Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழக் குடியேற்ற நாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதை சர்வதேசம் ஆதரிக்குமா சபேசன் அண்ணா ??

  • Replies 86
  • Views 9.1k
  • Created
  • Last Reply

சபேசன் உண்மையில் சீரியஸாகத்தான் சொல்லுகிறார் போலிருக்கு. எஸ்.ஜெ.சூரியா நடிகர் சங்க விழாவில் இப்படி ஒரு கருத்தைத்தான் சொன்னார்.இலங்கையில் உள்ள முழு தமிழரையும் தமிழ்நாட்டில் குடியேறினால் என்ன என்று.சபேசன் சொல்வது புலம்பெயர் தமிழர் ஒரு நிலப்பரப்பை வாங்கி த‌மிழீழத்திற்கான ஒரு பின்தளமாகப் பாவிக்க வேண்டும் என்று.உண்மையில் எமது மக்கள் படும் கஷ்டத்தைப் பார்க்கும்போது இப்படியான எண்ணங்கள் எல்லாம் எவருக்கும் வரும்.நாங்கள் குடியேற்றநாடு நாடு வாங்குவது சாத்தியமான விடயம். பின் அதிலிருந்து தமிழீழத்திற்கான‌ அரசியல் செய்ய உலகம் விடாது.ஏன் நாங்கள் இப்போது உள்ளது போல் உலகம் முழுக்க பரந்திருந்து தழிழீழத்திற்கான அரசியல் செய்வது தான் நல்லதும் இலகும்.

யாழுக்கு நான் புதியவன் ஆனால் புலம்பெயர்ந்து கன காலம், இலங்கை அரசியலுடனும் தமிழர்களுக்கான பல அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவன்.இதயசுத்தி இல்லாத தமிழனால் தான் இவ்வளவு அலங்கோலங்களும். இன்னு பலர் பொய் முகமூடிகளுடன் உலா வருகின்றார்கள்.இனம் காணமுடியாத அப்பாவியாக புலம்பெயர் தமிழன் இருக்கின்றான்.எப்போது உண்மையானவர்கள் ஒன்று சேருகின்றார்களோ அன்றூ தான் தமிழனுக்கு விடுதலை.

நிழலி இரண்டு மில்லியன் இல்லாத்தால் நல்லதொரு நிலத்தை விட்டத்தாக எழுதியிருந்தார்,முன்பு இங்கு காசு சேர்த்தவர்களுக்கு உது ஒரு பொக்கெட் மணி.பலருக்கு இங்கு நடந்தது,நடப்பது தெரியாது.கேள்வி கேட்கக்கூடாது,வெளியில் கதைக்ககூடாது என்றவிதியை உருவாக்கி விட்டார்கள் பலருக்கும் வசதியாக.

இந்த டீலுக்கு நான் ரெடி,அங்கே பல்கலைகழகம் ஒன்று கட்டினால் நான் இலவசமாக வந்து படிப்பிப்பேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை இருந்து ஒன்று தெரியுது..

சிங்களவன் பேசாமல் இவ்வளவு சனத்தையும்,போராளிகளையும்,ஆமியையும் சாகக் கொல்லாமல் தமிழனட்டை தமிழீழத்தை கொடுத்திருந்தால் எப்பவோ தமிழன் தனக்குள்ளையே அடிபட்டுச் செத்திருப்பான்...

நானும் ரெடி. 99 வருச லீசில ஒரு குடிமனை வேண்டவும் தயார்.

தொழில் வாய்ப்பை பற்றித் தான் யோசிக்கிறன்

இந்த குடியேற்ற நாட்டை ஒரு வரி விலக்கு நாடா வைச்சிருந்தா வெளி நாடுகளில கொம்பனி வைச்சு வரி கட்டிக் கொண்டிருக்கிற

தமிழ் முதலாளிமார் எல்லாம் இந்த நாட்டில கொம்பனிய பதிவு செய்தால் இந்த நாட்டுக்கும் அதால கொஞ்ச காசு வரும்.

உந்த மிளகாய்தூள் பக்கடறிகல எல்லாம் அங்க கொண்டு போனா எங்கட சனத்துக்கும் வேலை குடுத்த மாதிர் இருக்கும்.

