமா அந்தச் சகோதரி அனுபவித்தவற்றை வரி..வரியாய் எழுதி வரவிலக்கணம் கொடுக்கனும்.அந்தப்பிள்ளையின

  • தொடங்கியவர்

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனாலும் அடுத்தவர்களின் தவறான கருத்துகளுக்காக, உண்மைகள் தெரிந்தும் அவற்றை நாம் வெளிக் கொணராது விடுவதும் தவறல்லவா ?? அத்தோடு உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை, எவரும் சீண்டிப் பார்க்க விரும்ப மாட்டார்கள். அதனால் தயங்காது உண்மைகளை எழுதுங்கள், உலகமே அறியட்டும். உங்களதும் உங்கள் சகோதரியினதும் மனச்சுமையும், வேதனையும் கொஞ்சமாவது குறையும்.

உண்மைதான் வசம்பு அண்ணா ஆனால் இங்கு நான் யாரை நோவது தன் வாழ்வையும் கல்வியையும் இளமையையும் தொலைத்து நிற்கும் சகோதரியையா...மக்களிற்காக போராடவென்று போய் அந்த மக்களே போராட்டம் வேண்டாம் ஆழைவிட்டால் போதுமென்று மக்களையா ??? உயிரையும் கொடுத்து போராட நினைத்து போன இயக்கமே இறுதியாய் சரணடையலாமென்று கட்டளையிட்டதையா?? வார்த்தைக்கு வார்த்தை வீர வனம் பேசியும் வலிந்தும் இயக்கத்திற்கு அழைத்துப்போய் பயிற்சிக்கு அனுப்பிய அதே போராளித் தவைர்களே மக்களோடு மக்களாய் மறைந்திருக்கும் போராளிகளையும்.. தங்கள் ஆள்த்தான் என்று தலையாட்டி காட்டிக்கொடுக்கும் சரணடைந்த அரசியல் போராளித்தலைவர்களையா?? சரணடைந்த போராளிகளும் தங்களிற்கும் சேர்த்துத்தானே போராடின உறவு என்று நினைக்காமல் பெரும் தொகை பணத்தை கறந்து கொண்டிருக்கும் தமிழ் கட்சிகளையா?அதையெல்லாம் வலியாக்கி வெளியில் சொல்ல நினைத்து எழுதிய கவிதையில் கவட்டுத்துவற்கிற்கு அர்த்தம் கேட்கும் சிலரையா?? யாரை நோவது.... ஆனாலும் எனது சகோதரி ஏற்கனவே காயமடைந்திருந்ததாலும் கடுமையான சுகவீனமடைந்தீருந்ததால் வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு களவாக வாங்கிய பணத்திற்கு வஞ்சனை செய்யாமல் இந்தியா வரை கொண்டு வந்து விட்டுப் போனதற்காக அவர்களிற்கு நன்றி சொல்லாம்..

அருமையான அற்புதமான கவிதை !!!!! சகோதரி நாங்கள் எல்லோருமே நடிகர்களும் வெறும் நாடக காரர்களும் தான்.................இப்படி வார்த்தைகளை உண்மைக் கவிதையாக்கி தந்த நீங்கள் உண்மையில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணை மிஞ்சி விட்;ட பெண்................எங்கட ஆக்கள் சும்மா றீல் விடுவினம் ஐயோ உப்புடி எழுதலாமோ அப்புடி எழுதலாமோ..........அந்த பெண்ணின் வாழ்க்கை என்னாவது அது இது எண்டுவினம்...............அப்படி அக்கறை உள்ளவர்கள் உண்மையிலேயே இருந்திருந்தால் இன்றைக்கு இத்தனை பெண்களும் இவ்வளவு துன்பங்களை அனுபவிப்பார்களா????? அதுவும் போதாது என்று ஏன் சைனைற் அருந்தி செத்திருக்கலாமே எண்டினம்...............இவை இஞ்ச உயிரோட வாழ அதுகள் வாழ்வு கொடுத்ததுகள் எண்டதையே மறந்த நன்றி கெட்ட உயிரோடு வாழும் பிணங்கள்................தான் புலத்து தமிழர்கள்................

தமிழன் எப்போது தன்னைப்போல் மற்ரவனும் நின்மதியாக வாழ வேண்டும் எண்டு நினைக்கிறானோ அன்றே எங்கள் எல்லோருக்கும் விடவு நாள்!!!!!!!

  • தொடங்கியவர்

சுமங்களா இது போன்ற கொடுமையை அனுபவித்துவரும் சிலருடன் கதைக்கக் கிடைத்தது. நாமெல்லாம் இன்னும் தட்டச்சில் தமிழ்வீரம் பேசியே அவர்களை சாகவிடப்போகிறோமோ என்று கலக்கமாக இருக்கிறது. அண்மையில் எனது நண்பி ஒருத்தி மருத்துவமனையிலிருந்து தொடர்பு கொண்டாள் அவள் சொன்னதிலும் இத்தகைய அநியாயங்கள் நடைபெறுவதைத் தெரிவித்திருந்தாள். தாங்கள் போராளிகளானதற்காகவாவது புலம்பெயர் உறவுகள் தங்களைக் காப்பாற்றும்படி அழுதாள்.