சும்மா இந்தியா காரனுக்கும் வெளிநாட்டு காரன்களுக்கும் குடுக்கிற காசை எங்கட சனத்துக்கு குடுக்கலாம்.

முதல் வேலையா 83ம் ஆண்டு தொடக்கம் இந்தியாவில மண்டபம் போன்ற முகாம்களில அடைச்சு கிடக்கிற எங்கட சனத்தை எல்லாம் வெளியில எடுக்க வேணும்.

நண்பர் ஒருவர் சொன்ன மாதிரி இது ஒண்டும் கஸ்டமபன விசயமா எனக்கு படல.

தொடர்ந்து இந்த திரியை பார்த்து கொண்டிருக்கிறன்.

சபேசனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சரி. வாங்கிய பிறகு யார் போய் குடியேறுகின்றது? தமிழ் மக்களில் வசதி படைத்தோர் எல்லாம் மேற்கு நாடுகளில் குடியேறி வளமான வாழ்வைத்தான் விரும்புவினம். அதுவும் ஆங்கிலமோகம் உள்ளவர்கள் தமிழர்கள்.

ஒன்றுக்கும் வசதியில்லாத ஏழை/ எளியவர்களை அங்கு தள்ளி தொழிற்சாலைகள் போட்டு கொத்தடிமையாக வச்சிருக்கலாம். ஹொலிடே குடியிருப்புக்களை உருவாக்கி குளிர்காலத்தில் போய்வரலாம். இப்படிப் பல திட்டங்கள் வைத்திருக்கின்றீர்கள் போலுள்ளது.

நானும் ரெடி. 99 வருச லீசில ஒரு குடிமனை வேண்டவும் தயார்.

தொழில் வாய்ப்பை பற்றித் தான் யோசிக்கிறன்

இந்த குடியேற்ற நாட்டை ஒரு வரி விலக்கு நாடா வைச்சிருந்தா வெளி நாடுகளில கொம்பனி வைச்சு வரி கட்டிக் கொண்டிருக்கிற

தமிழ் முதலாளிமார் எல்லாம் இந்த நாட்டில கொம்பனிய பதிவு செய்தால் இந்த நாட்டுக்கும் அதால கொஞ்ச காசு வரும்.

உந்த மிளகாய்தூள் பக்கடறிகல எல்லாம் அங்க கொண்டு போனா எங்கட சனத்துக்கும் வேலை குடுத்த மாதிர் இருக்கும்.

சும்மா இந்தியா காரனுக்கும் வெளிநாட்டு காரன்களுக்கும் குடுக்கிற காசை எங்கட சனத்துக்கு குடுக்கலாம்.

முதல் வேலையா 83ம் ஆண்டு தொடக்கம் இந்தியாவில மண்டபம் போன்ற முகாம்களில அடைச்சு கிடக்கிற எங்கட சனத்தை எல்லாம் வெளியில எடுக்க வேணும்.

நண்பர் ஒருவர் சொன்ன மாதிரி இது ஒண்டும் கஸ்டமபன விசயமா எனக்கு படல.

தொடர்ந்து இந்த திரியை பார்த்து கொண்டிருக்கிறன்.

சபேசனுக்கு நன்றி.

சனியன் முதலில், ஒரு ஐயப்பன் கோயிலையும், அம்மன் கோயிலையும் (நவகிரகங்கள் நிச்சயம் வேண்டும்) கூடவே ஒரு மாதா கோயிலையும் கட்டினால் மிச்சம் எல்லாம் தானாகவே வரும்.

இங்கு கனடாவில், இத்தகைய ஏராளமான கிராமங்கள், பெரும் பரப்பு கொண்ட காடுகள் விற்பனைக்கு அடிக்கடி வரும். அவற்றை தொடர்ச்சியாக கவனித்து முயற்சிகள் செய்து வருபவன் என்ற அடிப்படையில், சபேசனின் இந்த கருத்து என்னை வேறு பல விடயங்களையும் பற்றி வேறு விதமாக சிந்திக்க தூண்டுதலாக இருக்கின்றது. நன்றி சபேசன்

  • தொடங்கியவர்

சர்வதேசம் இதை ஆதரிக்க வேண்டும் என்பது இல்லை. அந்த தனியாருக்கு சொந்தமான பரந்த நிலப் பரப்புக்குள் நடப்பதை கண்டும் காணதது போன்று இருந்தாலே போதும். அவர்கள் காணக் கூடியதாக எமது வேலைகள் நடக்கவும் கூடாது. சில வேளை கண்டு விட்டாலும், காணதது போன்று இருப்பதற்கான ராஜதந்திர வேலைகளை மற்றவர்கள் செய்ய வேண்டும்.

இது நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசியது போன்றது இல்லை. அவர் நாட்டை விட்டு விட்டு வரச் சொன்னார். நான் நாட்டை அமைப்பதற்கான பின் தள வேலைகளை செய்வதற்காக ஒரு நாட்டை தேடுகிறேன். அந்த நாடு காலப் போக்கில் தமிழர்களின் மூன்றாவது நாடாக மாறினாலும் நல்லதுதான்.

தமிழர்கள் மட்டும் வாழுகின்ற ஒரு நிலப் பரப்பு. அங்கே நாம் பல ஆயிரம் பேர் கூடிப் பேசினாலும் யாரும் கேட்கப் போவது இல்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதற்காக துப்பாக்கி சுட்டுப் பழகினாலும் யாரும் கேட்கவும் முடியாது. தமிழர்கள் குட்டி விமானங்களில் பறந்து திரிந்தாலும் கேட்க முடியாது.

போரில் தோற்றுப் போய் விட்டோம் என்று எல்லாம் முடிந்து விட்டதாக சொல்லி விட்டு சும்மா இருக்க முடியாது. தமிழீழத்தை அப்படியே விட்டு விட முடியாது.

இப்படி ஒரு குடியேற்ற நாட்டிற்கு யார் வருவார்கள் என்று கேள்வியை இங்கே கிருபன் கேட்டிருக்கிறார். அந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். அப்படி ஒரு நாட்டிற்கு சென்று அந்த நாட்டையும் வளப்படுத்தி நீண்ட கால நோக்கில் தமிழீழத்தையும் உருவாக்கும் போராட்டத்திற்கு வருவதற்கு இங்கே யார் தயாராக இருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் வெளியில் தெரிகின்ற தமிழர்களின் குடியேற்ற நிலம். ஆனால் இந்த நிலத்தைக் கொண்டு தமிழீழத்தை மீட்கின்ற மற்றைய வேலைகளை நாம் செய்ய வேண்டும்.

தமிழீழத்தை வெறும் ராஜதந்திரப் போர் புரிந்து மட்டும் மீட்க முடியாது. படைபலமும் வேண்டும்.

சபேசன் உங்களைப் போன்ற புத்திசாலி இளைஞர்கள் நினைத்தால் முடியும்

LARGEST COUNTRIES (by land mass)

locator map here

Russia 17,075,400 sq km, (6,592,846 sq miles)

Canada 9,330,970 sq km, (3,602,707 sq miles)

China 9,326,410 sq km, (3,600,947 sq miles)

USA 9.166,600 sq km, (3,539,242 sq miles)

Brazil 8,456,510 sq km, (3,265,075 sq miles)

Australia 7,617,930 sq km, (2,941,283 sq miles)

India 2,973,190 sq km, (1,147,949 sq miles)

Argentina 2,736,690 sq km, (1,056,636 sq miles)

Kazakhstan 2,717,300 sq km, (1,049,150 sq miles)

Sudan 2,376,000 sq km, (917,374 sq miles)

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்பிடி நடந்து யார் காணி வங்கினாலும் அங்கை நான் ஒரு வைரவர் கோயிலாவது கட்டிறத்தக்கு எனக்கு இடம் தரவேணும்..ஆனால் இப்பவே வெளி நாடுகளிலையே தமிழன் மற்றறைய இனங்களோடை சேராமல்..அல்லது சேர விரும்பாமல் தனித்தீவு போலை குழுமமாய் வாழ்ந்து அதுக்கையும் சாதிக்காரனோடை சம்பந்தம் செய்து சாமத்தியவீடு செய்து தனித்தீவு மாதிரித்தானே வாழுறான்..பிறகு எதுக்கு தனியாய் ஒரு தீவை வாங்கி குடியேறவேணும்.??பிறகு தமிழனை பாத்து உலகமே தீவான்..எண்டு திட்டுறதற்கா??