சில பெயர்களைச் சொல்லி உதவி கேட்கச் சொன்னாள். அந்து நபர்களோ போரட்டத்தில் இவையெல்லாம் சாதாரணம் என்றார்கள். சிலர் இன்னும் சிலபடி முன்னேறி 'நாங்கள் இலங்கையரசிற்குப் பணத்தை கொடுக்கமாட்டோம் என்றார்கள்.

இலட்சங்கள் இருந்தால் தானும் வெளியில் வரலாம் என்றாள். அதற்கு எம்மால் உதவமுடியாத கையறுநிலையில் இருக்கிறோம். முள்ளிவாய்க்காலில் செத்திருக்காலம் போலிருக்கென்றாள். அவளுக்காக ஆறுதலாய் சில வார்த்தைகளைத் தவிர வேறெதுவும் சொல்ல வரவில்லை.

சுமங்களா

பெண்ணுறுப்புகள் கவிதைகளில் பேசப்படுவது பற்றி கடந்த சில காலங்களாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதில் நீங்கள் துணிச்சலுடன் சொற்களை பிரயோகித்தல் மற்றும் பெண்கள் பேசப்பயந்த விடயங்களை பேசுகிறீர்கள். அந்தத்துணிச்சல் பற்றி பல இணையத் தோழிகள் ஸ்கைப் மூலம் கருத்தாடியுள்ளார்கள். உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். சிலவேளை நீங்கள் ஒரு முன்னாள் போராளி என்பதால் இந்தத் துணிச்சலோ தெரியவில்லை.

சாந்தியக்கா நீங்கள் சொன்னவைகளும் உண்மைகள்..எனது சகோதரியும் தன்னுடைய மற்றைய நண்பிகளான போராளிகளை எப்படியாவது யாரிடமாவது உதவி கேட்டு மீட்கசொன்னார்..என்னால் ஒவ்வொருவரிற்கும்..10 ...12.. இலட்சம் என்று கொடுத்துமீட்கிற சக்தியில்லை..நானும் கணவரும் வங்கியில் கடனெடுத்துத்தான் சகோதரியையே மீட்டோம்..ஆனால் இங்கு இறுதி யுத்தம் என்று பணம் சேர்த்தவர்கள் வசதியாகத்தான் இருக்கிறார்கள் அவர்களிடம் விபரத்தை சொல்லி உதவி கேட்டபொழுது அவர்கள் சொன்னார்கள்..தங்களிற்கே கடனாம்..எதுவும் செய்ய முடியாதாம்..உண்மையில் என்கையில் துப்பாக்கி இருந்தால் நானே இவர்களை சுட்டுத்தள்ளிவிடுவேன் அவ்வளவு கோபம் வருகிறது..நானும் முன்னர் போராளியாக இருந்தேன் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது..

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா.....

அந்தச் சகோதரி அனுபவித்தவை வார்த்தைகளால் வர்னிக்க முடியாத கொடுமைகளாக இருந்தாலும் கூட...நாமளுமா அந்தச் சகோதரி அனுபவித்தவற்றை வரி..வரியாய் எழுதி வரவிலக்கணம் கொடுக்கனும்.அந்தப்பிள்ளையின

Edited by valvaizagara

  • தொடங்கியவர்

வலிக்கின்றது சுமங்களா................

வாசிக்கும் போதே நரம்புகளில் ரணங்களை ஏற்படுத்தும் இந்த கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவரின் உணர்வுகள் எத்தனை துயரமாக இருக்கும் என்பதை நினைக்கும் போது மனசு வலிக்கின்றது. தாயக கனவுகளை நனவாக்க புறப்பட்டு சென்ற போராளிகளை கிழித்தெறியும் சிங்களக் கொடூரங்களை அடக்க எவருமில்லையே எனும் நிதர்சனம் மனதுள் உறைக்கும் போது "நாமெல்லாம் ஏன் இன்னும் உயிர் வாழ்கின்றோம்" எனும் கையாலாத்தனமே மிஞ்சி நிற்கின்றது.

வசம்பு கூறியுள்ளது போல், அங்கு நடக்கும் கொடுமைகளை உங்கள் சகோதரி மூலம் வெளிக்கொண்டு வந்து ஆவணப்படுத்த முடியுமா?

நிழலி

அசிங்கமான

உண்மைகளை

ஆழமாய்

புதைத்துவிட்டு

அதன்மீதேறி நின்று

அழகான வார்த்தை

சாலங்கள்

ஆழப்பிறந்த இனம்

நாமென்போம்

கூழுக்கும் வழியில்லை

இததான் இன்றைய தமிழனின் நிலை.

.இந்தக் கவிதையை பார்த்த சிலர் எனக்கு மின்னஞ்சல் போட்டிருக்கிறார்கள்..அவர்கள

ும் நீங்கள் சொன்னது போலவெ கேட்டிருக்கிறார்கள்..அவர்களி

ன் உதவியடன் முயற்சிக்கிறேன்..நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.