Edited by sathiri

இந்த டீலுக்கு நான் ரெடி,அங்கே பல்கலைகழகம் ஒன்று கட்டினால் நான் இலவசமாக வந்து படிப்பிப்பேன்...

:Dஏன் அவை நல்லாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையோ?? :lol:

எது எப்பிடி நடந்து யார் காணி வங்கினாலும் அங்கை நான் ஒரு வைரவர் கோயிலாவது கட்டிறத்தக்கு எனக்கு இடம் தரவேணும்..ஆனால் இப்பவே வெளி நாடுகளிலையே தமிழன் மற்றறைய இனங்களோடை சேராமல்..அல்லது சேர விரும்பாமல் தனித்தீவு போலை குழுமமாய் வாழ்ந்து அதுக்கையும் சாதிக்காரனோடை சம்பந்தம் செய்து சாமத்தியவீடு செய்து தனித்தீவு மாதிரித்தானே வாழுறான்..பிறகு எதுக்கு தனியாய் ஒரு தீவை வாங்கி குடியேறவேணும்.??பிறகு தமிழனை பாத்து உலகமே தீவான்..எண்டு திட்டுறதற்கா??

முக்கியமாக திருமணத்துக்கு பொருத்தம் வடிவாக பாக்க கூடிய நல்ல ஒரு "சாத்திரியும்" கூட்டி செல்ல வேண்டும்.

  • தொடங்கியவர்

நையாண்டித்தனமான பதில்களை விட்டு விட்டு ஆதரவாகவோ, எதிர்த்தோ ஆழமான பதில்களை தருவீர்கள் என்றால் மகிழ்ச்சி அடைவேன்.

இன்றைக்கு புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற போராட்டங்கள் தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கு 0.00001 விழுக்காடு கூட போதாது. நாமும் ஊர்வலத்திற்கு போனோம் என்று எம்மை நாமே திருப்திப்படுத்த மட்டுமே உதவும்.

தற்சமயம் திட்டமிடப்படுகின்ற, நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களின் இலக்காக தமிழீழம் இருப்பதாகத் தெரியவில்லை. பரப்புரைகளுக்கு மட்டும் ஓரளவு உதவக் கூடும். ஆனால் பரப்புரையோடு தமிழீழப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதற்கு ஒரு தளம் வேண்டும். அதை எப்படி உருவாக்கப் போகின்றோம்?

குடியேற்ற நாடு என்பது தமிழர்களுக்கு ஒரு தளமாக இருப்பதோடு, தமிழ் மொழி, பண்பாடு, பொருளாதாரம் போன்றவைகளை வளர்ப்பதற்கும் பயன்படலாம்.

குடியேற்ற நாடு என்கின்ற கருத்தைப் பற்றி உங்கள் சுற்றாடலில் பேசிப் பாருங்கள். இப்படி தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் குடியேறுவதற்கு தயாராக இருக்கிறார்களா என்பதைக் கேளுங்கள்

சபேசன் உங்களது எண்ணம்போல் 7அல்லது 8 வருடங்களுக்குமுன்னர்

தனித்தீவு ஒன்றை வாங்கி தமிழீழத்துக்கு வலுச்சேர்க்க சில தமிழர்கள்

முயற்சி செய்தார்கள் இதுபற்றிய செய்தி கனடாவில் வெளிவந்த

பத்திரிகை ஒன்றில் வாசித்திருந்தேன் பின்னர் அம்முயற்சிக்கு

என்ன நடந்தது என்பதுபற்றி எந்தச் செய்தியும் தெரியவில்லை

சில பத்திரிகைதுறை நண்பர்களை தெரியும் அவர்களிடம் விசாரித்து

மேலதிக விபரம் எடுக்க முயற்ச்சிக்கின்றேன்

கனடா வாழ் யாழ்கள உறவுகளே உங்களுக்குத் தெரிந்திருந்தால்

அதுபற்றிய விபரத்தை வெளிக்கொணருங்கள்

இந்த டீலுக்கு நான் ரெடி,அங்கே பல்கலைகழகம் ஒன்று கட்டினால் நான் இலவசமாக வந்து படிப்பிப்பேன்...

நிலம் வாங்கி பல்கலைகழகத்துக்கு அடிக் கல் நாட்ட முன் நாம் இருவரும் 8ம் வகுப்பை பாஸ் பன்னிவிடுவோம் இல்லாட்டி திரும்ப்பவும் 2 3 வருசம் 8ம் வகுப்போடு நிக்க வேண்டிவரும்.

நான் முன்னர் குறிப்பிட்டதுபோல் 8 வருடங்களுக்கு முன்னர் அல்ல

சுமார் 10 அல்லது 12 வருடங்களுக்கு முன்னர் ஈழ நாடு பத்திரிகையில்

அதுபற்றிய விபரம் வெளியிடப்பட்டிருந்ததாக அறிந்து கொண்டேன்

சங்கானையை சேர்ந்த சோதிடப்புத்தகங்கள் எழுதிய

சோமசுந்தரம் என்பவர் அந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும்

ஆனால் அவர் 10 வருடங்களுக்குமுன்னர் காலமாகிவிட்டார்

ஆதலால் அவ்விடயம் அப்படியே அமுங்கிப்போய்விட்டது

சபேசன் உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் சிந்தனை வித்தியாசமானதென்றாலும் அப்படி ஒரு நாட்டை கட்டி எழுப்ப ......

இப்போ வசதியாக வாழும் ஐரோப்பிய , அவுஸ்திரேலிய , அமெரிக்க , கனடா வாழ்க்கையை விட்டுவிட்டு எத்தனை ஆட்கள் அந்த நாட்டை ஆரம்பத்தில் கட்டி எழுப்ப முன் வருவார்கள். என்பது கேள்விக்குறியே .....

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு விடயத்தை இங்கு இணைத்திருக்கிறீர்கள் சபேசன். முன்பும் நீங்கள் இந்தக் கருத்துக்களத்தில் பதிவிட்ட சில விடயங்கள் எவ்வளவு தூரத்திற்கு யதார்த்தமாகி இருக்கின்றன என்பதை உங்கள் கருத்துகளைத் தொடர்ச்சியாக வாசித்து வருகின்ற காரணத்தால் உணர்வேன். இப்போதும் இந்தக் கருத்தானது எங்கள் இனத்தைப் பொறுத்தவரை மிகவும் காத்திரமானது. இதில் நக்கல் நளினம் கதைப்பது என்பது எம்மினத்தின் மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனமே. எங்கள் இனத்தின் பின்னடைவுகளுக்கு எங்களுக்கென்று காத்திரமான பின்பலம் இல்லாததும் ஒரு காரணம். சபேசனின் கருத்தை வரவேற்க தவறுவோமாகில் பின்னொரு காலத்தில் கவலைப்படுவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கியூறியஸ் சிந்தனையில வந்த செயல்படுத்தக்கூடிய திட்டத்த போட்டிருந்தன். இப்ப கானேல்ல எழுத்திலயோ எழுதின விதத்திலயோ பிழையில்ல. ஏதேதோவெல்லாம் அநுமதிக்கிறாங்க அதைமட்டும் தூக்கிட்டாங்க. கொப்பிறைற் பிரச்சனை வராதுப்பா, திரும்ப போடுங்கப்பா. :lol:

சபேசன்!

உங்கள் கருத்து ஒரு புதிய சிந்தனை. இது பற்றி எல்லோரும் ஆழமாக சிந்திக்கவேண்டும்.

எனக்குள்ள சில கேள்விகள்...

நாங்கள் பலர் சேர்ந்து ஒரு பெரிய நிலப்பரப்பை வாங்கி அங்கு நாங்கள் பலர் குடியேறினாலும் அங்கு எந்த நாட்டின் சட்டம் செல்லுபடியாகும்?

தமிழீழம் அமைந்தாலே எத்தனை வீதமான புலம்பெயர் தமிழர்கள் அங்கு செல்ல விரும்புவார்கள் என்பதே கேள்வியாக இருக்கும் நிலையில், எங்களில் எவ்வளவுபேர் இதற்குத் தயாராக இருப்பார்கள்?

பாரிய வெறும் நிலப் பரப்பை வாங்கி அங்கு குடிமனைகள், பாடசாலைகள், தொழிற்சாலைகள்,..... இப்படி எல்லாவற்றையும் அமைக்கககூடிய வல்லமை எங்களுக்கு இருக்கின்றதா?

புதிய சிந்தனைகள் வரும்போதெல்லாம் அவற்றை நையாண்டி செய்வதும் நக்கலடிப்பதும் உலக வழக்கு. உலகம் உருண்டையானது என்று முதலில் சொல்லியவரை பைத்தியம் என்று நஞ்சு கொடுத்ததுதான் இந்த உலகம்.

எவ்வாறாயினும் வெல்வோம். எமது மக்களுக்கும் தாயகத்துக்கும் ஏதாவது செய்வோம்.

எனது மனதில் தோன்றும் கருத்துகளை அவ்வப்போத பகிர்ந்துகொள்கின்றேன்.

என்றும் அன்புடன்

பரதன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் தாங்கள் போய்க் குடியேறுவோம் என்று சொல்லவில்லை!

ஆரும் விடுபேயன்களாகப் பார்த்துக் குடியேற்றிப் போட்டு அவர்களுக்கு கல்வியறிவு புகட்டவும், அவர்கள் உழைப்பைச் சுரண்டவும், மக்களுக்கு நல்லது செய்வோம் என்று பணம் திரட்டவும் சிலவேளை பயன்படலாம்.

வன்னியில் மூன்று மாவட்டங்கள் வெறுமையாகத்தானே இருக்கின்றன. மகிந்தவோடு ஒரு டீல் போட்டு ஒன்றை வாங்கினால் என்ன?

  • தொடங்கியவர்

பரதன்,

ஒரு நிலத்தை நாம் ஒப்பந்த அடிப்படையில் பெறுகிறோம். அதன் பொழுது நாம் அந்த நிலப் பகுதியில் எமக்குள்ள உரிமைகள் எவை என்பதையும் அந்த நிலப்பரப்பு அமைந்துள்ள குறிப்பிட்ட நாட்டிற்கு உள்ள உரிமைகள் எவை என்பதையும் வரையறுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாடு எம் மீது கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான் ஊழல், ஏழ்மை நிறைந்த ஒரு நாட்டை முன்மொழிகிறேன்.

ஒரு மூன்றாம் உலக நாட்டில் உள்ள ஒரு நிலப்பரப்பில் குடிமனைகள், பாடசாலைகள், தொழிற்கூடங்கள் உருவாக்கும் வல்லமை உண்டு என்று நான் நம்புகிறேன். இன்றைக்கு புலம்பெயர் தமிழர்கள் பலர் பில்லியனர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் நினைத்தால் முடியும்.

பொருளாதாரம் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன். இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், மக்களை அப்படி ஒரு நாட்டில் குடியேறச் செய்வதுதான் கடினமானது. மக்களோடு இதைப் பற்றிப் பேசிப் பார்ப்போம்.

ஆரம்பத்தில் சில ஆயிரம் பேர் தயாராக இருந்தாலே போதும். முதல் அடியை எடுத்து வைத்து விடலாம்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்.ம்.ம். பிறகு...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், மக்களை அப்படி ஒரு நாட்டில் குடியேறச் செய்வதுதான் கடினமானது. மக்களோடு இதைப் பற்றிப் பேசிப் பார்ப்போம்.

எந்த மக்களிடம் நயமாக பேசி ஊழல் நிறைந்த, வறுமையுள்ள இடத்திற்கு அனுப்புவதாக யோசனை?

தமிழீழம் என்பது பொய்க்கனவு என்பதைத்தான் இப்படியான "புதிய சிந்தனைகள்" சொல்லுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த மக்களிடம் நயமாக பேசி ஊழல் நிறைந்த, வறுமையுள்ள இடத்திற்கு அனுப்புவதாக யோசனை?

தமிழீழம் என்பது பொய்க்கனவு என்பதைத்தான் இப்படியான "புதிய சிந்தனைகள்" சொல்லுகின்றன.

மக்களிடம் நயமாக பேசி ஊழல் நிறைந்த வறுமையுள்ள இடத்தில் வைத்திருந்தால்த்தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆயுதமும் வைத்திருந்து அடையாள அட்டை வெளியேற உள்ளேவர அனுமதிப்பத்திரங்கள் உறவினர்களது விபரங்கள் அசையும் அசையா சொத்து விபரங்கள் எல்லாமும் இருக்கவேண்டும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.